You are on page 1of 28

விதி என்றால் என்ன? மதி என்றால் என்ன?

விதிக்கும் மதிக்கும் என்ன


தொடர்பு.

விதியையும் மதியையும் பற்றி விளக்கினால் ஒரு புத்தகமே போடலாம்.

விதி என்பது நிர்ணயிக்கப்பட்டது. நாம் கடந்த காலத்தில் செய்கிற


கர்மாவின் பலன் தான் விதி. விதியை நிர்ணயம் செய்வது கர்மா. இந்த
கர்மாவை நன்முறையில் செய்ய உதவி செய்வது தான் மதி. நாம் ஒரு
கர்மாவை செய்யும் முன்பு அதில் இருக்கும் நல்லவை கெட்டவைகளை
நமக்கு எடுத்துரைத்து, சரியான தீர்மானத்தை எடுக்க வைத்து, அந்த
தீர்மானத்தின் அடிப்படையில் கர்மாவை செய்ய வைத்து, நமக்கான
எதிர்கால விதியை நன்முறையில் அமைத்துக் கொள்ள ஆண்டவனால்
கொடுக்கப்பட்ட ஞானமே மதியாகும்.

கவனமாக கேளுங்கள். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு


விஷயங்கள் உண்டு. ஒன்று புத்தி. இந்த புத்திக்கு அனைத்தும் தெரியும்.
நடந்தது, நடக்கப்போவது என ஒரு மனிதனுக்கு ஞானத்தை அளிக்க
வல்லது புத்தியாகும். ஒவ்வொரு மனிதனும் தனது செயலை செய்யும்
முன்னரே, அந்த செயலுக்கான பலாபலன்களையும், விளைவுகளையும்
எடுத்துரைப்பது இந்த புத்தியாகும். இதையே நாம் பகுத்தறிவு என்கிறோம்.

மனிதனுக்குள் இருக்கும் இன்னொரு விஷயம் மனம். இந்த மனமானது


புத்தியை அதன் போக்கில் செயல்படுத்த விடாது. சொல்லப்போனால்
தனக்கு பிடித்த மாதிரி செயல்பட சொல்லி புத்திக்கும் கட்டளையிடுவது
இந்த மனமாகும். இந்த மனத்தின் குணமானது மிக கொடூரமானது.
நல்லவனைக் கூட கெட்டவனாக்கும். மனிதனுக்கு இன்பங்களை மட்டுமே
சுட்டிக்காட்டுவது இந்த மனமாகும். அந்த இன்பங்களை அடைவதற்கான
மார்க்கங்களையும் வலியுறுத்தும். அந்த மார்க்கத்தை நோக்கி மனிதன்
பயணம் பண்ணுவதற்கான செயல்களையும்(கர்மா) செய்யச் சொல்லி
மனிதனை தூண்டிக் கொண்டே இருக்கும்.

மனிதனானவன் ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு முன்பு, அவனது


புத்திக்கும், அவனது மனதிற்கும் இடையே ஒரு சண்டையே நடக்கும்.
விளைவுகளை அவ்வபோது புத்தியானது மனிதனுக்கு உணர்த்தி கொண்டே
இருக்கும். ஆனால் மனமோ புத்தி சொல்வதை பொருட்படுத்தாதே நீ
செயல்படு என்று கட்டளைகளை பிறபித்து கொண்டே இருக்கும். புத்திக்கும்
மனதிற்கும் இடையே நடக்கும் சண்டையில் எது வெற்றி பெறுகிறதோ,
அதன் கட்டளைபடி இந்திரியங்கள்(கண், காது, மூக்கு, வாய், கைகள், கால்கள்)
செயல்படும்.

உலகமானது மாயையகள் நிரம்பியது. ஆறு விதமான மாயை இந்த


உலகில் உண்டு. அவை காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாச்சர்யம்.
இந்த மாயையானது மனதை மயக்கும் தன்மை கொண்டது. இந்த
மாயைகள் அவைகளுல் இருக்கும் இன்பங்களை மனதிற்கு காட்டி, அதை
அடைய சொல்லி மனதை தூண்டிவிடும். மனம் ஒரு குரங்கு போன்றது.
நிலையானதும் அல்ல. மனிதனின் மாபெரும் எதிரி இந்த மனம் தான்.
சுருக்கமாக கூறினால் ஒரு மனிதனுக்கு மாபெரும் நண்பன் புத்தி. அந்த
மனிதனுக்கு மாபெரும் எதிரி மனம். இந்த இரண்டும் அவனுக்குள்ளேயே
இருக்கிறது.

எப்பொழுது மனிதன் புத்தி சொல்லும் அறிவுரைகளை விடுத்து மனம்


விடுக்கும் கட்டளைகளை செய்ய ஆரம்பிக்கிறானோ, அந்த செயல்கள்
கர்மாவாகிறது. அந்த கர்மாவின் விளைவுகள் எதிர்கால விதியாகிறது. அந்த
விதியை கர்மாவை ஆற்றும் முன்னரே புத்தி அறிவுறுத்தும்.
எடுத்துச்சொல்லும். ஆனால் மனமானது அந்த கர்மாவில் இருக்கும்
இன்பங்களை மனிதனுக்கு(ஆத்மா) காட்டி புத்தியின் படி இந்திரியங்களை
செயல்பட வைக்காது. நடக்கப்போகும் விதியை பார்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது சுகமாக இருப்பதற்கான வேலைகளை செய் என்று
இந்திரியங்களுக்கு கட்டளைகளை பிறபித்துக் கொண்டே இருக்கும்.

பாலைவனத்தில் கானல் நீர் என்று சொல்லுவார்கள். அதாவது நீர் இருப்பது


போன்று தெரியும். ஆனால் உண்மையில் நீர் இருக்காது. அதுபோல
மாயைகள் காட்டும் இன்பங்களை, உண்மை என்று எண்ணி மனிதனை
மனம் செயல்படுத்த வைத்துவிடுகிறது. மனிதன் செயல்பட
ஆரம்பிக்கிறான். இறுதியில் அதில் சிக்கிக் கொள்கிறான். சிக்கிக் கொண்டு
மீ ள முடியாமல் அழ ஆரம்பிக்கிறான். ஒவ்வொரு மனிதனும் ஒரு
விஷயத்தில் அழுகிறான் என்றால், அந்த விஷயம் இன்பமானது, இன்பத்தை
தரவல்லது என்று ஆரம்பத்தில் எண்ணி இறங்கியதாக இருக்கும்.

நான் எங்கு இறங்கினேன். என்னைச் சுற்றி இருப்பவர்கள் தான் என்னை


செய்யச்சொல்லி தூண்டிவிட்டார்கள். நிர்பந்தம் செய்தார்கள். இறுதியில்
நான் மாட்டிக் கொண்டேன். அவர்கள் என்னை சிக்க வைத்துவிட்டு,
தப்பித்துக் கொண்டார்கள் என்று புலம்புவர்களும் உண்டு. நல்லவனாக
இருப்பவன் கூட சுற்றி இருப்பவனின் தூண்டுதலில் தான்
சிக்கிக்கொள்கிறான். நீ யார் என்று எனக்கு கூறாதே. உன் நண்பன் யார்
என்று எனக்கு சொல். நீ யார் என்று நான் உனக்கு சொல்கிறேன் என்ற
பழமொழி உண்டு.

ஒன்றை மறவாதீர்கள். ஒரு மனிதனின் மாபெரும் எதிரி இந்த மனம்


என்றால், அந்த மனதை தூண்டிவிடுபவர்கள் உங்களை சுற்றி இருப்பவர்கள்
தான். குறிப்பாக உங்கள் மனைவி. பெண்களின் கண்களுக்கு இன்பங்கள்
மட்டும் தான் அதிகம் தெரியும். மாயை என்னும் வலையில் அதிகம்
சிக்குபவர்கள் பெண்கள் தான். மனதின் படி அதிகம் முடிவெடுப்பவர்கள்
பெண்கள் தான். அந்த முடிவின் படி செயல்பட வேண்டும் என்று
கணவன்களை புடுங்கி எடுப்பதும் இந்த பெண்கள் தான். ஒரு பெண்ணை
ஒரு மனிதன் திருமணம் செய்தபின் அழுது புலம்புகிறான். திருமணமான
ஒவ்வொரு ஆணின் கதையை ஒரு சினிமாவே எடுக்கலாம். மாய மானைப்
பார்த்து சீதை மயங்கினாள். அதனால் இராமர் படாதபாடுபட்டார். விதி
இராமரை என்ன பாடு படுத்தியது. இராமாயணம் உங்களுக்கு
தெரியுமல்லவா?

விதி மதி பற்றி இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன.

பல உதாரணங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

இந்த பதிவில் ஒரு மனிதனின் விதியை நிர்ணயிப்பது அவனது செயல்.


அதாவது கர்மா. அந்த கர்மாவை செய்ய வைப்பது மனிதனுக்குள் இருக்கும்
புத்தி(அதாவது மதி) அல்லது மனம். இதை இந்த பதிவில் தற்பொழுது
தெரிந்து கொள்ளுங்கள்.
முந்தைய பதிவில் ஒரு மனிதனின் விதியை நிர்ணயிப்பது அவனது கடந்த
கால கர்மவினை. ஒருவன் கர்மாவை ஆற்றுவதற்கு அவனுக்குள்ளிருக்கும்
புத்தி(மதி) அல்லது மனம் இரண்டில் ஏதாவது ஒன்று மேலோங்கி செய்ய
வைக்கிறது என்று பார்த்தோம்.

