You are on page 1of 12

மைய சமச்சீரற்ற Re6Hf, Re5.5Ta, (HfNb)0.10(MoReRu)0.

90, மற்றும் LaPtGe

கலவைகளின் கடத்தும், காந்த மற்றும் மீக்கடத்து பண்புகளின்


திரவநிலை அழுத்தத்தின் விளைவு

இயற்பியல்
முனைவர் பட்டம்

என்ற விருதுக்காக பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குச்


சமர்ப்பித்த ஆய்வு சுருக்கம்

சதிஸ்குமார் மா

(Ref.No. 07870/Ph.D. K2/Physics/Full–Time/April-2017)


மூலம் சமர்பிக்கப்பட்டது

ஆய்வு வழிகாட்டி
பேரா. சோ. ஆறுமுகம்

உயர் அழுத்த ஆய்வு மையம்


இயற்பியல் துறை
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
திருச்சிராப்பள்ளி - 620024
தமிழ்நாடு, இந்தியா

மார்ச் 2023
BHARATHIDASAN UNIVERSITY
TIRUCHIRAPPALLI - 620024
Form for Tamil Translation of
Synopsis, Abstract and Glossary words for Ph.D. Thesis

ஆய்வுச் சுருக்கம், ஆய்வுத் தொகுப்பு மற்றும் கலைச்சொற்களின் பட்டியல்களில்


கீழ்கண்ட விவரங்கள் இடம்பெற வேண்டும்.

வ. பொருள் விவரம் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)


எண்

1. 1. ஆய்வுத் தலைப்பு / மைய சமச்சீரற்ற Re6Hf, Re5.5Ta,


Research Title (HfNb)0.10(MoReRu)0.90, மற்றும் LaPtGe

`கலவைகளின் கடத்தும், காந்த மற்றும்


மீக்கடத்து பண்புகளின் திரவநிலை
அழுத்தத்தின் விளைவு / Hydrostatic pressure effect
on transport, magnetic and superconducting properties of non-
centrosymmetric Re6Hf, Re5.5Ta, (HfNb)0.10(MoReRu)0.90, and
LaPtGe compounds

2. 2. பொருள் /Subject இயற்பியல் / Physics

3. 3. ஆய்வாளர் பெயர் / Name of the சதிஸ்குமார் மா / Sathiskumar M


Researcher

4. 4. ஆய்வாளர் பதிவு எண் Ref.No. 07870/Ph.D.K2/Physics/Full–Time/April-2017)

மற்றும் வருடம் / Researcher’s


Registration Number & Year

5. 5. ஆய்வாளர் அலைப்பேசி எண் 7639450216

/ Researcher’s Mobile Number

6. 6. ஆய்வாளர் மின்னஞ்சல் sathiskumar.iaf@gmail.com

முகவரி / Researcher’s E-mail ID

7. 7. நெறியாளர்(கள்) பெயர் / Name பேரா. சோ. ஆறுமுகம்/ Prof.S. Arumugam


of the Guide(s)

8. 8. குறிச்சொற்கள் / Keywords (5-10) மீக்கடத்திகள், மைய சமச்சீரற்ற மீக்கடத்திகள்,

நேர தலைகீழ் சமச்சீர் முறிவு, வகை II

மீக்கடத்திகள், மேல்வரம்புக் காந்தப்புலம்


9. பல்கலைக்கழகம் / University பாரதிதாசன் பல்கலைக்கழகம் / Bharathidasan
University

10. கல்லூரி / College

11. துறை / Department இயற்பியல் / Physics

12. ஆய்வுச்சுருக்கம் 2023

சமர்ப்பிக்கும் ஆண்டு / Year of


Synopsis submission

ஆய்வு சுருக்கம்

ஆய்வறிக்கையின் தலைப்பு

“மைய சமச்சீரற்ற Re6Hf, Re5.5Ta, (HfNb)0.10(MoReRu)0.90, மற்றும் LaPtGe கலவைகளின்

கடத்தும், காந்த மற்றும் மீக்கடத்து பண்புகளின் திரவநிலை அழுத்தத்தின் விளைவு”

