You are on page 1of 330

 கவிதை - 1

முடிந்து போனதாய்
நினைத்த
இந்த பயணத்தின்
அடுத்த அத்தியாயத்தை
என் அனுமதியே
இல்லாமல்
ஆரம்பிக்கும்
அவளின் நினைவுத் தடங்கள்!!

மாலைச் சூரியன் மெல்ல மறைந்து, நிலாமகள் மெதுவாக


எட்டிப்பார்த்து, அந்த அழகிய நிலவின் ஒளியை மறைக்க
முயன்ற கருமேகங்களுக்கு இடையில், தன் இருப்பை
உணர்த்தி, நடுவானில் ஒளிர்ந்துக் கொண்டிருந்தாள். டிராபிக்
இல்லாத அந்த தேசிய நெடுஞ்சாலையில், விஸ்.... விஸ்...
என்ற இரைச்சலுடன் விரைந்து செல்லும் லாரிகளுக்கு
இடையில், ஒரு கார் ஊர்ந்து வந்துக் கொண்டிருந்தது.
நிதானமாக எந்த அவசரமும் இன்றி சென்றுக் கொண்டிருந்த
அந்தக் காரில் இருந்து,

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்


அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, அந்த காரை ஓட்டிக்
கொண்டிருந்த நபர், அதை ரசித்து கேட்டுக் கொண்டே வர, பின்
சீட்டில் அமர்ந்திருந்த, முப்பதுகளின் தொடக்கத்தில் இருந்த
வாலிபன், அதை சிறிதும் ரசிக்காமல், தனது லேப்டாப்பில்
மூழ்கி இருக்க, அதை கண்டும் காணாத அந்த ஓட்டுனரோ,
தலையை ஆட்டி, பாடலை முணுமுணுத்துக் கொண்டே
வந்தார்.

அந்த இரவின் அமைதியையும், அந்த பாடலின்


இனிமையையும் குலைத்தது, செல்போனின் ரிங்க்டோன்
சத்தம்... “எஸ்... ப்ரித்வி ஹியர்...” என்று கம்பீரமாக, அதே
சமயம் கடுமையாக ஒலித்த அந்த குரலைக் கேட்டதும்,
ஓட்டுனர், பாடலின் சத்தத்தை குறைக்க, அவரை அர்த்தப்
பார்வை பார்த்தவன், வேறு எதுவும் சொல்லாமல்,

“ஹ்ம்ம்... எங்க பிடிச்சீங்க? பொய் தானே சொல்லிட்டு


சுத்திட்டு இருந்தான்?” என்று கர்ஜிக்கவும், எதிர்புறம் என்ன
பதில் சொல்லப்பட்டதோ,

“நான் வர வரை அங்கேயே வைங்க... அவன் உடம்புல ஒரு


காயமும் படக் கூடாது... ஆனா, தண்ணியைத் தவிர சாப்பாடு
எதுவும் கொடுக்கக் கூடாது.... அந்த இருட்டு ரூம்லையே
போட்டு வைங்க... நான் வரும் வரை...” அந்த கடைசி
வாக்கியத்தில் இருந்த அழுத்தம், அவன் இன்னும் தான்
திரும்பி வரும் நாளை முடிவு செய்யவில்லை என்பதை
சொல்லாமல் சொல்ல, ஓட்டுனர் ஒரு பெருமூச்சொன்றை
வெளியிட்டார்.
போனை வைத்தவன், “என்ன ராமண்ணா... மூச்சு எல்லாம்
பலமா வெளிய வருது...” கல்லாக சமைந்து இருந்த முகத்தில்,
எந்த ஒரு உணர்வையும் காட்டாமல் அவன் கேட்கவும்,

“இல்லைங்க தம்பி... அந்த நந்தகோபாலை நினைச்சு தான்


பெருமூச்சு விட்டேன்... அன்னிக்கு நான் போய் கேட்ட போதே,
அவன் பணத்தை தந்திருக்கலாம்... கையோட மொத்த
கடனையும் அடைச்சிட்டு அவன் வட்டிற்கு
ீ வசதியும்
செய்துக்கிட்டு இருந்து இருக்கலாம்.. அதை செய்யாம,
‘பணமே இல்ல.... சாப்பாட்டுக்கே கஷ்டப்படறேன்னு’ பொய்
சொல்லிட்டு, இப்போ மாட்டிக்கிட்டானேன்னு நினைச்சேன்...”
இயல்பாக அவர் சொல்லி முடிக்க, அதே உணர்ச்சி இல்லாத
முகத்துடன், ஒப்புதலாக தலையசைத்த ப்ரித்வி, தனது
லேப்டாப்பில் காரை வடிவமைக்கத் தொடங்கினான்.

பழக்கமான அவனது உணர்ச்சி துடைத்த முகத்தை கண்ணாடி


வழியாகப் பார்த்தவர், தனது கவனத்தை மீ ண்டும் சாலையில்
பதிக்க, “இந்த தடவ எனக்கு எந்த டிசைனும் சட்டுன்னு சிக்க
மாட்டேங்குது... அதனால நாம திரும்பி போக எவ்வளவு நாள்
ஆகும்னு சொல்ல முடியாது... நீ ங்க வட்ல
ீ சொல்லிட்டு
வந்திருக்கீ ங்க இல்ல... அப்படி இல்லைன்னா, நீ ங்க
ராஜமுந்திரில இறங்கிக்கோங்க... நான் போன் செய்து சுந்தரை
வரச் சொல்லிடறேன்...” கோபமாகச் சொல்கிறானா, இல்லை
இயல்பாகச் சொல்கிறானா, என்று இரண்டொரு நொடிகள்
ஆராய்ந்தவர், அவனது முகமே அப்படித் தானே என்று தேற்றிக்
கொண்டு,
“இல்ல தம்பி... சொல்லிட்டுத் தான் வந்தேன்.. நானே
வரேன்...” என்று சொல்லியவரை நிமிர்ந்து கூட பார்க்காமல்,
அவன் தனது பணியில் மூழ்க, ராமண்ணாவும், அதற்கு மேல்
எதுவும் பேசாமல், காரைச் செலுத்தினார்.

ப்ரித்வி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ப்ரித்விராஜ்,


வளர்ந்து வரும் தொழிலதிபன்.... கார்களை வடிவமைத்து,
மக்களின் ரசனைக்கேற்ப அதை மாற்றிக் கொடுப்பதில்
வித்தகன்.. பலர் தங்களுக்கு பிடித்த புதிய கார்களை வாங்கி,
நேராக அவனிடம் எடுத்துச் சென்று, தங்கள் ரசனைக்கேற்ப
மாற்றி அமைக்க, அவனிடம் ஒப்படைக்கும் அளவிற்கு புகழ்
பெற்றவன்.

அவனுக்கு இன்னொரு முகமும் உண்டு... பணத்தை வட்டிக்கு


கொடுத்து, அதை தவறாமல் பெறுவதில் வல்லவன்... பொய்
சொல்லாமல் வாய்தா கேட்டால் கண்டிப்பாக கிடைக்கும்...
அதே போல், பொய் கூறி, பணம் கட்டத் தவறினால்,
தண்டனை கடுமையாக இருக்கும். உறவு என்று கூற
யாருமில்லாத நிலையில், அவனது பாதுகாப்பிற்காக தந்தை
வைத்து விட்டுப் போன சொத்தை, ஊதாரித் தனமாக
அழிக்காமல், தனக்கு விருப்பமான படிப்பை படித்து, அதை
மேலும் பல மடங்கு உயர்த்தி, இந்த நிலையை எட்டி இருக்கும்
அவனது முகத்தில் இருக்கும் ஒரே பாவம், கற்சிலை போன்ற
தோற்றமே.

புதியதாக காரின் மாடலை வடிவமைப்பதற்காக, எந்த


இடையூறும் இன்றி, தனக்கு வசதியாக வடிவமைத்துக்
கொண்ட காரில், சென்று சேரும் இடமறியாமல், சில பல
ஊர்களைத் தாண்டி, ஏன், சிலமுறை, அடுத்த மாநிலத்திற்கே
செல்லவும் நேரிடும். அது அவனது வழக்கம்... மேலும், இந்தப்
பயணமானது ப்ரித்வியின் விருப்பப்படி, அவன் ஊருக்குத்
திரும்பலாம் என்று கூறும் வரை தொடரும்.. இதோ
இம்முறையும், அவனது அலுவலக இருப்பிடமான
பெங்களூரில் இருந்து ஸ்ரீகாகுளம் வரை சென்றவர்கள்,
அங்கிருந்து விசாகபட்டினம் செல்லும் சாலைக்கு வந்து
சேர்ந்திருந்தனர்.. ப்ரித்வியின் பயணம் தொடர, அதே நேரம்,
விசாகபட்டினத்தின் கடற்கரையில், அலையின்
இரைச்சலையும் தாண்டிய சலசலப்பு சத்தம் கேட்டுக்
கொண்டிருந்தது.

 Share
o
o
o
o
o
 |
 Like
suganyarangasam, gomathyraja, latharaju89 and 39 others like this.
 

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

    
 3rd Apr 2015, 10:12 PM#4

ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya
கல்லூரி மாணவர்கள் போல் காட்சியளித்த அந்த குழுவில்,
ஒரு இளம் பெண் கத்திக் கொண்டிருக்க, அவளை கேலி
செய்தும், சீண்டியும், கூட இருந்த மாணவ மாணவிகள்
பதிலுக்கு கத்திக் கொண்டிருக்க, வாக்குவாதம் பலமாக
முற்றிக் கொண்டிருந்தது.

“கஜா.... டி கஜா... இங்க தனியா தான் நிக்க போறியா?” ஒரு


பெண்ணின் குரலில்,

“வாய மூடிக்கிட்டு ஊருக்கு கிளம்பு... எனக்கு தனியா வரத்


தெரியும்...” கஜா என்றும், கஜாவின் ஆங்கிலப் பதமான
எலிஃபேன்ட் என்றும், நண்பர்களால் அழைக்கப்படும்,
கஜலக்ஷ்மி கோபமாகச் சொல்ல,

“ப்ள ீஸ் புள்ள... இங்க நின்னு இப்படித்தான் கத்தி கூப்பாடு


போடுவியா? நாம கிளம்பலாம்... இன்னும் கொஞ்ச நேரத்துல
நம்மளோட பஸ் வந்துரும் புள்ள... அந்த பஸ்சை பிடிச்சாத்
தான், சரியான நேரத்துக்கு ஊருக்குப் போய் சேர முடியும்... வா
புள்ள கிளம்பு... இப்போ நாம கிளம்பலைனா, நம்ம
நிலைமையை கொஞ்சம் நினைச்சுப் பார்த்தியா? வம்ப விலை
கொடுத்து வாங்காத கஜா...” அவளது தோழி, முல்லை
சொல்லவும், முகத்தைத் திருப்பிக் கொண்ட கஜலக்ஷ்மி, கடல்
கரையில் சென்று அமர்ந்தாள்.

மீ ண்டும் மீ ண்டும் முல்லை கெஞ்சவும், “இவ சொன்னா கேட்க


மாட்டா... நமக்கு மணி ஆகுது... இவ எப்படியோ வரட்டும்...
இங்க தனியா நின்னு பயந்து நடுங்கினா தான் அவளுக்கு புத்தி
வரும்.. சும்மா விளையாட்டுக்கு செய்யறதுக்கு எல்லாம்
கோவிச்சிட்டு உட்கார்ந்து இருக்கா... பேய் மாதிரி... அதுக்குத்
தான் இவ நம்ம கூட வரவேண்டாம்ன்னு சொன்னேன்...”
அவர்களுடன் வந்திருந்த ஒரு மாணவன் கஜாவைப் பார்த்து
எகிற,

“போயேன்... யாரு வேண்டாம்ன்னு சொன்னா? எனக்கு


தனியா வரத் தெரியும்... இந்த கஜாவுக்கே பயம்ன்னு
சொல்றயே... ஊர்ல இருந்து, முதல் முதலா பட்டணத்துக்கு
படிக்க வந்தவடா நான்...” சிறிதும் பயப்படாமல் அவள்
பதிலுக்கு எகிறிக் கொண்டிருக்கவும்,

“கொஞ்சம் புத்தியோட பேசு கஜா... நான் உன்னை கிண்டல்


செய்ததுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன்... தயவு செய்து
கிளம்பு... நம்ம பெத்தவங்க கிட்ட பொய்யைச் சொல்லிட்டு
வந்திருக்கோம் புள்ள... அந்த நினைப்பு உனக்கு
கொஞ்சமாவது மனசுல இருக்கா? அவங்களைப்
பொறுத்தவரை நாம இப்போ ஹாஸ்டல்ல இருக்கோம்.

கொஞ்சம் உன் கோவத்தை விட்டுட்டு யோசி கஜா... நாம


பத்திரமா ஊர் போய் சேருவோம்... அத்தோட இந்த பட்டணத்து
சகவாசமே வேண்டாம்ன்னு நம்ம வேலையைப் பார்ப்போம்
புள்ள... இன்னும் ஒரு மாசத்துல எனக்கு கல்யாணம்... நான்
வட்ல
ீ பொய் சொல்லிட்டு இப்படி ஊர் சுத்தறது தெரிஞ்சா,
எங்க மாமா, சாமியாடிடும்...” முல்லை நடுங்க,

“உனக்குத் தானே கல்யாணம்... எனக்குத் தான் இப்போ


கல்யாணம் இல்லையே... அதுக்கு இன்னும் நிறைய நாள்
இருக்கு... அதனால நீ கிளம்பு... நான் தனியா வந்துக்கறேன்...
அப்படியே வரலைனாலும், என் மாமா ஒண்ணும்
கண்டுக்காது... வேற செவத்த குட்டியா பார்த்து பரிசம் போட
போயிருவாங்க..” விடாமல் அதே இடத்தில் கஜா அமர்ந்துக்
கொண்டு, பிடிவாதம் பிடிக்க,

“அப்படியே உன் ரெண்டு கன்னத்தையும் பழுக்க


வைக்கலைனா என் பேர் முல்லை இல்லடி... என்ன தாண்டி
உன் மனசுல நினைப்பு... நீ வரலைன்னா என்னையும் சேர்த்து
இல்ல கொன்னு போடுவாங்க...” முல்லை கண்ண ீர்
சிந்தினாலும், அதற்கும் அசைந்து கொடுக்காமல்
கோபத்துடன் கஜா அமர்ந்திருக்க, அவர்களுடன் வந்த
மாணவனில் ஒருவனான லோகேஷ் கடுப்புடன் முல்லையைப்
பிடித்து இழுத்தான்.

“அவளை எப்படி சரி கட்டறதுன்னு எனக்குத் தெரியும்...”


முல்லையின் அருகே மெல்ல கூறியவன்,

“கஜா... நாம ஒரு பெட் வைப்போம்... நாங்க எல்லாம் இப்போ


பஸ்ல கிளம்பி, சென்னை போய் அப்படியே அங்கிருந்து
இன்னொரு பஸ் பிடிச்சு மதுரை போறோம்...” அவன் சொல்லத்
தொடங்கும் முன்பே,

“அதுக்கு என்ன இப்போ?” கஜலக்ஷ்மி நீ ட்டி முழக்க,

“சொல்லிட்டே இருக்கேன் இல்ல அவசரக் குடுக்கை... நாங்க


எல்லாம் சேர்ந்து போறோம்... நீ தனியாவே தான் ஊருக்கு
வரணும்... நாங்க வர பஸ்லயே வருவியோ, இல்ல அடுத்த
பஸ்சை பிடிச்சு வருவியோ அது எனக்குத் தெரியாது. அதே
பஸ்ல வந்தாலும் தனியா தான் வரணும்... ஊருக்கு போய்
சேருற வரை எங்க யாரோடையும் பேசவே கூடாது... என்ன
சொல்ற?” அவன் பெட்டைச் சொல்லவும்,

“அதனால எனக்கு என்ன லாபம்?” அவள்


யோசிப்பதைப் பார்த்தவன்,

“அப்படி மட்டும் நீ தனியா வந்துட்டன்னா... உனக்கு பிடிக்காத


மாமாவோட நடக்க இருக்கிற உன் கல்யாணம், அதுவா நின்னு
போயிரும்... அப்பறம் உனக்கு பிடிச்ச மகாராஜன் வந்து
உன்னை கல்யாணம் செய்து கூட்டிட்டு போவான்...” லோகேஷ்
சொல்லச் சொல்ல, கஜாவின் முகத்தில் வந்த பிரகாசத்தைப்
பார்த்த முல்லை பீதியடைந்தாள்.

“ஏன் லோகேஷ் அவளை உசுப்பேத்தற?” லோகேஷை அவள்


கண்டிக்கவும்,

“அவ்வளவு தானா? கண்டிப்பா நான் இந்த சவாலை


ஏத்துக்கறேன்... நீ ங்க ஊருக்குப் போய் சேரறதுக்கு முன்ன
நான் போய் சேரல, நான் கஜலக்ஷ்மி இல்ல...” கஜா
சூளுரைக்கவும்,

“கொழுப்பு அடங்குதா பாரு உன் பிரெண்ட்டுக்கு..” லோகேஷ்


மீ ண்டும் வாயைக் கொடுக்கவும்,

“கொம்பு சீவற மாதிரி அவளை சீண்டி விட்டுட்டு அவளுக்கு


கொழுப்புன்னு சொல்ற... இன்னும் கொஞ்ச நேரத்துல அவ
ரூமுக்கு வரல... மவனே உன்னைப் பிடிச்சு எங்க மாமா கிட்ட
கொடுத்திருவேன்...” எச்சரித்த முல்லை, லோகேஷை
முறைத்துக் கொண்டிருக்க,

“இவளை கொஞ்ச நேரம் தனியா விட்டாத் தான் சரியா வருவா,


முல்லை... வாங்க நாம கிளம்புவோம்...” லோகேஷ்
சொல்லவும், மனம் ஆறாமல், சிறிது நேரம் கெஞ்சிப் பார்த்த
முல்லை, கஜா விடாப்பிடியாக நிற்கவும், வேறு வழியின்றி,
அவர்களுடன் வந்த மாணவ மாணவிகளுடன், அறைக்குக்
கிளம்பிச் சென்றாள்.

 Share
o
o
o
o
o
 |
 Like
suganyarangasam, gomathyraja, latharaju89 and 40 others like this.

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

    
 3rd Apr 2015, 10:20 PM#5

ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya

“முல்லை... நீ எதுக்கு இப்போ இப்படி ஃபீல் பண்ணற...


கொஞ்ச நேரத்துல நம்ம பின்னாலேயே வந்து நிக்க போறா,
பாரு,...” முல்லையை சாமாதானப்படுத்திய லோகேஷ்,
பொருட்களை எடுத்து வைத்து, கிளம்ப ஆயத்தமானான்.

கஜலக்ஷ்மி... துடுக்குத்தனமும், பிடிவாதமும், பொறுப்பும்


சேர்ந்த கலவையான பெண் அவள். கல்லூரியின்
இறுதியாண்டு படிப்பு முடித்து, மீ ண்டும் தனது கூட்டிற்கே
பறக்க காத்திருக்கும் பறவை.

அவளும் முல்லையும் ஒரே கிராமத்தைச் சேர்த்தவர்கள்....


அந்த கிராமத்தில் இருந்து முதன்முதலில், கல்லூரிக்கு,
அதுவும் வெளியூர் வரை சென்று படிக்க அனுமதி பெற்ற
பெருமை கஜலக்ஷ்மியையே சாரும்... அவளுக்குத்
துணையாகத் தான், முல்லைக்கும் ஊரை விட்டு வெளியில்
செல்ல, அனுமதி வழங்கி, அவளது பெற்றோர்
கஜலக்ஷ்மியுடன் அனுப்பி வைத்திருந்தனர்.

அந்த கிராமத்தில் செல்வந்தர் வட்டுப்


ீ பெண்ணான
கஜலக்ஷ்மி, பள்ளிப்படிப்பில் நல்ல மதிப்பெண்கள்
வாங்கிவிட, அவளது ஆசிரியரின் பரிந்துரையின் பெயரிலும்,
அவளது பிடிவாதத்தினாலும், பட்டப்படிப்பு படிக்க
அனுமதித்தனர் அவளது பெற்றோர்.

அவர்களது ஊர் பல கட்டுப்பாடுகளையுடையது. அந்த


கட்டுப்பாட்டின் படி, ஊரை விட்டு வெளியில் செல்வதற்கு
முன், பரிசம் போட்டு, மாப்பிள்ளையை நிச்சயம் செய்து,
அவர்களின் அனுமதியுடன், கஜலக்ஷ்மியையும்,
முல்லையையும் படிக்க அனுப்பி வைத்தனர்.

கல்லூரி முடிந்து, ஊருக்கு திரும்புவதற்கு முன், அவர்களின்


வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து, விசாகபட்டினத்திற்கு
சுற்றுலா வந்திருந்தனர்.

வந்திருந்த இடத்தில், முல்லை, மற்ற மாணவிகளுடன்


சேர்ந்துக் கொண்டு, கஜம் என்ற பெயரின் பொருளான
யானையை வைத்து, கஜலக்ஷ்மியை கிண்டல் செய்யவும்,
கோபம் கொண்ட கஜலக்ஷ்மி, அவர்களுடன் சண்டை பிடித்துக்
கொண்டு, அங்கேயே அமர்ந்து கொண்டாள்.

