You are on page 1of 11

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை

வரலாறு
பாகம்-35

திருமணமும் தட்சிணேசுவரத்திற்குத்
திரும்புதலும்
-
குருதேவர் பூஜைப் பொறுப்புகளிலிருந்து
விலகிவிட்டார். என்ற செய்தி காமார்புகூரில்
அவரது தாய். சகோதரர் ஆகியோர்
செவிகளுக்கு எட்டியது. அது அவர்களை ஆழ்ந்த
கவலைக்கு உள்ளாக்கியது. ராம்குமார் காலமாகி
இரண்டாண்டுகள் கூட முடியவில்லை. அதற்குள்
இளையமகனும் மூளைக்கோளாறு என்ற செய்தி
கேட்டு, சந்திரமணி தேவியும், ராமேசுவரரும்
மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் கொண்டனர்.
துரதிஷ்டத்தால் வரும் துன்பங்கள் ஒருபோதும்
தனியாக வருவதில்லை. அவை பல்வேறு
திசைகளிலிருந்து பற்பல உருவங்களில் வந்து
கவிந்து வாழ்க்கையையே இருள்மயமாக்கி
விடும். சந்திரமணியின் வாழ்க்கையும் இப்போது
இவ்வாறு தான் அமைந்துவிட்டது. அவளுக்கு
மிகவும் காலந்தாழ்த்திப் பிறந்த பிள்ளை
குருதேவர். அதனால் அவர்மீது அவள் அளவு
கடந்த அன்பு கொண்டிருந்தது இயல்பே.
ஆகவே சந்திரமணி அவரை உடனடியாகக்
காமபர்புகூருக்கு அழைத்து வந்தாள். அவரது
உதாசீனம், படபடப்பு, அம்மா அம்மா என்ற கதறல்
எல்லாம் அவளை மிகவும் வேதனையுறச்
செய்தன. அவரை குணப்படுத்த பலவகை
மருத்துவ முயற்சிகளுடன் சாந்தி ஸ்வஸ்த்யயனம்
போன்ற சடங்குகளையும் செய்தாள். அது 1858-
ஆம் ஆண்டில் கடைசிப்பகுதியாக இருக்கலாம்.
குருதேவர் வீட்டிற்கு வந்தபின் பொதுவாக
முன்புபோல் இயல்பான வாழ்க்கை வாழ்ந்தாலும்
சிலவேளைகளில் அவர் அம்மா அம்மா என்று
மனஏக்கத்துடன் அழுவதும்
பரசவப்பெருக்கினால் வெளியுணர்வை இழப்பதும்
தொடரவே செய்தது.
ஒரு கணம் சாதாரணமாக இருப்பார்.மறுகணம்
எல்லாம் தலைகீழாகிவிடும். ஒரு புறம் உண்மை,
எளிமை தெய்வபக்தி தாயன்பு நண்பர்களிடம்
பிரியம், ஆகியவற்றில் ஈடுபாடு இருந்ததுபோல
மறுபுறம் உலகியல் விஷயங்களில் உதாசீனம்,
பிறரால் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒரு
குறிக்கோளை அடையவேண்டும். என்ற ஏக்கம்,
நாணமோ, அச்சமோ வெறுப்போ அற்ற
மனத்துடன் அந்தக் குறிக்கோளை
அடைவதற்கான விடாமுயற்சி இவையும்
எப்போதும் அவரிடம் காணப்பட்டன. அவரிடம்
ஏதோ உபதேவதையின் ஆவேசம்
ஏற்பட்டிருக்கிறது.என்ற எண்ணத்தை இது
மக்கள் மனத்தில் ஏற்படுத்தியது.
கள்ளங்கபடமற்ற சந்திரமணிதேவியின் மனத்தில்
ஆரம்பத்திலேயே இந்த எண்ணம் அவ்வப்போது
தோன்றியதுண்டு. இப்போது மற்றவர்களும்
அவ்வாறு பேசியபோது அவளது எண்ணம்
உறுதிப்பட்டது. எனவே மந்திரவாதி ஒருவரை
அழைத்துச்சிகிச்சை அளிக்க எண்ணினாள்.
இது பற்றி குருதேவர் கூறினார், ஒரு நாள்
மந்திரவாதி ஒருவர் வந்தார். மந்திரம் ஜபித்த திரி
ஒன்றைக்கொளுத்தி என்னை முகரச்செய்து ,
பேய் பிடித்திருந்தால் அது ஓடிவிடும் என்று
சொன்னார். ஆனால் பயன் எதுவும் ஏற்படவில்லை.
அதன்பின் ஒருநாள் இரவு கைதேர்ந்த
மந்திரவாதிகள் பூஜை முதலியன செய்து
