You are on page 1of 3

"பின்னை நின்று என்னே பிறவி பெறுவது , முன்னை நன்றாக முயல்தவம்

செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ்
செய்யுமாறே."
பாலர்பள்ளி பட்டமளிப்பு விழாவிற்கு வருகை புரிந்திருக்கும் ரவுப் தமிழ்ப்பள்ளியின்
தலைமையாசிரியர் மதிப்புமிகு ஐயா திரு.கி.தமிழ்வாணன் அவர்களுக்கும்,
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நற்றமிழ் வணக்கம்.

இன்றைய நிகழ்ச்சி இறை வாழ்த்தோடு தொடங்குகின்றது.

இறைவாழ்த்தினைப் பாட மாணவிகள் சரண்யா அபிநயமொழி இருவரையும் அன்புடன்


அழைக்கின்றோம்.

இறைவாழ்த்தினைப் பாடிச் சென்ற மாணவிகளுக்கு நன்றிகள்.

நமது நிகழ்ச்சியின் அடுத்த அங்கமாக, வரவேற்புரை, வரவேற்புரையாற்ற பாலர்ப்பள்ளி


பொறுப்பாசிரியர் குமாரி. சுபத்திரா அவர்களை அன்போடு அழைக்கின்றோம்.

வரவேற்புரையாற்றிய ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

நிகழ்ச்சியின் அடுத்த அங்கமாக, தலைமையுரை. பள்ளி தலைமையாசிரியர் ஐயா திரு.கி.


தமிழ்வாணன் அவர்களை தலைமையுரையாற்றி பாலர்ப்பள்ளி மாணவர்களின் பட்டமளிப்பு
விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைக்க அன்போடு அழைக்கின்றோம்.

தலைமையுரையாற்றி பாலர்ப்பள்ளி மாணவர்களின் பட்டமளிப்பு விழாவைத் தொடக்கி


வைத்த பள்ளி தலைமையாசிரியருக்கு, நன்றியினைத் தெரிவித்து கொள்கிற்றோ.

தொடர்ந்து, பாலர்ப்பள்ளி மாணவர்களின் பட்டமளிப்பு விழாவின் முக்கிய அங்கமிது.


ஈராண்டு காலமாக பாரதி பாலர்ப்பள்ளியில் கற்ற மாணவர்களுக்கும் ஓராண்டு காலமாக
கம்பர் பலர்பப் ள்ளியில் கற்ற மாணவர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கும் தருணம் இது.

நற்சான்றிதழை மாணவ செல்வங்களுக்கு எடுத்து வழங்க பள்ளித் தலைமையாசிரியர்


ஐயா.கி.தமிழ்வாணன்
அவர்களை_______________________________________________ மேடைக்கு
அழைக்கின்றோம்.
பாரதி பாலர்ப்பள்ளியிலிருந்து மாணவர்கள் பெயர் வாரியாக நற்சான்றிதழ்களைப் பெற்று
கொள்ளுமாரு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். 1)______________________

தொடர்ந்து, கம்பர் பாலர்ப்பள்ளியிலிருந்து மாணவர்கள் பெயர் வாரியாக


நற்சான்றிதழ்களைப் பெற்று கொள்ளுமாரு கேட்டுக்கொள்கிறோம்.
1)______________________

இதனை தொடர்ந்து பாரதி பாலர்பள்ளி மாணவர்களின் சிறப்பு விருதுகள்.

முதலாவதாக, வகுப்பில் மலாய் மொழியில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவருக்கான விருது.


இதனை பெற்று கொள்ள மாணவி___________________________________ அவர்களை
அழைக்கின்றோம்.

தொடர்ந்து, வகுப்பில் ஆங்கில மொழியில் சிறந்த தேர்ச்சிகள் பெற்ற மாணவருக்கான


விருது. இதனை பெற்று கொள்ள மாணவி___________________________________
அவர்களை அழைக்கின்றோம்.

அடுத்ததாக , வகுப்பில் தமிழ் மொழியில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவருக்கான விருது.


இதனை பெற்று கொள்ள மாணவர்___________________________________ அவர்களை
அழைக்கின்றோம்.

தொடர்ந்து, வகுப்பில் கணித பாடத்தில் சிறந்த தேர்ச்சிகள் பெற்ற மாணவருக்கான விருது.


இதனை பெற்று கொள்ள மாணவி___________________________________ அவர்களை
அழைக்கின்றோம்.

அடுத்ததாக, வகுப்பில் அறிவியல் பாடத்தில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவருக்கான விருது.


இதனை பெற்று கொள்ள மாணவி___________________________________ அவர்களை
அழைக்கின்றோம்.

தொடர்ந்து, சிறந்த கையெழுத்துக்கான விருதைப் பெற்று கொள்ள மாணவி


______________________
அவர்களை அழைக்கின்றோம் .

அடுத்து, வகுப்பில் சிறந்த நற்பண்பாளர் விருதைப் பெற்று கொள்ள மாணவி


_____________________

அவர்களை மேடைக்கு அழைக்கின்றோம் .


இறுதியாக, புறப்பாட நடவடிக்கைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கான விருது.
இவ்விருது இரண்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இதனை பெற்று கொள்ள
மாணவி _________________________________அவர்களை மேடைக்கு
அழைக்கின்றோம். அவரை தொடர்ந்து, இவ்விருதைப் பெற்று கொள்ள மாணவி
_____________________________ அவர்களையும் அழைக்கின்றோம்.

நற்சான்றிதழ் மற்றும் பரிசுகளைகள் எடுத்து வழங்கிய பள்ளி தலைமையாசிரியருக்கு


நன்றிகள்.

இப்பொழுது, ஜனவரி 2021 ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 2022 ஆம் ஆண்டு வரையில்
மாணவர்களின் பங்களிப்புத் தொடர்பான காட்சிகள் காணொளியாக மலர உள்ளது. இதோ
அந்த காணொளி உங்களுக்காக. வாருங்கள் மாணவர்களே, காணொளியைக் கண்டு
மகிழ்வோம்.

நிகழ்ச்சியின் இறுதி அங்கமாக நன்றியுரை.

பாலர்பப் ள்ளி மாணவர்களின் பட்டமளிப்பு விழாவினை எடுத்து நடத்த வாய்ப்பு வழங்கிய


பள்ளித் தலைமையாசிரியருக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் நன்றிகளைக் கூறி
கொள்கிறோம். பல்வகையில் உதவிக்கரம் நீட்டிய பள்ளி ஊழியர்களுக்கும் நன்றி.
காணொளியை நமக்காக தயார் செய்த திரு. Huzaimi அவர்களுக்கு நன்றி.
இவ்விழாவினைப் பக்கபலமாக நின்று வழிநடத்திக் கொடுத்த ஆசிரியர். குமரி சுபத்திரா,
திருமதி. மாரியம்மா, குமாரி ____________ அவர்களுக்கும் இவ்வேளையில் நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்துடன் இன்றைய பாலர்பப் ள்ளி மாணவர்களின் பட்டமளிப்பு விழா ஒரு நிறைவை


நாடுகிறது.

நிறைகள் இருப்பின் இறைவனைச் சாரும்,

குறைகள் இருப்பின் என்னைச் சாரும்.

எனக் கூறு விடைப்பெறுகிறேன். நன்றி .

தமிழ் நம் அடையாளம் ! தமிழோடு காப்போம் பண்பாடு !

You might also like