எப்பொழுதும், அவளது கோபம் சொற்ப நேரமே என்று


தெரிந்து வைத்திருந்த நண்பர்கள், சிறிது நேரத்தில் அவள்
அறைக்கு வந்து விடுவாள் என்று காத்திருக்க, ஏனோ இன்று
வழக்கத்திற்கு மாறாக கோபத்தில் கனன்றுக் கொண்டிருந்த
கஜலக்ஷ்மியோ அசையாமல் அமர்ந்திருந்தாள்.... அதுவும்
லோகேஷ் கூறியதே அவள் காதில் ஒலித்துக்
கொண்டிருந்தது....

“நாம தனியா ஊருக்கு போயிட்டா... கல்யாணம் நின்னுருமா?”


அவளது யோசனை அங்கேயே வட்டமடிக்க, ஏனோ அவளுக்கு
நிச்சயித்திருந்த அவளது ஒன்றுவிட்ட மாமாவின் முகம்
அவளது மனக் கண்ணில் வந்து போனது.

“அய்யே.. எப்பவும் குடிச்சிட்டு, வெள்ளைத் தோலைப் பார்த்தா


வழிஞ்சிட்டு கிடக்கற அவனை நான் எப்படி கல்யாணம்
கட்டிக்க முடியும்? படிக்காதவனா கூட இருக்கலாம்... குணம்
கெட்டவன நம்பி நான் எப்படி என் வாழ்க்கைய கொடுக்கறது?”
அவளது மனம் சண்டித்தனம் செய்ய, மூளை பலவிதமாக
யோசித்து ஒரு முடிவு கண்டது.

அனைவரும் கிளம்பித் தயாராக, “டேய் லோகேஷ்... நீ தானே


கொம்பு சீவி விட்ட... போய் அவளை சமாதானம் செய்து
கூட்டிட்டு வா... அவ அங்கே தனியா உட்கார்ந்து இருக்கா...
ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா ஊருக்குள்ள யாருக்கும்
என்னால பதில் சொல்ல முடியாதுப்பா.... கொஞ்சம் போய்
பேசேன்...” முள்ளின் மேல் நிற்பவளைப் போல முல்லை
நின்றுக் கொண்டு கெஞ்ச, லோகேஷும், கஜலக்ஷ்மியைத்
தேடி, மீ ண்டும் கடற்கரைக்குச் சென்றான்.

அங்கு....

----------------------------

“தம்பி... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு விசாகபட்டினம்


போலாங்களா?” ராமண்ணா கேட்கவும்,

“உங்களுக்கு ரெஸ்ட் வேணுமா?” தாடையைத் தடவியவாறே


ப்ரித்வி கேட்கவும்,

“இல்ல... நீ ங்க மதியமும் சாப்பிடல... ராத்திரியும் சாப்பிடல...


அதனால கேட்டேன்...” அவரின் பதிலில்,
“இந்த நேரத்துல எந்த மோட்டலுக்கும் போக வேண்டாம்...
நம்ம இன்னும் ஒரு மணி நேரத்துல விசாகபட்டினம்
போயிடுவோமே... அங்க ரிசார்ட்ல போய் கொஞ்ச நேரம்
ரெஸ்ட் எடுத்துட்டு, நாம தொடரலாம்...” அவனது முடிவைச்
சொல்லவும், விசாகபட்டினத்தை நோக்கி, கார் பறந்தது.

“சரிங்க தம்பி....” என்றவர், விசாகபட்டினத்தின் கடற்கரை


ரிசார்ட்டில் காரைக்கொண்டு நிறுத்த, அங்கிருந்த விடுதியில்,
ஒரு அறையை எடுத்து, ப்ரித்வி ராமண்ணாவை அழைத்துக்
கொண்டு, உள்ளே செல்ல, சிறிது நேரம் ஓய்வெடுத்தவர்,
குளித்து, ப்ரித்வி ஆர்டர் கொடுத்திருந்த டீயை பருகிவிட்டு,
இரவு உணவை முடித்துக் கொண்டு, மீ ண்டும் காருக்குச்
செல்ல, அவரைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் ப்ரித்வியும்
காருக்கு வந்து சேர்ந்தான்.

“லேப்டாப்புக்கு சார்ஜ் போட்டுக்கிட்டீங்களா தம்பி... நாம


கிளம்பலாங்களா?” வழக்கமாக, ஒரு இடத்தில்
ஒய்வுக்கென்று நிறுத்தினால், மீ ண்டும் கிளம்பும் முன்
கேட்கும் கேள்வியை ராமண்ணா கேட்க,

“ஹ்ம்ம்...” ஒற்றை வார்த்தையுடன் தனது வேலையைத்


தொடர்வதற்கு, அவன் லேப்டாப்பை எடுக்க, அப்பொழுது தான்
கார், அந்த ரிசார்ட்டின் வாயிலைத் தாண்டி, ஒரு திருப்பத்தில்
திரும்பியது.

அந்த நேரம், அந்தக் காரை ஒரு இளம்பெண் வழி மறிக்கவும்,


காரை நிறுத்திய ராமண்ணா, “ஹே யாரும்மா நீ ? போய் வேற
வேலையைப் பாரு... நீ சாகறதுக்கு எங்க வண்டி தான்
கிடைச்சதா?” தெலுங்கில் அவளைச் சாடிக் கொண்டே,
ப்ரித்வியைத் திரும்பிப் பார்க்க, அவனோ அவளை உறுத்து
விழித்துக் கொண்டிருந்தான்.

---------

கடற்கரையில், கஜலக்ஷ்மியைத் தேடிச் சென்ற லோகேஷ்


அவளைக் காணாது திகைத்து நின்றான்.

அவனுடன், கஜலக்ஷ்மியை கையோடு கூட்டிக்கொண்டு


செல்லும் எண்ணத்தில் வந்த முல்லை, அவளைக்
காணாததால், வாய்விட்டு கதறத் தொடங்க, லோகேஷும்,
அவர்களுடன் வந்த மாணவர்களும், பதட்டத்துடன் அந்த
இடத்தைச் சுற்றி தேடத் தொடங்கினர்.

“நான் அப்போவே சொன்னேனே கேட்டீங்களா? இப்போ


அவளைக் காணும்... எவனாவது தூக்கிட்டு போய் ஏதாவது
செய்துட்டா? உங்களை நம்பித் தானே கூட வந்தோம்...
இப்படியா நடுக் கடலுல விட்டுட்டு வருவங்க?”
ீ முல்லை
லோகேஷை சாடிப் பேச, பதட்டத்துடன் தேடிக்
கொண்டிருந்தவன், முல்லை சாடவும்,

 Share
o
o
o
o
o
 |
 Like
suganyarangasam, gomathyraja, latharaju89 and 37 others like this.

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

    
 3rd Apr 2015, 10:22 PM#6

ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya
“அவ்வளவு அக்கறை இருக்கறவ, எதுக்கு எங்க கூட வந்த?
அவ கூட துணைக்கு இங்கேயே உட்கார்ந்து இருக்க
வேண்டியது தானே... எப்பவும் கூடவே ஒட்டிக்கிட்டு தானே
சுத்திட்டு இருப்ப... இப்போ உடனே ஊருக்கு போகலைன்னா
உன்னை திட்டுவாங்கன்னு, அவளை விட்டுட்டு வந்தவ தானே
நீ ?” பதட்டம், கோபம், கஜலக்ஷ்மியைக் காணாத ஆத்திரம்,
எல்லாம் சேர்ந்து, முல்லையை வார்த்தையில் கடித்துக் குதற,
முல்லை, கதறத் தொடங்கினாள்.

அவளது புலம்பலையும், கதறலையும் சமாளிக்க முடியாமல்,


உடன் வந்த மாணவிகள் திணற,

“முல்லை... அவளுக்கு ஒண்ணும் ஆகி இருக்காது...


நம்மளைத் தேடி ரூமுக்கு தான் போயிருப்பா... பாரு... நாம
இப்போ அங்க போனா... காளி மாதிரி நின்னுட்டு இருப்பா...”
மனதின் மூலையில் தோன்றிய ஏதோ ஒரு நம்பிக்கையில்,
லோகேஷ் கூறிவிட்டு, அங்கிருந்து, மீ ண்டும் அறைக்கு
ஓடினான்.

அவனது கூற்றில் நம்பிக்கை பெற்றவளாக முல்லையும்


அவனைப் பின்தொடர்ந்து ஓட, அவர்கள் தங்கி இருந்த அறை,
கஜலக்ஷ்மி இல்லாமல் அவர்களைப் பார்த்து கைக் கொட்டிச்
சிரித்தது.

“அய்யோ... அவ இங்கயும் வரலையே...” முல்லை தொடங்க,


லோகேஷ், அவளது செல்லிற்கு தொடர்பு கொள்ளத் துவங்கி
இருந்தான்.
-------------

காரை வழி மறித்த பெண்ணைப் பார்த்த ப்ரித்வி கோபமாக


முறைக்க, அவனைக் கண்டுகொள்ளாத அந்தப் பெண்ணோ,
“ஐயோ... மொழி தெரியாத ஒரு ஊருல வந்து மாட்டிக்கிட்டு
முழிக்கறேனே... கடவுளே என்னைக் காப்பாத்து.. ஏதோ ஒரு
தைரியத்துல, தனியா கிளம்பி வந்துட்டேனே... இப்போ நான்
என்ன செய்வேன்... எப்படி ஊருக்கு போய் சேருவேன்... கஜா
உனக்கு இது தேவையா?” சத்தமாகவே கஜலக்ஷ்மி புலம்பவும்,

“இப்போ புலம்பி என்னம்மா செய்யறது? இந்த நடுராத்திரியில,


எதுக்கு போற வர காரை எல்லாம் வழி மறிக்கிற?”
ராமண்ணா கேட்கவும், அவர் தமிழில் தான் பேசுகிறார் என்று
புரிய,

“ஹை... அண்ணே... நீ ங்க தமிழா... கடவுளே கண்ணைத்


திறந்துட்ட...” என்று கையெடுத்து கும்பிட்டவள், “பிரெண்ட்ஸ்
கூட டூர் வந்த இடத்துல, நான் ரெஸ்ட்ரூம் போயிட்டு பஸ்ல
ஏர்றதுக்குள்ள எங்க பஸ் போயிருச்சுங்கண்ணா... கொஞ்சம்
பக்கத்துல இருக்கற பஸ்ஸ்டாப், அல்லது ரயில்வே ஸ்டேஷன்
வரை என்னை கொண்டு விடறீங்களா? இந்த நேரத்துல
எனக்கு யார் கிட்ட உதவி கேட்கறதுன்னே புரியல...” பாவம்
போல முகத்தை வைத்துக் கொண்டு, அவள் கேட்கவும்,
ராமண்ணா ப்ரித்வியைத் திரும்பிப் பார்க்க,

அவள் கூறியது உண்மையோ என்று எண்ணும் அளவிற்கு


அவள் கையில், கைப்பையைத் தவிர எதுவும் இல்லாமல்
போகவும்,

“எந்த ஊருக்குப் போகணும்?” ப்ரித்வி வாய் திறந்துக் கேட்க,

“இராமநாதபுரம் பக்கத்துல ஒரு கிராமம்... நீ ங்க அவ்வளவு


தூரம் எல்லாம் என்னை கொண்டு விட வேண்டாம்...
பக்கத்துல ஒரு ரயில்வே ஸ்டேஷன்... இல்ல பஸ்ஸ்டாப்ல
போதும்” அவள் கூறவும்,

“அவங்க ஊருக்கே வண்டியை விடுங்க ராமண்ணா....”


ப்ரித்வியின் குரலைக் கேட்டவள், குலை நடுங்க நிற்க,
ராமண்ணா, அவனைப் புரியாமல் பார்த்தார்.

கவிதைகள் தொடரும்........

 Attached Thumbnails   

 Share
o
o
o
o
o
 |
 Like
Divyadevig, suganyarangasam, latha karthik and 66 others like this.
 

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

    
 3rd Apr 2015, 10:26 PM#7

ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya
ஹாய் மக்களே ....

நான் முதல் எபி போட்டுட்டேன் .... திங்கள் மற்றும்


வெள்ளிக்கிழமை என்று வாரம் இரண்டு பதிவுகளாக
கதையைக் கொடுக்கிறேன் பிரெண்ட்ஸ் .... படிச்சுட்டு நீ ங்க
மறக்காம கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் போடணும்... டீலா!!!!

உங்கள் கருத்துக்களை கீ ழே உள்ள தளத்தில் மறக்காமல்


பதிவு பண்ணுங்க பிரெண்ட்ஸ் .... ஒரு வரியா இருந்தாலும்
உங்கள் கருத்தைப் பார்த்தால் நிறைய சந்தோஷமா
இருக்கும்....

விழியோரக் கவிதைகள் -- கமெண்ட்ஸ் 

 Share
o
o
o
o
o
 |
 Like
suganyarangasam, gomathyraja, vaideesh and 31 others like this.
 

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

    
 7th Apr 2015, 07:58 AM#8

ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya
கவிதை – 2 

“அவங்க ஊருக்கே வண்டியை விடுங்க ராமண்ணா...” என்ற


ப்ரித்வியின் பதிலைக் கேட்டு, கஜா பயந்து நடுங்கினாள்
என்றால், ராமண்ணா அவனைப் புரியாமல் பார்த்தார்.

“அய்யோ... அவ்வளவு தூரம் எல்லாம் நீ ங்க என்னை


கூட்டிட்டு போக வேண்டாம்... பக்கத்துல இருக்கற பஸ்
ஸ்டாப்புக்கு கொண்டு விட்டா போதும்... நீ ங்க ரொம்ப பிஸியா
இருக்கீ ங்க போல...” என்றபடி, கையில் லேப்டாப்பை
வைத்துக் கொண்டிருந்தவனை பார்த்து,

“சரி, நான் வேணா வேற வண்டியைப் பார்த்துக்கறேன்... உங்க


ஹெல்ப்புக்கு தேங்க்ஸ்...” ஒருவழியாக தன்னை சமாளித்துக்
கொண்டவள், அங்கிருந்து நழுவ முயல,

அவளை உக்கிரமாக முறைத்த ப்ரித்வி, “உள்ள ஏறு...” என்று


கட்டளையிட, அவனது பார்வையையும், குரலையும்
கேட்டவளின் மூளை தன்னிச்சையாக அந்த கட்டளையை
ஏற்று, கைகள் கார்க் கதவை திறக்க, கால்கள் காரினுள் ஏற
அடியெடுத்து வைத்தன.

அவள் காரில் ஏறி அமர்வதற்கு முன்பே, “நீ எந்த ஊருக்கு


போறன்னு நானும் பார்க்கறேன்... இந்த நடு ராத்திரியில...
இந்த பீ ச் ரிசார்ட்ல நீ என்ன வேலை செய்துட்டு இருக்க? வா
போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவோம்... போற வர வண்டியை
வழி மறிச்சு... ச்சே.. உனக்கே அசிங்கமா இல்ல...” அந்த
அகால நேரத்தில் காரை வழி மறித்த அவளைப் பற்றி, தவறாக
புரிந்துக் கொண்ட ப்ரித்வி, அவ்வாறு கேட்கவும்,

அவன் கேட்கும் கேள்விக்கு முழுதான அர்த்தம் புரியாமல்,


அவனின் மிரட்டும் தொனியை வைத்து, “நீ ங்க.... நீ ங்க
போலீசா?” பயத்துடன் காலை பின்னுக்கு இழுத்துக் கொண்டு
கேட்டவளை, ஏளனமாகப் பார்த்தவன்,

“இல்ல பொறுக்கி... என்னைப் பார்த்தா ரொம்ப நல்லவனா


தெரியுதோ? நான் வெளிய போட்ருக்கற டிரஸ் தான்
டீசென்ட்டா இருக்கும்... ஆனா, உள்ளுக்குள்ள மகா
பொறுக்கி... ஒருவேளை இவரோட நரைச்சத் தலையை
பார்த்தா உனக்கு உத்தமரா தோணுதோ?” நக்கலாக அவன்
கேட்கவும்,
“தம்பி... என்னங்க தம்பி...” அவன் சொல்லிய விதத்தில்
ராமண்ணா அதிர்ந்து கேட்க, அவரை பார்வையால்
அடக்கியவன், அவளைப் பார்த்து புருவம் உயர்த்த,
கஜலக்ஷ்மி, வியர்க்க விறுவிறுக்க அவனை செய்வதறியாது
பார்த்துக் கொண்டு நின்றாள்.

“என்ன பதிலே காணோம்... இப்போ வாயைத் திறந்து


சொல்லப் போறியா இல்லையா? வாயைத் திற...” மீ ண்டும்
அவன் உறுமவும்,

கண்களில் கண்ண ீர் நிறைய, “நிஜமா நான் காலேஜ்


ஸ்டூடென்ட் தான் சார்... இங்கப் பாருங்க என்னோட ஐ.டி.
கார்ட்...” அவன் குற்றம் சாட்டிப் பேசியதில் ரோஷமடைந்து,
தனது கைப்பையைத் திறந்து அவள் காட்டவும், அதை ஒரே
பார்வையில் அலட்சியம் செய்தவன்,

“இதே போல எத்தனையோ ஐ.டி. கார்டை என்னாலையும்


தயார் செய்ய முடியும்...” அதே நக்கலாக அவன் சொல்லவும்,

“ச்சே... உன்கிட்ட போய் இதெல்லாம் காட்டினேன் பாரு...


என்னைச் சொல்லணும்... நீ ஒண்ணும் என்னை நம்ப
வேண்டாம்... தீயில இறங்கி நிரூபிக்க, நான் ஒண்ணும்
சீதையும் இல்ல... நீ ஒண்ணும் ராமனும் இல்ல... போய்யா
போ... போற வழியில நாலு டயரும் பஞ்சராகி நடுகாட்டுல
நிக்கப் போற... நான் என் வழியப் பார்த்துக்கறேன்...”
கோபமாக கூறியவளின் பேச்சிலும், முகத்திலும் இருந்த
உண்மையை உணர்ந்தவன்,
“பேப்பர்ல பக்கம் பக்கமா எவ்வளவு நியூஸ் போட்டாலும்...
அதை எல்லாம் படிச்சிட்டு காத்துல பறக்கவும் விட்டுட்டு,
நடுராத்திரியில தன்னந்தனியா பஸ்ல இருந்து
இறங்கினேன்னு கதை சொல்லிட்டு இருக்க... உனக்கு
கொஞ்சமாவது அறிவு இருக்கா? துணைக்கு யாரையாவது
கூட்டிக்கிட்டு இறங்க வேண்டியது தானே...” மீ ண்டும் அவன்
தொடங்கவும்,

கடுப்பான கஜலக்ஷ்மி, “அய்யா சாமி... தெரியாம உன் கார்ல


லிப்ட் கேட்டுட்டேன்யா... அதுக்காக மூச்சைப் பிடிச்சிக்கிட்டு நீ
பக்கம் பக்கமா வசனம் பேச வேண்டாம்... சிவாஜி கணேசன்
கூட இவ்வளவு நீ ளமா பேசி இருக்க மாட்டார்... போய்யா...
நீ யும் உன் காரும்...” என்று காரை எட்டி உதைத்தவள்,

“சோப்பு டப்பா மாதிரி காரை வச்சுக்கிட்டு... ஃபாரின்ல இருந்து


வந்து குதிச்ச ரஜினி மாதிரி ஒரே சீன போட்டுட்டு இருக்க...
எங்க அப்பா கிட்ட இதை விட பெரிய கார் இருக்கு... அதுல
நான் போனா, ஊரே வாயைப் பிளந்துக் கிட்டு எங்க காரை
வேடிக்கைப் பார்க்கும்... தெரியுமா உனக்கு?” அவனிடம்
எரிந்து விழவும், அவள் கூறிய விதத்தில், ராமண்ணாவின்
இதழில் புன்னகை அரும்ப, ப்ரித்வியோ கற்சிலையாகவே
அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

 Share
o
o
o
o
o
 |
 Like
suganyarangasam, gomathyraja, latharaju89 and 40 others like this.

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

    
 7th Apr 2015, 08:05 AM#9

ramyas 
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya

“ஏய் என்ன திமிரா?... இதைப் போய் சோப்பு டப்பான்னு


சொல்ற?” ப்ரித்வி எகிற,

“ஆமா, திமிரு தான்... இப்போ என்னங்கற? இந்த சோப்பு டப்பா


காரை வச்சுக்கிட்டு என்ன மிரட்டு மிரட்டற? என்னை எங்க
ஊருக்கே கூட்டிட்டு போறேன்னு சொன்ன இல்ல... இப்போ
சொல்றேன்... நீ என்னை கூட்டிட்டு போய் விட்டுத் தான்
ஆகணும்... இல்ல... நான் இங்க ரோடுல உட்கார்ந்து தர்ணா
செய்வேன்...” கஜலக்ஷ்மி பிடிவாதமாக காரில் ஏறவும்,
ப்ரித்வியின் குணம் தெரிந்த ராமண்ணா முழிக்க, அவனைப்
பற்றி எதுவும் புரியாத கஜலக்ஷ்மி, சட்டமாக ஏறி அமர்ந்தாள்.