மனிதனுக்குள்ளிருக்கும் புத்தியை(அதாவது மதி) பற்றி இந்த பதிவில் சற்று


ஆன்மீ க ரீதியாக விரிவாக காண்போம்.

நானே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பரமாத்மாவாக(அதியக்ஞம்) இருந்து


அவனுக்கு(ஜீவாத்மா) சரி எது? தவறு எது? என்கிற ஞானத்தை
போதிக்கிறேன். மனிதன்(ஜீவஆத்மா) செய்யும் செயல்களுக்கு நானே
சாட்சியாகிறேன்.-(பகவத்கீ தை அட்சர பிரம்மயோகம்(8 வது
அத்தியாயம்,4 வது ஸ்லோகம்)

ஒவ்வொரு மனிதனும்(ஜீவாத்மா) ஒரு செயலை(கர்மா) செய்யும் முன்,


அவனுக்கு அச்செயலினால் விளையும் பலாபலன்களும், அச்செயலினால்
ஏற்படும் விளைவுகளும் நன்கு தெரியும். இதை ஆண்டவன்
பரமாத்மாவாக(ஷீரோ தக்சாய விஷ்ணு) அவனுக்குள் மதியாக(புத்தி) இருந்து
போதிக்கிறார். இந்த ஞானமே பகுத்தறிவாகும். மனிதனுக்குள் இருக்கும்
பகுத்தறிவானது அனைவருக்கும் சமமானதே. மனிதனுக்குள் இருக்கும்
பரமாத்மா எல்லா ஜீவஆத்மாகளுக்கும் சமமான ஞானத்தையே
வழங்குகிறார்.

ஒருவனை புத்தியில்லாதவன் என்று நீங்கள் உரைப்பீர்களேயானால்,


உண்மையில் அவன் புத்தி இல்லாதவன் அல்ல. அவன் அவனுக்குள்
இருக்கும் புத்தியை கொன்றவன் என்றே பொருளாகும். அதாவது
ஒவ்வொரு செயலையும் செய்யும் முன்பு, அனைத்து மனிதனுக்கும்
அவனுக்குள் இருக்கும் புத்தி(மதி) சரியானதையே தான் போதிக்கிறது. அந்த
ஞானத்தை கொன்று தான் அவன் செயலாற்றுகிறான். அதாவது கர்மாவை
ஆற்றுகிறான். அவ்வாறு புத்தியை கொல்ல காரணம் அவன் ஆற்றும்
செயலில்(கர்மா) மறைந்திருக்கும் இன்பத்தை அடையும் வேட்கையே
ஆகும்.
உதாணரத்திற்கு சொன்னால், குடிப்பது தவறு என்று எல்லா
குடிகாரன்களுக்கும் தெரியுமா? தெரியாதா?. எல்லா குடிகாரன்களுக்கும்
அவனது புத்தியானது ஞானத்தை போதிக்கிறது. ஆனால், மதுவில் இருக்கும்
போதை என்ற இன்பத்தை அடையும் வேட்கையில் மனிதன்(ஜீவாத்மா),
தனது புத்தியை(மதியை) கொல்கிறான்.

ஒரு பெண்ணை பலாத்காரம் செய்யும் ஒரு மனிதனுக்கு, அது தவறு என்று


அவனது புத்தியானது தெரிவிக்குமா? தெரிவிக்காதா?. பெண்ணை
பலாத்காரம் செய்வதால் உண்டாகும் காமம் என்ற இன்பத்தை அடையும்
வேட்கையில் அவன் தனது புத்தியை கொல்கிறான்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பரமாத்மா புத்தியாக(மதியாக) இருக்கிறார்.


செயலை செய்யும் ஜீவஆத்மாவிற்கு ஞானத்தை போதிக்கிறார். ஆனால்
மாயையில் மதிமயங்கும் மனிதன்(ஜீவஆத்மா) தனக்குள்ளிருக்கும்
பரமாத்மாவை(புத்தி) கொல்கிறான். ஒவ்வொரு செயலிலும்
பரமாத்மாவை(புத்தியை) கொன்று செயலை ஆற்றுவதால், அந்த
செயலுக்கான விளைவுகளுக்கு பொறுப்பாகிறான். அதாவது பாவம் அவனது
கணக்கில் எழுதப்படுகிறது. இதற்கு அவனுக்குள் இருக்கும் பரமாத்மா
சாட்சியாகிறார். அந்த பாவ புண்ணிய கணக்கின் அடிப்படையில் அவனது
விதி தர்ம தேவனால் எழுதப்படுகிறது. அதை காலதேவன்
செயல்படுத்துகிறார்.

அதேபோல் பரமாத்மா(புத்தி) உணர்த்தும் ஞானத்தை பின்பற்றி கர்மாவை


அனுஷ்டிக்கும் ஜீவஆத்மா(மனிதன்) அந்த கர்மாவின் பலாபலனாக
புண்ணியம் பெறுகிறது. அதற்கும் பரமாத்மாவே சாட்சியாகிறார்.

விதி மதி-3: விதியை எழுதும் ஆறுவிதமான மாயைகள்

முதல் பதிவு: விதி என்பது கடந்த கால கர்மவினை. ஒருவன் கர்மாவை


ஆற்றுவதற்கு அவனுக்குள் இருக்கும் மதி அல்லது மனம் இரண்டில் எது
மேலோங்கிறதோ அதுவே கர்மாவை செயல்படுத்துகிறது. அந்த கர்மாவின்
பலனே எதிர்கால விதியாகிறது என்பதை பார்த்தோம்.
இரண்டாம் பதிவில்: மதியை பற்றி பார்த்தோம். மதி என்பது பரமாத்மா
ஜீவாத்மாவிற்கு போதிக்கும் ஞானம். அந்த ஞானத்தை ஜீவாத்மா(மனிதன்),
கர்மாவில் இருக்கும் மாயையான இன்ப வேட்கையை அடையும்
திவிரத்தில் மதியைக் கொன்று கர்மாவை செயல்படுத்துகிறது. அதன்
மூலம் தனது எதிர்கால விதியை தானே உருவாக்கி கொள்கிறது என்பதை
பார்த்தோம்.

இந்த பதிவில் மனிதன்(ஜீவாத்மா) கர்மாவை ஆற்றும் போது, மனிதனின்


மதியை செயல்படுத்த விடாது தடுக்கும், ஆறு விதமான மாயைகளை
பார்ப்போம்.

1.காமம்:

யாருக்கும் எந்த வகையிலும் கெடுதல் நினைக்காத ஒருவனைக் கூட, ஒரு


நொடியில் மாற்றும் தன்மை கொண்டது இந்த காமம். மன்மதனை
நெற்றிக்கண் திறந்து எரிக்கும் பரமசிவன் கூட, மோகினி என்ற பெண்ணை
பார்த்ததும், அவள் பின்னால் ஓடுவார். தன்னைத் திருமணம் செய்து
கொள்ள வேண்டுவார். மோகினியை கட்டி அணைப்பார். மோகினியின்
வடிவில் இருக்கும், நாராயணன், மோகினி என்ற மாயையை விலக்கி
சுயஉருவம் கொண்டவுடன் பரமசிவன் சுயநினைவு பெறுவார். தான்
ஆற்றிய செயலை எண்ணி நாராயணனிடம் வெட்கி தலைகுனிவார்.
மனிதனின் புத்தியை செயல்படுத்த விடாது செய்யும் மாயைகளில்
முதன்மையானது இந்த காமம்.

2.குரோதம்:

குரோதம் என்றால் கோபம். இந்த கோபமானது ஒருவனது சுயநினைவை


வெகுவிரைவில் மறக்க செய்தவிடும். ஒரு மனிதனை குரோதம்
ஆட்கொண்டால் அவனது புத்தி சுத்தமாக வேலை செய்யாது. அவன் என்ன
செய்கிறான் என்று அவனுக்கே தெரியாது. மனிதன் குரோதத்தில் ஆற்றும்
கர்மாவை எண்ணி பின்னாளில் வாழ்நாள் முழுவதும் வருத்தம் கொள்ள
வைத்துவிடும்.
குரோத்தால் பிரம்மனின் தலையை கிள்ளி எறிவதால், கடவுள் என்ற
ஸ்தானத்தை இழந்து மனிதர்களிடமும் பிச்சை எடுக்கும் நிலைக்கு
தள்ளப்படுவார் பரமசிவன். இன்று வரை ருத்ரனால் பிரம்ம நிலையை
அடைய முடியாததற்கு காரணம் அவரிடத்தில் இருக்கும் கோபமேயாகும்.
இன்று வரை ருத்திரனால் குரோதத்தை வெல்ல முடியவில்லை.

3.மோகம்:

மோகம் என்பது ஆசை. ஒருவனுக்கு மோகம் பிடித்து கொண்டால், அதை


எப்படியாவது அடைய வேண்டும் என்ற மாயை மனதை பீடித்து விடும்.
அது பல கர்மாக்களை செய்ய வைக்கும். மனிதனுள் இருக்கும்
இந்திரியங்களில் அவனது கண் தான் மிகவும் மோசமானது. மோகம்
என்னும் வலையில் சிக்குவது, மனிதனின் கண் தான். எவன் ஒருவன் இந்த
கண்ணை தனது மதியின் கட்டுப்பாட்டில் வைக்கிறானோ, அவன்
மகாயோகி. அவனால் விதியை வெல்ல முடியும்.

சந்திரனின் அழகில் தாரை என்பவள் மோகம் கொள்கிறாள். தாரைக்கு


புத்திமதி சொல்லாமல் சந்திரன் தாரையின் மோகத்தை அனுமதிக்கிறான்.
காமம் இருவரையும் பீடித்துக் கொள்கிறது. அதனால் சந்திரன் என்ன
நிலைக்கு ஆனான் என்பது உங்களுக்கு தெரியுமல்லவா.

