You are on page 1of 12

ஸ்ரரீ ாமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை

வரலாறு
பாகம்-46
-

ஸ்ரரீ ாமரிடம் ஜடாதாரிக்கு இருந்த ஆழ்ந்த


அன்பு, அளவற்ற பக்தி ஆகியவற்றைப் பற்றி
அடிக்கடி குருதேவர் கூறுவதுண்டு.
பாலராமன் திருவுருவத்தை ஜடாதாரி மிகவும்
நேசித்தார்.
தட்சிணேசுவரத்திற்கு வருமுன்னரே அவர்
நீண்ட நாட்களாக உள்ளார்ந்த பக்தியுடன்
அந்த விக்கிரகத்தை வழிபட்டு வந்தார்.
பாலராமனிடம் கொண்ட தூய
அன்பு அவர் மனத்தை முழுவதுமாக
நிறைத்து நின்றன.
ஸ்ரரீ ாமசந்திரர் பேரொளி வீசித் திகழும்
குழந்தை வடிவில் அவர்முன் தோன்றி அவரது
பக்தி நிறைந்தவழிபாட்டை
ஏற்றுக்கொண்டதைக் காணும் பேற்றிணை
குருதேவரிடம் வரும் முன்னரே அவர்
பெற்றிருந்தார்.
ஆரம்பத்தில் அவ்வப்போது சிறிதுநேரம்
மட்டுமே தோன்றிய அந்தக்காட்சி சாதனை
தீவிரமடைந்த போது
சாதாரணப்பொருட்களைப் பார்ப்பது போன்ற
தெளிவுடன் நீண்ட நேரம் தெரிந்தது.
இவ்வாறு ஒரு வகையில் ராம்லாலா
ஜடாதாரியின் இணைபிரியா நண்பனாகி
விட்டதாகவே கூறவேண்டும் எதனைப்
பூஜித்ததால் இத்தைகய
பெரும்பேறும் பேரின்பமும் கைகூடியதோ,
அந்த ராம்லாலா விக்கிரகத்திற்கு
நாள்தோறும் பூஜை செய்தபடியே
இந்தியாவின் பற்பல புண்ணியத்
தலங்களுக்கு யாத்திரை சென்றார்.
ஜடாதாரி வழியில்
தட்சிணேசுவரக்கோயிலுக்கும் வந்தார்.
ஜடாதாரி ஏதோ ஓர் உலோக விக்கிரகத்திற்கு
பக்தியுடன் பூஜையும் வழிபாடுகளும் செய்து
கொண்டிருப்பதை மட்டுமே மக்கள் கண்டனர்.
அதற்கு மேல் அவர்களுக்கு வேறொன்றும்
தெரியாது.
பாலராமனின் திருக்காட்சி தமக்குக்
கிடைப்பதை அவர் வேறு யாருக்கும்
சொல்லவில்லை. ஆன்மீகப்பேருலகின்
ஈடிணையற்ற சக்கரவர்த்தியாக திகழ்ந்த
குருதேவர், முதல் சந்திப்பிலேயே
ஜடாதாரியின் பாலராமனின் விக்கிரகத்திற்கு
நடைபெறுகின்ற பூஜை என்ற திரையினுள்
நடக்கின்ற அற்புத திருநாடகத்தைப்புரிந்து
கொண்டுவிட்டார்.
அதனால் ஜடாதாரியிடம் அளவற்ற
மதிப்புக்கொண்டு அவர் ராம்லாலாவுக்குப்
பூஜை செய்வதற்குத் தேவையான
பொருட்களை எல்லாம் பெருமகிழ்ச்சியுடன்
கொடுத்தார்.
நாள்தோறும் ஜடாதாரியுடன் இருந்து அவர்
ராம்லாலாவுக்கு ச் செய்யும் பூஜையை
பக்தியுடன் கண்டு களித்து வந்தார்.
ஜடாதாரியைப்போல ஸ்ரீராமரின்
திருக்காட்சியைப் பெற்றதாலேயே
குருதேவரும் இத்தனை ஈடுபாட்டுடன்
ஜடாதாரியின் பூஜையில் கலந்து கொண்டார்.
இவ்வாறு குருதேவருக்கும் ஜடாதாரிக்கும்
இடையில் நெருக்கமான புனிதமானதோர்,
உறவு தோன்றி வளர்ந்தது.
இந்த நாட்களில் குருதேவர் தம்மை ஒர
பெண்ணாக பாவித்து, சிலகாலம்
சாதனைகளில் கழித்தார். என்பதை
ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம்.
உள்ளத்தில் எழுந்த தீவிரமான ஆர்வத்தால்
தூண்டப்பட்ட அவர் அன்னையின்
இணைபிரியாத்தோழியாகத் தம்மை எண்ணி,
பெண்வேடம் தரிப்பது மலர் மாலைகள்
தொடுத்து அன்னைக்கு அணிவிப்பது, மதுர்
பாபுவிடம் கூறி விதவிதமான ஆபரணங்கள்
செய்து அன்னைக்கு அணிவிப்பது,
அன்னையின் திருமேனியைக்குளிர்விக்கச்
சாமரம் வீசுவது, அன்னையை
மகிழ்விப்பதற்காக அவள் முன்
ஆடிப்பாடுவது என்று ஒரு பெண்ணாக
வாழ்ந்தார்.

