You are on page 1of 27

8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்

தரிசனம்

ஆதார தரிசனம் .
ஊணவே வாசிதனை மூலந்தன் னில்

ஓமென் று தானிறுத்தி உறுதிகொண் டு

பேணவே யிங் கென் று மவுனம்பூட்டி

பெருமையுள்ள ஓங் அங் சிவய நமவென் று

தோணவே தினம்நூறு உருவேசெய் தால்

சுத்தமுள்ள சுழினையிலே நந்திகாணும்

பூணவே நந்தியுட பிரகாசங் கண் டால்

பொருந்திநின் ற ஆதாரஞ் சித்தியாமே.

ஆமப்பா ஆதாரஞ் சித்தியானால்

ஆதார தேவதைகள் அப்போகாணும்

ஓமப்பா வென் றபிரண வத்தினாலே

ஒளிவிளக்காய் நின் றதொரு சோதிகாணும்

வாமப்பால் நிறைந்த பூரணத்திலேதான்

மகத்தான சோதிபஞ்ச வர்ணமாக

தாமப்பா தன் னிலையில் தானேகாணும்

தண் மையுடன் கண் டதெல் லாம் சித்தியாமே.

ஓம் என் று மூச்சை மூலாதாரத்தில் நிறுத்தி “யிங் ”என் று மௌனமாக இருந்து "ஓங் அங் சிவய
நம" என் று தினமும் நூறு உரு தொடர்ந்து செபித்து வந்தால் சுழிமுனையில் நந்தியினுடைய
பிரகாசம் தெரியுமாம் . அப்படி தெரிந்தால் அதுவே ஆதார தரிசனம் என் கிறார்.

இந்த ஆதார தரிசனம் சித்தியானால் ஆதார தேவதைகள் கண் களுக்கு தெரிவார்களாம் ,


தனிமையில் இருக்கும் போதெல் லாம் ஒளிவிளக்குப் போல் சோதி தென் படுமாம் . அந்த
சோதியானது பஞ்ச வர்ண நிறத்திலே இருக்குமாம் . இந்த பஞ்சவர்ண ஒளி தென் படத்
தொடங் கினாலே இத் தரிசனத்தில் முழுமையாக சித்தியானதாக கொள்ளலாம் என் கிறார்
அகத்தியர்.

ஆத்ம தரிசனம் !, அறிவு தரிசனம் !.


https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 1/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்

ஆத்மாவின் தெரிசனம் .

சித்தியுள்ள ஆதாரதெரிசனமுங் சொன் னேன்

சிவசிவா ஆத்துமாவின் தெரிசனத்தைக்கேளு

பக்தியுடன் கண் டமதில் அங் கெண் றூணி

பூரணமாய் வாசி தனைநிறுத்திக் கொண் டு

பக்தியுடன் சுழிமுனையில் வாசியேற

பாலகனே உங் கென் று மவுனம்பூட்டி

சுத்தமுடன் உங் கிலிநம் சிங் கென் று

சுருதிபெற தினம்னூறு உருவேசெய் யே.

செய் யப்பா உறுதிகொண் டு உருவேசெய் ய

செயமான திருவுருவாம் ஆதாரத்தில்

மெய் யப்பா சுழிமுனையின் பிரகாசத்தாலே

மெஞ்ஞான மூலவன் னி பிரகாசிக்கும்

மையப்பா மூலவன் னி பிரகாசத்தாலே

மந்திரகலை ஆத்துமா வென் றறிந்துகொண் டு

கையப்பா குவித்துனிதம் பணிந்துகொண் டால்

கருணைவளர் சீவாத்துமா கனியுந்தானே.

ஆதார தரிசனத்தில் சித்தியடைந்தவர்கள் “அங் ”என் று மூச்சை தொண் டையில் நிறுத்தி


“உங் ”என் று மௌனமாக இருந்து "உங் கிலி நம் சிங் " என் ற மந்திரத்தை தினமும் நூறு
தடவை செபித்து வந்தால் சுழிமுனையில் மூலவன் னி பிரகாசம் தெரியுமாம் . அப்படி
தெரிந்தால் ஆத்மாவானது மந்திரக்கலையை உணர்ந்து அறிந்து கொள்ளும் என் கிறார்.

அப்போது கைகுவித்து வணங் கி பணிவுடன் மந்திரக்கலையை முழுவதுமாய் உணர்ந்து


தெளிவு பெறவேண் டுமாம் . அப்படி தெளிவடைந்ததும் சீவாத்துமா முழுமை அடைந்து தெளிவு
பெறுமாம் , இப்படியாக ஆத்துமாவின் தெரிசனம் சித்தியாகும் என் கிறார்.

ஆத்மாவின் தரிசனத்தில் சித்தியடைந்தவர்கள் அடுத்த தரிசனமான “அறிவு தரிசனத்தை”


பயிலலாம் என் கிறார் அகத்தியர். வாருங் கள் அதைப் பற்றி அகத்தியர் கூறியுள்ளதைப்
பார்ப்போம் .

அறிவு தெரிசனம் .