குறிப்பு:- நவக்கிரகங்கள் தான் மனிதனின் தலைவிதியை நிர்ணயிக்கிறது


என்று தவறான எண்ணம் கொள்ளாதீர்கள். அவரவர் கர்மா தான் அவரது
விதி. இதில் கடவுள் என்றோ, கோள்கள் என்றோ, மனிதன் என்றோ பேதம்
கிடையாது. அதனால் தான் கடவுளையும், கோள்களையும் உதாரணமாக
இங்கு காட்டியுள்ளேன்.

விதிக்கு அனைவரும் சமமே. கடவுள், மனிதன், நவக்கிரகம் என்று ஆளை


பார்த்து வேலை செய்யாது. விதிக்கான வரைமுறையை எழுதியவன் கூட,
அவனது வாழ்வில் ஆற்றும் கர்மா, அவனது விதியை தீர்மானிக்கும்.
ஜோதிஷம் என்பது உங்களின் கடந்த கால கர்மாவினையை
கண்டுபிடிக்கும் ஒரு கருவி மட்டுமே அன்றி, அதனால் நீங்கள் கடந்த
காலத்தில் ஆற்றிய கர்மவினைகளை மாற்றி எழுத முடியாது. இதை
மனதில் ஆழமாக பதிவு கொள்ளுங்கள்.

4.லோபம்:

மோகத்தின் அடுத்த படி லோபம். லோபம் என்றால் ஒன்றின் மீ து


கொள்ளும் அதி தீவிரமான ஆசை. எந்த நிலையிலும் அதை மற்றவனுக்கு
விட்டுக் கொடுக்கவோ, கைவிடவோ மனிதன் தயாராக இருக்க மாட்டான்.
பேராசை என்றுகூட சிலர் சொல்வதுண்டு.

மகாபாரதத்தில் தருமன் மிகவும் நல்லவன். அவன் தனது தம்பிமார்கள்,


மனைவி என அனைத்தும் பணயம் வைத்து சூதாட என்ன காரணம்,
அஸ்தினாபுரத்து அரியணை வேண்டும் என்ற லோபம். அந்த லோபம்
அவனைக் கூட சூதாட்டத்தில் அடமானம் வைக்கிறது.

5.மதம்:

மதம் என்றால் கர்வம். மனிதன் தனது விதியை நன்முறையில் அமைத்துக்


கொள்ள இயலாததிற்கு மூலக்காரணமே 'நான்' என்ற அகங்காரம் தான்.
அன்றாடம் பிச்சையெடுப்பவன் கூட 'நான்' என்கிற அகங்காரத்தை
விடுவதில்லை.

6.மத்சர்யம் அல்லது மாத்சர்யம்:

மாத்சர்யம் என்றால் பொறாமைக்குணம். இதற்கு எளிதாக


அடிமையாகுபவர்கள் பெண்கள் தான். ஒரு பெண் அணிந்திருக்கும்
புடவையை பார்த்தாலும் மற்றொரு பெண் அவள் மனதில் என்ன
நினைக்கிறாள். அவள் மனதில் நினைக்கும் தருணமே அவளது கணவன்
தொலைந்தான்.
புத்திசாலியான ஆண்கள், தனது மனைவிகளை அதிகம் கூட்டம் கூடும்
இடத்திற்கு கூட்டி செல்வதை தவிர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக
பெண்கள் அதிகமாக இருக்கும் கூட்டத்தை தவிர்க்க வேண்டும். அப்படியே
உங்கள் மனைவி செல்லும் நிலை வந்தால், நீங்கள் எப்படியாவத உங்களை
கழட்டிக் கொள்ள வேண்டும்.

இந்த ஆறு மாயைகள் தான் மனிதனின் தலைவிதியை நிர்ணயிக்கின்றன.


இதில் எதுவும் நிரந்தரமானவை அல்ல. நிரந்தரமான இன்பத்தையும்
மனிதனுக்கு தருவதில்லை. கானல் நீர் போன்ற மாயைகள். இந்த
மாயையில் மறைந்திருக்கும் இன்பம் என்ற மாயையில் தான் மனிதனின்
மனம் மயங்குகிறது. புத்தியை இழக்கிறது.

தீதும் நன்றும் பிறர்தர வாரா. உங்களது தலைவிதி, கடந்த காலத்தில்


நீங்கள் உங்கள் புத்தியை இழந்து செய்யும் கர்மாவினால் ஏற்படுவது. இதில்
ஆண்டவன் வெறும் சாட்சியே அன்றி. அவன் உங்கள் தலைவிதியை
நிர்ணயிப்பதில்லை. ஏன் நவக்கோள்கள் கூட, நீங்கள் கடந்த காலத்தில்
ஆற்றிய கர்மாவிற்கான பலாபலன்களை நிர்ணயிப்பவையே அன்றி,
அவைகளாக உங்கள் தலைவிதியை தீர்மானிப்பதில்லை.

இந்த பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீங்கள் தாராளமாக


கேட்கலாம். உங்களின் சந்தேகங்களுக்கான விடையை அடுத்த பதிவில்
தருகிறேன். மற்றவர்களும் பயனடைவார்கள்.

விதி மதி 4: கர்மாவின் வகைகள்

இந்த பதிவு மிகவும் முக்கியமானது.


மனிதன் பிறக்கிறான், வளர்கிறான், திருமணம் செய்கிறான், மக்களைப்
பெறுகிறான், அவர்களுக்காக செல்வங்களை சேர்க்கிறான், சேர்த்த
செல்வத்தினை கொண்டு அவர்களை ஆளாக்குகிறான். இறுதியில்
பேரக்குழந்தைகள். ஒரு மனிதனுக்கு பேரக்குழந்தைகள் வந்துவிட்டாலே
அவனது கடமைகள்(செயல்கள்) கிட்டதட்ட முடிவடைந்து விட்டன.
சம்பாதித்ததை பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்து, பிறகு தன்
தேவைகளுக்கு பிள்ளைகளிடம் கையேந்தும் நிலை. அவனது பிள்ளைகள்
நல்லபடியாக பார்த்துக் கொண்டால் வாழ்க்கை சொர்க்கம்.
இல்லையென்றால் நரகம். இது தான் மனித வாழ்க்கை.

ஒரு மனிதனின் வாழ்வில் திருமணம் முடிந்த பிறகு தான், அவனது


வாழ்வின் இலட்சியம் அதிகமாகிறது. நிறைய பொருள் சேர்க்க வேண்டும்
என்ற நிலை ஏற்படுகிறது. இந்த பொருளுக்காக பல கர்மாக்களை மனிதன்
செய்கிறான். அதாவது தர்மத்தின் படி கர்மாவை ஆற்றி பொருள்
சேர்க்கிறானா அல்லது எப்படி வந்தாலும் சரி, நமக்கு பொருள் வருகிறதா?
அதை பார் என்று பொருள் சேர்க்கிறானா?

இன்றைய உலகில், ஒருவன் பொருள் சம்பாதிக்க அரசியலும் ஒரு தொழில்


ஆகிவிட்டது. அந்த தொழிலில் சம்பாதிக்க ஒருவன் போடும் மூலதனம்
ஓட்டுக்கு தரும் பணம். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நிலை
இப்பொழுது உள்ளதா? அல்லது நமக்கு சேவை செய்யக்கூடிய ஒருவனை
தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே உள்ளதா? தேர்தல்
வந்தால் நமக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற எண்ணம் மக்களுக்கு.
தேர்தலில் ஜெயித்தால் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் என்பது
தேர்தலில் நிற்பவனின் எண்ணம். தர்மமாவது நீதியாவது விதியாவது.
அனைத்தும் பணமே. அதனால் தான் இயற்கை தன் முடிவை மாற்றிக்
கொண்டே போகிறது. மழை குறைந்து கொண்டே போகிறது. பூமியில்
குடிக்க கூட தண்ண ீர் இல்லாமல் மனிதன் போய்க் கொண்டிருக்கிறான்.

அனைத்தையும் கடவுள் தான் தீர்மானிக்கிறார் என்று மனிதன் கருத்து


சொல்வான். ஒருவனுக்கு நடந்தது, நடக்கப் போவது அனைத்தையும்
அவனே தீர்மானிக்கிறான் என்று இவன் செய்யும் அனைத்து
செயல்களுக்கும் அவன் மீ து பழியை போட்டுவிடுவான்.
'நெஞ்சுக்கு தேவை மனசாட்சி

அது நீதிதேவனின் அரசாட்சி

அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி

மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி'

அதனால் கடவுள் ஏன் கல்லானான்,

மனம் கல்லாய் போன மனிதர்களாலே'

இந்த பாடல் எம்.ஜி.ஆர். படத்தில் வரும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவன் சாட்சியாக இருக்கிறான். அந்த


சாட்சியை மனிதன் ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை. மனிதனுக்குள்
இருக்கும் அவன், வெளிவந்து மக்கள் அரங்கத்தில் சாட்சியாக
மாறுவதில்லை. அந்த தைரியத்தில், அனைத்தையும் மனிதன் செய்கிறான்.
ஆனால் ஒன்று மக்கள் அரங்கத்தில் அவன் சாட்சியாக வராவிட்டாலும்
அனைத்தையும் அவன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். அவனது
ஏட்டில் எழுதிக் கொண்டுதான் இருக்கிறான்.

கர்மாவில் மூன்று வகை உள்ளது. அவை 1.சஞ்சிதம், 2.பிராரப்தம்


3.ஆகாமியம்.

