You are on page 1of 82

அரசகுலச்‌ சான்றோர்‌

நம்மாழ்வார்‌

நெல்லை நெடுமாறன்‌

வெளியீடு
தொல்லியல்‌ அறிஞர்‌ நல்லை நெடுமாறன்‌
ஆய்வு மற்றூம்‌ நூகை மையம்‌
நூல்‌ விவரக்‌ குறிப்பு

நூல்‌ தலைப்பு : கரசகுலச்‌ சான்றோர்‌ நம்மாழ்வார்‌

ஆசிரியர்‌ : நல்லை நெடுமாறன்‌


நாலுமாவடி, தூத்துக்குடி மாவட்டம்‌

பதிப்பாசிரியர்‌ முூனைவர்‌.ஆ.தசரதன்‌

வெளியீடு தொல்லியல்‌ அறிஞர்நெல்லை நெடுமாறன்‌


ஆய்வு மற்றும்‌ நூலக மையம்‌

பதிப்பு முதற்பதிப்பு
பதிப்பு ஆண்டு 2016

நூலின்‌ அளவு 1/8 டெம்மி

பக்க எண்ணிக்கை : ல்‌

அச்சுப்படிகளின்‌
எண்ணிக்கை 1000

விலை நூ. 100 (ரூபாய்‌ நூறு மட்டும்‌)


வெளியீட்டு எண்‌ : 1

விற்ப்னை உரிமை : டாக்டர்‌ஆ.தசரதன்‌


& தமிழ்‌ ஓலைச்‌ சுவடிகள்‌ பாதுகாப்பு மையம்‌
Hose Oerid 1/1448, 6வது தெரு, பெத்தேல்‌ நகர்‌ தெற்கு
ஈஞ்சம்பாக்கம்‌, சென்னை - 600 115
செல்‌: 9444169603, dr.a.thasarathan@ gmail.com

அச்சகம்‌ நியு குயின்‌ ஆர்ட்‌ பிரிண்டர்ஸ்‌


தரமணி, சென்னை - 600 113
செல்‌: 9170095816
அணிந்துரை
நெஞ்சில்‌ நிறைந்த நெல்லை நெடுமாறன்‌
அரசியலில்‌ அடியெடுத்து வைத்துத்‌ தன்‌ தந்நிகரற்ற
நாவன்மையால்‌ நாடறிந்த நாவலராகத்‌ திகழ்ந்தவர்‌ அருமை
நண்பர்‌ நெல்லை நெடுமாறன்‌ அவர்கள்‌. தனது தமிழ்ப்பற்றாலும்‌
ஈடுபாட்டாலும்‌ தூய தமிழில்‌ நெடுமாறன்‌ என்று தன்பெயரை
மாற்றியமைத்ததோடு மட்டுமல்ல, அப்பற்றைச்‌ செயல்படுத்தும்‌
வகையில்‌, தமிழின்‌ - தமிழ்‌ இலக்கியத்தின்‌ பெருமைகளை
உலகறியச்‌ செய்த ஒர்‌ உண்மைத்‌ தமிழ்த்‌ தொண்டர்‌ என்பதை
நாடறியும்‌.
'கற்பார்‌, கற்றுக்கொண்டே இருப்பார்‌!
என்பர்‌. கற்றதின்‌ வாயிலாகச்‌ கிடைத்த உண்மைகளைமக்களிடத்தில்‌
எடுத்துரைத்து உறுதிப்படுத்திய ஓர்‌ அரிய மனிதர்‌அவர்‌.
அகழ்வாராய்ச்சியில்‌ கொண்ட ஈடுபாட்டாலும்‌ பழைய
ஆவணங்கள்‌ பலவற்றைக்‌ கற்றமையாலும்‌ படைப்புகள்‌
பலவற்றை நுகர்ந்தமையாலும்‌ நடுநிலைமையோடு பல
உண்மைச்‌ செய்திகளை உலூற்கு எடுத்தியம்பிய ஒரு சிறந்த
ஆய்வாளர்‌நண்பர்‌ நெடுமாறன்‌ அவர்கள்‌.
அடையாறு தமிழ்ச்சங்கத்தில்‌ 2010ஆம்‌ ஆண்டு பெப்ரவரித்‌
இங்களில்‌ நம்மாழ்வாரைப்பற்றி ஒர்‌அரிய தொடர்‌ சொற்பொழிவு
நிகழ்த்தினார்‌. அரசியல்‌ சொற்பொழிவாளராக அறிமுகமாகித்தன்‌
சொல்லாற்றலால்‌, புகழ்பெற்ற இரு.நெடுமாறன்‌ அவர்கள்‌,
அகழ்வாராய்ச்சியிலுள்ள தன்‌ ஆழப்புலமையையும்‌ பழைய
ஆவணங்கள்‌ வாயிலாகப்‌ பெற்ற சான்றாதாரங்களையும்‌
அடிப்படையாகக்‌ கொண்டு நம்மாழ்வாரைப்‌ பற்றிய பல
உண்மைச்‌ செய்திகளை எடுத்தியம்பியது, நிகழ்ச்சியில்‌ கலந்து
கொண்ட அனைவரையும்‌ வியப்படையச்‌ செய்தது.
ஆழ்வார்களில்‌ முதன்மையாகத்‌ இகழ்ந்தவர்‌ நம்மாழ்வார்‌.
ஆழ்வார்‌ திருநகரில்‌ அவதரித்த நம்மாழ்வார்‌, திருவிருத்த.ம்‌,
இருவாசிரிய.ம்‌, பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகிய
நான்கு நூல்களை இயற்றிய பெருமைக்குரியவர்‌. இவற்றுள்‌
தஇிருவாம்மெசழி தலைிறந்த நூலாகப்‌ பக்தி உணர்வுக்கு ஒரு
களஞ்சியமாகத்‌ இகழ்கிறது என்பர்‌.
நம்மாழ்வார்‌ ஒரு நாட்டிற்கோ, ஒரு சமயத்திற்கோ, ஓர்‌
இனத்திற்கோ மட்டும்‌ உரியவர்‌ அல்லர்‌. அவர்‌ எல்லை கடநீது
4
எல்லா நாட்டவர்க்கும்‌ சமயத்தவர்க்கும்‌ உரியவர்‌ என்பதாலேயே
“நம்‌-ஆழ்வார்‌”, “நம்முடைய ஆழ்வார்‌”, பக்தியில்‌,
நம்மையெல்லாம்‌ ஆழ்த்துபவர்‌ என்ற பாராட்டைப்‌ பெற்றவர்‌.
மனிதனைப்‌ பாடவேண்டியதில்லை, இறைவனையே
பாடவேண்டுமென்று பாடி வாழ்ந்த பெருமகனார்‌ நம்மாழ்வார்‌.

நம்மாழ்வாரைப்‌ பற்றிய பல உண்மைகளைத்‌ தமக்குக்‌


இடைத்த ஆதாரங்கள்‌ அடிப்படையில்‌ அடையாறு தமிழ்ச்‌
சங்கத்தின்‌ தொடர்‌ சொற்பொழிவுகளில்‌ வெளிப்படுத்தினார்‌
நெடுமாறன்‌ அவர்கள்‌.
நம்மாழ்வார்‌ திருக்குருகூர்‌ காரிமாறன்‌ எனும்‌ அரசனின்‌
அரும்புதல்வர்‌ என்று நிரூபிக்கிறார்‌ ஆய்வறிஞர்‌ நெடுமாறன்‌
அவர்கள்‌.
ஆழ்வார்‌ திருநகரில்‌ வாழ்ந்த ௮.ம.மலையப்பப்‌ பிள்ளை
கவிராயர்‌, அவர்கள்‌, மன்‌ ௮வதாரச்‌ சவிதை என்ற நூலில்‌
“திங்க ளிரண்டுபுகுந்‌ தெய்வத்‌ தனிச்சுடரை
நங்கை இருவயிற்றில்‌ வந்துதித்த நன்மணியை
யங்கண்‌ வழுஇிவா நாடர்குலத்த நன்மணியை
யெங்கண்‌ பெருமானை யெம்பெருமான்‌ காக்கவே"
என்று நம்மாழ்வாரை வாழ்த்துகின்றார்‌. இதில்‌ *வழுதிவள' என்று
குறிப்பிடுவது வளமான பாண்டிய மன்னன்‌ என்பதைச்சுட்டுகிறது.
மேலும்‌, பாண்டிய மன்னர்‌ குலமாகிய “நாடார்‌ குலம்‌” என்று
குறிப்பிடுவது, பாண்டிய மன்னர்களின்‌ குலத்தையும்‌ நம்மாழ்வார்‌
குலம்‌ நாடார்‌ குலமே என்ற உண்மையையும்‌
வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
மேலும்‌ மாறன்‌ சலம்‌.ப௪.ம்‌ என்ற நூலிலும்‌ த.ம்மாழ்வார்‌
ஊஞ்சல்‌ கவிதை என்ற நூலிலும்‌ குறிப்பிடப்படும்‌
செய்திகளிலிருந்தும்‌ நம்மாழ்வார்‌ பாண்டிய மன்னர்‌ மரபில்‌
நாடார்‌ குலத்தில்‌ வந்தவர்‌ என்பதை நிரூபிக்இறது என்கிறார்‌
நண்பர்‌ நெடுமாறன்‌.
ஆய்வறிஞர்‌, அருஞ்சொற்பொழிவாளர்‌ என்ற புகழுக்குரிய
அன்பு நெஞ்சங்களில்‌ நிறைந்திருக்கும்‌ அன்பர்‌ நெல்லை
நெடுமாறன்‌ நம்மாழ்வாரைப்‌ பற்றிக்‌ குறிப்பிடும்‌ உண்மைச்‌
செய்திகள்‌ பாண்டிய மரபினரையும்‌ அவர்கள்சார்ந்த குலத்தையும்‌
மேலும்‌ அடையாளங்காட்டவும்‌ அறிந்து கொள்ளவும்‌
வாய்ப்பளிக்கும்‌ என்று நம்புகிறேன்‌.
பதிப்புரை
prevrusadwes (Numismatics) ஆய்வில்‌ தொடங்கி, தமிழக
நாட்டார்‌ அமைப்பு (Localbody in Tamilnadu) aes amsamp
முப்பதீதைநீது ஆண்டுகள்‌ நெல்லை நெடுமாறன்‌ ஆராய்ச்சி
செய்துள்ளார்‌ என்பது வியப்பை அளிக்கிறது,
இக்காலக்கட்டத்தில்‌ ஏறத்தாழ எழுபது இலட்சம்‌ ரூபாய்கள்‌
செலவு செய்து நெல்லை நெடுமாறன்‌ தம்‌ ஆராய்ச்சிக்காகப்‌
புத்தகங்களை வாங்கியுள்ளார்‌. இது கூடவே இருந்த
கல்வியாளர்களுக்குத்‌ தெரிந்த உண்மையாகும்‌.
இவ்வளவு பெரிய தொகையில்‌ பெறப்பட்ட புத்தகங்கள்‌
மற்றும்‌ தெரிந்தவர்கள்‌, நண்பர்களிடமிருந்து பெற்ற நூல்கள்தாம்‌
நெல்லை நெடுமாறன்‌ ஆய்வுலகற்கு விட்டுச்‌ சென்ற அரிய
பெட்டகங்கள்‌.
அத்தனை நூல்களையும்‌ படித்துக்‌ குறிப்பெடுத்து
வைத்துள்ள நூற்றுக்கணக்கான குறிப்பேடுகள்தாம்‌ ( (Notebooks)
அவர்தமிழர்களுக்கு விட்டுச்‌ சென்றுள்ள ஆவணங்கள்‌.
புத்தகங்கள்‌, குறிப்பேடுகளைத்‌ தவிர நெல்லை நெடுமாறன்‌
பயணித்த ஊர்கள்‌, பார்த்த நூலகங்கள்‌, பழகிய மனிதர்கள்‌, தங்கிய
விடுதிகள்‌, உணவருந்திய கூடங்கள்‌, உரையாடிய அன்பர்கள்‌
போன்றவற்றுக்காகச்‌ செலவிட்ட தொகை பல இலட்சங்களைத்‌
தொடும்‌.
இவ்வளவு செலவிட்டு, இத்தனை ஆண்டுகள்‌ ஆராய்ச்சி
செய்து தமிழிலும்‌ ஆங்கிலத்திலும்‌ எழுதிய கட்டுரைகள்‌, நூல்கள்‌,
குறிப்புகள்‌, சொற்பொழிவுகள்‌, பெற்ற விருதுகள்‌
போன்றவற்றைப்‌ பேணிக்காப்பது நெல்லை நெடுமாறனுடன்‌
ஆய்வுப்‌ பயணத்தை மேற்கொண்ட நண்பர்களின்‌ கடமையாகும்‌.
இவற்றுடன்‌, அவருடைய அரசியல்‌ தொடர்பு,
வணிகர்களுடன்‌ இருந்த நட்பு, சங்கச்‌ சான்றோர்களுடன்‌ இருந்த
உறவு, சமூகத்தினருக்கு அவர்‌ பெற்றுத்‌ தந்த உதவிகள்‌,
6
உறவினர்களுடனான பழக்கங்கள்‌, அதிகாரிகளுடன்‌ அவருக்கு
இருந்த நெருக்கம்‌, டாக்டர்‌ பா.சிவந்தி ஆதித்தனார்‌ நற்பணி
மன்றப்‌ பணிகள்‌ போன்றவற்றால்‌ நெல்லை நெடுமாறன்‌ ஒரு
uistips 24@5et0 (Multiple personality) கொண்டவராக வே
அறியப்படுகிறார்‌ என்பதில்‌ ஐயமில்லை.
இவ்வாறான பன்முக ஆளுமைகொண்ட ஓர்‌ அரிய
மனிதரின்‌ ஆராய்ச்சி இயல்புகளை மட்டுமே அவர்‌ பெயரில்‌
தொடங்கப்படவுள்ள ஆய்வு மற்றும்‌ நூலக மையம்‌ தெளிந்து
நினைவுகூரும்‌.
நெல்லை நெடுமாறனின்‌ நாணயவியல்‌ ஆய்வுகள்‌
நெல்லை நெடுமாறன்‌ ஆயிரத்துத்‌ தொள்ளாயிரத்து
எண்பதுகளில்‌ ஆராய்ச்சியில்‌ காலடி வைத்ததாக நாம்‌
எடுத்துக்கொண்டு பார்த்தால்‌ தொண்ணூறுகளில்‌ அவருடைய
ஆய்வு சான்றார்காசுகளைப்‌ பற்றியதாக இருந்ததை அறியமுடியும்‌.
'நாட்டார்மாடை' எனும்‌ தலைப்பில்‌ சான்றார்காசுகளை ஆய்ந்து,
சொற்பொழிவாற்றி, விவாதித்து, சிறுசிறு குறிப்புகளை
வெளியிட்டதனால்‌ தொடக்ககாலத்தில்‌ அவர்‌ “சாணார்காசு
நெடுமாறன்‌” என அடையாளப்படுத்தப்பட்டார்‌. எனத்‌
தெரியவருகிறது.
1993ஆம்‌ ஆண்டு, தக்ஷிணமாற நாடார்சங்கத்துக்கு உட்பட்ட
தெற்குக்‌ கள்ளிகுளம்‌ கல்லூரி ஆண்டு மலரில்‌ அவர்‌ “நாட்டார்‌
மாடை” என்ற தலைப்பில்‌ எழுதிய கட்டுரையே முழு அளவில்‌
வெளியாகிய முதல்‌ கட்டுரை எனக்‌ கருதத்தக்கது.
அதேகல்லூரிஆண்டு மலரில்‌ 1994இல்‌ “சான்றார்காசு” என்ற
தலைப்பில்‌ அவர்‌ எழுதிய கட்டுரை அவருடைய ஆய்வுப்‌
பரிணாமத்தில்‌ குறிப்பிடத்தக்கதாகும்‌. சான்றார்‌ எனும்‌ சான்றோர்‌
சொல்லாராய்ச்சிக்கும்‌ அச்சொல்‌ தொடர்பான வரலாற்று
ஆராய்ச்சிக்கும்‌ நாட்டார்‌ மாடை என்ற மாடைக்காக எனும்‌
கான்றோர்காசு ஆய்வு நெல்லை நெடுமாறனுக்குப்‌ படி அமைத்துக்‌
கொடுத்துள்ளது.
குறிப்பாக, வல.ச்சை மாலை எனும்‌ அரசகுல மாலை,
வலங்கை வாழ்த்து, சான்றோர்‌ சமூகச்‌ செப்பேடுகள்‌
போன்றவற்றில்‌ குறிப்பிடப்‌ பெற்றுள்ள மாடைக்காசு எனும்‌
7
சான்றோர்‌ காசுகளைப்‌ புழக்கத்தில்‌ விட்டிருந்த சான்றோர்‌
சமூகத்தினரின்‌ பாரம்பரியப்‌ பழக்கவழக்கங்கள்‌, வரலாறுகள்‌,
வீர$ீரச்செயல்கள்‌ போன்றவை ஒன்றுடன்‌ ஒன்று பின்னிப்‌
பிணைந்திருப்பதை ஆராய்ச்சியின்‌ மூலம்‌ கண்டறிந்த நெல்லை
நெடுமாறன்தம்‌ ஆய்வு முடிவுகளைத்‌ தென்னிந்திய நாணயவியல்‌
சங்க ஆண்டுக்‌ கருத்தரங்குகளிலும்‌ இந்திய தொல்லியல்‌ கழகக்‌
கருத்தரங்குகளிலும்‌ பிறவற்றிலும்‌ ஆங்கிலத்தில்‌
மொழிபெயர்த்து, படித்து, அவற்றின்‌ ஆய்விதழ்களில்‌ (1௦ய11818)
இடம்பெறச்செய்துள்ளார்‌.
அதன்‌ காரணமாகவே, உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவன
வெளியீடான த.மிழர்காச என்ற நூலில்‌ “4 11016 01 Sanarkasu”
(1995) என திரு. நடன. காசிநாதன்‌ அவர்களால்‌ தனிப்பக்கத்தில்‌,
தனித்தலைப்பில்‌ எடுத்தாளப்பட்டது.
நெல்லை நெடுமாறனின்‌ தொல்லியல்‌ ஆய்வுகள்‌
சான்றோர்‌ காசுகளையும்‌ அவர்களின்‌ நாடுகளையும்‌
சான்றோர்‌ அவைகளையும்‌ செப்பேடுகளிலும்‌ இலக்கண
இலக்கியங்களிலும்‌ கண்டறிந்து சில கட்டுரைகளைத்‌ தொல்லியல்‌
துறை நூலகர்‌ திரு.கணபதி மூலம்‌ வாசித்து, வெளியிட்ட நெல்லை
நெடுமாறன்‌ அக்கண்டுபிடிப்புகளுக்கான ஆதாரங்களைக்‌
கல்வெட்டுகளிலிருந்து கண்டறிந்து ஆய்வை மேற்கொண்டது
அடுத்தகட்ட முன்னேற்றமாகும்‌.

இதற்குத்‌ தொடக்கத்திலிருந்தே உறுதுணையாக இருந்தவர்‌


தொல்லியல்‌ துறையில்‌ கொற்கைக்‌ காப்பாட்சியராகப்‌
பணியாற்றிய இரு. எஸ்‌. இராமச்சந்திரன்‌ ஆவார்‌. இரு. எஸ்‌.
இராமச்சந்திரன்‌ அவர்கள்‌ தென்பாண்டி நாட்டில்‌ தம்‌
பணிக்காலத்தில்‌ கல்வெட்டுகளின்மூலம்‌ கண்டறிந்த உண்மைகள்‌
அந்நாட்டினரான நெல்லை நெடுமாறனுடன்‌ ஊடாடுவதற்கு
உறுதுணையாக இருந்தன.
இவ்விரட்டையரின்‌ ஊடாடல்கள்‌ தமிழக வரலாற்றைப்‌
புரட்டிப்போடும்‌ அளவிற்கு அமைந்தன எனில்‌ அது
மிகையாகாது. ஆம்‌. அதுவரை சங்ககால மூவேந்தர்களும்‌
சான்றோரும்‌ வேளிரும்‌ இக்காலத்தில்‌ யாராக அடையாளப்‌
படுகின்றனர்‌ என்ற முடிவுக்கு முற்றுப்புள்ளி வைத்தன
8
இவர்களுடைய ஆய்வுகள்‌. அதன்‌ வெளிப்பாடே இவ்விருவரும்‌
இணைந்து ஆங்கிலத்தில்‌ எழுதி வெளியிட்ட வெள்ளை நாடர்‌
மற்றும்‌ வேளிர்‌ தொடர்பான கட்டுரைகள்‌ஆகும்‌.
இவ்விருவரின்‌ ஆய்வுகள்‌ ஒருபக்கம்‌ இருக்க, நாட்டுப்புறக்‌
கதைப்பாடல்களிலும்‌ ஓலைச்சுவடி ஆவணங்களிலும்‌ தோய்ந்த
முனைவர்‌ ஆ.தசரதன்‌ எழுதிய நூல்களும்‌ தொல்லியல்‌ துறை
அறிஞர்‌ இரு. ச.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்‌ எழுதிய செப்பேடுகள்‌
பற்றிய நூல்களும்‌ நெல்லை நெடுமாறனின்‌ பிற ஆய்வுகளுக்கு
உறுதுணையாக அமைந்தன. புலவர்‌ இராசு அவர்கள்‌ பதிப்பித்த
செப்பேடுகள்‌ இவர்‌ஆராய்ச்சிக்குப்‌ பெரிதும்‌ உதவின.
தொல்லியல்‌ துறை அறிஞர்களான முனைவர்‌ சம்பத்‌,
இரு.தியாக.சத்தியமூர்த்து, இரு.கருப்பையா, திரு.சாந்தலிங்கம்‌,
இரு.பூங்குன்றன்‌ போன்றோர்களிடமும்‌ வேறு மாநிலங்களைச்‌
சார்ந்த இந்திய தொல்லியலாளர்களிடமும்‌ நெல்லை
நெடுமாறனின்‌ தொடர்புகள்‌ விரிந்து சென்றன. தமிழக
எல்லைகளைத்‌ தாண்டி அயல்‌ மாநில அறிஞர்களுடனான
தொடர்பு நெல்லை நெடுமாறனுக்கு ஏற்பட்ட அதே தருணத்தில்‌
அவருடைய ஆய்வு முடிவுகளில்‌ தமிழகத்தைச்‌ சேர்ந்த சில மூத்த
தொல்லியல்‌ அறிஞர்கள்‌ முரண்பட்டிருந்தாலும்‌ அதை மறுக்க
மூன்வராதது நெல்லை நெடுமாறனுக்கு ஏற்பட்ட வெற்றியாகும்‌.
அதுவரை தொல்லியல்‌ அறிஞர்களைத்‌ தேடிச்சென்று தம்‌
ஆய்வுகளை விவாதித்த நெல்லை நெடுமாறனிடம்‌ அவர்களில்‌
பலர்‌ தம்‌ ஐயங்களைக்‌ கேட்டுத்‌ தெளிந்த நிலை ஏற்படத்‌
தொடங்கியது. இதுவே அவருக்கு, “தொல்லியல்‌ அறிஞர்‌” எனும்‌
பட்டத்தை உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனம்‌ வழங்கிடக்‌
காரணமாக அமைந்தது.
நெல்லை நெடுமாறனும்‌ நம்மாழ்வாரும்‌
தமிழ்‌ நாட்டில்‌ நெல்லை நெடுமாறன்‌ மேற்கொண்டிருந்த
தொல்லியல்‌ ஆய்வுகளின்‌ மூலம்‌ இதுவரை வரலாற்றாசிரியர்கள்‌
தவறாகத்‌ தெரிவித்துக்‌ கொண்டிருந்த தமிழக வரலாறு இசை
திரும்பலாயிற்று. அவற்றுள்‌ ஒன்றே நம்மாழ்வார்‌ பற்றியது.
நம்மாழ்வார்‌ பாண்டிய குலத்தினர்‌ என்பதில்‌ எள்ளளவும்‌
ஐயமில்லை. ஆனால்‌ அவர்‌ சான்றோர்‌ குலத்தோன்றலே அன்றி
9
ஏனையோர் கூறுவது போன்று அவர்‌ வேளாளரோ வேறு எவரோ
அல்லர்‌ என நெல்லை நெடுமாறன்‌ பல்வேறு ஆவணங்கள்‌ மூலம்‌
உறுதிப்படுத்தத்‌ தொடங்கினார்‌. அதன்‌ விளைவாகவே அவர்‌
அப்பொழுது ஆலோசகராகவிருந்த தக்ஷிணமாற நாடார்‌
சங்கத்துக்கு உட்பட்டிருந்த தெற்குக்‌ கள்ளிகுளம்‌ கல்லூரி ஆண்டு
விழா மலர்களிலும்‌ வெள்ளி விழா மலரிலும்‌ எழுதிய பல
கட்டுரைகளில்‌ நம்மாழ்வார்‌ பற்றியதும்‌ ஒன்றாகும்‌.
இதே காலக்கட்டத்தில்‌ தென்பாண்டி நாட்டில்‌ தமிழ்‌
வில்லுப்பாட்டு இலக்கியத்துக்கு வித்திட்ட முன்னோடிகளில்‌
ஒருவரான அருதக்குட்டி அடிகளார்‌ பாடிய பாடல்கள்‌
இடம்பெற்றிருந்த ஓலைச்சுவடிகளை நெல்லை நெடுமாறன்‌
கண்டறிந்தார்‌. அவற்றைப்பதுப்பிக்க முனைவர்‌ ஆ.தசரதனுக்கு
அவர்‌ அளித்தது வரலாற்றில்‌ இடம்பெறத்தக்க நிகழ்வாகும்‌.
அச்சுவடிகளில்‌ ஒன்று முனைவர்‌ ஆ.தசரதனால்‌ பெருமாள்ச௱கி
த.ம்‌.பிஜான்‌ என்ற பெயரில்‌ 2009இல்‌ தக்ஷிணமாறநாடார்‌ சங்கக்‌
கட்டடத்‌ திறப்பு நாளன்று தினத்தந்தி அதிபர்‌ டாக்டர்‌ பா. சிவந்தி
ஆதித்தனார்‌ அவர்களால்‌ வெளியிடப்பெற்றது. பின்‌ 2005இல்‌
இச்சுவடியின்‌ வேறொருவடிவம்‌ தமிழக அரசின்‌ தமிழ்வளர்ச்சித்‌
துறையில்‌ ஏற்பட்ட அரிய நூல்கள்‌ பதிப்புக்கான நிதி உதவி
பெற்று 2005இல்‌ வெளியிடப்பெற்றது.
நெல்லை நெடுமாறன்‌ எழுதிய நம்மாழ்வார்‌ கட்டுரை
முனைவர்‌.ஆ.தசரதன்‌ பதிப்பித்த பதிமதாப சுவாமிகசைப்பாடல்‌
(2005) என்ற நூலில்‌ தொடர்பு காரணமாகச்‌ செம்மை
செய்யப்பெற்று இணைக்கப்பட்டது. நம்மாழ்வாருக்குப்பின்‌
பெருமாள்‌ தம்பிரான்‌ என்ற நாராயணசாமியின்‌ வரலாறு
நம்மாழ்வார்‌ ஆய்வுக்கு மேலும்‌ அணி சேர்த்தது.
நம்மாழ்வார்‌ அரச குலச்‌ சான்றோரே என ஆணித்தரமாக
நெல்லை நெடுமாறன்‌ ஆய்ந்து முடிவுகண்டதற்குப்பின்‌ ஏற்பட்ட
விவாதங்கள்‌ காரணமாகவே “நம்மாழ்வார்‌ வாழ்வும்‌ வரலாறும்‌”
என்ற தலைப்பிலான சொற்பொழிவும்‌ அதன்‌ கட்டுரைப்‌ படியும்‌
ஏற்பட்டன. இவற்றின்‌ ஆக்கத்திற்காக நெல்லை நெடுமாறன்‌ பல
நூல்களைப்‌ பார்வையிட்டுள்ளார்‌ என்பது அக்கட்டுரையைப்‌
படிப்போர்‌அறிவர்‌.
10
சென்னைப்‌ பல்கலைக்‌ கழகத்‌ தமிழ்த்துறைத்‌ தலைவரும்‌
சிறந்த வைணவ ஆய்வாளரும்‌ அடையாறு. தமிழ்ச்சங்கத்‌
தலைவரும்‌ அமைதியாகப்‌ பேசுபவரும்‌ ஆரவாரம்‌
இல்லாதவருமான பேராசிரியர்‌ ௮.௮. மணவாளன்‌ அவர்களிடம்‌
நம்மாழ்வார்‌ பற்றி அடிக்கடி நெல்லை நெடுமாறன்‌ ஊடாடித்தம்‌
கண்டுபிடிப்புகளைச்‌ சொல்லி ஏற்புப்‌ பெற்றபிறகே அடையாறு
தமிழ்ச்‌ சங்கத்தில்‌ 7.8.2010ஆ.ம்‌ நாள்‌ நெல்லை நெடுமாறன்‌
இக்கட்டுரையை அளித்தார்‌ எனப்‌ பதிவு செய்வது சாலப்‌
பொருத்தமாகும்‌.
நம்மாழ்வாரும்‌ நாராயணசாமியும்‌
அடையாறு தமிழ்ச்சங்கத்தில்‌ நெல்லை நெடுமாறன்‌ வேறு
சொற்பொழிவுகளையும்‌ நிகழ்த்தியுள்ளார்‌ என்பதற்கான
ஆவணங்கள்‌ கிடைக்கவில்லை. ஆதலால்‌ முனைவர்‌ ஆ.தசரதன்‌
பதிப்பித்து மீண்டும்‌ வெளியிடக்கருதியுள்ள பெருமாள்த.ம்‌.பிரான்‌
கதை.ப்பாடலின்‌அணிந்துரையாக நெல்லை நெடுமாறன்‌ எழுதிய
பகுதி இன்று வெளியிடப்பட்டுள்ள இந்நூலில்‌
இடம்பெறுகின்றது. நம்மாழ்வாருக்குப்‌ பின்‌ வைணவத்தை
வளர்த்தவர்‌ நாராயணசாமி எனும்‌ பெருமாள்சாமியாவார்‌.
நம்மாழ்வாரின்‌ வழித்தோன்றல்கள்‌
நெல்லை நெடுமாறனின்‌ ஆய்வின்‌ மற்றொரு மைல்‌
கல்லாக அமைவது திலைமைக்காரர்கள்‌ எனும்‌ பிற்கால
மூவேநீதர்சள்‌ என்ற நூல்‌ ஆகும்‌. முனைவர்‌ ஆ.தசரதனும்‌
நெல்லை நெடுமாறனும்‌ இணைந்து எழுதிய இந்நூலின்‌ முதல்‌
தொகுதியில்‌ நம்மாழ்வார்‌ தோன்றிய தென்பாண்டி நாட்டில்‌ அவர்‌
தொடர்பான எச்சங்கள்‌ யார்‌ யார்‌ எவ்வெவ்‌ ஊரில்‌ வாழ்கின்றனர்‌
எனப்‌ பல்வேறுவகை ஆதாரங்களுடன்‌ எழுதப்பெற்ற பகுதி
இடம்பெற்றிருக்கிறது. வட்டார வரலாறுகள்‌ தமிழக வரலாறு
எழுதுவதற்கு இன்றியமையாதவை என்பதற்கு ஏற்ப இப்பகுதி
அமைந்திருப்பது ஈறெப்பு.
நம்மாழ்வார்‌ பிறந்த பகுதியான திருவழுஇி வளநாட்டின்‌
வரலாறு, சமூக அமைப்பு, வைணவத்‌ திருப்பதிகள்‌
போன்றவற்றை ௩. அப்பகுதியினரும்‌ அப்பகுதியில்‌
பதவிகளிலிருறீது.புல்வேறு ஆக்கங்களைச்‌ செய்தவருமான
11
நெல்லை நெடுமாறன்‌ எழுதியிருப்பது இந்த நூலுக்கு ஏற்றம்‌
தருவதாகும்‌.
நம்மாழ்வாரும்‌ நாராயணசாமியும்‌ ஐயா வைகுண்டரும்‌
நம்மாழ்வார்‌ பற்றிய நிறைவான ஆய்வுக்குப்‌ பின்‌ நெல்லை
நெடுமாறன்‌ ஐயா வைகுண்டர்‌ தொடர்பான சமூகச்‌
சீர்திருத்தங்களைத்‌ தனியாகவும்‌ தொல்லியல்‌ அறிஞர்‌
எஸ்‌.இராமச்சந்திரனுடன்‌ இணைந்து இணைய,
வலைத்தளங்களில்‌ எழுதியுள்ளார்‌. அவை தொடர்பான கட்டுரை
ஒன்று “திருக்குருகூர்‌ மகிழ்மாறன்‌ பவனிக்குறம்‌” என்ற
தலைப்பில்‌ இங்கு இடம்பெறுகிறது.
நெல்லை நெடுமாறனின்‌ பன்முக ஆய்வுகளைப்‌
பதிவுசெய்துவைக்கும்‌ நோக்கத்தில்‌ இந்நூல்‌ அணியம்‌
செய்யப்பெற்று இன்று வெளியாவது அன்னாருக்குச்‌ செய்யும்‌
நன்றிக்கடப்பாடு ஆகும்‌. இதற்கு அணிந்துரை எழுதி நெல்லை
நெடுமாறனின்‌ நினைவுகளைப்‌ பதிவு செய்யும்‌ முதல்‌
கருத்தரங்கத்தை அடையாறு தமிழ்ச்சங்கம்‌ சார்பில்‌ நடத்த உதவிய
அதன்‌ செயலாளரும்‌ பேராசிரியருமான முனைவர்‌ ம.செ.ரபிசிங்‌
அவர்களையும்‌ சங்க நிருவாகிகளையும்‌ இத்நூல்‌ உருவாக்கத்திற்கு
உதவிய ஏனையோரையும்‌ குறிப்பாக, இரு.ஆ.விமலாதித்தன்‌
அவர்களையும்‌ பாராட்டுகின்றேன்‌.

