You are on page 1of 21

ஸ்ரரீ ாமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை

வரலாறு
பாகம்-47
-

மதுரபாவனை, ஒரு விளக்கம்


சாதகர் அல்லாதவர்களால் சாதகர்களின்
வாழ்வைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம்.
ஏனெனில் சாதனை என்பது நுண்ணிய
ஆன்மீக உலகைச் சார்ந்தது. அங்கு
புலன்களைக் கவர்ந்திழுக்கும் பொருட்கள்
இல்லை, வெளியுலகப் பொருட்களையும்
மனிதர்களையும் சார்ந்த நிகழ்ச்சித்
தொடர்கள் இல்லை.விருப்பு வெறுப்புகளின்
வேகத்தால் அமைதியிழந்து சொந்த
இன்பங்களுக்காக மற்றவர்களைப்
பின்னுக்குத் தள்ளி முன்னேற முயற்சி
செய்கின்ற மனம் இல்லை. புலன்
இன்பங்களில் மூழ்கிய உலகம் எதை வீரம்
மிக்கது என்றும் பெருமை வாய்ந்தது என்றும்
போற்றுகிறதோ அந்த மூர்க்கத்தனமான
வெறி சிறிதும் இல்லை. அங்கு
இருப்பதெல்லாம் சாதகனின் மனமும் அதில்
அடங்கியுள்ள பிறவிதோறும் தொடர்ந்து
வருகின்ற எண்ணற்ற சம்ஸ்காரங்களின்
பிரவாகமுமே.அங்கே இருப்பதெல்லாம்
புறவுலக வாழ்க்கைப்போராட்டத்தின்
காரணமாக எழுகின்ற உயர்ந்த சிந்தனையும்
லட்சிய நாட்டமும், அந்த லட்சியத்தை
அடையத் தடையாக இருக்கும்
சம்ஸ்காரங்களுடன் ஒருமைப்பட்ட
மனத்துடன் போரிடும் திட
சங்கல்பமுமே.அங்கே சாதகன் மனத்தை
வெளியுலகப்பொருட்களிலிருந்து விடுவித்து,
அகமுகப்படுத்தி, திட முயற்சியுடன்
தன்னுள்ளேயே தொடர்ந்து ஆழ
மூழ்குகிறான். அக உலகின் ஆழ்தளங்களை
அடைந்து, மிக நுட்பமான உணர்வு நிலைகளை
அடைகிறான். இறுதியில் தான் அதாவது
தனது தனித்துவம் இருப்பதற்குக்
காரணமான நான்- உணர்வின் மிக ஆழ்ந்த
பகுதியை அடைகிறான். அதுவே அசப்தம்,
அஸ்பர்சம், அரூபம், அவ்யயம்,
ஏகமேவாத்விதீயம், அது ஒலியில்லை,
தொடுஉணர்ச்சியில்லை, உருவமில்லை, பிரிக்க
முடியாதது, ஒன்றேயானது, இரண்டற்றது.
அங்குதான் நான்- உணர்வு உட்பட எல்லா
சிந்தனைகளும் என்றென்றும் நிலைபெற்று
இருக்கின்றன. அங்கிருந்து தான் அவை
உதயமாகின்றன.
அந்த இடத்தை அடைகின்ற சாதகனின்
மனம் அதிலேயே ஒன்றி சமாதியில்
லயித்துவிடுகிறது. மனத்திலுள்ள
சம்ஸ்காரங்கள் மீண்டும் கிளர்ந்தெழுகின்ற
தன்மையை இழந்து, சங்கல்பம், சந்தேகம்,
போன்ற தான மனத்தின் பண்புகள் முற்றிலும்
அழிந்து போகும்வரை அந்த இரண்டற்ற
பொருளிலேயே நிலைத்துநிற்கிறது.பின்னர்
சமாதி நிலையிலிருந்து கீழிறங்கி சென்ற
பாதையிலேயே திரும்பி உலக
உணர்வைப்பெறுகிறது. இவ்வாறு சாதகனின்
மனம் சமாதி நிலையிலிருந்து உலக
உணர்விற்கும் உலக உணர்விலிருந்து சமாதி
நிலைக்குமாய் ப்போய்வருகிறது.
சில சாதகர்களின் மனம் இயல்பாகவே சமாதி
நிலையில் நிலைத்திருக்கிறது. மனித
சமுதாயத்தின் நலனுக்கான அவர்கள்
தங்கள் மனத்தை பலவந்தமாக ப்
புறவுலகுடன் இணைத்துக் கொள்கின்றனர்.
