You are on page 1of 5

18 சித்தர்கள்

 சித்தர் the word derived from வடமொழிச்சொல் "சித்" (சித் means அறி)
 18 சித்தர்கள் என்று சொல்வது மறபு, வரையறுத்துக் கூறினார் இல்லை

1) அகத்தியர் 11) கொங்கணச்சித்தர்


2) பட்டினத்தார் 12) பீர் முகமது
3) பத்திரகிரியர் 13) மதுரை வாலைசாமி
4) சிவவாக்கியர் 14) சட்டைமுனி
5) பாம்பாட்டிசித்தர் 15) திருமூலர்
6) இடைக்காட்டு சித்தர் 16) உரோமரி
7) அகப்பேய்ச் சித்தர் 17) கருவூரார்
8) குதம்பைச் சித்தர் 18) இராமலிங்கஅடிகளார்
9) கடுவெளிச்சித்தர்
10) அழுகுணிச்சித்தர்

1) அகத்தியர்
 சித்தர்களின் தலைவர்
 சித்த மருத்துவமுறையை வகுத்தவர்
 ஆயூர்வேதசூத்திரங்களுக்கு விரிவுரை எழுதியவர்
 அவர் பாடிய பாடல்கள் "ஞானப்பாமாலை " என்று அழைக்கப்படுகிறது
 அடக்கம் பெற்ற தலம்- அனந்த சயனம்

2) பட்டினத்தார்
 இயற்பெயர் சுவேதாரண்யர்
 பெற்றோர் - சிவநேச செட்டியார்- ஞானகலை ஆச்சி
 ஊர்- காவேரிபூம்பட்டினம்
 இவர் பட்டினத்து வணிகர் ஆதலால் பட்டினத்தார் எனப்பட்டார்
 இவருக்கு திருவெண்காடர் என்ற பெயரும் உண்டு
 இவரது சீடர்- பத்திரகிரையார்
 அடக்கப் பெற்ற தலம்- திருவொற்றியூர்

3) பத்திரகிரையர்
 இவரது குரு- பட்டினத்தார்
 சோற்றுச்சட்டியும் நாய்க்குட்டியையும் வைத்திருந்ததால் பட்டினத்தாரால்
 சம்சாரி என்று கூறப்பட்டவர்.
 இவரது பாடல் மெய்ஞானப் புலம்பல்" என்று அழைக்கப் படுகிறது
 இவரது பாடல்களின் 235 கண்ணிகள் உள்ளன
 எல்லா கண்ணிகளும் "எக்காலம்" என்னும் வினாவாகவே முடிகின்ற

4) சிவவாக்கியர்
 சித்தர்களில் க சீர்திருத்தவாதி
 இவர் பாடல்கள் சந்த ஓட்டம் உடையன
 சிவவாக்கியாரும் திருமழிசை ஆழ்வாரும் ஒருவரே என்று கருதுவாரும் உண்டு

5) பாம்பாட்டி சித்தர்
 செத்த பாம்பை ஆடவைத்ததால் அல்லது பாம்பை ஆடும்படித் தூண்டியநால்
பாம்பாட்டி சித்தர் எனப் பெயர் பெற்றார் என்பர்
 பிறந்த ஊர்- பாண்டியநாட்டு கோகர்ணம்
 வாழ்ந்த இடம்- கொங்குநாட்டு மருதமலை
 இவர் பாடிய மொத்த பாடல்கள்-129
 அடக்கம் பெற்ற ஊர்- விருதாசலம்

6) இடைக்காட்டு சித்தர்
 பிறந்த ஊர்- தொண்டை நாட்டு இடைக்காடு
 இவர் கொங்கணச்சித்தரின் சீடர்
 இவர் பாடிய மொத்த பாடல்கள்- 130
 இவரது பாடல்கள் இடையர்களின் பசுவைப்பார்த்தும், இடையர்களின்
தலைவனைப்
 பார்த்தும் பாடுவதாக அமைந்துள்ளது
 அடக்கம் பெற்ற ஊர்- திருவண்ணாமலை

7) அகப்பேய்ச் சித்தர்
 இவர் பாடிய மொத்த பாடல்கள் 90
 பேயாக அலையும் மனதை " அகப்பேய்" என்று பெண்ணாக உருவகித்து
முன்னிலைப்படுத்திப் பாடியதால் இப்பெயர் பெற்றார் என்று கூறுவர்.
 அடக்கம் பெற்ற ஊர்- அழகர் மலை