முனைவர்‌ ஆ.தசரதன்‌
சூசிரியர்‌ பற்றி...

தென்பாண்டி நாட்டுத்‌ திருசெந்தூர்ப்‌


பகுதித்‌ தென்பொறையூர்‌ நாடாள்வார்‌
வமிசத்துப்‌ பொன்‌ நாடார்‌ கூட்டத்தார்‌
போன்ற நிலமைக்காரர்கள்‌ வாழும்‌
ஊர்களில்‌ நாலுமாவடியில்‌ பொன்‌
. திராவியம்‌ நாடார்‌, அண்ணாமலைக்கனி
உ ௩... அம்மாள்‌ தம்பதியரின்‌ பதினொரு
புதல்வியருக்குப்‌.பின்‌ 12வதாகத்‌
தோன்றிய ஒரே புதல்வராக 1939ஆம்‌
ஆண்டுஅக்டோபர்த்‌ தங்கள்‌ 9ஆம்‌ நாளில்‌
பிறந்தவர்‌ நெல்லை நெடுமாறன்‌.
இளவயது முதல்‌ தாய்மொழியின்‌ மீதும்‌ தாய்நாட்டின்‌
மீதும்‌ பற்றுக்‌ கொண்டதாலும்‌ பகுத்தறிவுக்‌ கண்ணோட்டத்துடன்‌
திராவிட இயக்கத்தின்‌ மீதும்‌ ஏற்பட்ட பற்றுதல்‌ காரணமாகவும்‌
பெற்றோர்‌ சூட்டிய நாராயணன்‌ எனும்‌ பெயரை விடுத்து,
நெடுமாறன்‌ என்ற பெயரை மாணவப்‌ பருவத்திலேயே மாற்றிக்‌
கொண்டார்‌.
உள்ளூரில்‌ தொடக்கக்‌ கல்வியை முடித்து, நாசரேத்‌ புனித
மர்காஸிஸ்‌ உயர்நிலைப்‌ பள்ளியில்‌ படித்த காலத்தில்‌
பேச்சாற்றலில்‌ ஆசிரியர்களுக்கு மிஞ்சியவராகவும்‌
மாணவர்களுக்குத்‌ தலைவராகவும்‌ விளங்கியதிலிருந்து
இவருடைய ஆளுமை வெளிப்பட்டு நிற்பது உள்ளங்கை
நெல்லிக்கனி.
1965ஆம்‌ ஆண்டு இந்தி எதிர்ப்புக்குப்‌ பின்னர்தான்‌ திராவிட
இயக்கத்தின்மீது இளைஞர்களுக்குப்‌ பற்றுதல்‌ ஏற்பட்டது.
இவருக்கும்தான்‌. இவருடைய மேடைப்‌ பேச்சுகளில்‌ கொட்டும்‌
அருவியெனத்‌ தமிழ்‌ பொழிந்தது; அதனால்‌ தமிழகத்தின்‌
பல்வேறு மேடைகளில்‌ இவரது முழக்கம்‌ கேட்டது. அது
இளைஞர்களிடையே பெரும்‌ வரவேற்பைப்‌ பெற்றது. தமிழ்ப்‌
பண்பாடு இவரது பேச்சில்‌ மிளிர்ந்தது. தமிழ்‌ வரலாறு
படம்பிடித்துக்‌ காட்டப்‌ பெற்றது. தமிழும்‌ திராவிடமும்‌ தனி
இடம்பெற்று இவருடைய மேடைப்‌ பேச்சில்‌ சிறந்தன.
13
கி.பி. 1965இல்‌ சங்கரன்‌ கோவில்‌ நகரத்‌ தி.மு.க அமைப்பு
இவருக்கு இலக்கிய மேதை என்ற பட்டத்தை நல்கியது.
தாய்மொழி மீது அளவற்ற பற்றுக்‌ கொண்ட நெல்லை
நெடுமாறன்‌ தமிழ்மொழியைக்‌ காக்கும்‌ நோக்கில்‌ இறை
சென்றவர்‌. இந்தி எதிர்ப்பு இளைஞர்களிடையேயும்‌
மாணவர்களிடையேயும்‌ மேலோங்கியிருந்த நிலையில்‌ நெல்லை
நெடுமாறன்‌ 1965ஆம்‌ ஆண்டு, இந்தித்‌ திணிப்பு எதிர்ப்புப்‌
போராட்டத்தில்‌ தீவிரமாகக்‌ கலந்துகொண்டார்‌. அதனால்‌ கைது
செய்யப்பட்டு, திருவைகுண்டம்‌ சிறையில்‌ அடைக்கப்பட்டார்‌.
தமிழ்நாடு ஒன்றியத்‌ துணைத்‌ தலைவர்‌ (02யடு Chairman
of Tamil Nadu Unions) Gureirm பதவிகளை வித்தார்‌. மதுரைப்‌
பல்கலைக்‌ கழகத்தில்‌ செனட்‌ உறுப்பினராக 3ஆண்டுகள்‌ (1972-75),
தமிழ்நாடு சாலைப்‌ போக்குவரத்து ஆலோசனைக்‌ குழு உறுப்பினர்‌
போன்ற 21 பதவிகளிலும்‌ அமைப்புகளிலும்‌ இளம்‌ வயதிலேயே
பணியாற்றும்‌ வாய்ப்புகளைப்‌ பெற்றமைக்குப்‌ பல்துறைகளிலும்‌
இவர்‌ பெற்றிருந்த நூலறிவும்‌ பட்டறிவுமே காரணங்களாகும்‌.
1975ஆம்‌ ஆண்டு நாட்டில்‌ அவசரநிலை அறிவிக்கப்‌
பட்டது. மிசா சட்டத்தில்‌ நெல்லை நெடுமாறனும்‌ கைது
செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேல்‌ சிறையிலிருந்தார்‌. தமிழக
வரலாற்று ஆய்வும்‌ படிப்பும்‌ இவரைத்‌ தீவிர அரசியலிலிருந்து
விலகச்‌ செய்தன. இவாது அரசியல்‌ துறவறம்‌ தமிழக
வரலாற்றாய்வுத்‌ துறைக்குப்‌ பெரும்பேறாக அமைந்து
விட்டதெனில்‌, அது மிகையாகாது.
அதனைத்‌ தொடர்ந்து இவரது கவனம்‌ கல்வெட்டுகள்‌,
செப்பேடுகள்‌, ஓலைச்சுவடிகள்‌, தொல்லியல்‌ சான்றுகள்‌,
நாணயங்கள்‌ என எல்லாத்‌ திசைகளிலும்‌ சென்றது.
படிக்கப்பட்டிராத ஒரு கல்வெட்டோ, ஓலைச்சுவடியோ
இருப்பதாகக்‌ கேள்விப்பட்டால்‌, அது எத்தனைத்‌ தொலைவில்‌
இருந்தாலும்‌ காலத்தையும்‌, பொருட்செலவையும்‌
பொருட்படுத்தாது, உடனே சென்று பார்த்துவிடுவார்‌. அதைப்‌
போன்றே வரலாறு, தொல்லியல்‌ தொடர்பான கருத்தரங்குகள்‌,
மாநாடுகள்‌ நடைபெற்றால்‌ அங்கெல்லாம்‌ இவரைத்‌ தவறாமல்‌
பார்க்க முடியும்‌.
இவருடைய தொடக்ககால ஆய்வுகளில்‌ சேர, சோழ,
பாண்டியர்‌ என்ற முடியுடைய வேந்தர்களில்‌ வமிசாவளியினர்‌
தற்போது யாராக உள்ளனர்‌ என்ற தேடுதலே விஞ்சியிருநீதது. அதன்‌
14
விளைவாகத்‌ தொல்லியல்‌ அறிஞர்‌ எஸ்‌. இராமச்சந்திரன்‌
அவர்களின்‌ தொடர்பு கிடைத்தது. இவருடைய தேடலுக்கு
விடையும்‌ இடைக்கத்‌ தொடங்கியது. அது முதல்‌ இவர்‌
எழுதியுள்ள ஆய்வுக்‌ கட்டுரைகள்‌ பலப்பல. சான்றோர்‌ காடும்‌
சான்றோர்நாடும்‌, சான்றோர்காசு, நாட்டார்‌ மாடை, முநீநூற்றுவர்‌,
எழுநூற்றுவர்போன்ற தொடக்கக்‌ காலக்‌ கட்டுரைகள்‌ இவருடைய
தனிப்பட்ட தேடுதல்‌ முயற்சியால்‌ எழுதப்பட்டன. தொல்லியல்‌
துறை அறிஞர்கள்‌ பலரின்‌ தொடர்பும்‌ கிடைத்த பின்‌ இவரது
கட்டுரைகள்‌ பெருமளவில்‌ வரவேற்பைப்‌ பெற்று ஏடுகளிலும்‌
இடம்பெற்று வருகின்றன.
Studies in South Indian (மட என்ற நூலின்‌ நான்காம்‌
தொகுதியில்‌ $வால 1௦ எனும்‌ தலைப்பில்‌ நெல்லை நெடுமாறன்‌
அவர்கள்‌ சான்றார்‌ காசு பற்றி மேற்கொண்ட ஆய்வு பற்றிக்‌
குறிப்பிடப்‌ பெற்றுள்ளது. இரு. நடன. காசிநாதன்‌ தாம்‌ எழுதிய
“தமிழர்காசு இயல்‌” என்ற நூலில்‌ & 14௦6 0 Sanar ப எனும்‌
கட்டுரை தமிழறிஞர்‌ ம.பொ. சிவஞானம்‌ பெயரில்‌ சென்னை
உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனத்தில்‌ நிறுவப்‌ பெற்றுள்ள
அறக்கட்டளையின்‌ ஆறாம்‌ சொற்பொழிவாக உரையாற்றியதன்‌
அச்சு வடிவமாகும்‌. இது 1995ஆம்‌ ஆண்டு வெளியிடப்‌ பெற்றது.
நெல்லை நெடுமாறன்‌ இரு. 6, இராமச்சந்திரனுடன்‌
இணைந்து எழுதிய வேளிர்‌, வெள்ளை நாடார்‌ போன்ற ஆங்கிலக்‌
கட்டுரைகள்‌ வரலாற்று முக்கியத்துவம்‌ பெற்றவை.
இவர்‌ எழுதிய பிற எழுத்துருக்களாவன:
உச்யக்கொண்டார்‌
அரையர்களான நாடாள்வார்‌
களப்பிரர்‌ ௮ன்று.ம்‌ இன்றும்‌
போன்றவை வெளிவரும்‌ நிலையில்‌ உள்ளன.
நெல்லை நெடுமாறன்‌ வரலாறு, கல்வெட்டு போன்ற
ஆய்வுகளில்‌ உண்மைகளை வெளிப்படுத்திக்‌ கொண்டிருக்கும்‌
காலக்கட்டத்தில்‌ தமிழ்நாடு அரசின்‌ தமிழ்‌ வளர்ச்‌ பண்பாட்டின்‌
8ீழ்‌ உள்ள இந்து சமய அறநிலையத்‌ துறையின்‌ 'கல்வெட்டு
உறுப்பினர்‌ எனும்‌ பதவியை 1996 ஆம்‌ ஆண்டு முதல்‌ இவர்‌
பெற்றார்‌. உலகத்‌ தமிழாராய்ச்9 நிறுவனத்தில்‌ “தமிழில்‌
ஆவணங்கள்‌” என்ற தலைப்பில்‌ ஒரு தேசியக்‌ கருத்தரங்கம்‌
15
1998ஆம்‌ ஆண்டு ஆகஸ்ட்‌ மாதம்‌ 17, 18, 19 ஆகிய நாள்களில்‌
நடந்தது. அதன்‌ முத்தாய்ப்பாகத்‌ தமிழ்‌ ஆவணங்கள்‌ மற்றும்‌
கல்வெட்டு இயல்களில்‌ பன்னெடுங்காலம்‌ தொண்டாற்றிய
அறிஞர்களுக்குப்‌ பாராட்டுகள்‌ நடந்தன. இந்நிகழ்ச்சியில்‌
தமிழ்நாடு அரசின்‌ தொல்லியல்‌ துறை மேனாள்‌ இயக்குநர்‌
முனைவர்‌ இரா. நாகசாமி, புலவர்‌ கோவிந்தராசனார்‌, இரு. நடன.
காசிநாதன்‌, இரு. நெல்லை நெடுமாறன்‌ ஆகியோருக்குச்‌
சிறப்புகள்‌ செய்யப்பட்டன. உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனம்‌
நெல்லை நெடுமாறனுக்குத்‌ “தொல்லியல்‌ அறிஞர்‌” எனும்‌
பட்டத்தை அளித்தது இவர்‌ மேற்கொண்டு வரும்‌ ஆய்வுக்குக்‌
கஇடைத்த அங்ககோரம்‌ எனில்‌ மிகையாகாது.
அண்மையில்‌ இவர்‌ எழுதிய கட்டுரைகளில்‌ மிகச்சிறப்பாக
அமைந்தவை: மருமக்கள்‌ தாயம்‌, நாட்டார்‌, தமிழக ஒளியார்‌
என்பன. ஆய்வுசெய்வதில்‌ ஓய்வின்றி உழைத்துத்‌ தோய்ந்து வரும்‌
இந்நாலாசிரியர்‌ எழுதிய பல நூல்கள்‌ ஒவ்வொன்றாக
வெளிப்படும்‌ என்பது உறுதி.
அடுத்ததாக, பெருந்தனம்‌ சிறுதனம்‌ என்போர்‌ இதுவரை
அரசு அதிகாரிகள்‌ எனத்‌ தொல்லியல்‌ துறையினர்‌ அடையாளம்‌
காட்டினர்‌. அதை மறுத்து, அக்குழுவினர்‌ கோயில்‌ குடிகள்‌ என்றும்‌
தெய்வமகள்‌ மரபிலே வந்தவர்‌ என்றும்‌ பல சான்றாதாரங்களின்‌
மூலம்‌ நிறுவியுள்ளார்‌.
பொருளடக்கம்‌

அணிந்துரை

பதிப்புரை

ஆசிரியர்‌ பற்றி... 12

1, தொல்லியல்‌ அறிஞர்‌ நெல்லை


நெடுமாறனின்‌ பன்முக ஆய்வுகள்‌ 17

8. நம்மாழ்வார்‌ பாண்டியர்‌ மரபினர்‌ 21

3. நம்மாழ்வார்‌ வாழ்வும்‌ வரலாறும்‌ 33

4. நம்மாழ்வார்‌ அரச குலச்‌ சான்றோரே 50

5. நம்மாழ்வார்‌ வழித்தோன்றல்கள்‌ 70

6. திருக்குருகூர்‌ மகிழ்‌ மாறன்‌ பவனிக்குறம்‌ 76


தொல்லியல்‌ அறிஞர்‌ ஏநநல்லை
நெடுமாறனின்‌ பன்முக ஆய்வுகள்‌
I. paesrwatwued (Numismatics)
1. “நாட்டார்மாடை” (1993), தெ.கள்ளிகுளம்‌, டி.எம்‌.என்‌.எஸ்‌.
கல்லூரி ஆண்டு மலர்‌.
“சான்றார்‌ காசு” (1994), தெ. கள்ளிகுளம்‌ டி.எம்‌.என்‌.எஸ்‌.
கல்லூரி ஆண்டு மலர்‌.
“Sanarkasu” (1994), in: Studies in South Indian Coins,
Bangalore,
“A Note on Sanarkasu” (1995, 2003) தமிழர்காச, உலகத்‌
தமிழாராய்ச்சி நிறுவனம்‌ சென்னை-114.
“Sanrorkasu - ANewinterpretation” (1997) Paper Presented at
the VII Annual Conference of the South Indian Numismatic
Society, Trichur, Kerala.
“தாவழுக்காக” (1997), தென்னிந்திய நாணயவியல்‌
கருத்தரங்கம்‌, ஈரோடு.
“ஈழக்காக ” (1998), தென்னிந்திய நாணயவியல்‌ கருத்தரங்கம்‌
அனந்தப்பூர்‌, ஆந்திரம்‌.
1]. அரசகுலச்‌ சான்றார்‌ வரலாற்று ஆய்வுகள்‌
8. “சரன்றார்‌ நாடும்‌ சான்றார்‌ காடும்‌ ", (1994), தெ.கள்ளிகுளம்‌,
டி.எம்‌.என்‌.எஸ்‌. கல்லூரி பொன்விழா மலர்‌.
9. “அரசமுல விழிச்சான்றோர்‌" (1994).

10. “Sanroravai or The Court of Lords” (1995), Published in the


Journal of the Epigraphical Society of India, Vol. xvi, Mysore.
11. “Kshatriyas of South India” (1996), Journal of the Place Name
Society of India, Vol. xvi, Mysore.
18
்வு
“தகடுர்யாத்திரைகாட்டும்‌ வீரக்குடி யினர்‌” (1999), தமிழாய
மன்றம்‌, இருச்செந்தார்‌ .

13. “எழுநூற்றுவர்‌” (1994), குமரி மாவட்ட ஆட்சியர்‌ அரங்கில்‌


வழங்கப்பெற்றது.
எஸ்‌.
14. “முந்நூற்றுவர்‌” (1996), தெ.கள்ளிகுளம்‌, டி.எம்‌. என்‌.
கல்லூரி மாணவர்‌ மன்றம்‌.

14. “வலங்கை உய்யக்கொண்டார்‌” (1996), 18022 presented at the


23rd Annual Conference of the Epigraphical Scoiety of India,
Mysore and published in its journal vol.23.
16. “உய்யக்கொண்டார்‌” (2000), நாடார்‌ முரசு, சென்னை.
17. “திவனணைந்த பெருமாள்‌” (2000), தமிழாய்வு மன்றம்‌,
இருச்செந்தார்‌.
18. “நம்மாழ்வார்‌” 8007, டி.எம்‌.என்‌. எஸ்‌. கல்லூரி, வெள்ளி
விழா மலர்‌ : பார்க்க : பத்மநாபசுவாமி கதைப்பாடல்‌
(பதிப்பாசிரியர்‌) முனைவர்‌ ஆ. தசரதன்‌, 8005, தமிழ்‌ ஓலைச்‌
சுவடிகள்‌ பாதுகாப்பு மையம்‌, சென்னை - 41.
19. “நிழல்‌ (வீரர்‌) ”, (2003), 1 ஊன றா28016ம்‌ 8 (11௦ ந$றர்தூகறர்ம்02!
Society of India, Courtallum.
20. “ஏனாதி ” (2005) (அச்சில்‌).

WIL. copty salud (Traditional Science)


21. “அஞ்ஞானத்தில்‌ விஞ்ஞானம்‌”, வானொலி உரை,
தூத்துக்குடி, (2004).
ரர்‌, சான்றோர்‌ குலச்‌ சமுதாயச்‌ செப்புப்பட்டய ஆய்வு (51ய:-
ies on Sanrorkula Copper Plates)
“கொங்குநாட்டுச்‌ சமூதாய ஆவணங்கள்‌” (2000) 1௦ த.மிஹில்‌
ஆவணங்கள்‌, உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனம்‌, தரமணி
சென்னை - 113,

“தமிழகச்‌ செப்பேடுகளும்‌ சமூகமும்‌ அரசியலும்‌” (2004),


கோபிசெட்டிப்பாளையம்‌.
19
24. “பழமையானசான்றோர்குலச்செப்புப்‌ பட்டயங்கள்‌” (1997),
டி.எம்‌.என்‌.எஸ்‌. கல்லூரி வெள்ளிவிழா மலர்‌.
25. “அவல்பூந்துறை ராஜகுலவரான நாடார்‌ செப்பேடு” (1997)
டி.எம்‌.என்‌.எஸ்‌. கல்லூரி வெள்ளி விழா மலர்‌.
V. ஊர்ப்பெயராய்வியல்‌ (11௮06 ஈவா 65 91ய4126)
26. “நெல்லை மாவட்ட ஊர்கள்‌” (1994).
1. தொகுப்பும்‌ பதுப்பும்‌ (0011௦0110௩ & 1504௦0)
27. சான்றோர்குலச்சமுதாய வரலாற்று ஆவணங்கள்‌ (1997), தமிழ்‌
ஓலைச்சுவடிகள்‌ பாதுகாப்பு மையம்‌, சென்னை - 600047.
26. சாரன்றோர்குலச்‌ சமுதாயச்‌ செப்புப்‌ பட்டயங்கள்‌ -10, 1997,
தமிழ்‌ ஓலைச்‌ சுவடிகள்‌ பாதுகாப்பு மையம்‌, சென்னை
600 041.

௫11. நூல்கள்‌ 214cb (Books in Print)


29. வலங்கை உப்யக்கெொண்டார்‌(ஏ4 அளவில்‌ 150 (பக்கங்கள்‌].
30. களப.பிறர்௮ன்றும்‌ இன்றும்‌ (டெமி அளவில்‌ 700 பக்கங்கள்‌).
33. அரையர்சளான நாடாள்வார்‌(டெமிஅளவில்‌ 280 பக்கங்கள்‌).
35. ஏனாதி (ஏ4 அளவில்‌ 220 பக்கங்கள்‌],

33. திலவடைமைச்‌ சமுதாயமும்‌ வெட்டிப்பேறு நிலங்களும்‌


(டெமி அளவில்‌ 200 பக்கங்கள்‌).
34. மூறத்தகுமு (ஏ4 அளவில்‌ 58 பக்கங்கள்‌).
நா. தொல்லியல்துறை எஸ்‌. இராமச்சந்திரனுடன்‌
இணைந்து நெல்லை நெடுமாறன்‌ எழுதிய கட்டுரைகள்‌
35. “Decline and Fall of Vellai Nadar” (1997), Paper presented at
the XXII Annual conference of the Epigraphical Society of
India, Tamil University, Tanjavur, Printed in its Journal Vol. 24.
36. “Velirs : Where They Velalars?” (1998), Paper pesented at the
XXIV Annual Seminar of the Epigraphical Society of IndiaTrissur,
Kerala.
20
57. “Social Movements of Nadars of Tuttukkudi District”, (1997)
Seminar on Tuttukkudi District Gazetter. Also in Dr.A.
Thasarathan 2002. (Maanaadu)

1% பிறகட்டுரைகள்‌

38, "From ancient monarchy to Sethupathi Kings” Paper presented


at the South Indian History Congress, Loyola College, Chennai-
1999. IXLSD.
“மாவலி முதல்‌ சேதுபதி வரை” (1996) சேலம்‌
அருங்காட்சியகம்‌.
“களப்பிரர்‌” (கட்டுரை) 1999, ஈரோடு.
41. “தென்சேர நாட்டில்‌ நிலவுடைமைச்சமூக மாறுதல்‌” (டாக்டர்‌
ஆ.தசரதனின்‌ -கபாலகாரசுவாமி கதை.ப்‌.பாடல்‌ (2005) என்ற
நூலில்‌ (பக்‌. 87, இடம்‌ பெற்றுள்ள கட்டுரை),
42-00 இன்னும்‌ பல
Ix உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனத்தில்‌ நூல்கள்‌ வெளியீடு
3. அரசகுலச்சான்றோர்‌ வரலாறும்‌ மதுரைச்‌ காள்கியம்‌ (டாக்டர்‌
ஆ.தசரதனுடன்‌ இணைந்து எழுதியது) (2008).
தமிழக வேளிர்‌: ஆய்வும்‌ வரலாறும்‌ (2014).
தமிழ்‌ நாடும்‌ நாட்டார்‌ அமைப்பும்‌ : சமூக வரலாற்று ஆய்வு
(2016).
நம்மாழ்வார்‌ பாண்டியர்‌ மரபினர்‌
ஆழ்வார்களில்‌ நம்மாழ்வாரே முதன்மைப்படுத்திக்‌ கூறப்‌
படுகின்றார்‌.
“எந்தப்‌ பகவான்‌ வியாசாவதாரம்‌ எடுத்துப்‌ பிரம்ம
சூத்திரங்களை இயற்றினாரோ அதே பகவான்‌ நம்மாழ்‌
வாராக அவதரித்துத்‌ திருவாய்மொழியை அருளிச்‌
செய்து அந்தப்‌ பிரம்ம சூத்திரத்தினுடையவும்‌, வேத
வாக்கியங்களினுடையவும்‌ பொருட்களை விளக்கிக்‌
கூறினார்‌”
வேதம்‌ ஓதும்‌ உரிமை அந்தணர்‌, அரசர்‌, வணிகர்‌ ஆகிய
மூவருக்கு மட்டுமே இருந்தது எனத்‌ திருச்சந்தவிருத்தவுரை கூறு
இறது. தாழ்ந்தவன்‌ வேதம்‌ ஓதுவது இகழ்ச்சிக்குரியதாக
அமைந்தது. சிறந்த முறையில்‌ தம்மாழ்வார்‌வேதங்களைக்கற்றார்‌
என அறியக்கிடக்கின்றது. ஆதலால்‌ நம்மாழ்வார்‌ உயர்ந்த
குலத்தவராக அறியப்படுகின்றார்‌.
வேதத்தின்‌ பொருள்‌ மற்றும்‌ அதன்‌ உட்கருத்துகளையும்‌
விளக்கக்‌ கூறியவர்‌ நம்மாழ்வாரேயாவர்‌.
திருக்குருகூர்காரிமாறன்‌ என்ற அரசனின்‌ அருந்தவப்‌ புதல்வ
ரான நம்மாழ்வாரை வைணவர்கள்‌ 'தமிழ்‌ வேதம்‌ தந்த ஆழ்வார்‌'
எனப்‌ பெருமைப்படுத்தியுள்ளனர்‌. வைணவ அடியார்களில்‌ மேம்‌
பட்ட பெரியோரான அந்தணகுலத்து நாதமுனி திருவழுதி
நாட்டிற்கு வந்து வணங்கித்‌ தமிழ்‌ வேதம்‌ அறிந்தவர்‌.
“மன்னும்‌ வழுதி வளநாடன்‌ மாறன்‌ திருக்குருகூர்‌
சடகோபன்‌ தமிழ்‌” என்று நாதமுனி குறிப்பிடுவது நோக்கிடத்‌
தக்கது. நாதமுனி தமிழ்‌ வேதம்‌ கற்று, தமிழ்‌ மாறனாகிய
நம்மாழ்வாரை வணங்கி, சோழநாட்டு வீரநாராயணம்‌ போய்ச்‌
சேர்ந்து வைணவக்‌ கொள்கைகளை, கோட்பாடுகளைப்‌ பரப்பி
வந்தார்‌. இத்தகைய செய்திகள்‌ கி.பி. 16 ஆம்‌ நூற்றாண்டில்‌
எழுதப்பட்ட ஸ்ரீ ராமானு வைபவம்‌ என்று நூலில்‌ உள்ளன.
நம்மாழ்வார்‌. “மன்னும்‌ வழுதி வளநாடன்‌” என்று
குறிப்பிடப்பட்டாரே அன்றி வேறு குறிப்புகள்‌ நமக்குக்‌
இடைக்கவில்லை. "தமிழ்‌ மாறன்‌” என இராமானுசர்‌
கூறுவதிலிருந்தே நம்மாழ்வார்‌ பாண்டியர்‌ மரபினர்‌ எனத்‌ தெளி
வாகத்துணியலாம்‌.
22
நம்மாழ்வாரைப்‌ புகழ்ந்து போற்றி எழுதிய நூல்கள்‌ ஏராள
மாகும்‌. குறிப்பாகச்சில நூல்களில்‌ “திருக்குருகூர்காவலன்‌", “தென்‌
தருப்பேரைக்‌ காவலன்‌”, “பொதிகைமலையை உடையவன்‌”,
“பொருணையாறு உடையோன்‌” என்று சிறப்பித்துக்‌ கூறப்பட்‌
டிருப்பது பாண்டியர்‌ குல வளமை பொருட்டாகும்‌. பொருணை
ஆறும்‌, பொதிகை மலையும்‌ தொன்று தொட்டுப்‌ பாண்டியருக்கு
உரியன என்பதை நாம்‌ அறிவோம்‌.
நவதிருப்பதிகளில்‌ நம்மாழ்வார்‌ திருப்பதி
தென்பாண்டி நாட்டில்‌ நவதிருப்பதிகள்‌ அமைநீதிருப்பது
எண்ணத்தகுந்தது. நவக்கிரகங்களின்‌ ஆலயங்களாகவே
இவ்வூர்கள்‌ குறிக்கப்பட்டுள்ளன.
நவக்கிரகங்கள்‌ | நவஇிருப்பதிகள்‌ | தெய்வங்கள்‌ | மாவட்டம்‌
சூரியன்‌ திருவைகுண்டம்‌ | கள்ளபிரான்‌ தூத்துக்குடி
மாவட்டம்‌
சந்திரன்‌ வரகுணமங்கை விசயாசனர்‌ a
அங்காரகன்‌ திருக்கோளூர்‌ வைத்தமாநிதி ள்‌
புதன்‌ ஆழ்வார்திருநகரி | ஆதிநாதன்‌ 2
குரு தென்திருப்பேரை | மகரநெடுங்‌ ள்‌
குழைக்காதர்‌
சுக்கிரன்‌ திருப்புளியங்குடி | காய்சினவேந்தன்‌ »