ஸ்ரரீ ாமரிடம் குருதேவருக்கு இருந்த பக்தி


ஜடாதாரியின் தொடர்பினால் வளர்ந்து
பெருகியது. அவரும் ராம்லாலா
விக்கிரகத்தில் பாலராமனைக் கண்கூடாகக்
காணலானார்.
தம்மைப்பெண்ணாக பாவித்து வந்த
குருதேவரின் உள்ளம் அந்த தெய்வக்
குழந்தையின் பால் ஒரு தாயின்
வாத்சல்யத்தால் நிரம்பியது.
தாய் தன் குழந்தையிடம் எப்படிப் பாசமும்
பற்றும் கொள்வானோ, அவ்வாறே
குருதேவரும் அந்த தெய்வக்குழந்தையை
நேசிக்கலானார். ராம்லாலா விக்கிரகத்தின்
முன் அமர்ந்து நேரம் போவது தெரியாமல்
அந்த திவ்ய மூர்த்தியின் தெய்வீக
அழகைப்பருகிக் கொண்டிருப்பார்.
அந்தப்பிள்ளை ராமன் தான் குருதேவரிடம்
எத்தனையெத்தனை விதமாக லீலைகள்
செய்தான்! மற்ற எல்லாவற்றையும் விட
அவனது இனிய பிள்ளைக்குறும்புகளே நாள்
முழுவதும் தம்மை அவன் அருகிலேயே
இருக்கச்செய்தது என்று குருதேவர்
எங்களிடம் கூறினார்.
குருதேவரை எதிர்நோக்கி அவன்
காத்திருப்பான்!
அவர் செல்லத் தாமதமாகிவிட்டால்
தவிப்பான்! எவ்வளவு தடுத்தாலும் கேட்காமல்
அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின்
தொடர்வான்.
குருதேவரின் விடாமுயற்சியுடைய மனம்
எந்தவொரு வேலையையும் பாதியில்
விடுவதில்லை. வெளியுலகச் செயல்களில்
மட்டுமின்றி உள்ளுலகிலும் இந்த
இயல்புடையதாகவே அவரது மனம் இருந்தது.
உள்ளத்தில் ஏதாவது எண்ணம் எழுந்து
விட்டால் அதன் எல்லையைக் காணாமல் விட
மாட்டார்.அவர்.
-
ஜடாதாரி வந்திருந்த போது தெய்வீக
உணர்வின் தூண்டுதலால் குருதேவரிடம்
தாய்மை உணர்வு வெளிப்பட்டு
ஸ்ரரீ ாமபிரானைக் குழந்தையாக க் கண்டு
அவரிடம் வாத்சல்ய பாவனை கொண்டது
பற்றி ஏற்கனவே கூறினோம்.
குலதெய்வமான ரகுவீரருக்கு முறைப்படி
பூஜைகள் செய்வதற்காக குருதேவர்
ஏற்கனவே ராம மந்திர தீட்சை பெற்றிருந்த
போதிலும், அந்த வேளையில் ஸ்ரரீ ாமனை
எஜமானனாகக் கருதியே அவரால் வழிபட
முடிந்தது.
இப்போது வாத்சல்ய நிலையில் ஈடுபாடு
கொண்டிருந்ததால் இந்தப் புதிய முறையில்
ஒரு குருவிடமிருந்து சாஸ்திர விதிகளின் படி
மந்திரோபதேசம் பெற்று அதன் மூலம்
ஸ்ரரீ ாமனை உணர விரும்பினார். வாத்சல்ய
நிலையில் முழுப்பயிற்சி பெற்ற ஜடாதாரி
