You are on page 1of 7

ஐயனார் கோவில்களின் கோட்படும், நோக்கமும்

இன்றியை சூழ்நிலையில், கோவில்கள், நாட்டுப்புறக் கோவில்கள் மற்றும் சமய வழிபாட்டுக்


காயில்கள் என வகைப்படுகின்றன. சமயங்கள் குறிப்பிட்ட கோட்பாட்டைக் கொண்டிருப்பதும்,
் கோவில்கள் அதனை வெளிப்படுத்தும் இடங்களாக அமைந்திருப்பதும் உண்டு.
அவை சார்நத
சைவம், வைணவம் முதலிய வைதீகத்தைத் தழுவிக்கொண்ட சமயங்களுக்கும், அச்சமங்களின்
கடவுளாகிய சிவன், திருமால் முதலியவற்றிக்கும் பெரும் மடங்களும், கோவில்களும்,
வழிபாட்டையும், கோட்பாட்டையும் வளர்ப்பதற்கென்று அமைக்கப்பட்டுள்ளன. பௌத்தம், சமணம்,
கிறித்துவம், இசுலாம் முதலிய சமயத்திலும் அவ்வாறே தத்தம் கோவில்களை
அமைத்துக்கொண்டனர்.

இந்நிலையில்தான், நாட்டுப்புறத் தெய்வமாக விளங்ககும் ஐயனாரின் கோவில்கள், எல்லா


மக்கட்கும் பொதவானவையாக இருந்து வருகின்றன. அவ்வாறு இருந்தும், அவ்வழிபாட்டு மரபின்
நோக்கமும், கோட்பாடும் எதுவென்று அறியப்படாத நிலையும், வெறும் வழிபாடாக மட்டும்
நிலைத்திருக்கும் போக்கும் உள்ளன. இவ்வறியாமையைப் போக்கிட, பல்வேறு அறிஞர்களின் ஆய்வு
முடிவுகளைக் கொண்டு ஐயனார் கோவில்களின் கோட்பாட்டை ஒருவாறு கண்டறியும் முயற்சியே
இக்கட்டுரையின் பொருளாகும்.

நாட்டுப்புற தெய்வங்களுள் ஐயனார் வழிபாடு

நாட்டுப்புறக் கோவில்கள், சமயச் சார்பு இன்றி, மக்களால் அமைக்கப்பட்டு,


அவர்களாலேயே பூசெய்யும் வேறுடைய கோவில்களாம். இவை, பொதுத்தெய்வங்களின்
கோவில்கள், குறிப்பிட்ட குலத்தாரின் குலதெய்வக் கோயில்கள், பங்காளிகட்கு மட்டும் உரிய
முன்னோர் கோவில்கள், குடும்பத்திற்கு மட்டும் உரிய வீடடு
் தெய்வக்கோயில்கள் என வழிபடும்
மக்களின் சமூகப் பிரிவு அடிப்படையில் வகைகளாக வேறுபடுகின்றன.

இவ்வகைகளுள் ”ஐயனார் கோவில்களும், தாய் தெய்வமான மாரி கோவில்களும்


அனைத்து மக்களாலும் வழிபட்ப்படும் பொதுத் தெய்வக் கோவில்களாக அமைந்துள்ளது”, நாட்டுப்
புற வழிபாட்டின் கோட்பாட்டை வடிவமாக இவையிரண்டன் அமைப்பு விளங்குகின்றன.