சனி திருக்குளந்தை மாயக்கூத்தன்‌ ல


என்ற பெருங்குளம்‌
கேது தொலைவில்லி | தேவபிரான்‌ ப
மங்கலம்‌

இராகு இரட்டைத்திருப்பதிஅரவிந்தலோசனன்‌| ,,
இத்தகைய நவக்கிரகம்‌ பற்றிய இறைவணக்கப்‌ பதிகளாக
அமைந்த இக்கோயில்கள்‌ வைணவக்‌ கோயில்களாகும்‌.
இவற்றுள்‌, ஆழ்வார்‌ திருநகரி என்ற திருத்தலமே நம்மாழ்வார்‌
தொடர்புடைய தலமாகும்‌. இத்திருத்தலம்‌ பல்வேறு
பெயர்களாலும்‌ அழைக்கப்படுகின்றது.
நம்மாழ்வார்‌ காலம்‌
நம்மாழ்வார்‌ பிறந்த காலத்தை அறிஞர்களால்‌ இன்றுவரை
23
ஒழுங்குபடுத்த முடியவில்லை. வைணவ ஈல்களில்‌
ஆழ்வார்களை வரிசைப்படுத்தவும்‌ முடியவில்லை. இராம..னுஜ
நூற்றந்தாதி அருவிய வடமொழிச்சுலோகம்‌ நம்மாழ்வாரை இறுதி
ஆழ்வாராகவே கூறுகிறது. நம்மாழ்வார்‌ இடைப்பட்டவரோ
இறுதி ஆழ்வாரோ அதை விட அவர்‌ ஆழ்வார்களிலே
தலைமையானவர்‌ ஆவார்‌. ஆனால்‌ பொருமாள்‌ சீயரின்‌
குருபரம்பரை வேதாந்த தேசிகரின்‌ அதிகார சங்கிரம்‌ பிரபந்தசாரம்‌
என்ற நூல்‌ மற்றும்‌ மணவாள மாமுனிகளின்‌ நூல்‌ போன்றவை
ஆழ்வார்களில்‌ நம்மாழ்வாரைக்‌ கடைப்பட்டவராகவே
உணர்த்துகின்றன. நாலாயிரத்‌ திவ்வியப்பிரபந்தமும்‌ கடைப்‌
பட்டவராகவே நம்மாழ்வார்‌ காலத்தைக்‌ கூறுகிறது. நம்மாழ்வார்‌
இடைப்பட்டவரோ கடைப்பட்டவரோ அதைவிட அவர்‌
ஆழ்வார்களில்‌ தலைமையானவர்‌ஆவார்‌.
நம்மாழ்வார்‌ குலம்‌
அஞ்சலென வடியவரை யாள வேண்டி
அரசர்கள்‌ சிரோமணியாங்‌ காரிராசன்‌
தஞ்சிறுவனென உலகில்‌ வந்து தோன்றி
என்று நம்மாழ்வார்‌ திருக்கோவக்கவி கூறுவதால்‌ நம்மாழ்வார்‌
அரசர்கள்‌ சரோமணியாம்‌ காரிராசன்‌ மரபில்‌ வந்து தோன்றினார்‌
என்று திட்டவட்டமாக அறிகிறோம்‌.
திருவழுதி வளநாடனைத்‌ தென்திருப்பேரைக்‌ காவலனை
...ராமாவதாரதீர நாராயணன்‌ வழுதிநாடன்‌ நங்குலநாதன்‌
திருவுளம்‌ கிளர்தர வழுதிநன்‌ நாடா
தமிழ்‌ தென்திருப்பேரைக்‌ கோவே
என்று மகர நெடுங்குழைக்‌ காதர்‌ பிள்ளைத்‌ தமிழ்‌ கூறுவதைத்‌
தெளிகிறோம்‌.
ஆழ்வார்‌ திருநகரில்‌ இருந்த ௮.ம. மலையப்பப்‌ பிள்ளை
கவிராயர்‌ (வேளாளர்‌) மறன்‌ அவதாரக்‌ கவிதை என்ற நூலை எழுதி
யுள்ளார்‌. இவரது காலம்‌ கி.பி. 18ஆம்‌ நூற்றாண்டாகும்‌.
திங்க ளிரண்டுபுகுந்‌ தெய்வத்‌ தனிச்சுடரை
நங்கை திருவயிற்றில்‌ வந்துதித்த நன்மணியை
யங்கண்‌ வழுதிவள நாடர்குலத்‌ தாரமுதா
யெங்கண்‌ பெருமானை யெம்பெருமான்‌ காக்கவே
நங்கை பிராட்டியாரின்‌ திருவயிற்றில்‌ உதித்த நம்மாழ்வார்‌
பெருமானை “வழுதி வளநாடர்‌ குலத்து ஆரமுதே” என்று
வெள்ளாளர்‌ குலத்தவரே சுட்டிக்காட்டுதல்‌ நோக்கத்தக்கது. இத்‌
24
தகைய இலக்கியச்‌ சான்றுகளை உற்றுதோக்குதல்‌ ஆய்வாளர்களின்‌
கடமையாகும்‌.
மாறன்‌ கலம்‌. பகம்‌ என்னும்‌ நூல்‌
திருப்புளிக்‌ உழ்விற்றிருக்கு
மாறன்‌ பொருணை வளநாடான
என்கிறது. திருப்புளிக்கீழ்‌ விற்றிருந்த நம்மாழ்வார்‌ பெருமானை
“மாறன்‌ பொருணை வளநாடான்‌” என்று இந்நூல்‌ உணர்தீதுவது
அறியற்பாலதாம்‌.
தம்‌.மரழ்வார்‌ ஊஞ்சல்‌ கவிதை என்ற நூல்‌
சர்மேவு திருவழுதிக்‌ குலத்தில்‌ தோன்றுஞ்‌
செண்பகவண்‌ சடகோப னாடி ரூஞ்சல்‌
என்று குறிப்பிடுகிறது. திருவழுதிக்‌ குலம்‌ என்றும்‌ பாண்டிய
குலம்‌ என்றும்‌ கூறப்படுவதை எண்ணித்‌ துணிவோமாக.
அத்திருவழுஇிக்‌ குலத்தில்‌ அவதரித்தவரே நம்மாழ்வார்‌ ஆவார்‌.
ஆதிநாதன்‌ வாகனமாலை என்ற நூல்‌
திருவழுதிவளநாடர்‌ வார்த்தை
என்பதால்‌ நம்மாழ்வார்‌ அரச மரபினர்‌ என்று அறிய முடிகிறது.
நம்மாழ்வார்‌ ஊஞ்சற்கவிதை என்ற நூல்‌ நம்மாழ்வாரை ஆழ்வார்‌
களுக்கெல்லாம்‌ அரசன்‌ (தம்பிரான்‌) என்று கூறுகிறது.
ஆற்றோடு வளைழுழங்குங்‌ குருகை வாழும்‌
ஆழ்வார்கள்‌ தம்பிரான்‌
என்பதால்‌ ஆழ்வார்களில்‌ நம்மாழ்வாரே மிக உயர்ந்தவராகக்‌
கருதப்‌ பட்டார்‌ என்று தெரியவருகிறது.
இருஞான முத்திரைக்கை மாறன்‌ வீரன்‌
செண்பக வண்சட கோபன்‌
வீரக்குடியினர்‌ அரசர்‌ என்ற அடிப்படையிலேயே வீரன்‌
செண்பகவண்‌ சடகோபன்‌ என்று இங்குப்‌ பாடலாசிரியர்‌
கூறியுள்ளார்‌.
ஆழ்வார்திருவனந்தல்‌ என்ற ஏடு
திருவழுதி வளநாட னேதிரு வனந்தலோ
செண்பகச்சடகோப னேதிரு வனந்தலோ
சீரார்தமிழ்க்கரச னேதிரு வனந்தலோ
செண்பகச்சடகோப னேதிரு வனந்தலோ
என்கிறது. தமிழுக்கு அரசன்‌ பாண்டியன்‌ என்பது
இப்பாடலிலிருந்து நோக்கிடத்தக்கது. தமிழ்‌ வளர்த்த சான்றோர்‌
25
அவரே; இதன்‌ பொருட்டுத்‌ தமிழ்நாடன்‌ என்று
பெருமைப்படுத்தப்பட்டார்‌.
தம்மரழ்வார்‌ பதம்‌ என்ற நூல்‌
செண்பக மாறா நரவீரா
கூறு மறைத்தமிழ்‌ நரவீரன்றடம்‌
பொருநை மாறன்‌ நங்கையார்‌ பெற்றபேர்‌
மாறன்‌ மலிந்து வளமீளுங்‌ குறுகையூரன்‌
வையம்‌ புகழ்‌ குருகை அய்யன்‌ செண்பகமாறா
இப்பாடலாசிரியரின்‌ கால அளவில்‌ ஆட்சித்தலைவர்களை
“அய்யன்‌” என்று சிறப்பித்தது வழக்கமாயிற்று. எனவே
நம்மாழ்வாரையும்‌ அய்யன்‌ எனச்‌ சிறப்பித்தார்‌ எனலாம்‌. மேலும்‌
வைணவத்‌ தென்‌ கலை அய்யங்கார்களில்‌ தென்திருப்பேரை,
ஆழ்வார்திருநகரி போன்ற ஊர்களில்‌ பாண்டியகுலச்சான்றோர்களே
அந்தணராக மாற்றம்‌ பெற்றனர்‌ என்ற பண்டைய வழ்க்கும்‌
உண்டு.
ஆதிதாதன்‌ வாகன.மானை என்ற கவிதை நூல்‌
நாராயணன்வழுதிநாடாளன்‌ சீராளன்‌
என்கிறது. ஆதிநாதரூசல்‌ என்ற நூல்‌ நாடாய்ச்சிமார்‌ மூவர்‌
“திருவடிகள்‌ வாழி” என்று கூறுவதில்‌ தூத்துக்குடி, நெல்லை,
குமரி மாவட்டத்தில்‌ “நாடாச்சி" என்ற வழக்கு எம்மக்களிடம்‌
உள்ளது எனத்‌ தெளிவோமாக.
தீ£ம்‌.மாழ்வார்திருத்தலாட்டு என்ற நூல்‌
திருவழுதி நாடுமுற்றுஞ்‌ செங்கோல்‌ செலுத்துந்‌
இிருவழுதி நன்மரபிற்‌ செல்வக்‌ குமரன்‌
என்று கூறுகிறது.
நம்மாழ்வாரின்‌ அன்னையார்‌
ஈர்பூத்த நீண்‌ மதிளுஞ்‌ செம்பொன்செய்‌ கோபுரமும்‌
கார்பூத்த மாளிகையுங்‌ கற்பகக்காவுஞ்‌ செறிந்த
இருவண்‌ பரிசாரத்‌ தேவசனையே
மருவவர விந்தத்தில்‌ வளர்திருவாழ்‌ மார்பன்‌
கற்றெடுத்த கல்விக்‌ கடலாளருந்‌ தவத்தாற்‌
பெற்றெடுத்த பெண்கள்‌ பெருமாளுடைய நங்கை
என்பதால்‌ திருவழுதிநாடு முழுதும்‌ செங்கோலாட்சி செய்யும்‌
வேந்தர்‌ குடியில்‌ தலைமகன்‌ காரிமாறனைத்‌ தந்தையாகவும்‌ நீண்ட
மதில்‌, செம்பொன்னாலான கோபுரம்‌, மாளிகை, பனைமரங்கள்‌
26
நிறைந்த சோலையுடைய திருவண்‌ பரிசாரத்தில்‌ அமைந்த திரு
வாழ்மார்பன்‌ பிரபுவின்‌ மகள்‌ நங்கையைத்‌ தாயாகவும்‌ அமையப்‌
பெற்றவர்‌ நம்மாழ்வார்‌ என்று உணர முடிகிறது. இவர்களுக்குக்‌
குழந்தைப்‌ பேறு இல்லாத காலத்தில்‌
செங்கோலை விட்டுக்‌ கொடுங்கோல்‌ செலுத்தினமோ
வெங்கோப நீத்தார்க்கு வேதனைகள்‌ செய்தோமோ
ஆறிலொன்று கொள்ளாதவனி புரந்தோமோ
ஊரிலன்பர்‌ செய்த உதவி மறந்தோமோ
மகப்பேறு இல்லாத நிலையில்‌ ஆட்சியில்‌ தவறு செய்தோமோ
என்று வேதனைப்படுவது நோக்குக; செங்கோல்‌ செய்வதும்‌, ஆறி
லொன்று கடமை பெறுவதும்‌ அரசகுலத்தவருக்கே
அமைந்ததாகும்‌. ஆனால்‌ சோழ மண்டல சதகம்‌ என்ற நூல்‌
எட்டிலொரு கடமையை வேளாளர்‌ பெற்றதாக (பிற்காலம்‌/
குறிப்பிடுகிறது. நம்மாழ்வார்‌ (மரபினரைச்‌) சுட்டிக்காட்டும்‌
போழ்து,
ete eeeeeee துடரிமலைக்‌ காவலனே
பொருநைத்‌ துறையானே: பொதியமலைக்‌ காவலனே
குருகைப்‌ பெருமானே குமரித்துறையானே
என்று கூறுவதால்‌ மிகத்‌ தெளிவாகப்‌ பாண்டிய குலமரபினரில்‌ ஒரு
கிளை திருக்குருகூர்‌ சிற்றரசர்‌ என்று அறியக்‌ கிடக்கின்றது. இருக்‌
குருகூர்‌ நல்லாட்சியின்‌ பொருட்டு,
தென்னர்‌ புகழச்சகத்தோர்‌ பணிகேட்ப
மன்னன்‌ வணங்க மறையோர்புடைசூழப்‌
பேரரசர்‌ ஆன பாண்டியன்‌ இவரைப்‌ புகழ்ந்து கூறினான்‌. மக்கள்‌
இவர்‌ ஆணையை மத்து நடந்திட்டனர்‌. பிற மன்னர்கள்‌ வணங்‌
கினர்‌. அந்தணர்‌ காரிமாறனைச்‌ சுற்றி இருந்தனர்‌. இந்த நிலையில்‌
உள்ள உயர்‌ குடியினரே திருக்குருகூர்‌ மன்னராவர்‌. திருவழுதி
நாட்டுச்‌ சிறப்புகளைக்‌ கூறும்‌ விடத்து அமைந்த தலைவனை
“திருவழுதி நாடன்‌" என்றும்‌ “இருவழுதி நாடான்‌" என்றும்‌ சுட்டிக்‌
காட்டுவது அறியற்‌ பாலதாம்‌.
நீண்ட இடைவெளிக்குப்‌ பின்னர்த்‌ திருக்குறுங்குடிப்‌ பெரு
மாளைச்‌ சேவித்து வணங்கித்‌ தவமிருந்து பெற்ற பிள்ளையாக
நம்மாழ்வார்‌ பிறந்தார்‌.
செவ்விய நல்லார்தமை நோக்கி
எங்கள்‌ குடிக்கும்‌ மிறையோன்‌ பெருங்குடிக்கும்‌
உங்கள்குடிக்கு மொருமகவாய்த்‌ தோன்றினான்‌
என்றும்‌ அரசன்‌ குடிக்கும்‌ பாண்டியன்‌ பெருங்குடிக்கும்‌ தான்‌
பிறந்த திருவண்‌ பரிசாரத்தில்‌ உள்ள பிரபுவான திருவாழ்மார்பன்‌
27
குடிக்கும்‌ நாட்டில்‌ வாழும்‌ குடிகளை ஆண்டு கொள்ள ஒருவனாக
அவதரித்துள்ளான்‌ என ஆனந்தப்‌ பெருக்கினால்‌ கூறினாள்‌.
மிக வலுவான இறையோன்‌ பெருங்குடி என்று கூறுவது
அரச குடியை என்பது தெளிவாக உணரப்படும்‌. மேலும்‌,
வெண்சா மரையிரட்டப்‌
பூசக்கிர வாளப்‌ புவியோர்‌ புடைநிழற்ற
மாசக்கரவாள வண்ண வட்டக்குடை நிழற்ற
என்னும்‌ பகுதியில்‌ வெண்சாமரம்‌ வீசுவதும்‌ வெண்மை
(வண்ணம்‌) வட்டக்‌ குடைகளைப்‌ பிடித்துப்‌
பெருமைப்படுத்துவதும்‌ சொல்லப்‌ பட்டிருக்கின்றது.
வெள்ளைக்குடையும்‌ வெண்‌ சாமரமும்‌ அரச குலத்தவருக்கே
அமைந்ததாகும்‌. கி.பி.17-ஆம்‌ நூற்றாண்டின்‌ இறுதியில்‌ அரசராக
உருவாக்கப்பட்ட சேதுபதிகள்கூடச்‌ செங்காவிக்‌ குடை
உடையவராகவே ஆவணங்களிலும்‌ செப்புப்‌ பட்டயங்களி லும்‌
குறிப்பிடப்படுகின்றனர்‌. ஆகவே நம்மாழ்வார்‌ பாண்டிய அரச
மரபினரேயன்றி வேறு மரபினர்‌அல்லர்‌ என்பது திட்டவட்டமாகத்‌
தெளிவுறும்‌.
திவ்விய சூரி சரித்திரம்‌ என்ற நூல்‌, “நம்மாழ்வார்‌ அரசர்‌
மைந்தர்‌” என்று குறிப்பிடுகிறது. வேறு சமூகத்தில்‌ அரசர்‌ தோன்றி
இருப்பின்‌ அச்சமூகத்தையும்‌ இணைத்துக்‌ கூறுவது தமிழ்நூல்கள்‌
மரபு. ஆனால்‌ திவ்விய சூரி சரித்திரம்‌ அரசர்‌ மைந்தர்‌ என மிகவும்‌
விரிவாகவே சுட்டிக்‌ காட்டுகிறது. நம்மாழ்வார்‌ திருக்குறுங்குடி
நம்பியின்‌அருளாலே பிறந்தவர்‌ என நாம்‌ அறிவோம்‌. அதே ஊரில்‌
பிறந்த சுந்தரம்‌ அய்யங்கார்‌ நிறுவன (சாரிடீஸ்‌) வெளியீடு நம்மாழ்‌
வார்‌ “தாயும்‌ தந்தையும்‌ அரச மரபினர்‌” என்று சுட்டிக்‌ காட்டு கிறது.
கலைக்களஞ்சியம்‌ “ஆண்ட சிற்றரசு குலத்துக்‌ காரியார்‌ என்‌
பாருக்கு உடைய நங்கையார்‌புத்திரராய்‌ நம்மாழ்வார்‌ அவதரித்தார்‌”
என்கிறது.
கி.பி.910-இல்‌ அமைந்த சானூர்கல்வெட்டு புதூருடையான்‌
நம்மாழ்வாரடிகள்‌ என்ற கிராம ஆட்சித்‌ தலைவனை நமக்கு அடை
யாளம்‌ காட்டுகிறது. இதனால்‌ நம்மாழ்வார்‌ இக்காலதீதிற்கும்‌
முற்பட்டவர்‌ எனக்‌ கல்வெட்டால்‌ அறிய முடிகிறது.
வேளாளர்குலச்‌ சிதம்பர கவிராயரால்‌ கி. பி.16-ஆம்‌ நூற்றாண்டில்‌
எழுதப்பட்ட சீவலமாறன்‌ கதை, சீவலமாறன்‌ தென்பாண்டி
நாட்டில்‌ குடியேற்றப்‌ பட்ட அந்தணர்‌ மனைகள்‌ஆயிரத்தெட்டும்‌,
அரசகுலத்தவருக்கு இரண்டாயிரம்‌ குடியிருப்பு மனைகளும்‌
28
வணிககுலத்தவருக்கு எண்ணாயிரம்‌ மனைகளும்‌ சூத்திரராகிய
வெள்ளாளருக்குப்‌ பதினாயிரம்‌ குடியிருப்பு மனைகளும்‌
பஞ்சமராகிய பலபட்டைகளுக்கு இருபத்தேழாயிரம்‌ குடியிருப்பு
மனைகளும்‌ வழங்கினார்‌ என்பதால்‌ அரசகுலத்தவர்‌ என்போர்‌
தனிமரபினர்‌ஆவர்‌. ஆட்சிப்‌ பொறுப்பில்‌ அமைந்தவன்‌ மட்டுமே
அரசன்‌ என்று அழைக்கப்பட்டான்‌ என்ற சிலரின்‌ கருத்தைச்‌
சவலமாறன்‌ கதை எதிர்கொள்கிறது. ஐவர்‌ ராசாக்கள்‌ கதை
பாண்டியன்‌ வள்ளியூர்ப்‌ பகுதியில்‌ பலருக்கு உதவிகள்‌
வழங்கினான்‌; “தாடாள்வான்‌ தம்பிமார்களுக்கும்‌ வழங்கினான்‌”
என்கிறது.
இருவாவடுதுறை ஆ$ீனத்துச்‌ செப்பேடு சிவகாசியில்‌ உள்ள
ஒரு குடும்பத்தைச்‌ சார்ந்தவர்களை நாடாதி நாடாக்கள்‌ என்றும்‌ பிற
பிரிவினரைப்‌ பலபட்டடைகள்‌ என்று கூறுவதும்‌ அறியற்பால
தாம்‌. இச்செப்புப்‌ பட்டயத்தில்‌ இராமநாதபுரம்‌ சீமையின்‌ ஒரு பகு
இயில்‌ வாழ்ந்த நாடார்கள்‌ சேதுபதிகளையோ, அல்லது நாயக்கர்‌
களையோகுறிப்பிடாமல்‌ "சேர சோழ பாண்டிய பூமியில்‌” என்று
கூறுவதால்‌ இச்சமூக மக்கள்‌ மூவேந்தர்‌ தொடர்புடையோர்‌ எனத்‌
துணியலாம்‌. இது போன்று திருநெல்வேலிதூத்துக்குடி மாவட்டத்‌
தின்‌ பல பகுதி ஊர்களையெல்லாம்‌ சீவலமரன்‌ கதை கூறுகிறது.
மேலப்பாட்டம்‌, திருத்து போன்ற ஊர்கள்‌ உழவராகிய வேளாளர்‌
வாழும்‌ இராமங்களாகச்‌ சொல்லப்படுகின்றன. ஆனால்‌
மணப்படை வீடு என்ற ஊரினை “வழுதியர்‌ குலங்கள்‌ வாழும்‌
வீடு தன்னில்‌” எனக்‌ கூறி, பாண்டியர்‌ குலத்தவரை நமக்கு
அடையாளம்‌ காட்டுகிறது அந்த நூல்‌.
தாடாள்வான்‌ குலமும்‌ நம்மாழ்வாரும்‌
தாடாள்வான்‌ ஆகிய திருவிக்கிரமனை அதாவது
விஷ்ணுவைத்‌ தலைவனாகக்‌ கொண்டதே வைணவ மதம்‌.
ஆதிசேடனின்‌ மறு அவதாரமாகவே நம்மாழ்வாரை வைணவ
அடியார்கள்‌ கொண்டுள்ளனர்‌. நம்மாழ்வார்‌ பாண்டியர்‌ மரபினர்‌
என்பதில்‌ யாருக்கும்‌ வேறுபாடு தோன்றியதாகக்‌ கருத
முடியவில்லை. ஆனால்‌ நம்மாழ்வார்‌ அரசகுலத்தவரா அன்றி
வேளாளரா என்ற கருத்து வேறுபாடு பலரிடையே நிலவி
வருகிறது. பிரபந்தத்‌ திரட்டு எனும்‌ நால்‌ விஷ்ணுவின்‌
வழிவந்தவர்கள்‌ அரசகுலத்தவர்கள்‌ என்கிறது. எனவே
தாடாள்வான்குலம்‌ அரசகுலத்தவரே. பல செப்புப்‌
பட்டயங்களும்‌ ஓலைச்சுவடிகளும்‌ ஆவணங்களும்‌
அரசகுலத்தவரைத்‌ தாடாள்வான்‌ குலத்தினர்‌ எனச்‌ சுட்டுகின்றன.
30
புரம்‌ தாலுகா குளஞ்சாவடி இராமம்‌ தெற்குப்‌ பிரகார
சிவராம
அக்ரகாரம்ராமஸ்வாமி சாஸ்திரியர்‌ பெளத்திரர்‌
சாமி சாஸ்‌திரியாரை குலகுருவாக நெகமுகம்‌ செய்து
என்று சிருங்கேரி மடத்து ஜெகத்குருவால்‌ வழங்கப்பட்ட செப்புப்‌
மடம்‌
பட்டயம்‌ கூறுகிறது. அரசருக்கு முடிசூடும்‌ உரிமையுள்ள
சிருங்கேரி என்பதை நாம்‌ மனதில்‌ கொள்ள வேண்டும்‌.
௮ூலத்திரட்டு அம்மானையும்‌ வைணவமும்‌
சோழர்கள்தம்‌ செப்பேடுகளில்‌ திருமாலைத்‌ தம்‌ முதல்வனா
கவே கூறுகின்றனர்‌. தாடாள்வானே அரச சமூகத்‌
தொடர்புடையவன்‌ என்று சுட்டிக்காட்டப்படுதலை
அறிகின்றோம்‌. இதுபோன்று கி.பி.19-ஆம்‌ நூற்றாண்டின்‌
துவக்கத்தில்‌ வாழ்ந்த முடிசூடும்‌ பெருமாள்‌ என்ற முத்துக்குட்டி
சுவாமிகள்‌ சான்றோர்‌ சமூகத்தைத்‌ தாடாள்வானுடன்‌
தொடர்புபடுத்தித்‌ தம்‌ அகிலத்திரட்டு நூலில்‌
சுட்டிக்காட்டியுள்ளார்‌. இ.பி.19-ஆம்‌ நூற்றாண்டில்‌
வைணவத்தைத்‌ தென்பகுதிகளில்‌ வளர்த்த பெருமை இவருக்கு
உண்டு.
இனத்தான்‌ கோயில்‌ என்ற நாராயணசாமி கோயில்கள்‌
இனத்தான்‌ கோயில்‌ என்ற பெயர்‌ கொண்ட வைணவ வழி
பாட்டுக்‌ கோயில்கள்‌ தூத்துக்குடி மாவட்டத்தில்‌ மிக அதிகமான
ஊர்களில்‌ அமைந்துள்ளன. குறிப்பாகத்‌ தண்டுபத்து, சீர்காழி,
கொட்டங்காடு, கச்சினாவிளை போன்ற சான்றோர்சமூகம்‌ உள்ள
ஊர்களில்‌ இவை இருப்பதை அறியலாம்‌. வைணவக்‌
கோயில்களில்‌ இன்றும்‌ நாடாரே வணக்கம்‌ கொள்ளும்‌ நிலையை
இம்மாவட்டத்தில்‌ பார்க்கிறோம்‌. குறும்பூர்‌ ஆதிநாராயணப்‌
பெருமாள்‌ கோயில்‌ நாலுமாவடி நாடாக்களின்‌ வரலாற்று உரிமை
படைத்த கோயிலாகும்‌. இதுபோன்று ஆழ்வார்‌ தோப்பில்‌
விஷ்ணுகோயில்‌ திருவிழாவை இன்றும்‌ நாடார்களே நடத்தி
வருகின்றனர்‌. மூதறிஞர்‌ அருணாசலக்‌ கவுண்டர்தாம்‌ உரை செய்த
முத்திவழி ௮ம்மானையில்‌ ஆழ்வார்‌ தோப்பு என்ற அழகான
நன்னிலத்தில்‌ வாழ்‌ தமிழ்‌ நாடனது வம்சத்‌ திலே உதித்தோன்‌ என்ற
பாடல்‌ அடிக்கு நம்மாழ்வார்‌ குலத்திலே பிறந்தவர்‌ என்று
ஆழ்வார்தோப்பு நாடார்‌ குலத்தவனான நூலாசிரியனைச்‌
சட்டிக்காட்டுகின்றார்‌. இவனைப்‌ பாண்டியன்‌ வழிநாடான்‌ எனக்‌
கருதி இருக்கலாம்‌. ஆகவே இனத்தான்‌ கோயில்கள்‌ என்பன
வைணவ வணக்கம்‌ கொள்ளும்‌ மரபுவழிக்‌ கோயில்களாகும்‌.
31
இனத்தான்‌ கோயில்‌ என்று நாராயணரை வழிபடும்‌ சமூ
கமாகிய சான்றோரைக்‌ கூறுவது எண்ணிடத்‌ தக்கது. இனத்தான்‌
கோயிலைக்‌ கிராம மக்கள்‌ நாராயணசாமி கோயில்‌ என்று அழைப்‌
பார்கள்‌. இனத்தான்‌ கோயிலோடு தொடர்புடைய மற்றொரு
கோயில்‌ இராசாக்கள்‌ கோயிலாகும்‌. ஏறத்தாழ 40 க்கு மேற்பட்ட
ஊர்களில்‌ இனத்தான்‌ கோயில்‌ அல்லது பள்ளிப்படைகளில்‌,
ஐவர்ராசா வணக்கம்‌ அல்லது பாண்டியர்‌ வணக்கம்‌ உள்ளது.
தாதன்‌ கூட்டத்து வைணவச்‌ சான்றோர்‌
தூத்துக்குடி மாவட்டம்‌ பேரிலோவன்பட்டி,
கோவில்பட்டி, சேமப்புதூர்‌ வாழும்‌ தாதன்‌ கூட்டத்து நாடார்கள்‌
வைணவர்களின்‌ சிறப்புடையவர்கள்‌. இது போன்று விருதுநகர்‌
மாவட்டம்‌ சிவகாசி, விளாம்பட்டி, தேனியிலும்‌ வாளும்‌
நாடார்களில்‌ சிறந்த வைண வர்கள்‌ உண்டு. இன்று வரை திருமால்‌
வணக்கத்தைத்‌ தொடர்ந்து நடத்துவதும்‌ புரட்டாசி மாதம்‌ விரத
நோன்பும்‌ புலால்‌ மறுத்து உண்டு வாழும்‌ சீரிய பழக்க
வழக்கங்களையும்‌ இவர்கள்‌ கொள்வர்‌. சான்றோர்‌ குலமக்களைப்‌
போன்று வேளாளர்‌ யாரும்‌ இத்தகைய வைணவராக
இம்மாவட்டத்தில்‌ உறுதியாக அமைந்திடவில்லை.
நம்மாழ்வார்‌ என்ற பெயரை நாடார்கள்‌ வைத்துக்‌ கொள்ளும்‌
வழக்கு இம்மக்களிடையே காணப்படுகிறது. ஆனால்‌ வெள்ளாளர்‌
தம்மைச்‌ சைவ பிள்ளைமார்‌ என்று உரிமை பாராட்டிக்‌
கொள்வதிலும்‌ வெள்ளாளர்களில்‌ தம்மை உயர்ந்தோர்‌ என்று
பெருமை கொள்வதிலும்‌ இன்றும்‌ சைவத்‌ தொடர்பை வலுவாக்கி
வாழ்வதையும்‌ இம்மாவட்டத்தில்‌ காண முடிகிறது.
பூதாரில்‌ வந்துதித்த புண்ணியனோ
பூங்கமழும்‌ தாதார்மகன்தான்‌ இவனோ
தூதுவந்த நெடுமாலோ இம்மூவரில்‌
மணவாள மாமுனிகளில்‌ இவர்‌ யார்‌?
என்பதில்‌ தாதர்‌ குறிப்பிடப்படுகின்றனர்‌.
நம்மாழ்வாரும்‌ நாமும்‌
தூத்துக்குடி மாவட்டத்தில்‌ ஏரல்‌ சேர்மன்‌ அருணாசல சுவாமி
கோயிலின்‌ அருகே அமைந்த திருவழுதிநாடான்‌ விளை என்ற ஊர்‌
சான்றோர்கிராமமாகும்‌. இவ்வூரில்‌ பிறந்த இராசகோபால்‌ நாடார்‌
நம்மாழ்வாரும்‌ நாமும்‌ என்ற நூல்‌ எழுதியுள்ளார்‌. இந்நூலில்‌
நம்மாழ்வார்‌ என்ற ஆழ்வாரின்‌ மரபினர்‌ நாடார்களாகிய
தாமேயென இயற்கைச்‌ சான்றுகளை எடுத்து விளக்கியுள்ளார்‌.
இவ்வூரில்‌ நம்மாழ்வார்‌ பெயரால்‌ இவரது குடும்பத்தினர்‌
பாடசாலை நடத்துகின்றனர்‌.
32
மகர நெடுங்குழைக்காதர்‌ வழிபாடு
நெடுங்‌
தூத்துக்குடி மாவட்டத்தில்‌ தென்திருப்பேரை மகர
நாடார்களுக்கு
குழைக்காதர்‌ கோயில்‌ திருவிழாவில்‌ திருமலாபுரம்‌
முதல்‌ மரியாதை இன்றும்‌ செய்யப்படுகிறது. தென்திருப்பேரை,
அய்யங்‌
ஆழ்வார்திருநகரி போன்ற ஊர்களில்‌ வாழும்‌ தென்கலை
கார்கள்‌ தம்மை அரச மரபினர்களிலிருந்து அந்தணராக மாறியோர்‌
எண்ணத்‌
என்றும்‌ நாடார்களாக இருந்தவர்‌ என்றும்‌ கூறுவது
தகுந்தது. குழைக்காதர்‌ என்று அழைத்துக்‌ கொள்ளும்‌ தென்கலை
அய்யங்காரையும்‌ நாடார்களையும்‌ இன்றும்‌ பெயர்‌ வழக்கில்‌
காணலாம்‌.
இதுவரைகூறப்பெற்ற கருத்துகளிலிருந்து, நம்‌்மாழ்வார்‌௮ரச
குலத்தவர்‌ என்றும்‌ பாண்டிய அரச மரபினர்‌என்றும்‌ பிற அறிஞர்கள்‌
ஒத்துக்கொள்வதும்‌ தூத்துக்குடி மாவட்ட நாடார்களுக்கு அரச
அந்தஸ்து இருந்ததற்கான வரலாற்றுச்‌ சான்றுகளும்‌, அம்‌
மாவட்டத்தில்‌ நாடார்களே வைணவ வழிப்பாட்டுடன்‌,
நம்மாழ்வாரின்‌ நாமமும்‌ பெற்று வருபவர்களாயிருப்பதற்கான
சான்றுகளும்‌, சைவத்தைக்‌ கடைப்பிடிக்கும்‌ வெள்ளாளர்‌
தூத்துக்குடி மாவட்டத்தில்‌ எவ்வாறும்‌ நம்மாழ்வாரோடு
தொடர்புபடார்‌ என்றும்‌ அறிந்து கொள்ளலாம்‌.