ஆய்வு சுருக்கம்

இந்த ஆய்வுச்சுருக்கமானது மையசமச்சீரற்ற மீக்கடத்திகளின் அறிமுகம்


முதலாக ஏழு அத்தியாயங்களைப் படிநிலையாகக் கொண்டுள்ளது. மேலும் இது
முக்கியமாக மையசமச்சீரற்ற மீக்கடத்திகளின் கடத்து மற்றும் காந்த பண்புகளில்
உயர் அழுத்தத்தினால் ஏற்படும் ஆராய்கிறது. தலைகீழ் சமச்சீர்மை உள்ள
மையசமச்சீரற்ற (NCS) சேர்மங்களில் மீக்கடத்திகளின் கண்டுபிடிப்பு, கோட்பாட்டு
மற்றும் சோதனை விசாரணைகளை ஊக்குவித்தது, ஏனெனில் இந்த கலவைகள்
வழக்கத்திற்கு மாறான மீக்கடத்துத்திறன் வழங்க முடியும். மைய சமச்சீரற்ற Re6Hf,
Re5.5Ta, (HfNb)0.10(MoRuRe)0.90 மற்றும் LaPtGe இன் மீக்கடத்து மற்றும் இயல்பான நிலை
பண்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. கவனிக்கப்பட்ட Hc2(0) > HP மற்றும் αM >1 சுற்றுப்புற
மற்றும் உயர் அழுத்தம் இரண்டிலும் கலப்பு இணைத்தல் நிலையின் சாத்தியமான
கையொப்பத்தை வெளிப்படுத்துகிறது. Re-அடிப்படையிலான α-Mn கனசதுர மைய
சமச்சீரற்ற மீக்கடத்திகளின் அனைத்து முடிவுகளும் அழுத்தத்தினால் குறைந்த
அளவில் மாறுநிலை வெப்பநிலையானது மாற்றம் அடைவதை
வெளிப்படுத்துகின்றன. மேலும், அழுத்தத்தினால் நாற்கோண படிக அமைப்பையுடைய
மையச்சமச்சீரற்ற LaPtGe s-அலை மீக்கடத்திகளில் USC அறிகுறியாக இருக்கலாம்.
காந்தத்தன்மை இல்லாத மையச்சமச்சீரற்ற மீக்கடத்திகளில் கண்டறியப்பட்ட
அசாதரண மீக்கடத்துதிறனின் அறிகுறியானது TRSB -உடன் தொடர்புடையதாக
இருக்கலாம் என்று எங்களின் அனைத்து ஆராய்ச்சிகளும் நம்மை நம்ப வைக்கிறது.
இதன் விளைவாக, தலைகீழ் சமச்சீர் இல்லாத சேர்மங்களில் வெளிப்படுகிற ASOC
இன் சாத்தியத்தை முற்றிலும் நிராகரிக்க முடியாது.

Abstract

This synopsis consists of seven chapters which describe the introduction of the Noncentrosymmetric
superconductors. Further, it explored mainly on the pressure effect on transport and magnetic properties of
noncentrosymmetric superconductors. The discovery of superconductivity in non-centrosymmetric (NCS)
compounds, which lack inversion symmetry, has encouraged theoretical and experimental investigations because
these compounds can host unconventional superconductivity. The NCS systems have received a significant amount
of attention over the course of the past decade as a result of their unusual superconducting properties as well as their
other fascinating features. The superconducting and normal state characteristics of NCS Re 6Hf, Re5.5Ta,
(HfNb)0.10(MoRuRe)0.90, and LaPtGe have been studied. All of the data from Re-Based -Mn cubic NCS
superconductors show a monotonic shift in Tc with P, and the observations of H c2(0) > HP and αM >1 at both ambient
and high P point to a mixed pairing state as a potential candidate. Moreover, the pressure reported in the tetragonal
NCS LaPtGe s-wave superconductor may be a USC signature. All Our research leads us to believe that TRSB may
be related to the potential USC signature in non-magnetic NCS superconductors. As a result, it is impossible to
totally rule out the possibility of ASOC in compounds lacking inversion symmetry. To comprehend how disorder
suppresses USC, however, more research in single crystals under high P is required.

