You are on page 1of 11

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை

வரலாறு
பாகம்-21

ஆன்ம தாகமும் முதல் தரிசனமும்


-
கதாதரர் மிகவும் சிறியவராக இருந்த போது
அவரது தந்தை காலமாகி விட்டதால் தாய்
சந்திரமணி, அண்ணன் ராம்குமார் ஆகியோரின்
பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
கதாதரரை விட ராம்குமார் எறக்குறைய
முப்பத்தொரு வயது மூத்தவர்.
அவரைத் தந்தைக்குச் சமமாக மதித்து வந்தார்
கதாதரர். தந்தை போல் அன்பு காட்டிய
சகோதரரின் திடீர் மறைவு அவரை அளவு கடந்த
துயரத்தில் ஆழ்த்தியது.
இந்த மரணம் வாழ்வு நிலையற்றது என்பதை
அவரது மனத்தில் பதிய வைத்து, அவரது தூய
உள்ளத்தில் எந்த அளவிற்குத் துறவின் கனலைத்
தூண்டியிருக்கும் என்று யாரால் கூற இயலும்?
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் கதாதரர் அன்னை
காளியின் வழிபாட்டில் மிகவும் ஆழ்ந்து
ஈடுபடலானார்.
அன்னையைக் காண வேண்டுமென்ற தணியாத
தாகம் கொண்டவனுக்கு உண்மையிலேயே
அன்னை காட்சி அளிப்பாளா என்ற கேள்வி
அப்போதிலிருந்து அவர் மனத்தைக் குடைய
ஆரம்பித்தது.
நாள்தோறும் பூஜை முடிந்தவுடன் அன்னையின்
முன் அமர்ந்து சூழ்நிலையை மறந்து அவளது
எண்ணத்தில் மூழ்கியிருப்பார்.
ராமபிரசாதர் , கமலாகாந்தர் போன்ற பக்தர்கள்
இயற்றிய பாடல்களை தம்மை மறந்து பாடியபடியே
அன்புப் பெருக்கில் ஆழ்ந்து விடுவார்.
வீண்பேச்சுக்களில் துளிநேரத்தை
வீணாக்குவதையும் அடியோடு வெறுத்தார்.
இரவில், கோயில் கதவு சாத்திய பிறகு யாரும்
அறியாவண்ணம் பஞ்சவடியின் அருகிலிருந்த
வனத்திற்குள் சென்று அன்னையை
தியானிப்பார்.
கதாதரரின் இத்தகைய வினோதச் செயல்கள்
ஹிருதயருக்குப் பிடிக்கவில்லை.
ஆனால் என்ன செய்ய முடியும்? சிறு
வயதிலிருந்தே கதாதரர் தாம் நினைத்ததைச்
செய்து முடிக்கும் இயல்புடையவர் என்பதும்
யாரும் அவரைத் தடுக்க முடியாது என்பதும்
ஹிருதயருக்குத் தெரியாதவை அல்ல. எனவே
கதாதரரைத் தடுக்க அவர் எந்த முயற்சியும்
செய்யவில்லை. அதே வேளையில் கவலையை
வெளிப்படுத்தாமல் இருக்கவும் இயலவில்லை.
இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்தார்
அவர். கதாதரரின் வினோத ப்போக்கு
அதிகரிக்கலாயிற்று.
இரவில் தூங்காமல், படுக்கையை விட்டெழுந்து
