You are on page 1of 8

அலுவலக குறிப்பு சமர்பிப்பு: நிர் / / 2023

பொருள்: நிர்வாகம் – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை –

வேலைவாய்ப்பு பிரிவு – கருணை அடிப்படை பணி

நியமனம் – புதிய அரசு ஆணைகள்

வெளியிடப்பட்டமை – அரசிற்கு கருத்துரு சமர்பித்தல்

– தொடர்பாக.

பார்வை: அரசு ஆணைகள் (நிலை) எண்.137, தொழிலாளர் நலன்

மற்றும் திறன் மேம்பாட்டுத் (OP-2) துறை, நாள்


14.08.2023.
<<<<<>>>>>

பார்வையில் காணும் அரசாணையினை ந.கோ.ப.1 இல் தயவு செய்து

காணலாம். இவ்வரசாணையில், கருணை அடிப்படை பணி நியமனம்

தொடர்பாக பின் வருமாறு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது:

1) இதுகாறும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால்

மேற்கொள்ளப்பட்டு வந்த கருணை அடிப்படையிலான பணி

நியமனங்கள் இனி வரும் காலங்களில் மனித வள மேலாண்மை

துறைக்கு மாற்றப்படுகிறது.
2) ஆணையர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அவர்களின்

தலைமையில் இப்பணி கருணை அடிப்படை பணிநியமனம்

தொடர்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

3) இதனைத் தொடர்ந்து, மனித வள மேம்பாட்டுத் துறைக்கு தொழிலாளர்

நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையிலிருந்து ஒரு பிரிவு அலுவலர்

மற்றும் உதவி பிரிவு அலுவலர் மாற்றப்பட வேண்டும்.

4) இவ்வாறு மாற்றப்படும் அலுவலர்களுக்கு, மனித வள மேம்பாட்டுத்

துறையில், உரிய பணி இடத்தினை உருவாக்கவும் இவ்வரசாணைகளில்

அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக பின்வரும் விவரங்கள் பார்வைக்காக

சமர்ப்பிக்கப்படுகின்றன:

கருணை அடிப்படை பணி நியமனம் தொடர்பாக அரசு ஆணைகள் (நிலை)

எண்.18, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையில் விரிவான

வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. அதில் முக்கியமான விவரங்கள் வருமாறு:


1) கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான விண்ணப்பம் அரசு

ஊழியர் இறந்த நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் சமர்ப்பிக்க

படவேண்டும்.

2) கருணை அடிப்படையில் பணி நியமனம் குரூப் ‘சி’ மற்றும் ‘டி’

பிரிவுகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

3) விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது குறைந்தபட்ச வயது 18 ஆண்டாக

இருக்க வேண்டும்.

4) மனைவி / கணவன் / தந்தை / தாய்க்கு அதிகபட்ச வயது வரம்பு 50

ஆண்டுகள்.

5) இறந்த பணியாளரின் மகன்/மகள், திருமணமாகாத அரசு ஊழியரின்

திருமணமாகாத சகோதரர்/திருமணமாகாத சகோதரிக்கான அதிகபட்ச

வயது வரம்பு 40 ஆண்டுகள்.


மேலும் அரசாணையில் கருணை அடிப்படை பணி நியமனம்

விண்ணப்பத்தை செயல்படுத்துவது தொடர்பாக, பத்தி (viii) முதல் (xiii) வரை,

கீழ்க்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

vii) துறைத் தலைவர் தனது அலுவலகங்கள் எதிலும் காலியிடம் இல்லை

என்றும், எதிர்காலத்தில் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும்

கண்டறிந்தால், இறந்த அரசு ஊழியர் கடைசியாக வேலை செய்த.மாவட்ட

ஆட்சியருக்கு கருணை அடிப்படை பணி நியமனம் கோரியவரின்

விண்ணப்பத்தை மற்றும் தொடர்புடைய அனைத்து விவரங்களையும்

அனுப்ப வேண்டும்.

viii) ஒவ்வொரு மாவட்டத்தின் ஆட்சியரும், கருணை அடிப்படை பணி

நியமனத்திற்காக விண்ணப்பத்தவர்களின் பெயர் மற்றும் பிற

விவரங்களை உள்ளடக்கிய ஒரு சிறப்புப் பதிவேட்டைப் பராமரிக்க

வேண்டும்.
ix) ஒரு துறையில் அலுவலக உதவியாளர் / பதிவறை எழுத்தர் /

இளநிலை உதவியாளர் / தட்டச்சர் போன்ற பதவிகளில் காலியிடம்

ஏற்படும் போதெல்லாம், துறைத் தலைவர் அத்துறையில் எவரும்

இல்லையெனில், முதலில் இறந்த அரசுப் பணியாளரைச் சார்ந்தவர்

யாரேனும் அந்தப் பதவிக்கு நியமனம் செய்ய பரிசீலனைக்கு உள்ளாரா

என்பதைக் உரிய மாவட்ட ஆட்சியர் பரிசீலனைக்கு உள்ளாரா

என்பதைக் கண்டறிய வேண்டும்.

