You are on page 1of 5

பூரணி மனோன்மணி தயாபரி பராபரி புராதனி தராதரமெலாம்

பொற்புடன் அளித்த சிவசக்தி இமவானுதவு புத்ரி மகமாயி என்றே


சீரணி தமிழ்க்கவிதை பாடி முறையிடுவதுன் செவிதனிற் கேறவிலையோ?
தேஹி என்றாலுனக் ஈயவழி இல்லையோ தீனரக்ஷகி அல்லையோ?
தீனரக்ஷகி அல்லையோ?
ஆருலகினை ஈன்ற பெற்ற தாயன்றி மக்கள்தம்மைஆதரிப்பவர் யார்
சொல்லுவாய் ?
அன்னையே இன்னமும் பராமுகம் பண்ணாமல் அடியனை ரக்ஷ கண்டாய்
மேருவை வளைத்தவனிடத்தில் வளரமுதமே
விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி
மறைமலர்ப்பத வல்லி
விமலி கற்பகவல்லியே (1)
விமலி கற்பகவல்லியே.

அத்துவித சித்த பரிசுத்தர்கள் இடத்தினில் அடுத்திடர் தொலைப்பம் என்றால்


ஆசையெனு மூவகைப் பேய்பிடித் ஆவேச மாற்று வகை இல்லாமலே
தத்து பரியொத்தமனம் எத்தனை சொன்னாலுமிது தன் வழியிலே இழுத்துத்
தள்ளுதே பாழான கோபமும் அடங்காது தன்னரசு நாடு செயுதே!
தன்னரசு நாடு செயுதே!
இத்தனை விதச் சனியில் எப்படி வழிப்படுவ எப்படி பிழைப்பதம்மா?
இனியாகிலும் கடைக்கண் பார்த்து வினைதீர்த்து
இணை மலர்ப்பதம் செய்து அருளுவாய்
வித்தகது தற்கணனிடத்தில் வளரமுதமே
விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி
விமலி கற்பகவல்லியே (2)
பொய் வைத்த சிந்தை மடமங்கையர்கள் வாசனைப் பூங்குழலிலே
நிழலிலே பொழி அம்புபோல் இருவிழிஅம்பிலே பொடிப் பூச்சிலே
கைவச்சிலே
ீ செய்தொப்பமிட்ட செப்பெனு முலையிலே
துடிச் சிற்றிடையிலே
உடையிலே தெட்டிலே நன்னுதற்பொட்டிலேவெண்ணகைச் செம்பவள வாயி
இதழிலே
பைவைத்த விட அரவ என்னும் நிதம் பத்திலே
பாழ் அறிவு அழிந்து மூழ்கி
பரகதிக் கொருதவச் செய்கையும் இல்லக் கொடும்
பாதகனை ஆள்வதன்றோ?
மெய்வைத்த கையான் இடத்தில் வளரமுதமே
விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி
மறைமலர்ப்பத வல்லி
விமலி கற்பகவல்லியே (3)

நடத்தையில் அடக்கமும் இணக்கமும் வணக்கமுறு நற்குணமும்


நற்செய்கையும்
நலன் தரும் கல்வியும் செல்வமும் அதற்கான நல்லோரிடத்தில் உறவும்
திடத்து மனமும் பொறுமையும் திறமையும் தரும சிந்தனையும் மதிநுட்பமும்
தீனர்களிடத்தில் விச்வாசமும் என்றும் அவர் தீப்பசி தணிக்க நினைவும்
கடக்க அரிதான ஜனனக்கடல் கடந்து கதிகாண மெய்ஞான மோனக்
கப்பலும் தந்துதவி செய்து ரக்ஷித்து கடைத்தேற அருள் புரிகுவாய்
விடக்கடுமிதடற்றனன் இடத்தில் வளரமுதமே விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி
மறைமலர்ப்பத வல்லி
விமலி கற்பகவல்லியே (4)

இல்லாமை என்னு ஒரு பொல்லாத பாவியாய்


எந்நேரம் இடருறாமல்
ஏற்காமல் ஏற்பவர்க்கில்லை என்று உரையாமல்
இழிதொழில்கள் செய்திடாமல்
கல்லாத புல்லர் உறவில்லாமல் அடுபிணி
கனாவிலும் எனைத்தொடாமல்
கற்ற பெரியோர்களொடு தர்க்கித்து எதிரித்து நான்
கடிந்த சொற் சொல்லிடாமல்
கொல்லாது கொல்லு மடமங்கையர்கள் இங்கிதக்
கொள்கையில் மயங்கிடாமல்
குறையொன்றுவாராமல் உனதடிமை செய்ய அருள்
கூட்டுவாய் மதவேழை முன்
வெல்லாமல் வென்றவனிடத்தில் வளரமுதமே
விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி
மறைமலர்ப்பத வல்லி
விமலி கற்பகவல்லியே (5)