பொதுவாக ஐயனார் கோவில்களைச் சிறுதெய்வக்கோவில்கள் என்று வரையறுக்கும்


போக்கு நிலவுகிறது. இது முற்றிலும் முரணாக அமையும் ஒன்றாம். பெருந்தெய்வம் என்று
கூறப்படும் சமய அமைப்புகளின் கோவில்களைப் போலவே அனைத்து மக்களும் வழிபடும்
கோவிலாக ஐயனார் கோவில்கள் உள்ளன. மேலும், ஐயனார் கோவில்களில் பார்ப்பனர் தான் பூசை
செய்ய வேண்டும் என்ற கட்டாயமோ, வடமொழி மந்திரங்கள் ஓதப்படுவதோ பெரும்பான்மையான
வட்டாரங்களில் இல்லை. பெரும்பான்மையான சிற்றூர்களில் ஐயனார் வெவ்வேறு அடைமொழிப்
பெயர்கள் கொண்டு வழிபடப்படும் தெய்வமாக உள்ளன. இவையெல்லாம் ஐயனார் ஒரு பொதுப்
பெரும் தெய்வம் என்பதை உணர்த்துகின்றன. இதனை, கோட்பாடு தத்துவமற்ற சமயமற்ற வழிபாடு
என்று கூறி பெருந்தெய்வமல்ல என்று மறுக்கலாம். ஆனால் ஐயனார் கோவில்களுக்கும், வழிபாட்டு
மரபிற்கும் ஒரு கோட்டுபாடு உண்டு என்பது அண்மைக் கால அறிஞர்களின் முடிவுகள் வாயிலாக
வெளிப்பட்ட வருகின்றது.

உழைக்கும் மக்களின் உலகாயதக் கோட்பாடு

“உழைக்கும் பாமர மக்களின் தத்துவமே உலகாயதம்”1 என்று தேவி பிவசாத்


சட்டடோபாத்யாயா எனும் ஆய்வறிஞர் பல்வேறு சான்றுகளுடன் நிறுவியுள்ளார். மேலும், உலகாயதம்
என்பது இந்தியாவின் தத்துவப் பாரம்பரியம் என்று கருதப்படும் கருத்துமுதல் வாதத்திற்கு எதிரான
பொருள் முதல் வாதக் கோட்பாடே என்றும் முடிவு காண்கிறார்.

“பீட்டர்ஸ் பர்க் அகராதியில், உலகாயதம் என்பது பொருள் முதல் வாதம் எனப்படுகிறது”2

“மோனியர் வில்லியம்ஸ் என்பவரது கருத்துப்படி இது நாத்திக தரிசனம் ஆகும்”3

“அறிஞர் தர்க்காத்னா பன்கனனன் கருத்துப்படி இது உலகாயதம் என்று அழைக்கப்படுவது


ஏனென்றால் இது பரும்பபொருளைவு உலகத்தை நம்புகிறது அதற்கு அப்பால் எதையும்
4
நம்புவதில்லை”

“இயற்கையுடன் இடையந்த மர்மமான வாழ்வை நடத்துபவர்களுக்குரிய பெயர்”5 – ரைஸ்


மேவிட்ஸ்.

“காட்சிக்குப்புலனாகாத உயிர் என்ற ஒன்று உண்டு, அது முற்பிறப்பிற் செய்த கர்மப்


பலன்களைப் புசிப்பதற்கு ஏற்ற உடலொன்றை இறைவன் கொடுக்கிறார் என்றெல்லாம் சமயிகள்
கூறுவதும் நம்மை மயக்குவதற்கே” என்பது உலகாயதர் கூற்று – கி.லட்சுவணன்.

இவ்வாறு உழைக்கும் மக்கள் தம் புலன்களால் உணர்ந்து அறிந்தவற்றை நம்பி, பொய்களான


ஆன்மா, மறுபிறவி, முற்பிறவி, கன்னம பலன் முதலியவற்றை நம்பாது ஒதுக்கியவராய் இந்தனர்
என்பது அவர்கள் பின்பற்றிய உலகாயதக் கோட்பாட்டில் வெளிப்படுகிறது.

பொருள் முதல்வாதம் பற்றி பெமாக்ரிடஸ் முடிவு

“பருப்பொருள் என்பது நமது உணர்வுக்கு வெளியே அதனைச் சாராமல் எதார்த்தத்தில்


இருந்து வருகிறது”

“பருப்பொருள் என்பது நம்மிடம் புலனுணர்வுகளைத் தோற்றுவிக்கிற ஒன்று”

“புலனுணர்வுகளும் கருத்துருவங்களும் பொருள் உரவாக்கும் பதிவுகளே ஆகும்”

”பருப்பொருள் என்பது மாறாத ஒன்று, அணக்கள் இன்று இருப்பது போலவே எப்போதும்


இருந்து வந்தன, எப்போதும் இருந்தும் வரும்”
“பருப்பொருளுக்குத் திட்டவட்டமான பௌதிகப் பண்புகள் உண்டு, இதிலிந்துதான் எல்ம்
வறுதுகளும் உருவாகின்றன. இதுவே இயற்கையின் மூலாதாரக்கோட்பாடு”

“கண்ணால், காணவோ, தொட்டறியவோ முடியாத மிகச்சிறிய பொருளை அணுக்கள்


என்ற நிரந்தரமான அழிக்க முடியாத பொருளினின்று தோற்றுவது தான் பொருள்” என்றார்.

