You are on page 1of 3

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005

19(1) ன் கீ ழ் செய்யப்படும் மேல் முறையீட்டு மனு

அனுப்புநர்
பா.கிருஷ்ணராஜன்,
நாமக்கல் மாவட்ட தலைவர்,
தேசிய மக்கள் உரிமைகள் அமைப்பு,
(மனித உரிமைகள் காப்பாளர்கள்)
14, பலராம் இல்லம்,
ீ , அம்மன் நகர்,
பாரதி வதி
கொமாரபாளையம்,
நாமக்கல் மாவட்டம்-638183.

பெறுநர்
மேல் முறையீட்டு அலுவலர் அவர்கள்,
தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
நாமக்கல் மாவட்டம் – 637003.

பொருள்:– தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 6(1)ன் கீ ழ் சில தகவல்கள்


கோரி இன்று வரை தகவல் கிடைக்காததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி
முதல் மேல்முறையீடு மனு..

பார்வை:-
(1) பொது தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
நாமக்கல் மாவட்டம் அவர்களுக்கு நான் கடிதம் அனுப்பிய
நாள் 24.02.2021 - நகல்.

(2) அஞ்சல்துறை பதிவுஎண் RT606639495IN நாள் 24/02/2021, மற்றும்


ஒப்புகை சீட்டு - நகல்.

(3) பொதுத் தகவல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக


உதவியாளர் (பொது) அவர்களின் நகல் – ந.க.எண்:1268(6557)/2021/சி3
/சி.ப 283/2021/மார்ச் 2021, நாள்: 02.03.2021.

(4) பொதுத் தகவல் அலுவலர், கொமாரபாளையம் நகராட்சி,


நாமக்கல் மாவட்டம், அவர்களின் நகல்- த.அ.உ.ச. மனு எண்.05/2021
நாள் 17.03.2021.

ஐயா/அம்மையீர்,

வணக்கம்.நான் தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 6(1) ன் கீ ழ் சில தகவல்கள்


கோரி பார்வை (1)ல் குறிப்பிட்டுள்ள கடிதம் வாயிலாக விண்ணப்பித்தேன். சுமார்
30 நாட்கள் ஆகியும் தகவல் வழங்கப்படவில்லை. 30 நாட்களுக்குள் தகவல் வழங்கப்பட வேண்டும்.
தகவல் வழங்கப்படாதது சட்டப்படி குற்றமாகும். தண்டனைக்குரிய குற்றமாகும்.
பார்வை (3)ல் பொதுத் தகவல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)
அவர்களின் நகல் – ந.க.எண்: 1268(6557) / 2021/ சி3/ சி.ப 283/ 2021/ மார்ச் 2021, நாள்: 02.03.2021 ன் படி
தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 6(3)ன் படி சம்பந்தபட்ட பொது தகவல் அலுவலர்,
கொமாரபாளையம் நகராட்சி , நாமக்கல் மாவட்டம் அவர்களுக்கு உரிய தகவல்களை வழங்கும்படி உத்தரவு
பிறப்பித்துள்ளார்

பார்வை(4) பொது தகவல் அலுவலர், கொமாரபாளையம் நகராட்சி , நாமக்கல் மாவட்டம் அவர்களின்


த.அ.உ.ச. மனு எண்.05/2021 நாள் 17.03.2021 ன் படி பிரிவு 6(3)ன் படி சம்பந்தபட்ட பொது தகவல் அலுவலர்
வட்டாட்சியர் அலுவலகம், கொமாரபாளையம். அவர்களுக்கு உரிய தகவல்களை வழங்கும்படி உத்தரவு
பிறப்பித்துள்ளார். இது நாள் வரை கோரிய தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

எனக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கத்தில் இவ்வாறு நீர்த்துப்போகும் செயலில் ஈடுபடும் மற்றும் இன்று
வரை பொதுத்தகவல் அலுவலர் தகவல் வழங்காமல் எனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி
உள்ளார். இவ்வாறு அரசு ஆணைகளையும் தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 னை மதிக்காத
அதிகாரிகளின் சேவை இந்த தாய்திருநாட்டிற்குத் தேவைதானா? ஆகவே மேல்முறையீட்டு அலுவலரான
தாங்கள் தகவல் வழங்காத அதிகாரிகள் மீ து தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 ன் பிரிவு 20(1), 20(2)
மற்றும் 7(6)ன் படி துறை சார்ந்த நடவடிக்கைகள், அபராதம் விதிக்கும் படியும் மற்றும் நான்கோரிய
தகவல்களுக்கு கட்டணமின்றி வழங்க உத்தரவிடுமாறும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
தாங்களும் குறிப்பிட்ட 30 தினங்களுக்குள் எனக்கு மேலே குறிப்பிட்ட ஆவணங்களையும் தகவல்களையும்
அளிக்காவிட்டால் பிரிவு 19 (3)ன் கீ ழ் தலைமை தகவல் ஆணையருக்கு புகார்மனு அனுப்பு வதைத் தவிர
பாதிக்கப்பட்ட எனக்கு வேறு வழி தெரியவில்லை என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்கள் அலுவலகத்தில் அரசாணை (நிலை) எண் 114/2006 பின்பற்றப்படுகின்றதா?

நாள் – 26-03-2021
இடம்– கொமாரபாளையம் இப்படிக்கு,

பா.கிருஷ்ணராஜன்,
நாமக்கல் மாவட்ட தலைவர்,
தேசிய மக்கள் உரிமைகள் அமைப்பு,
நகல் 1: திருமதி. சி. சித்ரா எம்.ஏ, அவர்கள்
மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது),
நாமக்கல் மாவட்டம்.
2: ஆணையாளர், அவர்கள்
கொமாரபாளையம் நகராட்சி ,
கொமாரபாளையம், நாமக்கல் மாவட்டம்.

You might also like