You are on page 1of 33

xsp gutl;Lk; brg;lk;gh; 2022

Mrphpah; jpd ey;tho;j;Jfs;

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 1


xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 2
நீங்கள் ஒரு காந்தம்!

உண்மையில் ஒவ்வொரு மனிதனும் l இரண்டாவது, ஆழ்மன நம்பிக்கைகள்


ஒரு காந்தம். எப்படி காந்தம் பல – உலகில் நல்ல விஷயங்களில் ஆழமான
ப�ொருட்கள் சுற்றி இருந்தாலும் இரும்புத் நம்பிக்கைகள் க�ொண்டிருப்பவர்கள்
துண்டுகளை மட்டுமே கவர்ந்திழுக்கும�ோ நல்ல மனிதர்களையும் நல்ல
மனிதனும் தனக்குத் தக்க மனிதர்களையும், விஷயங்களையும் தங்கள் வாழ்வில்
சூழ்நிலைகளையும் மட்டுமே தன் தங்களை அறியாமல் வரவழைத்துக்
வாழ்க்கையில் கவர்ந்திழுக்கிறான். காண்கிறார்கள். அதே ப�ோல நல்ல
காந்தத்திற்கும் ஒரு படி மேலே ப�ோய் அவன் விஷயங்களில் அவநம்பிக்கையை
தன் காந்த சக்தியைத் தானே தீர்மானம் ஆழ்மனதில் வளர்த்துக் க�ொள்கிற
செய்கின்ற சக்தி பெற்றிருக்கிறான். மனிதர்கள் அதை உறுதி செய்கிறது
அவன் தன் காந்த சக்தியின் தன்மையைத் ப�ோன்றவற்றையே தங்கள் வாழ்வில்
தீர்மானிக்கும் முக்கியமான விதங்கள் வரவழைத்துக் க�ொள்கிறார்கள். “நான்
மூன்று. அப்போதே சந்தேகப்பட்டேன்” என்று
பிறகு தம்பட்டம் அடித்துக் க�ொள்ளும்
முதலாவது, கர்மா – மனிதன்
இவர்கள் அப்படி வரவழைத்துக்
முன்பு விதைத்ததை அறுவடை செய்யத்
க�ொண்டதே தாங்கள் தான் என்பதை
தேவையான மனிதர்கள் அவனால்
அறிவதில்லை.
ஈர்க்கப்படுகிறார்கள். அதற்கான
சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள் எல்லாம் தானாக மூன்றாவது அதீத ஆர்வம் – ஒரு
வந்தமைகின்றன. முன்பு சில செயல்களைத் மனிதன் எதில் எல்லாம் அதீத ஆர்வம்
தீர்மானித்து செயல்புரிந்த அந்தக் காட்டுகிறான�ோ, அது குறித்து மேலும்
கணத்திலேயே அதன் விளைவுகளுக்கான ஞானமும், அனுபவங்களும் தரக்கூடிய
காந்த சக்தியைத் தன்னிடம் ஏற்படுத்திக் மனிதர்களையும், சந்தர்ப்பங்களையும்
க�ொள்கிறான். எல்லாம் துல்லியமான காந்தமாக ஈர்த்துக் க�ொள்கிறான்.
கணக்கோடு சரியான நேரத்தில் அவன் ஆன்மீக ஆர்வம் அதிகமாக
வாழ்வில் வந்து சேருகின்றன. இருந்த விவேகானந்தரை ராமகிருஷ்ண
பரமஹம்சரிடம் அழைத்துச் சென்றது

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 3


அந்த காந்த சக்தியே. அதே ப�ோல் ஆன்மிகம் வாழ்க்கையில் பலவற்றைத்
என்ற பெயதில் சித்து வித்தைகளில் அதிக தேர்ந்தெடுப்பதில் நமக்குள்ள சுதந்திரத்தை
ஆர்வம் காட்டுபவர்களைப் ப�ோலிச் இது க�ோடிட்டுக் காட்டுகிறது. இந்த
சாமியார்களைச் சந்திக்க வைப்பதும் மூன்றில் முதல் விதியான கர்மாவால்
அந்தக் காந்த சக்தியே. இப்படி அவரவர் வந்தது நமது பழைய சுதந்திரமான
ஆர்வம் காட்டும் விஷயங்களில் செயல்களின் விளைவு என்பதால் அதைத்
ஆர்வத்தின் தரத்தைப் ப�ொறுத்தே அவன் தவிர்க்கும் சக்தி மட்டும் நமக்கில்லை.
அனுபவங்களை விருத்தி செய்யக் அதை அனுபவித்து தீர்த்துக் க�ொள்ளுதலே
கூடியவை அவனை வந்து சேருகின்றன. ஒரே வழி.
ரமண மகரிஷி தானாகப் ப�ோய் இரண்டாவது ஆழ்மன நம்பிக்கைகள்
ஆன்மிகப் பிரசாரம் செய்ததில்லை. ந�ோய்க் கிருமிகளின் சக்தி மேல்
சிஷ்ய க�ோடிகளைச் சேர்த்ததில்லை. பலமான நம்பிக்கை வைத்திருப்பவன்
திருவண்ணாமலையை அடைந்த பிறகு சீக்கிரமே ந�ோய்வாய்ப்படுகிறான்.
அந்த ஊரை விட்டு வெளியே எங்கும் தன் உடலின் எதிர்ப்பு சக்தி மீது
சென்றதில்லை. பல நாட்கள் த�ொடர்ந்து நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமாக
ம�ௌனமாகவே இருந்திருக்கிறார். ந�ோய்வாய்ப்படுவதில்லை. அப்படியே
ஆனாலும் அவரது ஆன்மிக காந்த சக்தி ந�ோய் வந்தாலும் வந்த வேகத்தில் அது
இந்தியாவில் இருந்தும் வெளிநாடுகளில் ப�ோயும் விடுகிறது என்று இன்றைய
இருந்து பல ஆன்மிக வாதிகளை மருத்துவம் கண்டுபிடித்து இருக்கிறது.
அவரிடம் வரவழைத்த அதிசயத்தைக் ஆழ்மனதில் முன்பே வைத்திருக்கும்
கண்டிருக்கிற�ோம். தவறான நம்பிக்கைகளை உடனடியாக
ஆகவே தற்போது நம்மிடம் உள்ளதும், மாற்றிக் க�ொள்வது சிறிது கஷ்டமே
இது வரை வந்ததும் நாம் காந்தமாகக் என்றாலும் அது முடியாததில்லை.
கவர்ந்தவையே. நாம் நம் வாழ்வில் நாம் எதை பலமாக நம்புகிற�ோம்,
எல்லாவற்றையும் மேலே குறிப்பிட்ட எதை எதிர்பார்க்கிற�ோம். என்பதைப்
மூன்று வழிகளில் வரவைத்திருக்கிற�ோம். பட்டியலிட்டு அதில் தேவையற்ற
பிற காந்தங்களால் நாம் கவரப்படுவதும் வற்றையும், தவறானவற்றையும் நீக்கிக்
இந்த விதிகளின்படியே. பிரபஞ்சம் க�ொள்ளுதல் நலம்.
இந்த மூன்றின்படியே எல்லாவற்றையும் அதற்கு எதிர்மாறான நல்ல
நமக்கு விநிய�ோகித்திருக்கிறது. இந்தப் விஷயங்களைப் பற்றி படித்தும், கேட்டும்,
பேருண்மை நம்மை ஒரு விதத்தில் அப்படி வாழ்பவர்களின் சகவாசத்தை
ஆசுவாசப்படுத்துகிறது.