ஆய்வு தொகுப்பு

ஆய்வின் சுருக்கமான விளக்கம்

இந்த ஆய்வுக் கட்டுரையானது மைய சமசீரற்ற மீக்கடத்திகளில் திரவநிலை


அழுத்தத்தின் தாக்கத்தினை மின்கடத்தும் மற்றும் காந்த அளவீடுகளின் மூலமாக
பகுத்தாய்வு செய்கிறது.

அசல் பங்களிப்பு

அத்தியாயம் I ஆனது மீக்கடத்துதிறனின் அடிப்படை முன்னுரையை


விளக்குகிறது. மேலும், மைய சமச்சீரற்ற மீக்கடத்திகள் மற்றும் அதன் பண்புகளில்
வெளிப்புற அழுத்தத்தின் முக்கியத்துவத்தை விரிவாக விளக்குகிறது. அத்தியாயம் II
ஆனது மைய சமச்சீரற்ற மீக்கடத்திகளை சுற்றுப்புற மற்றும் வெளிப்புற அழுத்த

சூழ்நிலைகளில் ஆராயும் செய்முறை சோதனைகளை தெளிவாக விளக்குகிறது.

அத்தியாயம் III ஆனது உயர் அழுத்தத்தினால் மையசமசீரற்ற (NCS)


பல்நோக்குப் படிக மீக்கடத்தி Re6Hf -ன் மீக்கடத்து, சுழல் அச்சு மற்றும் கட்டமைப்புப்
பண்புகளில் ஏற்படும் விளைவுகளை வேறுபடுத்தி விளக்குகிறது. மீக்கடத்து மாறு
வெப்பநிலையானது, Tc, அழுத்தத்தினால் -௦.046 K/GPa (-0.065K/Gpa) என்ற மாறுபாட்டு
வீதத்தில் குறைவதை மின்தடைதிறன் (8 GPa) மற்றும் காந்தமாக்கல் (1.1 GPa)
அளவீடுகளின் வாயிலாக அறியப்படுகிறது. 18 GPa வரையிலான X-கதிர்
படிகக்கட்டமைப்புகளின் ஆய்வானது அழுத்தம் உயர்வதன் காரணமாக அலகுகூடு
மற்றும் அலகுக்கூட்டின் அடிப்படை அளவுரு குறைந்த அளவில் சுருங்குபவதையும்,

Re6Hf அதிக பருமக்குணகம் (~333.63 GPa) மற்றும் படிக அமைப்பின் நிலைத்த


தன்மையையும் காட்டுகிறது. மேலும், அழுத்தத்தின் பொருட்டு மேல் மற்றும் கீழ்

காந்தப்புலவரம்பு (Hc2(0) & Hc1(0)) குறைவது 2.5 GPa வரையில் அறியப்படுகிறது.


கூடுதலாக, ρ(T,H) பகுதியில் சுழல்களின் வெப்ப இயக்கப்பட்ட காந்தப்புல
ஓட்டப்பகுதியில் செய்யப்படும் ஆய்வானது, ஒற்றை மற்றும் கூட்டு சுழல்
நிலைகளின் இருப்பை, காந்தப்புலத்தை பொருத்த கிளர்வுகொள் ஆற்றல் (U0(H))
வரைபடத்தின் இரட்டை தன்மையிலிருந்து உறுதி செய்கிறது. மேலும், கூட்டு சுழல்

அச்சு (pinning) கோட்பாட்டை பயன்படுத்தி செய்யப்பட்ட உய்ய மின்னோட்ட அடர்த்தி,


Jc , பகுப்பாய்வானது அழுத்தத்தினால் படிகவிடையெல்லை (grain boundaries)
இடம்பெயர்வதை, அழுத்தத்தினால் சுழல் அச்சு மாற்றம் அடைவதை கொண்டு
பரிந்துரைக்கிறது. மேற்கொண்டு அடர்த்திசார்பு கோட்பாட்டை (density functional theory)
பயன்படுத்தி செய்யப்பட்ட பட்டை கட்டமைப்பு கணக்கீடுகளானது (band structure
calculations), அழுத்தத்தினால் சிறிய அளவில் ஆற்றல்நிலைகளின் அடர்த்தி குறைவதை
காட்டுகிறது.