காலந்தோறும் வாழ்ந்து வருகின்ற
இத்தகைய மேலோர்களைப் பற்றிய குறிப்புகள்
சமய வரலாற்றில் ஏராளமாக உள்ளன.
குருதேவரும் இத்தகைய
வகுப்பைச்சேர்ந்தவர் என்பதை அவரது
சாதனைகளைப்பற்றிப் படிக்கின்ற போது
அறிந்து கொள்ளமுடிகிறது. இந்த நூலைப்
படிப்பவர்கள் மனத்தில் அத்தகைய
திடநம்பிக்கை ஏற்படாவிட்டால்,நூலாசிரியரின்
குறைபாடே அதற்குக் காரணம்.ஏனெனில்
குருதேவரே பல முறை எங்களிடம் நான்
வேண்டுமென்றே ஓரிரு சிறிய ஆசைகளைப்
பற்றிக்கொண்டு உங்கள் அனைவருக்காகவும்
மனத்தைக் கீழிறக்கி வைத்திருக்கிறேன்,
இரண்டற்ற பரம்பொருளுடன் ஐக்கியமாவதே
என் மனத்தின் இயல்பாகும், என்று
கூறியதுண்டு.
சமாதி நிலையில் அனுபவிக்கப்படும் அகண்ட
அத்வைத உண்மையைப் பண்டைய
ரிஷிகளுள் சிலர் சூன்யம் என்றும் வேறு சிலர்
பூர்ணம் என்றும் கூறியிருக்கிறார்கள்.
அனைவரும் குறிப்பிடுவது என்னவோ ஒரே
அனுபவத்தைத்தான். ஏனெனில்
எல்லாப்பொருட்களும் தோன்றுவதும்
லயிப்பதும் அந்த ஒன்றில் தான் என்றே
இருசாராரும் கூறுகின்றர். எதனை புத்தர்
எதுவுமற்ற சூன்யம்” என்று கூறினாரோ,
அதனையே சங்கரர் அனைத்துமான பூர்ணம்
என்று குறிப்பிட்டார். பிற்கால பௌத்த மத
ஆசாரியர்களின் கருத்துக்களை
ஒதுக்கிவிட்டு இந்த இருவரின்
கருத்துக்களையும் சிந்தித்தால் உறுதியாக
இந்த முடிவுக்குத்தான் நாம் வந்து சேர்வோம்.
சூன்யம், பூர்ணம், என்ற சொற்களால் சுட்டிக்
காட்டப்படும் அத்வைத நிலையையே
உபநிடதங்களும் வேதாந்தமும்
எண்ணங்களை கடந்த நிலை என்று
கூறுகின்றன.
ஏனெனில் அந்த நிலையில் முற்றிலுமாக
நிலைக்கும்போது, சாதகனின் மனம் சகுண
பிரம்மம் அல்லது இறைவனின் படைத்தல்,
காத்தல், அழித்தல் என்ற
திருவிளையாடல்களுக்கு உட்பட்ட எல்லா
உணர்வு நிலைகளின் எல்லையையும்
கடந்துஒருமையில் மூழ்கி விடுகின்றன.
எல்லைக்கு உட்பட்ட மனித மனம் ஆன்மீக
உலகில் நுழைந்து இறைவனிடம் நிலைத்த
தொடர்பு கொள்வதற்குரிய வழிகளான
சாந்தம்,தாஸ்யம், போன்றஐந்து பாவனைகள்
முதலிய அனைத்திலிருந்தும் அத்வைத
நிலை வேறுபட்டது. உலகிற்கு
அப்பாற்பட்டது.இவ்வுலகிலும் மறுவுலகிலும்
கிடைக்கின்ற எல்லா சுகபோகங்களையும்
துறந்து, தன் புனிதத்தின் வலிமையால்
தேவர்களை விட உயர்ந்த இடத்தைப்பெறும்
போது மட்டுமே மனிதன் இந்த அத்வைத
நிலையை அடைகிறான். எதில் இந்த உலகமும்
, அதனைப்படைத்து காத்து அழிக்கும்
பரம்பொருளும் நிலைத்து இருக்கின்றதோ
அந்த நிர்க்குண பிரம்மத்தை நேரடியாக
அறிந்துவாழ்வின் பயனை அடைகிறான்.
அத்வைதபாவனை, அதனால் அடையக்கூடிய
நிர்க்குண பிரம்மம் .இவை பற்றிய
விஷயங்களை விட்டுவிட்டால் ஆன்மீக உலகில்
பொதுவாக சாந்தம், தாஸ்யம், சக்யம்,
வாத்சல்யம், மதுரம் என்கின்ற ஐந்து
பாவனைகள் உள்ளன.