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 4


வளர்த்துக் க�ொள்ளுவதும் சிறிது சிறிதாக பெரிய சாதனைகள் புரிய சாதனைகள்
நம் ஆழ்மன நம்பிக்கைகளை நல்ல புரிய நாம் கனவு காண்பது வீணே. முதலில்
திசையில் திருப்பும். நம் முன்னோர்கள் அற்பங்களை அப்புறப்படுத்துங்கள்.
இதன் முக்கியத்துவத்தைப் பெரிதும் மேம்போக்கான ஆர்வத்தை
உணர்ந்து நல்ல மனிதர்களின் ஏற்படுத்திக்கொண்டு உங்கள் வாழ்வில்
சேர்க்கையை “சத்சங்கம்” என்ற பெயரில்
அற்புதங்களை எதிர் பார்க்காதீர்கள்.
வலியுறுத்தியுள்ளார்கள்.
உங்கள் ஆர்வம் உங்களிடம் ஆழமாக
மூன்றாவதான ஆர்வம் நம் இருக்குமானால் மட்டுமே அது காந்தத்
கட்டுப்பாட்டில் தான் உள்ளது. தன்மை பெறும்.
உயர்ந்த விஷயங்களில் ஆர்வம்
காட்டும்போது நல்ல எண்ண எனவே இது வரை நாம் கவர்ந்தவற்றின்
அலைகளை நாம் ஏற்படுத்துகிற�ோம். கணக்கை நம் வாழ்வில் ஆராய்வோம்.
அவை பலப்படும்போது நன்மையைப் எதற்கும் யாரையும் குறை கூறாமல்
பெருக்குகிற பல நம் வாழ்வில் வந்து கவர்ந்து பெற்றதற்கான ப�ொறுப்பை
சேர ஆரம்பிக்கும். நாம் எதில் அதிக ஏற்றுக் க�ொள்வோம். இனி எதைக் கவர
ஆர்வம் காட்டுகிற�ோம் என்பதை முதலில் வேண்டும் என்று சிந்தித்து அவற்றை
கவனியுங்கள். நம்மனதில் ஆழப் பதிப்போம். அதற்கான
அடுத்தவர்களின் தவறுகளைக் ஆர்வத்தையும், நம்பிக்கையும் ஏற்படுத்தி
கண்டுபிடிப்பதிலேயே அதிக அதைப் பலப்படுத்துவ�ோம்.
ஆர்வம் காட்டுபவன் தன் தவறுகளை
இப்படி புதிய காந்த சக்தியை நம்மில்
வளர்த்துக் க�ொள்கிறான். சில்லரை
விஷயங்களிலேயே அதிக ஆர்வம் வளர்த்துக் க�ொண்டால் மீதியை இந்த
காட்டுபவன் அந்தத் தரத்திலேயே பிரபஞ்ச விதிகள் பார்த்துக் க�ொள்ளும்.
சாதித்து மடிகிறான். ஆர்வத்தின் தரத்தைப் வாழ்க்கை சிறப்படையும். அதற்குத்
ப�ொறுத்தே பெறுகின்றவற்றின் தரமும் தேவையான சூழ்நிலைகள் நம் வாழ்வில்
அமையும். அமைய ஆரம்பிக்கும். சந்தர்ப்பங்கள்
நீர் நிறைந்திருக்கும் டம்ளரில் பாலை உருவாகத் துவங்கும். உதவும்படியான
நிரப்பவேண்டுமானால் முதலில் நீரைக் மனிதர்கள் நம் வாழ்வில் வந்து சேர்வார்கள்.
க�ொட்ட வேண்டும். பின்பு தான் அதில் கனவுகள் மெய்ப்படும்.
பாலை நிரப்ப முடியும்.அது ப�ோல அற்ப
- தியான சிகிச்சையாளர் கதிர்வேல்.
விஷயங்களில் ஆர்வம் காட்டிக் க�ொண்டு

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 5


ஓய்வு நம்பிக்கைகள்
முடக்கம்

ஓய்வெடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், மக்கள் தங்களை முடக்கி


க�ொள்கிறார்கள் ( உட்கார்வது/ படுப்பது). மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள்
வரை பரந்த சமூக அமைப்பாக மாறியுள்ளது. ஆடம்பரம், த�ொழில்நுட்பம்,
ப�ொருளாதாரம், ப�ொழுதுப�ோக்கு, சமூக ஊடகம் மற்றும் வீட்டு விநிய�ோக சேவைத்
துறையின் வளர்ச்சி ஆகியவற்றால் இயக்கப்படும் நவீன சமுதாயத்தின் சமீபத்திய
கண்டுபிடிப்பு இந்த முடக்கம் ஆகும்.

முடக்கம் என்பது அசையாத நிலையின் ஒரு பழக்கம், ஒரே இடத்தில் முடங்குவதால்


நீண்ட காலத்திற்கு (சில வார, மாதாந்திர மற்றும் ஆண்டுத�ோறும்) உடலின் இயற்கையான
செயல்கள்/இயக்கத்தைத் தடுக்கிற�ோம்.

இரண்டு முக்கிய அம்சங்களில் முடக்கம் மிகவும் ஆபத்தானது.

1. இது இயற்கையில் இயக்கத்திற்கு எதிரானது என்பதால், இது உடல், எலும்பு,


நரம்பு மற்றும் தசையின் கட்டமைப்பைத் தாக்கி அழிக்கிறது. இளம் வயதிலேயே
முடங்க ஆரம்பித்தால், அது குழந்தைகளின் உடல், மூளை வளர்ச்சியின் அனைத்து
அம்சங்களிலும் ம�ோசமாக பாதிக்கிறது.

2. மெட்டபாலிக் விகிதத்தைக் குறைப்பதன் மூலம் உடல் பருமன் மற்றும் நீரிழிவு


ப�ோன்ற வளர்சிதை மாற்றக் க�ோளாறுகளை ஊக்குவித்து துரிதப்படுத்துகிறது.

உங்கள் ச�ோபா/படுக்கை நேரத்தை மட்டும் கவனியுங்கள் !!!

Dr.G’s Health Clinic

Trichy road , Coimbatore , 8807311893

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 6


விளம்பரங்கள்
நன்கொடைகள்
வரவேற்கப்படுகின்றன.

Gpay 98946 81443

bjhlh;g[f;F : 9841272047

காச�ோலை / வரைவ�ோலை மூலம் அனுப்பலாம். க�ோமதி புக்ஸ் என்ற பெயரில்


செக் / டி .டி . அனுப்பவும். பின்புறம் உங்கள் பெயர், ஊர் எழுதவும். அல்லது க�ோமதி
புக்ஸ் என்ற வங்கிக் கணக்கில் (Ac No: CA 510909010138128) City union
Bank, Rajiv Gandhi salai, Perungudi Branch –CIUB0000650 ) பணம்
செலுத்தி, அதன் ஒப்புகை பிரதியை படிவத்துடன் அனுப்பி வைக்கலாம்.
xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 77
vJ nrhe;jk;?
ஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க ச�ொந்தமானது!
குறைந்தபட்சம் ஒரு க�ோடியாவது ஆகும். சரி, நமக்கென்று அபார்ட்மென்ட்
அந்த ஒரு க�ோடிக்கு என்னென்ன வளாகத்தில் ஒரு பத்து சதுரடி இடமாவது
கிடைக்கிறது? க�ொடுத்திருக்கிறார்களா?
நமது FLAT ன் தரைப்பகுதியை நிச்சயமாக இல்லை... இடம்
நம்முடையது என்று ச�ொல்லமுடியுமா?! எல்லோருக்குமே ப�ொதுவானது!
முடியாது. அப்படியென்றால், அந்த ஒரு க�ோடிக்கு
நமக்கு க�ொடுக்கப்பட்டது என்ன?!
காரணம், அது, கீழ் மாடியில்
இருப்பவனுடைய கூரை; ஆகவே, 1500 சதுர அடி க�ொண்ட
அவனுக்கும் ச�ொந்தம்! காலியான அந்த SPACE தான் நமக்கு
க�ொடுக்கப்பட்டது!
நம் தலைக்கு மேலிருக்கும் கூரையை
நம்முடையது என்று ச�ொல்லமுடியுமா? சுற்றி இருக்கும் சுவர்கள�ோ,
அதுவும் முடியாது; அது, மேல் மாடியில் கூரைய�ோ, தரைய�ோ நம்முடையது
இருப்பவனுடைய தரை. அல்ல, அந்த சுவர்களுக்கு இடையே
உள்ள SPACE மட்டுமே நமக்கு
ஆகவே, அவனுக்கும் ச�ொந்தமானது!
க�ொடுக்கப்பட்டது!
சரி... வலது பக்க சுவரை நம்முடையது
அபார்ட்மென்ட் வளாகத்தில்
என்று ச�ொல்ல முடியுமா? முடியவே
உள்ள அத்தனை வசதிகளையும்
முடியாது...
பயன்படுத்தலாம், அனுபவிக்கலாம்,
அது அந்தப்பக்கம் இருப்பவனுக்கும் ஆனால், என்னுடையது என்று உரிமை
ச�ொந்தமானது! க�ொண்டாட முடியாது!
சரி, இடது பக்க சுவர்?! அதுவும் கடவுள் நமக்கு க�ொடுத்ததும்
இடதுப்பக்கம் இருப்பவனுக்கும் அதுதான். இந்த பூமியில்
ச�ொந்தமானது! வாழ்வதற்கான SPACE மட்டும்தான்
நாம் பயன்படுத்துகின்ற க�ொடுத்திருக்கிறார்; அந்த SPACE ல்
படிக்கட்டுகள், லிப்ட்?! அவையெல்லாம் இருந்துக�ொண்டு, உலகத்தில் உள்ள
ம�ொத்த அபார்ட்மென்டுக்கும் அத்தனை சந்தோஷங்களையும் ரசித்து