சஞ்சிதம் என்பது நாம் சேர்த்து வைத்துள்ள மொத்த கர்ம வினைகள்.


தர்மதேவனின் ஏட்டில் ஒவ்வொரு மனிதனுக்கும் கணக்கு உள்ளது. பேங்க்
அக்கவுண்ட் மாதிரி.

இந்த அக்கவுண்டில் இருந்து ஒரு பிறவியில் மனிதன் எவ்வளவு


அனுபவிக்க முடியுமோ, அதை பிராரப்தமாக தீர்மானிக்கிறான். இந்த
பிராரப்த கர்மாதான் ஒரு பிறவியில் மனிதன் அனுபவிக்க வேண்டிய
விதியாகும். இதை யாராலும் மாற்ற முடியாது. என்ன பரிகாரம்
செய்தாலும், எத்தனை கோயிலுக்கு போய் எத்தனை கும்பிடு போட்டாலும்,
எத்தனை காணிக்கை கொடுத்தாலும் மாற்ற முடியாது.
ஆகாமியம் என்ற கர்மாவை அவன் தீர்மானிப்பதில்லை. நாம் ஒருவனுக்கு
கடந்த பிறவியில் ஏதோ ஒரு தீங்கு செய்தால், அந்த துன்பமானது, ஏதோ
ஒரு வடிவில் கண்டிப்பாக விதியாக நமக்கு வந்தே தீரும். இதை
அனுபவிக்கும் பொழுது நாம் ஏற்கனவே ஏதோ ஒரு பிறவியில்
செய்திருக்கிறோம் என்று வருகின்ற துன்பத்தை மனதார
ஏற்றுக்கொள்வோம் என்று மனிதன் தீர்மானித்து விட்டால் பிரச்சனை
இல்லை.

ஏற்றுக்கொண்டு அனுபவிப்பதில் தான் பெரும் பிரச்சனையே இருக்கிறதே.


சும்மாவா விடுகிறோம். எவன் மூலம் பிரச்சனை வருகிறதோ, அவனுக்கு
அதை விட இரண்டு மடங்கு தரவேண்டும் என்று கிளம்பி விடுகிறோம்.
இதைக் கூட ஏதோ நியாயம் என்று ஏற்றுக்கொள்ளலாம்.

துரோகம் அதிலும் நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல் என்ற வார்த்தைகள்


தமிழில் உள்ளதல்லவா? நம்மை நம்புபவனுக்கு தீங்கு செய்வது. இந்த
கர்மாதான் ஆகாமியம். இந்த கர்மாவை அவன் தீர்மானிப்பதில்லை.

விதியை அனுபவிக்க எடுத்த பிறவியில் நீங்கள் செய்யும் இத்தகைய


கர்மாவை, உங்களது சஞ்சித கர்மாவில் சேர்த்து விடுவான். ஒருவேளை
யாருக்கு துரோகம் இழைத்தீர்களோ, பாதிக்கப்பட்டவன் இந்த
பிறவியிலேயே நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்று தர்ம தேவனிடம்
முறையிட்டால், இந்த பிறவியிலேயே அனுபவிக்க பிராரப்த கர்மாவில்
இணைத்து விடுவான்.

மனிதன் விதியை அனுபவிக்க தயாராகுவதில்லை. விதியை


மாற்றியமைக்க முயல்கிறான். அதனால் மீ ண்டும் மீ ண்டும் பல
கர்மாக்களை செய்து விதியை கூட்டிக் கொண்டே தான் செல்கிறான்.

இந்த பதிவில் கொஞ்சம் பாவம் செய்பவர்களை சாடுவதாக டைப்


செய்துள்ளேன். வேறு வழியில்லை. இயற்கை நமக்கு மட்டும் கிடைத்த
பரிசு அல்ல. மற்ற உயிரினங்களுக்கும் தான். அதேபோல எதிர்கால மனித
சந்ததிகளுக்கும் தான். நான் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது நிறைய
மழை பெய்யும். ஏரி, குட்டைகளில் கூட தண்ண ீர் இருக்கும். இன்றோ பெரிய
ஆறுகளில் கூட தண்ண ீர் இல்லை. இந்த நிலை தொடர்ந்தால், காரணம்
அவனல்ல. நாம் தான். இந்த நிலைக்கு காரணமாக அவனைக் குற்றம்
சாட்டிக் கொண்டிருக்கிறோம்.

விதி மதி 5: கர்மாவின் வகைகள்(முந்தைய பதிவின் தொடர்ச்சி)

கர்மா மூன்று வகைப்படும். 1. சஞ்சிதம், 2. பிராரப்தம், 3.ஆகாமியம்.

1.சஞ்சிதம்:

பல பிறவிகளில் ஜீவாத்மா செய்யும் மொத்த பாவ புண்ணிய கணக்கு. இது


தர்ம தேவனின் கட்டுப்பாட்டில் உள்ளது.

2. பிராரப்தம்:

சஞ்சிதத்திலிருந்து ஒரு பிறவியில் ஜீவாத்மா எவ்வளவு அனுபவிக்க


முடியுமோ, அதை தர்மதேவன் ஜீவாத்மாவிற்கு நிர்ணயிப்பார். இதற்கு
பிராரப்தம் என்று பெயர். தர்மதேவன் பிராரப்தத்தை நிர்ணயித்த பிறகு,
காலதேவனிடம் இந்த கணக்கை ஒப்படைப்பார். கால தேவன் கால
வாரியாக ஜீவாத்மா எந்தெந்க காலங்களில் அனுபவிக்க வேண்டும் என்று
நிர்ணயிப்பார். இதையே விதி என்கிறோம்.

3. ஆகாமியம்:

விதியை அனுபவிக்க ஜெனனமெடுக்கும் ஜீவாத்மா, அந்ததந்த பிறவிகளில்


மேன்மேலும் மற்ற ஆத்மாக்களுக்கு தீங்கு இழைத்து கொண்டே தான்
செல்கிறது. இந்த கர்மாவிற்கு ஆகாமியம் என்று பெயர். இந்த கர்மாவின்
வலிமைக்கு தகுந்தவாறு, பிராரப்தத்தில் சேர்ப்பதா, அல்லது சஞ்சிதத்தில்
சேர்ப்பதா என்று தர்மதேவன் தீர்மானிப்பார். அதாவது அந்த பிறவியிலேயே
அந்த பாவத்திற்கான தண்டனையை அனுபவிக்க அனுமதிப்பதா(பிராரப்தம்)
அல்லது மற்ற பிறவிகளில் அனுபவிக்க அனுமதி கொடுப்பதா(சஞ்சிதம்)
என்று தர்மதேவன் தீர்மானிப்பார். அது அந்தந்த பிறவிகளில் ஜீவாத்மா
செய்யும் பாவகாரியத்தின்(புண்ணிய காரியமும் சரி) வலிமைக்கு
தகுந்தாற்போல் தீர்மானிக்கப்படும்.
சரி விதி என்றால் என்ன? விதி என்பது ஒரு ஜீவாத்மா ஒரு பிறவியில்
என்ன அனுபவிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது தான் விதி. அவ்வாறு
விதியை அனுபவிக்கும் பொழுது, அந்த ஜீவாத்மா என்ன செய்ய வேண்டும்
என்று தீர்மானிப்பது விதியல்ல. உதாரணத்திற்கு சொன்னால், நான்
முற்பிறவியில் ஏதோ ஒரு பெண்ணை நம்ப வைத்து, அனுபவித்து
ஏமாற்றிவிட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த தண்டனையை
நான் இப்பிறவியில் அனுபவிக்க வேண்டும் என்று விதியானது
தீர்மானிக்கப்படுகிறது. அதாவது எனது வாலிப காலத்தில் ஒரு பெண்ணை
நான் கட்டாயம் சந்தித்தாக வேண்டும். அவளது காதல் வலையில் சிக்கி
ஏமாற்றப்பட்டு, அந்த பெண்ணால் நான் பெரும் துன்பம் அனுபவித்தாக
வேண்டும் என்று விதியானது எனது தலையில் தீர்மானித்திருக்கிறது.
இதை என்னால் மாற்ற முடியாது. சந்தித்தே ஆக வேண்டும். இது
தர்மதேவன், மற்றும் காலதேவனின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அவ்வாறு ஒரு பெண்ணால் நான் அனுபவிக்கும் காலங்களில், நான் அதை


விதி என்று மனதார ஏற்றுக்கொண்டு அனுபவித்துவிட்டேன் என்றால்,
அதன் பிறகு அது எனது மற்றபிறவிகளில் தொடராது. அதாவது அந்த
பிறவியிலேயே முடிந்து போய்விட்டது என்று பொருள்.