அந்தஒவ்வொரு பாவனையின் மூலமும்
அடையக்கூடிய இலக்கு இறைவன் அல்லது
சகுண பிரம்மம். சாதகர்களின் மனம் இந்த
பாவனைகளுள் ஒன்றின் மூலம் நித்ய சுத்த
புத்த முக்த இயல்பினான எல்லாம் வல்ல,
எல்லாவற்றையும் ஆட்டுவிக்கின்ற
இறைவனை அடைய முயல்கிறது.
எல்லோருள்ளும் உறைபவனும், எல்லா
எண்ணங்களுக்கும் உறைவிடம்
ஆனவனுமான இறைவனும் சாதகனுடைய
மனத்தின் ஒரு முகப்பட்ட பக்தியைக்கண்டு
அவனது பாவனை முதிர்ச்சி பெறுவதற்காக
அந்த பாவனைக்கேற்ற உடல் தாங்கி,
அவனுக்கு தரிசனம் அளித்து அருள்
பாலிக்கிறார்.
இவ்வாறு பல யுகங்களிலும் அவர் வெவ்வேறு
பாவனைகளுக்கேற்ற உணர்வுமயமான உருவம்
தாங்குவதுடன் மனித உருவிலும் அவதரித்து
சாதகனின் ஆவலைப்பூர்த்தி செய்வதாக
சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மனிதன் பிறருடன் எந்த உணர்ச்சிகள் மூலம்
தொடர்பு கொள்கிறானோ, அந்த உலகியல்
உணர்ச்சிகளின் நுண்ணிய, தூய
வடிவங்களே சாந்தம், தாஸ்யம். போன்ற ஐந்து
பாவனைகள். நாம் ஒவ்வொருவரும் தாய்,
தந்தை, கணவன், மனைவி, தோழன். தோழி,
எஜமான, பணியாள், மகன். மகள், அரசன்,
குடிமகன், ஆசிரியர், சீடன், ஆகிய
ஒவ்வொருவருடனும் ஒரு தனிப்பட்ட உறவு
கொண்டாடுகிறோம், பகைவர்களைத் தவிர
மற்றவர்களிடம் மரியாதையுடனும் மதிப்புடனும்
நடந்து கொள்வது நம் கடமை என்று
எண்ணுகிறோம். இந்தத் தொடர்புகள்
அனைத்தையும் பக்தி ஆசாரியர்கள் சாந்தம்,
முதலான ஐந்து பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
சாதகனின் தகுதிக்கேற்ப அவற்றுள் ஏதேனும்
ஒரு பாவனையை முக்கிய மாகப் பின்பற்றி
இறைவனுடன் உறவு கொண்டாடுமாறு
அவர்கள் உபதேசிக்கிறார்கள். இந்த
பாவனைகள் மனிதனின் அன்றாட வாழ்வில்
ஒரு பகுதியாக அமைந்திருப்பதால்
அவற்றைப் பழகி இறைவனை அடைவது
எளிதாகத்தானே இருக்கும்!
உலகியலின் அடிப்படையில் அமைந்த இந்த
உறவுகளைச் சார்ந்த உணர்ச்சிகளால்
மனத்தில் எழுகின்ற விருப்பு, வெறுப்பு போன்ற
எண்ணங்கள் ஒருவனை இதுவரை தீய
செயல்களில் ஈடுபடச் செய்திருக்கலாம்.
ஆனால் இறைவனுடன் தொடர்பு கொண்ட
பின் அவை மனத்தில் எழுந்தாலும் அவற்றின்
தீவிர வேகம் இறைவனை அடையும்
பாதையில் அவனை
முன்னோக்கித் தள்ளுவதாகவே அமையும்.
எடுத்துக்காட்டாக, எல்லா துன்பங்களுக்கும்
காரணமாக இருக்கும் ”காமம்” என்ற
மனநோய் அவனைக் கடவுளுக்காக ஏங்க
வைக்கும் அந்தப் பாதையில் தடையாக
இருக்கும் பொருட்களின் மீதும் மனிதர்களின்
மீதும் அவனுடைய கோபம்
திரும்பும்.சாதனையால் அடையப்போகின்ற
இறைவனின் அற்புதப்பேரழகைப் பருகுவதில்
அவனது மோகம் திரும்பி அவனை இறைப்
பித்தனாக்கும். ஆண்டவனின் அற்புத
தரிசனம் பெற்றுவாழ்க்கையின் பயனை
அடைந்தவர்களின் ஆன்மீக அருள்
ஒளியைக்கண்டு அதை அடைவதில்
அவனது மனஏக்கம் நிலைக்கும்.