தானென் ற ஆத்துமாவின் தெரிசனத்தைச் சொன் னேன்

சங் கையுடன் அறிவான தெரிசனத்தைக் கேளு

வானென் ற மூலமதில் உங் கென் றூணி

மவுனமென் ற பீடமதில் அங் கென் றிருத்தி

https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 2/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்

கோனென் ற விழியோகம் கொண் டுநல் ல

குறியறிய ஓம்நம சிவயவென் று

தேனென் ற ரசம்போலே உருவேசெய் தால்

தேவாதி தேவனென் ற பிர்மமாச்சே.

ஆச்சப்பா பிர்மமென் ற தார்தான் சொல் வார்

ஆதியென் ற சுழியினையிலே அக்கினியே தோன் றும்

பேச்சப்பா யிம்மூல வன் னிதன் னால்

பேரண் டம் சுத்திவர கெவுனமுண் டாம்

நீ ச்சப்பா வெகுநீ ச்சு மூந்நேயந்தம்

நிசமான அந்தமடா நெத்திக்கண் ணு

பாச்சப்பாக் கண் ணறிந்து வாசிகொண் டால்

பதிவான மவுனசித்து பலிக்குங் காணே.

முதல் இரண் டு தரிசனங் கள் சித்தியடைந்தவர்கள் , “உங் ” என் று மூச்சை மூலாதாரத்தில்


நிறுத்தி “அங் ” என் று மௌனமாக இருந்து கொண் டு “விழி யோகத்தில் ” இருக்க
வேண் டுமாம் .

அது என் ன விழி யோகம் ?

கண் கள் மூடிய நிலையில் விழிகள் இரண் டினாலும் புருவ மத்தியை பார்த்தபடி இருப்பதுதான்
விழி யோகம் எனப்படும் .

இந்த விழி யோக நிலையிலிருந்து கொண் டு "ஓம் நம சிவய" என் று தினமும் நூறு முறை
செபித்துவந்தால் சுழிமுனையில் அக்கினி தெரியுமாம் . அப்படி தெரிந்தால் கெவுனம்
உண் டாகுமாம் , அப்போது மூன் றாவது கண் ணான நெற்றிக்கண் ணை உணரமுடியுமாம் .
இதை உணர்ந்து அறிந்து மூச்சை அங் கு நிறுத்த மௌன சித்தும் சித்திக்குமாம் இதுவே அறிவு
தெரிசனம் என் கிறார் அகத்தியர்.

மனோ தரிசனம்
முதல் மூன் று தரிசனங் களாகிய “ஆதார தரிசனம் ”, “ஆத்ம தரிசனம் ”, “அறிவு தரிசனம் ”
ஆகிய மூன் று தரிசனங் களில் சித்தி அடைந்தவர்களே இந்த நான் காவது தரிசனமாகிய மனோ
தரிசனத்தை பயில வேண் டும் என் கிறார் அகத்தியர்.

வாருங் கள் , மனோதரிசனம் பற்றி அகத்தியரின் மொழியில் என் ன கூறியிருக்கிறாரென


பார்ப்போம் .

கானென் ற அறிவான தெரிசனந்தான் சொன் னேன்

கலங் காத மனமென் ற தெரிசனத்தைக்கேளு

வானென் ற பூரகத்தில் சிங் கொன் றூதி

மகத்தான சுழியினையிலே வாசிபூட்டி

https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 3/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்

பூனென் ற ஓம்அரிநம வென் றேதான்

புத்தியுடன் தினம்னூறு உருவேசெய் தால்

வானென் ற தேகம்வெகு குளிர்ச்சியாகும்

மகத்தான ஆனந்த மயமாந்தானே.

தானென் ற ஆனந்தம் தானேதானாய்

தன் மையுடன் நின் றநிலை தானேகண் டு

வானென் ற கேசரியில் மவுனம்பூட்டி

வரிசையுடன் அண் டகேசரத்தில் சென் றால்

யேனென் ற மனோன் மணிதான் முன் னேநின் று

யின் பரச அமுர்தமது யிவாள்மைந்தா

வீணென் று தெரிசனத்தை விட்டாயானால்

வேதாந்த மவுனமதுக் குறுதிபோச்சே.

குருவருளை வேண் டி வணங் கி மௌனமாக இருந்து “சிங் ”என் று மனதை பூரகத்தில் நிறுத்தி,
மூச்சை சுழிமுனையில் நிறுத்தி "ஓம் அரி நம" என் று தினமும் நூறு முறை
செபித்துவரவேண் டுமாம் . அப்படி செபித்து வந்தால் உடல் குளிர்ச்சியாகுவதுடன் , மனமானது
மிகவும் ஆனந்த நிலையில் இருக்குமாம் .

இவ் வாறு மனம் ஆனந்த நிலையில் இருக்கும் போது கேசரியில் மௌன நிலையை
கைக்கொண் டால் மனோன் மணித் தாயின் தெரிசனம் கிடைக்குமாம் . மனோன் மணி தாயின்
தெரிசனம் கிடைத்தவுடன் மனமானது அனைத்தும் சித்தித்ததாக எண் ணுவதுடன் , இனி
தெரிசனம் எதுவும் கிட்டதேவையில் லை, இதுவே இறுதி தரிசனம் என் றும் நினைக்கவும்
தோன் றுமாம் . இதுவே மனோ தரிசனம் சித்தியடைந்த நிலையாக கூறுகிறார்.

