You are on page 1of 15

ஸ்ரரீ ாமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை

வரலாறு
பாகம்-58
-
குருதேவரின் சொற்களால் ஹிருதயர் ஓரளவு மன
அமைதிபெற்றார். ஆயினும் கோயில் பணிகள்
அவருக்கு ஏனோ முன்னைப்போல் இன்பம்
அளிப்பவையாக இல்லை.
புதுமையாக ஏதாவது செய்து அமர்க்களப்படுத்த
விழைந்தது அவர் உள்ளம்1868-ஆம் ஆண்டில்
பின்பனிக்காலம் வந்தது.
அந்த ஆண்டு தான் வீட்டில் துர்க்கா பூஜை நடத்த
ஹிருதயர் முடிவு செய்தார். சில காலத்திற்கு
முன்பு தான் அவரது ஒன்றுவிட்ட மூத்த
சகோதரரான கங்கா நாராயணன்
காலமாகியிருந்தார்.
மதுர்பாபுவின் ஜமீனில் வாடகை வசூல் செய்யும்
பணியில் ராகவர் நியமிக்கப் பட்டிருந்தார். அதன்
மூலம் அவருக்கு ஓரளவுக்கு நல்ல வருவாய்
வந்து கொண்டிருந்தது.
காலம் மாறி செல்வ வளம் ஏற்பட்ட போது வீட்டில்
புதிய வழிபாடு அறை ஒன்று கட்டப்பட்டது. வீட்டில்
ஒரு முறை துர்க்கா பூஜை நடத்த வேண்டும்
என்ற ஆவல் கங்கா நாராயணனுக்கு இருந்தது.
அவரது ஆவல் நிறைவேறவில்லை.
அதைக்கேள்விப்பட்ட ஹிருதயர் . அதனை
நிறைவேற்ற முன்வந்தார். நல்ல செயல் திறன்
கொண்டவர் ஹிருதயர் என்பதை அறிந்திருந்த
குருதேவர், துர்க்கா பூஜை நடத்துவதால் அவர்
மன அமைதி பெறுவார் என்று கருதி தமது
இசைவினை அளித்தார். வேண்டிய
பொருளுதவியை மதுர்பாபு செய்தார்.
பூஜை நாட்களில் குருதேவர் தம்முடன்
இருக்கவேண்டும் என்று ஹிருதயர் விரும்பினார்.
ஆனால் குருதேவர் தம் வீட்டுப் பூஜையில் தான்
கலந்து கொள்ள வேண்டுமென்று மதுர்பாபு
விரும்பினார். ஹிருதயர் மனவருத்தத்துடன்
தனியாக ஊருக்குப்புறப்பட்டார்.
புறப்படும் வேளையில் குருதேவர் அவரைத்தேற்றி
, நீ ஏன் வருத்தப்படுகிறாய்? தினமும் நான்
சூட்சும உடலில் வந்து உன் பூஜையைப்
பார்ப்பேன்,உன்னைத் தவிர வேறு யாரும்
என்னைக் காண முடியாது. தகுந்த அந்தணர்
ஒருவரைப்பூஜைக்கு உதவியாக
வைத்துக்கொண்டு உன் வசதிக்கேற்ப பூஜை
செய், முழு உபவாசம் இருக்காதே, சிறிது பால்,
கங்கை நீர், கற்கண்டு, பானகம் அருந்திக்கொள்.
அன்னை உன் வழிபாட்டை ஏற்றுக்கொள்வாள்
என்று கூறினார்.
அது மட்டுமன்றி துர்க்கையின் திருவுருவத்தை
யார் செய்வது, பூஜை உதவிக்கு யாரை
நியமிப்பது, மற்ற ஆயத்தங்கள் எவ்வாறு
செய்வது போன்ற அனைத்தையும்
விளக்கிக்கூறினார். ஹிருதயரும் மகிழ்ச்சியுடன்
ஊருக்குச்சென்றார்.
வீடு சென்றபின் ஹிருதயர் குருதேவரின்
அறிவுரைப்படி அனைத்தையும் செய்தார்.ஆறாம்
நாள் அன்னையை விழிப்புணர்த்தி திருவுருவில்
எழுந்தருளச் செய்தல், போன்ற சடங்குகளை
எல்லாம் செய்த பின்னர் பூஜையில் ஈடுபட்டார்.