வேறுபாட்டுணர்வை அன்பு நீக்குகிறது.


காதல் வசப்பட்ட இருவரின் இடையேதகுதி,
அந்தஸ்து போன்ற வேறுபாடுகள் படிப்படியாக
விலகிவிடுவதை நாம் காண்கிறோம்.அது
போல பாவனை சாதனைகளில் ஈடுபடுகின்ற
சாதகனின் மனத்திலிருந்தும் இறைவனின்
எல்லையற்ற ஆற்றலைப் பற்றிய எண்ணத்தை
அவனது அன்பு நீக்கிவிடுகிறது. இதன்
விளைவாக இறைவனின் மகிமைகளும்
மாட்சிமைகளும் சிறிது சிறிதாக சாதகனின்
மனத்திலிருந்து விலகி, அவர் தன்
அன்புக்குப் பாத்திரமானவர் என்ற எண்ணம்
மட்டும் எஞ்சுகிறது. அவன் மெள்ளமெள்ளத்
தன் அன்பினால் அவரை முற்றிலும்
தன்னுடைய வராக்கிக் கொள்கிறான்.
இறைவனிடம் கெஞ்சவோ, மன்றாடவோ,
அடம்பிடிக்கவோ,ஏன் திட்டவோ கூட அவன்
சிறிதும் தயங்குவதில்லை.

