You are on page 1of 4

“பித்தாபிறை சூடி” எனும் பாடலில் வரும்

சுந்தரரின் கூற்றினை ஆராய்க.


குழு உறுப்பினர் : தனேஸ்வரி சதாசிவன்
யோகேஸ்வரி வீராசாமி
திவியா முத்துசாமி
பித்தாபிறை சூடிபெருமானே அருளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.

பித்தா பிறைசூடிய பெருமானே, அருளாளா, எத்தான்=எந்தவகையிலும் மறவாமல் நினைக்கிறேன் மனத்தில்


உன்னை வைத்தேன். பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூரில் உறையும் அத்தா (தந்தையே) உனக்கு
ஆளாய் அல்லேன் (அடிமை இல்லை என) இனி நான் கூறமுடியுமோ?
பிறை சூடிய கருணை அடுத்ததாக எடுத்து உரைக்கப்படுகிறது.எவரும் அடைக்கலம் தராத நிலையில் தன்னைச்
சரண் அடைந்த சந்திரனை சிரத்தில் ஏற்று சந்திரசேகரனாக அருளியதால் “பிறை சூடி” என்றார் சுந்தரர்.
உயர்நெறி கருத்துகள்
• திருவெண்ணை நல்லூரில் ஆட்கொண்டிருக்கும் சிவபெருமான் பால் சுந்தரரின் ஆழமான பக்தியின்
வெளிபாடு
• தன்னை அடிமை என்று கூறிய இறைவனைப் “பித்தா” எனக் கோபித்துப் பேசினார்.இறைவன்
சுந்தரரை ஆட்கொண்டபின் “பித்தா பிறைசூடி” எனும் பாடலைப் பாடினார்.
• “நனவிலும் கனவிலும் நம்பா உன்னை மனவிலும் வழிபடல் மறவேன்” என்று மனமுறுகி துதித்துப்
பாடும் சிவனடியார்
தற்கால வாழ்வியல் ஒப்பீடு

• இறைவன்பால் பக்தி குன்றி இருத்தல்


• ஆபத்து அவசர காலத்தில் மட்டுமே நிழலாடக் கூடிய இறைவனைப் பற்றிய நினைவு
• முறையற்ற வழிபாடு-வீண் விரயம்

You might also like