You are on page 1of 4

உனக்காக வருவேன்... உயிர்கூட தருவேன்...

அத்தியாயம் 1

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உணர்வை ஆளும் இதய கீ தம் ஓம் நமசிவாய

அணல் முக நாதனே… தினம் உன்னை போற்றிடும்…

அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய

ஹர சிவ யோகமாய் திறுமுறை காட்டிடும்.அன்பெனும் தந்திரம் ஓம்


நமசிவாய

சிவாய நமசிவாய எனும் நாமம்… அது விடாத விணை தொடாத படி


காக்கும்…

சிவாய நமசிவாய எனும் நாமம்… அது விடாத விணை தொடாத படி


காக்கும்…

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

- என்ற சிவனின் நாமம் அங்கு சிக்னலில் நின்று கொண்டிருந்த அனைவரது


காதிலும் பலமாக கேட்டது. அதனை சிலர் கேட்டும் கேட்காமலும், சிலர்
அதனுடன் சேர்ந்து பாட, இன்னும் சிலர் அவசரத்தின் காரணமாக
எப்பொழுதடா கிரீன் சிக்னல் போடுவான் என்று பரபரப்புடன்
நின்றுகொண்டிருந்தனர்.

இந்த சிக்னலதான் நம்ம ஹீரோ ஹீரோயின் இருக்காங்க அவங்க இன்ட்ரோ


பார்த்துடலாம் வாங்க...
அந்த சிக்னலிலே உயர் ரக கார் ஒன்று தன்னுடைய பொறுமையை இழுத்துப்
பிடித்துக் கொண்டு நின்றுகொண்டிருந்தது. அதனுள் இருந்தவனும் அதே
வேகத்தில் தான் இருந்தான். ஆனால் அவன் அருகில் இருந்தவனோ......

          மச்சி என்ன ஒரு பாட்டுடா பாட்டுல அப்படியே உருகி கரைஞ்சு


போய்விடுவோம் போலயே .....ச்ச....எவ்ளோ நாளாச்சி டா இந்த பாட்ட கேட்டு,
பக்கத்துல எங்கேயும் கோவில் திருவிழாவா இருக்கும் போல அதான்
சவுண்ட் காத கிழிக்கிது என்று காதை தேய்த்துக் கொண்டே அருகில்
இருந்தவனை நோக்க..... அவன் கருமமே கண்ணாக எப்போதடா கிரீன் சிக்னல்
விழும் என்று பார்த்துக்கொண்டிருந்தான்.

   இதனை பார்த்த  ஜீவா உன் கிட்ட போய் சொன்னேன் பாரு சரியான ஜடம்
டா நீ எதையுமே ரசிக்கவே மாட்டியா.... எல்லாமே உனக்கு பிசினஸ்
பிஸ்னஸ் தானாடா பிஸ்னஸ் - ல இருந்து கொஞ்சம் வெளியே வந்து பாரு
மச்சி எவ்வளவு கலர்ஃபுல் ஆன லைஃப் இருக்குனு தெரியும்.  அது சரி
இதெல்லாம் உன்கிட்ட  போய் சொல்றேன் பாரு இத ஒரு செவுத்து கிட்ட
சொன்னா கூட அது எனக்கு பதில் சொல்லும் டா என்று கேள்வியும் நானே
பதிலும் நானே என்ற போக்கில் ஜீவா புலம்பிக் கொண்டிருந்தான்.

   இவனின் புலம்பலைக் கேட்டு கேலிப் புன்னகையுடன் அவன் புறம்


திரும்பினான் திவா எனும் திவாகரன். 

      எப்பா சாமி இப்பதான் நான் பேசுனது உன் காதுல விழுந்துச்சா... நான்


வாங்கிட்டு வந்த வரம் அப்படி, ஊர்ல பத்து பதினைஞ்சு ஃபிரெண்ட்
வச்சிருக்கவன் எல்லாம் நல்லாருக்கான் ஒரே ஒரு ஃபரெண்ட்-ட வச்சிட்டு நா
படுற அவஸ்தை இருக்குதே அய்யூயூயூ.....
     ஹே ஷட் அப் மேன் எல்லாரோட வாழ்க்கை ஒரே மாதிரி இருக்காது
எக்ஸாம்புல் உனக்கு இந்த மாறி லைஃப் கலர்ஃபுல் - லா தெரியுது அன்ட்
புடிச்சிருக்கு. அதே மாறி தான் எனக்கும் இந்த பிசினஸ் லைஃப் கலர்ஃபுல்- ஆ
தெரியுது தட்ஸ் ஆல் மேன் இதுல உனக்கு என்னடா பிரச்சனை? ?

   அதுசரி இந்த மாதிரி mind-set ஓட இருக்கிற உன்கிட்ட என்னால சொல்லி


புரிய வைக்க முடியாது. அந்தந்த ஃபீலிங் அப்பப்ப வரப்ப நீ யே தெரிஞ்சுக்குவ
எதுக்குடா நா தேவையில்லாம என்னோட எனர்ஜி-ய வேஸ்ட் பண்ணனும்.
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் டா அம்மா உன்கிட்ட கேக்க
சொன்னாங்க பொண்ணு போட்டோஸ் எல்லாம் வந்திருக்காம் பொண்ணு
பார்த்திடலாமானு கேட்டாங்க என்ன சொல்றது நீயே சொல்லு அதுக்கும்
பதில.

     ஓ யெஸ் தாராளமா பாருங்க. ஆனா முக்கியமான கண்டிஷன் இருக்கு


பொண்ணு ரொம்ப அமைதியா இருக்கணும். அடாவடியா இருக்க கூடாது.
அடக்கமான பொண்ணா இருக்கனும். வாய் ஓவரா பேசக்கூடாது முக்கியமா
அவள மாதிரி இருக்க கூடாது.

  அமைதியா இருக்கணும் ஓகே.... அடாவடியாக இருக்க கூடாது ஓகே....


அடக்கமான பொண்ணா இருக்கனும் ஓகே.... வாய் ஓவரா பேசக் கூடாது
ஓகே..... இது எல்லாத்துக்கும் ஒரே மினிங் தானடா.... அது இருக்கட்டும் ஆனா
கடைசியில அவள மாதிரினா எவள மாதிரி??

   வாட் எவள மாதிரி சிக்னல்  போட்டாங்க சும்மா வளவளனு பேசாம


வண்டிய எடு இன்னைக்கு நியூ செக்ரட்ரி  வராங்க தான என்று அவன்
பேச்சை மாற்றி கம்பெனி விஷயங்களைப் பேச  ஜீவாவும் விதியே என்று
அதனை கேட்டுக்கொண்டே  ஜே.டி குரூப் ஆஃப்  கம்பெனிஸ் என்று பெயர்
பலகையை தாங்கியுள்ள அந்த பில்டிங்குள் வண்டியை செலுத்தினான்.
      

You might also like