You are on page 1of 1

அனுப்புநர்:

P. சாகேஸ்வரி
க /பெ R. சங்கர் (லேட்),
காலனி தெரு,
பெரியேரி அஞ்சல்,
ஆத்தூர் வட்டம்,
சேலம் மாவட்டம்,

பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்
தலைமைச்செயலகம்,

சென்னை – 9.

ஐயா,
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன் என்னுடைய கணவர் இறந்து மூன்று
ஆண்டுகள் ஆகிறது. என்னுடைய அப்பா பெரியசாமி (உடல் ஊனமுற்றோர்), அம்மா குள்ளம்மாள் கால்
மற்றும் கை இழந்து என்னை படிக்க வைத்தார். எனக்கு இரண்டு குழந்தைகள், 4 வயது மற்றும் 3
வயது சிறுவர்கள். எங்களுக்கு எவ்வித சொத்துக்களும் இல்லை. என்னுடைய மாமனாருக்கும் எவ்வித
சொத்தும் இல்லை. நான் கூலி வேலை செய்து இரண்டு குடும்பத்தையும் மிகவும் சிரமப்பட்டு காப்பாற்றி
வருகிறேன். இவ்வளவு சிரமத்திலும் நான் B.Ed வரை படித்துள்ளேன். ஆதலால், ஐயா அவர்கள்
கருணை அடிப்படையில் எங்கள் குடும்பத்தை காப்பாற்ற எதாவது ஒரு வேலை தந்துதவுமாறு மிகவும்
பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
P. சாகேஸ்வரி

You might also like