x) துறைத் தலைவரிடமிருந்து அத்தகைய விண்ணப்பங்கள் பெறும்போது,

அந்தத் துறையின் நியமனத்திற்கான பரிசீலனைக்காக, காலியிடங்களின்

எண்ணிக்கை மற்றும் பணிமூப்பு படி, கருணை அடிப்படை பணி

நியமனத்திற்காக விண்ணப்பத்தவர்களின் சிறப்புப் பதிவேட்டில் இருந்து

ஆட்சியர் பெயர் அல்லது பெயர்கள் மற்றும் விவரங்களை அனுப்ப

வேண்டும்.
xi) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது

வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு இதுபோன்ற காலியிடங்களைத்

தெரிவிக்கும் முன், ஒவ்வொரு துறைத் தலைவரும் முதலில் மாவட்ட

ஆட்சியரிடமிருந்து விவரங்களை பெற வேண்டும். அவர்களால்

பராமரிக்கப்படும் சிறப்புப் பதிவேட்டில் விண்ணப்பதாரர் இல்லை என்ற

சான்றிதழை அவர்களிடமிருந்து பெற்ற பின்னரே. மேலே உள்ள

அறிவுறுத்தல் (x) உடன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

அல்லது வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு முகவரியிடப்பட வேண்டும்.

xii) மாவட்ட ஆட்சியர்கள் காலாண்டுக்கு ஒருமுறை, அடுத்த மாதம் 15

ஆம் தேதிக்குள், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறைக்கு, இறந்த

அரசு ஊழியரின் சார்புடையவர்களுக்காக முன்மொழியப்பட்ட “சிறப்புப்

பதிவேட்டின்” முன்னேற்ற அறிக்கையை அனுப்ப வேண்டும்.

xii) மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் அனைத்து நியமன

அதிகாரிகளும் தங்கள் துறைகளில் காலிப் பணியிடங்கள் கிடைக்காத


போதெல்லாம், இறந்த அரசு ஊழியர்களைச் சார்ந்தவர்களுக்குத்

தேவையான தகுதியின்படி கருணை அடிப்படையில் பணி நியமனம்

வழங்க மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

மேற்கண்ட ஆணைகள் 15.11.2007 தேதியிட்ட, அரசு ஆணைகள் (நிலை)

எண்.216, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையில் துறையில்

குறிப்பிடப்பட்டுள்ளன.

தற்போது அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளில், கருணை

அடிப்படை பணி நியமனம் தொடர்பில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை

ஆணையர் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் . எனவே,

இவ்வரசாணைகள் அடிப்படையில் இவ்வாணையரக அளவில் மேற்கொள்ளப்பட

வேண்டிய நடவடிக்கைகள் வருமாறு:

1) மனுதாரர், தொடர்புடைய துறைக்கு விண்ணப்பித்த தேதியில் வயது, கல்வித்

தகுதி, மனுவைப் பெற்றுக் கொண்ட தேதி குறிப்பிடப்பட்ட

காலக்கெடுவின்படி உள்ளதா ஆகிய விவரங்கள் ஆராயப்பட வேண்டும்.


2) அரசு ஊழியர் இறந்த தேதியின் அடிப்படையில் ஒரு விரிவான பட்டியல்,

பணிமூப்பு தேதியாக, வேலைவாய்ப்பு பிரிவால் பரமரிக்கபடவேண்டும்.

3) ஒவ்வொரு துறையிலிருந்தும் இளநிலை உதவியாளர் / தட்டச்சர் /

ரெக்கார்டு கிளார்க் / அலுவலக உதவியாளர் / காவலர் / தண்ணீர்

கொணர்பவர் / துப்புரவு பணியாளர் பதவியில் உள்ள காலியிடங்களின்

விவரங்களைத் வேலைவாய்ப்பு துறைக்கு அளிக்கவேண்டும்.

4) மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வழங்க பட்ட இப்பணிகள் வேலைவாய்ப்பு

துறைக்கு மாற்றப்பட்டு ஆணைகள் வெளியிடப்படவேண்டும்.

5) அனைத்துத் துறைகளிலிருந்தும் பெறப்பட்ட காலிப் பணியிடங்கள் குறித்த

கோரிக்கைகள் தொடர்பாக, பணிமூப்புப் பட்டியலின் அடிப்படையில்

கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்காகக் வேலைவாய்ப்பு பிரிவால்

பராமரிக்கப்படும் பட்டியலில் காத்திருக்கும் நபர்களின் பட்டியலில்

இருந்து உரிய தகுதியுடைய நபர்கள் அரசின் விதிகளின் படி

பரிதுரைக்கப்படுவர்.

6)

7)

You might also like