ஈரோடு மாவட்டம்‌ அவல்பூந்துறை செல்வ இரத்தின


அந்தணக்‌ குருக்கள்‌ தம்மிடமுள்ள சான்றோர்‌ செப்புப்பட்டயத்தைக்‌
காட்ட, இருமருங்கிலும்‌ முறையே தொழிலதிபர்களான
இரு.ஞானப்பால்‌ அவர்களும்‌ திரு.செல்வமும்‌ உள்ளனர்‌
நம்மாழ்வார்‌ வாழ்வும்‌ ஷாலாறும்‌
(சான்றாதாரம்‌)
நாலாயிரத்‌ திவ்னியப்பிரபந்தம்‌, திருவாய்வமாழி
“திண்தோள்‌ மாலை வழுதி வளநாடன்‌"
-திருவாய்மொழி3177
“நெடியான்‌ அருள்சடும்‌-படியான்‌ சடகோபன்‌
- படிதொட - பாண்டியன்‌"
- திருவாய்மொறி௦428
“பெருநல்‌, சங்கணிதுறைவன்‌ வண்தென்குருகூர்‌
வண்சடகோபன்‌ சொல்‌”
-மேறி.படி 3208
“வழுவில்லாவண்குருகூர்ச்சடகோபன்‌”
- மேற்படி ௮40
“மேவிநன்கமர்ந்த வியன்புனல்‌ பொருநல்‌
வழுதி நாடன்ச௪டகோபன்‌
நாவியல்‌ பாடல்‌ ஆயிரத் துள்ளும்‌"
- மேற்படி ௮2
"கொடிமதில்‌ தென்குரு கூர்ச்சட கோபன்சொல்‌"
- மேற்படி 489
“மதில்குரு கூர்ச்சட கோபன்‌ சொல்‌”
- மேற்படி 2979
“அந்தண்‌ குருகூர்ச்சடகோபன்‌”
- மேற்படி 2908
“பெரியவண்‌குருகூர்‌ வண்சடகோபன்‌”
-மேற்பழு 2804

அடையாறு தமிழ்ச்‌ சங்கத்தில்‌ (07.02.2010) ஞாயிறு காலை 10.00


மணிக்கு இந்திராநகர்‌ இளைஞர்‌ விடுதியில்‌ நெல்லை
நெடுமாறனின்‌ சொற்பொழிவன்று வழங்கப்பட்ட கட்டுரை இது.
34
ண. மொய்புனல்‌ பொருநல்‌
துகில்வண்ணத் தூநீர்ச்‌ சேர்ப்பன்வண்‌ பொழில்சூழ்‌
வண்குரு கூர்ச்சட கோபன்‌”
-மேறிபடி 2762

“வாய்த்த வழுதிவள நாடன்‌ மன்னு


குருகூர்ச்சடகோபன்‌”
-மேற்படி 29
“தலிவயல்‌ தென்னன்‌ குருகூர்த்‌
காரிமாறன்சட கோபன்‌”
-மேற்படி 2242
“வண்குரு கூர்நகரான்‌
நாட்க மழ்மகிழ மாறல மார்பினன்‌
மாறன்சடகோபன்‌
வேட்கையால்‌ சொன்ன பாடல்‌ ஆயிரம்‌”
- மேற்படி 2522
“வழுவாத தொல்புகழ்‌ வண்குரு கூர்ச்சடகோபன்‌ சொல்‌”
-மேற்‌. படி 2279
“வாரி மாறாத பைம்பூம்‌ பொழில்சூழ்‌ குருகூர்நகர்‌
காரி மாறன்சடகோபன்‌ சொல்லாயிரத்‌ இப்பத்தால்‌ ”
-மேற் படி. 204
“தென்னன்‌ குருகூர்ச்சடகோபன்‌”
- மேற்‌. படி.22௫'
“பண்கொள் கோளல்‌ வழுதஇிநாடன்‌
குருகைகோன்சட கோபன்‌ சொல்‌”
-மேர்படி 2369
“குருகைவரோதையதிரு மகிழமார்பன்‌”
- 22 த.ம்மாழ்வார்பிள்னைதத.மிழ்‌, 45
“குருகை வரபது”
-மாறன்பிள்ளைத் தமிழ்‌, பாடல்‌-வி
“சீர்கொண்ட மணிமாடங்‌ திகழ்‌ குருகூர்நங்கை
திருவயிறுவாழ வந்த திருக்குழலி மாறன்‌. "
மாறன்பிள்ளைத் தமிம்‌ பாடல்‌-,42
35
“சமயவரோத்தம வுபயகுலோத்தம”
-நம்மாழ்வார்பிள்ளைத்தமிழ்‌ -தாலப்‌ பருவம்‌-30
"தடவுகொடி மதினாட்டிய குருகை வளமலி
நாட்டேமர்கோவேதாலோதாலேலோ
தமிழின மறைமொழி பாட்டிடை பரம
பதநெறி காட்டிய வாழ்வே தாலோ தாலேலோ.”
- மேற்‌. பழி படல்‌-3
"குலமறை தமிழ்ச்செய்த குருகைய ரதிபதி”
-மேற்படி, பாடல்‌-அ8
“பூண்மகரங்‌ கழைதோளசையப்‌ புரிநூலசையச்‌ சிறுபொற்‌
கொண்டையின்‌ மாளல்‌ குலைந்தசையும்படி கொட்டுக
சப்பாணி
குருகைவரோதைய திருமகழ மார்பின கொட்டுக
சப்பாணி”
-மேற்படி209

“மாறன்‌ செந்தமிழ்‌ வீறன்‌”


மேற்படி

அந்தணரை எடுத்தோதி அரசகுலத்தவரைக்‌


குறிப்‌்பிடும்போழ்து நம்மாழ் வாரின்‌ பெயர்க ளை எடுத்தோதுகிறார்‌.
இதன்பின்னரேஅரசர்க்கு வழங்கும்‌ பெயர்களைக்குறிப்பிடுகிறார்‌.
“இருவாய்மொழிப்‌ புலவ குருகைநகர்க்கிறைவ*
-மேற்படி43

“குருகை நாட்டவர்கோவே"
ப்ரடல்‌-37- மேற்படி

“தாரி மன்னன்‌ பாலன்‌” “மாறன்‌”


-நாமதீபநிகண்டு எண்‌-38
ஆசிரியர்‌: சிவசுப்பிரமணியக்‌ சுவிராயர்‌.
“ஆழ்வார்கள்தம்பிரான்‌”
-அம்புலிப்‌ பருவம்‌ பக்‌ 83
(நம்மாழ்வார்பிள்ளைத்தமிழ்‌)
36
“குருகை நாதன்குளரகழ்‌ காப்பதே”
-2.ம்பரராமாயணம்‌- காப்புச்‌ செய்யுள்‌.
தருக்குருகூரில்‌ அவதரித்த தலைவராகிய நம்மாழ்வாரது
ஒலிக்கின்ற வீரக்கதழலை அணிந்த இருவடிகளேகாப்பாகும்‌.
“சரார்பொருணைத்‌ திருநாடனுன்றந்தை "
-அரிசமயதிீபமம்‌ 2 GTN GIF FOGBBLD L117. 26
“கோதிலா மாறனென்று வகுத்தன்‌
நாமமே”
-மேற் படி - பர. 27
“தமிழ்வேதநூல்‌ பாராயணாசடகோபா"”
-காப்புச்‌ செய்யுள்‌ திருவேங்கட மாலை.
(பாராயணா- வேதம்‌ முழுதும்‌ அறிந்தவர்‌)
“சோதிக்குமே உங்கள்‌ வேதம்‌ எங்கோன்தமிழ்‌ சொல்‌
எனவே
- சடகோபர்அற்தாதி செய்யுள்‌.
த உறுவினையைக்‌
கொய்யும்‌ மெய்வாள்‌ வலவன்‌ குருகைக்கு அரசன்‌ புலமை
செய்யும்‌ அய்யன்‌...... ”
-செய்புன்‌-37சடகோபார்‌ அந்தாதி,
குருகை மான்மியம்‌

தேனிவர்பைந்தார்வழுதி கழவன்மர
பினுக்கிவனோர்திலக மாமே”
- திருமுடிய/டைவச்சருச்சமம்‌ (பார. 2777]
“திலகமாவது- யாவர்க்கும்‌ மேலாம்‌ தன்மை” - பரிமேலழகர்‌,
“சுருதிப்‌ பனுவற்‌ றொகையுணர்ந்த
தூயோன்‌ மணஞ்செய்‌ திருமனைக்கு”
- திரு. மணச்சருக்கம்‌ 72(பார. 2975]
“வழுதியாற்‌ புனிதர்திரு வழுதிவள நாடெனப்பேர்‌
மதிப்பதாமே
-2. தாடி வாழ்தீதுச்சருக்கம்‌ , மேற்படி
37
“ஒருவழுதி யெனமுதலே யிந்துகுலத்‌
துதித்தவனென்றுலகம்‌ போற்றப்‌
பெருவழுதி மரனிற்கூன்‌ செழியனருந்‌
தவம்பெருக்கிப்‌ பெற்ற கொற்றந்‌
தருவழுதி யொருவன்வழிப்‌ பொருப்பின்மணி
விளக்கெனவேதகைசாலிந்தத்‌
திருவழுதி கிழவனருட்‌ புதல்முத
லவர்தாமஞ்‌ செப்ப லுற்றேன்‌”
- திருமுடியடைவுச்சருக்கம்‌. 6.பார. 2762
தொடர்ந்து நம்மாழ்வாரின்‌ குலத்தார்‌ பட்டியல்‌
சொல்லப்படுகிறது.
“அறந்தாங்கியார்‌, போர்க்கழியார்‌”
“மையார்கருங்கட்‌ செங்களிவாய்‌
மடந்தை மரபிற்‌ சிறந்தாருந்‌
துய்யானுயர்வண்‌ புகழ்காரி
தொன்‌..... மரபிற்‌ சிறந்தாரும்‌”
-பெண்‌ பேசு சருக்கம்‌, 470
“நுண்ணிய மறைகளுண்மை நுழைபுல வியர்தாஞ்‌ சொன்ன
புண்ணிய புராணங்‌ கற்ற புலமையிற்‌ கணித நூல்கற்‌
றெண்ணிய சடங்கர்தாமு மிளங்கதிர்பொருவுஞ்‌
செம்பொன்‌
வண்ணவொண்‌்௫விகைமீதே மறைவர்குழாத்திற்‌
சென்றார்‌”
- 61 Up FF FGEBLD, 2IK3

“காமர்பூண்‌ வனப்பிற்‌ பூண்டு கவுட்கடாக்‌ களிற்றின்‌ முத்தின்‌


றாம வெண்குடை சழ்ச்செய்ய தண்கதிர்விரிக்குஞ்‌ சான்றோ
னேமநீ ரருவி வெற்பி லிந்துமேல்‌ வரவே வந்த தாமென
வெழுந்தான்‌ காரியெனப்புக ழறிஞர்‌ கோமான்‌.
- மேற்பட - 2854
“மறைமொழி முதல்வர்‌ மன்னவர்‌ வணிகர்‌
மற்றையோர்‌ யாவரு மகிழ்ந்து
நறைமலர்க்‌ குழலாள்கடிமணம்‌ பயினா
ளாளையென்‌ பதுமனத்துணர்வான்‌”
- இருமணச்சருக்கம்‌, பர, ௮08
38
நான்மறை முழுதும்‌ உணர்கின்ற மறையவர்‌ போர்க்கழியார்‌
காரிமாறன்‌, தங்களின்‌ முன்னோர்‌, உறவினர்கள்‌ எல்லாம்‌ திருமண
மண்டபம்‌ உள்ளே சென்றனர்‌ “இருக்குலத்தமா” என்று உறவினர்‌
குறிக்கப்பட்டனர்‌.
- பர. ௮9-02

“தாரியெனப்புகழ்‌ அறிஞர்‌ கோமான்‌”


(புகழையுடைய சான்றோர்பெருமகன்‌/
- 2054

“செல்லுமுத்தமநற்‌ றமரென சிறந்த


சேனைகர வலரு மெண்ணிலரே"
~LINT 2226

சூரிய ஒளிவீசும்‌ வில்லும்‌ வாழும்‌ வேலும்‌ ஈட்டியும்‌


கொண்ட காவலர்கள்‌ காரியென்னும்‌ அரசனுடைய உறவுள்ள
வீரர்கள்‌ சென்றனர்‌.
(பா.2220/ மங்கல
தனக்கு நிகரான குலத்தவர்‌ எவருமில்லையெனப்‌ புகழ்பெற்ற
காரியென்னும்‌ மன்னன்‌ மணம்‌ செய்யத்‌ திருவெண்‌ பரிசாரம்‌
செல்லும்‌ போழ்து என்‌ ஏவலின்‌ &ழ்‌ வாழும்‌ படை வீரர்‌ யாவரும்‌
எனக்கு முன்னே செல்க என்று ஆணையிட்டான்‌.
- ஏழுச்சிச்சருகக.ம்‌ பா-,3247
முத்துப்‌ பல்லக்கில்‌ மயில்‌ போன்ற சாயலுடைய மகளிரோடு
பொற்குண்ணத்தில்‌ அமுதருந்தி அவரவர்க்குரிய வாகனங்களில்‌
சென்றனர்‌.
- மேற்படி, பா
ஆண்‌ யானை பெண்‌ யானையின்‌ மேலமர்ந்த ஆசனத்திலும்‌
முத்துப்‌ பல்லக்கிலும்‌ கொடி மணித்தேரிலும்‌ குவளைக்‌ கண்‌
கொண்ட மங்கையருடன்‌ காளையர்‌ சென்றனர்‌.
- மேற்படி, பா-22
“ஆடல்‌ மங்கல கணிகையரும்‌ பாடும்‌ விறலியரும்‌
முன்னே சென்றனர்‌.
39
முத்துப்‌ பல்லக்கில்‌ ஏறி வெண்மதியின்‌ உச்சியைத்‌ சண்டி
அதன்‌ வழி வந்த பண்டை மன்னர்‌ வழி பாலகன்‌ காரி மன்னனின்‌
மணநாளைக் கண்டு மகழ்ந்திடச்‌ சென்றனர்‌.
2231

மன்னனின்‌ தேரின்‌ பின்னே நிகரில்ல ஒப்பற்ற வீரர்சென்றனர்‌.


2245

வெண்கொற்றக்‌ குடைக்‌ 8ழ்‌ அமரும்‌ காரி மன்னனின்‌ பின்‌


சென்ற ஆடவரும்‌ மகளிரும்‌ எண்ணற்றவர்‌.
2448
வேத விற்பன்னரான புராணம்கற்ற புலமையுள்ள மறையவர்‌
குழாம்‌ பொன்னிறச்‌ சிவிகைகளில்‌ சென்றனர்‌.
Lui, 320
அழகிய அணிகலன்‌ அணிந்த மதம்‌ பிடித்த பட்டத்து
யானையின்‌ மேல்‌ அமைந்த வெண்‌ கொற்றக்‌ குடையின்‌ &ழ்க்‌
கஇிர்போல்‌ ஒளிவீசும்‌ சான்றோனாகிய காரி வானில்‌ ஒளிவீசும்‌
சந்திரனைப்‌ போல்‌ விளங்கினான்‌.
47; 424
புகழ்‌ அறிஞர்‌ கோமான்‌, மறைமொழி முதல்வர்‌, மன்னவர்‌,
வணிகர்‌ மற்றையோரும்‌ மகிழ்ந்து மலர்‌ போன்ற கூந்தலையுடைய
உடைய நங்கையின்‌ மணநாளை யானையின்‌ மீது அமர்ந்து முரசு
அறைக என்று நன்மரபிலே பிறந்த திருவாழ்‌ மார்பன்‌
ஆணையிட்டான்‌.
மூன்று முரசும்‌ மூவலத்திலும்‌ மேகத்தின்‌ இடி போன்று
முழங்க முத்தொளி வீசும்‌ மணவாளன்‌ காரியும்‌ பொற்‌ கொடியான
உடையநங்கையும்‌ ஆசனத்தில்‌ அமர்ந்தனர்‌.
LUT. 2024

“மைந்தனை பயந்த உத்தமர்‌ கோமான்‌ ”


பா ௮௧

“மண்டபத்‌ திருகுலத்‌ தமர்களுஞ்‌ செறிவுற்றே ”


பா. 2X2
இருகுலத்தமர்‌ என்பார்‌ சூரிய சந்திர குலத்தவராவார்‌.
40
“இகழ்வெண்‌ சாந்தால்‌, அண்ணலார்‌ மார்பினை
மறைத்திட்டார்களே”
Lit. 2335
உடைய நங்கை திருவாழ்‌ மார்பன்‌ திருமகள்‌ என்று அழைக்கப்‌
பெற்றாள்‌.
“மணவினை புகுந்த செல்வ
மைந்தனுந்‌ தள்ளவு ஈன்ற
விணர்மலர்க்‌ குழலி னாடன்‌
னிணையடி யிறைஞ்சக்‌ கண்டே”
பர. 2361
“தருவாழ்‌ கொடைப்‌ புண்ணியன்‌”
Lift, 2357
“விண்ணிறைந்த புகழ்குரவர் முதலாம்‌ வேத
வேதியர்க்கு மிருந்தியம்‌ வியப்பி னீந்தார்‌.
LUT. D385
“பெருங்குலத்‌ தொன்மை சான்ற
பெருங்குடிப்‌ பிறந்த பெண்ணிற்‌"
LT. 2182
காமனைப்‌ போன்ற அழகு பெற்ற மன்னன்‌ காரியின்‌
செங்கோன்மையும்‌ உடைய நங்கையின்‌ அழகையும்‌ புகழ்ந்தார்‌.
00
கதிர்போன்ற சிவிகை மீதேறி வீரர்கள்சங்கும்‌ முரசம்‌ முழங்கச்‌
சந்திரனைப்‌ போன்ற கொற்றக்குடையைக்‌ கொண்ட மாளிகையை
அடைந்தார்‌.
Litt, 2432.
நால்வகைப்‌ படையும்‌ புடை சூழ வெண்
கொற்றக்குடையுடைய பல்லக்கில்‌ அமர்ந்து சென்றான்‌.
Lit, 2446
குறைவிலாப்‌ பழங்குடியில்‌ பிறந்த குலத்திற்கே உரிய
இளமை பெருமையுடன்‌ அழிவில்லாத தூய செல்வச்‌ இறப்புப்‌
பெற்ற உலகம்‌ போற்றும்‌ கல்வியிற்‌ சிறந்து நன்றாக ஆராய்ந்து
உணர்ந்த உணர்வுடையவரைப்‌ போலப்‌ பெருமை பெற்றவர்களின்‌
இணையற்ற தலைமைக்‌ குலத்தில்‌ தோன்றியவளுக்கு உரியவன்‌
காரிமாறன்‌ என்று உணர்ந்தனர்‌.
பா. 427/2
41
“குன்றாப்‌ பழமைக்‌ குடிப்.பிறந்த
குலப்பண்‌ பிளமை ஈீர்மையுடன்‌
பொன்றாப்‌ புனித இருவுடமை
புவனம்‌ புகழ்கல்‌ வியின்றுறைபோய்‌
நன்றாய்த்‌ துணர்ந்த வுணர்வினொடு
நமர்போற்றமர்பற்‌ பலருளரா
லொன்றாந்‌ தலைமைத்‌ தெமதுகுலத்‌
துதித்தாட்‌ கவனென்‌ றுணர்ந்தனராய்‌.
- பெண்பேசும்‌ சரகம்‌. பார-,2872
“போர்க்கழியார்‌ பெருந்திருவிற்்‌ களகயர்்‌ கோன்‌
பெருந்திருவும்‌ புன்மைத்தாமே”
4/7: 2773
“கூற்றவனிற்‌ கொலைபயில்வன்களிற்றினிற்கொய்‌
யுனைப்பரியிற்‌ கொடித்திண்‌ டேரின்‌
மாற்றமுறச்செருக்களம்புக்‌ ககல்விளைப்போர்‌
போர்க்கழியா மரபினாலும்‌
போற்றியவைம்‌ பொறிவழிபுன்‌ புலன்விளைக்கும்‌
போர்க்கழியாப்‌ புரைநீர்‌ ஞானந்‌
தேற்றமுறுந்‌ திறத்தாலும்‌ போர்க்கழியா
ரெனப்புணர்பேர்சிறந்த தன்றே”
-மேற்‌. படி, பர. 277
தொல்குலத்தவர்‌ பட்டியலிடும்‌ போழ்து இருகுலத்து உதித்த
மூவர்‌ என்று தமிழ்‌ வேந்தர்குடியினரான சேர, சோழ, பாண்டியரைக்‌
குறிப்பிடுகின்றார்‌.
- குருகைமான்மியம்‌ L422 HEB UMPSE/F
FG EBL
“விற்கையான்‌ மேருவினிற்‌ பொறித்தவன்போர்‌
வேங்கையைப்‌ பொறித்தவன்்‌கயலை
நற்கையாற்‌ பொறித்தோ னெனுமிவர்க்‌ குரிமை
நகர்கடாம்‌ வஞ்சியும்‌ புகாரும்‌ கொற்கையும்‌.
-மேோற்‌ பரு பார. 420
“முத்தியை விளைத்தற்‌ இருசுடர்‌ மரபின்‌ மூவராதியரென*
Lit. 444
இருசுடர்மரபு மூவர்‌ஆதியர்‌ “ஆறிலொன்று” இறை பெறுகிற
மன்னர்‌
-குருகைமான்மியம்‌, பா..457
(அகதகர்வாழ்தீதுச்சரகக.ம்‌/
42
“மூளைத்‌ தெழு புற்‌ குலம்‌ யாவை யும்யாரு
நித்தரொடு முத்த ரென்றே
இளைத்‌ தெழுமாதவர்புகழித்‌ இருநகரைத்‌
தமிபுரந்தே திசையோரெட்டும்‌
வளைத்‌ தெழுமான்‌ புடைத்திகரிப்‌ பிடரினுமு
தண்டத்தும்‌ வானி லாவிற்‌
களைத்‌ தெழும்வண்‌ புகமனானள்‌ பெருநாமந்‌
திருவழுதி கிழவனாமே”
-திருமுடிய/டைச்சரு£2௪.ம்‌, 17.2158
உலகில்‌ தோன்றிய இழிகுலத்தோர்‌ முதலாக நிலையான
வாழ்வு பெற்று முக்தி பெற்றவரும்‌ தவம்‌ செய்வோரும்‌ போற்றிப்‌
புகழ்‌ பாடும்‌ திருநகரைத்‌ தனியாகக்‌ காத்தவரும்‌ எட்டுத்திசையிலும்‌
தன்‌ஆணைச்சக்கரத்தில்‌ செலுத்தி வரும்‌ சந்திர குலத்தில்‌ தோன்றிப்‌
புகழ்‌ பெற்ற திருவழுதியர்‌ திரு நாமத்தை உடைய தலைவர்‌.
ஒப்பற்ற வழுதியென இந்து குலத்தில்‌ உதித்தவன்‌ என்று
உலகம்‌ போற்றப்‌ பெருவழுதி மரபில்‌ தோன்றிய கூன்‌ பாண்டியனின்‌
வழித்‌ தோன்றி மலையில்‌ தோன்றிய மாணிக்க விளக்கைப்‌ போலப்‌
புகழ்‌ பெற்ற திருவழுதித்‌ தலைவனின்‌ அருள்‌ புதல்வன்‌ முதலாக
அவர்பெயரைக்‌ கூறுகின்றேன்‌.
2162
கூற்றுவனைப்‌ போலக்‌ கொலைத்‌ தொழில்‌ புரியும்‌
வலிமையான ஆண்யானையிலும்‌ பிடரிமயிர்‌ உடைய
குதிரைகளிலும்‌ கொடிகள்‌ அசையும்‌ வலிய தேரிலும்‌ போர்க்களம்‌
புகுந்து வெற்றிப்‌ போர்‌ செய்வோர்‌ போரில்‌ வீழ்ச்சி அடையாத
மரபினாலும்‌ உயர்ந்த ஐம்புலன்‌ அறிவுடன்‌ குற்ற மற்ற போர்‌
செய்யும்‌ அறிவுத்திறத்தாலும்‌ போர்க்கழியார்‌ மரபினர்‌ இறந்து
விளங்கினர்‌.
-திருமுழ அடைவுச்சருக்கம்‌, பர..27௪
“அறத்தின்‌ வழி வழுக்காது வளையாச்‌ செங்‌ கோலோச்சியது
போற்‌ பின்னு
மறத்தின்வழி வழுக்காது செறுநரைத்தேய்த்‌ தருள்பொழிய
மன்னன்‌ கோயிற்‌
புறத்துளமுக்‌ குடிபோல வசைதீரத்‌ தழைத்து பொப்‌
புறஞ்சார் மூன்று
திறத்தின்‌ வகைப்‌ பைங்கூழுந்‌ தங்கடொறும்‌ *
புபல்பொழியச்சிறந்த மன்னோ"
- தாடி வாழ்ததுச்சருககம்‌, பா..32
“சதிருடையுத்‌ தமப்புனித ரடித்துகள்‌ பொன்‌ முடிபொறுத்த
தக்காரெய்து”
-மேற்படி, 17.93
அறத்தில்‌ வழுவாமல்‌ வளையாச்‌ செங்கோலாட்ச செய்து
மறத்தில்‌ வழுவாமல்‌ பகைவரைஅழித்து மக்களுக்கு அறம்‌ செய்யும்‌
மன்னவரின்‌ அரண்மனையைச்‌ சுற்றியுள்ள மூன்றுகுடி, போன்று
குற்றமில்லாமல்‌ ஒழித்து வயல்‌ வெளிகளில்‌ மூன்று போகமும்‌
விளைவித்து மாதம்‌ தவறாமல்‌ மழை பொழிய நாடு செழித்துச்சறந்து
ஓங்கியது.
“நவையறுதன்‌ மரபிலுத்துலகை யாண்ட
நரபதிக ளிவை குமரர்‌ கெனவே வைத்த”
-அண்டவுற்பத்திச்சருக்கம்‌, பா. 1058
நவையறு - குற்றமில்லாத
“நாடுகாவல்‌ நரபதிக்கு உரித்தே"
- மாறன்அசப்பொருள்‌ சூதீதிராம்‌, பார. 25
“நிலந்திருவி னொடு தழைய உலகை யாண்ட
நெறிநினைந்து இிறையளிக்கு நிலைமை வேந்தர்‌”
- HOVTL_YDBLIGZ
GIF FUGEBLD 1039
“கொலைபடு பழிக்கஞ்‌ சாத குறும்பராற்‌ குலத்திற்‌”
-மேற்பூ பா. 1048
முப்புரிநூலும்‌ செம்பொன்மகிழ்மாலை மார்பும்‌ சடகோபன்‌
சந்திரகலா மாலை.
“வழுதி பெருமான்‌”
72,பணவாளமாமுூனி

நூற்றெட்டுத்‌ திருப்பதி அகவலும்‌,


திருவுடை மன்னரைக்‌ காணில்‌
திருமாலைக்‌ கண்டேன்‌”
இருவாய்மொழியும்‌ கூறுகின்றன.
பர; 2552
44
“கண்ணன்‌ எம்‌.ரிரான்‌ எம்மான்‌
சடகோப இவ்விய சரித்திரம்‌”
-மேப்படி, பா. 220

“மருமலரு நிம்பமணி மதர்நெடுத்‌ தோண்‌ மன்னர்‌”


-திருக்குறுங்குடி படலம்‌49
“கொற்ற வெண்குடைக்‌ கோமான்‌ காரி”
- பாண்டி தாட்டுதீதிரும்பதிப்‌ படலம்‌.19
பகையரசர்களுடைய மணிமுடிகள்‌ மணம்மிக்க
வேப்பப்பூமாலை அணிந்த “மருமலர்நிம்பத்‌ தொடையணி தென்ன
வரோதையனாங்‌ குருகுல வங்கை படையுறு காரி குமாரனரு
ளருமறை யின்சொற்‌ றமிழ்‌ பெற வுன்னி யடைந்தனனாற்‌ றிருமக
ளன்பன்‌ வரகுண மங்கைத்‌ திருமாலே”
- மேற்படி நூற்றெட்டுத்திரு.ப்பதி.ப்படலபம்‌௧7
“தோட விழும்‌ நிம்பத்‌ தொடை சூழ்‌ வழுதியர்‌ முன்‌”
-மேற்படி, 1111.87
நம்மாழ்வாரின்‌ முன்னோன்‌ பற்றி “மணிமுடி வழுதிவேந்தர்‌
கோன்‌”
-திருவவதாரார்படலம்‌ உடகோபதிவ்ய அரித்திரம்‌ பா. 47
“மீனவன்‌ குல வேந்தன்‌"
-தரமதேயப்படலம்‌.2
“"நல்நீதியால்‌ உலகோச்சும்‌ நிருபன்‌”
-மேற்படிசி
“மீனவன்‌ மரபிற்‌ தோன்றும்‌ வேந்தனுக்குரிய சேயாய்‌"
-வரம்‌ வேண்டும்‌ படலம்‌
“....தீமிழ்‌ புனைந்து நர
வீரனாரு மெய்பரன்‌ தனக்கவன்‌ குலப்‌ பெயர்‌
மாறனென்று நாமமன்‌ வரோதயன்‌ வழங்கினான்‌”
-தாமதேயப் படலம்‌, பா.
“தங்குல புரோகிதன்தளை”
“மேற்பட, பா.
“நீதி நூலிலோது நேமகப்படி
நலம்படியே சடங்கினை நடத்தியபின்‌”
- மேம்‌ படடி 27
“நிலம்தனி புரக்கும்‌ புரவலன்‌” *
- திருமதுரசவி..படலமம்‌.27
“இந்த வாறிரு நிலந்‌ தனி புரந்தரு விறையோன்‌
சஞ்ச மாமுடி மன்னவன்‌ சாற்றின விற்ப”
-திரு.மதுரகவிப்‌ பலம்‌ 44
கலியன்‌ என்ற திருநாமம்‌ பெற்ற பரகாலன்‌ எனும்‌
திருமங்கையாழ்வாரை நாலாம்‌ வருணத்தவர்‌ என்று வருணனை
செய்கிறது.
“கன்னவில்‌ புயன்‌ வழுதி மன்னர்‌ மர புற்றோம்‌ காரி மக
ராசன்‌”
“அரசன்‌ மைந்தன்‌ காரியே
- நம்மரழ்போர்கிவ்யசூ.ரிசரித்திறாம்‌ தம்மாழ்வார்வைபவம்ச
“பழுதி ஏலண்டிசையோர்புகழ்‌ பண்றர
வழுதி மன்னர்‌ மரபிலுதித்தயான்‌”
-சடகோபதிவ்ப சரித்திரம்‌ வரம்‌ வேண்டு கோட்‌. படலம்‌ 79
“தங்கள்‌ மரபிற்‌ தோன்றித்‌ இரைநெடு நேமியாண்ட
பொங்குவேல்‌ வழுதி மன்னர்‌”
- மேற்‌. படி, பார..22
“வேத மோதிய வேதியருந்தவப்‌
போத ஞானப்‌ புனிதரும்‌ போந்து போன்‌
தோது மன்னவர்க்குற்ற சடங்‌ கெலா
மாதந்‌ தோறு மடவாற்‌ காற்றினார்‌”
-சடகோபதிவய சரித்திரம்‌ திருவவதாரப்‌ படலபம்‌-72
“வாள்வலவன்‌ குருகைக்‌ கரசன்‌ புலமை செய்யும்‌ அய்யன்‌”
-சடகோபரத்தாதி.பா...47
“விறன்‌ மாறன்‌:
- மேற்படி -27
சடகோபரந்தாதி வலிமை நிறைந்த வெற்றிக்குரிய அரசன்‌
தலை மகனாகிய பெருமையுடைய மாறன்‌.
“வல்லகோசடகோபன்‌”
(மேற்படி 43/ மேற்படி.27
“எம்கோ
பெருந்தண்‌ வகுளம்‌ மணம்‌ வேண்டும்‌
தண்தெரியல்‌ பெருமான்‌”
- ச கோபரந்தாதி22
46
“நெறிவேத நின்ற நிலை உணர்ந்தோன்‌ குருகூர்‌"
- சஉகே௱பரந்தாதி20

