You are on page 1of 2

1. மா.

சந்திரன்
6917, தாமான் கெமெஞ்செ
பாரு,
2. 2. முகவரி 73200 கெமெஞ்சே,
நெகிரி செம்பிலான்.

3. 3.திகதி 18 மார்ச் 2023

அன்புள்ள மாமாவுக்கு, 4.விளிப்


4. பு

5.

6.

7.

8.

9.

10. இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள,
11.

எண்கள் இடப்பட்ட இடத்தில் கடிதத்தின் சரியான அமைப்பை எழுதுக.

மா.சந்திரன்
6917, தாமான் கெமெஞ்செ
பாரு,
73200 கெமெஞ்சே,
நெகிரி செம்பிலான்.

18 மார்ச் 2023

அன்புள்ள மாமாவிற்கு,

வணக்கம், நான் இங்கு நலம். அது போல் நீங்கள் அங்கு நலமாக வாழ இறைவனை
வேண்டுகிறேன்.

மாமா, நீங்கள் நோய்வாய்ப்பட்டுள்ள செய்தியை என் அப்பாவின் மூலம் நான்


அறிந்து கொண்டேன். அதைக் கேட்டதும் நான் மனம் கலங்கினேன். தேர்வு இருந்ததால்
உங்களை மருத்துவமனையில் வந்து பார்க்க முடியவில்லை. மருத்துவமனையிலுருந்து
வீடு திரும்பிய உங்களுக்கு ஆறுதல் கூறவே இக்கடிதத்தை நான் எழுதுகிறேன்.

மாமா, இப்பொழுது நீங்கள் உங்கள் உடல் நலமாகும் வரை மருத்துவரின்


அலோசனையைக் கேட்டு நடக்க வேண்டும்.மருத்துவர் கொடுத்த மருந்துகளை வேளா
வேளைக்குச் சாப்பிட மறந்துவிடாதீர்கள். அதுமட்டுமில்லாமல், சத்தான உணவையே
சாப்பிடுங்கள். பழங்கள், காய்கறிகள் மற்றும் மீன்கள் உங்கள் உடலுக்கு
ஆரோக்கியத்தைக் கொடுக்கும். மேலும், இந்நேரத்தில் நீங்கள் மனம் தளராமல் தைரியமாக
இருப்பது அவசியம்.

இறுதியாக, நீங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். இந்த


வார இறுதியில் குடும்பத்தாரோடு வந்து உங்களை நான் பார்க்கிறேன். இத்துடன்
இம்மடலை முடித்துக் கொள்கிறேன். மீண்டும் அடுத்த மடலில் சந்திப்போம்.

நன்றி.

இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள,

You might also like