டெமாக்திடஸ் கூறும் இவைகளுள், பொருளில் இருந்தே இயக்கம், பண்பு, கருத்து, புலன்


உணர்வு அனைத்தும் உருவாகின்றன என்பதை அறியலாம், இவை உலகாயதரின் கோட்பாட்டுடன்
ஒத்திருப்பது இதன் வாயிலாக வெளிப்படுகிறது. ஆயினும் காணமுடியாதவற்றைப் பொருளென
வேற்காத உலகாயதம், அணுக்களைப் பொருளென ஏற்பதோடு விலகியிரககிறது.

உலகாயதமும் தமிழரும்

பாமர மக்களின் வாழ்வியல் கோட்பாடான உலகாதயம், கருத்துமுதல்வாதம் பேசும் ஏனைய


சமயத்தாரால் இழிவாகக் கருதப்பட்டது. உலகாயத்ததைப் பற்றி நமக்குக் கிடைக்கும் சான்றுகளும்,
குறிப்புகளும் மற்ற சமயத்தினர் தம் நூலில் உலகாயதத்தைப் பற்றி இழித்துக் கூறுயவைகளாகவே
பெரும்பாலும் விளக்குகின்றன. இதற்கான சான்றுகள், மணிமேகலை, நீலகேசி சர்வ தரிசன
சங்கிரகம், உபநிடதங்கள், பௌத்த நூல்கள் முதலியவற்றில் உள்ளன.

“இன்பம் ் ல், பொருள் தேடுதல், ஆசை, புலனின்பம் ஆகிய மட்டுமே மனிதனது


துய்தத
லட்சியம் என்று கருதி, மறு உலகம் எதுவும் இல்லை என மறுக்கும் மக்கள்தான் சாருவாகர்களது
கொள்கையைப் பின்பற்றுபவர்கள். எனவே இந்த பொருள் தரும் தரிசனம் தான் உலகாயதம்”
கூறுவதை தேவிபிரசாத் சட்டடோபாத்தியாய தம் உலகாயதம் நூலில் குறிப்பிடுகிறார்.4

தமி காப்பியமான, பௌத்த சமயத்தை உயர்த்தும் மணிமேகலையின் சமயக்கணக்கர்


தம்திறங்கேட்ட காதையில் பூதவாதியின் கோட்பாடு உலகாயதத்ததோடு இணங்குவதைக்
காட்டுகிறது. அப்பூதவாதியின் கோட்பாட்டினைக் கேட்ட மணிமேகலை, முற்பிறவி, மறுபிறவி
என்பதெல்லாம் பொய்கள், உரையைக் கேட்டு எள்ளிச் சிரித்தாகக் கூறப்படுகறிது. அனுமானமின்றி
உன் தந்தை, தாய் இன்னாரென்று எப்படி நீ அறிவாய் என்று கேட்டு பிரத்தியட்சம் மட்டுமேற்ற
பூதவாதியை மணிமேகலை மறுத்துரைத்துள்ளாள். மேலும் தாம் முற்பிறவியைக் கண்டதாகவும்
கூறிகிறாள்.

“பொய்ம்மை மறுமையுண் டாய்வினை துய்ததல்”7

“தந்தை தாயரை அனுமானத் தாவல


நிந்த ஞாலத் தெய்வகை யறிவாய்”

“பிறந்த முற் பறப்பை யெய்தப் பெறுதலின்


அறிந்தோ ருண்டோ வென்று நக்கிடுதலும்”

வினய பிடகம் என்ற பெத்த நூலில்

“புத்தத் தடுக்காமல் இருந்ததிருந்தால் புத்த பிட்சுக்கள் உலகாயதத்தைக் கற்றிருக்கலாம்”


என்று வவருகிறது.