கமலனை அழைத்து எனது பழவினைகள் யாவையும்


கட்டறுத்து இன்று முதலாய்
காலன் அணுகாமல் ஒரு பேய்கள் தொடராமல் வெங்
கலி வந்து தடுத்திடாமல்
நமது கொத்தடிமை என்று ஏழுதித் திருத்தென்றி
தாளட்டி பண்ணுவானோ?
நமனும் மதிகெட்டு வந்தணுகுவானோ?
பிணிகள்நாடுமோ? கலியண்டுமோ?
இமையளவில் அணுவை மலையாக்குவாய்
மலைதனை இமைப்பில் அணுவாக்கவல்லாய்
என்னை ரக்ஷிப்பதொரு பாரமோ
சும்மா இருப்பதழகல்ல அம்மா
விமல சற்குருபரன் இடத்தில் வளரமுதமே
விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி
மறைமலர்ப்பத வல்லி
விமலி கற்பகவல்லியே (6)

நெஞ்சத்திருக்கும் வெகு வஞ்சத்திருக்கும் அயல்


நெறியில் வழ்ந்திடு
ீ மயக்கும்
நீசப்பிசாசரொடு நேசித்து நன்னெறியில்
நிலையாத பெரு மயக்கும்
மஞ்சத்தெழுந்த குழல் மங்கையர்கள் உந்தியெனு
மடுவில் வழ்ந்திடு
ீ மயக்கும்
மாயைக்கு வித்தான நீள்நிதியின் மேல் ஆசை
வைத்து உழன்றிடு மயக்கும்
கொஞ்சத்தில் உனதருளை அன்றி விட்டொழியாது
கோதற்ற ஞானநிலையும்
கூடாது வாடிடும் எனை அஞ்சல் என்றுன் அடியர்
கூட்டமொடு கூட்டு கண்டாய்
விஞ்சச்சிறந்தவன் இடத்தில் வளரமுதமே
விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி
மறைமலர்ப்பத வல்லி
விமலி கற்பகவல்லியே (7)

ஏதென்று சொல்லுவேன் ஆனாலும் அம்மம்மா


என் கொடுமை எங்குமில்லை
இல்லறம் துறவறம் இரண்டிற்கும் ஆகாமல்
யாதினும் கடையன் ஆகி
தீதென்ற செய்கைகள் அனைத்தையுமே செய்து
வென்சினம் அழுக்காறு அவவாம்
சிக்கினுட்சிக்கி வறுமைக்குழியில் வழ்ந்து
ீ நற்
செயலினுக்கு அயலுமாகி
போதென்று மூன்றி ஒரு போதேனும் உன்னடியர்
பொன்னடி க்கான் செய்திடாய்
புன்மையேன் ஒருகாலம் நன்மை செய்து உய்வேனோ
பொன்பூத்த வௌளிமலையில்
மீ தென்றுறைபவன் இடத்தில் வளரமுதமே
விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி
மறைமலர்ப்பத வல்லி
விமலி கற்பகவல்லியே (8)

மாயாத ஜனனக்கடற்காவனோ? பிணிமலைக்


காவனோ? வருந்தும்
வாதனை சமுசார வேதனைக்காவனோ?
வறுமைச்சனிக்காவனோ?
ஓயாத கோபக் கனற்காவனோ? கெட்ட
வொன்னலர் பகைக்காவனோ?
ஒழியாத சஞ்சலப்படுகுழிக் காவனோ?
ஊழ்வினை தனக்காவனோ?
நீயாய் தெரிந்து எனை பாதுகாத்தருள் செய்து
நெடுநாட்படும் பாடெலாம்
நோக்கி அழியாத சுகம் எய்த செய்தாலன்றி
நீச்சுநிலை இல்லை அம்மா
வயாத
ீ முக்கணன் இடத்தில் வளரமுதமே
விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி
விமலி கற்பகவல்லியே (9)

கோதற்ற மெய்ஞான போதச் சிவானந்த


கோலாகலச் சீலர் பால்
கொத்தடிமை செய்தவர்கள் சொற்படி நடத்த பல
குற்றங்களும் களைந்து
சூதற்ற நெஞ்சனாய் ஆசைப் பிசாசைத்
துரத்தி ஐம்புல வேடராம்
துட்டரை ஒடுக்கி ஒரு துக்கமில்லா ஞான
சுக நிஷ்டை சேர்வதென்றோ?
நாதத்துமைம் பூத பேதத்தும் எண்பத்து
நாலு லட்சத்தும் அடியார்
நல் இதயத்தும் அறு சமயத்தும் மறுவற்று
நான் எனும் பேர்படைத்து
வேதத்தும் உறைபவனிடத்தில் வளரமுதமே
விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி
விமலி கற்பகவல்லியே(10)

You might also like