You are on page 1of 5

இறைவன் துணை

அம்மா , அப்பா ஏன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை. நான்கு வயது மகன்


கண்ணன் தாயார் மின்மினியிடம் கேட்கும் அழகு தமிழ் வார்த்தைகள் தாம்
அது. இன்னும் கொஞ்ச நேரத்துக்குள் அப்பா வந்துடுவாருய்யா. உன் அப்பா என
தமது மகன் கன்னத்தில் முத்த மிட்டு கொஞ்சும் மொழி வார்த்தைகள்
விவரிக்கின்றார் அன்புத்தாயார் மின்மினி.

அப்போதைய நேரம் இரவு எட்டுமணி இருக்கும் மின்மினிக்கும் மனதில் ஒரு


ஏக்கம்தான் என சொல்லலாம். காலை மணி எட்டுமணிக்கு வீட்டைவிட்டு
புறப்பட்டவர் இரவு எட்டுமணி ஆகியும் இன்னும் வீடு வந்து சேரவில்லையே?
என்பது ஏக்கமான கேள்விகள் மின்மினி உள்ளத்தில் தோன்றவெ செய்கின்றது.

அப்பா எங்கம்மா? என குழந்தை கண்ணன் கேட்டுவிட்டு நித்திரையில்


சாய்ந்துவிட்டான் மின்மினியின் நான்கு வயது மகன் கண்ணன்.

மின்மினியின் கணவன் வழக்கம்போல் இரவு ஏழு மணிக்கெல்லாம் வீடு


வந்து சேர்ந்தாகவேண்டியவர் ஏனோ தெரியவில்லை இரவு மணி எட்டு ஆகியும்
இன்னும் இதுவரை வீட்டுக்கு வரவில்லை என்பதே மின்மினி உள்ளத்தில் எழும்
கேள்வி. விடை தெரியாமல் பரிதவிக்கின்றாள். அவள் மனம் படும் வேதனை.
திருமணமான எல்லா அன்பு மனைவிகளின் நிலைமையும் அதுபோலவே.
மின்மினிக்கும் ஏற்பட்டுள்ளது. வீட்டுத் தொலைபேசி க்ரிங் க்ரிங் க்ரிங் என
ஓசை எழுப்பியது. பதற்றத்துடன் விற்றென நடந்து சென்று அலோ என
வார்த்தைகள் தொடுத்தால் மின்மினி. மின்மினியின் விழிகளில் கண்ணீர்
வழிந்தோடியது. கார் விபத்தின் வழி கணவர் தலைநகர் பெரிய மருத்துவமனை
வார்டில் சேர்க்கப்பட்டுள்ளார். என்கிற வருத்தமான செய்தி அறிந்து அவள்
விழிகளில் கண்ணீர் வழிந்தோடியது.

என்ன செய்வதென தெரியாமல் பதற்றத்துடன் தன் மகனை தூக்கி தோளில்


போட்டுக் கொண்டு அப்பா வீட்டுக்குச் சென்று உதவி கேட்ட போது முகத்தை
சுழித்தவாறு ‘ஏன் என்ன? விஷயம் என கேள்வியை தொடுத்தார் மின்மினியின்
அப்பா ராஜீ. தந்தை ராஜீவிக்கு மூன்று பெண் பிள்ளைகள் மூன்று பெண்
பிள்ளைகளில் மின்மினி கடைசிப் பெண் மகள்.

ஆண் பிள்ளை இல்லை. தந்தை ராஜீவிற்கு மின்மினி அவள்


விருப்பத்தின் பேரில் சொந்தமாகத் திருமணம் செய்து கொண்டவாள்
கணவரை சொந்தமாகத் தேர்வு செய்து கொண்டால் இந்த விவகாரம் தந்தை

ராஜிவிற்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை அதனால் தான் மின்மினியை

கண்டால் ஒருவித வெறுப்பும் சலிப்பும் ஏற்படும் அவள் தந்தைக்கு.

இரவு நேரத்தில் குழந்தையை தோள்மீது சுமத்திக் கொண்டு

கதவைத் தட்டி உதவி கேட்டபோது தந்தை ராஜீவின் மனம் சிறிதும்

இளகவில்லை ஏன்? எதற்காக என்ன விஷயம் என்று அவரால் கேள்வி

தொடுக்க முடிந்தது. அன்போடு பாசத்தோடு அரவணைப்புடன் வீட்டின்

உள்ளே வருமானு கேட்க தந்தைக்கு இளகிய மனம் இல்லையே? என

மின்மினி உள்ளம் வருத்தப்பட்டது. அவன் மனம் என்ன

பாடுபட்டிருக்கும்?

பத்து மாதம் சுமந்து ஈன்றெடுத்த அன்னை இருந்திருந்தால் இரவில்

உதவி கேட்கவந்த மகளை வீட்டு வாசல் முன் நிற்க வைத்து கேள்வி

கேட்டிருக்கமாட்டாள். வாம்மா உள்ளே என அரவணைத்திருப்பாள்

பாசத்துடன். வாம்மா உள்ளே என அரவணைத்திருப்பாள் அதுதான்

புனிதமான தாய்ப் பாசம். தாய்மையின்பொறுமை அதை பெற நான்

தவறிவிட்டேன். மின்மினியின் உள்ளத்தில் உதிர்க்கும் சோகமான

சிந்தனைகள் அது.
மின்மினியின் தாயார் மரணமடைந்து மூன்று ஆண்டுகள்

நிறைவெய்திவிட்டது. மூன்று ஆண்டுகள் கடந்த பிறகு தந்தை ராஜீ

இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மின்மினிக்கு சித்தி

வந்துவிட்டார். ராஜீவிற்கு ஆண்மகன் இருந்திருந்தால் வீட்டுக்கு

மருமகள் குடிவந்திருக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கும். அப்படியொரு