அவள் அவ்வாறு சட்டமாகப் பேசவும், மேலும் கோபமடைந்த


ப்ரித்வி, “ஏய் கார்ல இருந்து இறங்கு... என் கார்ல ஒரு
பொண்ணா? அய்யே... கீ ழ இறங்கு முதல்ல... ஏதோ போனா
போகுதுன்னு பார்த்தா.... என்னவோ உன்னோட கார் போல
ஏறி உட்கார்ந்து இருக்க? என் வண்டியில பொண்ணுங்கள
கூட்டிட்டு போறது எனக்குப் பிடிக்காது...” என்று அவளை
காரில் ஏறச் சொன்னதை மறந்து, அவளைப் பிடித்து தள்ள
எத்தனித்தவனை தடுத்த ராமண்ணா,

“தம்பி... இந்த நடுராத்திரியில இந்த சின்னப் பொண்ண இங்க


இறக்கி விட்டுட்டு போனா... ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகப்
போகுது... பின்னாடி, அது நமக்குத் தெரிஞ்சா, நம்ம
மனசாட்சியே நம்மளை கேள்வி கேட்கும் தம்பி... பாவம் சின்ன
பொண்ணு... நாம இந்தப் பொண்ணை, பக்கத்துல இருக்கற
ரயில்வே ஸ்டேஷன்ல இறக்கி விட்டுட்டு போகலாம்..”
அவனிடம் பேசும் விதத்தில் பேசி, அவர் அனுமதி கேட்க,

“ஏன்... இருந்து ட்ரைன் ஏத்தி விட்டு, டாட்டா காட்டிட்டு


வாங்களேன்... எவ்வளவு திமிரா ஏறி உட்கார்ந்து இருக்கா
பாருங்க.... தனிமையைத் தேடித் தானே, நான் ஊர் ஊரா கார்ல
திரியறேன்... கூட ஒரு இம்சையை ஏத்தினா, நான் வந்த
காரியம் உருப்பட்டா மாதிரி தான்... எனக்கு எவ்வளவு வேலை
இருக்குன்னு உங்களுக்கு தெரியும் தானே...” அவனது குரலில்,
கஜாவைத் திரும்பிப் பார்த்தவர், அவள் பாவமாக முகத்தை
வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கவும், ராமண்ணா
ப்ரித்வியை கெஞ்சலாகப் பார்க்க,

“என்ன?” என்ற அவனின் கோபக் குரலிலேயே,

“இல்ல தம்பி... எப்படியும் நாம பயணம் போகத் தானே


போறோம்... இப்போ நான் அவங்க ஊர் பக்கமே வண்டிய
ஓட்டறேன்... உங்க வேலை முடிஞ்சதும் சொல்லுங்க தம்பி...
எந்த இடத்துல நீ ங்க ‘வேலை முடிஞ்சது’ன்னு
சொல்றீங்களோ, அங்கேயே அந்த பொண்ண பஸ் ஏத்தி
விட்டுட்டு, நாம ஊருக்குத் திரும்பிடலாம்...” தயக்கமாக அவர்
ஒரு வழியைச் சொல்லவும்,

“அவ இதுக்கும் மேல வாயைத் திறந்து பேசினா... அப்படியே


பிடிச்சு கார்ல இருந்து வெளியத் தள்ளிடுவேன்...
சொல்லிட்டேன்...” ப்ரித்வி கோபமாகக் கூறியதை கேட்டவள்,
முகத்தை நொடித்துக் கொண்டு,

“சொன்ன அஞ்சே நிமிஷத்துல மாத்தி மாத்தி பேசறவர் நீ ங்க...


இதுல சொன்னா செய்துடுவாராம்... நாங்க அப்படியே
நடு...டு...ங்கிட்டோம்...” அவனைப் பார்த்து முணுமுணுக்க,

அதில் மேலும் கடுப்பானவன், “நான் சொன்னா


செய்துடுவேன்... உங்களுக்குத் தெரியுமே ராமண்ணா...”
அவளிடம் நேரிடையாகப் பேசாமல்,
ப்ரித்வி ராமண்ணாவிடம் எச்சரிக்கவும், அதுவே அவனது
சம்மதமாக ஏற்றவர் காரைக் கிளப்பினார்.

“ஹப்பா... என்ன சூடு... என்ன சூடு... ராமண்ணா.. கொஞ்சம்


ஏ.சி.யை பெருசா வைங்க... ரொம்ப வேர்க்குது...” அவன்
கூறியது எதுவும் என்னை பாதிக்காது என்பது போல,
ராமண்ணாவிடம் கூறியவள், நன்றாக சாய்ந்துக் கொண்டு,
சீட்டில் அமர, ப்ரித்வி அவளைப் பார்த்து முறைத்தான்.

“இன்னும் நீ ங்க ஏ.சி.ய பெருசா வைக்கலையா? சூடு ஓவரா


இருக்கு... எப்படி நீ ங்க இதுல வரீங்க? விட்டா வெந்து
போயிருவோம் போல...” வாயைச் சும்மா வைத்துக் கொண்டு
இருக்காமல், அவள் ப்ரித்வியை சீண்டவும்,

“ராமண்ணா... ஏதோ நீ ங்க அவளோட பாதுகாப்பு பத்தி


சொன்ன ீங்கன்னு தான் அவளை கார்ல ஏற அனுமதிச்சேன்...
இதுக்கும் மேல அவ பேசினா... அவளை ஓடற வண்டியில
இருந்து தள்ளி விட்டுடுவேன்...” மீ ண்டும் சிறு பிள்ளைப் போல
அவன் சொல்லவும்,
“கொஞ்சம் பேசாம வாம்மா... அவருக்கு அதிகம் பேசினா
பிடிக்காது...” ராமண்ணா அவளை அடக்கவும், வாய் மீ து
விரலை வைத்து, சிறிது நேரம் அமைதியாக வந்தவளின்
கண்கள் சொருகத் தொடங்க, வேலை முடித்து, ப்ரித்வியும்
கண்களை மூடினான்.

அப்பொழுது கஜலக்ஷ்மியின் செல்போன் இசைக்கத்


தொடங்கவும், பதட்டமாக ராமண்ணா கஜலக்ஷ்மியைப்
பார்க்க, அவளோ சாவகாசமாக, செல்போனைப்
பார்த்துவிட்டு, அதை இயக்காமல், தனது கைப்பையில்
வைத்துக் கொண்டாள்.

மீ ண்டும் மீ ண்டும் அது தனது இருப்பை உணர்த்தவும், “அது


தான் விடாம அடிக்குதில்ல... எடுத்து பேசேன்... உன்
பிரெண்ட்ஸ் உன்னைக் காணோம்னு போன்
செய்திருப்பாங்க....” உறக்கம் கலைந்து எழுந்த ப்ரித்வி
கடியவும், போனை எடுத்தவள்,

“டேய் லோகேஷ்... நான் இங்க, ஒரு ரொம்ப நல்லவர்


வண்டியில எங்க ஊருக்கு போயிட்டு இருக்கேன்... என்னை
ஊருக்கே கொண்டு போய் விடறாராம்... எங்க ஊர் நாட்டாமை
கிட்ட சொல்லி, அவருக்கு ஊர் நடுவுல சிலை வச்சுடலாம்...
கண்டிப்பா சிலைக்கு மேல குடை வைக்கணும்... பா...வ...ம்
எங்க ஊர் வெயில் தாங்காது இல்ல...” என்று அவனைப்
பார்த்து கிண்டல் செய்தவள், ப்ரித்வி பல்லைக் கடிக்கவும்,
“லோகேஷ்... நம்ம பெட் படி, உனக்கு முன்னால நான் தான்
ஊருக்கு போய் சேரப் போறேன்... கார் சும்மா ஜெட் வேகத்துல
பறக்குது. சோ, நான் ஜெயிக்கப் போறதால, இப்போ என்னோட
கல்யாணம் நடக்காது இல்ல..” விளையாட்டாக அவள்
பேசவும், ப்ரித்வி அவளது செல்போனை பறித்தான்.

“அறிவு இருக்கா கஜா உனக்கு... மூளைக்கு பதிலா பஞ்சை


அடைச்சு வச்சிருக்கான் போல அந்த கடவுள். உன்னை பீ ச்ல
காணோம்னு நாங்க எப்படி எல்லாம் தேடினோம் தெரியுமா?
இங்க உயிரே போற மாதிரி முல்லை கதறிட்டு இருக்கா... இது
எதைப் பத்தியும் கொஞ்சம் கூட கவலைப்படாம, எங்கயோ,
யார் கூடவோ கார்ல போய்க்கிட்டு, நான் முன்னால
போயிருவேன்னு சொல்ற... அவ்வளவு நெஞ்சழுத்தமா
உனக்கு? கொழுப்புடி... உன்னை எல்லாம் நம்பி படிக்க
அனுப்பிச்சாங்க பாரு... அவங்களைச் சொல்லணும்...”
லோகேஷ் போனில் அவளை காய்ச்சி எடுக்க, அருகே இருந்த
கஜலக்ஷ்மியை முறைத்தவன்,

“நீ ங்க எல்லாம் எங்க இருக்கீ ங்க?” ப்ரித்வி கேட்கவும்,


சட்டென்று கேட்ட ஆண் குரலில், லோகேஷ் அதிர்ந்து,

“சார்... நீ ங்க யாரு சார்?” பதில் கேள்வி கேட்கவும்,

“நான் யாருங்கறது இருக்கட்டும்... நீ ங்க எல்லாம் எங்க


இருக்கீ ங்கன்னு கேட்டேன்...” அழுத்தமாக அவன் வினவ,

“நாங்க எல்லாம் விசாகபட்டினம் பீச் ரெசார்ட்ல தான்


இருக்கோம் சார்... இவளைக் காணோம்னு தேடிட்டு
இருக்கோம்...” பதட்டமாக அவன் சொல்லவும்,

“சரி.. ரொம்ப நல்லது. இனியும் நேரத்தைக் கடத்தாம


நீ ங்க எல்லாரும் பத்திரமா ஊருக்கு போற வழியைப்
பாருங்க... உங்க பிரெண்ட்டுக்கு ஒரு பாடம் கத்துக்
கொடுத்துட்டு, அவளை கூட்டிட்டு போய், அவ வட்ல
ீ பத்திரமா
விடறேன்... நீ ங்க கவலைப்படாம கிளம்புங்க” ப்ரித்வி
சொல்லவும், சில நொடிகள் அமைதிக்குப் பிறகு,

“வேணாம் சார்... உங்களுக்கு எதுக்கு வண்


ீ சிரமம்...”
லோகேஷ் தொடங்குவதற்கு முன்,

“அவ பத்திரமா இருக்கா... நீ ங்க எல்லாம் கவலைப்பட


வேண்டாம். இவளை நினைச்சு பைத்தியம் மாதிரி
கதறிக்கிட்டு இருக்கற பொண்ணுகிட்டயும் சொல்லிருங்க...
இவ எல்லாம் அந்தக் கண்ண ீருக்கு தகுதி இல்லாதவள்னு..”
ஒரு மாதிரி குரலில் ப்ரித்வி சொல்லவும், அத்தனை நேரம்
தெனாவட்டாக அமர்ந்திருந்த கஜலக்ஷ்மியின் நெஞ்சில் குளிர்
பிறந்தது.

“சார்... நீ ங்க எங்க இருக்கீ ங்கன்னு சொல்லுங்க சார்... நாங்க


வந்து அவளை கூட்டிட்டு போறோம்... நல்லவேளை உங்களை
மாதிரி நல்லவங்க கூட அவ கிளம்பினா... இல்ல என்ன ஆகி
இருக்கும்? வட்டுக்கு
ீ தெரியாம வேற வந்திருக்காளுங்க சார்...
அவ ஒரு மறை கழண்ட லூசு சார்... சண்டி ராணி... ப்ள ீஸ்,
நீ ங்க இருக்கற இடம் சொல்லுங்க... நாங்க வந்து கூட்டிட்டு
போறோம்” ப்ரித்வி கூறியதைக் கேட்ட லோகேஷ் கெஞ்சத்
துவங்க,
“போனை வச்சிட்டு நீ ங்க நிம்மதியா ஊருக்கு போய்
சேருங்கன்னு சொன்னேன்... இவள பத்திரமா ஊருக்கு
கொண்டு போய் விட வேண்டியது என் பொறுப்பு... நான்
மட்டும் தனியா இல்ல... என்னோட டிரைவரும் இருக்கார்...
கொஞ்சம் வயசானவர் தான்... அவருக்கும் ரெண்டு
பொண்ணுங்க இருக்கு... அதனால இவளுக்கு எங்களால எந்த
ஆபத்தும் வராது.. கொஞ்ச நேரத்துல என்னைப் பத்தின
டீடைல்ஸை மெசேஜ் அனுப்பறேன்... இப்போ நான் போனை
வைக்கிறேன்... ஸ்விட்ச் ஆஃப் செய்யறேன்னு சொல்ல
வரேன்...” என்றவன்,
தன்னைப் பற்றிய விவரத்தை மெசேஜ் அனுப்பிவிட்டு,
போனை அணைத்து, தன்னுடைய பாக்கெட்டில்
போட்டுக்கொள்ள,

“இப்போ எதுக்கு போனை ஆஃப் பண்ணற...? ஏன்... ஏன்..


என்னை அவங்க கூட விட மாட்டேங்கிற? அவங்க தான் வந்து
கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க இல்ல...” கஜா அவனிடம்
இருந்து போனை பறிக்க முயல,

“உன்னை அவ்வளவு தூரம் கொண்டு போய் விடறேன்னு


சொன்னது எதுக்குத் தெரியுமா, நீ சொன்ன கதையை எல்லாம்
நம்பினேன் பாரு... அதுக்கு எனக்கான தண்டனை. இப்போ
செல்போனை எதுக்கு பிடுங்கி வச்சிருக்கேன் தெரியுமா?
பெத்தவங்ககிட்ட பொய் சொல்லிட்டு டூர் வந்திருக்க பாரு...
அதுக்கான தண்டனை... இனிமே பொய் சொல்லவே நீ
யோசிக்கணும்... அதுக்குத்தான் இந்த மாதிரி, உனக்கு பாடம்
சொல்லித் தரேன்...” என்றவன், தனது கண்களை மூடிக்
கொள்ள,

“தம்பி...” ராமண்ணாவின் அழைப்பிற்கும் பதில் இல்லாமல்


போக, அவனது இறுக்கத்தை பற்றி அறிந்தவர்,
மௌனமானார்.

“ஏய் என்னை என்ன செய்யப் போற? நீ யாரு?” மீ ண்டும்


மீ ண்டும் கஜாவின் கேள்விக்கு பதில் இல்லாமல், கண்களை
மூடிக் கொண்டு இருந்தவனைப் பார்த்த கஜலக்ஷ்மிக்கு,
அத்தனை நேரம் இருந்த தைரியம் போய், கண்களில் கண்ண ீர்
வடியத் துவங்கியது.

“அம்மா... நீ ங்க கவலைப்படா... நீ பத்திரமா ஊருக்கு போய்


சேருவ... தம்பி வாக்கு கொடுத்தா, அதை கண்டிப்பா
நம்பலாம்...” ராமண்ணா சொல்லவும்,
சிறிது நேரம் அமைதியாக கண்ண ீர் விட்டவள், ராமண்ணா
திரும்பத் திரும்ப சொல்லவும்,

“உங்களுக்காக நம்பறேன்...” என்றவள், சிறிது நேரம்


அமைதியாக இருக்க, அப்படியே உறங்கியும் போனாள்.

அதே நேரம், லோகேஷ், முல்லையை சமாதானம் செய்துக்


கொண்டிருந்தான். ஆனால், அவனது எந்த சமாதானமும்
அவளது காதில் விழாமல் போக, “இவங்க ரெண்டு பேரையும்
கூட்டிட்டு வந்ததுக்கு சமாதானம் பேசியே ஒழிஞ்சு போவோம்
போல... முல்லை, இப்போ நீ ஊருக்கு கிளம்பல... அப்பறம்
உன்னையும் இங்கயே விட்டுட்டு போயிருவோம்...” லோகேஷ்
மிரட்டவும், தங்கள் ஊரிலுள்ளோருக்கு பயந்தவள்,

“ஆளாளுக்கு இப்படி செய்தா நான் என்ன தான் செய்வேன்..


அந்த லூசு கொஞ்சம் கூட பயமே இல்லாம இப்படி செய்து
வச்சிருக்கு... ஊருக்குள்ள அவ இல்லாம நான் கால் வச்சேன்...
எனக்கு உப்புக் கண்டம் நிச்சயம் தான்...” என்ற புலம்பலுடன்
முல்லை,
அவர்களுடன் பஸ் ஏறினாள்.

 Share
o
o
o
o
o
 |
 Like
suganyarangasam, gomathyraja, latharaju89 and 35 others like this.

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 


    
 7th Apr 2015, 08:11 AM#10

ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya

“லோகேஷ்... திரும்பவும் அவளுக்கு பேசி... ஒரு இடத்துல


நிக்க சொல்லு... கூடவே கூட்டிட்டு போகலாம்... எங்க மாமா
வந்து எங்களை ஊருக்குக் கூட்டிட்டு போற அன்னைக்கு,
அவளும் ஹாஸ்டல்ல இல்லன்னா நான் தொலைஞ்சேன்...
எங்க ஊரைப் பத்தி உனக்குத் தெரியாது லோகேஷ்... இப்போ
அவ தனியா ஊருக்கு போனா... அங்க நடக்கறதே வேற...
உங்களுக்கு எல்லாம் சொன்னா புரியாது...” முல்லை
பொருமிக்கொண்டே வர,

“இப்போ நீ வாய மூடிக்கிட்டு வா முல்லை... அவரு பத்திரமா


கொண்டு போய் விடறேன்னு சொல்லி இருக்கார். அவர்
பெங்களூர்ல பெரிய கார் பாக்டரி வச்சிருக்கார் போல...
அட்ரஸ் அனுப்பி இருக்கார்... அதோட சேர்த்து அவரோட
டீடைல்ஸ் பத்தி கொஞ்சம் அனுப்பி இருக்கார்... கூடவே ஒரு
போலீஸ் ஆஃபீ சரோட நம்பரும் அனுப்பி இருக்கார்...
வேணும்னா அவரைப் பத்தி விசாரிக்க... நான் இப்போ தான்
நெட்ல அந்த போலீஸ் ஆஃபீசர பத்தி பார்த்தேன்... ரொம்ப
நேர்மையானவர்ன்னு போட்டு இருக்கு... அவரோட நம்பர
அனுப்பி இருக்கார்ன்னா கொஞ்சம் நம்பிக்கை வருது...”
லோகேஷ் பொறுமையை இழுத்துப் பிடித்து, முல்லையை
சமாதானம் செய்ய முயல,

“இந்த மாதிரி வெளிய நேர்மையா இருந்துக்கிட்டு,


உள்ளுக்குள்ள மோசமான ஆளுங்கள நாம எத்தனை
சினிமால பார்த்து இருக்கோம்... போன் செய்து கேளு
லோகேஷ்...” சினிமாவில் வரும் காட்சிகளை நினைவு கூர்ந்து
முல்லை சொல்லவும்,

“இல்ல முல்லை... இந்த அளவுக்கு விவரம் சொல்றவர்,


கண்டிப்பா நல்லவரா தானே இருக்கணும்... அவ பத்திரமா
வருவா... எங்களுக்கும் அவளைப் பத்தின கவலை இருக்கு...
அவளைக் கொண்டு விடறேன்னு சொன்னவர் குரலுலையும்
எந்த தடுமாற்றமும் இல்ல... எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு
இருக்க?” ஒருவாறு அவளைத் தேற்றிய லோகேஷ், மற்றும்
குழுவினர், ஊருக்கு புறப்பட்டனர்.

காலை வெயில் சுள்ளென சுட்டெரிக்க, காரின் திரையைத்


தாண்டி, அந்த மிதமான ஏ.சி. குளிரையும் மீ றி, கஜாவின்
முகத்தில் சூரியனின் கதிர்கள் பட்டுத் தெறிக்க, மெல்ல விழி
மலர்தியவளின் கண்கள் தன் இருப்பிடத்தை உணர முயன்றது.
“இன்னும் பீச்லயா இருக்கோம்?” சுற்றி பார்வையை ஓட்டிக்
கொண்டே, அதிர்ச்சியுடன் அவள் கேட்கவும்,

“ஆமா... ராத்திரியில இருந்து இங்க தானே இருக்கோம்...”


என்ற குரலைக் கேட்டவள், அடித்து பிடித்து எழுந்து அமர,
ராமண்ணா கண்களில் சிரிப்புடன் அவளைப் பார்த்துக்
கொண்டிருந்தார்.