எங்கோ சென்று விடுவார். ஹிருதயரின் கவலை
அதியமாயிற்று. இரவில் உறங்காவிட்டால்
கோயிலில் எப்படி பூஜைப் பணியைச் சரிவரச்
செய்ய இயலும்.
கதாதரர் உண்ணும் உணவின் அளவும்
குறைந்துவிட்டது. உணவையும் குறைத்து
உறக்கத்தையும் தவிர்த்து எத்தனை நாள் உடல்
நலத்துடன் ஒருவர் வாழ முடியும்? இனியும்
தாமதிப்பதில் பயனில்லை.என்று எண்ணிய
ஹிருதயர் கதாதரரிடமே இது பற்றிப்பேச முடிவு
செய்தார்.
அந்த நாட்களில் பஞ்சவடிப் பகுதி தற்போது
இருப்பதைப்போல் இல்லாமல் அடர்ந்த காடாக
இருந்தது.
பெரிய குழிகளும் நெருக்கமான புதர்களும்
மண்டிக் கிடந்தன. அது ஒரு அடர்ந்த காடு
என்பதுடன் மயானமாகவும் இருந்ததால் பகலில்
கூட மக்கள் அந்த வழியாகச் செல்ல அஞ்சினர்.
சென்றாலும் தப்பித்தவறிக்கூட யாரும்
காட்டிற்குள் நுழைவதில்லை. இரவிலோ, பேய்
பிசாசு பயத்தால் யாரும் அந்தப்பக்கம்
தலைவைத்தும் படுப்பதில்லை.
அந்தக் காட்டிற்குள் நெல்லி மரம் ஒன்று
வளர்ந்திருந்தது. அது சற்று தாழ்வான பகுதியாக
இருந்ததால் அந்த மரத்தின் கீழ்
அமர்ந்திருக்கின்ற ஒருவரை, உயரமான
பகுதியிலிருந்து பார்த்தால் கூடக் கண்டுபிடிக்க
முடியாது. இரவு வேளைகளில் அந்த மரத்தின் கீழ்
அமர்ந்து கதாதரர் தியானத்தில் ஈடுபடுவார்.
கதாதரர் ரகசியமாக எங்கு செல்கிறார்
என்பதைக் காண விரும்பிய ஹிருதயர் ஒரு நாள்
அவர் புறப்படும்போது அவருக்குத் தெரியாமல்
பின் தொடர்ந்தார்.
கதாதரர் நேராகக் காட்டிற்குள் சென்றார்.
அவரைத் தொடர்ந்து சென்றால் ஒரு வேளை
கோபம் கொள்வார் என்றெண்ணி ஹிருதயர்
அதற்குமேல் செல்லவில்லை.
கதாதரரை அச்சுறுத்தும் எண்ணத்தோடு
அவரைச் சுற்றிலும் அங்கொன்றும்
இங்கொன்றுமாகச் சில கற்களை எறிந்து
பார்த்தார். கதாதரரோ திரும்பிகூடப் பார்க்காமல்
காட்டினுள் சென்று விட்டார். முயற்சி
பலிக்காததால் ஹிருதயர் அறைக்குத்
திரும்பினார்.
அடுத்த நாள் ஓய்வாக இருக்கும்போது அவர்
கதாதரரை அணுகி, ஆமாம் நீங்கள் இரவில்
காட்டிற்குள் சென்று என்ன செய்கிறீர்கள்? என்று
கேட்டார்.
அங்கு நெல்லி மரம் ஒன்று உள்ளது, அதன் கீழ்
அமர்ந்து தியானம் செய்கிறேன். நெல்லி மரத்தின்
கீழ் அமர்ந்து தியானம் செய்பவர் நினைப்பவை
நிறைவேறும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன
என்று பதிலளித்தார் கதாதரர்.