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 8


அனுபவிக்கலாம், மற்றவர்கள�ோடு
பகிர்ந்துக�ொள்ளலாம்!
ஆனால், இங்கு இருக்கின்ற
எதையும் உரிமை க�ொண்டாட முடியாது.
க�ொண்டுசெல்லவும் முடியாது!
என்னுடைய அம்மா எனக்கு தானே
ச�ொந்தம் என்று ச�ொல்லலாம்,
ஆனால், அவர் அப்பாவின் மனைவி,
அவருக்குத் தான் ச�ொந்தம். அதன் மதியம் சாப்பாட்டில்,
பின்புதான் குழந்தைகள் வந்தது! சாப்பாட்டை விட
வெண்டக்காய் ப�ொரியல்
சரி... அம்மா, அப்பாவுக்காவது
அதிகமா இருந்ததை
ச�ொந்தமா என்றால் அதுவும் இல்லை. அவர்
பார்த்துவிட்டு,
இன்னொருவரின் மகள்; தாத்தாவுக்குத்
தான் ச�ொந்தம்! தாத்தாவும் தனியாக கணவன் கேட்டான்...'
ச�ொந்தம் க�ொண்டாட முடியாது,காரணம் என்னம்மா இது... இவ்ளோ
பாட்டிக்கும் அதில் சம பங்கு இருக்கிறது! ப�ொரியல் வெச்சிருக்கே...'
இப்படி இந்த பூமியில் இருக்கின்ற மனைவி...வெண்டக்காய்
ஒரு துரும்பு கூட நமக்கு ச�ொந்தமானது அதிகமா சாப்பிட்டா மூளை
இல்லை! நாம் இங்கு நிரந்தரமாக இருக்கப் வளரும்னு ச�ொல்வாங்க,
ப�ோவதுமில்லை... கேள்விபட்டு இருக்கீங்கல்ல...'
பிறகு ஏன் பிற மனிதர்கள் மீது க�ோபம், கணவன்... 'ஓ... புரிஞ்சிடுச்சு...
ப�ோட்டி, ப�ொறாமை, வெறுப்பு, வஞ்சகம், உன் ஊட்டுக்காரனை ஒரு
சுயநலம் எல்லாம்!? மிகப்பெரிய ஜீனியஸாக்கி
நமக்கு க�ொடுக்கப்பட்ட SPACEல் இந்த உலகத்துக்கு காட்ட
சந்தோஷமாக இருப்போம். சக ப�ோற... ரைட்...?!
மனிதர்களையும் நேசிப்போம். முடிந்தால்,
மனைவி... 'சே.. சே...
பிறர் சந்தோஷப்படும்படி எதாவது
வெண்டக்காய் அதிகமாக
செய்வோம்!
சாப்பிட்டா மூளை வளரும்னு
ச�ொல்றது ப�ொய்னு இந்த
*படித்தில் பிடித்தது.. உலகத்துக்கு நிரூபிக்கப்
ப�ோறேன்...!
என்ன வில்லத்தனம்

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 9


fhe;jpkjp ike;jDf;F xU ftpjhQ;ryp
ஆயுத எழுத்தாய்
வாழ்ந்த
அண்ணாச்சியே!\
உயிரெழுத்தின்றி
படுத்திருக்கும்
உன்மெய்யெழுத்தை அத்தனை
பார்க்க இயலவில்லை!

உன்
குறுக்குத்துறை தமிழில்
தாமிரபரணியும்
அல்லவா மேடைகளையும்
தன்னை ஆனித்திருழா
நனைத்துக்கொண்டது! ஆக்கியவன் நீ!

நீ நெல்லின் மீது
சைவன் தான்! விழாமல்
ஆனால்... நிறுத்திய மழையை
பலரையும் நெல்லையப்பர்
த�ோலுரித்தாய்! உன்
ச�ொல்லின் மீதன்றோ
ச�ொறிந்தார்!

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 10


அறிவாலும்
அன்பாலும்
எம் இதயத்தில்
ஈரடக்கு
மேம்பாலமாய்
இருப்பவன் நீ!

எத்தனைய�ோ
மேடைகளில்
என்னை நீ ஏற்றிவிட்டிருக்கிறாய்!
இன்று என்
கண்ணீரைத்தான்
இறக்கி விட்டிருக்கிறாய்!

நாம்!
அம்மன் சன்னதியில்
கதைத்திருந்தோம்!
இன்று...
காந்திமதிக்குள்
உன்னை
விதைத்திருக்கிற�ோம்!

-நெல்லை ஜெயந்தா

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 11


cld;ghl;bw;F cld;gL
Positive Thinking என்றால் என்ன? நண்பரின் கேள்வி.
நேர்மறை எண்ணம். எண்ணாமல், இறைவனும் நம்மோடு
பயணிக்கிறார் என்று அமைதி
எதையும் Negatie ஆக ய�ோசிக்காமல்,
காத்தல்.
இருப்பது.
6) உடல் நலமில்லாத வரை
செயலிலும் நேர்மை, எண்ணங்களிலும்
காணும் ப�ோது, அவர் உடல் நலம்
நேர்மை
பெற வேண்டும் என்று மனதார
சுயநலம் மட்டும் கருதாமல் சமூக நலம் எண்ணுதல்.
காக்கும் எண்ணங்களும் இந்த catagoryயே
7) நம்மைச் சுற்றி இருப்போர்,
என்றேன்.
நமக்கு கடமைகளில் உதவுவ�ோர்,
புரியவில்லையே"என்றார். நமக்கு நல்லது நினைப்போர்,
சில வித்தியாசமான examples ச�ொல்கிறேன். அனைவரும் சிறப்பாக இருக்க
எளிதாகப் புரியலாம். வேண்டும் என்று வாழ்த்துதல்.

1) பறவையைப் பிடித்துக் கூட்டில் 8) தெருவில் செல்லும் ப�ோது,


அடைப்பதை விட, மரம் ஒன்று நட்டால் நம்மைக் கடக்கும், வயதானவர்கள்,
எண்ணற்ற பறவைகள் கூடுகட்டுமே என்று குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள்
ய�ோசித்துச் செயலில் இறங்குதல். etc etcவாழ்த்துதல்

2) ஒருவருக்கு உதவும் ப�ோது பணம் 9 ) ஹ�ோ ட ்ட லு க் கு ச்


மட்டும் இல்லாமல், அவரே உழைத்து செல்கிற�ோம். உணவு அருந்தி விட்டு
வாழ்க்கையை சிறப்பாக நடத்த வழி புறப்படும் ப�ோது பரிமாறியவர்க்கு
உள்ளதா என்று ய�ோசித்தல். டிப்ஸ் உடன், புன்னகைய�ோடு Thank
you ச�ொல்லிப் பாருங்கள். அவர்
3) நம்மை காயப்படுத்துவர்களை அகமும் முகமும் மலரும்.
திருப்பி எப்படி அடிக்கலாம் என்று
ய�ோசிக்காமல், ஒதுங்கிக் க�ொண்டு, நாம் 10) வீட்டில் நமக்கு உதவியாக
வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் இருக்கும் Servantsயும், நம்மை நம்பி
என்று திட்டமிடல். வருகிறார்கள் என்று கனிவ�ோடு
நடத்துதல்.
4) இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் ok.
இதிலிருந்து என்ன பாடம் கற்றோம் ச�ொல்லிக் க�ொண்டே ப�ோகலாம்."
என்றேன்.
என்று ஆராய்தல்.
புரிந்தது " என்றார் நண்பர்.
5) வெற்றி மேல் வெற்றி வரும்
ப�ோது, ஆணவத்தோடு என் முயற்சி என்று

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 12


jhapw; rpwe;jnjhU NfhapYkpy;iy
மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு கதைச�ொல்லி அவள்தரும் ஓவ்வொரு
திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய பருக்கை ச�ோற்றிலும் அவளுடைய
சிறிய மகனிடம் கேட்கிறான்.. பாசம் இருக்கும்..

"உன்னுடைய இப்போதைய அம்மா ஆனால்.."இப்போதைய அம்மா, நான்


எப்படி".என்று. சேட்டைகள் செய்யும்போது ச�ொல்வாள்
"உனக்கு ச�ோறு தரமாட்டேன் என்று."..
அப்போது அந்த மகன் ச�ொன்னான்
இன்றுடன் இரண்டு நாட்கள் ஆகிறது
."என் அம்மா என்னிடம் ப�ொய்
இந்த இப்போதைய அம்மா ச�ொன்ன
ச�ொல்பவளாக இருந்தாள். ஆனால்
வார்தையை நிறைவேற்றிவிட்டாள்.".!!!
இப்போதைய அம்மா என்னிடம் ப�ொய்
ச�ொல்பவளாய் இல்லை" இதைகேட்ட பெற்ற தாய்க்கு நிகர் இந்த உலகில்
தகப்பன் கேட்டான்..! யாருமில்லை.

" அப்படி இந்த அம்மா உன்னிடம் என்ன


ப�ொய் ச�ொன்னால்?"

அந்த குழந்தை சிறு சிரிப்புடன் தன்


தகப்பனிடம் ச�ொன்னான் .....

"நான் சேட்டைகள் செய்யும்போது


என் அம்மா ச�ொல்வாள், எனக்கு
இனிமேல் சாப்பாடு தரமாட்டேன்
என்று .ஆனால் க�ொஞ்சநேரம் கழிந்த
பிறகு என்னைத் தன்னுடைய மடியில்
அமர்த்தி பாட்டுபாடி, நிலாவைக்காட்டி

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 13


பணம் ஒரு குரங்கு

பணம் இல்லாத ப�ோது ஹ�ோட்டல்ல வேலை செஞ்சாலும் வீட்ல


வந்து சாப்பிடுகிறான்.

பணம் இருக்கும் ப�ோது வீட்டுல சமச்சாலும் ஹ�ோட்டல்ல ப�ோய்


சாப்பிடுகிறான்.

பணம் இல்லாத ப�ோது வயிற்றை நிரப்ப சைக்கிள்'ல ப�ோறான்.

பணம் இருக்கும்போது வயிற்றைக் குறைக்க சைக்கிள்’ல ப�ோறான்.

பணம் இல்லாத ப�ோது ச�ோத்துக்காக அலைகிறான்.

பணம் இருக்கும்போது ச�ொத்துக்காக அலைகிறான்.

பணம் இல்லாதப�ோது பணக்காரனாக நடந்து க�ொள்கிறான்.

பணம் இருக்கும் ப�ோது ஏழையாக காட்டிக் க�ொள்கிறான்.