“குருகூர்‌ எங்குலக்‌ கொழுந்தே”


- சடகோபறந்தஇி.ப1ர..47

“குருகைப்‌ பிரான்‌ இருவாணை மலையவனே"


- சடகோபறத்தாதி.பா. 21
இருமரபும்‌ தூயவர்‌ - தாய்மரபு தந்தை மரபு. உபயகுலத்தவர்‌
நம்மாழ்வார்‌ அருளிச்‌ செய்த பாசுரங்கள்‌ சிறந்த வேதங்கள்‌ எல்லாம்‌
அழகு செய்வனவாம்‌. அருமைமிக்க தமிழ்‌ மொழிக்கு
முகவுரையாம்‌. நால்வகைக்‌ கவிகளுக்கும்‌ மாதிரி காப்பியமாம்‌.
எல்லாநூல்களுக்கும்‌ தாயுமாம்‌. எட்டுத்திக்கிற்கும்‌ விளக்கு.மாம்‌.
- சடகோபறற்தாதி பா..9
“குருகைக்கரசன்‌”
- மேற்படி பா. 2. நம்மாழ்வார்‌
இருவர்சுட்டிய பல்வேறு தொல்குடி - தாயும்‌ தந்தையுமாகிய
இருவர்‌ குலத்தையும்‌ உலகத்தார்‌ நன்றென்று மதித்துப்‌ பலவாய்‌
வேறுபட்ட பழைய குடியிற்‌ பிறந்த இருபிறப்பாளர்‌.
- திருமுரறாகாற்றுப்படை 778
“குருகூர்ச்‌ சேய்‌ இருமா மரபும்‌ செவ்வி யான்‌”
“....தொல்லையேர்‌ வகுள
வனமாலை யெம்‌ பெருமான்‌
குருகூர்‌ மன்னன்‌ வாய்‌ மொழியே”
- சட கோபரந்தாதி, 4
குருகைப்‌ பிரான்‌ குமரிக்‌ கொண்கன்‌ என்று அரசகுடியின்‌
தன்மையுடையவராகவே குறித்துள்ளார்‌.
பர, 46
“குமரித்துறைவன்‌”
Lint. &9

“குருகை மன்னன்‌”
பா. 27
47
“வழுதி நன்நாடன்‌
திருவாய்‌ மொழி”
47/7: 2
“மலையார முங்கடலாரமும்‌ பன்மாமணி குயி
விலையாரமும்‌ விரவுத்‌ இருநாடன்‌”

- ச கோபரற்தாதி. பா. 22
“ஸ்ரீவைஷ்ணவ சிகாமணியான நம்மாழ்வார்‌
அருளிச்‌ செய்த திருவாய்மொழி பாசுரங்கள்‌ ஆயிரம்‌
- ச கோபரந்தாடிர7
அ.வே.வை.மு. கோபால கிருஷ்ண .மாச்சாரியார்‌
“வழுதி நாடன்‌ வேறு செய்த மறைகள்‌ ஆயிரத்தையும்‌
தொழுது பாடும்‌ முனிவர்‌ வாய்மை துளவவாசம்‌
நாறுமே”
- தன்லாப்பின்ளை.பாரதம்‌.229
“மூரசுகளுமடிக்க முடிமன்ன ரடிபோற்ற
அரசாளா மல்மகனே அய்யனே நீ யிங்குஇத்தாய்‌ *
- புறாங்குசநடஃஅம்‌, 77
இட்ட பாக்கியங்கள்‌ பெற்றேன்‌. இவ்வுலகை ஆண்டு
கொண்டிருந்தேன்‌.
பட்டங்கட்ட யாரை வைப்பேன்‌ பாலனே நான்‌ என்ன
செய்வேன்‌.
- மேற்படி 02
“மனுதீதி கீர்த்தி வளர்‌ மன்னர்‌ மன்னன்‌”
-மேற்‌. புடி, 29
“மாசில்லா முடிதரித்த மன்னவன்‌ காரிராசன்‌”
- பறரங்குசநாடக£ம்‌20

“வழுதி நாடான்‌ விந்துதித்த குஞ்சரமோ”


- 37:2

“நாடாள்‌ வாய்‌ என்று இருந்தேன்‌ மகனே"


“கொற்றவன்‌ காரிகுலம்‌ விளங்க வந்த மகனே”
- 57:7
48
“ராஜரீக வேள்காரி”
மகராஜ ராஜரீகன்‌ - இரு வாழ்‌ மார்பனும்‌ கொலுவிருந்தான்‌
சிங்காதனக்‌ கொலுவிற்‌ சகமாளுகின்ற
கர்த்த எனும்‌ போர்க்கழியார்‌ பூபாலீன்ற
காரிமகராஜன்‌ கொலுவிருந்தார்‌.

சிவலமாறன்‌ கதை
“மணிமாடத்‌ திருக்குருகூர்‌ மகிழ்‌ மாறன்‌ பிறந்தலம்‌
அணையா, முன்னவன்தாதை காரியார்‌ அடிவணங்கி ”
- நதர்புகுபடலம்‌, 28
“தென்னவர்‌ பிரான்‌ மகிழ்மாறன்‌ பதம்‌ பணிந்து"
- மேற்படி, 7.818
பருப்பத்துக்‌ கயல்‌ பொறித்த பாண்டிய குலபதி யென்று
பெரியாழ்வார்‌ புகழ்கிறார்‌. இ.பி 78இல்‌ முடிசூடிய பாண்டியன்‌
நெடுஞ்‌ சடையன்‌ பராந்தகனாகிய முதலாம்‌ வரகுணன்‌ குருசரிதை
கொண்டாடியவன்‌ அறியப்பட்டுள்ளது.
-சேதுறாமன்‌, பாண்டியர்‌, பம்கம்‌.2
“பொருணைகுூழ்‌ குருகை மூதார்ப்‌
புரவலன்‌ காரி என்பான்‌
அருமக வின்றி வாடி
யத்தலத்‌ தடைந்து போற்றத்‌
திருமகள்‌ கொழுந னல்கச்‌
செந்தமிழ்ச்சுருதி பாடும்‌
குருமணித்‌ தப மன்ன
குழவியைப்‌ பெற்றானன்றே”
- சீவல.மாறன்‌
கதை 183
சிதம்‌. ரகாச கவிமயிலேறும்‌
பெருமான்‌ மரபில்‌ வத்த வேளை.
“குலவுமந்த நகரை யாதி வழுதி நாடன்‌
நம்மாழ்வார்‌ வைபவம்‌ நம்மாழ்வார்‌
- திவ்யசரித்திறம்‌
“நலமுறந்த நரபதிக்கு மைந்தன்சக்‌ ர பாணியே”
- மேற்படி, பா. 2
49
“அரையன்‌ மகற்கு மணஞ்‌ செய்‌”
- மேற்படி, பா, 18

“எந்தை தந்த தந்‌ைத தந்‌ைத


தந்தைக்கும்‌ முந்தை.... இருவேங்கடத்து அண்ணல்‌”

திருவாய்‌ மொழி:
“எங்கள்‌ குல நாயகன்‌
சேசவன்தமர்‌”
சடகோபன்‌ சரித்திரம்‌
“பொதியமலை காவலான்‌”
“பொருணை நஇயுடைய வீரன்‌"
"வழுதி நாடன்‌”
- Groping. பாடல்‌ (பதிகம்‌
“மானிலத்திலுயர்சடகோபனாய்‌ வந்தவதரித்தோர்‌
கணத்தண்ணல்‌”
பாடல்‌.78
உற்றமன்னவன்‌ வண்பிரிசாரம்‌ திருவாழ்‌ மார்பருக்குப்‌
போர்க்கழியார்‌என்ற திருகுருகூர்‌ மன்னர்தூது அனுப்பித்‌ தன்‌ மகன்‌
காரி யென்பானுக்கு உடைய நங்கையை மணம்‌ பேசினான்‌.
“மன்னனின்கன்னி”
- மேற்பழு, L17.80
நம்மாழ்வார்‌ அரச குலச்‌ சான்றோரே
திருவாய்மொழி நம்மாழ்வாரால்‌ அருளிச்‌ செய்யப்பட்டது
என்பதை அறிந்திருந்த நாதமூனிகளுக்குத்‌
தென்பாண்டிநாட்டிலிருந்து வந்த இரு ஸ்ரீவைஷ்ணவர்கள்‌
திருவாய்மொழி ஆயிரத்துள்‌ சில பாடல்களைப்‌ பாடிக்காட்டினர்‌.
அவற்றைக்‌ கேட்ட பின்னர்‌, வேதமும்‌ இலக்கிய நயமும்‌ கலந்த
பக்திச்சுவை மிகுந்த திருவாய்மொழிப்‌ பாடல்கள்‌ அனைத்தையும்‌
அறிய வேண்டும்‌ என்ற பேராவல்‌ கொண்டு தென்பாண்டி நாட்டுத்‌
திருக்குருகூர்க்கு நாதமுனிகள்‌ சென்றார்‌. அங்கே நம்மாழ்வார்‌
பெருமானின்‌ திருநாமத்தைப்‌ பெற்ற பராங்குசதாசர்‌ என்ற
ஸ்ரீவைஷ்ணவரிடமிருந்து நம்மாழ்வாரைப்‌ போற்றிப்‌
புகழ்ந்துரைத்த மதுரகவியாழ்வாரின்‌ கண்ணி நுண்‌ ிறுத்தாம்பு
பாடம்‌ செய்து நாதமுனிகள்‌ ம௫ழ்ந்து வந்தார்‌. அதன்‌ பின்னர்த்‌
திருவிக்கிரமன்‌ அருளால்‌ திருவாய்மொழிப்‌ பாசுரங்களும்‌
பாடல்களும்‌ இடைத்தன என்று நூல்களில்‌
குறிப்பிடப்பட்டுள்ளது.
ரீவைஷ்ணவரான நாதமுனிகள்‌ திருவாய்மொழிப்‌
பாசுரங்களில்‌ வேதம்‌ கலந்த இசைத்தமிழ்‌ இருப்பதை அறிந்து
உணர்நீது, வைணவக்‌ கோயில்களில்‌ அதாவது திரு
விண்ணகரங்களில்‌ இன்னிசையோடு திருவாழ்மொழிப்‌
பாக்களைப்‌ பாடும்‌ நிலையை உருவாக்கினாராம்‌. வேதம்‌ அறிந்த
மரபிலே வந்த நாதமுனிகள்‌ தமிழ்‌ வேதமாகிய
திருவாய்மொழியின்‌ உண்மையை உணர்ந்து எடுத்தோதியதின்‌
பொருட்டே திருவிண்ணகரங்களில்‌ அப்பாசுரங்கள்‌ இசையுடன்‌
மட்டும்‌ பாடப்படாமல்‌ வேதமாகவே ஸ்ரீவைஷ்ணவர்களால்‌
இன்றும்‌ ஓதப்படுகின்றன.
திருக்குருகூரில்‌ பராங்குசதாசர்‌ என்ற ஸ்ரீவைஷ்ணவப்‌
பெரியாரைச்சந்தித்த பின்னரே திருவாய்மொழியின்‌ பெருமையை
நாதமுனிகள்‌ அறிந்தார்‌ என்று கண்டோம்‌. நம்மாழ்வாரின்‌
திருநாமங்களில்‌ ஒன்று பராங்குசன்‌ என்பதாம்‌. வேதம்‌ ஓதியருளிய
51
பராங்குசனின்‌ திருநாமத்தை அந்தணரான பராங்குசதாசர்‌ என்பார்‌
பெற்றிருந்தார்‌ என்பதால்‌ திருவாய்மொழியின்‌ பாட்டும்‌
பாசுரங்கஞம்‌ தென்‌ திசையில்‌ பாடப்பட்டும்‌ ஒதப்பட்டும்‌
வந்திருக்க வேண்டும்‌. மதுரகவியார்‌ நம்மாழ்வார்‌ அருளிய
திருப்பாட்டுகளை எழுதிய திருமந்திர ஒலை நாயகமாவார்‌.
வேந்தர்களிடம்‌ இருமந்திர ஓலை நாயகமாகப்‌ பணிபுரிந்த
பிரம்மாதிராயர்கள்‌ பற்றிக்‌ கல்வெட்டுகளால்‌ தெரிய வருகிறது.
பன்னிரு ஆழ்வார்களில்‌ பதினொரு ஆழ்வார்களும்‌
இறைவனைப்‌ பாடி ஆழ்வார்கள்‌ அங்கீகாரம்‌ பெற்றிருந்தனர்‌.
ஆனால்‌ மறைக்குல மதுரகவிராயர்‌ மட்டும்‌ திருவாய்மொழிப்‌
பாசுரங்களையும்‌ பாடல்களையும்‌ ஓதி ஓதி, நம்மாழ்வரை
இறைவனாக எண்ணிப்‌ பாடினார்‌. இதனாலேயே வேதம்‌
அறிந்திருந்த மதுரகவிராயரை வைணவர்கள்‌ ஆழ்வாராக
அழைத்துப்‌ பெருமைப்படுத்தினர்‌. ஆழ்வார்கள்‌ பன்னிருவராவர்‌.
தமிழ்‌ வேதம்‌ தந்த வேந்தனை உணர்ந்து, ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அதன்‌
சுருதியின்‌ மகிமையை உணர்ந்து தமிழ்‌ வேதத்தைப்‌ போற்றிப்‌
புகழ்ந்தனர்‌. அனைத்துக்‌ கோயில்களிலும்‌ நம்மாழ்வார்‌ அருளிய
பாசுரங்கள்‌ பாடப்பட்டு வந்துள்ளன என்பதை மறந்துவிடக்‌
கூடாது.
சி.பி. 11 ஆம்‌ நூற்றாண்டினரான நாதமுனியாரின்‌ வைணவச்‌
சேவைகளுக்கு முற்பட்டே சோழவேநீதர்‌ இராசராசன்‌ காலத்திய
கோயில்களில்‌ திருவாய்மொழி ஓதப்பட்டுள்ளது
எண்ணுதற்குரியது. நாதமுனிகள ின்‌ காலத்தில ேயே நம்மாழ்வார்‌
சுவாமிகள்‌ ஆழ்வார்களில்‌ முதலிடம்‌ பெற்றவராகத்‌
திகழ்ந்துள்ளார்‌. நாதமுனிகளும்‌ ஸ்ரீவைஷ்ணவரிடத்திலே
நம்மாழ்வாரின்‌ சிறப்பியல்புகளை எடுத்தோதி அவரை
முதன்மைப் ‌ படுத்தினார் ‌. இதனாலே யே நம்பெருமா ன்‌.
பெருமானின்‌ திருவவதாரம ்‌ என்று வைணவ நூல்கள்‌ பெருமை
உரைத்துப்‌ புகழாரம்‌ சூட்டுகின்றன. நம்மாழ்வார்‌ பிறந்த காலத்தில்‌
வேதம்‌ ஓதும்‌ நிலை அந்தணர்‌ அரசர்‌ வணிகர்களுக்கு மட்டுமே
இருந்தது. வேதம்‌, வேள்வி இவைகளின்‌ பலன்‌ அரசர்க்கே
என்பதற்கு இலக்கியங்களில்‌ எண்ணற்ற சான்றுகள்‌ உள்ளன.
வேதம்‌ ஓதும்‌ அந்தணரின்‌ பாசுரங்களை அரசர்களும்‌ தங்கள்‌
52
பட்டத்தரசிகளுடனும்‌ அரசகுலத்தவரும்‌ கேட்டு மகிழ்ந்தார்கள்‌
என்று கல்வெட்டுகளில்‌ பாடங்கள்‌ உள்ளன.
இ.பி. 10 அல்லது 11 ஆம்‌ நூற்றாண்டிலேயே
திருவாய்மொழிப்‌ பாசுரங்கள்‌ கோயிலில்‌ ஓத அரசர்கள்‌
ஏற்பாடுகளைச்‌ செய்திருந் தனர்‌ என்று கல்வெட்டு களில்‌
செய்திகள்‌ காணப்பெறுகின்றன. இதனை நாம்‌ வேறு பகுதியில்‌
ஆராயலாம்‌. நம்மாழ்வார்‌௮ருளிய திருவாய்மொழி அல்லாத பிற
ஆழ்வார்கள்‌ பாசுரங்கள்‌ வேதமாகப்‌ பெருமாள்‌ சன்னதிகளில்‌
ஓதப்பட்டாலும்‌ மிக உயர்ந்த இடம்‌ நம்மாழ்வாரின்‌
திருவாய்மொழிக்கே வழங்கப்பட்டிருந்தது தெரியவருகிறது.
இத்தகைய நிலை நாதமுனிகளால்‌ வளர்ச்சி பெற்றிருத்தல்‌
வேண்டும்‌. எல்லா ஆழ்வார்களின்‌ பாடல்களைப்‌ படித்துணர்ந்த
நாதமுனிகள்‌ நம்மாழ்வாரின்‌ பாடல்களைத்‌ த.மிழ்வேதக்கடல்‌
என்று புகழ்ந்துரைத்து ஓதி ஓதி மகிழ்ந்தார்‌. நான்மறைகளை ஓதும்‌
ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ தமிழ்‌ வேதத்தை அதாவது
திருவாய்மொழியை இறைவன்‌ மொழியாகவே கருஇனர்‌.
இயல்பாகவே நம்மாழ்வார்‌ திருக்குருகூர்‌ இறைவன்‌
திருக்குலத்தாராவார்‌ என்பது இலக்கியங்கள்‌ சொல்லும்‌
திருப்பாடமாகும்‌.
இ.பி. 18ஆம்‌ நூற்றாண்டினரான கவிச்சக்கரவர்த்தி கம்பரால்‌
எழுதப்பெற்ற சடகோபரந்தாதி மிகத்‌ தெளிவாக நம்மாழ்வாரின்‌
தூய்மையான குலம்‌, அரச வாழ்வு, திருவாய்மொழியின்‌
பெருமை இவற்றைப்‌ பேசுகிறது. அரசனை நேரில்‌ சென்று
புகழ்ந்து பாடிப்‌ பரிசிலைப்‌ பெறும்‌ புலவர்களைப்‌ போன்று
வாழாமல்‌ இருந்த கவியரசர்‌ தமக்குச்‌ சல நூற்றாண்டுகளுக்கு
முற்பட்டு வாழ்ந்த நம்மாழ்வாரை உணர்ந்து இருவாய்மொழியின்‌
பெருமைகளை எடுத்தெழுதியுள்ளார்‌.
நம்மாழ்வாரின்‌ திருவாய்மொழியில்‌ உபநிடதங்கள்‌ ஆயிரம்‌
கிளைகளுடன்‌ இருப்பதாக அறிந்துள்ளனர்‌. ஸ்ரீவைஷ்ணவர்கள்‌
மற்றும்‌ நாதமுனிகளின்‌ அயராத சேவைகளாலேயே வைணவம்‌
மேலும்‌ பெருமை பெற்றது. ஸ்ரீஇராமானுஜர்‌ என்ற வேதம்‌
உணர்ந்த பெருமகன்‌ வேதத்திற்கும்‌ தைக்கும்‌ உரை அருளியவர்‌
என்று பெருமைப்படுத்தப்பட்டவர்‌. வைணவ சமயக்‌
53
கோட்பாடுகளைப்‌ பல்வேறு இடர்ப்பாடுகளுக்கிடையில்‌
இன்னல்களை ஏற்றுப்‌ பரப்பி வந்தவர்‌ ஆவார்‌. திருவாய்மொழி
வேதத்தின்‌ தன்மைகளை உணர்ந்து போற்றிப்‌ புகழ்ந்துள்ளார்‌.
கீதையை அருளிய கண்ணனாகிய திருவிக்கிரமனைப்போன்று
திருவாய்மொழி அருளிய அண்ணல்‌ நம்மாழ்வாரையும்‌ அவர்‌
இறைவனாக்கினர்‌. நம்மாழ்வாரின்‌ திருநாமம்‌
திருநாடுடையபிரான்‌ என்பதாம்‌. திருநாடுடையபிரான்‌ என்ற
பட்டம்‌ அரச குலத்தவர்க்குரியதாகும்‌. கல்வெட்டுகளில்‌
திருநாடுடைய பிரான்‌ கோயில்கள்‌ பற்றியகுறிப்புகள்‌ உண்டு.
ஸ்ரீஇராமானுஜரின்‌ காலத்தில்‌ வாழ்ந்தவராகக்‌ கருடவாகன
பண்டிதரைக்‌ கருதுகிறார்கள்‌. இவர்‌ சமஸ்கிருத மொழியில்‌
எழுதிய நூல்‌ திவ்ய சூரிசரிதம்‌ ஆகும்‌. இந்நாலிலும்‌ நம்மாழ்வார்‌
பெருமைப்‌ படுத்தப்பட்டுள்ளார்‌. இ.பி. 12 , 139 ஆம்‌
நூற்றாண்டுகளில்‌ வைணவத்‌ திருத்தொண்டுள்ளத்தோடு
அரும்பணி ஆற்றிய ஸ்ரீராமானுஜர்‌ காலத்திலேயே
இருக்குருகைப்பிரான்‌ பிள்ளான்‌ என்ற அந்தணர்‌ திருவாய்‌
மொழிக்குப்‌ பல பேருரைகளை வியாக்கியானங்களாக
இயற்றினார்‌. இவர்‌ நம்மாழ்வாரின்‌ திருவிடமான திருக்குருகூர்‌
பெயரால்‌ நம்மாழ்வாரின்‌ தெய்வத்தன்மைகளை உணர்ந்தும்‌, மரபு
வழி அறிந்தும்‌ வியாக்கியானங்களாக இயற்றினார்‌ என்று நாம்‌
கருதலாம்‌. இவருக்குச்‌ சம காலத்தவரான நம்பிள்ளை என்ற
ஸ்ரீவைஷ்ணவரால்‌ “முப்பத்தாராயிரப்படி” என்ற ஈடு
இயற்றப்பட்டுள்ளது. இந்த ஈடு உரைக்குப்‌ பகவத்‌ விஷயம்‌ என்று
பெயரிட்டு அழைத்துள்ளார்கள்‌. திருவாய்மொழி என்பது
பகவானைப்‌ பொருளாகக்‌ கொண்டு வேதமாக
அருள்ப்பட்டதாகும்‌. தெய்வப்புலவர்‌ திருவள்ளுவரின்‌
திருக்குறள்‌ “ஆதிபகவன்‌” என்று இறைவனை அடையாளமிடும்‌.
தென்‌ திசையில்‌ நிலை நின்றுவிட்ட பெண்‌ தெய்வம்‌ பகவதி
என்று அடையாளம்‌ காட்டப்பெறுகிறார்‌.
இ.பி. 14ஆம்‌ நூற்றாண்டின்‌ இறுதியில்‌ வாழ்ந்தவரான
மணவாள மாமுனிகளுக்குத்‌ இருவாய்மொழியிலும்‌
வேதங்களிலும்‌ இருந்த ஈடுபாடுகளால்‌ இருவாய்மொழியின்‌
ஒவ்வொரு பத்துக்கும்‌ பொருளுரையினை வெண்பாவாக நூறு
54
வெண்பாக்கள்‌ கொண்ட திருவாய்மொழி திருநூற்றந்தாதியாக
இயற்றியுள்ளார்‌. அவர்‌ நம்மாழ்வாரின்‌ வேத வாக்கியங்களைத்‌
தொகுத்து இருப்பதோடு அவர் யார்‌ என்று அடையாளம்‌ காட்டித்‌
தருகின்றார்‌. இதுமட்டுமன்று, சாதிகளில்‌ இருந்த உயர்வு தாழ்வு
பற்றிஅவர்‌ தெளிவாகத்‌ தம்‌ நூல்களில்‌ விளக்கியுள்ளார்‌.
இ.பி. 14ஆம்‌ நூற்றாண்டினரான ஸ்ரீவைஷ்ணவர்‌ பிள்ளை
லோகாசார்யாரின்‌ வசன பூஷணனம்‌ என்ற நூலில்‌ சடகோபரை
வணங்கி வாழ்த்துகிறார்‌. பிறப்பில்‌ அந்தணரான பிள்ளை
லோகாசார்யார்‌ இந்நூலில்‌ சஉடகோபரான பராங்குச மூனியை
இறைவனாகக்கருதினார்‌ என்று தோன்றுகிறது. விஜயநகர ஆட்சிக்‌
காலத்தில்‌ வாழ்ந்த ரீவைஷ்ணவரான வேதாந்த தேூிகர்‌
திருவாய்மொழி தமிழ்‌ வேதம்‌ என்று கருத வடமொழியில்‌
இிரிமிடோப நிஷத்‌ சாரம்‌ மற்றும்‌ திரமிடோப நிஷத்‌ தாத்பர்ய
ரத்னாவளி என்ற இரண்டு நூல்களை இயற்றியுள்ளார்‌. இவர்‌
எழுதிய பிரபந்த சாரம்‌ என்ற நூலில்‌ ஆழ்வார்களில்‌ இரு
ஆழ்வார்களை அரசன்‌ என்ற பொருளில்‌ கோன்‌ என்று
அழைக்கிறார்‌. அவர்கள்‌ நம்மாழ்வாரும்‌ குலசேகர ஆழ்வாரும்‌
ஆவர்‌.
இக்கால அளவில்‌ வடமொழியார்‌ தமிழ்‌ மொழியைத்‌
திரமிட மொழி என்று முடிவுகாட்டிய காலம்‌ ஆகும்‌. இரமிட
மொழி என்பது மொழி திரிந்த தேசத்தில்‌ பேசப்பட்ட
கொடுந்தமிழ்‌, கன்னடம்‌, வடுகு, ஆந்திர மொழிகளாகும்‌.
தமிழர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ பலர்தங்களைத்‌ தமிழன்‌ என்றே
அடையாளப்படுத்துகின்றனர்‌ பல்லவ தேசத்தில்‌ சிறந்து வாழ்ந்த
பூதத்தாழ்வார்‌ தம்மைப்‌ பெருந்தமிழன்‌ என்றார்‌.
மதுரகவியாழ்வார்‌ ச௪டகோப ஆழ்வாரைத்‌ “தமிழ்ச்‌ சடகோபன்‌”
என்று அழைக்கிறார்‌. தமிழ்‌ மொழி உயர்தனிச்‌ செம்மொழியாகும்‌.
இலக்கண, இலக்கியங்களையும்‌ உலகில்‌ எந்த மொழிக்கும்‌
இல்லாத சிறப்புகளையும்‌ கொண்டு மிளிர்ந்த சொல்‌ வளம்மிக்க
செந்தமிழ்‌ மொழியும்‌ திரமிட மொழியும்‌ ஒன்றல்ல. ஒன்றோடு
ஒன்று தொடர்புடையது. இதுபற்றி விரிவாக வேறு இடத்தில்‌ நாம்‌
அறியலாம்‌. திராவிடம்‌ என்ற சொல்‌ தமிழர்‌ மீது
புகுத்தப்பட்டதாகக்‌ கருத இடமுண்டு.
55
பின்பழகிய பெருமாள்‌ என்பவர்‌ வடமொழியும்‌
தென்மொழியும்‌ கலந்து குருபரம்பராப்ரபாவம்‌ என்ட லை
எழுதினார்‌. இதில்‌ சடகோபரின்‌ திருவாய்மொழிப்‌ பெருமைகள்‌
பேசப்படுகின்றன. நம்மாழ்வாரின்‌ வாழ்க்கை வரலாற்றினை
எடுத்தோதும்‌ நூல்களில்‌ பிரம்மதந்திர ஸ்வந்தர
அனந்தாசார்யாவின்‌ பிரபந்த நாம்மிருதம்‌ புகந்தாடையப்பனின்‌
பெரிய திருவடி அடைவு போன்ற பல நூல்கள்‌ உள்ளன. ஸரீ
அழகிய பெருமாள்‌ என்ற ஸ்ரீவைஷ்ணவரின்‌ ஆசார்ய இருதயம்‌
திருவாய்மொழி பற்றி உயர்ந்த மதிப்புரைகளைத்‌ தருகிறது.
இதற்குப்‌ பொருளுரைத்தவர்‌ தேவையில்லாமல்‌ குழப்பமான,
தவறான உரைகளைப்‌ பொருள்‌ தெரியாமல்‌ வழங்கியுள்ளனர்‌.

நம்மாழ்வாரின்‌ குலப்‌ பெருமைகளைத்‌ தாங்கிக்‌ இ.பி.