நான் அதை விடுத்து, அகந்தையில் 'என்னையா ஏமாற்றினாய் உன்னை


என்ன செய்கிறேன் பார்' என்று அந்த பெண்ணின் மீ து குரோதம் கொண்டு,
அந்த பெண்ணை கடத்திக் கொண்டு போய், பத்து நாட்களுக்கு வைத்து,
கற்பழித்து அவளைக் கொடூரமாக கொலை செய்கிறேன் என்று வைத்துக்
கொள்ளுங்கள், இது ஆகாமிய கர்மா. இந்த கர்மாவானது தர்மதேவனின்
கட்டுப்பாட்டில் கிடையாது. ஒரு பெண்ணால் நான் துன்பம் அனுபவிக்க
வேண்டும் என்பதை எனக்கு நிர்ணயிப்பது தான் தர்மதேவனுக்கு பரமாத்மா
விதித்தது. ஆனால் அந்த பெண்ணை பதிலுக்கு நான் என்ன செய்ய
வேண்டும் என்பது தர்மதேவனால் விதிக்கப்பட்டது அல்ல. தர்மதேவனின்
கட்டுபாட்டிலும் எனது கர்மா(ஆகாமியம்) கிடையாது. பரமாத்மாவும்
தலையிட முடியாது. ஏனெனில் நான் செய்ய போகும் கர்மா(ஆகாமியம்)
சஞ்சிதத்திலோ, பிராரப்தத்திலோ என் கணக்கில் கிடையாது. அதாவது நான்
முற்பிறவிகளில் செய்த கர்மாக்களின் விளைவுகள் அல்ல.
முற்பிறவிகளின் விளைவுகள் தான் இந்த பிறவியின் விதி. எனவே
தர்மதேவனோ, காலதேவனோ, பரமாத்மாவோ தலையிட முடியாது. எனவே
நான் குறித்த நேரத்தில், நான் போட்ட பிளான் படி கண்டிப்பாக அந்த கர்மா
செயல்படும். இது பாவ கர்மாவிற்கு மட்டுமல்ல. புண்ணிய கர்மாவிற்கும்
பொருந்தும்.

நாம் செய்கிற பல செயல்கள் குறித்த நேரத்தில் நாம் போட்ட பிளான் படி


நடக்கிறது என்றால் அந்த கர்மாவானது ஆகாமியம் ஆகும். அவ்வாறு நாம்
பிளான் போட்ட படி நடக்காமல் போகிறது என்றால் அது பிராரப்தம்.
அதாவது விதி. அதை தர்மதேவன் நம்மீ து இயக்குகிறான் என்று பொருள்.

ஆகாமிய கர்மாவானது நாம் நினைத்த நேரத்தில், போட்ட பிளான் படி


நடக்கும். யாரும் தடுக்க இயலாது. தடுக்கக்கூடிய ஒரே சக்தி எனது புத்தி
மட்டும் தான். அதாவது அறிவு மட்டும் தான். அறிவு மட்டுமே தவறு
செய்யாதே என்று எனக்கு அவ்வபோது கட்டளையிடும். ஆனால் பழிவாங்க
வேண்டும் என்ற குரோதத்தில் சிக்கிய என் மனது புத்தி இடும்
கட்டளைகளை ஏற்காது. புத்தி இடும் கட்டளைகளை இந்திரியங்கள்(உடல்
உறுப்புகள்) ஏற்று செயல்படுத்தவும் மனது விடாது. மாறாக எந்த
குரோதத்ததால் மனது ஆட்கொண்டு உள்ளதோ, அந்த குரோதத்தையே
செயல்படுத்த சொல்லி இந்திரியங்களுக்கு கட்டளையிடும். இந்த போரில்
மனது தான் பெரும்பாலும் வெல்கிறது. ஏனெனில் மனதானது குரோதம்
என்ற உணர்ச்சியில் சிக்கியுள்ளது. அவ்வாறு குரோதத்தில் சிக்கியுள்ள
ஒருவனுக்கு யார் அறிவுரை சொன்னாலும் ஏற்கமாட்டான். அறிவுரை
சொல்பவர்கள் மீ தும் குரோதத்தையே காட்டுவான். இவ்வாறு செய்கிற
கர்மாவே ஆகாமியம் என்றழைக்கப்படுகிறது. இந்த கர்மாவை நான் செய்த
முடித்த பின், எனது கர்மாவால் பாதிக்கப்பட்ட பெண், இந்த பிறவியிலேயே
நான் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று பரமாத்மாவிடம்
முறையிட்டால், பிராரப்தத்தில் சேர்க்கப்படும். இல்லையென்றால்
சஞ்சிதத்தில் சேர்க்கப்படும்.

இதில் ஒரு மர்மமும் உண்டு. எந்த பெண் என்னால் துன்பம் அனுபவிக்க


போகிறாளோ, அவளுக்கு அது விதிக்கப்பட்ட விதியா? இல்லையா? அதாவது
அந்த பெண் முற்பிறவிகளில் ஏதாவது ஒர் ஆண்மகனை காதலித்து
கொலைபுரிந்திருந்தால் இந்த பிறவியில் அவள் என்னால் அந்த விதியை
அனுபவிக்க வேண்டும் நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம். அவ்வாறு ஒருவேளை
இருந்தால், அந்த பெண்ணால் அதை மாற்ற முடியாது.

ஒருவேளை முற்பிறவிகளில் அவள் அவ்வாறு எந்த தவறும் செய்யாதவள்


எனில், நான் அவளை கொலைபுரிவது அவளுக்கு விதிக்கப்பட்ட விதியல்ல.
அப்பொழுது என்னால் துன்பம் அனுபவிப்பதற்கு முன்னரே தன்னை
காப்பாற்றும் படி அவள் பரமாத்மாவிடம் வேண்டினால், அவளை எந்த
ரூபத்தலாவது பரமாத்மா காப்பாற்றுவார். ஒருவேளை அவள்
பரமாத்மாவிடம் முறையிடவில்லையென்றால், அவளாகவே அந்த
பிரச்சனையே எதிர்கொள்ள தயாராக இருக்கிறாள் என்று பொருள். அதாவது
அந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பதோ அல்லது அனுபவிப்பதோ
அவளது தீர்மானமாகிறது. அதாவது அவளுக்கு விதிக்கப்படாத
பிரச்சனையை பரமாத்மாவிடம் ஒப்படைக்காமல் அவளே
எதிர்கொள்வதாகவும், அந்த பிரச்சனையின் முடிவுகளுக்கு அவளே
பொறுப்பாவதாகவும் முடிவாகிறது. பிரச்சனையின் முடிவுகளை
ஜீவாத்மாவே ஏற்ற பின்னர், அதை அனுபவிக்கும் தருணங்களில்
பரமாத்மாவின் மீ து பழியும், குற்றமும் சுமத்தினால் அது அவரைச் சாராது.

இதுதான் வாழ்வின் மர்மம். பரமாத்மாவின் தொழில் காத்தல். அவன்


காப்பாற்ற தயார். ஆனால் ஜீவாத்மா அழைக்காமல் காப்பாற்றமாட்டான்.
ஜீவாத்மா சந்திக்கும் ஒரு பிரச்சனையானது, அந்த ஜீவாத்மாவிற்கு
விதிக்கப்பட்ட விதியாக இல்லையெனில் பிரச்சனையை அனுபவிக்கும்
முன்னரே பரமாத்மாவிடம் முறையிட்டால் அந்த ஜீவாத்மா
பரமாத்மாவால் காப்பாற்றப்படும்.

ஆனால் விதிக்கப்படாத பிரச்சனையில் சிக்கும் போது


பெரும்பான்மையான ஜீவாத்மாக்கள், பரமாத்மாவை நினைப்பதே
கிடையாது. காரணம் நான் என்கிற அகந்தை தான். நான் என்கிற
அகந்தையில் சிக்கிய ஜீவாத்மா, பரமாத்மாவிடம் சரணாகதி
அடைவதில்லை. பிரச்சனையே நாமே பார்த்துக்கொள்ளலாம்,என்னால்
முடியும் என்று ஜீவாத்மா தீர்மானம் செய்கிறது. ஜீவாத்மாவிற்குள்
இருக்கும் 'நான்' என்கிற அகந்தை. எப்பொழுது ஒழிகிறது. ஒரு விஷயத்தில்
தன்னால் முடியாத போது, 'கடவுளே என்னைக் காப்பாற்று' என்று
பரமாத்மாவிடம் முறையிடுகிறது.

பாஞ்சாலி துயில் உரியப்படுகிறாள். அது அவளுக்கு விதிக்கப்பட்ட


விதியல்ல. அதனால் பரமாத்மாவை அழைக்கிறாள், இரு கைகளையும்
மேலே தூக்கி அழைத்த பிறகே வருகிறான். கஜேந்திரன் என்கிற யானை
குளத்தில் முதலையிடம் சிக்கிக்கொள்கிறது. பலவருடங்கள் அதோடு
போராடுகிறது. இறுதியில் தன்னால் முடியவில்லை மரணம் நெருங்குகிறது
என்ற உணர்ந்த தருணத்திலேயே பரமாத்மாவை அழைக்கிறது. இது போல்
பல விஷயங்களை சொல்லலாம்.

விதி மதி 6: வாழ்வில் நடக்கும் கர்மாவில் எது விதிக்கப்பட்டது. எது


விதிக்கப்படாதது என்பதை அறிவது எப்படி

திரு. மதசூதனன் அருமையான கேள்வியை பதிவு செய்து, அந்த


கேள்விக்கான பதிலை ஒரு விளக்கமாக பதிவிட கேட்டு கொண்டதால்
இந்த பதிவில் அவரது கேள்விக்கு பதிலளிக்கிறேன்.

கேள்வி: பிராரப்தம் என்ற கர்மா விதிக்கப்பட்டது. அதாவது விதி. ஆகாமிய


கர்மா விதிக்கபடாதது. நம் வாழ்வில் நடக்கும் கர்மாக்களில் ஆகாமிய
கர்மாவை எப்படி அறிந்து கொள்வது? பிராரப்த கர்மாவை எப்படி
உணர்வது?

இந்த கேள்விக்கு பதில்:

மனித வாழ்க்கை என்பது தனியொரு மனிதனை மட்டும் உள்ளடக்கியது


அல்ல. அவனை சுற்றியிருப்பவர்களும் அவனது வாழ்க்கையை
நிர்ணயிக்கிறார்கள்.