நிம்மதியாக இருக்கும் ப�ோது பணத்தைக் தேடுகிறான்.

பணம் இருக்கும் ப�ோது நிம்மதியை தேடுகிறான்.

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 14


xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 15
xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 16
உண்மையாக இருந்தால் பாராட்டு

ப�ொருட்களின் விலையை ஒரு வாரத்திற்குள்... உற்பத்தி


அநியாயமாக உயர்த்தினால் இதைச் நிறுவன ஊழியர்கள் முட்டைகளுடன்
செய்ய வேண்டும் கடைகளுக்கு வந்தனர்.
(ஆர்ஜென்டீனா மக்களின் முன் மாதிரி) ஆனால் கடை உரிமையாளர்கள�ோ
புதிய முட்டைகளை எடுக்க மறுத்து
ஒரு சில வருடங்களுக்கு முன்னர்
விட்டனர்.
ஆர்ஜென்டினாவில் முட்டையின் விலை
திடீரென கடுமையாக உயர்ந்தது. ஏனெனில் ஏற்கனவே உள்ள பழைய
முட்டைகள் இன்னும் விற்கப்படாமல்
கடை வியாபாரிகளும் உற்பத்தி
இருந்தன!
நிறுவனங்கள் விலையை உயர்த்தி
யுள்ளன என்ற காரணத்தைக் கூறி தப்பி உற்பத்தி நிறுவனங்களும்
விட்டனர். பிடிவாதமாக இருந்தன. இந்த
புறக்கணிப்பு இன்னும் சில நாட்களில்
ஆனால் குடிமக்கள் இதனை
முடிவுக்கு வந்து, மக்கள் முன்பு
எதிர் கொண்ட விதம் அருமையானது!
ப�ோல் முட்டைகளை வாங்கும் நிலை
அற்புதமானது!
ஏற்படுமெனக் கருதினர்.
ஒரேயடியாக அவர்களில் பலர்
ஆனால் மக்கள�ோ அவர்களை விட
எமக்கு முட்டை தேவையில்லை,
தமது முடிவில் பிடிவாதமாக இருந்தனர்.
முட்டை சாப்பிடாமல் எம்மால்
த�ொடர்ந்தும் அவர்கள் முட்டைகளை
வாழ முடியும் என்று முட்டைகளை
புறக்கணித்தனர்.
புறக்கணிக்க ஆரம்பித்தனர்.
நிறுவனங்களால் ஈடு க�ொடுக்க
அவர்களைத் த�ொடர்ந்து
முடியவில்லை. இரண்டு விதமான
பெரும்பாலான�ோர் முட்டை
நஷ்டங்களை எதிர்கொண்டனர்.
பாவனையை விட்டு விட்டனர்.
1- ஏற்கனவே விற்பனை
இதற்கு பிரச்சாரங்கள�ோ,
செய்யப்படாத முட்டைகள்.
ஆர்ப்பாட்டங்கள�ோ வேலை
நிறுத்தங்கள�ோ தேவைப்படவில்லை.

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 17


2- வருமானமின்றி க�ோழிகளை
பராமரிப்பதில் உள்ள செலவுகள்.

ஒளி பரவட்டும்
நஷ்டங்களுக்கு மேல் நஷ்டம்.
நிறுவன உரிமையாளர்கள் ஒன்று
கூடி முட்டைகளை அதன் முன்னைய
விலைக்கே விற்க முடிவு செய்தனர். brg;lk;gh; 2022
இருப்பினும், மக்களின் புறக்கணிப்பு
த�ொடர்ந்தது.
நிறுவனங்கள் ஒன்றும் செய்ய
jpUkjp. ,uhn$!;thp rptk;
முடியாது கடைசியில் மண்டியிட்டதுடன்... gjpg;ghsh;
1- அனைத்து ஊடகங்களிலும்
nfhkjp g[f;!;
ஆர்ஜென்டினா மக்களிடம் மன்னிப்புக்
க�ோரினர்.
g[j;jf Mf;fKk; totikg;g[k;:
2- முட்டைகளை அதன் அரைவாசி
விலைக்கு விற்க முடிவு செய்தனர்... bt. ,uh$nrfh;
பிரச்சாரங்கள், ஆர்ப்பாட்டங்கள்,
Cell : 9841272047
வேலை நிறுத்தங்கள் இல்லாமல் எந்த
ஒரு ப�ொருளின் விலையையும் மக்களால்
குறைக்க முடியும். அதற்குத் தேவை Published by
ஒற்றுமையும் சமூக அக்கறையுமே! Gomathi Books
அநீதியான முறையில் விலைகள் 20/21 VPK Street,
உயர்ந்தால் அல்லது பதுக்கல் செய்தால் Perungudi,
(எரிப�ொருள் உட்பட வேறு எப்பொருளாக Chennai - 600096
இருந்தாலும்) சிறிது காலத்திற்கு Cell : 9894681443
முழுமையாக குறித்த ப�ொருட்களை
புறக்கணித்தால் அல்லது பதுக்கல்
செய்து கூடுதலான விலைக்கு விற்பனை gilg;Gfis mDg;Gk; nghOJ
செய்வோரிடம் வாங்குவதை நிறுத்தினால் fPNo nfhLf;fg;gl;Ls;s
பேராசை பிடித்த வியாபாரிகளுக்கு kpd;dQ;ry; Kfthpf;F gilg;ghsp
பெருத்த அடியாக இருக்கும். ngaUld; mDg;Gf.
அத்துடன் விலையையும் குறைக்க
நிர்ப்பந்திக்கப்படுவர்... kpd;dQ;ry; :
gomathibooks2020@gmail.com

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 18


நற்சிந்தனைக்கு
நாமும் செய்யலாம் 'நான் ச�ொல்வதை அவர் எப்படி
இப்பொழுதிலிருந்து ஒருமுறை ஒரு எடுத்துக் க�ொள்வார்?' என்று மனதுக்குள்
கணவர் தன் மனைவியின் பிறந்தநாளன்று குற்ற உணர்வுடன் புலம்புகிறார். விபத்து
TV அவருக்கு அழகியத�ொரு காரை நடந்த இடத்திற்கு ப�ோலீஸ் உடனடியாக
பரிசளித்தார். வந்துவிட்டார்கள்.
முதலில் கார் சாவிகளைக் 'உங்க டிரைவிங் லைசன்ஸ்
க�ொடுத்தார். பின் அவரது மனைவியின் ப்ளீஸ்!' கேட்கிறார்கள் ப�ோலீஸார்.
டிரைவிங் லைசென்ஸ் மற்றும் காரின் நடுங்கிய கைகளுடன் தன் கணவர்
முக்கிய ஆவணங்களை ஒரு ஃபைலில் க�ொடுத்த ஃபைலைத் திறக்கின்றார்.
வைத்துக் க�ொடுத்தார். க�ொடுத்துவிட்டு கண்களிலிருந்து கண்ணீர் ஓடுகிறது.
அன்பாக ஒரு புன்சிரிப்பையும் ஃபைலைத் திறந்தவுடன் உள்ளே
க�ொடுத்தார். கணவரின் கையெழுத்துடன் ஒரு
துண்டுச்சீட்டு இருந்தது: 'அன்பே,
அன்றைய தினம் குழந்தைகளை தான்
ஏதாவது விபத்து நேர்ந்து விட்டால்,
கவனித்துக்கொள்வதாகச் ச�ொல்லிவிட்டு
ஒன்றை மட்டும் மறந்துவிடாதே. நான்
புதிய காரை ஓட்டிப் பார்த்து வருமாறு
அன்பு செய்வது உன்னை. காரை அல்ல.
மனைவியை அனுப்புகின்றார்.
அன்புடன், ஹென்றி.'
மனைவியும் நன்றி ச�ொல்லிவிட்டு
மனிதர்களை அன்பு செய்யவும்
காரை எடுத்துக்கொண்டு
ப�ொருள்களை பயன்படுத்தவும்
புறப்படுகின்றார். ஏறக்குறைய ஒரு
வேண்டும். ப�ொருள்களை அன்பு
கில�ோமீட்டர் சென்றதுதான் தாமதம்
செய்து மனிதர்களை பயன்படுத்தக்
காரை வேகமாக சாலையின் குறுக்குச்
கூடாது என்று கற்றுக்கொண்டோர்
சுவற்றில் ப�ோய் இடிக்கின்றார்.
பேறுபெற்றோர்.
அவருக்கு ஒன்றும் ஆகவில்லை.
ஆனால் காரின் முன்பகுதி மிகவும் காரில் ஏற்படுகின்ற ஒரு க�ோடு
பாதிக்கபட்டுவிடுகிறது. 'கணவரிடம் நமது இரத்த அழுத்தத்தை உயர்த்துகிற
என்ன ச�ொல்வேன்? அளவிற்கு பல நேரங்களில் நமது