சண்டனை அழைத்தனர். சண்டனும் வந்து பூஜை
பலி முதலியவற்றை ஏற்றுக்கொண்டு
மகிழ்ச்சியுடன் இவனைப்பேயும் பிடிக்கவில்லை.
இவனுக்கு எவ்வித நோயும் இல்லை, என்று
சொல்லிற்று, பின்னர் எல்லோர் முன்னிலையிலும்
அது என்னிடம், கதாய் நீ ஒரு சாதுவாக
விரும்புகிறாய், அதிகம் பாக்கு போடாதே.பாக்கு
அதிகம் தின்றால் காமம் அதிகரிக்கும்! என்று
சொல்லிற்று. உண்மையிலேயே பாக்கு என்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும். அடிக்கடி பாக்கு
போடுவேன். அன்று முதல் சண்டனின்
சொற்படிநான் பாக்கு போடுவதை
நிறுத்திவிட்டேன்.
அப்போது குருதேவருக்கு இருபத்துமூன்று வயது
நிறைவு பெறும் காலம். காமார்புகூரில் சில
மாதங்கள் தங்கியதில் அவர் ஏறக்குறைய பழைய
நிலைமைக்கு வந்துவிட்டார். அன்னை காளியிடம்
அற்புதமான காட்சியைப்பலமுறை பெற்றதால்
தான் அவர் இப்போது சஞ்சலமின்றி சாந்தமாகக்
காணப் பட்டிருக்க வேண்டும். இந்த நாட்களில்
நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்து அவரது
உறவினர்களிடமிருந்து அறிந்ததிலிருந்து தான்
நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோம். அதை
இப்போது கூறுகிறோம்.
அந்த நாட்களில் குருதேவர் பகலிலும் இரவிலும்
அதிகநேரம் காமார்புகூருக்கு மேற்கிலும்
வடகிழக்கிலும் இருந்த பூதிர்கால், பூதிமொரால்
என்ற மயானங்களில் தன்னந்தனியாகக்
கழித்தார். இச்சமயம் அவரிடம் இதுவரை
கண்டிராத அபூர்வமான சக்தி இருப்பதை
உறவினர்கள் அறிந்தனர். மயானங்களில்வாழும்
நரிகளுக்கும், உறையும் உபதேவதைகளுக்கும்
அவர் அவ்வப்போது பலி கொடுப்பதுண்டு. புதிய
பானை ஒன்றில் இனிப்புப் பண்டங்களை
எடுத்துக்கொண்டு அவர் அந்த
மயானங்களுக்குச் செல்வார். உடனே நரிகள்
கூட்டங்கூட்டமாக நாலா பக்கங்களிலிருந்தும்
வந்து அவற்றை உண்ணும். உபதேவதைகளுக்கு
உணவு ப் பண்டங்களைப் படைக்கும் போது
அந்தப்பண்டங்கள் வைத்திருக்கின்ற பானையும்
அப்படியே காற்றில் மிதந்து ஆகாயத்தில் மறைந்து
விடுமாம்! அவர் அடிக்கடி இந்த
உபதேவதைகளைக் கண்டதும் உண்டு.
சில நாட்கள் குருதேவர் நள்ளிரவுக்குப் பின்னும்
வீடு திரும்பாதிருப்பார். அப்போது ராமேசுவரர்
மயானத்திற்குச் சென்று கூப்பிடுவார். உடனே
குருதேவர் இதோ வந்து விட்டேன் அண்ணா, நீ
இன்னும் முன்னால் வந்து விடாதே!
உபதேவதைகள் உனக்குத்துன்பம்
விளைவிக்கக்கூடும். என்று உரக்கக்கூவி
எச்சரிப்பார். இந்த நாட்களில் அவர் பூதிர் கால்
அருகிலுள்ள மயானத்தில் தம் கைகளால் ஒரு
வில்வச் செடியை நட்டார். அந்த மயானத்தின்
நடுவில் நின்ற அரசமரத்தின் கீழ் நீண்டநேரம்
அமர்ந்து ஜப , தியானங்களில் ஈடுபடுவதும்
உண்டு. அவருக்குக் கிடைத்த சில மேலான
இறைக்காட்சிகளாலும் அனுபவங்களாலும்,
அன்னையின் காட்சிக்காக முன்பு அவர் ஏங்கித்
தவித்த நிலை இப்போது நீங்கிற்று. வாளும்
மனிதத் தலையும் ஏந்தி நிற்பவளும் வர அபய
முத்திரைகளைத் தாங்கியவளும்,
சாதகர்களுக்கு அருள் பாலிப்பவளும்