“என்ன ராத்திரியில இருந்தா?” அவசரமாக இறங்கி அவள்


நிற்க,

“பின்ன... வண்டி நின்னது தெரியாம குறட்டை விட்டுத் தூங்க


வேண்டியது... இப்போ சாவகாசமா எழுந்து கேள்வி கேட்க
வேண்டியது... ஒரு பொண்ணு இவ்வளவு பொறுப்பில்லாம
இருப்பியா? முன்பின் தெரியாதவங்க வண்டியிலயும் ஏறிட்டு...
என்ன தைரியம் இருந்தா தூங்குவ?” ப்ரித்வி விடாமல்
அவளை வறுத்தெடுக்கத் தொடங்கவும், சிறிது நேரம்
பொறுத்துப் பார்த்த கஜா, வேகமாக ரோட்டை நோக்கி நடக்கத்
தொடங்கினாள்.

அவள் என்ன செய்யப் போகிறாள் என்று உத்தேசித்தவனாக,


சிறிது நேரம் அவளை வேடிக்கைப் பார்த்தவன், “என்ன
திட்டினாலும் திருந்தாத ஜென்மம்...” என்ற முணுமுணுப்புடன்,
ஜாகிங் ஓடத் துவங்க,

“அய்யோ... அந்த பொண்ணு தனியா இப்படி போகுதே... இவர்


அதை கண்டுக்காம ஜாகிங் போறார்.... இப்போ என்ன செய்ய?
இப்படி போனா ரோடுக்கு போக ரொம்ப நேரம் ஆகுமே...”
ராமண்ணா, யோசித்து, அவள் பின்னால் ஓடினார்.

“அம்மா... பொண்ணே... இப்படி நடந்து போனா... நீ ஊருக்கு


போய்ச் சேர ஒரு வருஷம் ஆகும் பரவால்லயா?” அவர்
கேட்கவும், நடக்காமல் நின்றவள்,

“அந்த ஆளோட கடுகடு முகத்தையும் பேச்சையும்


கேட்கறதுக்கு, நான் இப்படி நடந்தே போய் சேர்ந்துடுவேன்...
ஏதோ கொஞ்சம்அசந்து தூங்கிட்டேன்... அதுக்கு இப்படியா
திட்டுவாங்க... பார்க்க நல்ல மனுஷங்களா இருக்கறதுனால
தானே ஏறினேன்...” ரோஷமாக அவள் கேட்கவும், அவளைப்
பார்த்து நிதானமாக புன்னகைத்தவரைப் பார்த்து, அவளுக்கு
பற்றிக் கொண்டு வந்தது.

“அவர் என்னடான்னா கல்லு மாதிரி முகத்த வச்சுக்கிட்டு


கடுகடுக்கறார்... நீ ங்க என்னடான்னா சிரிச்சே கொல்றீங்க?”
சலித்துக் கொண்டவளைப் பார்த்து மீ ண்டும் புன்னகைக்க,

“ராமண்ணா...” அவள் பல்லைக் கடிக்கவும்,

“தம்பியோட முகமே அப்படித் தான்ம்மா... அவர் சிரிச்சு,


யாருமே பார்த்து இருக்க மாட்டாங்க... ஏன் நானே பார்த்தது
இல்ல.. அவர் இந்த கார் கம்பெனி ஆரம்பிக்கும்போது, நான்
அவர் கூட சேர்ந்தேன்... கிட்டத்தட்ட எட்டு வருஷத்துக்கும்
மேல ஆகுது... கடின உழைப்பாளி... இரக்க குணமும் அதிகம்
உண்டு.. ஆனா அதையும், அவருக்கு கண்டிப்பாகத்தான்
காட்டத் தெரியும்... அவர் வளர்ந்த விதம் அப்படி... அவரைக்
குறை சொல்ல முடியாது...” அவர் சொல்லவும்,
“காசு கொடுக்கற முதலாளின்னு நீ ங்க சொல்றீங்க? ஆனா,
என்னை ஊருல விட்டுட்டு நீ ங்க திரும்ப உங்க ஊருக்கு
போகணும்னா எவ்வளவு நாள் ஆகும்... உங்களுக்கு குடும்பம்
இல்ல... அவங்களை நீ ங்க பார்த்துக்க வேண்டாமா?” எதுவோ
தோன்றவும் அவள் கேட்க,

“அடிக்கடி இப்படி வரது எனக்கு வழக்கம் தான்ம்மா... இப்படி


அவரோட வந்து, பல நாட்கள் கழிச்சு நான் வட்டுக்குப்
ீ போகும்
போது, கையில கிடைக்கிற பணத்தை எனக்குத்
தருவார்ம்மா... இது போல, எத்தனை நாட்களுக்கான
ட்ரிப்புன்னு தெரியாம, அவர் ஊருக்கு கிளம்பும் போது,
இவரோட செக்கரெட்டரியம்மா தான் எங்க வட்டுக்கு
ீ போய்
எல்லாத்தையும் கவனிச்சுப்பாங்க... அதனால எனக்கு எங்க
வட்டவங்களைப்
ீ பத்தின கவலை இல்லம்மா..” அவர்
பெருமையாக சொல்லவும், கஜா அவரை ஆச்சரியமாகப்
பார்த்தார்.

“அவர் குணமே கோபக்காரர் தான்மா... அதை எல்லாம்


கண்டுக்காதீங்க... இப்போ நாம காக்கிநாடா கிட்ட
இருக்கோம்... வந்து ஒரு மணி நேரம் தான் ஆகுது... இருக்கற
இடம், புது மனுஷங்க என்று எதைப் பத்தியும் கவலைப்படாம
நீ தூங்கவும், அவருக்கு கோபம் வந்திருச்சு... வேற ஒண்ணும்
இல்ல... ஒரு பொண்ணு இப்படி ராத்திரியில தனியா கிளம்பி
வரலாமா?

நாட்டுல எவ்வளவு தப்பு நடக்குது... எப்படி எல்லாம் நியூஸ்


கேள்விப்படறோம்... படிச்ச பொண்ணு இப்படி எதைப் பத்தியும்
கவலைப்படாம யார் கிட்டயும் சொல்லாம வந்தது ரொம்பத்
தப்பும்மா... அது தான் அவரோட கோபம்... கொஞ்ச நேரம்
ஆகட்டும்... எல்லாம் சரியா போயிரும்...” ப்ரித்வியை
உணர்ந்த ராமண்ணா சொல்லவும், அவள் செய்த தவற்றை
எடுத்து உரைதத்தில், கஜா அமைதியாகிப் போக, அதே நேரம்,
யாருடனோ கோபமாக பேசிக் கொண்டே, ப்ரித்வி, காரின்
அருகே வர, ராமண்ணா அவன் அருகில் ஓடினார்.

“சரியான கடுவன் பூனையா இருப்பான் போல... எப்பப் பாரு


யாரையாவது கத்திட்டு இருந்தா தான் பொழுதே போகுமோ?
இவனோட வைஃப் இவன் கூட எப்படி இருக்காங்க?” என்ற
யோசனையுடன், கஜாவும் காருக்குச் சென்றாள்.
கவிதைகள் தொடரும்....

 கவிதை - 3
எந்த அதட்டல்களுக்கும்
அலட்டிக் கொள்ளாத
உன் பட பட பேச்சில்
கோபத்தைக் காட்ட மறந்து
இரசித்து தொலைக்கிறேன்!!
“எங்கிட்டயே பொய் சொல்லி தப்பிக்கப் பார்க்கறானா?
அவனை விடக் கூடாது.... விட்டீங்க உங்கள சும்மா விட
மாட்டேன்... அவன் கிடைக்கலைன்னா, அவன் குடும்பத்தை
கூட்டிட்டு வந்து நம்ம கஸ்டடியில வைங்க... அப்போ, தானா
வழிக்கு வருவான்...” கோபமாக சொல்லிவிட்டு, போனை
வைத்தவன்,

“ச்சே...” என்ற முணுமுணுப்புடன் முகத்தை சுளித்துக்


கொண்டவளைப் பார்த்து,

“என்ன முனகற?” எரிச்சலாக அவன் கேட்கவும்,

“உனக்கும் பிள்ளை குட்டி, பொண்டாட்டின்னு குடும்பம்


இருக்கு இல்ல... அவங்களை எவனாவது இப்படி
தன்னோடகஸ்டடியில கொண்டு வரேன்னு சொன்னா உனக்கு
எப்படி இருக்கும்? நீ எல்லாம் ஒரு மனுஷனா? தெரியாம நான்
லிப்ட் கேட்டேங்கற காரணத்துனால, தூங்கக் கூட
கூடாதுன்னு சொல்ற கொடூரமான ஆளு தானே நீ ? உன்
பொண்டாட்டியோட போன் நம்பரைக் கொடு... நான்
அவங்ககிட்டயே நியாயம் கேட்கறேன்... உன்னை இப்படி சுத்த
விட்டுட்டு அவங்க என்ன செய்யறாங்க?” புரட்சிப் பெண்ணாக
உருமாறி, நியாயம் கேட்கக் கிளம்பியவளை பார்த்து நக்கலாக
உதட்டை சுளித்தவன்,

“ஒரு பெண்ணை நம்பி என் வாழ்க்கையைக் கொடுக்க, நான்


ஒண்ணும் முட்டாள் இல்ல...” என்று முடிக்க, அவன் கூறிய
விதத்தில், கஜலக்ஷ்மிக்கு கோபம் பொங்கியது.

“அப்போ கல்யாணம் செய்யறவன் எல்லாம் முட்டாளா?”

“நான் அப்படி சொல்லல... நான் முட்டாள் இல்லன்னு


சொல்றேன்...” அதே நக்கலான குரலில் அவன் சொல்லவும்,

“உங்க அம்மாவும் ஒரு பெண் தானே... அவங்க கிட்ட


வாழ்க்கைய ஒப்படைச்ச உங்க அப்பா என்ன முட்டாளா?”
அவனை காயப்படுத்தி விடும் நோக்கோடு
அவள் பேச,

“எங்க அம்மாவை இங்க இழுத்த, அடிச்சே கொன்னுடுவேன்...


அவங்க புண்ணியவதி...” அவன் உறுமவும்,

“சத்தமா பேசிட்டா, உடனே நீ சொல்றது எல்லாம் நியாயம்


ஆகிடாது... உனக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா?
புருஷன் ஓடிப் போனா, உடனே அவன் குடும்பத்தை
தூக்குவியா? உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா?
குடும்பத்தை கஸ்டடியில கொண்டு வருவங்களா?

அவங்களை கொண்டு வந்து வச்சு... வச்சு.. என்ன செய்வங்க?

நீ யே நாடோடி.... நீ குடும்பத்தை தூக்கறியா?

உனக்கு குடும்பத்தோட அருமை பத்தியெல்லாம்


கொஞ்சமாவது தெரியுமா? இப்படி ஊர் சுத்தறதையே
வழக்கமா வச்சு இருக்கற உனக்கு, குடும்பத்தோட
அருமையெல்லாம் எப்படிப் புரியும்?” அவன் போனில்
பேசியதை அரைகுறையாக கேட்டு, விஷயத்தை சரியாகப்
புரிந்துகொள்ளாத கஜா பொரியத் தொடங்கவும், “ஏய்....”
ப்ரித்வி உறுமிய உறுமலில், கஜலக்ஷ்மி நடுங்கியே போனாள்.

“எனக்கா குடும்பத்தோட அருமை தெரியாது? ஆமா... நான்


அனாதை தான்... இப்போ அதுக்கு என்னங்கற? எனக்கு
குடும்பத்தைப் பத்தி ஒண்ணுமே தெரியாது தான்... அது என்
தப்பா... என் தப்பா? சொல்லு….

ராஜா மாதிரி வட்டுக்குள்ள


ீ சுத்தி வந்தவனை, ஒரே நாள்ல ‘நீ
அனாதை... உனக்கும், இந்த வட்டுக்கும்,
ீ சொத்துக்கும்
சம்பந்தம் இல்ல’ன்னு சொல்லி, அதே வட்ல
ீ ஒரு வருஷம்
வரை, நாய் மாதிரி நடத்தி இருக்காங்க, அவ்வளவு
கஷ்டப்பட்டு இருக்கேன்...

என்னை வளர்த்தவர், எந்த தெருவுல, என் கால்ல தூசி கூட


படக் கூடாதுன்னு நினைச்சு கார்லயே சுத்த விட்டாரோ... அதே
தெருவுல கால்ல செருப்புகூட இல்லாம நடந்திருக்கேன்...
தெரியுமா உனக்கு?” அவளிடம் கர்ஜிக்கவும், செய்வதறியாது
அவள் திகைக்க,

“தம்பி... அது ஏதோ சின்னபிள்ள, தெரியாம...” ராமண்ணா


இடைப்புகவும்,

“என்ன ராமண்ணா தெரியாம சொல்றது? எனக்கு


குடும்பத்தைப் பத்தி தெரியாதா? சொல்லுங்க.. எனக்குத்
தெரியாது? ஒரே நாள்ல என் வாழ்க்கை மாறிப் போன கதை
உங்களுக்கு தெரியும் தானே? எங்க அப்பா
இறந்துட்டாங்கன்னு, அந்த துக்கம் தாங்காம, தூக்க
மாத்திரையை சாப்பிட்டு, அம்மான்னு ஆதரவா இருந்த
ஒருத்தங்களும் போய் சேர்ந்த கதை தெரியுமா தெரியாதா?

அந்த அதிர்ச்சியில இருந்து வெளிய வரதுக்குள்ள, சித்தப்பா


வந்து, ‘நீ எங்க அண்ணனோட சொந்தப் பையன் இல்ல...
கன்னியாகுமாரில ஒரு பாறையில உட்கார்ந்து அழுதுக்கிட்டு
இருந்தவன்... பாவப்பட்டு, எங்க அண்ணா தூக்கிட்டு வந்து
வளர்த்தார்ன்னு சொன்னார்... எனக்கு எப்படி இருக்கும்?
அதோட விட்டாரா.... போடா மாட்டு கொட்டகைக்குன்னு
தள்ளி இல்ல விட்டார்... என்ன செய்ய? அந்த பதினஞ்சு
வயசுல... அதிர்ச்சியில, எனக்கு ஒரு விவரமும் புரியல... ஒரே
நாள்ல அனாதை ஆகிட்டேன்...

எல்லாத்தையும் இழந்து நிற்கதியா நின்னு, இந்த ஒரு ஜாண்


வயித்துக்கான சோத்துக்கு, என்ன பாடு பட்டிருப்பேன்...
அப்போதான் தெய்வாதீனமா, என் நிலைமையைக்
கேள்விப்பட்டு, ஊருக்கு போயிருந்த அப்பாவோட வக்கீ ல்
வந்து, அப்பா எழுதி வச்சுட்டுப் போன உயிலை பத்திச் சொன்ன
போது தானே, என்னை வளர்த்தவங்க என்னை நிற்கதியா
விட்டுடலை, என்னை ஒரு அனாதையா நடத்தாம, சொந்த
பிள்ளையா தான் நினைச்சு இருக்காங்கன்னு புரிஞ்சது...
அதுக்கப்புறம் அந்த உயிலின் பிரகாரம் தானே, எனக்கு இந்த
வசதியான நிலைமை மீ ண்டு வந்தது... அதுவரை
உடலாலையும், மனசாலையும், நான் எவ்வளவு பாடுபட்டு
இருந்திருப்பேன்...

Last edited by ramyas; 10th Apr 2015 at  11:14 PM.


 Share
o
o
o
o
o
 |
 Like
suganyarangasam, gomathyraja, latharaju89 and 37 others like this.

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

    
 10th Apr 2015, 11:20 PM#13

ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya

அவங்க மட்டும் எனக்கு சொத்துப் பாதுகாப்பு செய்து வச்சுட்டு


போயிருக்கலைன்னா... இன்னிக்கு நான் இருக்கற இடமே
தெரியாம போயிருக்கும்... அன்னிக்கு வரை பாசமழைல
நனைஞ்சுட்டு, திடீர்ன்னு எல்லாம் தரைமட்டமா ஆகிட்டதால,
அந்த வயசுல நான் அம்மா அப்பா பாசத்துக்காக ஏங்கினது
எவ்வளவுன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்... இவளுக்கு
என்னைப் பத்தி என்ன தெரியும்ன்னு பேசறா?

எனக்கெல்லாம் இதைப்பத்தி தெரியுமா என்ன? இவ


எப்பேர்ப்பட்ட ஆளு... பெத்தவங்க கண்டிப்பாங்கன்னு,
அவங்ககிட்ட பொய் சொல்லிட்டு, தமிழ்நாட்டோட ஒரு
கோடியில இருக்கற ஊருல இருந்து, இவ்வளவு தூரத்துக்கு
அவங்களுக்குத் தெரியாம வந்திருக்காளே... இவளுக்குத்
தான் குடும்ப உறவு, பாசம் இது எல்லாம் தலை கீ ழ்ப்பாடம்...
ஏதோ, கூட வந்த பசங்க நல்லவங்களா இருக்கப் போய், எந்த
பிரச்சினையும் இல்லாம, இப்போ பத்திரமா திரும்பி இருக்கா...
இல்லன்னா... இவ நிலைமை... இவ வந்து என்னை பேசறா,
பேச்சு... பாசக்கார புள்ள...” ஆற்றாமையில் பொங்கி எழுந்த
ப்ரித்வி, ஒரு வேகத்தோடு, ராமண்ணாவிடம் தன்னைப் பற்றி
கொட்டித் தீர்க்கவும், கேட்டுக்கொண்டிருந்த கஜலக்ஷ்மி
விக்கித்துப் போனாள்.
“காரை எடுங்க ராமண்ணா... நம்ம பிழைப்பை பார்ப்போம்...
எப்படியும் அவன் என் கையில சிக்குவான்... அப்போ இருக்கு
அவனுக்குக் கச்சேரி...” கறுவிக் கொண்டே அவன் காரில்
ஏறவும்,

“எப்படி தம்பி அத்தனை பேரையும் மீ றி தப்பிச்சான்?... ஜோசப்


கோஷ்டி அவனை எப்படி சும்மா விட்டாங்க... பணத்தை
வாங்கிட்டு, அதை திருப்பிக் கட்டாம, இத்தனை நாளா ஒரே
பஞ்சப்பாட்டு பாடி, ஆனா வட்டுக்குள்ள
ீ அத்தனை
பணத்தையும் ஒளிச்சு வைச்சிக்கிட்டு, நம்மளை ஏமாத்த
நினைச்சான் அவன். இந்த விவரமெல்லாம் தெரிஞ்சு, நாம
அவனை கஸ்டடில எடுத்தப்புறமும், திமிரு அடங்காம
திரும்பவும் தப்பிச்சு ஓடி இருக்கான்... நல்லா நம்மளை
ஏமாத்த பார்க்கறான் தம்பி... அவனை விடவே கூடாது”
ராமண்ணாவும் ப்ரிதிவியைச் சார்ந்தே பேச,

இப்போழுது தான், விவரம் ஏதும் தெரியாமல் தான் நடுவில்


புகுந்து பேசியது தவறோ என்று கஜலக்ஷ்மி யோசிக்கத்
தொடங்கி இருந்தாள்.

“பாத்ரூம் போறேன்னு சொல்லி, அங்க இருந்து தப்பிச்சு


போயிருக்கான்... பணம் வாங்க வந்த போது எப்படி என்
காலுல விழுந்து கெஞ்சினான்... நல்லா வாழ்ந்தவன்,
ஒருநாளும் கஷ்டப்படக் கூடாது... அவன் குழந்தைங்களுக்கு
என் நிலைமை வந்துடக் கூடாதுன்னு முப்பது லட்சத்தைத்
தூக்கிக் கொடுத்தேன்... அதை வாங்கிக்கிட்டு, மூணு மாசமா
வட்டியும் கட்டாம, இப்போ வடு
ீ நிறைய சாமான்... நகைன்னு
வாங்கிப் போட்டா... நான் சும்மா இருப்பேனா என்ன?” ப்ரித்வி,
கோபம் அடங்கும் வரை கத்திக் கொண்டே வர, அதைக் கேட்டு
‘உம்’ கொட்டிய படி, ராமண்ணாவும், காரை செலுத்த,
இப்பொழுது அவனது கூற்றும் கஜலக்ஷ்மிக்கு சரியாகப்
பட்டது.

‘தன்னுடன் வருவதற்காக ராமண்ணா வட்டை


ீ விட்டு
பிரிந்திருக்கும் வேளையில், அவரின் குடும்பத்திற்கு
தேவையானதைப் பார்த்துக் கொள்ளும் அவன், கண்டிப்பாக
அந்த கடனாளியின் குடும்பத்தையும் பார்த்துக் கொள்வான்
தானே... தான் அவசரப்பட்டு அவனைச் சாடிப் பேசியிருக்கக்
கூடாது...’ அவளது மூளை இப்பொழுது யோசிக்க,

“சாரி...” அவளது வாயில் இருந்து வார்த்தை வரவும்,

“உனக்கு அதெல்லாம் கூட கேட்கத் தெரியுமா?” நக்கலாகக்


கேட்டவன், ராமண்ணாவைப் பார்க்க,

“தம்பி... இன்னும் கொஞ்ச தூரத்துல சொந்தக்காரங்க வடு



வந்துடும்... அங்க போய் குளிச்சிட்டு சாப்பிட்டுட்டுக்
கிளம்பலாம்.... நான் அவங்களுக்கு போன் செய்து
சொல்லிட்டேன்” அவர் சொல்லவும், “ஹ்ம்ம்...” என்ற
முணுமுணுப்புடன், மொபைலில் எதையோ பார்த்துக்
கொண்டு வந்தான்.