அத்தியாயம் IV ஆனது திரவநிலை உயர்அழுத்தத்தினால் மையசமச்சீரற்ற


பல்நோக்குப் படிக மீக்கடத்தி Re5.5Ta -ன் மீக்கடத்து, சாதாரன நிலை பண்புகளில்
ஏற்படும் விளைவுகளை மின்தடைத்திறன், காந்தமாக்கல் மற்றும் அலை படிக
கணக்கீடுகளின் மூலம் விவரிக்கிறது. 8 GPa வரையிலான வெளிப்புற அழுத்தத்தினால்
Tc யில் குறைந்த அளவிலான (0.52 K) மாற்றமே ஏற்படுகிறது. ஒன்றுக்கு அதிகமாக
கண்டறியப்பட்ட மக்கி அளவுருவானது ஃபவுலியின் இணை முறிவு விளைவை
பரிந்துரைக்கிறது. மேலும், 1.05 GPa வரை அழுத்தத்தை அதிகரிக்கும்போது கீழ்
காந்தப்புலவரம்பு (Hc1(0)) -1.74 mT GPa-1 என்ற விகிதத்தில் குறைகிறது. ρ(T,H) பகுதியில்
சுழல்களின் வெப்ப இயக்கப்பட்ட காந்தப்புல ஓட்டப்பகுதியில் செய்யப்படும்
பகுப்பாய்வானது, ஒற்றை மற்றும் கூட்டு சுழல் அச்சு நிலைகளின் இருப்பை
அர்ஹினியஸ் சமன்பாடு உறுதி செய்கிறது. மேலும், உய்ய மின்னோட்ட அடர்த்தி
பகுப்பாய்வானது மேற்பரப்பு (surface) மற்றும் கனஅளவு (volume) சுழல் அச்சு ஒருங்கே
இருப்பதையும் மற்றும் புற அழுத்தத்தினால் மாறாதிருப்பதையும் குறிப்பிடுகிறது.
அடர்த்திசார்பு கோட்பாட்டை (density functional theory) பயன்படுத்தி செய்யப்பட்ட பட்டை
கட்டமைப்பு கணக்கீடுகளின் (band structure calculations) மூலம் பெறப்பட்ட அதிக
பருமக்குணகம் 289 GPa-ஆனது குன்றிய அமுக்குத்தன்மையானது

பரிந்துரைக்கப்படுகிறது. மற்றும் அழுத்தத்தினால் சிறிய அளவில் ஆற்றல்நிலைகளின்


அடர்த்தி குறைவதை காட்டுகிறது. கூடுதலாக, 20 GPa வரையிலான அழுத்தமானது,
ஃபெர்மி நிலையில் உள்ள ஆற்றல்நிலைகளின் அடர்த்தி அரிதாக குறைவதைக்
குறிப்பிடுகிறது.

காந்தபுல மற்றும் அழுத்தம் சார்ந்த கடத்து மற்றும் காந்த அளவீடுகள் மூலம்


Re-அடிப்படையிலான மையசமச்சீரற்ற (HfNb)0.10(MoRuRe)0.90 உலோகக்கலவையின்

மீக்கடத்து மற்றும் சுழல் அச்சு பண்புகளில் திரவநிலை அழுத்தத்தின் தாக்கம் பற்றி


அத்தியாயம் V விவாதிக்கிறது. 2.9 GPa வரையிலான மேல் காந்தப்புலவரம்பின் குறைவு
மற்றும் ஒத்திசைவு நீளத்தின் (ξ0) அதிகரிப்பானது காந்த புலத்தை சார்ந்த
மின்தடைத்திறன் அளவீட்டீலிருந்து கவனிக்கப்படுகிறது. மற்றும் -0.034 K/GPa என்ற
அரிய விகிதத்தில் Tc குறைவது 12 GPa வரை கண்டறியப்படுகிறது. புற அழுத்தம் 2.9 GPa