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 19


மனத்தில் இருக்கின்ற க�ோட்டை நாம் அதிலிருந்து க�ொஞ்சம் வளர்ந்து 2000
கண்டுக�ொள்வதில்லை. ரூபாய்க்கு கார் ரிம�ோட்-கண்ட்ரோல் கார்
வாங்கின�ோம். அது உடைந்தப�ோதும்
ஒருவர் ஒருநாள் தான் வைத்திருந்த
நாம் அழுத�ோம்.
18 ஆண்டுகள் பழமையான கண்ணாடி
தாஜ்மஹால் ஒன்றை வேண்டுமென்று இன்னும் க�ொஞ்சம் வளர்ந்தபின்
கீழே ப�ோட்டு உடைக்கின்றார். அதைப் நமது பிறந்தநாளுக்கு 20000 ரூபாய்
பார்த்தவர்கள், 'ஐய�ோ, ஏன் இப்படிச் மதிப்புள்ள பேட்டரியில் இயங்குகின்ற
செய்றீங்க?' என்று கேட்டப�ோது கார் நமக்கு பரிசாகக் கிடைத்தது. அது
ஒருநாள் பழுதானப�ோது நாம் ர�ொம்பவே
அவர் ச�ொல்கின்றார்: '18
ந�ொந்து ப�ோன�ோம்.
வருடங்களாக கீழே விழுந்துவிடும�ோ,
உடைந்துவிடும�ோ என இது எனக்கு அதற்கு பிற்பாடு 4 இலட்சம்,
பலமுறை டென்ஷன் தந்தது. நான் 22 இலட்சம், 86 இலட்சம் என்று
இன்றுதான் முடிவெடுத்தேன், என்னை கார் வந்தாலும், அதில் ஒரு
ஆளப்பிறந்து அல்ல இது, நான்தான் கிறுக்கல் ஏற்பட்டால�ோ, பெயின்ட்
இதை ஆளப்பிறந்தவன். உடைத்தேன். உரிந்தால�ோ, லைட் உடைந்தால�ோ,
நிம்மதியாயிருக்கின்றேன்'. கண்ணாடியில் கறைபட்டால�ோ,
உள்புறம் ஏத�ோ சிந்தினால�ோ என்று
மற்றொரு நபர் தான் புதிதாக
நமது கவலைகளின் எண்ணிக்கை
வாங்கிய மெர்சிடெஸ் பென்ஸ் கார்
அதிகமாகிக்கொண்டேதான் இருந்தது.
விபத்தில் ஒன்றுமில்லாமல் ஆனப�ோது
தன் நண்பர்களையெல்லாம் அழைத்து நமது ப�ொம்மையின் மதிப்பு
விருந்து க�ொடுத்தாராம். விருந்திற்கு வளர்ந்தது. ஆனால், நாம் வளரவில்லை.
முன் அவர் ச�ொன்னது: 'கார் முழுவதும் நாம் எதற்காக அழுத�ோம�ோ, அது
உடைந்து ப�ோனாலும் உள்ளேயிருந்த மாறிவிட்டது. ஆனால் நமது அழுகையும்,
எனக்கு ஒன்றும் ஆகவில்லை. நான் கண்ணீரும் மாறவில்லை.
நன்றாக இருப்பதால் என்னால் நமது அழுகைக்கு நாம் க�ோபம்,
இன்னொரு கார் வாங்க முடியும். ஆனால் ஏமாற்றம், விரக்தி, அழுத்தம், கவலை
கார் நன்றாக இருந்து நான் இல்லாமல் என மேன்மையான பெயர்களையும்
ப�ோயிருந்தால் எப்படியிருக்கும்? 'ho சூட்டிக் க�ொண்டோம்.
நமது வாழ்க்கையை நாம் சிறுவயதில் ப�ொம்மைகள் நமது ப�ொழுது
த�ொடங்கும்போது வெறும் 60 ரூபாய் ப�ோக்கிற்கானவை. நாம் வைத்திருப்பதன்
ப�ொம்மை கார�ோடு த�ொடங்கின�ோம். ஒரே ந�ோக்கம்: அவைகளைப்
அது உடைந்தப�ோது நாம் அழுத�ோம். பயன்படுத்த.

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 20


நாம் வசிக்கின்ற நமது கனவு இல்லம்
முதல் நாம் வைத்திருக்கின்ற செல்ஃப�ோன்
வாழ்க்கை சூட்சுமம்
வரை, நாம் அணிகின்ற ஆடைகள் முதல் நமது திறமையும், நேர்மையும்
வெளியாகும் ப�ோது பகைவனும்
கையில் கட்டுகின்ற டைட்டன் வரை
நம்மை மதிக்க த�ொடங்குவான்.
அனைத்தும் இருப்பவை நமது வாழ்வை
விதண்டாவாதிகளின் சபையில்
சுகமாக்குவதற்காக. சுமையாக்குவதற்காக
விவாதம் பண்ணாதீர்கள். விறகுக்
அல்ல. கடைக்காரர் கண்ணுக்கு வீணை கில�ோ
நாம் வைத்திருக்கின்ற அனைத்தையும் கணக்கில் தான் தெரியும்.
விட நாம் மேலானவர்கள். உங்களுக்குப் பின்னால்
இருப்பதும், உங்களுக்கு முன்னால்
நாம் உரிமையாக்கி வைத்துள்ள இருப்பதும், உங்களுக்குள் இருப்பதைக்
அனைத்தையும் விட நாம் அதிக மதிப்பு காட்டிலும் சிறிய விஷயங்களே.
பெற்றவர்கள். பிறர் பாராட்டவில்லை
நமது வாழ்க்கைக்குள் வருபவைகளை என்பதற்காக உங்களது நல்ல
குணங்களை கைவிடாதீர்கள்.
விட நாம் அதிக முக்கியத்துவம்
பெற்றவர்கள். ஆக வாழ்தலில் இருக்கிறது.
ப�ொம்மைகள் ப�ொம்மைகள்தாம். சூட்சுமம்.
ப�ொம்மைகளை வாங்கிப்
பயன்படுத்தலாம். இன்னும் அதிக
ப�ொம்மைகள் வாங்கினாலும் அவைகளை
வைக்க வேண்டிய இடத்தில் வைப்போம்.
அவைகள் நமது பயன்பாட்டிற்கு
மட்டும்தான் உள்ளன. அவை நமது
சுகத்திற்காக மட்டும்தான்.
இனியும் நமது விலைமதிப்பற்ற
கண்ணீர்த் துளிகளை அவைகளை
வீணாக்க வேண்டாம், அவை எவ்வளவு
பெரியவையானாலும்!

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 21


kfd; je;ijf; fhw;Wk; ed;wp

100 வயதை தாண்டிய தந்தைக்காக, 80 80 வயதான அண்ணன் என்றும்,


வயது மகனும், 70 வயது மகனும் இனியுள்ள காலம் தந்தையை நான்
கவனித்துக்கொள்கிறேன் என்று ச�ொன்ன
தந்தையை கவனிப்பதற்காக நீதி
பிறகு அண்ணன் அனுமதிக்கவில்லை,
மன்றத்தை நாடி இருக்கிறார்கள் என்றால்
என்றும் எனவே நீதிமன்றம் தந்தையை
அது இஸ்லாம் நமக்கு காட்டிய வழி
கவனிக்கும் ப�ொறுப்பை
முறை தான்.
தன்னிடம் ஒப்படைக்க
*தந்தையை கவனிப்பது
வேண்டும் என்றும் 70
த�ொடர்பாக இரு
வயதான சக�ோதரன் வழக்கு
சக�ோதரர்கள் நடத்திய
த�ொடர்ந்தார்...
வழக்கு வரலாற்றில் இடம்
பிடித்தது.... நீ தி மன்ற த் தி ல்
வழக்கு விசாரணைக்கு
சவுதி அரேபிய
தலைநகரம் ரியாத் வந்தது. என்ன வந்தாலும்
நீதிமன்றத்தில் 80 மற்றும் 70 தந்தையை கவனிக்கும்
வயதான இரண்டு சக�ோதரர்கள் ப�ொறுப்பை யாருக்கும் நான்
நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் விட்டுத்தரமாட்டேன் என்று அண்ணனும்,
பிடித்துள்ளது.....
கடந்த 40 வருடங்களாக அண்ணன்
*வழக்கிற்கான காரணம் தான் தந்தையை கவனித்து வருவதால்
விசித்திரமானது.
இனிமேலுள்ள காலம் தந்தையை
100 வயதிற்கும் மேலான தனது கவனிக்கும் ப�ொறுப்பு தனக்கு வேண்டும்
தந்தையை கடந்த 40 வருடங்களுக்கும்
என்று தம்பியும் வாதம் செய்தனர்.
மேல் கவனித்து வருவது தனது