“அய்யா பார்க்கற பார்வையிலேயே இத்தனை விதம் இருக்கா?


பெரிய தோரணை தான்... கஜா... அப்படியே சும்மா ராமண்ணா
கிட்ட வம்பு பேசி எல்லா கதையையும் கேளு...” வழக்கமான
அவளது சுட்டித் தனம் தலை தூக்க, மனதினில் எண்ணிக்
கொண்டாள்.

ஒரு சிறு ஓட்டு வட்டின்


ீ முன் காரை நிறுத்திய ராமண்ணா,
“தம்பி... வாங்க...” என்று அழைக்கவும், தலையை
நிமிர்த்தியவன், சிறிதும் தயங்காமல் கீ ழே இறங்கவும்,
வியந்த கஜா, அவனது தோரணையையும், உடையையும்,
பின்னர் தன் கண் முன்னே இருந்த சாதாரண வட்டையும்

அளவிட்டு ஒப்பிட்டுப் பார்த்தாள்.

“குளிக்கிற பழக்கமாவது இருக்கா இல்லையா?” என்று


கேட்டப்படி, அவன் அந்த வட்டின்
ீ உள்ளே நுழையவும்,

“ஆமாம்.... அப்படியே உங்களுக்கு பெரிய அறிவாளின்னு


நினைப்போ? கேள்வி கேட்கறதுக்கு முன்ன, அது
சாத்தியமான்னு கொஞ்சம் மூளைய உபயோகப்படுத்தி
யோசிக்கணும்...” காரில் இருந்து இறங்காமலே, அவள்
நொடித்தாள்.

“நீ போய் பல்லைத் தேய்கிற வழியைப் பாரு... வசின



கையோட வந்தவளுக்கு எது தேவைன்னு எங்களுக்கும்
தெரியும்... நீ குளிக்கிறதுக்குள்ள எல்லாம் வந்து சேரும்...
பிரஷ்ஷையாவது ஹேன்ட் பேக்ல வச்சிருக்கியா? இல்ல இந்த
ஹேன்ட் பேகும் சும்மா ஸ்டைலுக்குத் தானா?” அவள்
கண்களை பார்த்து அவன் நக்கலடிக்க, ரோஷம் பொங்க,
தனது கைப்பையை திறந்து காட்டியவள், அதில் இருந்து
பேஸ்ட், பிரஷ் இரண்டையும் எடுத்துக் காட்டிவிட்டு, வேகமாக
காரில் இருந்து இறங்கினாள்.
அதற்கும் ஒரு வெற்றுப் பார்வையை கொடுத்தவன், அந்த
வட்டிற்குள்
ீ நுழைய, அவனை வரவேற்றவர்கள், அவனுக்கு
வேண்டியதை செய்துக் கொடுக்க, விரைவாக குளித்துக்
கிளம்பியவன், அவர்கள் கொடுத்த தோசையை சாப்பிடத்
துவங்கி இருந்தான்.

“அடக் கஞ்சப்பிசுனாறி.... பந்தாவா ஒரு பெரிய ஹோட்டல்ல


போய் சாப்பிட்டுட்டு வராம, இப்படி எங்கல்லாம்
சொந்தக்காரங்க இருக்காங்கன்னு தேடித் போய்
சாப்பிடறான்... என்னவோ கெத்தா, ‘நீ போய் பிரஷ் பண்ணு,
தேவையானது வரும்’னு சொன்னான்... ஒண்ணுத்தையும்
காணோம்...” அந்த வட்டின்
ீ திண்ணையில்
அமர்ந்துக்கொண்டு, அவளது எண்ண ஓட்டம் இவ்வாறாக
சென்றது.

“லக்ஷ்மி... இந்தாம்மா... உனக்கு தேவையானது எல்லாம்


இதுல இருக்கு... அங்க பாத்ரூம் இருக்கு, போய் குளி...”
ராமண்ணா ஒரு கவரை நீ ட்டவும், அவரது ‘லக்ஷ்மி’ என்ற
அழைப்பில் அவள் வாய் பிளக்க,

“என்னம்மா.... தம்பி கேட்டா மாதிரி, உனக்கு குளிக்கிற


பழக்கமே இல்லையா?” ராமண்ணா சிரிக்கவும்,

“என் பேர் எப்படி உங்களுக்குத் தெரியும்? அதுலதான்


கொஞ்சம் ஜெர்க் ஆகிட்டேன்...” சிரித்துக் கொண்டே அவள்
பதில் சொல்லவும்,
“உன்னைப் பத்தின மொத்த விவரமும் அவருக்குத் தெரியும்....
இப்போ விசாரிச்சிட்டார்...” அசால்டாக அவர் ஒரு குண்டை
ீ விட்டுச் செல்ல, “என்னது?” கஜலக்ஷ்மி அதிர்ந்தாள்.
வசி

“நல்லா ஜெர்க் ஆகற நீ ? கார்ல சஸ்பென்ஷன் ஃபிக்ஸ் பண்ற


மாதிரி உனக்கும் ஃபிக்ஸ் பண்ண, தம்பி கிட்ட சொல்ல
வேண்டியது தான்...” என்று
கிண்டலடித்தபடியே அவரும் நகர்ந்து செல்ல, அவர்கள்
பேசுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த, அவள்
வயதை ஒட்டிய பெண்ணும் அவருடன் நகர்ந்தாள்.

“ஹ்ம்ம்... அப்படி ஒரு சிடு சிடு முதலாளிக்கு இப்படி ஒரு


டிரைவர்... யாரை விட்டு டிரஸ் வாங்கிட்டு வரச் சொல்லி
இருப்பார்... அதுவும் இந்த காலையிலேயே?” என்று
சலித்தப்படியே, குளிக்கச் சென்றாள்.

அவளும் குளித்து முடித்து, சாப்பிட வரவும், “சாப்பாடு எப்பவும்


போல ரொம்ப அருமையா இருந்ததுங்க...” தெலுங்கில்
கூறிவிட்டு, அவன் நகரவும், அவள் அவசரமாக தோசையை
வாயில் அடைத்துக்கொள்ள,

“எப்படியும் நீ ஊருக்கு போக ரெண்டு நாள் ஆகும்... அதனால


பொறுமையா சாப்பிடு...” என்றவனை,

“ஊருக்கு எல்லாம் கொண்டு விட வேண்டாம்... நான்


ஹாஸ்டல் தான் போகணும்... அங்க தான் என்னோட பொருள்
எல்லாம் இருக்கு... இப்படியே போனா என் கையை காலை உடைச்சு
போட்டிருவாங்க... அதை எடுத்துட்டு முல்லை கூட சேர்ந்து தான்
போகணும்... அதுவும் அவங்களே வந்து கூட்டிட்டு
போவாங்க...” அவள் சாப்பிட்டுக் கொண்டே சொல்லவும்,

“அது எங்க இருக்கு?” அவனது கேள்விக்கு, “மதுரை...”


என்றவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, வெளியில் சென்று
புகைக்கத் தொடங்கினான்.

 Share
o
o
o
o
o
 |
 Like
suganyarangasam, gomathyraja, latharaju89 and 37 others like this.

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

    
 10th Apr 2015, 11:21 PM#14
ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya

அவங்க மட்டும் எனக்கு சொத்துப் பாதுகாப்பு செய்து வச்சுட்டு


போயிருக்கலைன்னா... இன்னிக்கு நான் இருக்கற இடமே
தெரியாம போயிருக்கும்... அன்னிக்கு வரை பாசமழைல
நனைஞ்சுட்டு, திடீர்ன்னு எல்லாம் தரைமட்டமா ஆகிட்டதால,
அந்த வயசுல நான் அம்மா அப்பா பாசத்துக்காக ஏங்கினது
எவ்வளவுன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்... இவளுக்கு
என்னைப் பத்தி என்ன தெரியும்ன்னு பேசறா?

எனக்கெல்லாம் இதைப்பத்தி தெரியுமா என்ன? இவ


எப்பேர்ப்பட்ட ஆளு... பெத்தவங்க கண்டிப்பாங்கன்னு,
அவங்ககிட்ட பொய் சொல்லிட்டு, தமிழ்நாட்டோட ஒரு
கோடியில இருக்கற ஊருல இருந்து, இவ்வளவு தூரத்துக்கு
அவங்களுக்குத் தெரியாம வந்திருக்காளே... இவளுக்குத்
தான் குடும்ப உறவு, பாசம் இது எல்லாம் தலை கீ ழ்ப்பாடம்...
ஏதோ, கூட வந்த பசங்க நல்லவங்களா இருக்கப் போய், எந்த
பிரச்சினையும் இல்லாம, இப்போ பத்திரமா திரும்பி இருக்கா...
இல்லன்னா... இவ நிலைமை... இவ வந்து என்னை பேசறா,
பேச்சு... பாசக்கார புள்ள...” ஆற்றாமையில் பொங்கி எழுந்த
ப்ரித்வி, ஒரு வேகத்தோடு, ராமண்ணாவிடம் தன்னைப் பற்றி
கொட்டித் தீர்க்கவும், கேட்டுக்கொண்டிருந்த கஜலக்ஷ்மி
விக்கித்துப் போனாள்.
“காரை எடுங்க ராமண்ணா... நம்ம பிழைப்பை பார்ப்போம்...
எப்படியும் அவன் என் கையில சிக்குவான்... அப்போ இருக்கு
அவனுக்குக் கச்சேரி...” கறுவிக் கொண்டே அவன் காரில்
ஏறவும்,

“எப்படி தம்பி அத்தனை பேரையும் மீ றி தப்பிச்சான்?... ஜோசப்


கோஷ்டி அவனை எப்படி சும்மா விட்டாங்க... பணத்தை
வாங்கிட்டு, அதை திருப்பிக் கட்டாம, இத்தனை நாளா ஒரே
பஞ்சப்பாட்டு பாடி, ஆனா வட்டுக்குள்ள
ீ அத்தனை
பணத்தையும் ஒளிச்சு வைச்சிக்கிட்டு, நம்மளை ஏமாத்த
நினைச்சான் அவன். இந்த விவரமெல்லாம் தெரிஞ்சு, நாம
அவனை கஸ்டடில எடுத்தப்புறமும், திமிரு அடங்காம
திரும்பவும் தப்பிச்சு ஓடி இருக்கான்... நல்லா நம்மளை
ஏமாத்த பார்க்கறான் தம்பி... அவனை விடவே கூடாது”
ராமண்ணாவும் ப்ரிதிவியைச் சார்ந்தே பேச,

இப்போழுது தான், விவரம் ஏதும் தெரியாமல் தான் நடுவில்


புகுந்து பேசியது தவறோ என்று கஜலக்ஷ்மி யோசிக்கத்
தொடங்கி இருந்தாள்.

“பாத்ரூம் போறேன்னு சொல்லி, அங்க இருந்து தப்பிச்சு


போயிருக்கான்... பணம் வாங்க வந்த போது எப்படி என்
காலுல விழுந்து கெஞ்சினான்... நல்லா வாழ்ந்தவன்,
ஒருநாளும் கஷ்டப்படக் கூடாது... அவன் குழந்தைங்களுக்கு
என் நிலைமை வந்துடக் கூடாதுன்னு முப்பது லட்சத்தைத்
தூக்கிக் கொடுத்தேன்... அதை வாங்கிக்கிட்டு, மூணு மாசமா
வட்டியும் கட்டாம, இப்போ வடு
ீ நிறைய சாமான்... நகைன்னு
வாங்கிப் போட்டா... நான் சும்மா இருப்பேனா என்ன?” ப்ரித்வி,
கோபம் அடங்கும் வரை கத்திக் கொண்டே வர, அதைக் கேட்டு
‘உம்’ கொட்டிய படி, ராமண்ணாவும், காரை செலுத்த,
இப்பொழுது அவனது கூற்றும் கஜலக்ஷ்மிக்கு சரியாகப்
பட்டது.

‘தன்னுடன் வருவதற்காக ராமண்ணா வட்டை


ீ விட்டு
பிரிந்திருக்கும் வேளையில், அவரின் குடும்பத்திற்கு
தேவையானதைப் பார்த்துக் கொள்ளும் அவன், கண்டிப்பாக
அந்த கடனாளியின் குடும்பத்தையும் பார்த்துக் கொள்வான்
தானே... தான் அவசரப்பட்டு அவனைச் சாடிப் பேசியிருக்கக்
கூடாது...’ அவளது மூளை இப்பொழுது யோசிக்க,

“சாரி...” அவளது வாயில் இருந்து வார்த்தை வரவும்,

“உனக்கு அதெல்லாம் கூட கேட்கத் தெரியுமா?” நக்கலாகக்


கேட்டவன், ராமண்ணாவைப் பார்க்க,

“தம்பி... இன்னும் கொஞ்ச தூரத்துல சொந்தக்காரங்க வடு



வந்துடும்... அங்க போய் குளிச்சிட்டு சாப்பிட்டுட்டுக்
கிளம்பலாம்.... நான் அவங்களுக்கு போன் செய்து
சொல்லிட்டேன்” அவர் சொல்லவும், “ஹ்ம்ம்...” என்ற
முணுமுணுப்புடன், மொபைலில் எதையோ பார்த்துக்
கொண்டு வந்தான்.

“அய்யா பார்க்கற பார்வையிலேயே இத்தனை விதம் இருக்கா?


பெரிய தோரணை தான்... கஜா... அப்படியே சும்மா ராமண்ணா
கிட்ட வம்பு பேசி எல்லா கதையையும் கேளு...” வழக்கமான
அவளது சுட்டித் தனம் தலை தூக்க, மனதினில் எண்ணிக்
கொண்டாள்.

ஒரு சிறு ஓட்டு வட்டின்


ீ முன் காரை நிறுத்திய ராமண்ணா,
“தம்பி... வாங்க...” என்று அழைக்கவும், தலையை
நிமிர்த்தியவன், சிறிதும் தயங்காமல் கீ ழே இறங்கவும்,
வியந்த கஜா, அவனது தோரணையையும், உடையையும்,
பின்னர் தன் கண் முன்னே இருந்த சாதாரண வட்டையும்

அளவிட்டு ஒப்பிட்டுப் பார்த்தாள்.

“குளிக்கிற பழக்கமாவது இருக்கா இல்லையா?” என்று


கேட்டப்படி, அவன் அந்த வட்டின்
ீ உள்ளே நுழையவும்,

“ஆமாம்.... அப்படியே உங்களுக்கு பெரிய அறிவாளின்னு


நினைப்போ? கேள்வி கேட்கறதுக்கு முன்ன, அது
சாத்தியமான்னு கொஞ்சம் மூளைய உபயோகப்படுத்தி
யோசிக்கணும்...” காரில் இருந்து இறங்காமலே, அவள்
நொடித்தாள்.

“நீ போய் பல்லைத் தேய்கிற வழியைப் பாரு... வசின



கையோட வந்தவளுக்கு எது தேவைன்னு எங்களுக்கும்
தெரியும்... நீ குளிக்கிறதுக்குள்ள எல்லாம் வந்து சேரும்...
பிரஷ்ஷையாவது ஹேன்ட் பேக்ல வச்சிருக்கியா? இல்ல இந்த
ஹேன்ட் பேகும் சும்மா ஸ்டைலுக்குத் தானா?” அவள்
கண்களை பார்த்து அவன் நக்கலடிக்க, ரோஷம் பொங்க,
தனது கைப்பையை திறந்து காட்டியவள், அதில் இருந்து
பேஸ்ட், பிரஷ் இரண்டையும் எடுத்துக் காட்டிவிட்டு, வேகமாக
காரில் இருந்து இறங்கினாள்.
அதற்கும் ஒரு வெற்றுப் பார்வையை கொடுத்தவன், அந்த
வட்டிற்குள்
ீ நுழைய, அவனை வரவேற்றவர்கள், அவனுக்கு
வேண்டியதை செய்துக் கொடுக்க, விரைவாக குளித்துக்
கிளம்பியவன், அவர்கள் கொடுத்த தோசையை சாப்பிடத்
துவங்கி இருந்தான்.

“அடக் கஞ்சப்பிசுனாறி.... பந்தாவா ஒரு பெரிய ஹோட்டல்ல


போய் சாப்பிட்டுட்டு வராம, இப்படி எங்கல்லாம்
சொந்தக்காரங்க இருக்காங்கன்னு தேடித் போய்
சாப்பிடறான்... என்னவோ கெத்தா, ‘நீ போய் பிரஷ் பண்ணு,
தேவையானது வரும்’னு சொன்னான்... ஒண்ணுத்தையும்
காணோம்...” அந்த வட்டின்
ீ திண்ணையில்
அமர்ந்துக்கொண்டு, அவளது எண்ண ஓட்டம் இவ்வாறாக
சென்றது.

“லக்ஷ்மி... இந்தாம்மா... உனக்கு தேவையானது எல்லாம்


இதுல இருக்கு... அங்க பாத்ரூம் இருக்கு, போய் குளி...”
ராமண்ணா ஒரு கவரை நீ ட்டவும், அவரது ‘லக்ஷ்மி’ என்ற
அழைப்பில் அவள் வாய் பிளக்க,

“என்னம்மா.... தம்பி கேட்டா மாதிரி, உனக்கு குளிக்கிற


பழக்கமே இல்லையா?” ராமண்ணா சிரிக்கவும்,

“என் பேர் எப்படி உங்களுக்குத் தெரியும்? அதுலதான்


கொஞ்சம் ஜெர்க் ஆகிட்டேன்...” சிரித்துக் கொண்டே அவள்
பதில் சொல்லவும்,
“உன்னைப் பத்தின மொத்த விவரமும் அவருக்குத் தெரியும்....
இப்போ விசாரிச்சிட்டார்...” அசால்டாக அவர் ஒரு குண்டை
ீ விட்டுச் செல்ல, “என்னது?” கஜலக்ஷ்மி அதிர்ந்தாள்.
வசி

“நல்லா ஜெர்க் ஆகற நீ ? கார்ல சஸ்பென்ஷன் ஃபிக்ஸ் பண்ற


மாதிரி உனக்கும் ஃபிக்ஸ் பண்ண, தம்பி கிட்ட சொல்ல
வேண்டியது தான்...” என்று
கிண்டலடித்தபடியே அவரும் நகர்ந்து செல்ல, அவர்கள்
பேசுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த, அவள்
வயதை ஒட்டிய பெண்ணும் அவருடன் நகர்ந்தாள்.

“ஹ்ம்ம்... அப்படி ஒரு சிடு சிடு முதலாளிக்கு இப்படி ஒரு


டிரைவர்... யாரை விட்டு டிரஸ் வாங்கிட்டு வரச் சொல்லி
இருப்பார்... அதுவும் இந்த காலையிலேயே?” என்று
சலித்தப்படியே, குளிக்கச் சென்றாள்.

அவளும் குளித்து முடித்து, சாப்பிட வரவும், “சாப்பாடு எப்பவும்


போல ரொம்ப அருமையா இருந்ததுங்க...” தெலுங்கில்
கூறிவிட்டு, அவன் நகரவும், அவள் அவசரமாக தோசையை
வாயில் அடைத்துக்கொள்ள,

“எப்படியும் நீ ஊருக்கு போக ரெண்டு நாள் ஆகும்... அதனால


பொறுமையா சாப்பிடு...” என்றவனை,

“ஊருக்கு எல்லாம் கொண்டு விட வேண்டாம்... நான்


ஹாஸ்டல் தான் போகணும்... அங்க தான் என்னோட பொருள்
எல்லாம் இருக்கு... இப்படியே போனா என் கையை காலை
உடைச்சு போட்டிருவாங்க... அதை எடுத்துட்டு முல்லை கூட
சேர்ந்து தான் போகணும்... அதுவும் அவங்களே வந்து
கூட்டிட்டு போவாங்க...” அவள் சாப்பிட்டுக் கொண்டே
சொல்லவும்,

“அது எங்க இருக்கு?” அவனது கேள்விக்கு, “மதுரை...”


என்றவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, வெளியில் சென்று
புகைக்கத் தொடங்கினான்.

Last edited by ramyas; 10th Apr 2015 at 11:25 PM.


 Share
o
o
o
o
o
 |
 Like
suganyarangasam, gomathyraja, vaideesh and 25 others like this.

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 


    
 10th Apr 2015, 11:29 PM#15

ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya

“ரெண்டு நாள் ஆகுமா? நான் வரும் போது அவ்வளவு நேரம்


ஆகலையே...” கண்களை விரித்து அவள் கேட்கவும்,

“ரெண்டு நாள் இல்ல... மூணு நாள் கூட ஆக்குவேன்...


ஒழுங்கா சாப்ட்டுட்டு வந்து சேரு..” அவனது குரலில் இருந்த
இறுக்கத்தில், அவளது வாய் தானாக மூடிக் கொண்டது.

கிளம்பும் பொழுது, ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உணவு


உண்டதற்கு ஆகக்கூடிய அளவு பணத்தை அவன் தரவும்,
தயக்கத்துடன் அவர்கள் வாங்கிக் கொள்ள, “ரொம்ப
நன்றிங்க... இப்போ இதை நீ ங்க வாங்கிக்கலைனா, நான்
அடுத்த முறை இந்தப் பக்கம் வரும் போது, மறுபடி எப்படி
சாப்பிட வருவேன்... இந்த ருசி எந்த ஹோட்டல்லயும் வரவே
வராது...” என்று மனதாரச் சொன்னவன், காருக்குச் சென்றான்.