8) குதம்பைச்சித்தர்
 ”குதம்பை” என்பது ஒருவகைக்காதணி. அதனை அணிந்த பெண்ணை
முன்னிலைப்படுத்த பாடியதால் குதம்பைச்சித்தர் எனப்பட்டார்
 இவர் இடையர் குளத்தைச் சேர்ந்தவர்
 இவர் பாடிய மொத்தப் பாடல்கள் - 32
 அடக்கம் பெற்ற ஊர்- மாயூரம்

9) கடுவெளிச் சித்தர்
 சித்தர் பாடல்- அசிரியர் - கடுவெளிச்சித்தர்
 "கடுவெளி" என்றால் சுத்தவெளி அதாவது பிரமம் பிரமத்தைக் கடுவெளி
என்றதால் கடுவெளிச் சித்தர் எனப்பட்டார்
 இவர் பாடிய மொத்த பாடல்கள்- 34
 இவரது பாடல்களில் நீதிக் கருத்துக்கள் மிகுதி
 இவர் உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக
வழிப்பட்டவர்

10) அழுகுணிச் சித்தர்


 இவரது பாடல்களில் அழகும், அணியும் சேர்ந்திருப்பதால் அழுகுணிச்சித்தர்
எனப் பெயரிடப்பட்டார்
 இவர்பாடிய மொத்த பாடல்கள்- 32
 இவரது பாடல் ஒவ்வொன்றிலும் "கண்ணம்மா" என்ற விளிச்சொல் வருகிறது

11) கொங்கணச் சித்தர்


 இவர் கொங்கு நாட்டவராக இருக்கலாம்
 இவர் வாலைக்கும்மி அடித்தவர்
 ஆன்மாக்கள் கும்மி அடிப்பதுகவும் உருவகித்துள்ளார்
 இவர் பாடிய மொத்த பாடல்கள்- 144
 இவர் இயற்றிய நூல்கள்
1) மருத்துவ நூல் 6) திரிக்காண்டம்
2) யோக நூல் 7) குணபாகம்
3) இரசவாத நூல்
4) கடைக்காண்டம்
5) கொங்கணர் ஞானம்
 "கொக்கென நினைத்தாயோ கொங்கணவா" என்ற கதைக்குரியவர்
 இவர் அடைக்கலம் பெற்ற ஊர- திருப்பதி

12) பீர் முகமது


 இவர் இஸ்லாம் சமயச் சித்தர்
 ஞானரத்தினக் குறவஞ்சி பாடியவர்
 இவரது பாடல்கள் வினாவிடையாகச் சொல்கிறது .
 "சிங்கன்" கேள்வி கேட்ப்பதாகவும் "சிங்கி" பதில் சொல்வதாகவும்
அமைந்துள்ளது இவரது பாடல்களில் மொத்தம் 64 கண்ணிகள் உள்ளது
13) மதுரை வாலைச்சாமி
 கும்மியடி மெட்டில் பாடல் புனைந்தவருள் இவரும் ஒருவர்
 ஞானத்தைப் பெண்ணாக உருவகித்து பாடியவர்

14) சட்டை முனி


 " போக" முனிவரின் மாணவர்
 உரோமரியுடன் மாறுபாடு கொண்டவர்
 பூஜை விதிகளைப் பற்றி அதிகம் பாடியவர்
 இவர் இயற்றிய நூல்கள்
1) சட்டைமுனி 6) வாத நிகண்டு
2) சட்டைமுனி ஞானம் 7) கலபம் நூறு
3) ஞானநூறு
4) சடாட்சரக் கோவை
5) 1200 நவரத்தின வைப்பு

15) திருமூலர்
 சித்தர்களிள் ஆதி சித்தர் - திருமூலர்
 "திருமந்திரம்" என்ற நூலை எழுதியுள்ளார்

16) உரோமரி
 பசுண்ட மாமுனிவர் மாணவர்
 "மானிடர் வயது நூறு என்றும் ஒரு நாளைக்கு சுவாசம் 21600 என்றும்
கணக்கிட்டுச் சொன்னவது"

17) கருவூரார்
 இவர்பாடிய மொத்த பாடல்கள்- 30
 தஞ்சை பெரியகோவில் லிங்கத்திற்க்கு "அஷட்டபந்தனம்" செய்தவர்
 கருவூரார் 9-ஆம் திருமுறையில் திருவிசைப்பா பாடியவர்
 பூஜை விதிகளைப் பாடியுள்ளார்
 இவரது பூஜை விதிப்பாடல்கள் அந்தாதி தொடையில் அமைந்துள்ளது

18) இராமலிங்க அடிகளார்


 இவர் எழுதிய நூல் - திருவருட்பா
 "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் -பண்ணில்
கலந்தான் பாட்டில் கலந்தான் உயிரில்
கலந்தான் கருனை கலந்து"

You might also like