You are on page 1of 2

வாக்கியங்களை நிரல்படுத்தி மீண்டும் கதையை எழுதுக.

உப்பு வியாபாரியும் சோம்பறி கழுதையும்

அவரை ஏமாற்ற நினைத்த கழுதை, மூட்டைகளை அசைத்து நீரில் தள்ளியது.


ஒருநாள், அவர் உப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நீரோடை வழியே சென்றார்.
உப்பு வியாபாரிக்குக் கழுதையின் தந்திரம் புரிந்தது.
மூட்டைகளின் பாரம் குறைந்ததால் கழுதை மகிழ்ச்சி அடைந்தது.
ஓர் அழகான சிற்றூரில் ஓர் உப்பு வியாபாரி தம் கழுதையுடன் வாழ்ந்து வந்தார்.
அப்போது, அதிர்பாராத வகையில் கழுதை நீரோடையைக் கடக்க முடியாமல் தவறி
விழுந்தது.
அவர் எப்பொழுதும் உப்பு மூட்டைகளைத் தம் கழுதையின் மீது வைத்துதான்
வியாபாரத்திற்குச் செல்வார்.
கழுதையோ வேண்டுமென்றே நீரோடையில் விழுந்து தனது பாரத்தைக்
குறைத்துக் கொண்டது.
அதனால், அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டைகள், நனைய உப்பு கரைந்து;
மூட்டைகளின் பாரம் குறைந்தது.
வியாபாரி மீண்டும் உப்பைத் தனது கோணிகளில் நிரப்பினார்.
ஆனால், நீரில் நனைந்ததால் பஞ்சு மூட்டைகளின் பாரம் அதிகமானது.
மறுநாள், உப்பு வியாபாரி உப்புக்குப் பதிலாக பஞ்சு மூட்டைகளைக் கழுதையின்
முதுகில் ஏற்றிக்கொண்டு ஓடை வழியே சென்றார்.
ஆகையால், நாம் பிறரை ஏமாற்றி வாழாமல் நேர்மையாக வாழ வேண்டும்.
எஜமானரை ஏமாற்ற நினைத்துத் தன்னைத்தானே கழுதை ஏமாற்றிக்கொண்டது.

You might also like