You are on page 1of 2

ஆசிரியர் குறிப்பு :

மகா சிவராத்திரி இந்துக்களால்  கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம்


ஆண்டுதோறும் மாசி மாதத்தில்  வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில்
இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி
கறகம் என்னும் சிறிய நூல்.

சிவராத்திரி விரத வகைகள்


சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.
1. நித்திய சிவராத்திரி
2. மாத சிவராத்திரி
3. பட்ச சிவராத்திரி
4. யோக சிவராத்திரி
5. மகா சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார்
பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி
சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து
நான்கு யாம ( வேளை /காலம் ) வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில்
தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து)
விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம
அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து
உதவலாம்.

இவ்விரதம் பற்றிய ஐதீகங்கள்


இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின்
(பேரழிவு) போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை.
இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி
இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன்
தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும்
படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப்
போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி
விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள்
எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார் இறைவனும்
அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான்,
சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.

பலன் தரும் பரிகாரங்கள்


மாசிமாதம் கிருஷ்ணபட்சம்  சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி
விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால்
கவலைகள் அனைத்தும் நீங்கும். காரிய வெற்றியும் ஏற்படும். 'சிவாய நம' என்று
சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது,' உபாயம்' நமக்கு ஏற்படும் என்று
முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும்
கூடும்.பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும், ஆறு கால பூஜையிலும்
சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன்
பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும்.
அதனால் தான் சிவராத்திரி விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது. மாணவர்கள்
ஆசிரியருடன்
msbp@11.3.2021
இணைந்து சிவன் மந்திரத்தொ 108 முறை உச்சரிக்கவும்.
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

பெயர்: ______________________

வகுப்பு : ____________________

பயிற்சி 11.3.2021

1. மகா சிவராத்திரி ____________ விரதமாகும்.


2. ஆண்டு தோறும் ____________ மாதம் மகா சிவராத்திரி கொண்டாடப்படும்.
3. சிவராதிரி விரத வகைகளைப் பட்டியலிடுக.
a. _________________________________
b. _________________________________
c. _________________________________
d. _________________________________
e. _________________________________
4. மகா சிவராத்திரிக்கு __________கால பூஜை நடைபெறும்.
5. உலக பிரளயத்தின் போது உலக உயிர்கள் எல்லாம் ________________ ஒடுங்கின.
6. சிவபெருமானின் மூலம் மந்திரம் ______________________
7. நீங்கள் வசிக்கும் இடத்தில் சிவராத்திரி கொண்டாடப்படும் ஆலங்களைப்
பட்டியலிடுக.
a. __________________________

b. _________________

_________

c. _________________

_________

ஒம் நமசிவாய சிவாய நம


ஓம்

msbp@11.3.2021

You might also like