இந்த மனோ தரிசனமே போதும் என நினைத்து மிச்சமிருக்கும் தரிசன முறைகளை பயிலாமல்


விட்டுவிட்டால் இது வரை பெற்ற நான் கு தரிசன சித்துக்களும் வீணாகி விடுமாம் . எனவே
பதினாறு தரிசனங் களையும் தொடர்ந்து பயின் று சித்தியடைவதே முக்திக்கு வழி என் கிறார்
அகத்தியர்.

மௌன தரிசனம்
முதல் நான் கு தரிசனங் களில் சித்தியடைந்தவர்கள் மட்டுமே இந்த முறையினை பயில
வேண் டும் என் கிறார் அகத்தியர். மௌன தரிசனம் பற்றி அகத்தியர் பின் வருமாறு
விவரிக்கிறார்.

உறுதியுள்ள மனமடங் குந் தெரிசனமுஞ் சொன் னேன்

உகந்துமன மடங் கினதோர் தெரிசனத்தைக்கேளு

பரிதிமதிமேற் சுடரறிந்து மவுனம்பூட்டி

பக்தியுடன் வாசிதனை வங் கென் றூணி

திருகுசுழி முனையதிலே சிங் கென் றோட்டி


https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 4/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
திருகு ழி மு தி றோ டி

தீர்க்கமுடன் தானிருந்து குருவைப்போற்றி

உறுதியுடன் சிங் குசிவாயென் றோத

உண் மையுள்ள மௌன தெரிசனமுமாமே.

ஆமப்பா தெரிசனத்தை யென் னசொல் வேன்

அதியென் ற தேகமதில் அக்கினிகொண் டேறும்

காமப்பால் கானப்பால் கனிந்தமுர்தமூறும்

கண் ணறிந்து மவுனமதாய் கனிவாய் நின் று

வாமப்பா லுருதியியனால் வரைகள்தாண் டி

மகத்தான சுழினைவழி வாசல் சென் று

தாமப்பா தனன் றிவே சாட்சியாக

தன் மயமும் விண் மயமும் தானாய் நில் லே.

இதுவரை சித்தியடைந்த தரிசனங் கள் மூலமாக சூரிய சந்திரர்களை விட சிறப்பான ஒளியை
தரிசித்ததை மௌனமாக மனதில் உள்வாங் கி மூச்சை “வங் ”என் று ஊன் றி, பின் னர் அந்த
முச்சை சுழிமுனையில் “சிங் ”என் று செலுத்தி குருவருளை வணங் கி வேண் டி "சிங் கு
சிவா"என் று தினமும் நூறு முறை செபித்து வரவேண் டுமாம் .

இவ் வாறு தொடர்ந்து செபித்துவர உடலில் அக்கினி ஏறுமாம் . அப்போது காமப்பால் ,


கானப்பால் , கனிந்தாமிர்தம் ஆகியவை ஊறுமாம் . அப்போது அதை உணர்ந்து மௌனமாக
இருந்தால் , ஊறிய இம் மூன் றும் சுழிமுனை வாசல் வரை செல் லுமாம் . அப்போது ஆகாயம் ,
பூமி எங் கும் நீ க்கமற பரந்து விரிந்து நிற்கும் பிரம் மம் நானே என் று உணரும் நிலை
சித்திக்குமாம் .இதுவே மௌன தெரிசனமாகும் என் கிறார் அகத்தியர்.

உள்ளமென் ற தரிசனம்
சித்தர்கள் அருளிய ஆறாவது தரிசனமாகிய உள்ளமென் ற தரிசனம் பற்றி இன் று பார்ப்போம் .
முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டதைப் போல முதல் ஐந்து தரிசன சித்தி அடைந்தவர்களே
இந்த உள்ளமென் ற தரிசனத்தை பயில வேண் டும் . இந்த தரிசனம் பற்றி அகத்தியர் பின்
வருமாறு விவரிக்கிறார்.

நில் லென் று மனதடங் கும் தெரிசனமும் சொன் னேன்

நிசமான புலத்தியனே யின் னங் கேளு

ஊனென் ற உள்ளமதின் தெரிசனத்தைச் சொல் வேன்

உத்தமனே சற்குருவைத் தியானம்பண் ணி

சொல் லென் று வாசிதனை வங் கென் றெழுப்பி

தீர்க்கமுடன் உங் கென் று மவுனம்பூட்டி

செல் லென் று அங் கிலிவசி வசியென் றோத

துலங் குமடா மகேஸ் பரத்தின் தெரிசனந்தான் காணே


https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 5/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
துலங்குமடா மகேஸ்பரத்தின் தெரிசனந்தான்காணே.

காணவே மயேசரத்தின் தெரிசனந்தான் மைந்தா

கருணையுடன் காணவே அரிதாம்பாரு

பூணவே புருவமப்பா சுழினைக்குள் ளே

பொருந்திநின் று வந்ததொரு வாசிதானும்

தோணவே துலங் கி நின் று அசவையாகி

சொல் நிறைந்த மந்திரமு மதுவேயாக

ஊணவே மவுனமது குருதியாகி

உள் வெளியாய் நின் றுதடா உகந்துபாரே.