ஐந்து பாவனைகளுள் ஏதேனும் ஒன்றில்


ஆழ்ந்து ஈடுபடுகின்ற சாதகன் இறைவனின்
ஆற்றல்களை எல்லாம் மறந்து அவரது
அன்பையும் , இனிமையையும்
அனுபவிக்கிறான். அந்த பாவனையால் அவன்
எவ்வளவு தூரம் இறைவனை நெருங்க
முடியுமோ, அந்த அளவுக்குஅது
உயர்ந்ததாகக்கருதப்படுகிறது.இந்த
வகையில் சாந்தம் முதலான ஐந்து
பானைகளையும் ஒப்பிட்டுப்பார்த்து மதுர
பாவனைக்கு உயர்ந்த இடத்தை
அளித்திருக்கிறார்கள். பக்தி ஆசாரியர்கள.
அதே வேளையில் ஒவ்வொரு பாவனையும்
இறைக்காட்சியை நல்கும் வல்லமை
பெற்றவை என்பதை அவர்கள் அனைவரும்
மறுக்காமல் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
பாவனைகளின் முதிர்ச்சியின் போது சாதகன்
தனத அன்பிற்கு உரியவரின் இன்பத்தில்
மட்டுமே இன்பம் காண்கிறான்.அவரைப்
பிரியும் நேரங்களில் அவரது எண்ணத்தில்
மூழ்கி, சிலவேளைகளில் தன்னையே
மறக்கிறான். பிருந்தாவன கோபியர் இவ்வாறு
தங்கள் சுயவுணர்வை இழந்தது பற்றியும்,
சிலவேளைகளில் தங்களையெ தங்கள்
அன்பிற்குரிய கண்ணனாகக் கண்டது
பற்றியும் ஸ்ரீ மத்பாகவதம் போன்ற பக்தி
நூல்களில் காண்கிறோம்.. பாவனைகள் மூலம்
இறைவனுடன் தொடர்பு கொள்ளும்
சாதகனும் தன் இஷ்டதெய்வ நினைவில்
முழுமையாக ஒன்றி, காதலின் வேகத்தில்
கடவுளுடன் கலந்து அத்வைத நிலையை
அனுபவிக்கிறான்.
குருதேவரின்ஈடிணையற்ற
சாதனைவாழ்க்கை இதனை மிகவும்
அற்புதமாக நமக்கு ஒளியிட்டுக் காட்டுகிறது.
ஸ்ரரீ ாமகிருஷ்ணர் பாவனை சாதனைகள்
ஒவ்வொன்றிலும் முன்னேறி அன்பின்
முதிர்சச் ி நிலையில் தமது இஷ்ட
தெய்வத்துடன் ஒன்றி, தம்மை முற்றிலுமாக
மறந்து அத்வைத நிலையை எய்தினார்.
இங்கே ஐயம் ஒன்று எழலாம்.எல்லா
பாவனைகளையும் கடந்து நிற்கும் இரண்டற்ற
பொருளை பாவனைகளின் மூலம் எவ்வாறு
மனித மனம் அடைய முடியும்?
இருவருக்கிடையில் தானே உணர்வுகள் எழ
முடியும். நான் நீ ஆகிய இருவர் என்ற உணர்வு
இல்லாமல் போனால் மனித மகத்தில் எந்த
வகையான பாவனையும் தோன்றி, நிலைத்து
முதிர்வது, என்பது சாத்தியமே இல்லை
அல்லவா?
உண்மைதான் ஆனால் ஒரு குறிப்பிட்ட உணர்வு
மேலோங்கி வளர, வளர அந்த உணர்வே
எதிர்மறையான உணர்வுகளை
மனத்திலிருந்து நீக்கி விடுகிறது. படிப்படியாக
அந்த உணர்வு முற்றிலுமாக மனத்தை
ஆக்கிரமித்து விடவும் செய்கிறது.
அத்தகைய மனத்துடன் தியானத்தில்
ஈடுபடும் போது நான், நீ என்ற வேறுபாடு
மறைந்து விடுகிறது. அவற்றிற்கு இடையே
உள்ள தாச பாவனை போன்ற தொடர்புகளும்
மறைந்து மனம் அன்பின் வசப்பட்டு நீ என்ற
சொல் குறிக்கின்ற இறைவனாகிய
பேருண்மையில் ஒன்றி, அசையாமல் நின்று
