You are on page 1of 1

பொதுவாக 6 அடிக்கு கீ ழ் கழிவறையை தவிர மற்ற அறைகள் இருக்க கூடாது

என்பது மனையடி சாஸ்திர விதியாகும். அதே போல மேலே கூற பட்டுள்ள


மனையடி சாஸ்திரம் அட்டவணை என்பது ஒரு அறையின் உள்ளடக்கமே
ஆகும். சுவரின் அளவு இதில் சேராது. மொத்த வட்டின்
ீ அளவில் சுவரின்
அளவு சேர்ந்துவிடும்.

மேலே கூறப்பட்டுள்ள அளவுகளில் நன்மை தரக்கூடிய எண்ணிக்கையில்


வட்டின்
ீ அகலமும் நீளமும் அதே போல அறைகளின் அகலமும் நீளமும்
இருப்பது நல்லது.

உதாரணமாக ஒரு அறையின் உள்ளளவு 10 அடி நீளம் 6 அடி அகலம்


என்றால் அது நல்ல அளவு. ஆனால் 10 அடி நீளம் 7 அடி அகலம் என்றால் அது
தீய பலன் தர கூடியதாக இருக்கும். ஏன் என்றால் 7 அடியில் அகலமோ
நீளமோ இருந்தால் தரித்திரம் உண்டாகும் என்று கூறுகிறது மனையடி
சாஸ்திரம். அகல நீள அட்டவணைப்படி 6, 8, 10, 11,16, 17, 20, 21, 22, 26, 27, 28, 29,
30, 32, 33, 35, 36, 37, 39, 41, 42, 45, 50, 52, 54, 56, 59, 60, 64, 66, 68, 71, 72, 73, 75, 77, 79, 80,
84, 85, 88, 89, 90, 91, 92, 95, 97, 99, 100 ஆகிய அடிகளில் வட்டின் ீ அறைகளையும்
வட்டையும்
ீ அமைக்கலாம். ஆனால் இதிலும் யோகம் தரக்கூடிய சில அளவு
முறைகள் உள்ளன. அவை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

மனையடி சாஸ்திரம் அளவு படி யோகம் தரக்கூடிய அளவுகள்:.


6 அடி அகலமும் 8 அடி நீளமும், 8 அடி அகலமும் 10 அடி நீளமும்,
10 அடி அகலமும் 16 அடி நீளமும், 16 அடி அகலமும் 21 அடி நீளமும்,
21 அடி அகலமும் 30 அடி நீளமும், 30 அடி அகலமும் 37 அடி நீளமும்,
37 அடி அகலமும் 50 அடி நீளமும், 39 அடி அகலமும் 59 அடி நீளமும்,
42 அடி அகலமும் 59 அடி நீளமும், 50 அடி அகலமும் 73 அடி நீளமும்,
60 அடி அகலமும் 80 அடி நீளமும் வட்டின்
ீ அளவாகவோ அல்லது அறையின்
உள்ளளவாவோ இருப்பது யோக அளவாகும்.
சுவரின் உயரம் – மனையடி சாஸ்திரம் (Manaiyadi sastram wall height in Tamil)
சுவரின் உயரம் பலன் 6 அடி நன்மை விளையும், நிம்மதி ஏற்படும். 7 அடி
வறுமை ஏற்படும். 8 அடி சகல நன்மைகளும் உண்டாகும். 9 அடி
பணப்பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். 10 அடி மேன்மை உண்டாகும்.
11, 12, 13 அடி நோய்களால் பெரிய தாக்கம் இருக்காது. 14 அடி எளிமையான
வாழ்க்கை நிலை ஏற்படும். 15 அடி நிம்மதி என்பது இருக்காது. 16 அடி பணம்
பெருகும். 17 அடி மேன்மை உண்டாகும். 18, 19 அடி வடு
ீ பாழடைந்து போகும்.
20 அடி சந்தோஷம் நிலைத்திருக்கும். 21 அடி யோகம் உண்டாகும். 22 அடி
கெளரவம், புகழ் உண்டாகும். 23 அடி நன்மை இல்லை. 24 அடி மனைவி
மரணிப்பாள் 25 அடி எளிமையான வாழ்க்கை நிலை ஏற்படும். 26 அடி
பிள்ளைகள் வளரும் வரையில் மகிழ்ச்சி இருக்காது. 27, 28 அடி பணம்
பெருகும். 29, 30 அடி மேன்மை உண்டாகும்.

You might also like