1548இல்‌ குருகைப்‌ பெருமாள் கவிராயர்‌ என்ற வணிக மரபினரால்‌
குருகை மான்மியம்‌ என்ற நூல்‌ எழுதப்‌ பெற்றது. இந்நூலாசிரியர்‌
த.மிழ்‌ இலக்கண நூல்களை எழுதித்‌ தமிழுக்கு அணி சேர்த்தவர்‌ -
மாறன்‌ அலங்காரம்‌ என்ற அணி இலக்கணம்‌ மாறன்‌
அகப்பொருள்‌, மாறன்‌ பாப்பாவினம்‌ போன்ற நூல்களும்‌ இவரால்‌
எழுதப்பெற்றவையாகும்‌. இந்நூல்களைத்‌ தவிர்த்து நம்பெருமாள்‌
மும்மணிக்‌ கோவை, மாறன்‌ கிளவி, மணிமாநன்‌ திருப்பதிக்‌
கலம்பகம்‌, திருப்பதிக்‌ கோவை போன்ற நூல்களும்‌ இவரால்‌
எழுதப்பெற்றவையே. ஸரீவைஷ்ணவர்கள்‌ இவரது இலக்கண,
இலக்கியத்‌ திறனை வியந்து போற்றியுள்ளனர்‌. இவரது இலக்கிய,
இலக்கணத்திறன்‌ குறித்துத்‌ தமிழ்த்தாத்தா உ.வே.சா.வும்‌
ரா.ராகவையங்காரும்‌ போற்றிப்‌ புகழ்ந்துள்ளனர்‌. மேலே
சொல்லப்பட்ட இலக்கிய நூல்கள்‌ யாவும்‌ நம்மாழ்வாரின்‌
திருப்பெயரான மாறன்‌ பெயரை உணர்த்தியே
எழுதப்பெற்றதாகும்‌. திருக்குருகூரிலிருந்து எழுதிய பாடல்களின்‌
உண்மை தெற்றெனத்‌ தெரியும்‌ நிலையில்‌ நம்மாழ்வாரின்‌
உண்மையான வரலாறு தெரிய வருகிறது. பிற்காலத்தில்‌
எழுதப்பெற்ற திருவரங்கம்‌ கோயிலொழுகு என்ற நூல்களில்‌
நம்மாழ்வார்‌. பற்றிக்‌ குறிப்பிடப்படுகிறது. கோயில்‌
பணியாளர்களான அந்தணர்களையும்‌ வேளாளர்களையும்‌
காப்பாற்றிக்‌ கொள்வதற்காகச்‌ சிலவற்றையும்‌ சேர்த்து
56
எழுதியுள்ளனர்‌ எனினும்‌ நம்மாழ்வார்‌ பெருமைப்படுத்தப்பட்டு
முதன்மைப்‌ படுத்தப்‌. பட்டுள்ளார்‌.
நம்மாழ்வார்‌ வாழ்க்கை வரலாற்றில்‌ நாம்‌ அறிந்துள்ள
விவரப்படி அவர்‌ திருக்குருகூர்‌ மன்னன்‌ காரியின்‌ அருந்தவப்‌
புதல்வன்‌ என்ற நிலையிலேயே நூல்கள்‌ எழுதப்‌ பெற்றுள்ளன.
நாலாயிரம்‌ ஆண்டுகளுக்கு முற்பட்டவர்‌ என்று எழுதினார்கள்‌.
இதெல்லாம்‌ சமய நம்பிக்கையில்‌ ஆழ்ந்து மெய்மறந்து எபதிய
செயலாகும்‌. வட மொழியாளர்கள்‌ அறியாமல்‌, அவரைத்‌
தெரியாமல்‌ சில கருத்துக்களைக்‌ கி.பி. 19 ஆம்‌ நூற்றாண்டிலும்‌
விதைத்தனர்‌. வடமொழி வேதமொழி என்றும்‌ தமிழ்மொழி
சூத்திரர்‌ மொழி என்றும்‌ கருத்துக்களைப்‌ பரப்பத்தொடங்கினர்‌.
நம்மிலும்‌ சிலர்‌ தமிழர்‌ தாழ்ந்தவர்கள்தாம்‌ என்று ஒப்புதல்‌
அளித்துச்‌ சூத்திரவேதம்‌ என்று கற்பனை செய்தனர்‌. தமிழிலே
வேதம்‌ கண்டவர்‌ நாலாயிரம்‌ வருடங்களுக்கு முன்னரே
தோன்றியவர்‌ எனில்‌ திருவாய்மொழி முற்பட்ட வேதம்‌ என்று
பொருள்படும்‌ என்பதையும்‌ முற்றிலும்‌ அவர்கள்‌ உணரவில்லை,
நாலாயிரம்‌ ஆண்டுகளுக்கு முற்பட்டவர்‌ நம்மாழ்வார்‌ என்று
புனைந்துரைத்த அவர்கள்‌ முற்றிலும்‌ உணராத நிலையில்‌
சூத்திரவேதம்‌ என்று நம்மைக்‌ கோலிக்கூத்தாக்கினர்‌. இதனால்‌
த.மிழிலே தாழ்வானவர்‌ என்ற இழிந்த கருத்துக்கள்‌ தமிழர்‌ மீது
அள்ளி வீசப்பட்டன. பேராசிரியர்‌ பெருந்தகை
அ.சீனிவாசராகவன்‌ நம்மாழ்வார்‌. பற்றியும்‌ இரவாய்‌
மொழிபற்றியும்‌ ஆழமாகச்‌ இந்தித்துள்ளார்‌. நம்மாழ்வார்‌
பொருணை ஆற்றங்கரையினில்‌ அமைந்த திருக்குருகூர்‌ ஊரினர்‌
என்றும்‌ தெரிவித்துள்ளார்‌.
நம்மாழ்வார்‌ மீது மதிப்பும்‌ மரியாதையும்‌ வைத்து
இறைவனாக நேத்து வணங்கிய ஸ்ரீஇராமானுஜரின்‌ ௫ித்தாந்தம்‌
சர்ச்சைக்கு இடமளிப்பதாகும்‌ என்றும்‌ அ.சீனிவாசராகவன்‌
குறிப்பிட்டுள்ளார்‌. வைணவ மரபுப்படி ஆழ்வார்கள்‌ காலம்‌
கி.மு. 4200க்கும்‌ கி.மு. 2700க்கும்‌ இடைப்பட்ட காலம்‌ என்றார்‌.
ஆனால்‌ வரலாற்றியல்‌, மொழியியல்‌, இலக்கிய
ஆராய்ச்சியாளர்கள்‌ சிந்தித்துச்‌ சொல்லிய கருத்துப்படி இ.பி. 6ஆம்‌
நூற்றாண்டு முதல்‌ 9ஆம்‌ நூற்றாண்டு வரை என்று எடுத்துக்‌
கூறியுள்ளனர்‌. இவரில்‌ நம்மாழ்வார்‌ எந்தக்‌ காலத்தில்‌ வாழ்ந்தவர்‌
57
என்று குறிப்பிடமுடியவில்லை. இவர்‌ 16 வயது வரை பேசாமல்‌,
உண்ணாமல்‌ தியானத்தில்‌ இருந்தார்‌ என்ற கருத்துக்கு வருவோம்‌.
மெளனம்‌ சாதித்த காலம்‌ வேத நூல்கள்‌, இலக்கியங்கள்‌,
இலக்கணங்களைக்‌ கற்ற காலமாக யூகிக்கிறார்‌ பேராசிரியர்‌
அ.சீனிவாசராகவன்‌ என்று தோன்றுகிறது. அக்கால வழக்கம்‌ ஓர்‌
ஆடவனுக்கு, குறிப்பாகச்‌ சத்திரியனுக்கு, உரிமைச்‌ சடங்குகள்‌
நடத்துவது பற்றிக்‌ குறிப்‌பிடுகிறார்கள்‌. இதனால்‌ அரசமரபினரான
நம்மாழ்வார்‌ 16ஆம்‌ வயதிலேயே தியானம்‌ நீங்க விழிப்புணர்ச்சி
கொண்டார்‌ என்று நம்மை நம்பவைக்கின்றார்கள்‌.

சில அறிஞர்கள்‌ நம்மாழ்வார்‌ சிறந்த கல்விமான்‌ என்றும்‌


திருக்குறள்‌ போன்ற நூல்களையெல்லாம்‌ கற்றுத்‌ தேர்ந்தவர்‌
என்றும்‌ கருதுகின்றனர்‌. கற்பனையாக அவரைப்‌ பற்றிச்‌
சிந்திப்பதை நாம்‌ கைவிட வேண்டும்‌. பொய்கள்‌ சில நேரம்‌
பொலிவு பெற்று உண்மையாகிவிடும்‌. கி.பி. 4ஆம்‌ நூற்றாண்டு
நூலான திருக்குறள்‌ நாம்‌ செய்த கற்பனையால்‌ கி.மு. முதல்‌
நூற்றாண்டு நரல்‌ என்ற சிறப்பினைப்‌ பெற்று விட்டது. இது
போன்று நம்மாழ்வாரின்‌ காலம்‌ பற்றிக்‌ கற்பனைக்‌ கவிதை
பாடிக்கொண்டு இருக்கின்றோம்‌. புலவன்‌ தன்‌ கற்பனைத்‌
திறனால்‌ புனைந்துரைப்பது தற்குறிப்பேற்றம்‌ என்று ஊருக்கும்‌
சொல்கிறோம்‌. நாம்‌ எழுதும்‌ பொழுது நாம்‌ உணராமல்‌
எழுதிவிடுகிறோம்‌. இதனால்‌ உண்மைகளை உணரமுடியாமல்‌
கவலைக்குள்ளாகிறோம்‌. அல்லது மாய்த்துவிடுகிறோம்‌. இது
மனித இயல்பாகவே இன்றும்‌ நாட்டில்‌ தொடர்ச்சி பெற்று
வருகிறது.
பன்னிரு ஆழ்வார்களில்‌ நம்மாழ்வார்‌ மட்டுமே சுவாமிகள்‌
பெருமான்‌ என்று அழைக்கப்பட்டவர்‌. நம்மாழ்வார்சுவாமிகளை
உலகில்‌ அறிமுகப்படுத்தியவர்‌ மதுரகவியாழ்வார்‌ என்ற
ஸ்ரீவைஷ்ணவர்‌ ஆவார்‌. திருக்குருகூர்‌ என்று அன்றும்‌ இன்று
ஆழ்வார்திருநகரி என்றும்‌ அழைக்கப்படும்‌ ஊரில்‌ ஆதிநாதர்‌
கோயில்‌ புவியமரம்‌ ஒன்றில்‌ தவமிருந்த நம்மாழ்வாரைஅவ்வூரின்‌
அருகிலேயே திருக்களூர்‌ என்ற ஊரில்‌ வாழ்ந்த மதுரகவியாரே
முதன்முதலில்‌ சந்தித்தார்‌. பதினாறு வயதுவரை எவரிடத்தும்‌
பேசாமல்‌ உண்ணாமல்‌ நீரின்றிக்‌ கண்மூடித்‌ தியானத்திருந்த
நம்மாழ்வாரை நோக்கி மதுரவிராயர்‌ எழுப்பிய கேள்வியாலேயே
58
சுவாமிகள்‌ கண்விழித்தார்‌ என்பது மரபுவழிச்‌ செய்தியாகும்‌.
மதுரகவியாழ்வார்‌ கேட்ட கேள்வி “செத்ததின்‌ வயிற்றில்‌ சிறியது
பிறந்தால்‌ எத்தைத்‌ இன்று எங்கே கிடக்கும்‌?” என்றார்‌ அதற்கு
ஸ்ரீபராங்குசமாறனின்‌ பதில்‌ வாக்கு “அத்தை தின்று அங்கே
இடக்கும்‌.” என்பதாம்‌. இத்தகைய நிகழ்வுக்குப்‌ பிறகுகூடச்‌
சுவாமிகள்‌ புளியமரத்தினை விட்டு நீங்கவில்லை என்றும்‌
கூறுகிறார்கள்‌. மரபுவழிச்செய்திகளை நாம்‌ உண்மையென்று
கருதியே ஆய்வு கொள்ளலாம்‌. திருக்குருகூர்‌ ஆட்சி மரபிலே
தோன்றிய மகனாகிய நம்மாழ்வார்‌ புளியின்‌ அடியில்‌ இருந்தே
நான்மறைகளில்‌ சாராகத்‌ தமிழ்‌ வேதத்தைச்‌ சொல்லத்‌
தலைப்பட்டார்‌ என்றும்‌ அதனைத்‌ திருமந்திர ஒஓலைநாயகம்‌
போன்று திருவாய்மொழிந்தருளிய மொழியை மதுரகவியார்‌
பதிவு செய்தார்‌. நமது கல்வெட்டுகளில்‌ அரசனின்‌ ஆணையைத்‌
திருவாய்‌ மொழிந்தருளிய உத்தரவு என்று குறித்துள்ளனர்‌. ஒதுதல்‌
என்பதற்கும்‌ ஓதுவித்தல்‌ என்பதற்கும்‌ வேறுபாடு உண்டு.
சடகோபர்‌ மொழிந்த வேதத்தை அந்தணரான மதுரகவியார்‌ உலகம்‌
அறிய ஒதுவித்தார்‌. இதுவே தமிழ்‌ வேதமாம்‌. திருவாய்மொழி
என்பது மாறன்‌ செய்த வேதச்செய்யுள்களில்‌ முதன்மை பெற்றது.
திருவாய்‌ மொழியை மாறன்‌ மறை என்று இலக்கியங்கள்‌
அழைத்துள்ளன. மாறன்‌ மொழி திருவாய்‌ மொழி என்றும்‌ பிற
ஆழ்வார்கள்‌ செய்த செய்யுட்கள்‌ திருமொழி என்றும்‌ குலசேகர
ஆழ்வார்‌ அருளிய பாடல்‌ பெருமாள்‌ திருமொழி என்றும்‌ பெயர்‌
பெற்றன. திருக்குருகூர்‌ இறைவன்‌ குலத்துஇத்த நம்மாழ்வாரின்‌
வாய்மொழியே திருவாய்மொழி என்பது இடைக்காடர்‌ என்ற
புலவரின்‌ கருத்தாகும்‌. “சேய்மொழியோ தாய்மொழியோ
செப்பில்‌ இரண்டும்‌ வாய்மொழியை யாரும்‌ மறை என்பர்‌”
என்பதால்‌ திருவாய்மொழி நம்மாழ்வாரின்‌ வாய்மொழி என்று
உணரப்படும்‌. திருவாய்மொழி மற்றும்‌ இருவாசிரியம்‌
திருவிருத்தம்‌ பெரிய இருவந்தாதியும்‌ நம்மாழ்வாரால்‌
இயற்றப்பட்டதாகும்‌. செந்தமிழ்க்‌ கவிபுனைந்த நம்மாழ்வார்‌
வடமொழியையும்‌ கற்றறிந்தவர்‌ என்று அவரது செய்யுட்கள்‌
அடையாளம்‌ காட்டுகின்றன. செந்தமிழும்‌ வடமொழிச்‌
சொற்களும்‌ செய்யுளில்‌ பயிலுகின்றன. சல ஆராய்ச்சியாளர்கள்‌
திருவாய்மொழி என்ற வேதத்தில்‌ வள்ளுவரின்‌ கொள்கைநெறி
பதிவாகியிருப்பதை அறிந்து உணர்த்திக்‌ காட்டுகின்றனர்‌. இதை
59
வைதீகப்‌ பண்புடைய மதவாதிகள்‌ மறுத்து உணர்த்தலாம்‌. ஆனால்‌
தமிழில்‌ தலைசிறந்த வேதக்கோட்பாடுகளை நம்மாழ்வார்தான்‌
எடுத்தோதியுள்ளார்‌. சைவமதக்‌ கோட்பாடுகளைப்‌ பரப்புவதற்கு
நாயன்மார்கள்‌ ஊர்‌ ஊராகச்‌ சென்று எடுத்‌ தோதினர்‌. ஆழ்வார்களும்‌
வைணவ நெறிகளை எடுத்தோதி ஊர்‌ விட்டு ஊர்‌ சென்றனர்‌.
எனினும்‌ நம்மாழ்வார்‌ மட்டுமே இருந்த இடத்திலேயிருந்து
திருக்குருகூர்விட்டு வேறிடம்‌ செல்லவில்லை என்பது மரபுவழிச்‌
செய்தியாகும்‌.
ஆழ்வார்‌ பட்டம்‌ பெற்ற ஆழ்வார்கள்‌ அனைவரும்‌
இறைவனைப் துதித்து
பாடி அப்பட்டத்த
த் ைப்‌ பெற்றனர்‌. ஆனால்‌
மாறனின்‌ திருவாய்மொழியை ஓதி உணர்ந்த மதுரகவிராயர்‌
நம்மாழ்வாரையே வாழ்த்தி வணங்கி ஆழ்வார்‌ பட்டம்‌
பெற்றுள்ளார்‌. வைணவக்‌ கோட்பாடுகளில்‌ முதன்மைப்‌
படுத்தப்பட்டவர்‌ திருவிக்கிரமனான மகாவிஷ்ணு ஆவார்‌.
ஆழ்வார்களில்‌ முதலிடம்‌ நம்மாழ்வார்க்கே உரித்தாகும்‌.
ஸ்ரீவைஷ்ணவரான நம்மாழ்வார்‌ பெருமகன்‌ திருவிக்கிரமன்‌
மட்டுமின்றிச்‌ சவபெருமானையும்‌ பிரம்மனையும்‌ வாழ்த்தி
வணங்கியுள்ளார்‌.
இருவாய்மொழியில்‌
“அவாவறச்சூழ்‌ அரியை, அயனை, அரசனை அலற்றி
அவாவற்று வீடு பெற்ற குருசுடர்‌ உடஉகோபன்‌”
என்று குறிப்பிட்டுள்ளார்‌ ( 10 : 10 : 11). இவர்‌ தேவாரச்‌
சொற்றொடர்கள்‌ சிலவற்றையும்‌ எடுத்தாண்டுள்ளார்‌ என்று
அறிஞர்‌ கா.சு.பிள்ளை குறிப்பிட்டுள்ளார்‌. மேலே
மும்மூர்த்திகளையும்‌ உணர்ந்து நோக்கிய மாறனாகிய நம்மாழ்வார்‌
பிறந்தது திருக்குருகூர்‌ மன்னர்‌ மரபிலாம்‌. அரசன்‌ சமயக்‌
கோட்பாடுடைய அனைவரையும்‌ அன்புடன்‌ ஏற்பது அவர்தம்‌
அரச கடமை. இதனால்தான்‌ நம்மாழ்வார்‌ தம்‌ தமிழ்‌ வேதத்தில்‌
அரி, அயனை, அரன்‌ எனும்‌ மூவரையும்‌ வணங்கி
வாழ்த்தியுள்ளார்‌ என்று தோன்றுகிறது.
“முறை செய்யும்‌ மன்னவன்‌ இறையென்று வைக்கப்படும்‌”
என்பது தேவர்திருவாக்காகும்‌. “திருவுடைய மன்னரைக்‌ காணின்‌
திருமாலைக்‌ கண்டேன்‌” என்று நம்மாழ்வார்‌ செய்யுளில்‌
60
குறிப்பிட்டது ஈண்டு நோக்கிடத்தக்கதாம்‌. ச௪டகோபரையே
திருமாலாகக்‌ கொண்டவர்‌ மதுரகவியாழ்வார்‌ என்பதை எண்ணி
உணர்ந்தால்‌ தெளிவு பெறலாம்‌. திருவுடைய மன்னர்‌ மரபினர்‌
நம்மாழ்வார்‌. இதற்கொப்ப, திருக்குருகூர்‌ மன்னன்‌
தெய்வமாக்கப்பட்டுவிட்டான்‌ என்பதே. ௮ரச பதவியைப்‌
பெறாமல்‌ துறவறம்‌ செய்து வேதம்‌ படைத்த மாறன்‌ செயலை
அவரது குலத்தினரும்‌ தந்தையும்‌ தாயும்‌ உற்றார்‌ உறவினரும்‌
ஒ.ப்புக்கொள்ளவில்லை.
செங்கோலாட்சிக்குரிய மரபிலே தோன்றிய நம்மாழ்வார்‌
எழுதிய வேதச்‌ செய்யுட்களே வைணவரின்‌ வாழ்வியலில்‌
முதன்மை பெற்றுள்ளன. ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ மிக உயர்வாகவே
புகழ்ந்துரைக்கின்றனர்‌. “தலைமகன்‌”, “ஸ்ரீவைஷ்ணவ குலபதி ”,
“வகுள பூஷ்ண பாங்கர்‌”, “பிரபந்த ஜன கூடஸ்தர்‌”, “வழுதி
நாட்டினை ஆண்ட வழுதி நாடர்‌” என்று பெருமைப்படுத்தி
அவரை உருவமாகச்‌ செய்து பூநூலிட்டுத்‌ தலைப்பில்‌ கிரீடம்‌ சூடி
வாழ்த்தி வணங்குகிறார்கள்‌. அவரது அரச வாழ்வும்‌ வரலாறும்‌
பின்னர்‌ ஆராயப்படும்‌. ஆழ்வார்களின்‌ வரலாற்றில்‌ அவரே
ஆழ்வார்களின்‌ தம்பிரான்‌ என்று அடையாளம்‌ காட்டப்‌
பெறுகிறார்‌. வைணவ சமயக்‌ கொள்கையை நம்மாழ்வார்‌
கொள்ளவில்லை. உணர்ந்த கோட்பாடுகளைச்‌ சொல்லித்‌
தமிழுக்குப்‌ பெருமை சேர்த்தார்‌. செம்மொழியாம்‌ தமிழ்‌ பெற்ற
வேதம்‌ என்று உலகத்தார்‌ புகழ்ந்துரைக்கச்‌ செய்தார்‌. அவரது
செய்யுள்களில்‌ தெய்வீகத்‌ தன்மை ஒளி வீசுவதைப்‌ பலரும்‌
உணர்ந்து போற்றினர்‌. குறிப்பாக ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ இவரது
இறைத்தன்மையை உணர்ந்து செய்யுள்‌ செய்தனர்‌. அவரைப்‌
பூுலவனாக மட்டுமின்றி அரசனாக அடையாளமிட்டனர்‌.
“திருவாய்மொழி புலவ! இருக்குருகூர்‌ மன்னா என்று
விவரித்தனர்‌. பலர்‌ அவரைக்‌ கூடஸ்தர்‌ என்று அழைத்தனர்‌.
குலத்தலைவன்‌ என்று தமிழ்க்‌ குலத்தின்‌ தலைமகன்‌
அழைக்கப்பட்டார்‌.

முதன்மைப்படுத்தப்பட்டவர்‌ நம்மாழ்வார்‌ எனினும்‌


முதலில்‌ தோன்றிய ஆழ்வார்‌ என்று கருதப்படவில்லை,
வடநூலார்‌ இவ்வாழ்வாரின்‌ காலம்‌ 4000த்துக்கும்‌ மேல்‌ என்று
கூறினர்‌. எனில்‌ அது மிகைப்படுத்திக்‌ கூறினர்‌ எனலாம்‌. நாலாயிரம்‌
61
வருடங்களுக்கு முன்னரே வைணவம்‌ இருந்தது என்று
உணர்த்திக்காட்டினர்‌. இவையெல்லாம்‌ மரபுவழிச்‌ செய்திகளே.
ஆய்ந்து அறிந்த உண்மை என்று எவரும்‌ ஏற்றுக்கொள்ளவில்லை.
முதலில்‌ தோன்றியதாக உணர்ந்து குறிப்பிட்டு இருக்கும்‌
முதலாழ்வார்கள்‌ என்போர்‌ பொய்கையார்‌, பூதத்தார்‌, பேயார்‌
என்பவராவர்‌. இ.ம்மூவரும்‌ ஒரு காலத்தவர்‌ என்று கருதுகின்றனர்‌.
மூறையே இவ்வாழ்வார்கள்‌ முதல்‌ திருவந்தாதி, இரண்டாம்‌
திருவந்தாதி, மூன்றாம்‌ திருவந்தாதி பாடினவர்‌ ஆவர்‌,
முதலாழ்வார்கள்‌ மூவரும்‌ கி.பி. 7ஆம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌
வாழ்நீதவர்‌ என்ற கருத்து நிலவுகிறது. மேலும்‌ சைவ சமயக்‌
குரவர்களான திருஞான சம்பந்தரின்‌ காலத்திற்குப்‌ பிற்பட்டவர்‌
என்றும்‌ கருதுகின்றனர்‌.
முதலாழ்வார்கள்‌ மூவரும்‌ முறையே பொய்கையாழ்வார்‌
காஞ்சியிலும்‌ பூதத்தாழ்வார்‌. கடல்மல்லையென்னும்‌
மாமல்லபுரத்திலும்‌ பேயாழ்வார்‌ திருமயிலையிலும்‌
தோன்றியவர்கள்‌. குறிப்பிட்டுக்‌ கூறுவதாயின்‌ தொண்டை-
நாட்டிற்‌ பிறந்த ஆழ்வார்கள்‌ என்று அறியப்படுவதால்‌ மூவேநீதர்‌
குடியினர்‌ அல்லாத தொண்டை நாட்டினைக்‌ கவர்ந்து ஆட்சி
கொண்ட பல்லவர்கள்‌ காலத்திலேயே வைணவம்‌ சிறப்பினைப்‌
பெற்றுவிட்டதாக நாம்‌ கருதலாம்‌. பல்லவர்களில்‌
விஷ்ணுகோபன்‌ என்ற திருநாமம்‌ பெற்ற அரசன்‌ காலத்தில்‌ இருந்த
வைணவ ஆசிரியர்கள்‌ அறியப்படவில்லை. இதுபோன்று சிம்ம
விஷ்ணு பல்லவன்‌ காலத்திலிருந்தவர்‌ பற்றியும்‌ தெரியவில்லை.
நரசிம்மவர்மன்‌ என்ற திருப்பெயரைச்‌ சூடிய பேரரசன்‌ காலம்‌
இ.பி. 7ஆம்‌ நூற்றாண்டின்‌ இடைப்பட்ட காலமாகும்‌.
இக்கால அளவிலேயே முதலாழ்வார்கள்‌ தோன்றி இருத்தல்‌
கூடும்‌. இம்மூவரும்‌ தாய்தந்தையர்‌ இன்றி இயல்பாகவே
தோன்றியவர்கள்‌ என்ற கருத்து மரபுவழிக்‌ கதையாகச்‌
சொல்லப்படுகிறது. இவர்களை அந்தண மரபினர்‌ என்றும்‌
உரைக்கின்றனர்‌. இயல்பாகவே தாயும்‌ தந்தையும்‌ இன்றித்‌
தோன்றியவர்‌ என்று கூறுவதால்‌ இவர்கள்‌ அந்தணர்கள்‌ என்பது
எதனால்‌? பிரம்மனை அந்தணன்‌ என்று புராணங்கள்‌
அழைப்பதால்‌ அவ்வாறு கூறினர்‌ போலும்‌. பிற்காலத்தில்‌
ஆராய்ச்சிகளில்‌ முதன்மைப்படுத்தப்பட்ட மறைமலையார்‌
62
வேளாளரிலிருந்து பிற சாதிகள்‌ தோற்றம்‌ என்ற புதுக்கவிதை
புனைந்துள்ளார்‌. கற்பனையில்‌ சிலரைக்‌ கடவுளாக்கிப்‌ பார்க்கும்‌
நிலை உறுதிப்பாடு அமைந்ததால்‌ மனிதன்தான்‌ தெய்வம்‌.
வள்ளுவர்‌ தம்‌ குறட்பா “வையத்துள்‌ வாழ்வாங்கு வாழ்பவன்‌
தெய்வத்துள்‌ வைக்கப்படும்‌” என்பதால்‌ சிறப்பாக வாழ்ந்தவர்‌
தெய்வம்‌ என்ற நிலை பெற்றனர்‌ என்பதாம்‌.
சைவ சமயக்‌ கோட்பாடுகளை அந்தணரான திருஞான
சம்பந்தர்‌ பெருமான்‌ தொடக்கம்‌ செய்து வளர்த்த பொழுது
இருநாவுக்கரசர்‌ என்ற சூத்திரர்‌ (வேளாளர்‌) பெருமுயற்சியால்‌
சைவம்‌ தழைத்தோங்கியது. வைணவர்களும்‌ தங்கள்‌
கொள்கைகளை அந்தணர்வழி எடுத்தோதி அதன்‌ தொடர்ச்சியில்‌
இருமழிசை ஆழ்வாரும்‌ கோட்பாடுகளைப்‌ பரப்பினர்‌ என்று
கருதயிடமுண்டு. உண்மையான திருமாலடியாரான
இருமழிசையார்‌ காலத்தில்‌ சூத்திர வேதம்‌ ஓதக்கூடாது
என்றநிலை. திருமாவின்‌ தெய்வீகத்‌ தன்மைகளை எடுத்தோதிய
காலம்‌ வளர்ச்சி பெற்றது இ.பி. 7 ஆம்‌ நூற்றாண்டில்‌ என்பது
ஆய்ந்து அறிந்த அறிஞர்கள்‌ கருத்தாகும்‌. இவர்‌ சூத்திரர்‌
என்பதாலும்‌ பிரம்ம சத்திரிய அரச மரபினரான பல்லவன்‌ காஞ்சி
நகரின்று வெளியேற்றினான்‌ என்று கருதயிடமுண்டு. முதல்‌ மூவர்‌
என்று அங்கீகாரம்‌ பெற்றவர்களின்‌ பாடல்கள்‌ மிகுதியும்‌
வெண்பாக்களால்‌ ஆனவை. காஞ்சித்திருநகர்தனில்‌ தோன்றிய
பொய்கையாழ்வார்‌ கி.பி. 7 ஆம்‌ நூற்றாண்டினர்‌ என்று
தெரியவருகிறது. பூதத்தாழ்வார்‌ என்பவர்‌ நரசிம்மவர்மன்‌
காலத்தவர்‌. க. பி. 600க்கு பிற்பட்டு வாழ்ந்தவர்‌ - மாமல்லன்‌ என்ற
சிறப்புப்பட்டம்‌ பல்லவ வேந்தர்‌ நரரிம்மனுக்குரியதாகும்‌.
பூதத்தாழ்வார்‌ "மாமல்லை கோவல்‌ மதிட்‌ குடந்தை என்பரே
ஏவல்ல எந்தைக்கிடம்‌” (பூதத்தாழ்வார்‌ 70) என்பதால்‌ இவர் கி.பி.
ஆம்‌ நூற்றாண்டின்‌ இறுதியில்‌ தோன்றியவர்‌ என்று அறிஞர்‌
கா.சு.பிள்ளை கருதுகிறார்‌.
பேயாழ்வார்‌ “விண்ணகரம்‌ வெஃகா விரிதிரைநீர்‌
வேங்கடம்‌” என்று பாடிய செய்யுளில்‌ (62) கச்ச நகரம்‌ எனும்‌
காஞ்சியிலுள்ள பரமேசுவர விண்ணகரத்தைப்‌ பற்றிக்‌
குறிப்பிட்டுள்ளார்‌. பரமேசுவர விண்ணகரம்‌ இரண்டாம்‌
பரமேசுவர வர்மன்‌ திருப்பெயரைத்‌ தாங்கியதாகும்‌. இதனால்‌
64
அறிஞர்சிவகளை சுப்பையா பிள்ளைதாம்‌ எழுதிய கொங்கு
நாட்டுக்‌ கோயில்கள்‌ என்ற நூலில்‌ பழம்‌ பாட்டு ஒன்றினைப்‌ பதிவு
செய்துள்ளார்‌.
“பொய்கை பூதன்‌ பேயார்‌ பொன்மழிசைக்‌ கோன்மாறன்‌
செய்ய மதுரகவி சேரர்பிரான்‌ - வையகமென்‌
தொண்டர்பாதாப்‌ பொடி பட்டர்பிரான்‌ கோதை
கட்டவிழ்ந்தார்‌ வாட்கவியுள்‌"
என்று குறிப்பிட்டுள்ளார்‌. மேலே கண்ட செய்யுட்களின்வழி
ஆழ்வார்களின்‌ காலம்‌ அறியப்படுகிறது. இப்பாடல்களில்‌ “ஐயன்‌
அருள்‌ மாறன்‌", “கோன்‌ மகிழ்‌ மாறன்‌”, “கோழியர்‌ கோன்‌",
“சேரர்பிரான்‌” என்று சேரர்குல மன்னன்‌ குலசேகர ஆழ்வாரும்‌
குறிப்பிடப்படுகின்றனர்‌. கோன்‌, பிரான்‌ என்று நம்‌
முன்னோர்களால்‌ அழைக்கப்பட்ட நம்மாழ்வார்‌ குலசேகர
ஆழ்வார்‌ ஆகிய இருவரும்‌ வேந்தர்‌ குடியினர்‌ என்ற தோற்றம்‌
நூல்களால்‌ தெளிவாக அறியப்படும்‌ உண்மையாகும்‌. குலசேகர
ஆழ்வார்‌ சேரர்‌ நாட்டின்‌ ஒருபகுதியை ஆண்டவர்‌. நம்மாழ்வார்‌
இருக்கூருகூர்‌ நகர மன்னன்‌ காரிமாறனின்‌ புதல்வராவார்‌.
பேரரசனின்‌ குலத்தவர்கள்‌ நகரங்களின்‌ ஆட்சியாளராகப்‌
பரிமளித்தனர்‌ என்று புராணங்களிலும்‌ இலக்கியங்களிலும்‌
வரையப்பட்டுள்ளது எண்ணுதற்குரியது.