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 22


நீதிபதிக்கு ஒரு முடிவு எடுக்க "நீங்கள் ச�ொர்க்க வாசலில் இருந்து
முடியாமல் திணறினார். இருந்தாலும் என்னை அகற்றியுள்ளீர்கள்.. என்னுடைய
ஒரு தீர்ப்பு ச�ொல்லியாக வேண்டுமே.... ச�ொர்க்க வழியை நீங்கள் அடைத்து
எனவே இனியுள்ள காலம் இரண்டு விட்டீர்கள்....” என்றார்.
பேரும் தந்தையை மாறி மாறி கவனித்து பெரிய மகனாகிய முதியவர் அழுது
க�ொள்ளலாமே என்ற கருத்தை ச�ொன்னார். புலம்பும் இந்த காட்சியுடன் கூடிய
ஆனால் இதற்கு இரண்டு பேரும் உடன் செய்தியை சவுதி செய்தித்தாள்களும்
படவில்லை. ஊடகங்களும் தலைப்புச் செய்தியாக
நீதிபதி தந்தையிடம் கருத்து வெளியிட்டன...
கேட்டார். தந்தை எனக்கு என்னுடைய இந்த வழக்கு தன்னுடைய
மக்கள் எல்லாரும் சமம். அவர்களிடம் வாழ்க்கையில் ஒரு வேறுபட்ட வழக்கு
எனக்கு வேற்றுமை காண முடியாது என்று என்றும், இந்த வழக்கில் தீர்ப்பு கூற தான்
அழுது க�ொண்டே ச�ொன்னார். மிகவும் வேதனை அடைந்ததாகவும்
*நீதிபதி மீண்டும் குழப்பத்தில்..... நீதிபதி கூறினார்....இதையும் செய்தித்
கடைசியில் நீதிபதி ஒரு முடிவுக்கு வந்து தாள்கள் வெளியிட்டன.
தனது தீர்ப்பைக் கூறினார்.* *தாய் தந்தையரை கால்பந்தைப்
கடந்த 40 வருடங்களாக தந்தை ப�ோல் அங்கும், இங்கும் தட்டி
பெரிய மகனின் கவனிப்பில் இருந்து விளையாடுவதும், முதிய�ோர்
வந்துள்ளார். இப்போது பெரிய மகனுக்கு இல்லங்களில் அநாதைகளைப் ப�ோல்
80 வயதாகி முதுமை அடைந்துள்ளதாலும், க�ொண்டு தள்ளுவதும் நடக்கும்
மேலும் தந்தையை கவனிக்கும் ப�ொறுப்பு இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு
மக்கள் அனைவரின் கடமை என்பதாலும் அபூர்வமான வழக்கு வந்ததைப் பார்க்கும்
இனிவரும் காலம் தந்தையை கவனிக்கும் ப�ோதுதான் இந்த வழக்கு ஏன் இவ்வளவு
ப�ொறுப்பை இளைய மகனிடம் பிரபலமடைந்தது என்று தெரிந்தது.
ஒப்படைக்கிறேன். *தாய் தந்தையருக்கு சேவை செய்து
தீர்ப்பைக் கேட்டு அழுது புலம்பிய சுவர்க்கத்தை அடையும் நற்பாக்கியம் நம்
பெரிய மகன் நீதிபதியைப் பார்த்து, அனைவருக்கும் கிடைத்திட எல்லாம்
வல்ல இறைவன் அருள் புரிவானாக...
xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 23
நீரின்றி அமையாது உலகு

உலகில் முக்கால் பங்கு நீரே பால் ரூபாய் 40க்கும் ஒரு லிட்டர் தண்ணீர்
சூழ்ந்திருந்தாலும் கூட, உட்கொண்டு புட்டி ரூபாய் 20க்கும் விற்கப்படுகிறது.
உயிர் வாழ்வதற்கான நன்னீரின் அளவு பாலில் பாதிப்பங்கு நீர் வந்துவிட்டது
100ல் ஒரு சதவீதம் மட்டும்தான். இந்த என்றுதான் ச�ொல்லவேண்டும். ஆகவே,
ஒரு சதவீதமும் பெருகிவரும் மக்கள் நாம் 1 லிட்டர் நீரைச் சேமித்தாலேயே
த�ொகைக்கு ஈடு க�ொடுக்க இயலாத ரூபாய் 20ஐச் சேமித்ததாகப் ப�ொருள்.
வகையில் குறைந்து க�ொண்டே வருகிறது. நீர்நிலைகளின் வழியாக நீரைப்
நீரின் தேவை மனிதனுக்கு மட்டுமன்றி பார்த்த நாம், இன்றைக்கு புட்டிகளில்
மண்வாழ் உயிரினங்கள் அனைத்திற்கும் அடைத்து வைத்துப் பார்த்துக்
அவசியமாக இருப்பதால்தான் 'நீரின்றி க�ொண்டிருக்கிற�ோம். அடுத்த தலைமுறை
அமையாது உலகு' என்றார் திருவள்ளுவர். அதை படத்தில்தான் பார்க்க முடியும�ோ!
உட்கொள்ளும் உணவாகவும் என்கின்ற அச்சம் எழுகிறது. ஆகவே,
உணவுக்கான ப�ொருட்களை உற்பத்தி நீரைப் பாதுகாக்க நாம் அதைப் பற்றிய
செய்யவும் பின் அவற்றை உணவாகச் சில புரிதல்களைக் க�ொள்ள வேண்டும்.
சமைக்கவும் பண்டங்களைக் கழுவித் முதலில் நீருக்கு ஆதாரம் நீர் நிலைகள்
தூய்மை செய்யவும் எனப் பலவகையாகப் அல்ல; மழைதான் என்பதை உணர
பயனளிப்பதால்தான் 'தாயைப் வேண்டும். அதனால்தான் திருவள்ளுவர்
பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே' கடவுளுக்கு அடுத்தபடி நீருக்கு
என்ற பழம�ொழி த�ோன்றியது. முன்னுரிமை க�ொடுத்து, நீர் எங்கிருந்து
ஐம்பூதங்களில் ஒன்றாக விளங்கும் வருகிறது என்பதைப் பார்த்து வான்சிறப்பு
நீரைக் க�ோயிலமைத்துக் கும்பிட்டார்கள். என்று மழையைப் ப�ோற்றினார். எங்கோ
அப்படி வழிபாடு செய்த தலம்தான் இருப்பது அமிர்தம் அல்ல; எல்லா
திருவானைக்கா. இப்படி வழிபாட்டுப் உயிர்க்குமாக இறங்கி வருகிற மழைதான்
ப�ொருளாக இருந்த நீர், தற்போது வர்த்தகப் அமிர்தம் என்றும் எடுத்துரைத்தார்.
ப�ொருளாக மாறிவிட்டது. ஐம்பூதப் இயற்கை விஞ்ஞானியான
ப�ொருட்களை விலைக்கு விற்பது என்பது க�ோ.நம்மாழ்வாரும், "நீரை நிலத்துக்குள்
மிகவும் அவல நிலையாகும். இன்றைக்கு தேடுவதை விட்டுவிட்டு வானிலிருந்து
நிலத்திற்கு அடுத்தபடியாக நீரையும் வரவழைக்க வேண்டும்" என்றார். இந்தப்
விலை க�ொடுத்து வாங்கும் நிலை புரிதல் இல்லாத காரணத்தால்தான் நாம்
வந்துவிட்டது. ஏறக்குறைய ஒரு லிட்டர்