விடுகிறது, நான்., நீ என்ற உணர்வுகளையும்
அவற்றின் இடையே உள்ள உணர்வுத்
தொடர்பையும் மனம் ஒரே சமயம்
அனுபவிக்காது என்று இந்திய ஞானிகள்
கூறுகின்றனர். ஒரு கணம் நான் என்ற சொல்
குறிக்கும் பொருள் என்று மனம் இரண்டையும்
மாறிமாறி அறிகின்றது. இந்த இரண்டு
உணர்வுகளிடையே மனம் வேகமாக
நிலைமாறுவதால் அவற்றின் இடையே ஓர்
உணர்வுத் தொடர்பு புத்தியில் உதயமாகிறது.
அதனால் நான், நீ என்ற இரு உணர்வுகளையும்
அவற்றின் தொடர்பையும், அது ஒரே நேரத்தில்
உணர்வது போலத்தோன்றுகிறது. ஒரே உணர்வு
மனம் முழுவதையும்
ஆக்கிரமித்துக்கொள்வதால் அதன் சஞ்சல
நிலை மறைந்து நாளடைவில் இதைப்புரிந்து
கொள்கிறது. தியானத்தில் ஈடுபடும்போது
மனம் இவ்வாறு எண்ணங்களற்று
அமைதியுறுகின்ற அளவுக்கு இரண்டற்ற
ஒன்றான பேருண்மையே இரு நிலைகளில்
இருபுறத்திலிருந்து நீ. நான் என்று
இரண்டாகத் தன்னை கற்பனை செய்து
வந்துள்ளது.என்பது தெரிய வருகிறது.
சாந்தம், தாஸ்யம், போன்ற பாவனைகள்
ஒவ்வொன்றையும் முழுமையாகப் பழகி
மேற்கூறியபடி அத்வைத நிலையை
அனுபவிக்க சாதகர்கள் எவ்வளவு காலம்
முயலவேண்டியிருந்தது என்பதை
நினைத்தால் வியப்பு மேலிடுகிறது. ஆன்மீக
வரலாறுகளான
சாஸ்திரங்களைப்படிக்கும்போது ஒவ்வொரு
யுகத்திலும் இந்த பாவனைகளுள் ஏதாவது
ஒன்று உபாசனைக்கு உகந்ததாக
அமைந்திருப்பது தெரிய வருகிறது. அந்த
பாவனையின் மூலமே அந்த யுகத்தின் சிறந்த
சாதகர்கள் இறைக்காட்சி பெற்றனர். ஏதோ
ஓரிருவர் இரண்டற்ற ஒன்றேயான
பிரம்மத்தையும் உணர்ந்தனர்.
வேத காலத்திலும் பௌத்த காலத்திலும்
சாந்த பாவனை பிரபலமாக இருந்தது.
உபநிடதகாலத்தில் சாந்த பாவனையின்
முதிர்சச
் ி வழியாக அத்வைத பாவனையும்,
தாச பாவனையும், இறைவனைத் தந்தையாக
எண்ணகின்ற பாவனையும் பரவலாக
இருந்தன. ராமாயண, மகாபாரத காலத்தில்
சாந்த பாவனையும், தன்னலமற்ற செயல்
புரிவதுடன் கலந்த தாச பாவனையும்,
தாந்திரிக காலத்தில் இறைவனைத் தாயாக
எண்ணுகின்ற பாவனையும் மதுர
பாவனையின் சில அம்சங்களும் வைணவ
காலத்தில் சக்ய, வாத்சல்ய, மதுர
பாவனைகளின் முழு வெளிப்பாடும் சிறந்து
விளங்கின.
பாரத நாட்டின் சமய வரலாற்றில் இவ்வாறு
அத்வைத பாவனையுடன் சாந்தம் முதலிய
ஐந்து பாவனைகளும் கலந்து காணப்படினும்
பிற நாட்டு மதங்களில் சாந்தம், தாஸ்யம்.
மற்றும் இறைவனைத்தந்தையாகக்
கொள்கின்ற பாவனைகள் மட்டுமே
காணப்படுகின்றன.

தொடரும்..

JOIN SRI RAMAKRISHNA WHATSAPP


GROUP
https://wa.me/919789374109?
text=Send_whatsapp_Group_Link

You might also like