“இவன் நல்லவனா இல்ல கெட்டவனா கஜா...” தனக்குள்


கேட்டுக் கொண்டே, தன்னுடைய பொருட்களை எடுத்துக்
கொண்டு, காரில் ஏறியவளைப் பார்த்தவன்,

“இதுக்கும் மேல பேசி என்னை டிஸ்டர்ப் செய்யக் கூடாது...


எனக்கு நிறைய வேலை இருக்கு...” என்று எச்சரிக்கவும், வாய்
மீ து விரலை வைத்துக் கொண்டு, கஜா ஏறி அமர்ந்தாள்.

அவளைக் கண்டுக் கொள்ளாமல், லேப்டாப்பை எடுத்து, தனது


பணியைத் தொடர்ந்தவனை பார்த்தவள், வெளியில்
வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள்.

பழைய பாடல்கள், புதிய மெல்லிசைப் பாடல்கள் என்று


மனதுக்கிதமான பாடல்கள், அந்தக் காரில் ஓடிக்
கொண்டிருக்க, அதை சிறிதும் ரசிக்காமல், அவனது கவனம்
மொத்தமும் வேலையிலேயே மூழ்கி இருக்க, அவளது
பார்வை அவன் மீ து படிந்தது.

கூரான கண்களும், இறுகிய உதடுகளும், பாறை போன்ற


முகமும் அவனது மன அழுத்தத்தைச் சொல்ல, இரவில்
இருந்து பார்த்த அவன் முகத்தில், கோபமும், கடுமையையும்
தவிர, இதழின் ஓரத்தில் கூட சிறு சிரிப்பில்லாமல் இருப்பது
உறைக்க, “பெரிய ராஜா ப்ரித்விராஜ்ன்னு நினைப்பு...”
அவளை அறியாமல், வாய் உளறவும், டக்கென்று
நிமிர்ந்தவன்,
“என்ன?” என்று கேட்க,

“இல்ல உங்களைப் பார்த்தா நடிகர் ப்ரித்விராஜ் போல


இருக்கு... நீ ங்க படம் எல்லாம் பார்ப்பீங்களா?” அவனிடம்
வாயைக் கொடுக்க,

“படம் பார்க்கற பழக்கம் எனக்கு இல்ல... ப்ரித்விராஜ்ன்னு என்


முழு பேர் உனக்கு எப்படித் தெரியும்?” லேப்டாப்பில்
பார்வையை பதித்துக் கொண்டே அவன் கேட்கவும்,

“என்னது.... உங்க பேர் ப்ரித்விராஜா?” அவள் அதிர்ந்துக்


கேட்கவும்,

“உனக்கு தெரியாதா என்ன?” அவன் சாதாரணமாக கேட்க,


அவள் உதட்டைப் பிதுக்க, சில நொடிகளுக்கு அவனது
பார்வை அவள் முகத்தில் பதிந்தது.

“என்னாச்சு?” அவன் பார்வையைப் பார்த்து அவள் கேட்கவும்,

“ஒண்ணும் இல்ல... கொஞ்சம் தொணதொணன்னு பேசாம,


வா...” என்றவன், தனது வேலையைத் தொடர்ந்தான்.

மீ ண்டும் பாடலைத் தவிர, காரில் அமைதி நிலவ,


கஜலக்ஷ்மிக்கு தூக்கம் வரும் போல் இருந்தது. சிறிது நேரம்
பொறுத்துப் பார்த்தவள், “அண்ணா... கொஞ்சம் வண்டியை
நிறுத்துங்களேன்...” என்று சொல்லவும்,

“என்னாச்சு? இப்போ எதுக்கு வண்டியை நிறுத்தச் சொல்ற?”


எரிச்சலாக ப்ரித்வி கேட்க,

“ஏன் லக்ஷ்மி...” அதே நேரம் ராமண்ணாவும் கேட்கவும்,

“இல்லண்ணா... நான் முன்னால வந்து


உட்கார்ந்துக்கறேனே... என்னால ரொம்ப நேரம் எல்லாம்
பேசாம இருக்க முடியாது... அதே போல உங்களுக்கும் யாரும்
பேசலைன்னா தூக்கம் தானே வரும்...” என்று கேட்டவள்,
ராமண்ணா வண்டியை நிறுத்தவும், வேகமாக இறங்கி, முன்
சீட்டில் சென்று அமர்ந்தாள்.

தலையை இப்படியும் அப்படியும் அசைத்துக் கொண்டு,


பெருமூச்சு விட்டதோடு, தனது பணியில் ப்ரித்வி மூழ்கிவிட,
“உங்க முழு பேர் என்ன ராமண்ணா?” என்று கஜலக்ஷ்மி
தொடங்கினாள்.

“இல்லம்மா... என் பேரே ராமண்ணா தான்... சொந்த ஊரு


நெல்லூர்... பொழப்பை தேடி பெங்களூர் போய் அங்கேயே
இருந்துட்டேன்... எனக்கு ரெண்டு பொண்ணுங்க... பெரியவ
டாக்டருக்கு படிக்கிறா... சின்னவ பத்தாவது... ரெண்டு
பேரையும் தம்பி தான் படிக்க வைக்கிறாங்க...” அவள்
வெறுமனே அவர் பெயரைக் கேட்டதற்கே, அவர் தன்னைப்
பற்றிய அனைத்து விவரங்களையும் சொல்ல, கஜா சரளமாக
பேசத் துவங்கினாள்.

பாட்டின் சத்தத்தையும் மீ றி, அவளது சலசலப்பு காரில்


நிறைய, சிறிது நேரம், ப்ரித்வியை மறந்து பேசிக் கொண்டு
வந்த ராமண்ணா, அவன் தொண்டையை கனைக்கவும்,
அமைதியாகிவிட, “என்னாச்சு ராமண்ணா... திடீர்ன்னு
அமைதியாகிட்டீங்க?” அவள் கேட்கவும், அவரது பார்வை
ப்ரித்வியை நோக்கிச் செல்ல, அவளும் அமைதியாகிப்
போனாள்.

 Share
o
o
o
o
o
 |
 Like
suganyarangasam, gomathyraja, latharaju89 and 38 others like this.

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

    
 10th Apr 2015, 11:32 PM#16
ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya

“ஏன் இவர் இப்படி இருக்கார். கொஞ்சம் வாயைத் திறந்து


பேசினா தான் என்ன?” அவள் நினைத்துக் கொண்டிருக்கும்
போதே,

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது


முரடா உனை ரசித்தேன்
தொட்டதும் விழுந்து விடும் ஆடவன் பிடிக்காது
கர்வம் அதை மதித்தேன்
முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ
உன்னைப் போலே ஆணில்லையே
நீ யும் போனால் நானில்லையே
நீ ரடிப்பதாலே நீ நழுவவில்லையே
ஆம் நமக்குள் ஊடலில்லை
என்ற பாடல் வரிகள் ஒலிக்க, சட்டென்று அவளது மனம்
ப்ரித்வியிடம் தாவியது.

“முரடன் தான்...” அவளது மனம் சிணுங்க, ராமண்ணா கூறிய


அனைத்தும் மீ ண்டும் அவளது மனதில் ஒலிபரப்பு நடத்தத்
துவங்கியது.

அவனது கண்டிப்பைத் தவிர, சக மனிதர்களிடம் அவனது


கரிசனம் மொத்தமும், அவர்களது நலத்திலும்,
சந்தோஷத்திலும் மட்டுமே இருப்பதை அது தெளிவாகக் கூற,
காலையில், தன்னுடைய வயிற்றைப் பற்றியும், சுத்தத்தைப்
பற்றியும், தானே யோசிக்காத பொழுது, அவன் யோசித்து,
தனக்கு தேவையானதை பார்த்து செய்தது, அவனது குணத்தை
கோடிட்டுக் காட்டியது. முன்தினத்தில் இருந்து,
வெளிப்பார்வைக்கு அவன் விட்டேற்றியாக இருந்தாலும்,
தனக்கு தேவையானதை பார்த்துப் பார்த்து செய்ததை, அவளது
மனம் மெல்ல எடுத்துக் கூற, அவளை அறியாமலே கண்களில்
கண்ண ீர் கசியத் துவங்கியது.

‘எனக்கு ஏன் இந்த நிலைமை... நான் வேற ஏதாவது ஒரு


ஊருல பிறந்து இருக்கக் கூடாதா? அப்படி ஒரு ஆள் கூட பரிசம்
போட்டு, அவன் கூட போய் என் வாழ்க்கைய சேர்த்து வைக்க
நினைச்சு இருக்காங்களே... சரியான மொடாக் குடிகாரன்...
இதுல, கல்யாணம் ஆகி குடும்பம் பிள்ளைக் குட்டின்னு வந்தா
சரியாகிடுவான்னு, எல்லாருக்கும் நம்பிக்கை வேற... இனிமே
தினம் தினம் போராட்டமா தான் போகப்போகுதா என்
வாழ்க்கை...” என்ன தவிர்த்தும், ப்ரித்வியையும், அவளுடைய
மாமாவையும் ஒத்திட்டுப் பார்த்த மனதில், வேதனையே
மிஞ்சியது.

அருகில் இருக்கும் ராமண்ணா அறியாமல், மெல்ல


கண்களைத் துடைத்துக்கொண்டவள், அத்தனை நேரம்
பேசிக்கொண்டிருந்ததை மறந்து, கண்களை மூடிக்
கொண்டாள்.

திடீரென்று அவளது அமைதியை உணர்ந்த ப்ரித்வி, அவளைப்


பார்க்க, கண்களின் ஓரத்தில் இருந்த ஈரம், அவனை
வருத்தியதோ? “ராமண்ணா.... நாளைக்கு காலைலக்குள்ள
அவங்க ஊருக்கு போற மாதிரி பார்த்துக்கோங்க... ரொம்ப
பயந்திருக்கா போல இருக்கு...” என்று சொல்லவும்,

“நான் ஒண்ணும் பயப்படல... நீ ங்க என்ன புலியா சிங்கமா


என்னை கடிச்சுத் தின்ன... ஒரு வாரம் கழிச்சு ஊருக்கு போனா
போதும்...” கண்களை மூடிக் கொண்டே அவள் பதில்
சொல்லவும், ப்ரித்வி, சிரிக்கத் தொடங்கினான்.

அவனது சிரிப்பை முதன்முதலாக பார்த்த ராமண்ணா காரை


ஓரம் கட்டி நிறுத்த, முன்தினத்தில் இருந்து, அவனது கடுகடு
முகத்தை மட்டுமே பார்த்திருந்த கஜலக்ஷ்மி, அவனைத்
திரும்பிப் பார்த்தாள்.

“என்னைப் பார்த்தா புலி மாதிரி தெரியலையா உனக்கு?


லக்ஷ்மி... நீ மனசுல எதையோ போட்டு குழப்பிக்கிட்டு
இருக்க... அது தான்.... உன்னையும் அறியாம உன் கண்ணுல
தண்ணி வருது... அதை சமாளிக்க, எதுக்கு என்னை புலி
சிங்கம்னு காட்டு மிருகத்தோட ஒப்பிட்டு சொல்ற? உன்னை
எந்த சேதாரமும் இல்லாம, ஊர்ல உங்க மாமாகிட்ட சேர்க்க
வேண்டியது என் பொறுப்பு... போதுமா?” அவன் அவ்வாறு
கேட்கவும், ஏனோ அவளுக்கு தொண்டையை அடைத்தது.

அவள் அமைதியாக இருக்கவும், “வாய்க்கு வாய் பேச மட்டும்


செய்... நல்ல கதை பேசு... கோபப்பட்டு தனியா அர்த்த
ராத்திரியில கிளம்பி, ஊர் பேர் தெரியாதவன் கார்ல லிஃப்ட்
கேளு... ஆனா, உள்ளுக்குள்ள சுத்தமா தைரியம்
இல்லையே...” அவளைப் பார்த்து புருவத்தை உயர்த்தி அவன்
கேட்கவும், கண்களை இமைக்க மறந்து, கஜலக்ஷ்மி
அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கவிதைகள் தொடரும்....
 Share
o
o
o
o
o
 |
 Like
Divyadevig, suganyarangasam, latha karthik and 68 others like this.
 

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

    
 10th Apr 2015, 11:35 PM#17

ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya
ஹாய் பிரெண்ட்ஸ் ...

"விழியோரக் கவிதைகள்" மூன்றாவது பதிவைக்


கொடுத்துவிட்டேன்... படிச்சிட்டு மறக்காம ஒரு வரியேனும்
உங்கள் கருத்தை பதிவிடுங்க பிரெண்ட்ஸ் .... உங்கள்
கருத்துக்களைக் காண ஆவலாக காத்திருக்கிறேன்...

இரண்டாவது பதிவிற்கு லைக் மற்றும் கருத்து தெரிவித்த


உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பிரெண்ட்ஸ் ....

விழியோரக் கவிதைகள் -- கமெண்ட்ஸ் 

 Share
o
o
o
o
o
 |
 Like
suganyarangasam, gomathyraja, veni Bala and 28 others like this.

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

    
 13th Apr 2015, 10:00 PM#18

ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya

கவிதை - 4
யாரோ என்று ஒதுங்கி
இருக்க தான் நினைக்கிறேன்
ஆனாலும்
ஏதோ ஒன்று
என் நம்பிக்கையை
குலைத்து
அவளிடம் விழ வைக்கிறது !!!
“நான் கேட்டேனே... ஒண்ணும் பதில் சொல்லாம என்னையே
பார்த்துட்டு இருக்க?” அவன் கூறிய எதற்குமே பதில் பேசாமல்,
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளை, ப்ரித்வி பதில்
கேள்வி கேட்க, அவன் முகத்தில் இருந்து தன் கண்களை
அகற்றிக் கொண்டவள்,

“சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல... சில நேரம் விதி ஆடற


ஆட்டத்தை நாம வேடிக்கை தான் பார்க்க முடியும்... அதுல
நாம எதுவும் செய்ய முடியாது... அந்த ஆட்டத்துல இதுவும்
ஒண்ணுன்னு என் மனசுல தோணிச்சு... வேற ஒண்ணும்
இல்ல..” விரக்தியாகச் சொன்னவள், ப்ரித்வி அவளைப்
பார்த்துக் கொண்டிருக்கும் போதே,

“எனக்கு தூக்கம் வருது... நான் தூங்கறேன்...” என்று


கண்களை இறுக மூடிக் கொண்டவளிடம்,

‘என்ன ஆட்டம்?’ வாய்க்கு வாய் சண்டைப் போட்டுக்


கொண்டிருந்தவள், திடீரென்றுஏன் வேதாந்தம் பேசுகிறாள்’
என்ற கேள்வியைக் கூட கேட்கத் தோன்றாமல், தோளைக்
குலுக்கியவன், மீ ண்டும் லேப்டாப்பில் எதையோ குடைய,

“அது என்ன, எப்பப்பாரு லேப்டாப்ல விளையாடிட்டு


இருக்கீ ங்க..... உங்களுக்கு போர் அடிக்கவே அடிக்காதா?
ரெஸ்ட்டுக்காககொஞ்ச நேரம் எங்க நின்னாலும்,
உடனேஅதுக்கு சார்ஜ் போட்டுக்கிட்டு, அப்படி என்னத் தான்
செய்யறீங்க?” கண்களை மூடிய நிலையிலேயே அவள் கேட்க,

“ஹ்ம்ம்... நீ சொன்னியே சோப்பு டப்பா காரு... அத தான்


டிசைன் செய்துட்டு வரேன்... நான் ஒரு கார் ரீமாடலிங்
கம்பெனி வச்சிருக்கேன்... அது தான் என் மெயின் தொழில்...
விதவிதமா டிசைன்களை யோசிக்கறதுக்கு, எந்த
தொல்லையும் இல்லாம மூளை வேலை செய்யணும்...
அதுக்கு நான் தனியா இருக்கணும்... அப்படி வேலை செய்யத்
தான், அடிக்கடி இப்படி கார்ல பயணம போயிட்டு இருக்கேன் .

அப்படி செய்யும் போது, நீ ண்ட தூர பயணத்தால ஏற்படற


அசவுகரியத்தை, சௌகர்யமா மாத்த, நிறைய ஐடியா
கிடைக்கும். அதுக்கு தான் இப்படி கார்ல போய்கிட்டே டிசைன்
செய்யறது.... இப்போ இந்தக் கார்ல இவ்வளவு தூரம் நீ
டிராவல் செய்து வந்திருக்கியே... உனக்கு கொஞ்சமாவது
குலுக்கலோ, இல்லன்னா தூக்கிப் போட்டு, இந்த மாதிரி
எதாவது கஷ்டம் இருந்ததா?” அவன் கேட்கவும்,
“இல்லையே.... சும்மா வெண்ணையாட்டம் இல்ல
வழுக்கிக்கிட்டு போகுது... நான் கூட அதனால தான் நல்லா
தூங்கிட்டேன் போல... தூக்கி தூக்கி போட்டு இருந்தா, நான்
எப்படி தூங்கி இருப்பேன்?” காலையில் இருந்து அவன்
திட்டியதற்கு, அவனுடைய கருத்தை வைத்தே, பதில் கூற
அவள் முயல, அவளைப் பார்த்து ப்ரித்வி முறைத்தான்.

“உங்க காரைத் தானே புகழ்ந்து சொன்னேன்... அதுக்குப் போய்


முறைக்கறீங்க?” என்ற முணுமுணுப்புடன் அவள் கண்களை
மூடிக் கொள்ள, மெல்ல ப்ரித்வியின் இதழ்கள் சிரிப்பால்
விரிந்தன.

அவனது பேச்சையும், முகத்தையும், அதைத் தொடர்ந்த


புன்னகையையும், பக்கக் கண்ணாடி வழியாக பார்த்த
ராமண்ணாவின் மனதில் புதுவித ஆசை எழுந்தது.
‘ப்ரித்வியை மணக்கோலத்தில் பார்க்கும் ஆசையைத் தவிர,
ராமண்ணாவுக்கு புது விதமான ஆசை வேறு என்ன இருக்க
முடியும்?’....

சிறிது நேரம் வரை காரில் அமைதியே நிறைக்க, அந்த அமைதி


தந்த மயக்கத்தில், கஜா கண்ணுறங்கிப் போனாள். அவளைப்
பார்த்த ப்ரித்வியின் இதழ்களின் புன்னகை மேலும் விரிய,
அதே நேரம், “எனக்கு உன்னை கொஞ்சம் கூடப்பிடிக்கல
மாமா... இதைச் சொன்னா யாராவது காது கொடுத்து
கேட்கறாங்களா? இப்படி குடிச்சிக் குடிச்சே, உன்
வாழ்க்கையோடு சேர்த்து என் வாழ்கையையும் வணாக்க

போறியா? ஏன் வேலைக்குக் கூட போகாம இப்படி ஊர
பொறுக்கிக்கிட்டு திரியற? பேசாம என்னை எங்கயாவது
கொண்டு போய் கடலுல தள்ளிடுங்களேன்...” என்று அவள்
உறக்கத்தில் புலம்பவும், ப்ரித்வியை, ராமண்ணா திரும்பிப்
பார்க்க, அவனோ அவளை சலனமற்ற பார்வை பார்த்துவிட்டு,
மீ ண்டும் லேப்டாப்பினுள் தலையை புதைத்துக் கொண்டான்.

“இவரு ஏன் இப்படி இருக்காரு?” அவனுடைய இந்த


அக்கறையின்மை, புதியதாக எழுந்த அவரது ஆசையில்
மண்ணைப்போட்டு விடுமோ என்ற எண்ணத்தில் ராமண்ணா
சலித்துக் கொள்ள, அதனை நீ டிக்க விடாமல்,
“லோகேஷ்... நான் உங்களுக்கு முன்னால ஊருக்குப் போய்
சேர்ந்துட்டா, என் கல்யாணம் நின்னு போயிரும் இல்ல...
நிஜமாதானே சொன்னே?” என்று உளற, ப்ரித்வி, அவள்
முகத்தை ஆராய்ந்தான்.
‘ஒருவேளை இவள் தூங்குவது போல நடிக்கிறாளோ?’ என்ற
அவனது சந்தேகம், அவளது குறட்டை ஒலியில் தூள் தூளாக,

“நல்லா குறட்டை விட்டு தூங்கறா பாருங்க ராமண்ணா...”


அவன் புன்னகையுடன் அவரிடம் சொல்லவும், அவரது
கண்கள், அவனது சிறு புன்னகையையும் அளவுடுக்க, அவன்
மனதில் எழுந்துள்ள சிறு சலனம் அவருக்கு நன்றாகவே
புரிந்தது.

“ஹும்... ஹும்... ஊருக்கு போறதுக்குள்ள, இவர் மனசுல


இந்த பொண்ணு புகுந்துட்டா பரவால்ல.... இவளோட
பிரச்சனையும் தீரும்... தம்பியோட வாழ்க்கையும், தொழில்
தொழில்ன்னு மட்டுமே இல்லாம, நல்லா சுவாரஸ்யமா
இருக்கும்... இல்லன்னா, கல்யாணம் பிள்ளை குட்டின்னு
எதையும் யோசிக்காம ஒத்தை ஆளாவே சுத்துவார்...” ப்ரித்வி
மீ து கொண்ட விஸ்வாசத்தில் அவர் யோசிக்க, அவளைப்
பற்றி யோசிக்க வேண்டியவனோ, தனது கடமையே கண்ணாக
இருந்தான்.