இந்த நிகழ்ச்சிக்குப்பின் கதாதரர் அந்த மரத்தின்


கீழ் அமர்ந்து தியானம் செய்யும் போதெல்லாம்
கற்கள் வந்து விழுதல் போன்ற தொல்லைகள்
அடிக்கடி ஏற்பட்டன.
எல்லாம் ஹிருதயரின் செயல் என்று
தெரிந்திருந்தும் கதாதரர் அவரிடம் இது பற்றி
எதுவும் கேட்கவில்லை. எதனாலும் கதாதரரின்
செயலைத் தடுக்க முடியாததைக் கண்ட
ஹிருதயரின் பொறுமை எல்லை மீறி விட்டது.
எனவே ஒரு நாள் கதாதரர் காட்டிற்குள் சென்ற
சிறிது நேரத்திற்கெல்லாம் ஹிருதயரும் அவர்
என்னதான் செய்கிறார் என்பதைக் கண்டே தீர
வேண்டும் என்ற முடிவுடன் ஓசையின்றி அவரைத்
தொடர்ந்து சென்று சற்றுத் தொலைவில்
இருந்தபடியே கவனித்தார்.
அங்கு அவர் கண்ட காட்சிஅவரைத்
திகைப்படையச் செய்தது. ஏனெனில்
நெல்லிமரத்தின் அடியில் அமர்ந்து தியானம்
செய்து கொண்டிருந்த கதாதரரின் உடம்பில்
உடைகள் எதுவும் இல்லை.பூணூல் கூட இல்லை.
இது என்ன கோலம்! மாமாவுக்குப் பைத்தியம்
பிடித்துவிட்டதா? பைத்தியங்கள் தாம்
இப்படியெல்லாம் செய்யும் .தியானம்
செய்வதானால் செய்யட்டும். அதற்காக
உடுத்தியிருக்கும் துணியை ஏன் களைய
வேண்டும்? என்று வியந்தார் ஹிருதயர்.
கதாதரரின் செயல்களைப் பற்றி எந்த முடிவுக்கும்
வர முடியாத ஹிருதயர் நேராக அவரிடம் சென்று,
இதெல்லாம் என்ன? ஏன் இப்படி உடையையும்
பூணூலையும் களைந்து விட்டு நிர்வாணமாக
அமர்ந்திருக்கிறீர்கள்? என்று கத்தினார்.
தியானத்தில் ஆழ்ந்திருந்த கதாதரர் எதையும்
அறியவில்லை.ஒரிரு முறை ஹிருதயர் இவ்வாறு
உரக்கக் கத்திய பின்னரே அவருக்குப் புறவுணர்வு
வந்தது.
உனக்கு என்ன தெரியும்? உலகத்
தளைகளிலிருந்து விடுபட்டுத்தான் தியானம்
செய்ய வேண்டும்.
பிறப்பிலிருந்தே மனிதன் வெறுப்பு, வெட்கம்.
குலப்பெருமை , நன்னடத்தையால் வரும் கர்வம்,
அச்சம், மானம், உயர்குடிப்பிறப்பு, அகந்தை ஆகிய
எட்டு தளைகளில் சிக்கி உழல்கிறான்.
பூணூல் கூட இவ்வகையான தளைகளில் ஒன்று
தான். ஏனெனில் அது, நான் பிராமணன்
அனைவரிலும் உயர்ந்தவன் என்ற
தற்பெருமையின் சின்னம்.
அன்னையின் அருளை நாடும் ஒருவன்
இத்தகைய தளைகளிலிருந்து விடுபட்டு
ஒருமித்த மனத்துடன் அவளை அழைக்க
வேண்டும். அதனால் தான் நான் இவற்றைக்
களைந்து விட்டேன். தியானம் முடித்துத் திரும்பும்
பொழுது மறுபடியும் அணிந்து கொள்வேன் என்று
அமைதியாகக் கூறினார் கதாதரர்.
இது வரை கேட்டிராத இந்த விஷயங்கள்
ஹிருதயருக்கு அதிர்ச்சியைத் தந்தன.
மாமாவின் தவறுகளை எடுத்துக்கூறி வற்புறுத்தி
அவரை எப்படியாவது சரி செய்து விடலாம் என்று
நினைத்திருந்தார். அவ்வாறு நடக்காததால்
மறுமொழி ஒன்றும் கூறாமல் அந்த இடத்தை
விட்டு அகன்றார்.
மேலே குறிப்பிட்ட நிகழ்சச
் ியின் தொடர்பாக ஓர்
உண்மையை இங்குக்குறிப்பிடுவது நல்லது.
அது நமக்குத் தெரிந்தால் குருதேவரின் வாழ்வில்
நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளை நாம் நன்றாகப்புரிந்து
கொள்ள முடியும்.
மேலே குறிப்பிட்ட எட்டு வகைத் தளைகளை
மனத்தால் மட்டும் துறந்தால் போதும், ஒருவர்
உண்மையில் அவற்றைத் துறந்தவர் ஆவார் என்ற
கருத்தில் குருதேவருக்கு நம்பிக்கையும்
திருப்தியும் இல்லை.
மனத்தால் அவற்றைத் துறப்பதோடு முடிந்தவரை
உடலாலும் அவற்றைத் துறக்க வேண்டும். என்பதே
குருதேவரின் கருத்து.
தம் வாழ்ககை
் யின் அனைத்து விஷயங்களிலும்
குருதேவர் இவ்வாறு தான் நடந்து கொண்டார்.
கீழே கொடுக்கப்பட்ட சில நிகழ்சச
் ிகள்
இவற்றைத் தெளிவாக்கும்.
தொடரும்..
JOIN SRI RAMAKRISHNA WHATSAPP
GROUP

https://wa.me/919789374109?
text=Send_whatsapp_Group_Link

You might also like