குருவருளைத் தியானம் செய் து மூச்சை “வங் ” என் று ஊன் றி, பின் “உங் ” என் று மௌனமாக
இருந்து கொண் டு "அங் கிலி வசி வசி" என் று தினமும் நூறு முறை செபித்து வரவேண் டுமாம் .

அப்படி செபித்து வரும் போது காண் பதற்க்கு மிகவும் அரியதான மகேஸ் பரத்தின்
தெரிசனத்தை காணலாமாம் . அப்போது சுழிமுனையுடன் பொருந்தி வரும் மூச்சானது அதுவே
மந்திரமாகவும் , மௌன நிலையாகவும் உடலில் ஓடும் இரத்தம் போல் ஒன் றி உள் வெளியாய்
இருக்கும் நிலையை உருவாக்குமாம் .

இதையே உள்ளமென் ற தெரிசனமாகும் என் கிறார் அகத்தியர்

பூரண தரிசனம் , நாசி நுனி தரிசனம் !


பூரண தரிசனம் ..

இது வரை பகிர்ந்து கொண் ட முதல் ஆறு தரிசனங் களை பெற்று சித்தியடைந்தவர்கள் இந்த
ஏழாவது தரிசனமான பூரண தரிசனத்தை பயில வேண் டும் . இந்த தரிசனம் பற்றி அகத்தியர்
பின் வருமாறு விவரிக்கிறார்.

பாரப்பா உள்ளமென் ற தெரிசனந்தான் சொன் னேன்

பதிவான பூரணமாந் தெரிசனத்தைக்கேளு

நேரப்பா வங் கென் று வாசிதனையெழுப்பி

நிலையான சுழினையிலே அங் கென் றிருத்தி

காரப்பா ஓம்றீங் கிலிமங் கென் று

கருத்துறவே னூற்றெட்டு உருவே செய் தால்

தேரப்பா அண் டமெனும் சுழினைக்குள் ளே

தீர்க்கமுடன் சதாசிவனார் தெரிசனையாங் காணே.

காணவே அரிதாகும் தெரிசனந்தான் மைந்தா

கற்பூர தீபமதின் காந்திதன் னை

பேணவே மனம்பூண் டு காந்திதன் னால்


https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 6/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்

பேசாத மவுனரச பானமுண் டால்

தோணவே மவுனரச பானங் கொண் டால்

துலங் குமடா சிவயோகம் சுத்தமாக

ஊணவே தானிருந்து மவுனம்பூட்டி

ஓடிநின் று வாசியது ஒடுக்கமாச்சே.

“வங் ” என் று மூச்சை எழுப்பி சுழுமுனையில் “அங் ” என் று நிறுத்தி, மௌனமாக இருந்து "ஓம்
றீங் கிலி மங் " என் ற மந்திரத்தை தினமும் நூறு முறை செபித்து வந்தால் சுழிமுனையில்
சதாசிவனார் தரிசனம் காணக் கிடைக்குமாம் . அப்படி தெரிந்தால் பூரண தெரிசனம்
சித்தியாகுமாம் .

மேலும் இந்த தரிசனதில் கற்பூர தீபம் போன் ற ஒளியும் தென் படுமாம் , அப்போது வாசியானது
ஒடுக்கமாகுமாம் . அத்துடன் மௌன ரச பானம் சுரக்கும் அதை உணர்ந்தால் சிவயோகம்
தெளிவாகவும் , முழுமையாகவும் சித்திக்குமாம் என் கிறார் அகத்தியர்.

நாசினுனி தரிசனம் ..

சித்தர்களின் தரிசன வகைகளில் எட்டாவது தரிசனமான நாசி நுனி தரிசனம் பற்றி


பார்ப்போம் . இதை அகத்தியர் பின் வருமாறு விவரிக்கிறார்.

ஒடுக்கமுடன் பூரணமாம் தெரிசனத்தைச் சொன் னேன்

உண் மையென் ற னாசினுனி தெரிசனத்தைக்கேளு

அடுக்கநடு மனைதனில் வங் கென் றிருத்தி

ஆதியென் ற சுழிமுனையில் சிங் கென் றிருத்தி

தொடுத்துமிக சிவயவசி அம்மங் கென் று

சுத்தமுடன் னூற்றெட்டு உருவேசெய் தால்

நடுத்தமரில் னாகாந்த சோதிதொன் றி

நாலான காரியமும் நன் மையாமே.

நன் மையுடன் னாசினுனி னாட்டம்பாரு

நாதாந்த பூரணமாய் சுழினைக்கேத்தி

உண் மையென் ற வாசியிலே உகந்துநில் லு

தன் மையுடன் உலகமதில் தானேநின் று

சகலஉயிர் தாபரமும் தானேதானாய்

சின் மயமாய் த் தானிருந்து தெளிந்துகொண் டால்

சிவசிவா மவுனமது தீர்க்கமாமே.

புருவ மத்தியில் மனதை நிறுத்தி “வங் ” என் று மூச்சை எழுப்பி சுழுமுனையில் “சிங் ” என் று
நிறுத்தி மௌனமாக கண் களால் நாசி நுனியை நோக்கியவாறு இருந்து "சிவயவசி அம்
தி பி
https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 தி தி ரி 7/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
மங் "என் று தினமும் நூறு முறை செபித்துவந்தால் புருவ மையத்தில் காந்த ஜோதி தெரியுமாம் .
அப்படி தெரிந்தால் நாசினுனி தெரிசனம் சித்தியாகியதாக கொள்ளலாமாம் .