வரை கணக்கிடப்பட்ட ஒன்றுக்கு அதிகமான மக்கி அளவுரு மற்றும் Hc2(0) விட


அதிகமான ஃபாலி காந்தபுல வரம்பு (HP) ஆனது BCS அல்லாத வழிமுறையை
காட்டுகிறது. ρ(T,H) பகுதியில் சுழல்களின் வெப்ப இயக்கப்பட்ட காந்தப்புல
ஓட்டப்பகுதியில் செய்யப்படும் ஆய்வானது, ஒற்றை மற்றும் கூட்டு சுழல் அச்சு
நிலைகளின் இருப்பை, U0(H) வரைபடத்தின் இரட்டை தன்மையிலிருந்து உறுதி

செய்கிறது. 1.2 GPa புற அழுத்த வரையிலான Hc1(0) -ன் குறைவு காந்தபுலத்தை சார்ந்த
காந்தமாக்கல் அளவீடுகளிலிருந்து பெறப்பட்டது. சிறிய அளவிலான எதிர் அழுத்த

விகிதாச்சாரம், மீந்த மின்தடைதிறன் வீதம் (RRR), மற்றும் சிறிய Jc -யானது படிக


அமைப்பில் ஒழுங்கற்ற தன்மை ஆதிக்கம் செலுத்துவதை பரிந்துரைக்கிறது. Jc
பகுப்பாய்வின் அழுத்தம் சார்பு, இடம்பெயர்வுடன் படிகவிடையெல்லைகள் மாற்றம்
அடைவதை உறுதிப்படுத்துகிறது. எனவே, α-Mn கனசதுர படிக அமைப்பு கொண்ட Re-
அணுக்கள் அடிப்படையிலான மையசமச்சீரற்ற மீக்கடத்திகளில், தலைகீழ் சமச்சீர்
இல்லாத படிக அமைப்பினால் எற்படும் சமச்சீரற்ற தற்சுழற்சிச் சுற்றுப்பாதை
இணைப்பின் (ASOC) அடக்குதலில் படிகங்களில் ஒழுங்கற்ற தன்மை முக்கிய பங்கு
வகிப்பதை குறிக்கிறது.

அத்தியாயம் -VI ஆனது புற அழுத்தம் 6 GPa காரணமாக α-ThSi2 படிக அமைப்பு
கொண்ட மையச்சீரற்ற மீக்கடத்தி LaPtGe -யின் Tc மேம்படுவதை வெப்பநிலை சார்ந்த
மின்தடைத்திறன் ρ(T) அளவீடுகளிலிருந்து அறியப்படுகிறது. கூடுதலாக, புற அழுத்த
அதிகரிப்பினால் 2.5 GPa அழுத்ததினால் ஏற்படும் தனித்தன்மையான Tc -யின் போக்கு,
மீந்த மின்தடைதிறன் வீதம், மாறுநிலை வெப்பத்தின் மாற்ற அகலம் போன்றவை
மீக்கடத்துதிறனில் ஏற்படும் இயங்கு முறை மாற்றத்தை பரிந்துரைகிறது. பல்வேறு
காந்தபுலத்தின் ρ(T) அளவீடுகளில் இருந்து Hc2(0) இன் அதிகரிப்பு 0.7 T இலிருந்து 0.92 T
ஆக அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வெப்பநிலை சார்ந்த Hc2 இன்
போக்கு அழுத்ததின் காரணமாக தனித்தன்மையக மாறுவது பல இடைவெளி
மீக்கடத்துதிறனுக்கான சாத்தியத்தைக் குறிக்கிறது. 2.6 GPa இல் அலகுக்கூடு
அளவுருக்களின் அழுத்தம் சார்ந்த மாற்றம் மீக்கடத்து நிலையில் நேர-தலைகீழ்
சமச்சீர் முறிவுடன் (TRSB) தொடர்புடையதாக இருக்கலாம். சுழல்களின் வெப்ப
இயக்கப்பட்ட காந்தப்புல ஓட்டப்பகுதியில் அர்ஹினியஸ் சமன்பாட்டை பயன்படுத்தி
செய்யப்படும் ஆய்வானது, ஒற்றை மற்றும் கூட்டு சுழல் அச்சு நிலைகளின் இருப்பை,
காந்தப்புலத்தை பொருத்த கிளர்வுகொள் ஆற்றல் (U0(H)) வரைபடத்தின் இரட்டை
தன்மையிலிருந்து உறுதி செய்கிறது.