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 24


மழைநீரைச் சேமிக்கும் வழிகளைச் பழம�ொழி. எல்லாக் காலங்களிலும் மழை
செய்யாமல் பூமிப்பந்தைத் துளையிட்டு பெய்யாது ப�ோனாலும் அதன் தேவை
ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து ஆண்டு முழுவதும் தேவையாகவே
வருகிற�ோம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் இருக்கிறது. அதற்கு மழை பெய்கிற
குறைவத�ோடு மட்டுமில்லாமல், காலத்தில் முறையே சேமித்து வைத்துக்
சல்லடைப�ோல் மாறியிருக்கிற க�ொள்ள வேண்டும். அதற்கான சேமிப்புக்
பூமிப்பந்து, தன்னை நிரப்பிக் க�ொள்ள கிடங்குகளாக விளங்குபவைதான் நீர்
நெகிழ்ந்து நெகிழ்ந்து நிலநடுக்கம் நிலைகள்.
ஏற்படுகிறது. அதனால்தான் சில வளர்ந்த ஒரு காலத்தில் ஏராளமான
நாடுகளில் ஆழ்துளைக் கிணறு அமைப்பது நீர் நிலைகள் இருந்தன. மலையை
என்பது அபராதத்துக்குரிய குற்றமாக அற்றுக்கொண்டு விழும் அருவி,
அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இதற்கு 'சுன்' என்ற ஒலியை எழுப்பிக்
மாற்றாக மழைநீரை சேமிக்க, சேகரிப்புத் க�ொண்டு நீரை வெளியேற்றும் சுனை,
த�ொட்டிகளை இல்லந்தோறும் அமைக்க எப்போதும் நீர் ஓடிக்கொண்டிருக்கும்
வேண்டும். இதன்மூலம் நிலத்தடி தன்மையையுடைய ஓடை, நிலத்தை
நீர்மட்டம் உயர்வதுடன் பெருமழைக் அறுத்துக்கொண்டு ஓடும் ஆறு,
காலங்களில் ஆற்றிலும் குளத்திலும் காட்சியைக் கடந்து நிற்கும் கடல்
நீர்பெருகி நாட்டை அழிப்பதையும் மண் ப�ோன்றவை மனித முயற்சி ஏதுமின்றி
அரிப்பு ஏற்படுவதையும் நீர் வீணாகக் உருவான இயற்கை நீர்நிலைகள் ஆகும்.
கடலில் கலப்பதையும் தடுக்க முடியும். இவையன்றி ஏர்பூட்டி உழுவதற்குப்
மழைநீரைப் பிடித்துவைத்து பயன்பட்ட ஏரி, ஊரார் சேர்ந்து
ஏழுமுறை வடிகட்டி, த�ொடர்ந்து உண்பதற்கு பயன்படுத்திய ஊருணி,
பருகி வந்தால் சிறுநீரகக்கல் உள்ளிட்ட குளிப்பதற்கு என்று பயன்படுத்திய குளம்,
சிறுநீரகப் பிரச்சினைகள் வருவதில்லை. தெப்பம் ஓடுகிற அளவுடைய குளமாகிய
மேலும், மழை நீரை நாமே நேரடியாகப் தெப்பக்குளம், கண் வழியே நீரை
பிடித்துப் பயன்படுத்தும்போது நமக்கு வெளியேற்றும் கண்மாய், அகலமான
தூய்மையான நீர் கிடைக்கிறது என்ற க�ோட்டையைக் காக்கும் அகழி,
மனநிறைவும் ஏற்படும். இவ்வாறு கடலுக்கு அருகில் த�ோண்டப்பட்ட
மழைநீரானது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆழிக்கிணறு, மணற்பாங்கான இடத்தில்
உலகுக்கும் பலவகையில் பயன்தருகிறது. த�ோண்டப்பட்ட உறைகிணறு,
ஒழுங்காக அமையாத கிணறாகிய
இத்தகு மழை எல்லாக் காலங்களிலும்
கூவம், ஆழமற்ற கிணறாகிய கூவல்,
பெய்வதில்லை; அல்லது சில காலங்களில்
அகலமும் ஆழமும் க�ொண்ட கிணறாகிய
அதிக அளவில் பெய்துவிடுகிறது.
கேணி, சுற்றிலும் கல்லால் சுவர்கட்டிக்
அதனால்தான் 'மழை பெய்தும் கெடுக்கும்;
காக்கப்படும் கட்டுக்கிணறு, ஆற்றின்
பெய்யாமலும் கெடுக்கும்' என்கிறது
நடுவே அவ்வப்போது த�ோண்டி நீர்
xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 25
எடுத்துக் க�ொள்ளும் வகையிலான பாண்டியன் நெடுஞ்செழியனிடம்,
த�ொடுகிணறு, பாறையைக் குடைந்து 'யார் நீர்நிலைகளை அதிகமாகப்
அடி ஊற்றை எழுப்பும் குடைகிணறு, பெருக்குகிறார்கள�ோ? அவர்களே
படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்ட நிலைத்த புகழை அடைவார்கள்.
கிணறாகிய நடைகேணி ப�ோன்ற பல ஆகவே, நீயும் நீர் நிலைகளைப் பெருகச்
செயற்கை நீர்நிலைகளை நம் முன்னோர் செய்வாயாக' என்று அறிவுறுத்துகிறார்.
ஏற்படுத்தியதுடன் அவற்றை முறையே குறிப்பாக நீர்நிலைகளின் கரைகளைக்
காத்தும் வந்தனர். இத்தகு நீர்நிலைகள் காப்பதில் தமிழர்கள் அதிக விழிப்புணர்வு
அதிகமாக இருக்கும் நிலத்தை நன்செய் காட்டியுள்ளனர். நீரின் அழுத்தத்தைத்
என்றும், அவ்வாறன்றி வான்மழையின் தாங்கும் வகையில் குளத்தின் கரையை
வாய்ப்புக்காக மட்டுமே காத்திருக்கும் எட்டாம்நாள் பிறையைப்போல
நிலத்தை புன்செய் என்றும் பகுத்தனர். அமைத்ததை,
சங்க காலத்தில் பெரிய குளங்களைப் "அறையும் ப�ொறையும் மணந்த
பாதுகாக்க காவலர்கள் இருந்ததை, தலைய எண்ணாள் திங்கள் அனைய
"பெருங்குளக் காவலன் ப�ோல" என்று க�ொடுங்கரைத் தெண்ணீர் சிறுகுளம்"
சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. என்று புறநானூறு குறிப்பிடுகிறது.
மேலும், நீரைத் தேவையான அளவு இதேப�ோன்ற வடிவில் சற்று
மட்டுமே வெளியேற்ற மடைகளையும் வளைவாகவே கரிகாலச் ச�ோழரும்
அமைத்தனர். அந்த மடைகளைக் காக்கும் கல்லணையைக் கட்டியுள்ளார் என்பதும்
த�ொழிலைச் செய்யும் 'மடையர்' என்ற குறிப்பிடத்தக்கது. இப்படி வளைவாக
பெயருடைய மக்களும் இருந்தனர். அணைகளைக் கட்டுவது தற்காலத்திலும்
காணப்படுகிறது. மேலும், உதவாத
திருவெண்காட்டில் உள்ள
ஒருவரைத் திட்டுவதாக இருந்தால்
மூன்று குளங்களையும் பாதுகாக்க
உதவாமல் இருக்கிற கரையைப் ப�ோன்ற
முக்குளத்து நயினார்கள் என்போர்
என்றவாறு 'உதவாக்கரை' என்று
இருந்தனர். குளக்காவலர்கள் இருந்ததை
திட்டுவதும் வழக்கத்தில் உள்ளது.
திருநாவுக்கரசரும் "காத்தாள்பவர் காவல்"
என்று பாடியிருக்கிறார். நீர்நிலைகளைப் பாதுகாப்போருக்கு
ச�ொர்க்கத்தில் இடம் உண்டு என்கிறது
இவ்வாறு நீர் நிலைகள் குறித்த
நீதி இலக்கியம். ச�ொர்க்கத்தில் இடம்
விழிப்புணர்வு முற்காலத்தில் அதிக
பிடிக்க வேண்டும் என்று நீர்நிலைகளைப்
அளவில் இருந்தது. நீர்நிலைகளைப்
பாதுகாப்பது ஒருபுறம் இருந்தாலும்,
பெருகச் செய்வதாலன்றி நீரின் தேவையை
நாம் முதலில் உயிர் வாழ்வதற்காக
முழுமையாக நிறைவு செய்யவே
நீராதாரங்களைப் பாதுகாத்தே ஆக
இயலாது. அதனால்தான் சங்ககாலப்
வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
புலவர்களில் ஒருவரான குடபுலவியனார்,

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 26


மழையை பூமிக்கு இழுத்துவரும் தண்ணீர் தேவைப்படுகிறது என்றும்
கரங்களாகிய மரங்களின் கணக்கெடுப்புகள் குறிப்பிடுகின்றன.
எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். "குளிக்கும்போது அதிகமாக நீரை
நீர்நிலைகளைத் தூர்வாரித் தூய்மையாக வீணடிக்காமல் தேவைக்கேற்ப, ஒரு
வைத்துக் க�ொள்ள வேண்டும். அதன் வாளியில் நீரை எடுத்துக் க�ொண்டு
கரைகள் முதலிய கட்டுமானத்தில் குளிக்கும்போது நீர் வீணடிப்பு
கவனம் செலுத்த வேண்டும். ஏற்கனவே விலக்கப்படும்" என்கிறார் மணிப்பூர்
இருக்கும் பழைய நீர் நிலைகளை மட்டும் மாநில ஆளுநர் மாண்புமிகு இல.கணேசன்
பாதுகாத்தால் ப�ோதாது. பெருகிவரும் அவர்கள். இவ்வாறெல்லாம் நீரைச்
மக்கள் த�ொகையின் பெருக்கத்திற்கேற்ப சேமித்தால்தான் நீருக்காக வர இருக்கும்
புதிதாக நீர்நிலைகளை அமைக்க மூன்றாவது உலகப் ப�ோரைத் தடுக்க
வேண்டும். அதற்கு 'ஊருக்கு ஓர் ஆரம்பப் முடியும்.
பள்ளி' என்று த�ொடங்கியதைப்போல ஆக நமக்கான தேவைகளை நாமே
'ஊருக்கு ஒரு குளம்' என்ற வகையில் பூர்த்தி செய்து க�ொள்வதால் மட்டுமே
நீர்நிலைகளைப் பெருக்க வேண்டும். தன்னிறைவான வாழ்க்கையை அடைய
இப்படிச் செய்வதால் மழைக் முடியும். தாயின் கருவறையில் பனிநீரில்
காலத்தில் வெள்ளப்பெருக்கால் ஏற்படும் த�ொடங்கி நீர்க்குடம் உடைத்து
சேதங்கள் தடுக்கப்படும். கடல்நீரைக் நிறைவுபெறுவது வரையிலான மனித
குடிநீராக மாற்றும் இக்கட்டான வாழ்வில் நீர் இன்றியமையாதது.
நிலை ஏற்பட்டுள்ள இக்காலத்தில் சிறுதுளியே பெருவெள்ளம் என்பது
வீணாகக் கடலில் கலக்கும் மழைநீரும் பழம�ொழி.
தடுக்கப்படும். இத்துடன் நிலத்தடி பெருவெள்ளத்தை ஏற்படுத்துவதில்
நீர் மட்டமும் உயரும். நிலையான நீர் சின்னஞ்சிறு துளிக்கும் கடமை
ஆதாரமும் பெருகும். இருப்பதைப் ப�ோல, ஒவ்வொரு தனி
ஜப்பான் ப�ோன்ற நாடுகளில் மனிதனுக்கும் நீரைச் சேமித்தாக வேண்டிய
நீர்நிலைகளுக்கு மேலே சூரியத் கடமை கட்டாயமாக இருக்கிறது. ஆகவே,
தகடுகளை அமைத்து நீரை ஆவியாகாமல் சிறுதுளி நீரையும் சிந்தித்து சிந்தாமல்
பாதுகாக்கின்றனர். மழைநீரைச் சிதறாமல் சேமித்து வருங்காலத்திற்கான
சேமிப்பது என்பது நீரின் தேவையை வைப்பு நதிகளாக்குவ�ோம். நீர் இன்றி
நிறைவு செய்வதற்கான ஒரு வழி; நீரை அமையாது உலகு.
வீணடிக்காமல் இருப்பது மற்றொரு வழி.
குழாயிலிருந்து ச�ொட்டிக்கொண்டே
இருக்கும் நீரால் ஒரு நாளைக்கு 21 சிவ.சதீஸ்குமார்,
லிட்டர் தண்ணீர் வீணாகிறது என்றும் கட்டுரையாளர் ச�ொற்பொழிவாளர்
ஒரு ஏ4 தாளைத் தயாரிக்க 14 லிட்டர்