நம்மாழ்வார்‌ பெருமானைப்‌ பெருமைபடப்‌ புகழ்ந்துரைத்து


வணங்கி வாழ்த்தியோர்‌ பலராவர்‌. வேதவிற்பன்னரான
ஸ்ரீபராங்குச முனிவரை வணங்கி வாழ்த்தி வைணவம்‌
மண்ணிற்குச்‌ சென்று தரிசிக்கச்‌ சென்ற இராமானுஜர்‌ பாடிய
பாடலாகப்‌ பதிவுசெய்யப்பட்டுள்ள பாடலைப்‌ பார்ப்போம்‌.
“இதுவோ திருநகரி ஈதோ பொருணை
இதுவோ பரமபதத்து எல்லை இதுவோதான்‌
வேதம்‌ பகர்ந்திட்ட மெய்ப்பொருளின்‌ உட்பொருளை
ஓதும்‌ சடகோபன்‌ ஊர்‌”
என்று குறிப்பிடுகிறது. வேத வேள்வி நிறைந்த ஊர்‌ என்று
திருக்குருகூர்‌ என்ற ஆழ்வார்‌ திருநகரி குறிப்பிடப்படுகிறது.
இப்பாடலைப்‌ பாடியவர்‌ ஸ்ரீஇராமானுஜரா? என்ற
கேள்விக்குரியதாகத்‌ திருநகரி என்ற சொல்‌ இடம்பெற்றுள்ளது.
65
வேதத்தை நாள்தோறும்‌ ஓதும்‌ ்ரீவைஷ்ணவர்கள்‌ இருக்கும்‌ இந்த
ஊரே பரமபதத்திற்குச்‌ செல்லும்‌ எல்லை என்றும்‌ வேதத்தின்‌
மெய்ப்பொருளின்‌ உட்பொருளை உணர்ந்த பெருமான்‌
சடகோபன்‌ என்றும்‌ அவரது ஊர்‌ என்று உரிமையுடைய மரபினராக
அடையாளம்‌ காட்டுகின்றார்‌. வேதத்தின்‌ கோட்பாடுகளை
ஊர்ஊராகச்‌ சென்று எடுத்தோதிய இராமானுஜர்‌ சொல்லிய
கருத்தாகப்‌ பதிவு செய்யப்பட்ட செய்யுள்‌ வேதம்பற்றி
அறிந்தோரைச்‌ சிந்திக்க வைக்கும்‌.
பட்டர்பிரான்‌ எழுதிய தனியன்‌
“ஊழ்வினையும்‌ வாழ்வினையும்‌ ஒதும்‌ குருகையர்‌ கோன்‌
யாழிசை வேதத்‌ இயல்‌”
என்றும்‌
“ஆன்ற தமிழ்‌ மறைகள்‌ ஆயிரமும்‌ - ஈன்ற
முதல்தாய்‌ சடகோபன்‌ மொய்ம்பால்‌ வளர்த்த
இதந்தா யிராமானுசன்‌"
என்றும்‌ குறிப்பிட்டுள்ளார்‌.
குருகையர்‌ அரசனாகிய சடகோபன்‌ ஓதும்‌ யாழிசை
வேத்தியல்‌ என்பதிலிருந்து நம்மாழ்வாரை அரச மரபினர்‌ என்று
அறியற்பாலதாம்‌. வேத்தியல்‌, பொதுவியல்‌ இரண்டில்‌
நம்மாழ்வார்‌ செய்வித்த வேதம்‌ வேதத்தியல்‌ தொடர்பானது.
“ஓதும்‌ குருகையர்‌ கோன்‌” வேதம்‌ ஓதும்‌ அரசராக அல்லவா
சடகோபள௭ைக்‌ குறிப்பிட்டுக்கூறுகிறது. வேத்தியல்‌
உயர்ந்தோர்க்குரியதாம்‌. ஓதுவிக்கும்‌ உரிமை அந்தணர்க்கு
மட்டுமே. திருவாய்மொழி ஆயிரத்தை வழங்கிய இறைமகன்‌
நம்மாழ்வாரை வைணவத்தின்‌ தாயாகவும்‌ இராமானுஜரைச்‌
சேயாகவும்‌ கருதி வைணவம்‌ வளர திருவாய்மொழியும்‌
இராமானுஜர்‌ பணியும்‌ இருந்தன என்று பட்டர்பிரான்‌ என்பவர்‌
குறித்துள்ளார்‌. அனந்தாழ்வான்‌,
"பவ ஆய்ந்த பெருஞ்‌
சீரார்சடகோபன்‌ செந்தமிழ்வே ந்தர்க்கும்‌
பேராத வுள்ளம்‌ பெற”

என்றார்‌. சொட்டை முனிகள்‌,


66
“மனத்தாலும்‌ வாயாலும்‌ வண்குருகூர்‌ பேணும்‌
இனத்தாரை யல்லாதிறைஞ்சேன்‌ - தனத்தாலும்‌
ஏதுங்‌ குறைவிலேன்‌ எந்தை சடகோபன்‌
பாதங்கள்‌ யாமுடைய பற்று"

என்றார்‌. நம்மாழ்வார்‌ குலத்தவரைச்‌ சிறப்பித்த விடத்து


“வண்குருகூர்‌ பேணும்‌ இனத்தார்‌” என்றார்‌. இதன்‌ பொருள்‌
இருக்குருகூர்‌ஆட்சியாளராக இருந்து மக்களைப்‌ பேணிக்காத்திடும்‌
இனத்தார்‌ என்றார்‌.
ஈச்வர முனிகள்‌ “தமிழில்‌ அருமறை செய்த அண்ணல்‌
சடகோபர்‌” என்றும்‌ சடகோபரைப்‌ பெருமைப்படுத்தும்‌
முகத்தான்‌ நாடு, ஊர்‌, ஆறு அடையாளமிட்டுத்‌ திருவழுதி நாடு
நம்மாழ்வார்‌ குலத்திற்கே உரித்து என்பதும்‌ ஊர்‌ திருக்குருகூர்‌
என்றும்‌ பெருணை ஆறு என்றும்‌ கூறி நாடும்‌ ஊரும்‌ ஆறும்‌
உடைய மரபினர்‌ என்ற தோற்றத்தைத்‌ தருகின்றார்‌. ஈச்வரமுனிகள்‌
“தமிழில்‌ அருமறை செய்த சடகோபரை அண்ணல்‌ சடகோபர்‌”
என்பது எத்தனைச்‌ சிறப்பிற்குரியது. மேலே சொல்லியுள்ள
வைணவப்‌ பெரியோர்கள்‌ கூறியிருப்பதிலிருந்து வேதம்‌ ஓதும்‌
மரபில்‌ வந்த இனத்தினைச்சார்ந்தவர்சடகோபர்‌ என்று தெளிவாகத்‌
தெரிய வருகிறது.
பதிவு செய்யப்பட்ட வெண்பா படல்‌ ஒன்று,

“குலமுங்‌ குணமுங்‌ குடியுங்‌ குறியும்‌


புலனும்‌ பொறியும்‌ பொருளு - நலனும்‌
வகுளா பரணன்‌ வளமார்குருகூர்‌
மகிழ்மாலிகையான்‌ வாம்‌”

என்பதால்‌ நம்மாழ்வார்‌ வேதம்‌ ஓதும்‌ உரிமையுடைய குலமும்‌


குடியும்‌ உரியவர்‌ என்பதாம்‌.

நம்மாழ்வார்‌ அருளிய திருவிருத்தம்‌ பற்றிக்‌ இடாம்பி


ஆச்சாரியர்‌ “குருகையர்‌ கோனுரைத்த திருவிருத்தம்‌” என்று
குறித்துள்ளார்‌. ஆட்சி அதிகாரம்‌ பெறாமல்‌ துறவியைப்போன்று
வாழ்க்கை உடையவராக அமைந்திட்ட சடகோபரைக்‌ குருகையர்‌
கோன்‌ என்று அனைவரும்‌ அழைத்தனர்‌.
67
பாரம்பரியமிக்க அரச மரபினர்‌ என்று தெளிவாக
உணரப்படும்‌. கி.பி. 14ஆம்‌ நூற்றாண்டின்‌ இறுதியிலும்‌ கி.பி.
15ஆம்‌ நூற்றாண்டிலும்‌ வாழந்தவரான ஸ்ரீவைஷ்ணவர்‌ மணவாள
மாமுனிகள்‌ “வழுஇப்‌ பெருமான்‌” என்று குறித்தருப்பதை நாம்‌
எண்ணி உணர்தல்‌ வேண்டும்‌. வழுதிப்‌ பெருமான்‌ என்று
அழைத்துள்ளதைச்சிலர்‌ சிந்திக்கவில்லை. திருவரங்கக்‌ கலம்பகம்‌
“வேதம்‌ தொகுத்துத்‌ தமிழ்ப்பாடல்‌ செய்த விமலன்‌” என்று
நம்மாழ்வாரைக்‌ குறிப்பிடுகிறது. இருவரங்கத்தந்தாதி
நம்மாழ்வாரைத்‌ “தென்‌ குருகைப்‌ பிரான்‌” என்று குறிப்பிடுகிறது.
திருவேங்கட மாலை “தமிழ்‌ வேதப்‌ பாராயணர்‌ சடகோபர்‌”
என்கிறது. கவிச்சக்கரவர்த்தி உடகோபரந்தாதி நம்மாழ்வாரைப்‌
பாண்டிய நாட்டின்‌ தலைவராகவே எடுத்து இயம்புகிறது.
“குருகைக்கு அரசன்‌”, “குருகை பிரான்‌”, “குருகூர்‌ மன்னன்‌",
“எங்கோன்‌” என்றெல்லாம்‌ கம்பர்‌ சடகோபரை அழைக்கிறார்‌.
அரச மரபினரல்லாத ஒருவரை மேலே கண்டவாறு கவி அரசர்‌
கம்பர்‌ அழைத்து இருப்பாரோ? கவிச்சக்கரவர்த்தி கம்பர்‌
நம்மாழ்வாரைஅரச மரபினராகவும்‌ கம்பரைஆதரித்த சடையப்ப
வள்ளலை வேளாளராகவும்‌ அடையாளமிட்டுள்ளார்‌. மேலும்‌
நம்மாழ்வாரைப்‌ பற்றிய விவரங்களைச்‌ சடகோபரந்தாதி என்ற
தலைப்பில்‌ அறிய இருக்கின்றோம்‌.
வைணவ இலக்கிய உரைகளில்‌ தமிழரிலும்‌ மாறான
தாஸ்யுக்கள்‌ பற்றித்‌ தெரியவருகிறது. வடபுலம்‌ சிந்துவெளி
நாகரிகமும்‌ இமயத்தின்‌ தொடர்பும்‌ தமிழர்க்கே உரித்தனவாகச்‌
சான்றுகள்‌ பல உண்டு. தமிழ்‌ மரபில்‌ தலைவன்‌ தலைவி என்று
கொள்ளப்பட்டவர்கள்‌ காதலால்‌ உந்தப்பட்டு, தோல்வியைச்‌
சந்தித்த தலைவன்‌ மடல்‌ ஏறுதலும்‌ சான்றோரிடம்‌ சென்று

முறையிடுதலும்‌ தமிழ்மரபு. மகளிர்‌ மடலேறுதல்‌


மறுக்கப்பட்டுள்ள இலக்கிய இலக்கணம்‌ நமக்கே உரியது.
இருவாய்மொழியில்‌ திருவிக்கிரமனைத்‌ தலைவனாக்கு, நம்‌
சடகோபன்‌ பராங்குச நாயகியாகத்‌ தலைமகளாக வருணனை
செய்தும்‌ பராங்குச நாயகி மடல்‌ ஏற எண்ணியதும்‌ நம்‌
இலக்கணத்திற்கு இழுக்கு என்று ஆழ்வாரைத்‌ தமது
இலக்கியத்தில்‌ மடல்‌ ஏறுதல்‌ நிகழா வண்ணம்‌ வரைந்துள்ளார்‌.
68
கடவுள்‌ போன்று கருதப்படுவோர்‌ மடலேறலாம்‌ என்று
இலக்கண நூலான பன்னிருபாட்டியல்‌ விதி விலக்கு அளிக்கிறது.

“மடன்மாப்‌ பெண்டிர்‌ ஏறார்‌ ஏறுவர்‌


கடவுள்‌ தலைவராய்‌ வருங்காலை
கடவுள்‌ மேற்றே காரிகை மடலே"

என்பதால்‌ நம்மாழ்வாரின்‌ தருவாய்மொழியில்‌ மடல்‌ பற்றிய


இலக்கண நெறியில்‌ மாற்றம்‌ ஏற்பட்டுள்ளது. இருவாய்மொழி
அகப்பொருள்‌ பதிகங்களில்‌ கிளவித்தலைவனும்‌
பாட்டுடைத்தலைவனும்‌ திருமாலே. தலைவியாக இலக்கியத்தில்‌
எடுத்தோதப்பட்டவர்‌ நம்பிராட்டியான நம்மாழ்வார்‌.
இருபாலரும்‌ தலைமக்களே ஆவர்‌. தலைமக்களுக்குரிய
இலக்கியச்சான் றுகளில்‌ ட
உணர்த்தப்பட் நம்மாழ்வார்‌ உயர்ந்தோர்‌
பிரிவினர்‌ என்பதால்‌ எந்தவித ஐயமும்‌ எவரும்‌ கொள்ளத்‌
தேவையில்லை. நம்மாழ்வாரை, சடகோபமுனியை உல.ற்குத்‌
தெரிவித்த மதுரகவியாழ்வார்‌ தமிழ்ச்‌ சடகோபன்‌ என்று
நம்மாழ்வாரைஅடையாளமிட்டார்‌. இலக்கியங்களை நாட்டிற்கு
நல்கிய நாடாளுவார்‌ பாண்டியர்‌ ஆதலால்‌ அவரை உலகம்‌
தமிழ்நாடன்‌ என்று அடையாளப்படுத்தியது. இதனாலேயே
இன்தமிழ்தந்த சடகோபமுனியை நூல்வல்லார்தமிழ்ச்சடகோபன்‌
என்றும்‌ தமிழ்மறை தந்த பராங்குசர்‌ என்றும்‌ போற்றினர்‌.
இளவரசர்‌ பட்டத்தைக்‌ கூடப்‌ பெற்றிடாமல்‌ துறவறம்‌
மேற்கொண்டு புளியடியில்‌ வாழ்ந்த நம்மாழ்வார்‌ இலக்கண,
இலக்கியமும்‌ வடமொழியும்‌ உணர்ந்த இன்கவியாவார்‌. பிற
கவியாளர்கள்‌ தமிழன்‌ என்று அழைக்கப்பட்டனர்‌. ஆனால்‌
சடகோபமுனியைத்‌ தமிழ்ச்சடகோபன்‌ என்று தமிழ்மொழிக்கே
உரியவர்‌ என்று மதுரகவியார்‌ குறிப்பிட்டார்‌.
ஆழ்வாரை ஆசாரியர்கள்‌ தம்‌ வியாக்கியானங்களில்‌
இருடிகளிலும்‌ உயர்ந்தோராகக்‌ கருதி எடுத்தோதித்‌ தொழும்‌
இயல்புடையோர்‌. உரையாளர்்‌சிலரைச்‌ சுட்டிக்காட்டும்‌ போழ்து
அவரைத்‌ தமிழர்‌ தமிழன்‌ என்று குறித்தனர்‌. சிலர்‌ அதனைத்‌
தவறாகக்‌ கருதித்‌ தமிழரை இழித்துரைத்தனர்‌. அந்தணரான
பூதத்தாழ்வார்‌ முதலாழ்வாரின்‌ மூவரில்‌ ஒருவர்‌ இவர்‌ தம்மை
“பெருந்தமிழன்‌ என்று கூறிக்‌ கொண்டுள்ளார்‌. ” தமிழன்‌ என்று
திருவள்ளுவரையும்‌ தமிழர்‌ என்று தொல்காப்பியரையும்‌ பிற
69
உரையாகசிரியரையும்‌ குறிப்பிட்டுக்‌ கூறுகிறார்‌ நம்பிள்ளை.
விக்கிரம சோழன்‌ காலத்திய கல்வெட்டு “தென்‌ வேந்தர் கூநிமித்த
செந்தமிழர்‌ தென்‌ கோயில்‌ பொன்‌ மேய்ந்து” என்று
திருஞானசம்பந்தரைக்‌ குறிப்பிடுகிறத. இருவேறு செய்யுள்கள்நம்‌
இலக்கியத்தில்‌ உண்டு. ஒன்று சான்றோர்‌ செய்யுள்‌. மற்றொன்று
வேளாண்பாட்டு என்பதாம்‌. தமிழ்‌ வேதமான திருவாய்மொழி
சான்றோர்‌ செய்யுள்‌ வகையைச் சார்ந்ததாகும்‌.
தமிழர்‌ என்றசொல்‌ இகழ்ச்சிக்‌ குறிப்பு எனில்‌
திருஞானசம்பந்தர்‌, இருவள்ளுவர்‌, தொல்காப்பியர்‌ போன்ற
தமிழர்‌ தாழ்வுநிலை பெற்றிருந்தவர்‌ அன்று - குடமுனியாகிய
அகத்தியனைத்‌ தமிழ்‌ முனி என்று உணர்த்திக்‌ கூறியிருப்பதை
உணர்தல்‌ வேண்டும்‌. வடபுலம்கூட எல்லா முனிவரிலும்‌
உயர்ந்தவராகக்‌ கருதப்படுவர்‌ தமிழ்முனியாகிய அகத்தியரே
ஆவார்‌. தமிழோ, தமிழ்‌ இலக்கியமோ, தமிழ்‌ இலக்கணமோ,
தமிழர்களோ, தமிழகமோ தாழ்வுநிலையுடையவரன்று.
இதுபோன்று தமிழ்‌ வேதம்‌ தந்த நம்‌ ச௪டகோப முனிவர்‌ உயர்வு
நிலை பெற்றிருந்த உயர்குடிப்பிறப்பினர்‌. நம்மாழ்வாரைப்‌ பற்றிச்‌
சுட்டிக்காட்டும்பொழுது தந்தையும்‌ தாயும்‌ இருமரபும்‌ தூயவர்‌
என்று நூலாசிரியர்‌ பலரும்‌ சொல்லும்‌ நிலை அறியக்‌
இடக்கின்றது. தமிழ்‌ அந்தணர்‌ பலரும்‌ தமிழன்‌ என்று நம்‌
நூல்களும்‌ கல்வெட்டுகளும்‌ பறைசாற்றும்பொழுது அவர்‌
த.மிழரில்லை என்று வரலாறு முரண்‌ செய்வது தமிழ்ச்‌ சமூகத்தை
அவமதிக்கும்‌ செயலாகும்‌. தங்கள்‌ குல மன்னரான “தீந்தமிழ்‌
வேந்தன்‌ பராங்குசன்‌", “தீந்தமிழ்நா கோமான்‌” என அழைக்கிறது.
தொண்டை நாட்டில்‌ மூன்றாம்‌ நந்திவர்ம பல்லவனைப்‌ பாடிய
நந்திக்‌ கலம்பகத்தில்‌ “சேரன்‌ சோழன்‌ தீமிழ்மன்னர்‌” என்று
சுட்டிக்காட்டும்பொழுது பாண்டியரைத்‌ தமிழ்‌. மன்னர்‌ என்றார்‌.
பாண்டியரைப்‌ பாண்டிக்‌ கோவை “தீந்தமிழர்‌ கோமான்‌” என்று
அழைக்கிறது. எந்த வடநூலும்‌ தொன்றுதொட்டு வந்த நம்‌
அரசமரபைக்‌ கீழான மரபாகக்‌ கூறியது கிடையாது. இடைச்‌
சொற்களாக வடபுலத்தார்‌ சிலர்‌ சொல்லப்பட்டதும்‌ நம்மில்‌
அரசகுடி இல்லை என்று நம்மிலே சிலர்‌ ஒப்புக்‌ கொண்டு நூல்‌
ஏற்பட்டது. தாஸ்ய நாமம்‌ பெற்ற சிலர்‌ எல்லோரையும்‌
தஸ்யுக்களாக எழுதிய சமூக வரலாறு ஏற்புடையதன்று.
நம்மாழ்வார்‌ வழித்தோன்றல்கள்‌
பாண்டிய அரசர்களின்‌ தோன்றல்கள்‌ குடியிருந்துவரும்‌
ஊர்களில்‌ நம்மாழ்வார்‌ நினைவாக ஏற்பட்ட ஸ்ரீ பராங்குச
நல்லூரும்‌ ஒன்று. நம்மாழ்வார்க்கு ஸ்ரீபராங்குசன்‌ என்ற பெயரும்‌
வழங்கப்பெற்றிருந்தது. அவரையே ஆழ்வார்‌ எனவும்‌
அழைக்கின்றனர்‌. அவர்‌ பெயரில்‌ அமைந்த ஊரான ஆழ்வார்‌
தோப்பு தற்போது மேல ஆழ்வார்‌ தோப்பு, &ழ ஆழ்வார்‌ தோப்பு
என இரண்டாக உள்ளது.
நம்மாழ்வார்‌ இ.பி. 9ஆம்‌ நூற்றாண்டில்‌ பாண்டியர்‌ குலத்தில்‌
காரிமாறனுக்கும்‌ உடைய நங்கையார்க்கும்‌ திருக்குருகூரில்‌
மகனாகப்‌ பிறந்தார்‌. ஆழ்வார்‌ திருநகரியில்‌ அமைந்திருக்கும்‌
ஆதிநாதர்‌ ஆதிநாத வல்லியார்‌ ஆலயத்தில்‌ திருப்புளியினடியில்‌
தவமிருந்த அருள்பெற்றுத்‌ திருவாய்மொழி உள்ளிட்ட
பாடல்களைப்‌ பாடினார்‌. தமிழ்நாட்டில்‌ வைணவம்‌ தழைக்கச்‌
செய்தவர்களில்‌ நம்மாழ்வார்தலையாயவர்‌ஆவார்‌.
நம்மாழ்வார்‌ பிறந்த பகுதி திருவழுதி வளநாடு என
அழைக்கப்பெற்றது. தாமிரபரணி ஆற்றின்‌ கரை ஊரான
இருவைகுண்டத்துக்கு அருகில்‌ நவதிருப்பதிகள்‌ இருக்கின்றன.
அவை திருவைகுண்டம்‌, ஆழ்வார்‌ திருநகரி, வரகுணமங்கை,
திருப்புளிங்குடி, பெருங்குளம்‌, துலைவில்லி மங்கலம்‌,
இரட்டைத்‌ திருப்பதி, தென்திருப்பேரை, திடுக்களூர்‌ என்பன.
திருவைகுண்டம்‌ 'கள்ளர்பிரான்பதி என்றும்‌
அழைக்கப்படும்‌. ஸ்ரீவைகுநீ்தமே ஸ்ரீவைகுண்டமாயிற்று. இ.பி.
15ஆம்‌ நூற்றாண்டைச்‌ சேர்ந்த ஸ்ரீ வைகுண்டம்‌ கோட்டைக்‌
கல்வெட்டு பாண்டியர்‌ குடியைச்‌ சேர்ந்தவனுடைய பெயரில்‌
அமைந்துள்ளது. இந்த மண்கோட்டை முதலில்‌ பாண்டிய
அரசர்களின்‌ தோன்றல்களிடமிருந்தது.
நெல்லை நெடுமாறனும்‌ டாக்டர்‌ ஆ. தசரதனும்‌ இணைந்து எழுதிய
திலைமைக்கறார்கள்‌ என்னும்‌.பிற்கால மூவேந்தர்சள்‌- தொகுஇி-7என்னும்‌
நூலில்‌ இடம்பெறும்‌ நம்மாழ்வார்தொடர்பானகட்டுரை (பக்‌. 81-89)
71
ஸ்வஸ்திஸ்ரீ பிரசாததந்து செய்தருளிய
திருமுகப்பாடி திரிபுவன மகாதேவி சதுர்வேதி
மங்கலத்து ஸ்ரீ வைகுந்தனான ராஜேந்திர சதுர்வேதி
மங்கலத்து திரு தேவர்‌ கோவில்‌ நம்பு செய்வாருக்கும்‌
ஸ்ரீ வைஷ்ணவர்களில்‌ அம்மான்‌ ஜெகரட்ச
நாடாள்வார்கள்‌ பேரால்‌ ஜெகரட்ச கைக்கோள வரியும்‌
எம்பெருமானடியார்‌ வரியும்‌ கற்பித்த ....
தென்காசிப்‌ பாண்டியர்களே ஜெகரட்ச நாடாள்வானான
இந்த ரீவைஷ்ணவனை மாமன்‌ என்கிறார்கள்‌. மதிப்போடு
'நாடாள்வார்கள்‌' என்கிறார்கள்‌. ஸ்ரீ வைஷ்ணவர்களில்‌
பிராமணர்களும்‌ நாடார்களும்‌ அடங்குவர்‌. நாடார்கள்‌
நம்மாழ்வார்‌ மரபில்‌ வந்தவர்கள்‌ ஆவர்‌. ஜெகரட்ச நாடாள்வான்‌
இ.பி. 75ஆம்‌ நூற்றாண்டில்‌ ஆட்சியாளனாக இப்பகுதியிலும்‌
இக்கோட்டையிலும்‌ இருந்துள்ளான்‌ எனத்‌ தெரிகிறது.
இதன்‌ தொடர்ச்சியாகவே திருவைகுண்டத்தில்‌, கி.பி.
16ஆம்‌ நூற்றாண்டின்‌ நடுவில்‌ திருவரங்கத்திலிருந்து
இருவனந்தபுரம்‌ செல்லும்‌ வழியில்‌ பெருமாள்‌ தம்பிரான்‌
என்பவர்‌ கள்ளர்பிரான்‌ பதிக்கு வந்து சென்றதாகப்‌ பெருமாள்‌
தம்பிரான்‌ வில்லுப்பாட்டுக்‌ கதையைப்‌ பாடிய அருதக்குட்டிப்‌
புலவர்‌ இ.பி. 7683இல்‌ குறிப்பிடுகிறார்‌. இ.பி. 15ஆம்‌
நுற்றாண்டிலும்‌ இ.பி. 16ஆம்‌ நூற்றாண்டிலும்‌ தென்கா?ப்‌
பாண்டியர்களின்‌ ஆட்சியே திருவைகுண்டப்பதியில்‌ நடந்ததாக
அறியலாம்‌. இ.பி. 16ஆம்‌ நூற்றாண்டில்‌ விசயநகரப்‌
பேராண்மையில்‌ பாண்டியர்‌ இப்பகுதியில்‌ ஆட்சி செய்திருந்தனர்‌.
இவர்களிருவரின்‌ ஆதரவுள்ளவனாக இருந்த ஸ்ரீவைஷ்ணவ
நாடாள்வானையே பெருமாள்தம்பிரான்கண்டு சென்றிருக்கலாம்‌.
ஆனால்‌, இ.பி. 1683இல்‌ மதுரையில்‌ திருமலை நாயக்கன்‌
விசயநகர மேலாண்மையிலிருந்து விடுபட்டுத்‌ தன்னாட்சி
செலுத்தியபொழுது திருவைகுண்டம்‌ கோட்டையும்‌
திருவைகுண்ட கள்ளர்பிரான்‌ கோயில்‌ €பண்டாரக்காரிய
அதிகாரிகளும்‌ பிள்ளைமார்களிடம்‌ சென்று விட்டார்‌ என
அறியமுடிகின்றது. இதற்கு மதுரை நாயக்கனின்‌ தென்பாண்டிச்‌
சார்பாளனான வடமலைப்‌ பிள்ளையனே காரணம்‌. இதனை
அடுத்தே மடத்து ௮ச்சம்பாடு கல்வெட்டு (௫. பி. 1686) உணர்த்தும்‌
72
ஊர்தானம்‌ ஏற்பட்டுள்ளது. இதனை வேறொரு பகுதியில்‌
காணலாம்‌.
இருவைகுண்டத்தில்‌ தம்‌ ஆட்சியை இழந்த பாண்டியகுலத்‌
தோன்றல்களான ஸ்ரீவைஷ்ணவ நாடார்கள்‌ உள்ளிட்ட
நிலைமைகள்‌ ஸ்ரீ பராங்குசநல்லூரான ஆழ்வார்‌ தோப்பில்‌ இ.பி.
76ஆம்‌ நூற்றாண்டுக்குப்‌ பின்னர்க்‌ குடியேறியிருக்கலாம்‌.
இதற்கான மற்றொரு சான்றாக, கி.பி. 76ஆம்‌ நூற்றாண்டில்‌
வேளாளர்‌ குலப்புலவரான சிதம்பர நாதக்‌ கவிராயரால்‌
பாடப்பெற்ற சீவலமான்கதையில ்‌, தென்காசிப்‌ பாண்டியனான
சவலமாறன்‌ தென்பாண்டி நாட்டில்‌ ஒரு பகுதியான
இருவைகுண்டப்‌ பகுதி அடங்கிய நவதிருப்பதி பகுதிகளில்‌
அந்தணர்‌ 1008, அரசகுலத்தவர்‌ 8000, வணிக குலத்தவர்‌ 8000,
வெளளார்‌ 10,000, பஞ்சமராகிய பல பட்டடை கள்
87,000 ‌
பேரைக்‌
குடியேற்றி அவர்களுக்கு மனைகளையும்‌ ஒதுக்கினான்‌ என
உள்ளது.
“வழுதியர்‌ குலங்கள்‌ வாழும்‌ மணப்படை வீடு தன்னில்‌”
என அக்கதைப்பாட்டு கூறுவதால்‌ ஆழ்வார்‌ தோப்பு போன்ற
ஊளர்களான மணப்படை வீடுகளில்‌ அரசகுலத்தனர்‌
குடியமர்த்திருந்தனர்‌
என அறியலாம்‌.
இவ்வைஷ்ணவ நாடார்கள்‌ தாடாழ்வான்‌ குலத்தினர்‌
எனவும்‌ அழைக்கப்பெற்றனர்‌. குலசேகரபாண்டியனான ஐவர்ராசா
பற்றிய கதைப்பாட்டிலும்‌ அப்பாண்டியனின்‌ தம்பிமார்கள்‌
“தாடாழ்வான்‌ தம்பிமார்கள்‌” என அழைக்கப்‌ பெற்றள்ளனர்‌.
தாடாழ்வான்‌ என்பது திருமாலுக்குரிய பெயர்‌. சோழனுக்கும்‌
தாடாழ்வான்‌ என்ற பெயர்‌ இருந்தது. நம்மாழ்வாரும்‌ தாடாழ்வான்‌
குலத்தில்‌ வந்தவராகவே அறியப்படுகின்றார்‌.
தாடாழ்வான்‌ குலமும்‌ நம்மாழ்வாரும்‌
தாடாழ்வான்‌ ஆகிய திருவிக்கிரமனை அதாவது
விஷ்ணுவைத்‌ தலைவனாகக்‌ கொண்டதே வைணவ மதம்‌.
ஆதிசேடனின்‌ மறு அவதாரமாகவே நம்மாழ்வார்‌ பாண்டியர்‌
மரபினர்‌ என்பதில்‌ யாருக்கும்‌ வேறுபாடு இல்லை. ஆனால்‌
நம்மாழ்வார்‌ அரசகுலத்தவரா அன்றி வேளாளரா என்ற கருத்து
வேறுபாடு பலரிடையே நிலவி வருகிறது. பிரபந்தத்‌ திரட்டு எனும்‌
73
நூல்‌ விஷ்ணுவின்‌ வழிவந்தவர்கள்‌ அரசகுலத்தவர்கள்‌ என்கிறது.
எனவே தாடாழ்வான்‌ குலத்தவர்‌ அரசகுலத்தவரே. பலசெப்புப்‌
பட்டயங்களும்‌, ஓலைச்‌ சுவடிகளும்‌, ஆவணங்களும்‌
அரசகுலத்தவரைத்‌ தாடாழ்வான்‌ குலத்தினர்‌ எனச்சுட்டுகின்றன.
சைவத்தையும்‌ வைணவத்தையும்‌ ஒருங்கே வளர்த்தவர்கள்‌ அரச
குலத்தவர்‌. இந்நிலையை இன்று வரை அரச குலத்தவராகிய
நாடார்கள்‌ கடைப்பிடித்து வருகின்றனர்‌.
இனத்தான்‌ கோயில்‌ என்ற நாராயணசாமி கோயில்கள்‌
இனத்தான்‌ கோயில்‌ என்ற பெயர்‌ கொண்ட வைணவ
வழிபாட்டுக்‌ கோயில்கள்‌ தூத்துக்குடி மாவட்டத்தில்‌ மிக
அதிகமான ஊர்களில்‌ அமைந்துள்ளன குறிப்பாகத்‌ தண்டுபத்து,
சீர்காழி, கொட்டங்காடு, கச்சனாவிளை போன்ற சான்றோர்சமூகம்‌
உள்ள ஊர்களில்‌ இவை இருப்பதை அறியலாம்‌. வைணவக்‌
கோயில்களில்‌ இன்றும்‌ நாடாரே வணக்கம்‌ கொள்ளும்‌ நிலையை
இம்மாவட்டத்தில்‌ பார்க்கிறோம்‌. குறும்பூர்‌ ஆதிநாராயணப்‌
பெருமாள்‌ கோயில்‌ நாலுமாவடி நாடாக்களின்‌ வரலாற்று உரிமை
படைத்த கோயிலாகும்‌. இது போன்று ஆழ்வார்‌ தோப்பில்‌
விஷ்ணுகோயில்‌ திருவிழாவை இன்றும்‌ நாடார்களே நடத்தி
வருகின்றனர்‌.
மூதறிஞர்‌ அருணாசலக்‌ கவுண்டர்‌ தாம்‌ உரைசெய்த
முத்திவழி அம்மானையில்‌ ஆழ்வார்‌ தோப்பு என்ற அழகான
நன்னிலத்தில்‌ வாழ்‌ தமிழ்‌ நாடனது வம்சத்திலே உதித்தோன்‌ என்ற
பாடல்‌ அடிக்கு நம்மாழ்வார்குலத்திலே பிறந்தவர்‌ என்று ஆழ்வார்‌
தோப்பு நாடார்‌ குலத்தவனான நூலாசிரியனைச்‌
சுட்டிக்காட்டுகின்றார்‌. இவனைப்‌ பாண்டியன்வழி நாடான்‌ எனக்‌
கருதி இருக்கலாம்‌. ஆகவே இனத்தான்‌ கோயில்கள்‌ என்பன
வைணவ வணக்கம்‌ கொள்ளும்‌ மரபு வழிக்‌ கோயில்களாகும்‌.
இனத்தான்‌ கோயில்‌ என்று நாராயணரை வழிபடும்‌
சமூகமாகிய சான்றோரைக்‌ கூறுகின்றனர்‌. இனத்தான்‌ கோயிலைக்‌
இராம மக்கள்‌ நாராயணசாமி கோயில்‌ என்று அழைப்பார்கள்‌.
இனத்தான்‌ கோயிலோடு தொடர்புடைய மற்றொரு கோயில்‌
இராசாக்கள்‌ கோயிலாகும்‌. இராசாங்கோவில்‌ என்றும்‌ இது
வழங்கப்பெறும்‌. ஏறத்தாழ 40க்கு மேற்பட்ட ஊர்களில்‌ இனத்தான்‌
74
கோயில்‌ அல்லது பள்ளிப்‌ படைகளில்‌, ஐவர்ராசா வணக்கம்‌
அல்லது பாண்டியர்‌ வணக்கம்‌ உள்ளது.
தாதன்‌ கூட்டத்து வைணவச்‌ சான்றோர்‌
தூத்துக்குடி மாவட்டம்‌ பேரிலோவன்பட்டி,
கோவில்பட்டி, சேமப்புதார்‌ வாழும்‌ தாதன்‌ கூட்டத்து நாடார்கள்‌
வைணவர்களில்‌ சிறப்புடையவர்கள்‌. இது போன்று விருதுநகர்‌
மாவட்டம்‌ சிவகாசி, விளாம்பட்டி, தேனியில்‌ வாழும்‌
நாடார்களில்‌ சிறந்த வைணவர்கள்‌ உண்டு. இன்றுவரை திருமால்‌
வணக்கத்தைத்‌ தொடர்ந்து நடத்துவதும்‌ புரட்டாசி மாதம்‌ விரத
நோன்பும்‌ புலால்‌ மறந்து உண்டு வாழும்‌ சீரிய பழக்க
வழக்கங்களையும்‌ இவர்கள்‌ கொள்வார்‌. சான்றோர்‌ குலமக்களைப்‌
போன்று வேளாளர்‌ யாரும்‌ இத்தகைய வைணவராக
ஒழமுகவில்லை.
நம்மாழ்வார்‌என்ற பெயரை நாடார்கள்‌ வைத்துக்‌ கொள்ளும்‌
வழக்கு இம்மக்களிடையே காணப்படுகிறது. ஆனால்‌ வெள்ளாளர்‌
தம்மைச்‌ சைவப்‌ பிள்ளைமார்‌ என்று உரிமை பாராட்டிக்‌
கொள்வதிலும்‌, வெள்ளாளர்களில்‌ தம்மை உயர்ந்தோர்‌ என்று
பெருமை கொள்வதிலும்‌ அக்கறை செலுத்துகின்றனர்‌.
பூதூரில்‌ வந்துதித்த புண்ணியனோ
பூங்கமமும்‌ தாதர்மகன்தான்‌ இவனோ
தூதுவந்த நெடுமாலோ இம்மூவரில்‌
மணவாள மாமுனிகளவில்‌ இவர்யார்‌?
என்பதில்‌ தாதர்‌ குறிப்பிடப்படுகின்றனர்‌.