ஏழாம் நாள் வழிபாடு நிறைவுற்று தீபாராதனை
நடந்து கொண்டிருந்தது. அப்போது குருதேவர்
ஒளிவீசுகின்றதிருமேனியுடன் பரவச நிலையில்
துர்க்கை திருவுருவின் அருகில் நிற்பதை
ஹிருதயர் கண்டார்.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தீபாராதனையின்
போதும், சந்தி பூஜை வேளையிலும் குருதேவர்
காட்சி அளித்து, தம்மை ஆனந்தத்தில்
ஆழ்த்தியதாக ஹிருதயர் கூறினார்.
சில நாட்கள் கழித்து ஹிருதயர்
தட்சிணேசுவரத்திற்கு வந்து அனைத்து
விவரங்களையும் குருதேவரிடம்
கூறினார்.அப்போது குருதேவர் சொன்னார்.
தீபாராதனை வேளைகளிலம் சந்திபூஜையின்
போதும் உன் வழிபாட்டைக் காண வேண்டுமென்ற
பேராவல் என்னுள் எழுந்தது.
உடனே நான் பரவச நிலை அடைந்து விட்டேன்.
அப்போது நான் ஒளியுடலுடன் ஓர்
ஒளிப்பாதையில் சென்று உன் வழிபாட்டு
அறையை அடைந்ததாக எனக்குத்தோன்றிற்று.
முதல் ஆண்டு பூஜை முடிந்த சில நாட்களில்
ஹிருதயர் இரண்டாம் திருமணம் செய்து
கொண்டார். அதற்குப் பின் அவர்
குருதேவருக்குப் பணிவிடைகள் செய்வதிலும்,
தட்சிணேசுவர ஆலயப்பணி களிலும் மீண்டும்
தன் மனத்தைச் செலுத்தினார்.
-
உறவினர்களின் பிரிவு

அட்சயனைப் பற்றி முன்னரே கூறியிருக்கிறொம்.
தோதாபுரி தட்சிணேசுவரத்திற்கு வந்த சில
காலத்திற்குப் பின்னர் 1865-இல் தட்சிணேசுவர
ராதாகோவிந்தர் ஆலயத்தின் பூஜாரியாக
அட்சயன் நியமிக்கப்பட்டான். அப்போது அவனது
வயது பதினேழு.
அட்சயன் பிறந்தபோதே அவனது தாய்
இறந்துவிட்டதால் அனைவரின் சிறப்பான
அன்பையும் பெற்றான்.
1852-இல் குருதேவர் முதன்முறை கல்கத்தா
வந்தபோது அட்சயனுக்கு மூன்று அல்லது நான்கு
வயது இருக்கலாம். கல்கத்தா வருமுன்னர்,
அவனை மடியில் வைத்துச் சீராட்டி மிகுந்த
அன்புடனும் பரிவுடனும் வளர்த்திருந்தார்
குருதேவர். அட்சயனின் தந்தை ராம்குமார் ஒரு
முறை கூட அவனை வாரியணைத்து மடியில்
வைத்துக் கொஞ்சியதில்லை.
இவன் மீது பாசம் வைத்து மாயையில்மேலும்
சிக்கிக் கொள்வதில் பயனில்லை.ஏனெனில்
இவன் நீண்ட நாட்கள் உயிர்வாழமாட்டான் என்று
அதற்கான காரணம் சொன்னார் அவர்.
கல்கத்தாவிற்கு வந்தபின் குருதேவர் தம்மையும்
இவ்வுலகத்தையும் இவ்வுலகப் பொருட்கள்
அனைத்தையும் மறந்து சாதனையில் ஈடுபட்டார்.
அந்தவேளையில் குழந்தை அட்சயன் வளர்ந்து
இளமைப்பருவத்தைக் கடந்து வாலிபத்தில்
அடியெடுத்து வைத்து, ஓர் அழகிய
இளைஞனாகத் திகழ்ந்தான் உண்மையிலேயே
அட்சயன் மிகவும் அழகிய தோற்றம்
உடையவனாக இருந்தான் என்று குருதேவரும்
உறவினர்களும் சொல்வார்கள்.
அவனது நிறம் பொலிவுடன் இருந்தது போலவே
உடலும் கட்டுடலாக இருந்தது. சிவபெருமானே
உடல்கொண்டு உலவுவது போலத்தோன்றினான்
அவன்.