அத்தியாயம் VII ஆனது எங்களின் அனைத்து முடிவுகளின் சுருக்கத்தைக்


தருகிறது. NCS மீக்கடத்திகளின் மீக்கடத்து பண்புகளில் வெளிப்புற அழுத்தத்தின்
குறிப்பிடத்தக்க விளைவை காட்டுகின்றன.

முடிவுரை

மைய சமச்சீரற்ற Re6Hf, Re5.5Ta, (HfNb)0.10(MoRuRe)0.90 மற்றும் LaPtGe இன் மீக்கடத்து


மற்றும் இயல்பான நிலை பண்புகளை நாங்கள் ஆராய்ந்தோம். Re-அடிப்படையிலான
α-Mn கன சதுர மையசமச்சீரற்ற மீக்கடத்திகளின் சூப்பர் கண்டக்டர்களின் அனைத்து
முடிவுகளும் அழுத்தத்தினால் Tc -இன் மிகச்சிறிய மாற்றத்தை வெளிப்படுத்துகிறது
மற்றும் சுற்றுப்புற மற்றும் உயர் அழுத்தம் இரண்டிலும் கவனிக்கப்பட்ட Hc2(0) > HP and
αM >1 ஆகியவை கலப்பு இணைத்தல் நிலையின் (mixed pairing state) சாத்தியமான

கையொப்பத்தைக் குறிக்கிறது. மேலும், நாற்கோண மைய சமசீரற்ற LaPtGe s-அலை


மீக்கடத்திகளில் காணப்படும் அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய அசாதரண
மீக்கடத்துதிறனின் (USC) சாத்தியத்தை குறிக்கிறது. காந்தத்தன்மை அல்லாத NCS
மீக்கடத்திகளில் USC இன் சாத்தியமான குறியீடுகளை TRSB உடன் தொடர்புடையதாக
இருக்கலாம் என்று எங்களின் அனைத்து விசாரணைகளும் தெரிவிக்கின்றன. எனவே,
தலைகீழ் சமச்சீர் இல்லாத கலவைகளில் ASOC இருப்பதை முற்றிலும் நிராகரிக்க
முடியாது. இருப்பினும், தனிப் படிகங்களில் உயர் அழுத்தத்தின் கீழ் கூடுதல்
ஆய்வுகள் ஒழுங்கற்ற தன்மையினால் USC அடக்கப்படுவதைப் புரிந்து கொள்ள
முடியும்.

Synopsis
Brief description of the work

This dissertation examines the influence of high pressure on superconducting properties of several NCS
superconductors through transport and magnetic measurements.

Original Contribution
The Chapter I briefly expounds the basic introduction of superconductivity, including the significance of
noncentrosymmetric superconductors and its superconducting properties under pressure. The Second Chapter
describes the experimental approaches that have been applied to the investigation of few noncentrosymmetric
superconducting compounds under ambient and high pressure.

The Chapter III distinguishes the effect of high pressure on the superconducting, vortex pinning, and
structural properties of a polycrystalline, non-centrosymmetric superconductor Re 6Hf. The superconducting
transition temperature,Tc, reveals a modest decrease as pressure increases with a slope of -0.046 K/GPa (-0.065
K/GPa) estimated from resistivity measurements up to 8 GPa (magnetization measurement ~ 1.1 GPa). Structural
analysis up to ~18 GPa reveals monotonic decreases of lattice constant without undergoing any structural transition
and a high value of bulk modulus 333.63 GPa, indicating the stability of the structure. Furthermore, the upper
critical field and lower critical field at absolute temperature decrease slightly from the ambient pressure value as
pressure increases up to 2.5 GPa. In addition, analysis of ρ(T,H) up to 2.5 GPa using thermally activated flux flow
of vortices revealed a double linearity field dependence of activation energy, confirming the coexistence of single
and collective pinning vortex states. Moreover, analysis of critical current density using the collective pinning theory
showed the transformation of to pinning as pressure increases, possibly due to migration of grain boundaries.
Besides, the band structure calculations using density functional theory show that density of states decreases
modestly with pressure.