அப்படி நாசிநுனி தெரிசனம் சித்தியானால் சகல உயிர்களிலும் பரம் பொருளே


நிறைந்திருக்கிறது என் றும் , அந்த பரம் பொறுளிலில் தானும் அடக்கம் என் றும் உணர
முடியுமாம் . அத்துடன் மவுன சித்தும் சித்திக்குமாம் என் கிறார் அகதியர்.

புருவ மைய் ய தரிசனம்


இது வரை நாம் பார்த்த தரிசனங் களில் இருந்து கொஞ்சம் மாறுதலான தரிசனம் ஒன் றை
இன் று பார்ப்போம் . முந்தைய தரிசனங் களை நமக்கு வசதியான எந்த இடத்திலும்
செய் யலாம் . ஆனால் இந்த புருவ மைய் ய தரினத்தை சதுரகிரி மலையில் தான் செய் திட
வேண் டுமென் கிறார் அகத்தியர். இதற்கான பிண் ணனி குறித்த தகவல் கள் ஏதும் குறிப்பாக
இல் லை.

வாருங் கள் இந்த தரிசனம் பற்றி அகத்தியர் சொல் வதை பார்ப்போம் .

பாரப்பா நானினுனி தெரிசனமுஞ்சொன் னேன்

பரிவான புருவமய் யத் தெரிசனத்தைக்கேளு

நேரப்பா மனம் நிறுத்தி மவுனம் பூட்டி

நேர்மையடன் சுழினையிலே மனக்கண் சாற்றி

காரப்பா கனிந்தமனங் கொண் டு மைந்தா

கருணையுடன் நின் றுதவம் செய் தாயாகில்

மேரப்பா வளமானசதுரகிரி சென் றுதானே

மெஞ்ஞான சோதிசிவ சோதியாமே.

சோதியென் ற ஆதியடா சுழினைக்கம் பம்

சுயஞ்சோதி யானசிவ ஞானதீபம்

ஆதியென் ற தீபமடா ஆத்துமாவாகும்

நிலையான தீபமடா பரமாய் நிற்கும்

சாதியென் ற வன் னியடா ஆவிதன் னை

தனையறிந்து சோதியாம் தன் னில் சேரே

ஆரப்பா அறிவார்கள் ஆதியந்தம்

அடங் கிநின் ற பரசுரூபம் வெளிதானாச்சே.

சதுரகிரி சென் று மனதை ஒரு நிலைப்படுத்தி சுழிமுனியில் மனதை நிலை நிறுத்தி தவம்
செய் திட வேண் டுமாம் . அப்போது சிவ சோதி தரிசனம் காணலாமாம் . இந்த சோதியுடன்
தன் னை அறிந்து ஒரு நிலைப்பட்ட மனதையும் இணைக்க ஆதி அந்தம் தெரிய வருவதுடன் ,
பரசு ரூபமும் தெரியவரும் என் கிறார் அகத்தியர்.

இந்த முறைக்கென மந்திரங் கள் ஏதும் குறிப்பிடப் படவில் லை, மாறாக முந்தைய
தரிசனங் களில் கிடைத்த சித்தியானது இந்த தரிசனத்திற்கு உதவும் என கொள்ளலாம்
https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 8/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
தரிசனங்களில் கிடைத்த சித்தியானது இந்த தரிசனத்திற்கு உதவும் என கொள்ளலாம்.

பிரமவெளி தரிசனம் .
குருவின் வழி காட்டுதலோடு புருவ மைய தரிசனம் வரை சித்தியடைந்தவர்கள் இந்த பிரம
வெளி தரிசனத்தை பயிலலாம் . இந்த முறை பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.

ஆச்சப்பா புருவநடு தெரிசனமும் சொன் னேன்

அரகரா பிர்மவெளி தெரிசனத்தைக்கேளு

பேச்சப்பா பெருகிநின் ற மூலந்தன் னில்

பிரணவத்தால் வாசிதனை மேலேனோக்கி

பாச்சப்பா மவுனமதில் ரீங் கென் றிருத்தி

பதிவான சுழிமுனையை பத்திப்பார்க்கில்

மூச்சப்பா நிறைந்ததிரு ஆறாதாரம்

முடிவில் லா பரமவெளி காந்தியாச்சே.

காந்தியென் ற பரமவெளி காந்திதன் னை

கனிவான கண் ணறிந்து ஆர்தான் காண் பார்

பாந்தியமாய் பரமவெளியை பதிவாயப்பார்த்தால்

பஞ்சவர்ண அஞ்சுநிலை தானேதோணும்

சாந்தமுடன் அஞ்சுநிலை தன் னைப் பார்த்தால்

தன் மயமும் விண் மயமும் அதுவாய் ப்போச்சு

நேர்ந்துமிக பூரணமாய் மவுனங் கொண் டால்

நிசமான மவுனகுரு னாதனாச்சே.

ஓம் என் ற பிரணவத்தின் உதவியுடன் மூச்சை மேல் நோக்கி செலுத்தி பின் மௌனமாக
“ரீங் ”என் று சுழுமுனையில் ஊன் றி மனக்கண் ணால் பார்த்தால் இந்த தரிசனம்
சித்தியாகுமாம் .