மகர நெடுங்குழைக்காதர்‌ வழிபாடு


தூத்துக்குடி மாவட்டத்தில்‌ தென்திருப்பேரை மகர
நெடுங்குழைக்காதர்‌ கோயில்‌ திருவிழாவில்‌ இருமலாபுரம்‌
நாடார்களுக்கு முதல்‌ மரியாதை இன்றும்‌ செய்யப்படுகிறது.
தென்திருப்பேரை, ஆர வார்திருநகரி போன்ற ஊர்களில்‌ வாழும்‌
தென்கலை அய்யங்கார்கள்‌ தம்மை அரசமரபினர்களிலிருந்து
அந்தணராக மாறியோர்‌ என்றும்‌ நாடார்களாக இருந்தவர்‌ என்றும்‌
கூறுகின்றனர்‌. குழைக்காதர்‌ என்று பெயரிட்டு அழைத்துக்‌
75
கொள்ளும்‌ தென்கலை அய்யங்காரையும்‌ நாடார்களையும்‌
இன்றும்‌ வழக்கில்‌ காணலாம்‌.
இதுவரை கூறப்பெற்ற கருத்துகளிலிருந்து, நம்மாழ்வார்‌
அரச குலத்தவர்‌ என்றும்‌ பாண்டிய அரச மரபினர்‌ என்றும்‌ பிற
அறிஞர்கள்‌ ஒத்துக்‌ கொள்வதும்‌ தூத்துக்குடி மாவட்ட
நாடார்களுக்கு அரச அந்தஸ்து இருந்ததற்கான வரலாற்றுச்‌
சான்றுகளும்‌ அம்மாவத்தில்‌ நாடார்களே வைணவ
வழிபாட்டுடன்‌, நம்மாழ்வாரின்‌ நாமமும்‌ பெற்று
வருபவர்களாயிருப்பதற்கான சான்றுகளும்‌ வைணவத்தைக்‌
கடைப்பிடிக்கும்‌ வெள்ளாளர்‌ நம்மாழ்வாரோடு தொடர்புடார்‌
என்றும்‌ அறிந்து கொள்ளலாம்‌.
முத்திவழி அம்மானை
ஆழ்வார்‌ தோப்பு ஊரில்‌ நம்மாழ்வாரின்‌ இனத்தாரான
நிலைமைக்காரர்கள்‌ வாழ்ந்து வருவதை, அவ்வூர்‌,
இராமமுனி€ப்பான சுவீகரனார்‌ என்பவர்‌ இ.பி. 1887இல்‌ பாடிய
முத்திவழி அம்மானை என்ற நூலில்‌ காணலாம்‌. இவர்‌ தம்மை
நம்மாழ்வார்‌ இனத்துதித்தோன்‌ என்்‌கறார்‌.
பட்சமுடன்‌ அம்மானைப்‌ பாவில்‌ இசைத்தோன்‌
இப்புவியில்‌
தெட்சணா பூமியிலே திருநெல்வேலி நாட்டில்‌
ஆழ்வார்‌ தோப்பு என்ற அழகான நன்னகரில்‌
வாழ் தமிழ்‌ நாடனது வமிசத்திலே வுதித்தோன்‌
வேறு முகமாக விக்கிரப்பத்திகொண்ட
ஆறுமுக நாடன்‌ அருமை மகனாய்‌ உதித்த
ராமலிங்க நாடன்‌ இந்த நாட்டில்‌ வசிக்கையிலே...
ராசேந்திரன்‌ எனவே ஞானமதில்‌ பேரு பெற்றோன்‌
வாசமுடன்‌ பெற்றெடுத்த மைந்தன்‌ சுவீகரன்தான்‌...
சுவீகரனாரின்‌ தந்‌ைத இராசேந்திரன்‌. அவர்‌ தந்‌ைத
இராமலிங்க நாடான்‌. அவர்‌ தந்த ஆறுமுகநாடான்‌.
ஆறுமுகநாடான்‌ என்பவர்‌ நம்மாழ்வாரி ன்‌ இனத்தில்‌
தோன்றியவர்‌.
திருக்குருகூர்‌ மகிழ்‌ மாறன்‌ பவனிக்குறம்‌
இந்நூலின்‌ பழைய ஏட்டுப்‌ பிரதிகளைப்‌ பெருநிலக்கிழார்‌
பெரியன்‌ வெ.நா. சனிவாசஜய்யங்கார்‌ பதிப்பித்துள்ளார்‌. இந்நூல்‌
ஆரியர்‌ யார்‌ என்று தெரியவில்லை. திருக்குருகூர்‌ மகிழ்‌மாறன்‌
பவனிக்குற.ம்‌ என்ற நூல்‌ நம்மாழ்வாரின்‌ சிறப்புகளையும்‌
பெருமையையும்‌ குறமகள்‌ கூறுவது போன்று எடுத்தோதுகிறது.
ர்மருவியதிருமகள்தழுவுந்
இருமாலடிபரவிய பெருமான்‌
போர்மதனன்பணியுநம்மாழ்வார்‌
பொதியமலைக்‌ குறத்திநானம்மே
மறையாகியநிறை திருமந்திர
முறையாலிசையாயிரந்தமிழ்தேர்‌
பொறைகூரிறை செண்பகமாறன்‌
பொதியமலைக்‌ குறத்திநானம்மே
இருமாலடி வணங்கிய ஸ்ரீ வைஷ்ணவ குலத்தவராகிய
பெருமான்‌ நம்மாழ்வார்‌ ஆவார்‌. போர்‌ மதனன்‌ ஆகிய
மன்மதவேள்‌ பணியும்‌ நம்மாழ்வாரின்‌ பொதியமலை என்று
குறிப்பிடுகின்றார்‌. பொதிய மலையில்‌ அகத்தியர்தவம்‌ இருந்தார்‌
- வாழ்ந்தார்‌ எனினும்‌ அருந்தவம்‌ இருந்த குறுமுனியாம்‌ அந்தணர்‌
அகத்தியனுக்குரியது பொதியமலை அன்று. பாண்டியர்‌ அரசு
மேம்பட இராவணனைச்‌ சந்துவித்து அகத்திய மாமுனிவர்‌
பெற்றநாட்டில்‌ பொதியமலை அரசகுலத்தவனான மலயத்துவச
பாண்டியன்‌ மரபிற்குரியது. அம்மரபிலே வந்த நம்மாழ்வார்‌
குலத்தவர்க்குரியது என்பதாலேயே “பொதியமலையான்‌” என்று
அழுத்தம்‌ இருத்தமாக நூலாசிரியர்‌ பலரும்‌ வேத விற்பனரான
நம்மாழ்வார்‌ மீது ஏற்றிப்‌ பாடினர்‌. வேளாண்‌ மரபிலே தோன்றிய
சிற்றரசன்‌ மீது பாடிய செதியத்‌ தரையன்‌ பிரபந்தங்கள்‌ (மஞ்சரி)
“வழுதி கிரியும்‌ வடதிரியும்‌ மேழி எழுதி மரபுநிலை இட்டோன்‌”
என்று கூறியிருப்பது ஈண்டு நோக்கிடத்தக்கது. வழுதி இரி
(பொதியமலை) என்பது திருவழுதி குலத்திற்குரியது என்று
குறித்திருப்பதும்‌ மேழிக்கொடி வேளாளர்க்குரியது என்று
செழியத்தரையன்‌ உரிமைபாராட்டுவதும்‌ சிந்திக்கத்‌ தக்கதாகும்‌.
பாண்டியவேந்தர்‌ மீன்‌ கொடிக்குரியோர்‌ என்பதை மறந்துவிடக்‌
கூடாது. பொதியமலை வேளாளர்க்குரியதல்ல; குறிஞ்சியாகிய
பொதியமலை தலைமக்களுக்குரியதாகும்‌. வேளாளர்க்குப்‌
77
பொதியமலை தரப்பட்டிருந்தால்‌ இந்த அரசனால்‌ இந்தக்‌ காலத்தில்‌
தரப்பட்டது என்று நூலாசிரியர்‌ பலரும்‌ வெளிப்படுத்தி இருப்பர்‌.
SGEGGRA மமகிழ்மாறன்‌ பவணிக்குறம்‌ நூலில்‌ “அகத்தியனார்‌
வாழும்‌ மலை என்று உணர்த்தியிருப்பது " எண்ணத்தகுந்தது.
; மறைநூலாகிய திருவாய்மொறிதமிழ்‌ வேதம்‌ ஆயிரத்தைத்‌
தந்த நம்மாழ்வார்‌ திருக்குருகூர்‌ இறைவன்‌ என்பதால்‌
செண்பகமாறன்‌ என்றார்‌. பாண்டியர்குல மரபின்‌ புராணப்‌ பெயர்‌
செண்பகமாறன்‌ என்பதே. செண்பகமாறனின்‌ பொதியமலையில்‌
வாழும்‌ குறத்தி என்றும்‌ குறிப்பிட்டார்‌. பாண்டிய வேந்தர்‌
அல்லாத பிற வேந்தர்‌ உரிமை பாராட்டாத நிலையில்‌ அகத்திய
முனிவர்‌ மரபினர்‌ உரிமை பாராட்டாத நிலையில்‌
பொதியமலையை வேளாண்‌ மரபினர்க்குரியதாகச்‌ சொல்வது
உண்மைக்கு மாறானதாகச்‌ சிலர்‌ வரலாறு எழுதுவது
நற்பண்புடையோர்‌ செயலாக கருத முடியாது.
நம்மாழ்வாரின்‌ குலபப்பெருமையை எடுத்தோதிய நூலாசிரியர்‌
“தமிழ்க்கலையான்‌” “பொதியமலையான்‌” “பொருணைவள
நதியான்‌” “குருகூரன்‌” என்று குறித்துள்ளார்‌. வேறு நூல்களிலும்‌
மேலே குறிப்பிட்ட குல உரிமை சிறப்புடைய சொற்கள்‌
இடம்பெற்றுள்ளன. ௫எரன்‌ என்ற சொல்‌ எவரைக்குறிக்கும்‌ என்பதை
உணராது வரலாற்றுத்தவறுச்‌ சிலர்‌ செய்துவிட்டனர்‌. ஊரன்‌ என்ற
சொல்லும்‌ சங்ககாலம்‌ தொட்டு நமது இலக்கியங்களில்‌
தலைமக்களைக்‌ குறிக்கும்‌ சொல்லாகும்‌. ஊரன்‌ என்ற சொல்‌
மருதநிலத்‌ தலைவனைக்‌ குறிக்குமே அன்றி வாழும்‌ மக்களைக்‌
குறிக்காது. இது போன்று சங்கப்பாடல்களில்‌ மருதநிலத்‌
தலைவனைக்‌ குறித்திட நாடன்‌ என்ற சொல்‌ பயன்படுகிறது. கி.பி.
74ஆம்‌ நூற்றாண்டில்‌ அமைந்த நம்பியகப்பொருள்‌ நாடன்‌ என்ற
தலைவனை மருதநிலத்தலைவனாகவே எடுத்தாளுகிறது. குருகூரன்‌
என்ற சொல்‌ திருவழுதி நாட்டு ஆட்சிப்பகுதியின்‌ தலைமையைக்‌
குறிக்கு.ம்‌. குருகூரை ஆண்ட பாண்டிய மரபினர்‌ திருவழுதிநாடர்‌
என்றும்‌ மருதநிலம்‌ அமைந்த நிலப்பகுதி திருவழுதி வளநாடு
எனவும்‌ வழங்கப்பட்டது.
உரன்‌ என்ற தலைமகன்‌ மரபிலே வந்த நம்மாழ்வார்‌ மரபினர்‌
திருக்குருகூரன்‌ எனப்பட்ட திருவழுதி குல மரபினர்‌ ஆவர்‌.
திருக்குருகூர்‌ மரபினரைஅறியத்‌ திருக்கோவையார்‌
என்ற நூலினை
எடுத்துக்‌ கொள்வோம்‌.
“வைமலர் வாட்படை யூரர்க்குச்‌
செய்யுங்குற்றேவல்‌ மற்றென்‌”
என்பதால்‌ மலரணிந்த வாளாகிய படைக்கலத்தை உடைய ஊரன்‌
என்று சிறப்பிக்கப்படுகின்றான்‌. மேலும்‌ ஊரர்க்குப்பணிசெய்யும்‌
ஏவல்மக்கள்‌ இருந்தது புலனாகும்‌. கி.பி 12ஆம்‌ நூற்றாண்டு நூலான
78
கல்லாடம்‌ “ஊரன்‌ கொற்ற வெண்குடையே” என்பதால்‌
வெண்கொற்றக்‌ குடைக்குரிய மரபினர்‌ ஊரன்‌ என்று
அறியற்பாலதாம்‌. சங்க கால “ஊரன்‌ மரபினர்கள்‌ அரசகுலத்தவர்‌"
என்று தெளிவாகத்‌ தெரிய வருகிறது. பணிமக்கள்‌
பட்டியலுக்குரியவர்‌ ஊரன்‌ ஆகார்‌. தெடுநல்வரடை பாண்டிய
வேந்தரின்‌ சேனாபதியின்‌ “வேலின்‌ தலைமுனையில்‌
வேப்பமாலை அணிவிக்கப்பட்டிருந்தது ” என்று கூறுகிறது.
மலைபடுகடாம்‌ என்ற சங்க நூலுக்கு உரை எழுதிய
நச்சினார்க்கினியர்‌அரசனால்‌ தரப்படும்‌ சிறப்பின்‌ மிகுதியால்‌ ஊரன்‌
என்ற தலைவன்‌ உருவாகி விடுகின்றான்‌. போரின்‌ கண்‌
ஈடுபட்டுவேந்தர்க்கு வென்றிதந்தவீரர்க்குத்‌ தரப்பட்ட சிறப்பில்‌
நாடும்‌ ஊரும்‌ கொடுத்ததாகக்‌ குறித்துள்ளார்‌. “வேற்போரின்‌
(யானைமீது அமர்நீது போர்‌ புரிதல்‌) விளக்கத்தையுடைய
அறிவுடையோர்க்கு (சான்றோர்வீரர்‌] கொடுத்தற்குரிய நாடும்‌ ஊரும்‌
முதலியவற்றைக்‌ கொடுத்த அவனுடைய குடியிலுள்ளோர்‌
தோற்றரவும்‌” என்பதால்‌ இத்தகைய வீரர்‌ தொல்குடி வேந்தரின்‌
தொல்படைவீரர்‌ என்றும்‌ இவரே நாடும்‌ ஊரும்பெற்று அமைந்து
சிறந்தவர்‌ என்றும்‌ தெளிவாக உணரப்படும்‌. சங்ககால ஊரர்‌
அறிவுடையோர்‌ மரபில்‌ தோற்றம்‌ பெற்றிருந்த வீரர்களே
பெரும்பாலும்‌ ஊரன்‌ என்று அழைக்கப்பட்டவர்‌ ஆதல்‌ வேண்டும்‌.
கி.பி. 1207ல்‌ அமைந்த அவனாசி கல்வெட்டு “படைகணிக்கு
ஆரம்பூணப்‌ பெறுவாராகவும்‌” என்று இராஜகுலவரை
அடையாளமிடுகிறது. போர்க்கலை மரபில்‌ தோன்றிய அறவேந்தர்‌
குடியே நம்‌ அரசர்கள்‌ என்பது இலக்கியங்கள்‌ காட்டும்‌
பாடமாகும்‌. வேம்பற்றூர்நம்‌ பியின்‌ திருவாலவரய/பையசர்‌
புராணம்‌ போர்க்கலை மரபினரை “சிரமநிதி சான்றவர்‌” என்று
உணர்த்துகிறது. சேக்கிழார்‌ எழுதிய பெரியபுராணம்‌
போர்க்கலையைக்‌ கற்பிக்கும்‌ மரபினரை, “போர்த்தொழிலில்‌
தள்ளாத உரிமைத்‌ தாயத்தினர்‌” என்றும்‌ அவரை “ஈழச்‌ சான்றார்‌”
என்றும்‌ குறிப்பிடுகின்றார்‌. மூலப்படை பற்றி கி.பி 1000இல்‌
அமைந்த வீர நாராயணகேரளன்‌ காலத்திய பழநி கல்வெட்டு
“மூல பல எழுநூறு கொற்றவாளர்‌” என்று குறித்து இருப்பதும்‌
சிந்தித்தற்குறியதாகும்‌. கி.பி 71ஆம்‌ நூற்றாண்டு நூலான வீர
சோழியத்திற்கு கி.பி 108ல்‌ பெருந்தேவனார்‌ என்ற பெரும்புலவர்‌
உரை எழுதியுள்ளார்‌. “படையாளர்‌ பக்கமாவது” என்பதற்கு
“சான்றோர்‌ பக்கம்‌” என்று உரை செய்து பாசறை இருந்தோர்‌
தன்மை கூறியது என்றும்‌ விளக்கம்‌ தந்தார்‌. போர்க்கலையைப்‌
பயிற்றுவிப்பவனே மூலப்படையில்‌ அமைந்தவனாவான்‌.
படைக்கருவியில்‌ மாலை அணிவிக்கும்‌ சிறப்பிற்குரியோர்‌ பூர்வ
79
அரசமறு பினர்‌ என்று அறியற்பாலதாம்‌. படைகணிக்கு ஆரம்‌ பூணுதல்‌
செய்த இம்மரபினர்கள்‌ சி.பி 16ஆம்‌ நூற்றாண்டில்‌ அமைந்த
கருமாபுரம்‌ செப்பேடுகளில்‌ “மந்திரவாளும்‌ வரிசையும்‌
பெற்றோர்‌” என்றும்‌ "வாளால்‌ வழி இறந்த பெரியோர்‌” என்றும்‌
சுட்டிக்‌ காட்டப்பட்டுள்ளனர்‌. சி.பி 17ஆம்‌ நூற்றாண்டில்‌ அமைந்த
திருமுருகன்‌ பூண்டி செப்பேடுகள்‌ “சந்திரனை வாளாகப்‌
பெற்றவர்கள்‌” என்றும்‌ குறிப்பிடப்படுகின்றனர்‌. தமிழ்க்‌
கலையான்‌ என்று குறித்திருப்‌பது தமிழ்‌ மொழிக்குரியவன்‌ என்ற
பொருளாதல்‌ வேண்டும்‌. தமிழ்‌ நாடன்‌ என்பது தமிழ்‌ வளர்த்த
சங்கதீதாராகிய பாண்டியரின்‌ மறுபெயராம்‌.
தஞ்சை சரபோசி மகால்‌ பதிப்பான தனிப்பாடல்‌
இிரட்டுதனில்‌ அமைந்த பாடல்‌ ஒன்றை உற்றுநோக்குவோம்‌.
அகத்திணை இலக்கணம்‌ சொல்லும்‌ செய்யுளாக அமைந்துள்ளது.
“காடாகும்‌ முல்லை கழியாகும்‌
நெய்தல்கல்லாம்குறிஞ்சி
நாடாம்‌ மருதம்‌ நரலைவெம்‌
பாலைபயந்த தெய்வம்‌
கோடாகரன்வருணன்குகன்‌
இந்திரன்‌ கூறுதுர்க்கை
மாடாயர்‌ மீனவர்‌ வேடுவர்‌
நாடர்‌ மறவருமே”
ஐந்திணை நிலம்‌. அந்நிலத்திற்குரிய தெய்வங்கள்‌ வாழும்மக்கள்‌
பட்டியலில்‌ ஆதிக்கம்‌ பெற்றிருந்த மக்கள்‌ பற்றி விவரிக்கிறது.
மேலே சொல்லப்பட்டமைக்குச்சான்றாக அமைந்துவிட்ட பாடல்‌
மருதநிலத்திற்கு நாடர்‌ என்பாரை அடையாளமிடுகிறது. ஊன்‌
கேரவைதரல்‌ "தமிழ்‌ நாடர்‌” என்று பாண்டிய குலத்தவரான
நம்மாழ்வாரைக்‌ குறிப்பிடுகிறது. சங்ககால மருதநிலத்திற்கு நாடன்‌
என்பானே தலைமகன்‌, ஊரன்‌ என்றும்‌ மகிழ்நன்‌ என்றும்‌
அழைக்கப்பட்ட அவன்‌ தொன்று தொட்டு ஆட்டிக்குடியில்‌
தோன்றியவன்‌. முல்லை நில ஊர்களில்‌ நிலம்‌ பற்றி
வாழ்ந்தோரும்‌ ஆட்சிபற்றி வாழ்ந்தோரும்‌ என இருவகைக்‌
இழவர்‌ என்று தொல்காப்பியச்‌ சூத்திர உரையில்‌ இளம்பூரணர்‌
குறிப்பிடுகன்றார்‌. ஆட்சிபற்றிய கிழவன்‌ குறும்பொறைநாடன்‌
என்று எடுத்தோதிச்சாதிகள்‌ வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறார்‌.
ஊரன்‌, நாடன்‌ என்போரே நாடுகாவலுக்குரிய சமூகத்தார்‌ ஆவர்‌.
சங்க இலக்கியத்தில்‌ இடையர்‌ குலக்‌ கழவுள்‌ போன்றவரும்‌
சிறுகுடி௮அமைப்பிலே தோன்றியவரும்‌ சில ஊர்களின்‌ தலைமை
பெற்றதாகத்‌ தோன்றுகிறது. சங்க இலக்கியத்தில்‌ ஊரன்‌ தேரில்‌
சென்றவனாக வருணனை செய்யப்படுபவன்‌. திருக்கோவையார்‌
80
ஏவல்‌ மக்களை ஏவி ஆணை
அரசகுலத்தவன்‌; அரசகுலத்திறின 2] பாராட்டிய
சமூகத்தினனாகவே இருத்தல்‌ Fa (HWS).
கல்வெட்டு “இபூமிக்கு
வந்தவிக்கமுள்ளது” என்பதால்‌ :
அரசகுல மரபினன்‌ என்று உணரத்தக்கது. கி.பி. பப்‌ அமைந்த
உத்தம சோழன்‌ ஆட்சிக்காலக் கல்வெட்டு ஊராள்வார்கள்‌ பற்றித்‌
தெரிவிக்கிறது. இ.பி 1281ல்‌ அமைந்த மாறவர்மன்‌ சுந்தர
பாண்டியனின்‌ இடையாற்றூர்‌ கல்வெட்டு “மறவர்களுக்குப்‌
பாண்டிய மரபினர்‌ செய்த கொடுமைகளை விவரிக்கிறது.
மேலும்‌ ஊர்கு காப்பாநாந கொடும்பை” நாடாள்வான்‌
இவ்வாவணத்தில்‌ ஒப்பமிட்டுள்ளான்‌. ஊர்‌ காப்பான்‌ (ஊரன்‌)
என்று அழைக்கப்பட்டவன்‌ நாடாள்வான்‌ பட்டமுடையவன்‌
என்பதே. ஊர்காப்பார்‌ நாடுகாப்பார்‌ என்று அரசமரபினரும்‌
அரசர்களால்‌ நியமனம்‌ பெற்றோரும்‌ இருந்தனர்‌. இவர்கள்‌
தவனீதப்‌ பாட்டியல்‌ சொல்லும்‌ ஆவணத்தின்படி அரச
மரபினராகலாம்‌. இவர்போன்று ஊராள்வாராக அரசகுலத்தவர்‌
இருந்தனர்‌. அரசனின்‌ ஆட்சி அதிகாரத்தில்‌ அந்தணர்க்கு அளித்த
தானம்‌ பிரம்மதேயம்‌, சதுர்வேதி மங்கலம்‌ எனப்பட்டது.
பிரம்மதேயக்‌ கிழவர்கள்‌ என்று பார்ப்பார்‌ சிறப்பிக்கப்பட்டனர்‌.
இவரும்‌ ஊராளர்‌ என்று உணர்த்தப்பட்டனர்‌. கி. பி.500ல்‌ அமைந்த
தமிழ்பிராமிக்‌ கல்வெட்டு” “பிரமதாயமுடையாருந்‌ நாடு
காப்பாரும்‌ புறங்காப்பாரும்‌” என்று குறிப்பதால்‌
பிரம்மதேய கிழவர்கள்‌ பிரமதாயமுடையார்‌ எனப்பட்டனர்‌.
நாடு காப்பார்‌ அரசமரபினராதல்‌ வேண்டும்‌ புறங்காப்பார்‌
பாடிகாவல்‌ உரிமையுடைய மரபினராவார்‌. இவரைப்போன்று
பிற்காலத்தில்‌ சிறப்பினைப்‌ பெற்று, ஊர்‌ பெற்றுச்‌ சிலர்‌ ஊராளர்‌
ஆனார்கள்‌. இவர்களில்‌ வேளாளரும்‌ அமைந்திருக்கலாம்‌.
ஊராளர்‌ என்று குறிப்பிடப்படுவோர்குறிப்பிட்ட ஊரினர்‌. ஊரின்‌
அவையினர்‌. ஆனால்‌ ஊராள்வார்‌ என்பார்‌ சில ஊர்களின்‌
தலைமை ஏற்ற அரசுப்‌: பிரிவினர்‌ காட்டினை ஆண்ட வேடர்‌
வேட்டுவர்கள்‌ 'ஊராளி' என்று அடையாளமிடப்பட்டனர்‌.
நாடுகாவலிலும்‌ மாறான காடுகாவலில்‌ அமர்ந்திருந்த பாடி காவல்‌
அரசர்‌ என்று அழைக்கப்பட்டவேடர்‌ வேட்டுவர்‌
எண்ணிக்கையில்‌ பலர்‌ என்று கல்வெட்டுகள்‌ எடுத்தோதுகின்றன.
இலக்கியங்களிலும்‌ கல்வெட்டுகளிலும்‌ பணிமக்களாக,
அடிமைகளாக அடையாளம்‌ தெரியும்‌ சமூகத்தினர்‌ முற்பட்டு
ஊரன்‌ என்று அழைக்கப்பட்டவர்‌ அன்று ஊரோம்‌ என்பதற்கும்‌
ஊரன்‌ என்று அடையாளமிடுவதற்கும்‌ வேறுபாடு உண்டு.

You might also like