குருதேவரின் ஆர்வத்தை அறிந்து தமது
இஷ்டமந்திரத்தை குருதேவருக்கு
உபதேசித்தார்.
ஜடாதாரி காட்டிய வழியில் சாதனையில்
மூழ்கி ஒரு சில நாட்களிலேயே குருதேவர்
பாலராமனின் காட்சியைப் பெற்றார். அந்த
தெய்வக்குழந்தையின் திருக்காட்சியைத்
தொடர்ந்து பெற்று அதில் லயித்தார்.
இறுதியில் அந்த ராமனை எங்கும்
காண்கின்ற பேற்றையும் பெற்றார்.
அதாவது ஸ்ரீராமன் தசதரனின் மைந்தன்
மட்டுமல்லர்.அவரே ஜீவராசிகள்
அனைத்திலும் உயிராக உறைகிறார்.
அண்டமாக வெளிப்பட்டுத்தோன்றுவதும்
அதனை உள்நின்று இயக்குவதும் அவரே.
குணங்களைக் கடந்து, மாயையைக் கடந்து
நிலைத்திருப்பவரும் அவரே.
குருதேவருக்கு ராம மந்திரத்தை
உபதேசித்ததுடன்,ஜடாதாரி தாம் நீண்ட
நாட்கள் சேவை செய்து வந்த ராம்லாலா
விக்கிரகத்தையும் அவருக்கு
அளித்துச்சென்றார்.
உயிர் துடிப்புடன் இருந்த அந்த ராம்லாலா தான்
இனிமேல் குருதேவருடன் இருக்கப்போவதாக
ஜடாதாரியிடம் கூறிவிட்டான்.குருதேவரிடமும்
ஜடாதாரியிடமும் ராம்லாலா செய்த
திருவிளையாடல்களை வேறோர் இடத்தில்
விவரித்திருக்கிறோம்.
குருதேவர் வாத்சல்ய பாவனை
சாதனைகளில் ஆழ்ந்து ஈடுபட்டு அதில்
முழுவெற்றி பெற்ற காலத்தில் பைரவி
பிராம்மணி தட்சிணேசுவரத்தில் தான்
தங்கியிருந்தார்.
பைரவி வைணவ நூல்களில் கூறப் பட்ட
ஐவகை பக்தி நெறிகளிலும் மிகவும் உயர்ந்த
அனுபவ ஞானம் பெற்றிருந்தார் என்பதை
குருதேவர் கூறியுள்ளார்.
வாத்சல்ய, மதுர பாவனை சாதனைகளில்
ஈடுபட்டிருந்த போது பைரவியிடமிருந்து
ஏதேனும் உதவி பெற்றாரா என்பது பற்றி
தெளிவாக எதுவும் சொல்லவில்லை.
ஆனால் தாயன்பு மேலிட பைரவி குருதேவரை
பாலகோபாலனாக பாவித்து சேவைகள்
செய்தது பற்றி ஹிருதயரும் குருதேவரும்
கூறியிருக்கின்றனர்.
எனவே அவரது வாத்சல்ய மற்றும் மதுர
பாவனை சாதனைகளின் போது
பைரவியிடமிருந்து அவர் ஏதேனும் உதவி
பெற்றிருக்கவேண்டும். என்றே தோன்றுகிறது.
அது குறிப்பிடத்தக்க உதவிதானா என்பது
ஐயத்திற்குரியது.

-
தொடரும்..

JOIN SRI RAMAKRISHNA WHATSAPP


GROUP

https://wa.me/919789374109?
text=Send_whatsapp_Group_Link

You might also like