You are on page 1of 2

அனைவருக்கும் வணக்கம் மாணவர்களே.

இன்று இந்த காணொளியின் வழி ஆசிரியர் உங்களுக்கு


‘iqnilam’ ஐ பற்றி கூறவுள்ளேன். முதலாவதாக, ‘iqnilam’ என்பது நமது அரசாங்கம் அதாவது கல்வி
அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டம். மாணவர்கள் இத்திட்டத்தினால், மாணவர்கள் தங்களின்
வீட்டிலிருந்த படியே இனையத்தின் துணைகொண்டு புத்தகங்களைத் தங்களின் nilam பட்டியலில்
பதிவிடலாம். ஆகவே, இக்காணொளியில், iqnilam அகப்பக்கத்தைப் பயன்படுத்தும் வழிமுறைகளை
உங்களுக்கு விளக்க போகிறேன்.
மாணவர்கள் இந்த iqnilam ஐ மடிக்கணினி / திறன்பேசியைக் கொண்டு பயன்படுத்தலாம். முதல்
படியாக, மாணவர்கள் ‘google chrome’ ஐ திறந்து https://iqnilam.moe.gov.my எனும் நீலாம்
அகப்பக்கத்தைத் தட்டச்சி செய்ய வேண்டும்.
இரண்டாவதாக, மாணவர்கள், nilam அகப்பக்கத்தில் ‘sign in with ID DELIMA’ எனும் பட்டனை
அழுத்த வேண்டும். மூன்றாவதாக, மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரி அதாவது
ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள DELIMA வின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டச்சு செய்து next
எனும் பட்டனை அழுத்த வேண்டும். மாணவர்களின் கவனத்திற்கு இதில் id delima ஐ மட்டுமே பயன்படுத்தி
நீலாம் அகப்பக்கத்தில் நுழைய முடியும்.
அடுத்த படியாக, மாணவர்கள் தங்களின் கடவுச் சொல்லைத் தட்டச்சு செய்ய வேண்டும். அடுத்து
நீலாம் அகப்பக்கத்தில் நுழைந்தவுடனே நமது இடது பக்கத்தில் மாணவர்களின் விபரம் பதிவிடப்பட்டிருக்கும்.
இதில் மாண்வரின் பெயர், வகுப்பு, பள்ளி, படித்த பதிவிடப்பட்டுள் புத்தகங்களின் எண்ணிக்கை போன்ற
விபரங்கள் இருக்கும். இவற்றை மாணவர்கள் ஒரு முறை சரி பார்க்க வேண்டும். ஏதேனும் பிழைகள் இருப்பின்
ict ஆசிரியரைத் தொடர்பு கொள்ளலாம்.
அடுத்து A பகுதியில் maklumat bahan bacaan இல் மாணவர்கள் சரியான தகவல்களைத் தட்டச்சு
செய்ய வேண்டும். முதலாவதாக, nama judul atau tajuk bahan bacaan எனும் கட்டத்தில் மாணவர்கள்
நீங்கள் படித்த புத்தகங்கள், சஞ்சிகைகள், நாளிதழ்கள், நாவல்கள் எதுவாக இருந்ததாலும் அதனுடைய
தைப்பினை இங்கு தட்டச்சு செய்ய வேண்டும்.
அடுத்து, மொழியில் மாண்வர்கள் படித்த புத்தகத்தின் மொழியைத் தட்டச்சி செய்ய வேண்டும். பின்
ஆண்டு அதாவது கதைப்புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடத்தையும் எழுத்தாளரின் பெயரைத் தட்டச்சு
செய்ய வேண்டும். மாண்வர்களின் கவனத்திற்கு வருடம் / எழுத்தாளரின் பெயர் இல்லை என்றால் அந்தப்
பகுதிகளை நிறைவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை
தொடர்ந்து, மாணவர்கள் புத்தகத்தை வெளியீடு செய்த அச்சகத்தின் பெயரைத் தட்டச்சு செய்ய
வேண்டும். பின் பிரிவு B யில், nyatakan jenis bahan எனும் பகுதியில் மாணவர்கள் படித்த புத்தகம் fiksyen
அ அல்லது bukan fiksyen அ என்பதனைத் தெரிவு செய்ய வேண்டும். மாண்வர்கள் கதைப்புத்தகத்தின்
மொத்த பக்கங்களின் எண்ணிக்கையைத் தட்டச்சு செய்ய வேண்டும். அடுத்து கீழே பார்த்தோமானால் ,
bukan buku அதாவது சுவரொட்டியாக இருக்கலா, கேலிசித்திரங்களாக இருக்கலாம் அதுபோன்று
தேர்ந்தெடுத்து போட வேண்டும்.
அடுத்து bahan digital, இதில் மாணவர்கள் இணையத்தின் வழி (browse) படித்த புத்தகங்கள்
சஞ்சிகைகளின் அகப்பக்கத்தின் URL ஐ இங்கு தட்டச்சி செய்ய வேண்டும்.
அடுத்ததாக, RUMUSAN. இங்கு மாணவர்கள் கட்டாயமாக, கதைப்புத்தகத்தின் சுருக்கத்தைத்
தட்டச்சு செய்ய வேண்டும். அடுத்து பிரிவு D இல் மாணவர்கள் ‘RUMUSAN’ ஐ கண்டிப்பாகக் கிளிக்
செய்ய வேண்டும். மாணவர்கள் வேறு நடவடிக்கைகளில் மேற்கொண்டிருந்தால் அல்லது செய்திருந்தால்
மற்றவைகளையும் தேர்ந்தெடுக்கலாம். இதில் கொடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைத் தவிர்த்து வேறு
நடவடிக்கை செய்திருப்பின் மாணவர்கள் ‘AKTIVITI LAIN-LAIN’ எனும் பகுதொயில் அதனை தட்டச்சு
செய்யலாம்.
பின் மாணவர்கள், தட்டச்சி செய்த விபரங்கள் அனைத்தையும் ஒரு முறை சரி பார்த்த பிறகு
மற்வாமல், ‘SIMPAN’ எனும் பட்டனை அழுத்த வேண்டும்.
இறுதியாக LOG KELUAR விசையைக்/ பட்டனை கிளிக் செய்ய வேண்டும். மாணவர்கள் Log
Keluar விசையை அழுத்தி மீண்டும் IQ Nilam அகப்பக்கத்தில் நுழைந்தால் மட்டுமே பதிவு செய்யப்பட்ட
புத்தகங்களின் எண்ணிக்கையைப் பார்க்க இயலும். மாணவர்கள் படித்த புத்தகங்களின் எண்ணிக்கையை
இறுதியில் மாண்வர் விபரம் பகுதியில் சரி பார்த்து கொள்ளலாம்.
சரி மாணவர்களே,, கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் யாவும் உங்களுக்கு புரிந்திருக்கும் எனும்
நம்பிக்கையில் உங்களீடமிருந்து விடைபெருகிறேன் நான் ஆசிரியர் சங்கீர்த்தனா, நன்றி வணக்கம்.

You might also like