இவ்வடிகள் புத்தர் உலகாயதக் கோட்பாட்டை ஏற்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

மனுநீதி எழுதிய மனு என்பவர், ஹைதுகர்கள், தார்க்கிகள் ஆகியோர் எவருடனும்


பேசக்கூடாது என்று கூறினார்.

இதில் ஹைதுகர்கள் என்றுகூறப்படவோர் உலகாயதரே என்று அறிஞசர் தால்குட்பதா கூறுவதாக


தேவிபிரசாத் சட்டோபாத்தியயா குறிப்பிடுகிறார்.

“கீதையும்,
சாந்கோக்ய உபநிடதமும், மைத்ரேயினி உபநிடமும் உலகாயதக் கருத்துக்கள்
அசுரர்களுடையவை என்று கூறுகின்றன”

“அபரஸ் பர சம்புதம் இம் அன்ய காம ஹைதுகம்” என்று உலகம் ஆண்பெண்


சேர்க்கையால் உண்டானது என்பதே உலகாயதம் என்று கீதையில் கூறப்படுட்டுள்ளது.

அசுரர்கள் யார் எனும் கேள்விக்கு விடை கூறுவது பல அறிஞர்கள் செய்த ஒன்று இராகுல்
சாங்கியித்தியான் நம் நூலில் “அசுரர்கள்” இந்தியாவின் பூர்வ குடிகளைக் பய்னபடுத்திய இலிங்க
வழிபாடு செய்வோர் என்று குறிப்பிடுகறிர். இலிங்கம் என்பது ஆண் பெண் சேர்க்கையின்
குறியீடாகும். உலகாயத் கோட்பாடு , நாத்திரீகச் சடங்குகளை ஏற்பதாகும். தாந்திரீகம்
வேளாண்மை பொருட்டு எழுந்து, ஆண் பெண் சேர்க்கையைப் போற்றும் பல்வேறு சடங்குகளைக்
கொண்டதாகும். இக்கோட்பாட்டை அசுரர்கள் போற்றினர் என்பது கீதையின் கூற்றயும், இராகுல்
சாக்கிருத்தியாயன் காற்றையும் ஒப்பிட்டுப் பார்பப் தன் மூலம் ஒன்றுமை தோன்றுகிறது.

சிந்துவெளி அழகாய்வில் இலிங்க வடிவங்கள் கிடைத்துள்ளன. சிந்துவெளி நாகரீகம்


தமிழத் நாகரீகமே என்று ஹீராஸ் பாதரியார் முதலிய அறிஞர்கள் சான்றுகளுடன் முடிவு
கூறியுள்ளனர். இதனால் தமிழரே உலகாயதத்தைப் பின்பற்றினர். தமிதுரையே அசுரர் என்ற
சொல்லால் மாற்றார் குறித்தனர் என்று விளங்குகிறது.

தமிழர் வழிபாடும், வாழ்வியலும் பொருளை முதன்மைப்படுத்துவனவாகும். தெய்வம் என்ற


ஒன்றையே கருப்பொருள் என்று கூறி, அதனைப் பொருளாகவே கொண்டவர்கள் தமிழர். அதிலும்
முதற்பொருளில் தெய்வத்தை வைக்காமல், நிலம், பொழுது ஆகிய இரண்டையும் வைத்துள்ளமை
தமிழரின் அறிவு நுட்பத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது, கருத்து முதல் வாதம் எவற்றை மாயை
என்று சொல்கின்றதோ, அவற்றையே தமிழர் முதன்மைப் பொருட்களாகக் கொண்டிருந்தமை
தமிழர் கோட்பாடு பொருள் முதல்வாதத்தையே ஏற்றிருப்பதும் புலனாகும்.
இந்நிலையில் மேற்கூறிய உலகாயதக் கோட்பாடு, தமிழரின் கோட்பாடு என்று நிறுவுதற்கு
தொல்காப்பியம் முதல் சிந்துவெளி அகழ்வாய்வு வரை பல்வேறு சான்றுகள் உள்ளன.

ஆண் பெண் சேர்க்கையின் விளைவாகவே உயிர்கள் தோன்றுகிறது என்று கூறும்


உலகாயதம், தமிழின் தனிச்சிறப்பு என்று போற்றப்படும் அகப்பொருள் வாழ்வுடன் பொருந்தி
வருவதைக் காணலாம்.

