You are on page 1of 3

இந்துக்களுக்குரிய சிறப்பு அம்சங்களும் அதனுள் மறைந்துள்ள அறிவியலும்

இந்துமதத்தில் பல நவீன அறிவியல் உண்மைகள் (Advanced Science)


இருப்பதை உலகம் வெகு வேகமாக உணர்ந்து வருகிறது.

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமை இல்லை; திறமான


புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் — என்று
சொற்தேரின் சாரதியாம் பாரதி பாடி வைத்தான். அது உண்மையாகி வருகிறது.

வழக்கமாக இந்துக்கள் நெற்றியில் திருநீறு அணிவது உண்டு.ஏன் இப்படி செய்ய


வேண்டும்?இதன் நோக்கம் என்ன? என்று நீங்கள் கேட்பது என் காதில்
விழுகிறது.இதற்கு அறிவியல்பூர்வமான பல காரணங்கள் உண்டு.அவற்றைப்
பார்ப்போமா..

விபூதி அல்லது திருநீறை எந்த காரணமும் இன்றி வெறும்


ஆன்மீ கத்தின் பெயர் கொண்டு மட்டுமே தினமும்
பயன்படுத்தவில்லை.உண்மையில் விபூதியை
அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை
எடுத்து உருண்டை ஆக்கி வெயிலில் காய வைக்க
வேண்டும்.
பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க
வேண்டும். இப்போது அந்த உருண்டைகள் வெந்து நீறாகி
இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். திருநீறு
நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன்
கொண்டது. நம்மை சுற்றி நிறைய அதிர்வுகள்
இருக்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிந்தது தான்.
நம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில் தான்
நாம் வாழ்ந்து வருகிறோம்.

திருநீறானது நல்ல அதிர்வுகளை உள்வாங்கும்


தன்மையைக் கொண்டது. அந்தவகையில் உடலின்
முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்வதால்
அவ்விடங்களில் வலிமை அதிகமாகும் என்ற கருத்து
நிலவுகிறது. இதனால் தான் திருநீறு பூசுவதை
வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்

மனித உடலிலேயே நெற்றி மிக முக்கிய பாகமாகக்


கருதப்படுகிறது. நெற்றியில் தான் அதிகமாக வெப்பம்
வெளியிடப்படுகின்றது, உள் இழுக்கவும் படுகின்றது.
சூரியக் கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில்
அதிர்வுகளை உள்ளனுப்பும் செயலை திருநீறு செய்கிறது.
அதனால் தான் திருநீறை நெற்றியில் கட்டாயம்
பூசுகிறார்கள்.

பசு மாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு ஏன்


செய்கிறார்கள்? ஏனெனில், மாடு அறுகம்புல் போன்ற
பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலை
நல்ல உடற்சக்தியுடன் வைத்திருக்கிறது. இது இடும்
சாணத்தை தீயிலிடும் போது ஏற்படும் இரசாயண
மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத் தன்மையாக
அமைகிறது.

நமது இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக


நுண்ணிய நரம்பு அதிர்வலைகள் உள்ளன. அதனால் அந்த
இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்ய
முடியும் என்று கூறப்படுகிறது. அதனாலேயே மன
வசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம்
போன்றவை பூசப்படுவதாய் சில கருத்துகள்
கூறப்படுகின்றன.
சந்தனத்தின் குளிர்ச்சியானது நெற்றியிலுள்ள மூளையின்
புறணி (frontal cortex) என்னும் இடத்தில் அணியப்படும்
போது வெப்பத்தின் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை
நீக்க உதவுகிறது.
அறிவியல் சார்ந்த விஷயங்கள் காலப்போக்கில்
வெறுமனே ஆன்மிகம் என்று கூறப்பட்டு பிறகு மூட
நம்பிக்கையாக மாறிவிட்டது. அறிவியல் புறம்
தள்ளப்பட்டு, மதம் முன் நின்றதால் தான் இந்த
விஷயங்கள் எல்லாம் மெல்ல, மெல்ல
மறைந்துவிட்டன.ஆனால் தற்போதைய காலத்தில்
இது மற்ற இனத்தவரால் உணரப்பட்டு மெல்ல
வாழ்க்கையில் பயன்படுத்தப்படுவதாய் தெரிகிறது.உதாரணத்திற்கு
வேப்பிலை,மஞ்சள்,அருகம்புல் போன்றவற்றை இன்று மலாய்க்காரர்களும்
சீனர்களும் மருந்தாய் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.இவை எல்லாம்
கொரோனா கற்றுக் கொடுத்த பாடம்..

ஆக்கம் : நிவாஷினி சரவணகுமார்

பள்ளி :SMK TAMAN RINTING 2,TAMAN RINTING 81750 MASAI JOHOR.

TINGKATAN 2 ANGSANA

You might also like