 Attached Thumbnails   

Last edited by ramyas; 13th Apr 2015 at 10:05 PM.


 Share
o
o
o
o
o
 |
 Like
suganyarangasam, gomathyraja, latharaju89 and 32 others like this.

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு 
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

    
 13th Apr 2015, 10:10 PM#19

ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya

ஒரு புதிய மாடல் வண்டியைத் வடிவமைத்தப் பிறகு,


“ராமண்ணா... கொஞ்சம் மர நிழல் கிடைச்சா வண்டியை
நிறுத்துங்க... இது சரியா வருமான்னு பாருங்க...” என்று
அவன் சொல்லவும், அவன் சொன்னதைப் போலச் செய்தவர்,
ஒரு மர நிழலில், வண்டியை நிறுத்தினார்.

தான் வடிவமைத்த வண்டி மாடலை அவருக்குக் காட்டி, அதில்


சாத்தியமாகக் கூடிய விஷயங்களை இருவரும்
கலந்தாலோசிக்கத் தொடங்க, பேச்சு சத்தத்தில் கண் விழித்த
கஜா, அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு, மீ ண்டும்
கண்களை மூடிக் கொண்டாள்.

“இவளை எதுல சேர்த்தறது?” ஒரு நொடி யோசித்த


ப்ரித்வியின் மனம் அவளின் சிறுபிள்ளைத் தனமான
செயலைக் கண்டு அவளிடம் தாவ, அவளின் முகத்தைப்
பார்த்துக் கொண்டிருந்தான். ராமண்ணா சொன்னதை
கவனிக்காமல் அவனது கவனம் வேறொங்கோ இருப்பதைக்
கண்டவர், ராமண்ணா ப்ரித்வியின் கண்கள் சென்ற
திசையைப் பார்த்தார்.

உறங்கும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த ப்ரித்வியை


பார்த்தவர், தன் மனதுள் சிரித்துக் கொண்டு, “தம்பி.... தம்பி...”
இரண்டு முறை அழைக்கவும்,
“சொல்லுங்க ராமண்ணா... சரியா இருக்கும் இல்லையா?
சரி... நீ ங்க பின்னாடி போய் தூங்குங்க... இனிமே கொஞ்ச
தூரம் நான் ஓட்டறேன்...” என்றவன், மற்ற தன்னுடைய
பொருட்களை ஒதுக்கி விட்டு, காரை ஓட்டத் துவங்கினான். 

சிறிது நேரத்திலேயே ராமண்ணாவும் கண்ணுறங்க, மெல்ல


காரில் கசிந்துக் கொண்டிருந்த பாடல், அவன் மனதில் பதியத்
துவங்கியது.

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க


மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா
புன்னகையோ போகும்மில்லா
நீ நின்ற இடமென்றால்
விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம்
பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வடு
ீ வரைக்கும்
என் வட்டை
ீ பார் என்னை பிடிக்கும்
இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே போகாதே..

வார்த்தைக்கு வார்த்தை, அந்த வரிகளின் பொருளை அவனது


மனம் உள் வாங்கத் தொடங்க, ப்ரித்வி மனதினில்
அதிர்ந்தான்.

“என்ன இது இன்னிக்கு? எல்லாம் தப்புத் தப்பா நடக்குது?


எனக்கு தான் சினிமானாலே பிடிக்காதே... அதோட பாட்டை
ஏன் ரசிக்கிறேன்?” ப்ரித்வி யோசிக்கத் தொடங்க, அதே நேரம்
கஜலக்ஷ்மி அசைவது தெரிந்தது.

வாகாக சாய்ந்துக் கொண்டு உறங்கியவளை சீண்ட


தோன்றவும், ஆக்சிலேடரை ஒரு மிதி மிதித்து வண்டியின்
வேகத்தை அதிகப்படுத்த, வண்டியின் வேகத்தை
தூக்கத்திலும் உணர்ந்த கஜலக்ஷ்மி “ஹையோ...” என்று
அதிர்ந்தாள்.

அவளது அதிர்ச்சியில் புன்னகை வந்தாலும், அதை அடக்கிக்


கொண்டு, “என்னாச்சு? ஏன் இப்படி கத்தற?” சாதாரணமாக
திரும்பிப் பார்த்த ப்ரித்வி கேட்கவும்,

“இல்ல... இவ்வளவு வேகமா வண்டியை ஓட்டறீங்களே.....


எதிரே எவ்வளவு வண்டி வருது.... எதுலயாவது போய்
மோதிட்டா? நான் உயிரோட ஊருக்குப் போய் சேர
வேண்டாமா?” அவள் கேட்கவும், அவள் உணராமலே
வண்டியின் வேகத்தை மட்டுப்படுத்தியவன்,

“கண்டிப்பா... என் உயிரும் எனக்கு வெல்லக்கட்டி தான்....


அதனால பத்திரமா தான் போவேன்...” என்று அவளை
வம்பிழுக்க,
“உங்க உயிர் வெல்லக்கட்டின்னா... என் உயிர் சக்கரைக்
கட்டி... ஓட்டற ஓட்டுல நான் பறந்துடப் போறேன்... மெதுவா
போங்க...” அவனுக்கு சரியாக அவள் வாய் பேச,
‘ஹாஹஹா..’ என்று அவன் பெரிதாக சிரிக்கத்
தொடங்கினான்.

“இப்போ எதுக்காம் இந்த வில்லச் சிரிப்பு?” ஏளனமாக அவள்


கேட்க,

“இல்ல... நீ பறந்து போனா எப்படி இருக்கும்னு யோசிச்சேனா...


சிரிப்பு வந்திருச்சு...” என்று மேலும் சிரித்தவன், “ஏன்
லக்ஷ்மி... பேசாம பறந்தே போயிடேன்... இந்த கார் போற
நேரத்தை விட சீக்கிரம் போய், நீ உங்க மாமாவை பார்க்கலாம்
இல்ல... அவரும் நீ படிச்சு முடிச்சிட்டு வரணும்னு காத்துட்டு
இருப்பார்.... ‘மாமா’ன்னு கத்திட்டே நீ உங்க ஊர் வயல்ல
ஓடினா எப்படி இருக்கும்?” அவளைச் சீண்டவும், கஜலக்ஷ்மி,
பதில் பேசாது முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“என்ன உங்க மாமாவைப் பத்தி கேட்ட உடனே நீ ஃப்ரீஸ்


ஆகிடற? என்ன சினிமாவுல காட்டற மாதிரி டூயட் பாட
போயிடறியா?” நக்கலாக அவன் கேட்கவும்,

“பாடி...ட்...ட்...ட்...டாலும்... ஒரு கையில புட்டியையும், ஒரு


கையில பீடியையும் புகைச்சிட்டு இருப்பான்... இதுல என்
கையைப் பிடிச்சு அவன் எங்க டூயட் பாட...” ஆத்திரம்,
இயலாமை, அனைத்தையும் அவள் குரலில் காட்ட, அதே
நேரம் பட்டென்று ஒரு சத்தத்துடன், கார் சாலையில்
தள்ளாடத் துவங்கியது.
“என்னாச்சு... ஏன் பிரேக் பிடிக்கலையா?” காரின்
தள்ளாட்டத்தை பார்த்து அவள் பயத்துடன் கேட்கவும்,

“இல்ல நீ கொடுத்த சாபம் பலிச்சிருச்சுன்னு நினைக்கிறேன்...”


என்றவன், மெதுவாக ஓரம் கட்டி நிறுத்தினான்.

“ராமண்ணா.... ராமண்ணா...” ப்ரித்வி காரை நிறுத்தவும்,


கஜலக்ஷ்மி அவரை எழுப்பத் தொடங்க,

“ஏய்... இப்போ எதுக்கு அவரை எழுப்பற? நல்லா தூங்கிட்டு


இருக்கார். தூங்கறவங்கள எழுப்பறதுல என்ன தான்
சந்தோஷமோ?” என்று கடிந்துக் கொண்டே, காரின் டயரை
ஆராய்ந்தவன்,

“ரெண்டு டயரும் பஞ்சர் ஆகிடுச்சு....” என்று சலித்துக்


கொண்டு, ரோடை திரும்பிப் பார்த்தான். ரோட்டில் ஒரு கட்டை
ஆணியுடன் விழுந்துக் கிடக்கவும், சிறிது நேரம்
யோசனையுடன் நின்றவன்,

“என்னை விட்டு எங்கயும் தள்ளிப் போகக் கூடாது” என்ற


எச்சரிக்கை கொடுத்து, தனது முழு கை சட்டையை ஏற்றி
விட்டுக் கொண்டு, காரின் டிக்கியில் இருந்து ஸ்டெப்னியை
எடுத்து மாற்றத் துவங்கினான்.

அவன் மாற்றும் அழகை சிறிது நேரம் ரசித்தவள், “நான்


உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணவா?” என்று கேட்கவும்,
“கொஞ்சம் அந்த பெரிய ஸ்பானரை எடுத்துக் கொடு...”
சுவாதீனமாக அவன் கேட்கவும், அவள் முழிக்கத்
தொடங்கினாள்.

“எந்த ஸ்பானர்? அது எங்க இருக்குன்னு தெரியாதே...”


தயக்கமாக அவள் இழுக்கவும்,

“அப்பறம் என்ன கேள்வி கேட்டுட்டு இருக்க? வாய சும்மா


வச்சிக்கிட்டு கொஞ்ச நேரம் இருந்தாலே பெரிய உதவியா
இருக்கும் தாயே... எந்த நேரத்துல நீ வாய வச்சியோ, இப்போ
ரெண்டு டயரும் பஞ்சர் ஆகி இருக்கு... நல்ல வேளை, எப்பவும்
நான் இந்த மாதிரி கிளம்பும் போது, ஸ்டெப்னி தவிர,
இன்னொரு ஸ்பேர் டயர் ஒண்ணு வச்சிருப்பேன்... அதனால
பிழைச்சேன்...” என்று கடுகடுவென சொல்லிக் கொண்டே
அவன் டயரை மாற்றிக் கொண்டிருக்க, உறக்கம் விழித்த
ராமண்ணா, வேகமாக காரில் இருந்து இறங்கினார்.

“ஹையோ தம்பி... என்ன தம்பி இது? என்னை எழுப்பி


இருக்கக் கூடாதா?” என்று பதட்டத்துடன் ராமண்ணா கேட்டுக்
கொண்டே அவன் கையில் இருந்த ஸ்பேனரை வாங்க,

“நீ ங்க நல்லா தூங்கிட்டு இருந்தீங்க ராமண்ணா... வண்டி


நின்னது கூட தெரியலையே... இவ கூட சேர்ந்தா,
எல்லாருக்குமே இப்படி தான் தூக்கம் வருமோ?” விடாமல்
அவளை வம்பிழுத்துக் கொண்டே, தனது கையை தட்டிக்
கொண்டவன்,

“ரோடுல ஆணியோட கட்டை இருக்கு ராமண்ணா... ஒரு


டயரை மாத்திட்டேன்... நீ ங்க இன்னும் ஒண்ணை
மாத்திருங்க...” என்றவன், ராமண்ணாவும் கேள்வியுடன்
அவனைப் பார்க்க,

“இப்போ ரெண்டு டயரையும் நாம பஞ்சர் ஒட்டிக்கிட்டு தான்


கிளம்பணும் ராமண்ணா... வழியில, ஊருக்குள்ள போய்
கொடுத்து ஒட்டிகிட்டு போயிடலாம்... அப்போ தான் இவளை
ஊருல விடற வரை டென்ஷன் இல்லாம இருக்கும்...” என்று
சொன்னவன், சிறிது தூரத்தில் தெரிந்த கடற்கரையைப்
பார்த்து,

“நீ ங்க இந்த இன்னொரு ஸ்டெப்னியை போடுங்க.... நான்


போய் அங்க கொஞ்ச நேரம் உலாத்திட்டு வரேன்... இவளை
எங்கயும் தள்ளிப் போக விடாதீங்க... கட்டை போற லாரியில
இருந்து யதார்த்தமா கூட விழுந்திருக்கலாம்... இல்ல
வேணுண்ட்டே கூட போட்டு வச்சிருக்கலாம்.. ஜாக்கிரதை...”
என்றபடி அவன் நகர, ‘நானும் வரேன்’ என்றபடி,
கஜலக்ஷ்மியும் அவனுடன் இணைத்துக் கொண்டாள்.

 Attached Thumbnails   

Last edited by ramyas; 13th Apr 2015 at 10:13 PM.


 Share
o
o
o
o
o
 |
 Like
Divyadevig, suganyarangasam, gomathyraja and 35 others like this.

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

    
 13th Apr 2015, 10:20 PM#20

ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya

“லூசா நீ ? ஒருத்தன் தனியா போறான்னா எவ்வளவோ காரணம்


இருக்கும்... எங்கே போனாலும் கூடவே வருவியா?” அவன் சிடு
சிடுக்கவும்,

“ச்சே...” என்றபடி, ராமண்ணாவின் அருகே சென்று நின்று,

“சரியான சிடு சிடு சுப்பாண்டி.... சிரிச்சு பேச எத்தனை காசு கொடுப்பன்னு


கேட்பார் போல..” அவள் சிணுங்கிக் கொண்டிருக்கவும்,

“உன்னோட பாதுகாப்புக்கு தானே சொல்றார்...” என்றவர், சில


நிமிடங்கள் வேலையில் ஆழ்ந்த பின், “இப்போ போம்மா... அவர் சிகரட்
புகைச்சு முடிச்சிருப்பார்...” ராமண்ணா சொல்லவும், கஜலக்ஷ்மி
புரியாமல் பார்த்தாள்.

“கொஞ்ச நேரம் உலாத்திட்டே சிகரட் புகைப்பார்.... அப்போ நீ கூட போனா


நல்லாவா இருக்கும்... அது தான் அப்படி திட்டிட்டு போறார்...” அவளிடம்
ராமண்ணா விளக்க, சிரித்துக் கொண்டே, அவனை நோக்கி அவள்
நகர்ந்தாள்.

அவளைப் பார்த்தவன், கையில் இருந்த சிகரட்டை கீ ழே போட்டு


அணைத்து, “இப்போ எதுக்கு இங்க வந்த?” என்று கடிக்க,

“நீ ங்க மட்டும் தான் கடல் காத்தை வாங்கலாமா? நானும் தான் வாங்க
வந்தேன்... என்னவோ உங்களுக்கு சொந்தமான கடல் கரையில காலை
வச்சா மாதிரி பேசறீங்க?” வேண்டுமென்றே அவள் பதிலுக்கு எகிறவும்,
சிறிது நேரம் அவளை முறைத்தவன், தலையை கோதிக் கொண்டு,
மெல்ல நடக்கத் தொடங்கினான்.

அவனுடன் அவளும் கடலை ரசித்துக் கொண்டு, மெல்ல நடக்க, கடல்


காற்றில், அவளது முன்னுச்சி மயிர் கற்றைகள் கலைந்து, அவள்
முகத்தினில் விழுவதும், அதை அவள் மென்மையாக
ஒதுக்கிக்கொண்டே, நடந்து வருவதையும் ஓரக்கண்ணால் பார்த்தவனின்
மனம், இதுவரை இல்லாதவகையில், ரசனைகளை மெல்ல உற்பத்தி
செய்யத் துவங்கியது.

“என்ன இது? ஒரு பெண்ணைப் போய் நான் இப்படி கூர்ந்து பார்த்துட்டு


இருக்கேன்... மனசுல என்னென்னவோ தோணுதே... புதுசு புதுசா
என்னவோ... மனசுக்குள்ள ஒரு வருடல், ஒரு ஆர்வம்... என்னாச்சு
எனக்கு? ஒரு வேளை ஹார்ட்ல ஏதாவது பிளாக் இருந்து இந்த மாதிரி
அடைக்குதோ? ஊருக்கு போன உடனே மொதல்ல மாஸ்டர் செக் அப்
செய்துக்கணும்...” என்று எண்ணமிட்டவாறே அவனும் நடந்தான்.

“என்னவோ சொல்லிட்டு வந்தியே, என்ன?” அவளது அமைதி மீ ண்டும்


அவனை பேசத் தூண்ட,

“நான் ஒண்ணும் சொல்லவே இல்லையே... நீ ங்க ஏதோ கனவு கண்டு


இருப்பீங்க போல... நான் பேசினா தான் உங்களுக்கு கோபம் கோபமா
வருது இல்ல.... அதனால ஊருக்கு போற வரை உங்க கூட பேசக்
கூடாதுன்னு முடிவு எடுத்திருக்கேன்...” அவள் சொல்லவும், அவள்
சொல்லிய விதத்தில், கோபத்திற்கு பதிலாக, அவன் இதயத்தில்,
மெல்லிய உணர்வு ஒன்று எழுந்தது.

“இல்ல... குடிக்கிறவனும், சிகரெட் புகைக்கிறவனும் நல்லவன்


இல்லன்னு உனக்கு யார் சொன்னா?” யதார்த்தமாக அவன் கேட்கவும்,

“அது சரி..... அவனோட உயிரைப் பத்தியும், அவன் இல்லாமப் போனா


அவனை நம்பி இருந்த குடும்பம் குட்டிங்க கஷ்டப்படும்ன்னு தெரிஞ்சும்...
உயிரைக் குடிக்கிற அந்த ரெண்டையும் குடிக்கிறவன், கெட்டவனா
இல்லாம வேற எப்படி இருப்பான்? அவனுக்கு, அவனோட தற்கால
சந்தோசம் மட்டுமே முக்கியம்... அவ்வளவு தான்.... அதனால வர பின்
விளைவுகளை பத்தி அவனுக்கு கவலை இல்ல... அந்த மாதிரி ஒரு
சுயநலவாதி, என்னைப் பொறுத்தவரை கெட்டவன் தான்...”
ஆக்ரோஷமாக அவள் சாடவும், ஓரிரு வினாடிகள், அவளது கோபத்தில்,
ப்ரித்வி திகைத்து நின்றான்.

“என்ன நான் சொல்றது சரி தானே? எனக்கு பார்த்திருக்க மாமாவுக்கு,


சதா சர்வ காலமும் அதே தான் பொழப்பு... இத்தனை வருஷத்து
பழக்கத்துல அந்தாளோட குடல் வெந்து சுண்ணாம்பாய் போயிருக்கும்...”
மூக்கை உறிஞ்சிக் கொண்டே அவள் சொல்ல,

“உங்க ஊர் கட்டுப்பாட்டை பத்தி கேள்விப்பட்டேன்... அப்போ உன்னை


நம்பி வெளிய அனுப்பி படிக்க வைக்கிறான்னா... உன் மாமனுக்கு உன்
மேலே எவ்வளவு அன்பு இருக்கணும்?” ப்ரித்வி வாயைக் கொடுக்க, 

“ஆமா... ரொம்ப நல்லவன் தான்... அவன் எதுக்கு என்னை ஊரை விட்டு


படிக்க அனுப்ப சம்மதிச்சான்னு நினைக்கறீங்க? எல்லாம் அவனோட
சுயநலம் தான்... நான் படிக்க வெளியூருக்கு வந்துட்டா, அங்க வேற
பொண்ணுங்க கூட சந்தோஷமா சுத்தலாம். நான் படிக்காம அங்கேயே
ஊர்ல இருந்திருந்தேன்னா, இத்தனை நேரம், கல்யாணம்
முடிஞ்சிருக்கும்... அவனால வேற பொண்ணுங்களை பார்க்க முடியாது
இல்ல... அதுக்குத் தான்...” இயலாமையுடன் அவள் சொல்லவும், ப்ரித்வி
அமைதியானான்.

“சரி.... நீ ஒரு வார்த்தை சொல்லு... என்னோட ஆளுங்களை விட்டு


அவனை ரெண்டு தட்டு தட்டி வைக்கிறேன்...” சூழ்நிலையை மாற்ற
அவன் கேலியாகச் சொல்லவும், அவனை முறைத்தவள்,

“அதுக்கு பதிலா... பேசாம என்னை எங்கயாவது கொண்டு போய்


விட்டுடறீங்களா? இல்ல, உங்க கம்பெனியிலேயே ஏதோ ஒரு வேலை
கொடுத்தா கூட போதும்... நான் பாட்டுக்கு என் காலத்தை ஓட்டிருவேன்...
திரும்ப எனக்கு ஊருக்கு போகப் பிடிக்கவேயில்லை...” அவள்
கெஞ்சலாகக் கேட்கவும்,

‘என்னோடவே வந்துடேன்...’ மனம் எழுப்பிய குரலில், ஒருமாதிரி நிலை


குலைந்தவன், அவளது செல்லை எடுத்து நீ ட்டி,

“உன் பிரெண்ட்ஸ் கிட்ட பேசு... அந்த அழுத பொண்ணுக்கு ஆறுதல்


சொல்லு... அவளும் உங்க ஊர் தானே... இந்தா பிடி...” என்று நீ ட்டவும்,
தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், வேறொன்றைப் பேசும்
ப்ரித்வியை, கஜலக்ஷ்மி பார்த்துக் கொண்டே நிற்க,

“போய் பேசு லக்ஷ்மி... உன்னை நினைச்சு அவங்க கவலையா


இருப்பாங்க... பின்ன இருக்கும் தானே.... ஊர் பேர் தெரியாதவன் கூட,
அவன் கார்ல நீ தனியா அவ்வளவு தூரம் பயணம் போறதுன்னா,
அவங்களுக்கும் பயம் இருக்காதா என்ன?” தன்னை வேற்று மனிதனாய்
உணரவைக்க முயன்றவன், அவளது கையைப் பற்றி, அவளது
செல்போனை வைத்து, திரும்பி வேகமாக நடக்கத் தொடங்க, கஜலக்ஷ்மி
அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள். 