சின்மயியுமான உலக அன்னையை இப்போது
அவர் எந்நேரமும் கண்டார் என்பதை
இந்தக்காலகட்டத்தில் அவரது
வாழ்க்கையைக்கவனிக்கும் போது அறிய
முடிகிறது. அவரது கேள்விகளுக்கும் அன்னை
காளி உடனுக்குடன் பதில் தந்தாள். அதற்கேற்ப
தமது வாழ்ககை ் யை அமைத்துக்கொண்டார்
அவர், இனி இடையீடின்றி அன்னையின்
தொடர்ந்த காட்சி தமக்குக் கிடைக்கும் என்ற
உறுதி இப்போதிலிருந்து அவரிடம் நிலைபெற்றது
என்று தோன்றுகிறது.
எதிர்காலமறியும் ஆற்றல் இக்காலத்தில்
குருதேவரின் வாழ்க்கையில்
வெளிப்படுவதைக்காண முடிகிறது. ஹிருதயரும்,
காமார்புகூரையும் ஜெயராம்பாடியையும் சேர்ந்த
பலரும் இதனை உறுதிப்படுத்தினர். குருதேவரும்
அவ்வப்போது இது பற்றி சூசகமாகக்கூறியது
உண்டு.
குருதேவரின் சற்றே அமைதியான போக்கும்
செயல்களும் சந்திராவுக்கும் பிறருக்கும் சிறிது
நம்பிக்கையை ஊட்டியது. தெய்வாதீனமாக
அவரது பைத்தியம் தெளிந்து விட்டது என்று
அவர்கள் ஆறுதல் அடைந்தனர். அவர் முன்பு
போல் இப்போது ஏங்கி அழுவதில்லை.
வேளாவேளைக்கு உணவு உட்கொள்கிறார்.
எல்லாச் செயல்களிலும் சாதாரண
மக்களைப்போல் நடந்து கொள்கிறார்.
இவையனைத்தும் அவர்களுக்குப் பெரிதும்
நிம்மதியை அளித்தது. எப்போதும்
இறைவழிபாட்டில் ஈடுபடுவது மயானத்தில்
அலைந்து திரிவது, சிலவேளைகளில்
உடைகளின்றி பூஜை, தியானங்களில் ஈடுபடுவது
யாருடைய குறுக்கடு ீ களையும்
பொருட்படுத்தாதது போன்ற சில செயல்கள்
அசாதாரணமானவையாக இருந்தாலும்,
பொதுவாக அவர் சிறுவயதிலிருந்தே இவ்வாறு
தான் நடந்து கொள்வார் என்ற காரணத்தால்
இவற்றையாரும் பெரிதுபடுத்தவில்லை. எனினும்
உலகியல் விஷயங்களில் சிறிதும் ஈடுபாடின்றி
அவர் முற்றிலும் ஒதுங்கியிருப்பதும் எப்போதும்
சிந்தனையில் ஆழ்ந்திருப்பதும் அவரது
தாயையும் உறவினர்களையும் கவலையுறச்
செய்தன. இந்த நிலை மாறி உலகியல்
விஷயங்களில் கவனம் ஏற்பட்டாலன்றி அவர்
முற்றிலும் குணமடைந்து விட்டதாகக் கருத
முடியாதென்று அவர்கள் எண்ணினர். எப்போது
வேண்டுமானாலும் அவர் மீண்டும்
பாதிக்கப்படலாம். அவரை உலகியலுக்குத் திருப்ப
ஒரே வழி திருமணம் தான் என்று அவரது தாயும்
தமையனும் முடிவு செய்தனர். பண்புள்ள நல்ல
மனைவியின் மீது அன்பு உண்டாகுமானால்
அவரது மனம் வேறு எதனையும் நாடாமல்
உலகியல் வாழ்க்கையில் ஆழ்ந்து ஈடுபடும் என்பது
அவர்களின் எண்ணமாக இருந்தது.
திருமணத்தைப் பற்றி குருதேவர் அறிந்தால்
மறுப்பு தெரிவிக்கக்கூடும் என்று சந்திராவும்
ராமேசுவரரும் மணப்பெண் தேடும் முயற்சியில்
ரகசியமாக ஈடுபட்டனர். குருதேவர் இதனை
எப்படியோ அறிந்து கொண்டார். அதிசயமாக
அவர் அதற்கு எவ்வித மறுப்பும்
தெரிவிக்கவில்லை. வீட்டில் விழாவோ விசேஷமோ
நடந்தால் குழந்தைகள் எப்படி குதூகலிக்குமோ
அவ்வாறே திருமணம் பற்றிக்கேள்விப்பட்ட
குருதேவரும் மகிழ்ந்தார்.
JOIN SRI RAMAKRISHNA WHATSAPP
GROUP

https://wa.me/919789374109?
text=Send_whatsapp_Group_Link

You might also like