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 27


கணினி மூளைக் க�ோபாலய்யர்
தி.வ.. க�ோபாலய்யர் என்ற பெரும் கூட்டத்திலும் பேசிவிட்டு க�ோபாலய்யர்
புலவர் நச்சினார்க்கினியரின் உரை நலத்தில் அவர்களைப் பார்க்க அவர்கள் இல்லம்
மிகுந்த ஈடுபாடு உடையவர். அவருக்கு சென்றார். தான் பேசி வந்ததையும்,
உரை முழுவதும் மனப்பாடமாகவே நரசிம்மாவதாரம், பிரபந்தத்தில் 18
இருக்கும். நண்பர் சிவசங்கரன் இல்லத்தில் இடங்களில் காணப்படுவதையும்
ஒரு நாள் உணவு உண்ண வந்திருந்தார். குறிப்பிட்டார் இராமமூர்த்தி. உடனே
க�ோபாலய்யர் 18 இடம் அல்ல 178
சாப்பாட்டிற்குப் பின்னர், இருவரும்
இடத்தில் நரசிம்மாவதாரம் வருகிறது
உடையாடிக் க�ொண்டிருக்கும்போது,
என்று கூறி அவர் எழுதிய நூலையும்
சிவசங்கரன், ‘திருக்கோவையார்
எடுத்துக் காட்டினார். இப்படியுமா
முதல் பாடலுக்குப் பேராசிரியர் உரை
கணக்கு வைக்க முடியும்?
கிடைக்கவில்லை. படிக்க முடியாமல்
இருக்கிறேன். அந்த நூல் கிடைக்கவில்லை’ ஒரு கூட்டத்தில் க�ோபாலய்யர்
என்று ச�ொல்லி இருக்கிறார். பேசும்போது எதிரில் அமர்ந்து நண்பர்
புலவர் இராமமூர்த்தி அவர்கள். அவர்
‘அட, இது என்ன பெரிய வேலை?
ச�ொல்லும் பாடல் நூலில் இருக்கிறதா
க�ொஞ்சம் பேப்பர் க�ொடு!’ என்று ச�ொல்லி
என்று பார்க்கிறார். இவர் பார்ப்பதை
பேப்பர் வாங்கி ஐந்து பக்க அளவு உள்ள
க�ோபாலய்யர் பார்த்துவிட்டார். உடனே
பேராசிரியர் உரையை அப்படியே எழுதிக்
ச�ொன்னார். ‘நீ வச்சிருக்கிற சக்தி
க�ொடுத்துவிட்டார். பிறகு சிவசங்கரன்
க�ோவிந்தன் பதிப்புல இந்தப் பாட்டு
புத்தகம் கிடைத்த ப�ோது இரண்டையும்
இருக்காதுப்பா, அண்ணாமலைப்
ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார்.
பல்கலைக்கழகப் பதிப்புலதான் இந்தப்
இரண்டுக்கும் ஒரு எழுத்து வேறுபாடு
பாட்டு இருக்குது.
கூட இல்லை. பாடலை மனப்பாடம்
செய்யலாம், உரையைக் கூடவா இதைக் கேட்டவர்கள், ‘எந்தப்
மனப்பாடம் செய்திட முடியும்? கணினி பதிப்பில் எந்தப் பாட்டு இருக்கிறது.
மூளை எதைத்தான் செய்யாது? எந்தப் பாட்டு இல்லை என்று ச�ொல்லுகிற
அளவுக்கு நினைவாற்றல் இருந்தால்
நண்பர் புலவர் இராமமூர்த்தி
அதைக் கணினி என்று ச�ொல்லாமல்
அவர்கள் ஓரிடத்தில் நரசிம்ம அவதாரம்
வேறு என்ன ச�ொல்வது?’ என்று ச�ொல்லி
பற்றிப் பேச வேண்டியிருந்தது. அதற்காக
வியந்தார்கள்.
நாலாயிர திவ்யப் பிரபந்தம் முழுதும்
பார்த்து 18 இடங்களில் நரசிம்மாவதாரம் - நன்றி
பற்றிக் கூறப்பட்டுள்ளது என்று அறிந்து புலவர். இரா. சண்முகவடிவேலு

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 28


பள்ளி முடிந்தவுடன்
குரு யார�ோ?

கல்லூரி முடிந்தவுடன்
நண்பன் யார�ோ?

வேலை கிடைத்தவுடன்
தந்தை யார�ோ?

திருமணம் நடந்தவுடன்
தாய் யார�ோ?

இளமை ப�ோனவுடன் உடல் யார�ோ?

கடைசி வரை யார் யார�ோ?


உயிர் ப�ோனவுடன் நமக்கே,
நாம் யார�ோ?
இது தான் வாழ்க்கை,
இது தான் பயணம்,
வருவதும் ப�ோவதும் தெரியாது.

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 29


Old is gold
1. 60+ is No Age Bar The average age of Pope is 76

Why should companies recruit


people over 60 This tells us somehow

for senior and responsible positions ?


God has designed that the best years of your life
are 60-80 !
Because they are more productive
than those below 60 !
IT IS WHEN YOU DO YOUR BEST WORK.

A massive study in America


A study published in NEJM found
has found that the most productive age
that at 60
in a man's life is
you reach your peak of potential
60-70,
and continue up to 80 !

From 70-80
So, if you are between 60-70, or 70-80, you have
is the 2nd most productive age. the best and second best years of your life with
you !

The 3rd most productive age is 50-60.


Source:
New England Journal of Medicine: 70.389
The average age of a Nobel Prize winner is 62.
(2018)

The average age of a CEO


All senior citizens need not worry about age at
in a Fortune 500 company is 63.
all.
Be Happy ....
The average age of the pastors
of the 100 biggest churches in America is 71.

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 30


2. sir, I can give you Rs.10 lakhs straight
away.
An old man goes to his bank and presents a
cheque for Rs.1000/- to the cashier, a young The old man tears off the earlier
girl. cheque of Rs.1000/-, writes a new one for
Rs.10 lakhs and hands it to the cashier.
Cashier:
While the young girl is gone to the
Sir, you should withdraw such small
vault to get the cash, the old man grabs a
amounts from the ATM outside. Don't waste
cash deposit slip from the public shelf and
a cheque's leaf and my time.
fills it up.
Old man:
The young girl returns with the cash,
What's the problem with giving me Rs.1000/- meticulously counts out Rs.10 lakhs,
cash? gives it to the old man and says - "there
Cashier: you are, sir. Now you will have to carry
this pile home on your own. But count
Sorry sir, it cannot be done. You either go
your money before leaving the counter. I
to the ATM, or increase the amount to be
won't entertain any complaint later."
withdrawn.
The old man picks out two notes of
Old man:
Rs 500/- from the pile, puts them in his
Okay, I want to withdraw the entire amount purse and says -
from my account, keeping the minimum
"I trust you, beta, I don't need to
mandatory balance in it.
count. Now, here's a cash deposit slip.
The cashier checks his account balance and Please deposit Rs 9,99,000/- back into
finds it to be over Rs 80 lakhs! She says_ "we my account and give me the stamped and
don't have that much cash in the safe right signed counter foil. And yes, count the
now. But if you give me a cheque for Rs 80 cash in my presence."
lakhs, we can arrange the cash tomorrow".
Moral of the story:
Old man:
Don't mess with senior citizens, especially
How much can you give me right now? if they are retired!
Cashier: (checks the bank's cash balance) .from unknown clever senior citizen
xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 31
,U ngUk; [Pt ejpfspd; rq;fkk;
,lk; : tq;ff;fly; jtOk; Kj;J efhpy;
xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 32
Rfp.rptk; mth;fspd; Ngr;Rfis ,g;nghOJ
Storytel App %yk; NfSq;fs;.

1. kdk; xU ke;jpur;rhtp 11. mLj;jJ vd;d?


2. ita;j; jiyik nfhs; 12. Mde;jkhf thOq;fs;
3. mr;rk; jtph; 13. md;G
4. etuhj;jphp ehafp 14. mwk; nra;a tpUk;G
5. fe;jGuhzk; 15. MNuhf;fpak; Md;kPfk;
6. mgpuhkp me;jhjp 16. gfthd; uhkfpU\;zh;
7. jha;ikiag; Nghw;WNthk; 17.gfthd; Mjp rq;fuh;
8. fe;j r\;b ftrk; 18. gfthd; ukzh;
9. ftpaurh; fz;zjhrd; 19. Gj;jh; tho;Tk; thf;Fk;
10. ePq;fs; rpwe;j ngw;Nwhuh? 20. yypjh rf];uehkk;

xsp gutl;Lk; | brg;lk;gh; 2022 33

You might also like