The Chapter IV describes the effect of hydrostatic pressure on the superconducting and normal state
properties of the NCS superconductor Re 5.5Ta using transport, magnetization, and band structure studies. The T c
reveals a modest decrease of ~ 0.52 K as the external P is raised to 8 GPa. We found the Maki parameter >1,
suggesting the significant role of Pauli pair breaking effect. Furthermore, the lower critical field was found to
decrease with a rate of -1.74 mT GPa -1 as pressure increases to 1.05 GPa. Analysis of thermally activated flux flow
(TAFF) region of ρ(T,H) using Arrhenius equation reveals the coexistence of single and collective vortex states.
Further analysis of critical current density indicates that the surface and volume pinning centers coexist and remain
unaffected with varying pressure. Band structure calculations were performed using density functional theory and
reveal a large bulk modulus 289 GPa, suggesting poor compressibility. In addition, we found that the density of
states at the Fermi level barely reduces, even at pressures of up to 20 GPa.

Chapter V discuss about the impact of hydrostatic pressure on superconducting, and pinning properties of
Re-based NCS (HfNb)0.10(MoRuRe)0.90 alloy through field- and pressure- dependent transport, and magnetic
measurements. It is observed from the field dependence of resistivity measurements that the decrease of H c2(0) and
the increase of coherence length (ξ0) up to 2.9 GPa, and the monotonic decrease of T c up to 12 GPa with the rate of -
0.034 K/GPa. The Maki parameter > 1 and H c2(0) > HP up to 2.9 GPa suggest the possible existence of non-BCS
mechanism. The double linearity of U 0(H) in the TAFF region of ρ(T,H) confirms the coexistence of single and
collective vortex states up to 2.9 GPa. The field dependence of magnetic measurements exhibits the decrease of
lower critical field at 0 K up to 1.2 GPa. The small negative pressure coefficient, residual resistivity ratio, and the
critical current density (Jc) are small and it suggests the dominance of disorder in the crystal structure. Pressure
dependence of Jc analysis confirms the change of grain boundaries with migration. So, the disorder plays the vital
role in α-Mn cubic structured Re-based NCS superconductors for the suppression of anti-symmetric SOC which
could be raised from the lack of crystal inversion symmetry and Re atoms.

Chapter-VI: We have report the enhancement of T c from 3.06 K to 3.94 K in α-ThSi2 structured non-
centrosymmetric superconductor LaPtGe under hydrostatic pressure up to 6 GPa through temperature dependence of
electrical resistivity [ρ(T)] measurements. In addition discrete trend in T c, residual resistivity ratio, and ΔTc around
2.5 GPa suggests the change in superconducting mechanism by increasing P. The increase of Hc2(0) from 0.7 T to
0.92 T was observed from the ρ(T) measurements under various magnetic field with pressure up to 2.45 GPa.
Further, the changeover of discrete trend in temperature dependence of H c2 with pressure suggests the possibility of
multi-gap superconductivity. Change in pressure dependence of unit cell parameters at 2.6 GPa can be associated
with the superconducting TRSB. The U 0 calculated using Arrhenius relation in the thermally activated flus flow
region, Double linearity observed from the U0(H) suggests the transition of single vortex to a collective vortex state.

Chapter VII deals with a summary of all our results. The results show the significant effect of external pressure
on the superconducting properties of NCS superconducting materials.

Conclusion

We have investigated the superconducting and normal state properties of NCS Re 6Hf, Re5.5Ta,
(HfNb)0.10(MoRuRe)0.90 and LaPtGe. All the results of Re-Based α-Mn cubic NCS superconductors exhibits the
monotonic change of Tc with P and the observed Hc2(0) > HP and αM >1 at both ambient and high P suggests the
possible signature of mixed pairing state. Further the possible signature of USC with pressure observed in the
tetragonal NCS LaPtGe s-wave superconductor. All Our investigations suggest the possible signature of USC in
non-magnetic NCS superconductors could be relatable to TRSB. So that, the presence of ASOC in the compounds
with lack of inversion symmetry cannot be completely ruled out. However, further studies under high P in the single
crystals are necessary to understand the suppression of USC by disorder.