அப்படி இந்த தெரிசனம் சித்தியானால் அப்ஞ்சவர்ணம் தெரிவதுடன் , ஐந்து நிலைகளும்


தெரியுமாம் . அப்போது தன் மயமும் விண் மயமும் தானே என் று உணரும் மௌன நிலை
சித்திக்கும் என் கிறார்.

இந்த மௌன நிலை சித்தித்தவர்களே மௌன குருவாக விளங் க முடியும் என் கிறார்
அகத்தியர். ஆக, இதன் மூலம் மௌன குரு என் பவர் யார் அவரின் சிறப்பு எத்தகையது
என் பதை இந்த தரிசன முறை நமக்கு உணர்த்துகிறது.

ஒளி தரிசனம் , விந்து தரிசனம் .


தரிசனங் கள் என் பது ஒரு வகையான அனுபவ நிலை. அவற்றை வார்த்தைகளினால்
விவரிப்பதை விட அனுபவித்து அறிவதே சிறப்பு. அனுபவம் என் பது முயற்சி மற்றும்
பயிற்சியினால் மட்டுமே சாத்தியமாகும் . ஆகக் கூடிய பொறுமை மற்றும் நிதானத்தோடு
https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 9/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
பயிற்சியினால் மட்டுமே சாத்தியமாகும். ஆகக் கூடிய பொறுமை மற்றும் நிதானத்தோடு
இவற்றை பயிலும் எவருக்கும் தரிசனம் சாத்தியம் . இத்தகைய தரிசனங் களை பெற்றவர்களை
நான் அறிவேன் என் பதால் இந்த கருத்தினை வலியுறுத்திச் சொல் ல விரும் புகிறேன் .

வாருங் கள் ஒளி தரிசனம் பற்றிய அகத்தியரின் பாடலைப் பார்ப்போம் .

ஒளி தரிசனம் ..

ஆச்சப்பா பரமவெளி தெரினமுஞ்சொன் னேன்

அருள் நிறைந்த ஒளியினுட தெரிசனத்தைக்கேளு

காச்சப்பா அங் கென் று கண் டமதில் யிருத்தி

கருணைவளர் உச்சியிலே சிம்பென் றுரேசி

பாச்சப்பா யிப்படியே பிராணாயஞ்செய் தால்

பரமவெளி தன் னிலொளி பளீரெனவேதோணும்

மூச்சப்பா நின் றநிலை ஆரறியப்போறார்

முத்திகொண் ட சுழினையடா சந்தியந்தான் பாரே.

ஆதி தரிசனமான ஆத்மாவின் தரிசனம் துவங் கி பிரம தரிசனம் வரை வாய் க்கப்
பெற்றவர்களே இந்த ஓளி தரிசனத்தை பயில வேண் டுமாம் . கவனக் குவிப்புடன் மௌனமாய்
இருந்து “அங் ”என மனதை கண் டத்தில் நிலை நிறுத்தி மூச்சினை “சிம் ” என உச்சியில் ஏற்றி
பிராணயாமம் செய் திட வேண் டுமாம் . அப்படித் தொடர்ந்து செய் து வருகையில் பரம
ஒளியானது பளீர் என தோன் றும் என் கிறார் அகத்தியர். இதுவே ஒளி தரிசனம் ஆகும் .

இந்த ஒளி தரிசனத்தை தரிசிக்கப் பெற்றவர்கள் அடுத்த தரிசனமான விந்து தரிசனத்தை


பயில வேண் டும் . இதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.

விந்து தரிசனம் ..

பாரப்பா ஒளியினிட தெரிசனமும் சொன் னேன்

பதவின விந்தினிட தெரிசனத்தைக்கேளு

சாரப்பா கேசரியில் மனதைனாட்டி

தமரான அணுவாசல் தன் னில் நின் று

நேரப்பா கண் ணடங் க மவுனம்பூட்டி

நேர்மையுடன் தானிருந்து றீங் கென் று

காரப்பா வாசியை நீ மேலேனாக்கி

கருணையடன் சுழினையிலே நிசமென் றுநில் லே.

நில் லடா சிம்மெனவே வாசிகொண் டு

நிலையான தமரதிலே வாசியேத்து

வில் லடா விசைபோலே வாசியேத்து

விபரமுடன் யிறங் குதுறை அறிந்துகொண் டு


https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 10/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
ரமு ற குது றை றிந்து டு

செல் லடா தமரதிலே நின் றுபார்த்தால்

சிவசிவா பூரணசந் திரனேகாணும்

உள்ளடா பூரணசந்திரனைக் கண் டால்

உறுதியுடன் சிருஷ் டிதிதி சங் காரமாமே.

குருவருளை தியானித்து மௌனமாக இருந்து கேசரியில் மனதை நிறுத்தி, “றீங் ”என் று


அணுவாசல் தன் னில் மூச்சை ஒன் று சேர்த்து மேல் நோக்கி செலுத்தி இறங் குதுறை அறிந்து
பார்த்தால் பூரண சந்திரன் தென் படுமாம் . இந்த பூரண சந்திரக் காட்சியைக் கண் டால்
சிருஷ் டி, திதி, சங் காரம் என் னும் மூன் றும் சித்திக்குமாம் இதுவே விந்து தெரிசனம் என் கிறார்
அகத்தியர்.