அக இலக்கியங்கள் ஆண் பெண் இயல்பையும், உணர்வுகளையும் போற்றும்


செவ்விலக்கியங்களாகும். உலகாயதரும் ஆண் பெண் இன்பம் துய்த்தலைப் போற்றுவர். இதன்
அடிப்படையில் தமிழரின் வைதீக எதிர்ப்புநெறி உலகாயத வடிவில் இருந்துள்ளது தெரியவருகிறது.

உலகாயதத்தை மதித்த ஆசீவகம்

ஆசீவகம் என்பது சமண சமயத்துள் கருத்து வேறுபாடு கொண்ட ஒரு சமயப் பிரிவு ஆகும்.
இதன் தலைவர் மற்கலி கோசாலர் என்பவர் ஆவார். இவரே அறப்பெயர் சாத்தன் என்ற ஐயனார்
ஆவார் என்று பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் குறிப்பிடுகிறார்.

ஆசீவகர்கள் பற்றிய செய்திகள் மணிமேகலை, நீலகேசி போன்ற காப்பியங்களில்


கூறப்பட்டுள்ளன. உரம் தரும் உயிர், நிலம், நீர், தீ, காற்று ஆகிய ஐந்து பொருட்களைப் பற்றி
மற்கலி கோசாலரின் நூலான ஒன்பது கதிர் கூறுவதாக, பூரணன் என்ற ஆசீவகன் கூறுவதாக
அமைந்துள்ளது.

அணுக்களின் தன்மை பற்றியும், ஆதியில்லா அவ்வணுக்களே எல்லாப் பொருட்களாகவும்


அமைந்துள்ளன. அவ்வணுக்களின் இயல்பினாலேயே இயக்கம் நடைபெறுகிறது என்ற அறிவுச்
செய்தியை கண்டறிந்தவர் மற்கலி என்று இதன் வாயிலாகத் தெரிகிறது.

உலகாயதக் கோட்பாடும் நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கின் சேர்க்கையினாலேயே


உலகும், உடலும் தோன்றியது என்று விளக்குகிறது. பிறகு உணர்ச்சி எவ்வாறு தோன்றுகிறது
என்றால் அது பொருளின் சுபாவத்தால் (இயல்பு) தோன்றுகிறது என்று கூறுவர்.

ஆழ்ந்து நோக்கினால் ஆசீவகர், சமணருடன் வேறுபடும் வகையும் இந்த சுபாவம் என்ற


கொள்கையை ஏற்றதனால் தான். “நியதி (ஊழ்), ஸங்கதி (சூழ்நிலை), ஸ்பாவம் (இயல்பு)
ஆகிய மூன்றால் உலகம் நிலைமாறிக்கொண்டே இருக்கிறது.” இக்கொள்கையை மற்கலி கோசாலர்
கொண்டிருந்ததை உலகாயதத்துடனான, ஆசீவகத்தின் இணக்கத்தின் வெளிப்பாடாகக்
கொள்ளமுடியும்.

ஏனைய சமயங்கள் எல்லாம் பாமர மக்களின் கோட்பாடான உலகாயதத்தை வெறுத்து


ஒதுக்கிய போது, ஊழ், சூழ்நிலை, இயல்பு என்ற கொள்கையினால், உலகாயதத்தை ஏற்கம்
சமயமாக ஆசீவகம் திகழ்ந்துள்ளது. இதனாலேயே பாமரமக்கள், குறிப்பாக உலகாயதம் கொண்ட
தமிழர்கள் ஆசீவக சமய ஆசான்களாக விளங்கிய ஐயனார்களை தெய்வமாக ஏற்றுப் போற்றும்
நிலை உருவாகியது என்ற முடிவுக்கு நாம் வருவதில் எவ்வகைத் தடையும் இல்லை.

இதனாலேயே கருத்து முதல் கோட்பாடு கொண்ட வைதீக, சமண, பௌத்த சமயங்களால்


ஒதுக்கப்பட்ட பிரிவாக ஆசீவகம் இருந்தது. அதேநிலையில் தங்கள் வாழ்வியலை ஏற்று மதித்த
ஆசீவக மதபினரை பாமர மக்கள் பெரிதும் போற்றி வழிபட்டு வந்துள்ளனர் என்பது இன்றைய
ஐயனார் வழிபாட்டின் மூலம் தெரியவருகிறது.