சிறு வயதிலிருந்தே அட்சயன் ஸ்ரீராமசந்திரர்
மீது மிகவும் பக்தி கொண்டிருந்தான்.
குலதெய்வமான –ரகுவீரருக்குப் பூஜை
செய்வதில் நாள்தோறும் நெடுநேரம்
ஈடுபட்டிருப்பான்.
ஆகவே தான் தட்சிணேசுவர ஆலயத்தில்
ராதாகோவிந்தர் பூஜை அவனுக்கு மிகவும்
விருப்பமான பணியாக அமைந்தது.
ராதாகோவிந்தரின் பூஜையில்
ஈடுபட்டிருக்கும்போது தன்னை மறந்து
தியானத்தில் மூழ்கிவிடுவான்.
பெரிய கூட்டம் வந்தாலும் கூட அவனுக்கு எதுவும்
தெரியாது.. இரண்டு மணி நேரம் கழித்து தான்
அவனுக்குச் சுயநினைவு திரும்பும்” என்று
குருதேவர் சொல்வார்
.பூஜை முடிந்த பின்னர் தினமும் பஞ்சவடிக்குச்
சென்று அங்கு நீண்டநேரம் சிவ வழிபாட்டில்
ஈடுபடுவான்.
பின்னர் தானே சமைத்து உண்பான். அதன்
பின்னர் ஸ்ரீமத்பாகவதம் படிப்பான். என்று
ஹிருதயர்கூறினார்.
புதியதொரு பக்தி வேகத்தில்
நியாசம்,பிராணாயாமம் ஆகியவற்றில் மிகவும்
தீவிரமாக ஈடுபட்டதால் அவனது தொண்டை
அண்ணப் பகுதிகள் வீங்கி, அவ்வப்போது ரத்தக்
கசிவு ஏற்பட்டது. அவனது பக்தியும்
இறையன்புமே அவனை குருதேவரின் விசேஷ
அன்பிற்குப் பாத்திமாக்கி இருந்தன.
ஒன்றன் பின் ஒன்றாக ஆண்டுகள் பல கழிந்தன.
1868-ஆம் ஆண்டின் இறுதிப் பகுதி வந்தது.
அட்சயனின் இத்தகைய போக்கினை அறிந்த
அவனது சித்தப்பா ராமேசுவரர் அவனுக்குத்
திருமணம் செய்து வைக்க எண்ணி மணப்பெண்
தேடலானார். காமார்பகூருக்கு அருகிலுள்ள
குசேகோல் என்ற இடத்தில் தகுந்த
மணப்பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். பின்னர்
திருமணத்திற்காக அட்சயனை அழைத்துச்
செல்ல தட்சிணேசுவரத்திற்கு வந்தார்.
அது சித்திரை மாதம். யாத்திரைக்கு உந்த மாதம்
உகந்ததல்ல என்று சிலர் கூறியபோது ராமேசுவரர்
அதனை ஏற்க மறுத்து, வெளியூரிலிருந்து பிறந்த
ஊருக்குச் செல்லும்போது இதெல்லாம் பார்க்க
வேண்டிய அவசியம் இல்லையென்று
கூறிவிட்டார்.
அடுத்தமாதம், அதாவது வைகாசி மாதத்தில்
அட்சயனின் திருமணம் நடைபெற்றது.
திருமணம் நடந்த சில மாதங்களுக்குப் பின்
அட்சயன் தன் மாமனார் வீட்டிற்குச்
சென்றிருந்தபோது கடுமையான நோயுற்றான்.
ராமேசுவரர் அவனைக் காமார்புகூருக்கு
அழைத்துவந்து சிகிச்சை அளித்தார். நோய்
குணமான பின்னர் அவன் தட்சிணேசுவரத்திற்கு
வந்தான். அவனது உடல்நலம் தேறியது.ஒரு நாள்
திடீரென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டான்.
சாதாரணக் காய்ச்சல் தான், விரைவில்
குணமாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறினர்.
அட்சயன் தன் மாமனார் வீட்டில் நோயுற்றிருப்பதை
அறிந்த போது குருதேவர் ஹிருதயரிடம்
”ஹிருதூ” சகுனங்கள் மோசமாக உள்ளன.
அவன் ராட்சச கணத்தைச் சேர்ந்தவளைத்
திருமணம் செய்துள்ளான்.