சொற்களஞ்சியம் / Glossary

S. No Glossary சொற்களஞ்சியம்

1. Noncentro symmetric மைய சமச்சீரற்ற

2. Transport properties கடத்தும் பண்புகள்

3. Magnetic properties காந்தபண்புகள்


4. Superconducting properties மீக்கடத்து பண்புகள்

5. Hydrostatic Pressure திரவநிலை அழுத்தம்

6. Compounds கலவைகள்

7. Superconductors மீக்கடத்திகள்

8. Time Reversal Symmetry நேர தலைகீழ் சமச்சீர் முறிவு


Breaking

9. Upper Critical Field மேல்வரம்புக் காந்தப்புலம்

10. Lower Critical Field கீழ் காந்தப்புலவரம்பு

11. Superconductivity மீக்கடத்துத்திறன்

12. Mixed Pairing State கலப்பு இணைத்தல் நிலை

13. Superconducting Transition மீக்கடத்து மாறுநிலை வெப்பநிலை


Temperature (Tc)

14. Lack of inversion Symmetry தலைகீழ் சமச்சீர்மை

15. Ambient Pressure சுற்றுப்புற அழுத்தம்

16. High Pressure உயர் அழுத்தம்

17. Cubic கனசதுரம்

18. Tetragonal Structure நாற்கோண படிக அமைப்பு

19. Unconventional அசாதரண மீக்கடத்துதிறன்


Superconductivity

20. Non-Magnetic காந்தத்தன்மை இல்லாத

21. Polycrystal பல்நோக்குப் படிகம்

22. Vortex pinning சுழல் அச்சு

23. Structural Properties கட்டமைப்புப் பண்புகள்

24. Unitcell அலகுகூடு

25. Parameter அளவுரு


26. Bulk Modulus பருமக்குணகம்

27. Thermally activated Flux Flow சுழல்களின் வெப்ப இயக்கப்பட்ட காந்தப்புல


ஓட்டப்பகுதி

28. Single vortex ஒற்றை சுழல்

29. Collective vortex கூட்டு சுழல்

30. Collective Pinning கூட்டு சுழல் அச்சு

31. Critical Current Density உய்ய மின்னோட்ட அடர்த்தி

32. Activation Energy கிளர்வுகொள் ஆற்றல்

33. Grain Boundaries படிகவிடையெல்லை

34. density functional theory அடர்த்திசார்பு கோட்பாட்டை

35. band structure calculations பட்டை கட்டமைப்பு கணக்கீடுகளானது

36. Resistivity மின்தடைத்திறன்

37. Resistance மின்தடை

38. Pauli’s Pair Breaking ஃபவுலியின் இணை முறிவு

39. Maki Parameter மக்கி அளவுரு

40. Compressibility அமுக்குத்தன்மை

41. Density of States ஆற்றல்நிலைகளின் அடர்த்தி

42. Coherence Length ஒத்திசைவு நீளம்

43. Field Dependence of காந்தபுலத்தை சார்ந்த காந்தமாக்கல்


Magnetization

44. Negative Pressure Coefficient எதிர் அழுத்த விகிதாச்சாரம்

45. Residual Resistivity Ratio மீந்த மின்தடைதிறன் வீதம்

46. Anti-Symmetric Spin Orbit சமச்சீரற்ற தற்சுழற்சிச் சுற்றுப்பாதை இணைப்பு


Coupling (ASOC)

47. Transition Temperature Width மாறுநிலை வெப்பத்தின் மாற்ற அகலம்


48. Multi-gap Superconductivity பல இடைவெளி மீக்கடத்துதிறன்

49. double linearity இரட்டை தன்மை

50 . surface மேற்பரப்பு

51. Migration இடம்பெயர்வு

52. Resistivity measurement மின்தடைத்திறன் அளவீடு

You might also like