உங்கள் வாழ்வில் ஒரு செயலை நீங்களாக செய்கிறீர்களா? அல்லது


செய்யவைக்கப்படுகிறீர்களா?
மனிதன் அவனது வாழ்க்கையில் ஆற்றும் ஒரு காரியமானது ஏதோ ஒரு
காரணத்தின் அடிப்படையில் ஆரம்பமாகிறது. காரியம் செய்து முடித்தவுடன்
அதன் பலனுக்காக மனிதன் காத்திருக்கிறான். அவன் ஆற்றிய காரியத்தின்
பலன்கள் அந்த மனிதனை வடிவமைக்கிறது.

அதாவது காரணமின்றி காரியம் நடவாது. காரியமில்லாமல் பலன்


கிடையாது. மனிதன் அவன் வாழ்வில் ஆற்றும் காரியத்தின் பலன் தான்
அவனது வாழ்க்கையை வடிவமைக்கிறது.

காரணம், காரியம், பலன் இந்த மூன்று விஷயங்களிலும் ஒரு மனிதன்


அவனது சொந்த முடிவின் படி செய்கிறான் எனில், காரியத்தை(கர்மா)
அவன் செய்கிறான் என்று பொருள்.

அதுவே காரணம், காரியம், பலன் இந்த மூன்றிலும் அவனை


சுற்றியிருப்பவர்கள் தீர்மானிக்கும் முடிவின் படி செய்கிறான் எனில்,
காரியத்தை அவனாக செய்யவில்லை, மற்றவர்களால்
செய்யவைக்கப்படுகிறான்.

மனிதன் ஒரு காரியத்தை அவனாக செய்கிறான் எனில் காரியத்தின்


முடிவுகளுக்கு அவன் பொறுப்பாகிறான்.

அதுவே ஒரு காரியத்தை செய்யவைக்கப்படுகிறான் எனில் காரியத்தின்


முடிவுகளுக்கு அவன் பொறுப்பாக்கப்படுகிறான்.

ராமாயணத்தில் ராமர் மானை பிடிக்க அதன் பின்னால் ஓடுகிறார். ராமர்


செய்யும் இந்த காரியத்தில் அவராக செய்தாரா? அல்லது
செய்யவைக்கப்பட்டாரா? சீதையின் கட்டளையின் பேரில் ராமர் செய்கிறார்.
அந்த செயலின் முடிவு?

மகாபாரதத்தில் தர்மம் சூதாடுகிறான். அந்த கர்மாவை அவனாக


செய்தானா? அல்லது செய்ய வைக்கப்பட்டானா? சகுனியால்
செய்யவைக்கப்படுகிறான்? அதன் முடிவு.
ராவணன் சீதையை சிறைபிடிக்கும் காரியத்தை செய்கிறான். அவனாக
செய்கிறானா? அல்லது செய்யவைக்கப்படுகிறானா? அவனது தங்கை
சூர்ப்பநகையால் செய்யவைக்கப்படுகிறான். அவன் ஆற்றிய காரியத்தின்
முடிவு?

தசரதன் ராமரை காட்டிற்கு போக சொல்கிறான். அவனாக செய்கிறானா?


செய்யவைக்கப்படுகிறானா? கைகேயினால் செய்யவைக்கப்படுகிறான்? அந்த
செயலின் முடிவு?

இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒரு காரியத்தை நீங்கள் செய்கிறீர்கள் எனில் அது ஆகாமிய கர்மா. ஒரு


காரியத்தை நீங்கள் செய்யவைக்கப்படுகிறீர்கள் என்றால் அது பிராரப்த
கர்மா(விதி).

சரி நாம் ஏன் ஒரு காரியத்தை செய்ய வைக்கப்படுகிறோம். அதாவது


யாரோ ஒருவர் நம்மை ஏன் செய்யவைக்கிறார்.

ராவணன் வான்வழியாக செல்கிறான். இமயமலை அருகே ஒரு பெண்


தவம் செய்து கொண்டிருப்பதை பார்க்கிறான். அவள் அழகில் மயங்கி,
அவளை அடைய முயற்சிக்கிறான். அந்த பெண் ராவணனுக்கு ஒரு
பெண்ணால் அவனது குலம் அழியும் என்று சாபமிட்டு தன்னை எரித்துக்
கொள்கிறாள். ராவணன் ஆற்றும் இந்த கர்மாவானது(ஆகாமியம்) அவனாக
செய்வது. மற்றவர்களால் அவன் செய்யவைக்கப்படவில்லை. அவன்
அற்றிய கர்மாவின் விளைவு, சூர்ப்பநகையால் சீதையை சிறைப்பிடிக்கும்
கர்மாவை(பிராரப்தம்) செய்யவைக்கப்படுகிறான்.

பிருகு மகரிஷி வைகுண்டத்தில் விஷ்ணுவை நாடி வரும் போது, அவர்


கூப்பிட கூப்பிட என்னவென்று கண்டுகொள்ளாமல் இருப்பார். விஷ்ணு
ஆற்றும் இந்த காரியத்தில் அவராகவே செய்கிறார். அதாவது பக்தன்
கூப்பிடுவது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இலட்சுமியை லவ் பண்ணி
கொண்டிருப்பார். விஷ்ணு ஆற்றிய கர்மா(ஆகாமியம்), அவரது அவதாரத்தில்
மனைவியை பிரிந்து வாடுவார் என்று பிருகு மகரிஷியால் சாபம்
பெறுகிறார். எனவே இராமாயணத்தில் மானை பிடிக்கும்
கர்மாவை(பிராரப்தம்) மனைவியால் செய்யவைக்கப்படுகிறார். மனைவியை
பிரிகிறார்.

தரை எது? தண்ண ீர் எது என்று தெரியாமல் துரியோதனன் கால் வைத்து
விழுகிறான். அதை பார்த்து பாஞ்சாலி கைகொட்டி சிரிக்கிறாள். அதை
பார்த்த பாண்டவர்கள் அவளை கண்டிக்கவும் இல்லை. மன்னிப்பு கேட்க
சொல்லவும் இல்லை. வெறும் வேடிக்கை பார்க்கின்றனர். பாஞ்சாலி
துரியோதனை அஸ்தினாபுரத்தின் யுவராஜன் என்று கூட பார்க்காமல், நம்
இடத்திற்கு விருந்தாளியாக வந்திருக்கிறான் என்றும் யோசிக்காமல் மற்ற
நாட்டு மன்னர்களும் கூடி இருக்கும் சபையில் அவமானப்படுத்துகிறாள்.
இதில் பாஞ்சாலி செய்யும் கர்மாவானது(ஆகாமியம்) அவளாக செய்வது.

அஸ்தினாபுரத்தில் தருமன் சூதாட்டம் ஆடப்படுகிறான். அதன் முடிவாக


பாஞ்சாலி அவமானபடுத்தப்படுகிறாள்(பிராரப்தம்). பாஞ்சாலி
துரியோதனனை அவமானபடுத்தும் போது, பாண்டவர்கள் வேடிக்கை
பார்த்தனர். அதே வேடிக்கையை அஸ்தினாபுரத்து அரண்மனையில்
வேடிக்கை பார்க்கின்றனர். பாஞ்சாலி செய்த ஆகாமிய கர்மாவிற்கு
பலனான பிராரப்தத்தை(விதியை) அவள் அனுபவித்தே தீரவேண்டும். அந்த
விதி நடக்க தருமன் ஒரு கருவியே அன்றி, தருமன் பாஞ்சாலி
அவமானத்திற்கு காரணமானவன் அல்ல.

பாஞ்சாலி துரியோதனின் ஆடையை அவிழ்க்கவில்லை. எனவே


துரியோதனன் அவளது ஆடையை அவிழ்க்கும் போது, அவளது
அழைப்பின் பேரில் பரமாத்மா தடுக்கிறார். ஒருவேளை பாஞ்சாலி
துரியோதனனின் ஆடையை அவிழ்க்கும் படியான கர்மாவை(ஆகாமியம்)
செய்திருந்தால், அவளது ஆடையானது அவிழ்க்கப்படும்
கர்மாவில்(பிராரப்தம்) பாஞ்சாலி அழைத்திருந்தாலும் பரமாத்மாவால்
ஒன்றும் செய்ய முடிந்திருக்காது.
ஏனெனில் பரமாத்மாவே விதிக்கு கட்டுப்பட்டவன். விதியை வரையறுத்த
அவனும், அவன் வாழ்வில் ஆற்றும் ஆகாமிய கர்மாவின் பலன்களை,
பின்னாளில் பிராரப்தமாக(விதியாக) அனுபவித்தே தீரவேண்டும். அவனது
வாழ்க்கையிலும் விளையாடும் என்பதை இந்த பதிவிலேயே
உதாரணமாக சொல்லியிருக்கிறேன்.

இராமாயணத்தில் தசரதன் சிரவணன் என்ற ஒரு சிறுவனை அம்பு எய்து


கொள்கிறான். அந்த கர்மாவை(ஆகாமியம்) அவனாகவே செய்கிறான். அந்த
சிறுவனது பெற்றோர்கள் அவனது மகனை பிரிந்து இறப்பது போல்,
தசரதனும் அவனது மகனை பிரிந்து வாடி இறப்பான் என்று
சாபமிடுகின்றனர்.

தசரதன் ஆற்றிய கர்மா(ஆகாமியம்) பலனாக, ராமனை பிரியும்


கர்மாவான(பிராரப்தத்தை) கைகேயினால் செய்ய வைக்கப்படுகிறான். இங்கு
தசரதனின் பிராரப்தத்திற்கு கைகேயி ஒரு கருவியே அன்றி, அவள்
குற்றவாளி அல்ல.