என்னவோ அவன் இறந்து விடுவான் என்று தான்
எனக்குத்தோன்றுகிறது என்று சொன்னதாக
ஹிருதயர் கூறினார்.
இப்போது மூன்று நான்கு நாட்களாக அட்சயன்
காய்ச்சல் தணியாதது கண்ட குருதேவர்
ஹிருதயரை அழைத்து,ஹிருதூ” இது என்ன
நோயென்று மருத்துவர்களால் கண்டுபிடிக்க
இயலவில்லை. அவனது ஜீரமும்
தணிந்தபாடில்லை.
யாராவது நல்ல மருத்துவரை அழைத்துவந்து
அவனுக்குச் சிகிச்சை செய்ய ஏற்பாடு
செய்.ஆனால் எல்லாம் வெறும்
மனத்திருப்திக்குத்தான் , அவன்
பிழைக்கமாட்டான் என்று சொன்னார்.
ஹிருதயரிடம் கூறினார்,
குருதேவர் அவ்வாறு சொன்னதும் நான்
அவரிடம், மாமா” அப்படிச்
சொல்லாதீர்கள்.இத்தகைய அவசொற்கள்
உங்கள் வாயிலிருந்து வர வேண்டாம், என்று
சொன்னேன்.
அதற்கு அவர் வேண்டுமென்றா
இப்படிச்சொல்கிறேன்.அன்னை
அறிவுறுத்துவதை நான் பேசுகிறேன். அவ்வளவு
தான். நான் விரும்பாவிட்டாலும் அதையே பேச
வெண்டும்.அட்சயன் இறக்கவேண்டும் என்பது
என் ஆசையா, என்ன? என்றார்.
குருதேவரின் சொற்களைக்கேட்டு அதிர்ச்சியுற்ற
ஹிருதயர் சிறந்த மருத்துவர்களை அழைத்து
வந்து அட்சயனை குணப்படுத்த முடிந்தவரை
முயன்றார்.
ஆனால் நோய் முற்றிக்கொண்டே சென்றது.
ஏறக்குறைய ஒரு மாதம் அட்சயன் நோயால்
துன்புற்றான்.
அவனது கடைசி நேரம் நெருங்கிக்
கொண்டிருந்தபோது குருதேவர் அவன்
படுக்கையருகே சென்று, அட்சயா, சொல். கங்கா,
நாராயணா, ஓம் ராம் என்று சொல் என்றார்.
குருதேவர் கூறியதை மூன்று முறை
சொல்லியபடியே உயிர் நீத்தான் அட்சயன்.
அவனது பிரிவைத் தாங்காமல் தான் அழுத
அளவுக்கு குருதேவர் பரவச நிலையில்
சிரித்ததாக ஹிருதயர் கூறினார்.
பிரியமான சொந்த மகன் போன்ற அட்சயனின்
மறைவை ஓர் உயர்ந்த நிலையிலிருந்து பார்த்த
குருதேவர் சிரித்தார்.
எனினும் அவருக்கும் ஒரு பெரும் அதிர்ச்சி
ஏற்படவில்லை. என்று சொல்லமுடியாது.
காலம் பல கடந்த பின்னரும் அவர் பலமறை
எங்களிடம் இதைப் பற்றிப்பேசியதுண்டு.பரவச
நிலையில் தாம் இருந்ததால் மரணத்தை ஒரு
நிலைமாற்றம் என்று கருதியபோதிலும், சாதாரண
நிலைக்கு வந்தபோது அட்சயனின் மறைவு
தம்மை வெகுவாகப் பாதித்தாகவும் அதனால்
தாம் மிகவும் வருந்தியதாகவும் குறிப்பிட்டார்
குருதேவர்.
கோயிலின் அருகே இருந்த மதுர்பாபுவின் ஒரு
மாளிகையில் தான் அட்சயனின் மரணம்
நிகழ்ந்தது.குருதேவரும் அந்த மாளிகையில்
தான் வசித்து வந்தார். இந்த சோக
நிகழ்சச் ிக்குப் பின்னர் அவரால் அங்கு வசிக்க
முடியாமல் போயிற்று.
-
தொடரும்..
-

JOIN SRI RAMAKRISHNA WHATSAPP


GROUP
https://wa.me/919789374109?
text=Send_whatsapp_Group_Link

You might also like