You are on page 1of 2

உன் மாமா உடல் நலமில்லாமல் இருப்பதாக அறிய வருகிறாய்.

உன் மாமாவின் உடல் நலம்


விசாரித்து ஒரு கடிதம் எழுது.

10, ஜாலான் வீரா 2,


தாமான் வீரா,
70000 சிரம்பான்,
நெகிரி செம்பிலான்.

20.04.2022

பாசமுள்ள மாமா குகனுக்கு,


இவ்விடம் நான் நலம். நீங்கள் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

ஒரு மாதமாக உங்களுக்கு உடல் நலமில்லை என்று அம்மா என்னிடம் கூறினார்.


சாலை விபத்தில் உங்கள் கால் முறிந்து, கட்டு போடப்பட்டு நீங்கள் மருத்துவமனையில்
இருப்பதாகக் கூறினார். விவரம் அறிந்ததிலிருந்து எனக்கு வருத்தமாக இருக்கிறது.
கவலைப்பட வேண்டாம் மாமா. இவ்வார இறுதியில் நாங்கள் குடும்பத்துடன் உங்களைப்
பார்க்க வருகிறோம்.

மாமா, நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நான் ஆண்டவனைப்


பிரார்த்திக்கிறேன். நீங்கள் தையரியமாக இருங்கள்.கூடிய விரைவில் பழையபடி
நடப்பீர்கள். இப்பொழுது மருத்துவத்துறை அதிநவீனமாக வளர்ந்துள்ளதால், சரியான
முறையில் சிகிச்சை அளித்து உங்களை சீக்கிரமாகவே குணப்படுத்தி விடுவார்கள்.
கலங்க வேண்டாம் மாமா. ஆண்டவன் உங்களுக்கு என்றும் துணைபுரிவார்.
மாமா சமையல் பற்றி எண்ணி நீங்கள் வருந்தாதீர்கள். அம்மா செய்த சமையலை
அண்ணன் சிவா தினமும் வந்து வீட்டிற்கு வந்து கொடுப்பார். சரியான நேரத்தில்
உணவைச் சாப்பிடுங்கள். மருந்துகளைக் குறித்த நேரத்தில் உட்கொள்ளுங்கள். நல்ல
ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் மாமா.
இவ்வார இறுதியில் உங்களை நேரில் சந்திக்கிறேன் மாமா. நீங்கள் நலமுடன்
இருக்கதி திருவருள் துணைநிற்கும்.
நன்றி.

இப்படிக்கு,
உங்கள் அக்காவின் மகன்,

ச. சரவணன்

You might also like