இது போல பல உதாரணங்களை சொல்லலாம். ஆகாமியம் என்ற


கர்மாவானது நீங்களாக செய்வது. அதன் முடிவான பிராரப்தத்தை(விதியை)
நீங்கள் அனுபவிக்க தர்மதேவனால் யாரோ ஒருவரது உருவில் கர்மாவை
செய்ய வைக்கப்படுவர்கள்.

ஒரு கர்மாவை நீங்களாக செய்கிறீர்களா(ஆகாமியம்) அல்லது


செய்யவைக்கபடுகிறீர்களா(பிராரப்தம்) என்பதை நீங்கள் கர்மாவை ஆற்றும்
போது உங்கள் புத்தியால் உணர முடியும். ஆகாமியத்தை உங்களால் மாற்ற
முடியும். பிராரப்தத்தை உங்களால் மாற்றமுடியாது. இது மனிதனுக்கு
மட்டுமல்ல. பரமாத்மாவிற்கே பொருந்தும்.

விதி மதி 7: விதியை மதியால் வெல்ல முடியுமா?

விதி என்பது ஜீவாத்மா ஆற்றிய ஆகாமிய கர்மாவின் பலன்(பிராரப்தம்).


மதி(புத்தி) என்பது மனிதன்(ஜீவாத்மா) ஆகாமிய கர்மாவை ஆற்றும் போது,
அதை நன்முறையில் ஆற்றி, அதன் பலனான பிராரப்தத்தை(விதியை)
நன்முறையில் அமைத்துக் கொள்ள உதவுவது.

ஆகாமிய கர்மாவை நன்முறையில் ஆற்றிக்கொள்ள உதவுவதே


புத்தியாகும். ஆனால், இந்த புத்தியை நன்முறையில் செயல்படுத்த மன
உணர்ச்சிகள் ஜீவாத்மாவை(மனிதனை) விடமாட்டேங்கிறது. அந்த மன
உணர்ச்சிகள் எவை? காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாத்சரியம்.
இவை மாயை வலை என்றழைக்கபடுகிறது.

மேற்க்கண்ட விஷயங்களைத் தான் இதுவரை ஆறு பதிவுகளாக


பதிவிட்டேன்.

சரி. விதியை மதியால் வெல்ல முடியும் என்கிறார்களே. இது உண்மையா?


அதாவது விதியை(பிராரப்தத்தை) மதியால் வெல்ல முடியுமா?

உலகில் ஜோதிடர்கள் அதிகம். நான் எனது விதியை அறிந்து கொள்ள ஒரு


ஜோதிடரை பார்க்க போகிறேன். அந்த ஜோதிடர் எனது ஜாதகத்தை பார்த்து,
எனது விதியை சொல்கிறார்.

“முன் ஜென்மத்தில் ஒரு பெண்ணை கெடுத்து கொன்றுவிட்டிருக்கிறாய்.


அந்த கர்மாவின் முடிவு, இந்த பிறவியில் ஒரு பெண்ணால் உனக்கு அழிவு
உண்டு”. அதாவது இராவணன் வாழ்க்கை மாதிரி என் வாழ்க்கையென
ஜோதிடர் சொல்கிறார். நான் கேட்டுக் கொண்டேன்.

இப்பொழுது என் விதியானது எனக்கு தெரிந்துவிட்டது. இப்பொழுது எனது


மதி வேலை செய்கிறது. அதாவது பெண்களால் ஆபத்து. என் மதியை
பயன்படுத்தி இரண்டு முடிவுகளை நான் பின்பற்றலாம்.

ஒரு முடிவு பெண்களையே என் வாழ்க்கையில் நான் பார்க்கக் கூடாது.


பெண்களை நான் பார்த்தால் தானே எனக்கு பிரச்சனை. தனியாக ஒரு
தீவில் போய், என்னை சுற்றி ஆண்களை மட்டும் பணியாட்களாக வைத்துக்
கொண்டு நான் வாழ வேண்டும். இந்த வகையில் வாழ்ந்தால் பெண்களால்
ஆபத்து வருமா? வராது. இந்த வகையில் நான் வாழ்ந்து எனது விதியை
வெல்ல முடியும்.

பெண்களே இல்லாத தனியாக உள்ள ஒரு இடத்தை தேர்வு செய்து, அந்த


இடத்தில் ஆண்களை மட்டும் என்னை சுற்றி வைத்துக் கொண்டு
வாழ்வது, கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. வாழ்க்கையில் கல்யாணம்
பண்ணிக்கணும். குழந்தைகளை பெற்றுக்கொள்ளணும். இத்தனையையும்
தியாகம் பண்ணுமா?

எனவே இதை விட கொஞ்சம் ஈஸியான வேலை இருக்குமா?


ஜோதிடரிடம் கேட்டேன். ஜோதிடர் இருக்கிறது என்று சொல்கிறார்.
அதாவது பரிகாரம். ஒரு பரிகாரம் பண்ணிடு. உனக்கு பெண்களால் ஆபத்தே
வராது என்று ஜோதிடர் சொல்கிறார். நான் ரெடியாகிவிட்டேன். இரண்டாவது
முடிவாக ஜோதிடர் சொன்ன பரிகாரத்தை செய்கிறேன். எனது
விதியை(பிராரப்தத்தை) வெல்கிறேன்.

மேற்க்கண்ட இருமுறைகளில் ஏதாவது ஒரு முறையை பின்பற்றி எனது


விதியை வெல்கிறேன். என் விதியானது எனது மதியால் வெல்லப்படுகிறது.
இப்படி சொல்கிறவர்கள் யாராவது இருக்கிறீர்களா?

அப்படியானால் விதியை மதியால் வெல்ல முடியும் என்று பழமொழி


பொய்யா?

மகாபாரதத்தில் கம்சன் என்ற பாத்திரம். கிருஷ்ணனின் தாய் மாமன்.


அவனது தங்கையின் வயிற்றில் எட்டாவது பிறக்கும் குழந்தையால்
அவனுக்கு மரணம். கம்சனுக்கு விதியானது அவனுக்கு தெரிந்து விட்டது.
இருவரையும் ஜெயிலில் அடைக்கிறான். ஒவ்வொரு குழந்தையாக
கொல்கிறான். அப்படியிருந்தும் எட்டாவது குழந்தை தப்பித்து விடுகிறது.
எங்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறான். பலரை அனுப்புகிறான்.
தோல்விகள். இறுதியில் கிருஷ்ணன் கையில் இறக்கிறான்.
இராவணனுக்கு ஜோதிடம் தெரியும். நவக்கிரகங்களையும் தனது
அரண்மனையில் கீ ழே போட்டு மிதித்தே அரியணையில் அமருவான்.
அவனது மகன் மேகநாதன் பிறக்கும் போது, இந்தந்த கிரகம் இந்த வட்டில்

தான் இருக்கணும் என்று கட்டளையிடுவான். ராமாயணம் நன்கு
படித்தவர்களுக்கு நான் சொல்லும் விஷயங்கள் தெரியும். அவனது மகன்
பிறக்கும் போது, சனி பகவான் வேறு பாவத்திற்கு காலை நீட்டிவிடுவார்.
மகனுக்கு கிரகங்கள் எந்தெந்த வடுகளில்
ீ இருக்க வேண்டும் என்று
கட்டளையிட்டவனுக்கு, அவனது ஜாதகம் தெரியுமா? தெரியாதா? ஜாதகம்
தெரிந்தவன் அவனது வாழ்க்கையை மாற்றிக் கொண்டானா?

விதியை மதியால் வெல்ல முடியும் என்றால், எல்லா ஜோதிடர்களும்


அவரவர் விதியை கண்டிப்பாக மதியால் வென்றவர்களாக இருப்பர்.

புராணங்களில் சொல்லப்படும் ஜோதிடர்கள் முதல் இன்றைய ஜோதிடர்


வரை எத்தனை பேர் விதியை வென்றிருக்கிறார்கள்? ஜோதிடர்கள்
யாரேனும் உங்களது விதியை ஜெயித்து இருந்தால் சொல்லுங்கள். மக்கள்
அவர்கள் விதியை மாற்றி எழுத உங்களிடம் கண்டிப்பாக வருவார்கள்.

ஆக மனிதர்களாகிய நாம் ஆற்றும் ஆகாமிய கர்மாவின் பலனை விதியாக


அனுபவித்து தான் ஆக வேண்டும். அந்த ஆகாமிய கர்மாவை
நன்முறையில் ஆற்ற மட்டுமே நம் புத்தியானது பயன்படும்.

உங்களுடைய பிராரப்தத்தை பரமாத்மா நினைத்தாலும் கூட உங்களுக்கு


மாற்றியமைக்க முடியாது. இதை மனதில் கொள்ளுங்கள்.

விதி மதி 8: சாங்கிய யோகம்(புத்தி தெளிவடைதல்)

என் தாத்தாவிடம் கற்ற விதி மதி பற்றிய பல விஷயங்களை உங்களோடு


பகிர்ந்து கொண்டேன். இனிய விதியை வெல்லக்கூடிய விஷயங்களை
பார்க்கலாம்.
விதியை வெல்ல வேண்டும் என்றால் முதலில் மனித வாழ்க்கையை
பற்றி புரிந்து கொள்ள வேண்டும். அதாவது மனித கர்மாவைப் பற்றி
தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதன் தன் வாழ்க்கையில் ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையிலேயே


காரியத்தை ஆற்றுகிறான். காரியம் முடிந்தவுடன் அதன் பலனுக்காக
காத்திருக்கிறான். அவன் ஆற்றிய காரியத்தின் பலன் அவன்
எதிர்பார்த்தவாறே அமைந்துவிட்டால், வெற்றி அடைந்துவிட்டதாக
எண்ணுகிறான். அதை கொண்டாடவும் செய்கிறான். அவன் அடைந்த
வெற்றி என்ற உணர்வு அவனுக்கு கர்வத்தை தருகிறது. அந்த கர்வம்
மேலும் பல செயல்களை செய்ய தூண்டுகிறது. உதாரணத்திற்கு ஒரு
துணிகடை வியாபாரி தனது வியாபாரத்தில் வெற்றி அடைந்துவிட்டான்
எனில், அதேபோல் இன்னும் பல துணிகடைகளை பல இடங்களில் ஓபன்
செய்து, இன்னும் நிறைய வேண்டும் என்று அடுத்தகட்ட செயலில்
இறங்குகிறான்.