நாத தரிசனம்
அகத்தியர் அருளிய பதினாறு தரிசனங் களில் இனி வர இருக்கும் தரிசனங் கள் கொஞ்சம்
சிக்கலானவை. அவற்றை வார்த்தைகளினால் எந்த அளவுக்கு விவரிக்க முடியுமென
தெரியவில் லை. இவை பெரும் பாலும் குருவினால் சீடருக்கு உணர்த்தப் பட வேண் டியவை
என் பதால் என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இந்த தரிசன விவரங் களை இங் கே பகிர
முயற்சிக்கிறேன் .

வாருங் கள் , விந்து தரிசனம் பற்றி அகத்தியர் அருளியிருப்பதை பார்ப்போம் .

ஆமப்பா விந்தினிட தெரிசனமுஞ்சொன் னேன்

அருள் பெரு நாதமதின் தெரிசனத்தைக்கேளு

தாமப்பா தன் னிலையை தானேகண் டு

சங் கையுடன் விபூதி தூளிதமேசெய் து

சோமப்பால் கொண் டுபரி பூரணமாய் நின் றால்

சொல் நிறைந்த சுவாசமது பாழ்போகாமல்

நாமப்பா சொல் லுகிறோம் மவுனம்பூட்டி

நாதாந்தத் தமர்வாசல் திரையைநீ க்கே.

நீ க்கியந்த கேசரியில் மனத்தைநாட்டி

நிலையறிந்து ஓம்வசியென் று மைந்தா

தாக்கிநின் றாய் ரேசகபூரண மாய் நிற்க

தன் மையுடன் வாசியது உண் மையாகும்

போக்குவரத் தாகிநின் ற வாசிமைந்தா

பொருந்தி நின் றதமரதிலே யடங் கினாக்கால்

வாக்குமன தொன் றாகி மனதுகூர்ந்து

மகத்தான கேசரியில் சோதியாமே.


https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 11/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்

தன் நிலையை தானே கண் டுணர்ந்து தெளிவாக வீபூதி துளிதம் செய் து பின் னர் மனதை
பூரணமாக நிலை நிறுத்தினால் சுவாசம் வீணாக போகாது. அப்போது
மௌனமாக“ஓம் வசி”என கேசரியில் மனதை நிலை நிறுத்த நாதாந்த தர்ம வாசலின் திரை
நீ ங் கி தரிசனம் காண கிடைக்குமாம் .

அப்படி தரிசனத்தை காணும் போது கேசரியில் சோதி தோன் றுமாம் . மேலும் இந்த
தரிசனங் கள் படிக்கும் போது புரியாமல் இருந்தாலும் வரிசை முறைப்படி செய் து வரும் போது
சிறப்பாக உணரமுடியும் என் றும் சொல் கிறார்.

உருவ தரிசனம் , அரூப தரிசனம்


அகத்தியர் அருளிய பதிறாறு தரிசனங் களில் இன் று பதினான் கு மற்றும் பதினைந்தாவது
தரிசனம் பற்றி இன் றைய பதிவில் பார்ப்போம் . இவை முறையே “உருவ தரிசனம் ”, “அரூப
தரிசனம் ” என் றழைக்கப் படுகிறது.

உருவ தரிசனம் ..

சோதியென் ற னாதாந்த தெரிசனமுஞ்சொன் னேன்

சுரூபமென் ற உருவமதின் தெரிசனத்தைக்கேளு

ஆதியென் ற கோமுகஆசான மேல் க்கொண் டு

அப்பனே விபூதி தூளிதமேசெய் து

நீ தியென் ற வாமமதால் மவுனம்பூட்டி

நின் றிநிலை தமர்வால் திரையை நீ க்கி

ஓதியதோர் பிரணவத்தால் உள் ளேசென் றால்

உள் ளொளியும் வெளியொளியும் மொன் றாய் ப்போமே.

ஒன் றாகி நின் றபொருள் தானேதானாய்

உத்தமனே அட்டசித்துந் தானேயாகும்

நன் றான ரவிமதியுஞ் சொன் னபடிகேக்கும்

நாட்டமுடன் யிகபரமும் நன் மையாகும்

நின் றாடும் வாசியினால் மவுனங் கொண் டு

நெறியான தமரதிலே வாமாகி

நேராத மவுனரசங் கொண் டாயானால்

குருவான தேசியடா வாசியாமே.

முந்தைய பதின் மூன் று தரிசனங் களில் சித்தியடைந்தவர்கள் மட்டுமே இந்த தரிசன


முறையினை பின் பற்றி பயில வேண் டும் . கோமுக ஆசனத்தில் * அமர்ந்து இருந்து கொண் டு
வீபூதி துளிதமிட்டு கவனக் குவிப்புடன் ஆழ்ந்த மௌனமாக இருந்து பிரணவ
மந்திரமான“ஓம் ” என் ற மந்திரத்தை செபித்து வர உள் ஒளியும் , வெளி ஒளியும் ஒன் றாக
இணைவதை தரிசிக்கலாமாம் . இதுவே உருவ தெரிசனம் என் கிறார் அகத்தியர்.

https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 12/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்

இத்தகைய உருவ தரிசனத்தை பெறுகிறவர்களுக்கு அட்டமா சித்துக்களும் சித்திப்பதுடன் ,


இக பரமும் தெளிவாக விளங் கும் என் கிறார் அகத்தியர்.