வழிபாட்டு முறையிலும் வைதீகச் சடங்குகள் ஏதும் பின்பற்றப்படாமல், பாமரமக்களின்


சடங்குகளான வளமைச் சடங்குகள், மேளாண்மைக்கான சடங்குகள், கால்நடை வளத்திற்கான
சடங்குகள் முதலியன ஐயனார் கோவில்களில் விழாக்களாக நடைபெறுகின்றன. முளைப்பாலிகை
எடுத்தல், மழை வேண்டி மண் குதிரை எடுத்தல், மஞ்சுவிரட்டு விடுதல், நேர்த்திக்கடனாகவும்,
இன்பம் பெருகவும் கலைக்கூத்து, நாடகங்கள், ஆடல் பாடல் முதலிய நிகழ்ச்சிகளை வேண்டுதல்
காணிக்கையாக ஐயனாருக்கு அளித்தல் என்பன தாந்திர வழிபாட்டு மரபைச் சார்ந்தவை ஆகும்.
இவை மக்களின் இன்பியல், உழைப்பு, தேவைகள் முதலியவற்றை ஆசீவகர் ஏற்றதன் விளைவே
ஆகும்.

முடிவுரை

இவ்வாறு பகுத்தறிவுச் சிந்தனை கொண்டு மக்களின் நலனையும், உலகின் இயல்பையும்


அறிந்து அதனைப் பேணியவர்கள் ஐயனார்கள். மற்ற சமயத்தினரால் சாத்தான் என்று
் வர்கள்.
தீயசக்தியாகக் கருதப்படும் அளவிற்கு அச்சமயங்களின் மூடத்தனங்களை எதிர்தத

“சாத்தான் வேதம் ஓதுகிறது” என்ற தொடரே சாத்தையனார் எவ்வளவு கடுமையாக


வேதங்களை எதிர்த்து வந்தார் என்பதை நமக்கு உணர்த்துகின்றது. ஆனால் இச்சாத்தன்
வழிபாட்டையும் வைதீக, பார்பணியமாக மாற்றும் போக்கு இன்றைய சூழலில் ஏற்பட்டுள்ளது.

சிற்சில ஐயனார் (சாத்தன்) கோவில்களுள் பூப்படைந்த பெண்கள் செல்லக்கூடாது என்ற


தடையை ஏற்படுத்தியுள்ளனர். இந்த நிலைமை ஆசீவகம், உலகாயதம் இரண்டிற்குமே எதிராக
உள்ளதாகும். மாந்தர் வாழ்வையும், இயல்பையும் இழிவுபடுத்தும் வகையில் இத்தடைகள் உள்ளன.

சமூகம் என்பது பல்வேறு தொழில்கள், பண்பாடுகள், வேறுபட்ட நிலவியல், பொருளியல்,


சூழல்கள் கொண்ட மக்களால் ஆனதாகும். வேறுபாடுகள் கடந்து இணக்கம் ஏற்படுத்தும்
காரணிகள், அனைவருக்கும் பங்கு உள்ளதொரு அமைப்பாக இருத்தல் வேண்டும். அவ்வகையில்
கோயில்கள் சமூக நல்லிணக்கத்திற்கு ஆற்றும் பங்கு யாதெனில் அவை ஒரு மதத்தில்,
பலநிலையில் உள்ள மக்களிடம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

ஆனால் இவ்வையனார் கோயில்களின் சமயக் கோட்பாடான ஆசீவகமும், அது தழுவியுள்ள


உழைக்கும் மக்களின் வாழ்வியலான உலகாயதமும் உலக மக்கள் அனைவரையும் மாந்தர் என்ற ஒரே
தன்மையில் அணுகுவது பெருஞ்சிறப்பாகும். எனவே வெறும் வணக்கத்தை மட்டுமு் செலுத்தாமல்,
கோட்பாட்டின் அறிவுச் செய்தியை மக்களிடையே அறிவுறுத்தும் வகையில் வழிபாடுகள்
பொருளுள்ளதாகவும், பொருள் விளக்கம் கொண்டதாகவும் அமைதல் வேண்டும்.

You might also like