அதுவே மனிதன் ஆற்றும் கர்மாவின் பலன் ஒருவேளை அவன்


எதிர்பார்த்தவாறு அமையாவிட்டால், தோல்வி அடைந்துவிட்டதாக
எண்ணுகிறான். அந்த தோல்வியானது துக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும்
அந்த துக்கம் அவனுக்கு விரக்தியை கொடுக்கிறது. அந்த விரக்தியானது
தனது தோல்விக்கு காரணமாக இருந்தவர்கள் மீ து கோபமாக வெடிக்கிறது.
அந்த கோபம் இன்னும் பல கர்மாவினை செய்ய தூண்டும். அதாவது
பழிவாங்க கிளம்பிவிடுவான்.

ஆக வெற்றி, தோல்வி என்ற இரண்டு உணர்ச்சிகள் தான், மனிதனை


மேன்மேலும் பல கர்மாக்களை(ஆகாமியம்) செய்ய வைக்கின்றன. அந்த
கர்ம பலன்கள் அவனுக்கு விதியாக மாறி, அவன் மென்மேலும் பல
பிறவிகளை எடுக்க காரணமாகின்றன.

இங்கே நீங்கள் சற்று சிந்திக்க வேண்டும். வெற்றி, தோல்வி என்பவை


என்ன? இரண்டுமே வெறும் உணர்ச்சிகள். ஒரு உணர்ச்சி(வெற்றி)
மனிதனுக்கு சுகம் என்ற இன்பத்தை தருவதாக அமைகிறது. இன்னொரு
உணர்ச்சி(தோல்வி) துக்கம் என்ற துன்பத்தை தருவதாக அமைகிறது. இந்த
இரண்டு உணர்ச்சிகளையும் மாறி மாறி உங்கள் வாழ்க்கையில்
அனுபவிக்கிறீர்கள் அல்லவா? இந்த இரண்டு உணர்ச்சிகளும் உங்களுக்கு
நிரந்தரமானவையா?

இந்த இரண்டு உணர்ச்சிகளையும் மனிதன் உணர காரணம் என்ன? மனிதன்


அவன் ஆற்றும் காரியத்தின் பலனின் மீ து கொண்டே பற்றே. அதாவது
ஆசையே. மனிதன் அவன் ஆற்றும் கர்மவினால் உண்டாகும் பலன் மீ து
கொண்ட ஆசை, வெற்றி, தோல்வி என்ற உணர்ச்சிகளுக்குள் அவனை சிக்க
வைக்கிறது.

மனித வாழ்க்கையின் இலட்சியம் என்ன? மன நிம்மதி. மனம் எப்போது


நிம்மதி அடையும். வெற்றி, தோல்வி என்ற உணர்ச்சிகளுக்கு மனம்
அடிமையாகாமல் இருந்தால் நிம்மதி அடையும்.

ஒன்றை மறவாதீர்கள். மனிதனுக்கு கர்மாவினை ஆற்றுவதற்கே இயற்கை


அவனுக்கு அதிகாரம் அளித்துள்ளது. அதன் முடிவுகள் அவன் கையில்
இல்லை. அது பரமாத்மாவின் கையில் உள்ளது. எனவே உங்கள் வாழ்வில்
நீங்கள் ஆற்ற வேண்டிய கர்மாவினை சரியாக ஆற்றுங்கள். அதன்
முடிவுகளை அவனிடம் விட்டுவிடுங்கள். உங்கள் மனம் உணர்ச்சிகளுக்கு
ஆட்படுமா.

'சுப துக்கே சமகிருத்வா

லாபா லாபோ ஜெயாஜெயோ

ததோ யுத்தாய யூஜஷ்வா.

நைவம் பாபம் அவாப்யஸி'

பகவத்கீ தையில் இரண்டாவது அத்தியாயத்தில் 38 வது ஸ்லோகம். இதற்கு


சாங்கிய யோகம் என்று பெயர். சாங்கியம் என்றால் புத்தி தெளிவு என்று
பெயர். இதில் கிருஷ்ணன் அர்ச்சுணனுக்கு கூறுவது.
'எவனொருவன் கர்மாவினை அவனுக்கு இறைவன் விதித்த கடமையென
ஏற்று சரிவர செய்கிறானோ, அவன் வெற்றி, தோல்வி என்ற
உணர்ச்சிகளுக்கு ஆட்பட மாட்டான். வெற்றி, தோல்வி என்ற
உணர்ச்சிகளுக்கு அவன் ஆட்படாததால், சுகம், துக்கம் அவனை அண்டாது.
அவனது புத்தியானது தெளிவாக இருக்கும். காரணம் அவன் ஆற்றும்
காரியத்தின் முடிவுகளை பரமாத்மாவிற்கு சமர்ப்பணம் செய்துவிடுகிறான்.
எனவே அர்ச்சுணா இந்த யுத்தத்தினை நான் உனக்கு விதித்த கடமையென
எண்ணி ஆற்று. அந்த யுத்த முடிவுகளை பரமாத்மாவிடம் விட்டுவிடு.
அதாவது என்னிடம் விட்டுவிடு.

ஒன்றை மறவாதீர்கள். நாம் ஆற்றும் கர்மாவில் இரண்டுவிதமான


முடிவுகள் தோன்றுகின்றன. ஒன்று ஆக்கம். மற்றொன்று கர்மபலன்.

மனிதன் நல்லதொரு ஆக்கத்திற்காக கர்மாவினை ஆற்றினான் என்றால்,


அவன் மற்றவர்கள் மத்தியில் மரியாதையையும், கீ ர்த்தியையும் பெறுவான்.
உதாரணத்திற்கு நான் ஒரு ஆசான். மாணவர்களுக்கு கல்வியை
போதிப்பதே ஆசானாகிய எனக்கு பரமாத்மா விதித்த கடமை. இந்த
கடமையின் ஆக்கம், நான் கற்ற ஞானத்தை மாணவர்களுக்கு போதித்து,
அவர்களையும் அறிவில் சிறந்வர்களாக ஆக்குவது.

'நான் கற்ற ஞானத்தினைக் கொண்டு, என்னை நம்பி வரும் மாணவனுக்கு


போதித்து அவனை அறிவில் சிறந்தவனாக்குவேன்' என்ற நல்லதொரு
ஆக்கத்தினை நோக்கி, ஆசானாகிய நான் கல்வியை போதிக்கும்
கடமையை செய்தேன் எனில் மாணவர்கள் மனதில் என்றும் நீங்காத
இடத்தை பெறுவேன். அதைவிடுத்து இந்த மாணவனுக்கு பாடம் சொல்லி
கொடுப்பதால் எனக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற பலனை நோக்கி,
கல்வியை போதித்தேன் என்றால், நான் போதிக்கும் ஞானம், அவனது
வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடாது.

நான் ஒரு ஜோதிடன். என்னை நம்பி வரும் மக்களுக்கு, நான் கற்ற ஜோதிட
ஞானத்தை பயன்படுத்தி, அவர்களது எதிர்காலத்திற்கு சிறந்த ஆலோசனை
அளிப்பேன் என்ற ஆக்கத்தினை நோக்கி எனது கர்மாவானது இருந்தால்,
மக்கள் மத்தியில் எனக்கு மரியாதையும், கீ ர்த்தியும் கிடைக்கும்.
அதைவிடுத்து ஒருவனுக்கு ஜோதிடம் சொன்னால், எனக்கு எவ்வளவு
கிடைக்கும் கர்மபலனை நோக்கி எனது கர்மா இருந்தால், நான்கு
நாட்களுக்கு அதிகமான மக்கள் என்னைத் தேடி மக்கள் வந்தால், நிறைய
பணம் கிடைத்திருக்கிறது என்ற சுகம் கிடைக்கும். பிறகு 7 நாட்களுக்கு
மக்கள் எதிர்பார்த்தபடி வரவில்லையென்றால், ஒன்னுமே கிடைக்கலையே
என்ற துக்கம் கிடைக்கும். ஆக மாறி மாறி உணர்ச்சிகளுக்கு
அடிமைப்பட்டவனாய், மன நிம்மதியை இழந்தவனாய் என் வாழ்க்கையை
கழிப்பேன்.

எனவே நீங்கள் உங்கள் வாழ்வில், நீங்கள் ஆற்றும் கர்மாவினை


நல்லதொரு ஆக்கத்திற்காக செய்தால், உங்கள் மனமானது
உணர்ச்சிகளுக்கு ஆட்படாது. அதுவே கர்ம பலனுக்காக கர்மாவை
செய்தால், அதனால் விளையும் சுக துக்கங்களுக்கு உங்கள் மனம்
ஆட்பட்டு அதனால் மன நிம்மதியை இழந்து வாழ்வின் இறுதிவரை
எதையோ இழந்தவனாக, பறிகொடுத்தவனாகவே, வாழ்ந்து இறப்பீர்கள்.

You might also like