வாய்ப்பு மின்மினியின் தந்தைக்கு கிடைக்க இறைவன் வழிகான

துணை நிற்கவில்லை. என கூறவேண்டும். இரண்டு பெண் மணிகளைத்

திருமணம் செய்துகொடு கெளரவமாக அவர்களைப் புகுந்த வீட்டிற்கு

வழி அனுப்பி வைத்தார் ராஜீ. மூன்றாவது மகளையும் திருமணம்

செய்து பார்ப்பதற்குள் அவள் தானாகவே சொந்த விருப்பத்திற்கு தான்

விரும்பிய மணவாளனைத் தேர்வு செய்து வீட்டை விட்டே

சென்றுவிட்டாள். இவளின் பிரிவை தாயாரால் தாங்கிக்கொள்ள

இயலவில்லை. கால போக்கில் மன நோயாளியாக காட்சியளித்தார்

மின்மினியின் தாயார்.

பிறகு மெல்ல நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையிலே

மரணவாசலை நாடிவிட்டார் மின்மினியின் தாயார். இறந்து மூன்று

ஆண்டுகள் கடந்த பிறகு அவளது தந்தை ராஜீவை சரிவர கவனிக்க

துணைக்கு ஆள் இல்லாததால் என்ன செய்வதென தெரியாமல்

தமக்கும் ஒரு பெண்துணை வேண்டுமென சிந்தித்து ஒரு முடிவுக்கு

வந்தார்.
இரண்டாவது துணைவியைத் தேர்வு செய்து திருமணம் செய்து

கொண்டார் மின்மினியின் தந்தை ராஜீ. எவ்வளவு நாளைக்குத் தான்

பிள்ளைகள் வீட்டுக்குச் சென்று தங்கி விட்டு வரவேண்டும் என

சிந்தனை பரவவிட்டார் மின்மினியின் தந்தை. தந்தை மின்மினி தேர்வு

செய்த வாழ்க்கைத்துணைவன் மது பழக்கத்திற்கு அடிமையானவன்

என தெரிந்தும் அவரையே விரும்பி அவள் பின்னால் சென்றதுதான்

அவரால் இன்றும் மறக்க முடியவில்லை. எவ்வளவோ அறிவுரை

கூறியும் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டே வெளியேறினாள்

மின்மினி. அவரின் இரண்டு சகோட்தரிகள் முறையாக திருமணம்

செய்து கொண்டு புகுந்த வீட்டுக்குச் சென்று இல்லற வாழ்க்கையை

வெகு சிறப்பாக தொடர்கின்றனர். பெற்றோர் பேச்சைக் கேட்டு

திருமணம் செய்ததால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக உள்ளது

என்பதே உண்மை.

நடந்த பழைய சம்பவங்களை மீண்டும் நினைவு கூர்ந்து பார்க்காமல்

தொடர்ந்து ஆகவேண்டிய காரியத்தில் செயல்பட்டாள் மின்மினி.

பச்சிலங் குழந்தை தூக்கத்தோடு தமது தோள்பட்டையில்

சுமந்தவாறு கரு இருட்டில் நடந்த வண்ணமாக கணவரின் நண்பர்

வீட்டிற்கு தமது நான்கு வயது மகனை மனைவியிடம் அடைக்கலம்

தந்து நடந்த பிரச்சினைகளை முறையிட்டு அழுதவாறு வாடகைக்

காரில் ஏறி தலைநகர் பெரிய மருத்துவமனைக்குச் சென்றாள்.


வார்ட்டில் உறங்கிக் கொண்டிருந்த அன்புக் கணவரின் கால்களைப்

பற்றி தேம்பித் தேம்பி அழுதாள். மின்மினிக்கு ஆறுதல் சொல்லிக்

கொண்டிருந்தார் கணவரின் நண்பர், சில நிமிடங்கள் கடந்தது

மின்மினியின் கணவர் மயக்கத்தில் இருந்து சுய நினைவுக்கு திரும்பி

தமது கரத்தை மின்மினி தலையில் தொட்டு கவலைப்படாதே நான்

ஆபத்தான கட்டத்தை விட்டு விலகிவிட்டேன். நான் நூறு வயது வரை

நன்றாக இருப்பேன் என ஆறுதல் கூறினார். ஆபத்து அவசர

வேளையில் சிரமம் பாராமல் என் மனைவியை அழைத்து வந்த

உன்னை நான் என் உயிருள்ள வரை மறவேன் நண்பா என கூறினார்.

மின்மினியின் கணவர். பணம் சொந்த பந்தம் இருந்தும் அநாதைகளாக

வாழ்கிறோம். நடந்தது நடந்துவிட்டது. இனி அதைப் பற்றி பேசி

பயனில்லை. என் மனைவி மின்மினி செய்து பூஜை

பிரார்த்தனைகளால் தான் நான் இன்று பிழைத்துக் கொண்டேன்

இறைவன் எங்களை கைவிடவில்லை. சொந்தங்கள் இருந்தும்

பயனில்லை. இறைவன் ஒருவனே எங்களுக்கு எப்போதும் துணை.

You might also like