*ஆசனங் கள் பற்றி சித்தர்கள் அருளிய தகவல் களை கூடிய விரைவில் விளக்கப்படங் களுடன்
எழுதுகிறேன் .

அரூப தெரிசனம் ..

உருவ தரிசனம் வரையிலான அத்தனை தரிசனங் களை பெற்றவர்கள் இந்த அரூப


தரிசனத்தை பயிலலாம் . இது பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.

வாசியென் ற உருவதுவே பொருளென் றெண் ணி

மனதுபரி பூரணமாய் பூசைசெய் து

தேசியென் ற அருவமதின் தெரிசனத்தைக்கேளு

திருகுமணி வாசிலிலே மவுனம்பூட்டி

நாசினுனி சுழினை வழிதமருக்குள் ளே

வாசி ஊடுருவ நாட்டங் கொண் டு

ரேசிவாசிம் மெனவே வாசியாதி

நின் னகமும் விண் ணகமும் ஒன் றாங் காணே.

ஒன் றான காட்சியடா அரூபமாச்சு

உத்தமனே அரூபமென் ற காட்சிதன் னை

அண் டகேசரி யெனவே அமர்ந்துகொண் டு

அனுதினமும் பிராணதாரகமாய் நின் றால்

குன் றாத சமாதியடா சோதியாச்சு

குருவான சோதியிலே கூர்ந்துகொண் டால்

நன் நான பதவியடா சாயுச்சியபதவி

நாதாந்த பதவியென் ற அரூபமாச்சே.

கேசரி யோகத்தில் அமர்ந்திருந்து கொண் டு திருகுமணி வாசலிலே மௌனமாக உற்று


நோக்கி. நாசிநுனி சுழினை வழியாக மூச்சு செல் லும் போது மனதும் விண் ணும் ஒன் றாய்
இருப்பதை ஊணர முடியுமாம் . அந்த ஒன் றாக இருப்பது அரூப காட்சியாக தென் படுமாம் .
இந்த காட்சியை தரிசித்த படி பிரணாயாமம் செய் துவந்தால் சாயுச்சிய பதவி கிடைப்பதுடன்
சமாதி நிலையும் சித்திக்குமாம் என் கிறார் அகதியர்.

சாயுச்சிய தரிசனம் .
சாயுச்சிய தரிசனம் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.

அரூபமென் ற தெரிசனங் கள் பதினைந்திற்க்கும்

இறுதிநிலை தெரிசனந் தான் மவுனபீடம்


https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 13/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்
இறுதிநி தெரி ந் தா வு

சுரூபமென் ற சோதியிலே மனக்கண் சாத்தி

சுத்தமுடன் அந்தரத்தில் மணிநாவுன் னி

அரூபமென் ற தெரிசனங் கள் யீரட்டுந்தான்

அங் கசனையே தோணுமடா அமர்ந்துபாரு

ரூபமென் ற சோதியிலே அமர்ந்துபாரு

துலங் குமடா நினைத்தவண் ணஞ் சோதிதானே.

தானான சோதியடா உச்சிமூலம்

தனையறிந்து வாசியடா மவுனபீடம்

கோனான சுழினையடா நந்நதிக்கம்பம்

குருவான மூலமடா ஓங் காரந்தான்

வானான வட்டமடா கபாடவாசல்

வரையறிந்து திரையகத்தி மவுனங் கொண் டால்

தேனான அமுர்தரசந் தெளிவுகாணும்

தெளிவான ஒளிவரிந்து வெளியைக்காணே.

மௌனமாக அமர்ந்திருந்து சுரூபம் என் ற சோதியை மனக்கண் ணில் பார்க்க, இதற்க்கு முன்
தரிசித்த பதினைந்து தரிசனங் கள் அனைத்தையும் ஒன் றாக அங் கு தரிசிக்கலாமாம் .
அப்படியே அமர்ந்து அதைத் தரிசித்தால் அனைத்தும் ஒன் றாகி ஒரே சோதியாக தெரியுமாம் .
அப்படி அந்த சோதியை தரிசித்து கொண் டே ஓங் கார மந்ந்திரமான “ஓம் ” என் று மனதால்
உச்சரிக்க வட்டமான கபால வாசல் திறக்குமாம் . அப்போது இந்த சோதி தரிசன நிலையைக்
கடந்து அண் ட வெளி ரகசியத்தை முற்றாக உணரலாமாம் . இதுவே இறுதி நிலையாகும்
என் கிறார் அகத்தியர்.

https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 14/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்

https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 15/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்

https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 16/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்

https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 17/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்

https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 18/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்

https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 19/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்

https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 20/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்

https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 21/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்

https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 22/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்

https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 23/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்

https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 24/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்

https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 25/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்

https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 26/27
8/20/23, 1:07 PM சித்தஞானம் - தரிசனம்

https://sites.google.com/site/sitthanganam/taricanam?authuser=0 27/27

You might also like