கவிதைகள் தொடரும்....

 கவிதை – 5
அவளை நினைத்தே
அலைபாயும் இந்த
சலனத்தை இரசிப்பதா
ஒதுக்கவா தெரியவில்லை
ஆனால் இன்னும்
வேண்டும் என
கேட்டுக் கொண்டே
இருக்கும் மனது !
கையில் செல் போனையும், விழிகள் நிறைந்த ஏக்கத்தையும்
சுமந்துக் கொண்டு, கஜலக்ஷ்மி ப்ரித்வியை பார்த்துக்
கொண்டே நிற்க, மீ ண்டும் அவன் சிகரட் புகைக்கத்
தொடங்கவும், தனது பார்வையைத் திருப்பிக் கொண்டவள்,
தனது கையில் இருந்த செல்போனை இயக்கி, முல்லையின்
எண்ணை அழுத்தினாள்.

“ஏய் கழுத.... எங்கடி இருக்க? என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு?


என்னை கதற வச்சு, கொலை செய்யறது தான் உன்
குறிக்கோளா? அதுக்குத் தான், வெளியூருக்குபடிக்க வர
மாட்டேன்னு சொன்ன பிள்ளைய, துணைக்கு கூட்டிட்டு
வந்தியா? இப்படி காவு கொடுக்கவாடி நினைச்ச? உனக்கு நான்
என்ன பாவம் செய்தேன்? இப்படி வட்டுக்குத்
ீ தெரியாம டூருக்கு
வேற கூட்டிட்டு வந்து என்னை சித்ரவதை செய்யற? ஒரு
பொம்பளைப் பிள்ளைக்கு இவ்வளவு கோபம் ஆகாதுடி...”
அவளது எண்ணைப் பார்த்ததும் முல்லை பொரிந்து தள்ள,
அவள் எப்படியும் திட்டத் தான் போகிறாள் என்று அவளைப்
பற்றி புரிந்திருந்த கஜலக்ஷ்மி, அவளது காதுகள் புண் படமால்
காத்துக்கொள்ள, போனை ஸ்பீக்கரில் போட்டிருந்ததால்,
அலைகளின் இரைச்சலையும் தாண்டி, ப்ரித்வியின் காதுகளில்
விழுந்த முல்லையின் வசவு மொழிகள், அவனை
புன்னகைக்கச் செய்தது.

“போதும் முல்ல... இப்போ வாய மூடப் போறியா இல்லையா?


உன்னை யாரு அவங்க கூட சேர்ந்து என்னை எலிஃபன்ட்...
எலின்னு கிண்டல் செய்யச் சொன்னது? அதனால தானே
எனக்கு கோபம் வந்தது... அதுவும், அந்த குடிகார மாமா இப்படி
என்னைக் கூப்பிடுவான்னு சொல்லி கிண்டல் செய்ததுல தான்
எனக்கு ரொம்ப கோபம் வந்திருச்சு...”

“ஆமா... அதுக்காக இப்படி ஓடிப் போவியா?” முல்லை


விடாமல் அவளை பிடித்துக் கொள்ளவும்,

“உனக்கே தெரியும் தானே என் மாமனைப் பத்தி... அவனை


கல்யாணம் செய்துக்க எனக்குப் பிடிக்கலைன்னு, நானே
எத்தனை முறை உன்கிட்ட சொல்லி இருக்கேன்... அது
தெரிஞ்சும், நீ யும் அவங்க கூட சேர்ந்துக்கிட்டு கிண்டல்
செய்தா எனக்கு கோபம் வராதா?” பதிலுக்கு கஜலக்ஷ்மியும்
கத்தவும், ப்ரித்விக்கு சுவாரஸ்யம் கூடியது.

“இவ தான் சண்டை போட்டுட்டு ஓடி வந்திருக்காளா? நல்ல


ஆளு தான் போ... சின்ன மேடம்க்கு, மூக்குக்கு மேல என்ன
கோபம் வருது...!!” என்று நினைத்துக் கொண்டவன், அவளது
கூர் மூக்கை ரசனையுடன் பார்க்க,

அதே நேரம், “ஆமா கஜா... உனக்கு கோபம் வந்தா இப்படித்


தான் நட்ட நடுராத்திரியில கிளம்பிப் போவியா? என்னைப்
பதியும் நம்ம ஊரைப் பத்தியும் கொஞ்சமாவது
கவலைப்பட்டியா? உங்க அப்பா ஊருக்கே தலைவரு கஜா...
அவரோட மானத்தைப்பத்தி கொஞ்சமாவது நினைச்சுப்
பார்த்தியா?” மனம் ஆறாமல் முல்லை பொரிந்துத் தள்ளவும்,

“தப்பு தான் முல்ல... கோபத்துல நான் தனியா இப்படி


வந்திருக்கக் கூடாது தான்... அதுக்காக, எல்லாரும் அதையே
சொல்லித் திட்டினா, நான் என்னத் தான் செய்யறது? இங்க
இவரும், அதைச் சொல்லியே திட்டிட்டு இருக்கார்... விட்டா,
என்னை ஊர்ல கொண்டு வந்து விடற வரை, அதைச்
சொல்லியே திட்டிட்டே இருப்பார் போல... வாயே
வலிக்கலன்னா பாரேன்...” ஆதங்கமாக அவள் சொல்லவும்,

“என்ன கஜா சொல்லற? உன்னை திட்டிட்டே இருக்காறா?


சாப்பிட்டயா?” அக்கறையாக அவள் வினவ,

“அதெல்லாம் புது டிரஸ்... நல்ல வயிறு முட்ட சாப்பாடு...


தூக்கம்ன்னு.. நல்லா சுகமாத்தான் இருக்கு இந்த பயணம்...”
என்றாள், ப்ரித்வியை குறும்பாக ஓரக்கண்ணால் பார்த்துக்
கொண்டே.

“சரி அதை விடு... நீ ங்க எங்க இருக்கீ ங்க?” முல்லையை


இயல்பு நிலைக்கு கொண்டு வர அவள் கேட்கவும்,
“அவர் யாரோ பெரிய ஆள் போல இருக்கு கஜா.... போலீஸ்
அது இதுன்னு நம்ம லோகேஷ்க்கு மெசேஜ் அனுப்பி
இருக்கார்... எங்கயாவது இந்த சினிமாவுல வர மாதிரி,
வெளிய பார்க்க நல்லவரா இருந்து... உள்ளுக்குள்ள மகா
கெட்டவரா இருந்து... ‘கண்ணு என் கேரக்டரையே புரிஞ்சிக்க
மாட்டேங்கறியே’ன்னு சொல்லிடப் போறார்... எனக்கு ஒரே
பயமாத்தான் இருக்கு கஜா” கவலையாக முல்லை வினவ,

“ஆமா... அப்படித் தான் இருக்கு... பலாப்பழமா... இல்ல


மாம்பழமான்னே புரியாம...” கஜா வாய்க்குள் முணுமுணுக்க,

“ஏய்.. ஏய் என்னடி சொல்ற? உன்னை கூட்டிட்டு வரவர்


நல்லவர் தானேடி... தப்பான பார்வை எதுவும் பார்க்கலையே...
அப்படி மட்டும் அவர் பார்த்தா, உன்னோட ஹேண்ட்பேக்ல
வச்சிருக்கற அந்த மிளகாய் பொடியையும், மிளகு
பொடியையும், அவர் கண்ணுல போட்டுட்டு ஓடி வந்திரு...
நம்ம தோட்டத்து மிளகாய் நல்ல காரமா இருக்கும்... அதுக்கு
அப்பறம் அவன் கண்ணே திறக்க முடியாது...” பெரிய
யோசனை ஒன்றை முல்லை சொல்லவும், கஜலக்ஷ்மியின்
பார்வை ப்ரித்வியை நோக்கிப் பாய்ந்தது.

 Share
o
o
o
o
o
 |
 Like
suganyarangasam, gomathyraja, vaideesh and 35 others like this.
 

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

    
 17th Apr 2015, 11:46 AM#24

ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya
அவள் பேசுவதை காதினில் வாங்கிக் கொண்டே, புகைத்துக்
கொண்டிருந்தவன், “அடிப்பாவி... ஹேன்ட் பேக் உள்ள
ஒருமினி கிட்செனை வச்சிட்டுத் தான் இவ்வளவு தைரியமா
வந்தாளா? இதுல என்னவோ குசு குசுன்னு வேற பேசிட்டு
இருக்காளே.... என்னவா இருக்கும்...” என்று யோசித்தவனின்
மனதில், இரவில் காரை மறித்து அவள் ஏறியதில் இருந்து
தற்போது வரை நினைவில் வந்து, அவளைப் பற்றிய
எண்ணங்கள், மனதில் மெல்லிய தடுமாற்றத்தை
விளைவித்தது.

அவனது தடுமாற்றம் அவனுக்கே புதியதாகத் தோன்ற, “என்ன


இது? நான் ஒரு பெண்ணைப் பார்த்து தடுமாறறேனே!! அதுவும்
ஒரு சின்னப் பெண்ணைப் பார்த்து... அவ இப்போ தான்
படிச்சுட்டு இருக்கா... ஆனா நான்? என் வயசு என்ன?” என்று
மனம் சுணங்கியவன்,

“என்னோட ஆபீ ஸ்லயே எவ்வளவோ பொண்ணுங்க


இருக்க.... அவங்களை தினமும் பார்த்துட்டு இருக்கேன்..
ஆனா இவளைப் பார்த்து மட்டும் எனக்கு ஏன் இந்த
தடுமாற்றம்?” மேலும் அவளைப் பார்ப்பதை விடுத்து, ப்ரித்வி
தனது மனதை யோசனைக்குத் திருப்பினான்.

“எனக்கு வாழவே பிடிக்கல முல்லை... நான் அப்படியே


கடலுல விழுந்து சாகப் போறேன்... எங்க அம்மா
அப்பாவுக்கும் என் மேல பாசமே இல்ல... எங்க அத்தை மவன
போல, நானும் சின்ன வயசுலயே தொலைஞ்சு
போயிருக்கலாம்... அவன் இப்போ எந்த இடத்துல நிம்மதியா
இருக்கானோ? நான் இந்த, தாங்கவே முடியாத ஊர்க்
கட்டுப்பாட்டுல கிடந்து சாகறேன்... இந்த கூறுகெட்ட
மாமனைக் கட்டிக்கிட்டு அடி உதை படறதுக்கு பதிலா, நான்
இப்படியே எங்கயாவது போயிடலாம்... அதைவிட, சாகறதே
இன்னும் மேலா இருக்கும்” தான் பாட்டிற்கு அவள் புலம்பிக்
கொண்டிருக்க, அவளது புலம்பல்கள், ப்ரித்வியின்
யோசனையை மீ றி, ரசிக்க வைத்தது.

“வேண்டாம் ப்ரித்வி... சின்ன பொண்ணு... அவ இப்போ தான்


காலேஜ் படிச்சிட்டு இருக்கா... உனக்கோ முப்பது வயசுக்கும்
மேல ஆகுது... அதனால, இந்தத் தேவை இல்லாத தடுமாற்றம்
வேண்டாம்... நீ நீயா இரு... இன்னைக்கு காலையில, ஒரு
பெண்ணை நம்பி வாழ்க்கைய கொடுக்க மாட்டேன்னு
சொல்லிட்டு... இப்போ நீ என்ன செய்துட்டு இருக்க?” தனக்குத்
தானே அறிவுறுத்திக் கொண்டாலும், அவனது பார்வை
அவளை நோக்கியே திரும்பியது.

கையசைத்து, கண்களை உருட்டி, காலை உதைத்துக்


கொண்டு அவள் பேசுவது மட்டுமே கண்களை நிறைக்க,
அவளது குரலோ அவன் காதில் கீ தத்தை இசைத்தது.
“இங்க நின்னா சரிப்படாது.... முதல்ல இங்கேர்ந்து நகரு
ப்ரித்வி... இதெல்லாம் உன் லைஃப் ஸ்டைலுக்கு சரிப்படாது...”
தனக்குத் தானே, இவ்வாறு பேசிக் கொள்வதும் புதியதாகத்
தோன்ற, தலையை அழுந்தக் கோதிக் கொண்டவன், தனது
கால்களை அங்கிருந்து நகர்த்தத் தொடங்கினான்.

என்ன முயற்சி செய்தும், அவனது கால்கள், அவனுக்கு


கட்டுப்படாது, அவள் இருக்கும் திசையையே சுற்றிக்
கொண்டிருக்க, “உங்க மாமா ரெண்டு தரவ போன்
செய்துட்டாங்க கஜா.... உன்கிட்ட பேச ஆசையா இருக்காம்...
உன்னைப் பார்க்கணும் போல இருக்காம்... எப்போ ஊருக்கு
வரீங்க என்ன ஏதுன்னு கேட்டாங்க...” முல்லையின் குரல்
ப்ரித்வியின் காதில் விழ, தனது கால்களை சபித்தவன்,
கஜலக்ஷ்மியின் பதிலுக்காக மனது தவிப்பதை உணர்ந்து,
மேலும் அதிர்ந்தான்.

“என்ன இது புதுசா ஒரு குழப்பம்? அவ யாரைப் பத்தியோ


பேசறான்னா... எனக்கு எதுக்கு இவ்வளவு பதட்டமும்
அதிர்ச்சியும் வருது?” அதிர்ச்சியுடன் யோசித்தவன், அவள்
வேறொருவருக்கு நிச்சயிக்கப்பட்டிருப்பதை உணர மறுத்த
மனதை அடக்கியவன், அங்கிருந்து நகரத் தொடங்கினான்.

புதிதாக மனதின் மெல்லிய தடுமாற்றம், தனது புன்னகை,


மனதில் இருந்த இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுதல்
அனைத்தும், தான் இருக்கும் நிலைக்கு பொருந்தாது என்பதை
மீ ண்டும் மீ ண்டும் மனதிற்குள் மனப்பாடம் செய்வது போல்
சொல்லிக் கொண்டு, கடலோரமாக நடக்க, எதுவோ
வேகமாக விழும் சத்தத்தில் திரும்பிப் பார்த்தவன், கஜலக்ஷ்மி,
போனை தூக்கி கரையோரமாக எறிந்துவிட்டு, கடலில்
இறங்குவது புரிந்து, வேகமாக அவள் அருகில் ஓடினான்.

“ஏய் லக்ஷ்மி... என்ன இப்படி ஒரு பைத்தியக்காரத்தனத்தைச்


செய்யற?” அவளைப் பிடித்துத் தூக்கியவன், அவள்
கன்னத்தில் பட்டென்று ஒரு அறையை வைத்து, அவளை
இழுத்துக் கொண்டு கரைக்கு வர, அவன் மார்பில் புறாக் குஞ்சு
போல தஞ்சம் புகுந்தவள், அவனது சட்டையை இறுக்கமாக
பற்றிக் கொண்டாள்.

அவளது நெருக்கமும், உடலின் நடுக்கமும், அவனது


கோபத்தை மட்டுப்படுத்த, மெல்ல அவளது முதுகை வருடிக்
கொடுத்தவன், “இப்போ எதுக்கு இப்படி செய்த? நீ
சாகறதுனால பிரச்சனை எல்லாம் தீர்ந்து போயிடுமா?”
தன்மையாக அவளிடம் வினவ,

“என்னை என்ன தான் செய்யச் சொல்றீங்க? பிடிக்காத


வாழ்க்கைக்கு என்னை எல்லாரும் தள்ளறாங்களே... என்
மனசு யாருக்காவது புரியுதா?” கோபமாக கண்ண ீருடன் அவள்
கேட்கவும், அவளது கண்ண ீரைத் துடைத்தவன்,

“இப்போ என்ன பிரச்சினை.... அவர் குடிக்கிறார்... அவ்வளவு


தானே லக்ஷ்மி... அதனால என்ன பிரச்சனை உனக்கு? நீ உன்
அன்பால அவரைத் திருத்தலாம் இல்லயா? அதுக்காக
எல்லாம் உன் உயிரை விடலாமா?” என்று கேட்டவன்,
அவளை விலக்கி நிறுத்தி,

“’என் உயிர் சக்கரை கட்டி’ன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னால


சொல்லிட்டு, இப்போ அதே சக்கரைக்கட்டி தண்ணியில
கரையலாமா? என்னையும் சேர்த்து இல்ல நீ தண்ணியில
கரைக்கிற... ஒருவேளை என்னை பழி வாங்க, போலீஸ்ல
மாட்டிவிட ஏதாவது ப்ளான் பண்ணிட்டியோ?” ப்ரித்வி கேலி
செய்ய, தொங் தொங் என்று மணலில் கால் புதைய காருக்கு
அருகே நடந்துச் செல்ல, அவளது மொபைலை எடுத்துக்
கொண்டு, ப்ரித்வி அவளைப் பின் தொடர்ந்தான்.

தொப்பலாக நனைந்தபடி வந்த கஜாவைப் பார்த்தவர்,


அவளுக்கு பின்னால், அதே போல வரும் ப்ரித்வியைப்
பார்த்தவர், “என்ன தம்பி... ரெண்டு பேரும் தண்ணியில
இறங்கின ீங்களா என்ன? உங்களுக்கு கடல் தண்ணி
கசகசப்பே பிடிக்காதே... வேற டிரஸ் மாத்திக்கறீங்களா
தம்பி?” அவர் கேட்கவும்,

“ம்ம்... எல்லாம் இவளால வந்தது ராமண்ணா... இருங்க...


நான் போய் டிரெஸ் மாத்திட்டு வரேன்... வேலை எல்லாம்
முடிஞ்சதா ராமண்ணா?” என்று கேட்டுக் கொண்டே அவன்
உடையை எடுக்க, கஜா அவனையே புரியாமல், பார்த்துக்
கொண்டு நின்றாள்.

“தம்பி... ஸ்டெப்னிய மாத்திட்டேன்... போற வழியில பஞ்சர்


ஆன டயரை ஒட்டிக்கிட்டு போயிடலாம்... நீ ங்க போய் டிரஸ்
மாத்திக்கங்க தம்பி...” ராமண்ணா சொல்லிவிட்டு
ப்ரித்வியைப் பார்க்க, எங்கோ பார்வையைப் பதித்துக்
கொண்டு நின்றிருந்த கஜலக்ஷ்மியை கண்களில் காட்டினான்.

 Share
o
o
o
o
o
 |
 Like
suganyarangasam, gomathyraja, latharaju89 and 36 others like this.

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

    
 17th Apr 2015, 11:48 AM#25

ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya

அவளைப் பார்த்த ராமண்ணா, அவள் கன்னத்தில் பதிந்திருந்த


விரல் தடங்களைக் கண்டவர், ப்ரித்வி காருக்குள்ளே உடை
மாற்றச் செல்லவும், “என்ன லக்ஷ்மிம்மா கடல்ல குளிக்கப்
போனியா என்ன?” சிரிப்புடன் அவளை சீண்ட,

“இப்போ நான் கார்ல வரலாமா கூடாதா?” என்று பதில்


கேள்வி கேட்டாள்.

“உனக்கு டிரஸ் இருந்தா உன்னையும் மாத்தச் சொல்லி


இருப்பேன்... நேத்து போட்ட டிரஸ் தானே இருக்கு... வேணா
அதை மாத்திக்கோ... இல்ல தம்பி வந்து என்ன
சொல்றாருன்னு பார்ப்போம்...” விடாமல், ராமண்ணா
அவளை சீண்டினார்.

அதைக் கேட்டுக் கொண்டே காரில் இருந்து இறங்கிய ப்ரித்வி,


“இதுக்குத் தான் சின்னப் பிள்ளை கூட சகவாசம் வச்சுக்கக்
கூடாதுன்னு சொல்றது... பாருங்க ராமண்ணா.. இவளை
இங்கேயே நட்ட நடு ரோட்டுல விட்டுட்டு போக முடியுமா? ஈரத்
துணியோட இருந்தா என்ன? உப்பு அவளை அறிச்சிடாது...
பழைய துணி அழுக்கா இருக்கும்... அதெல்லாம் வேண்டாம்...
நான் உள்ள வரக் கூடாதுன்னா சொன்னேன்.. எனக்குத் தானே
கசகசப்பு பிடிக்காது.... அவளுக்கு தான் குளிக்கவே
பிடிக்காதே...” ப்ரித்வியும் சிறு பிள்ளை போல ராமண்ணாவை
வம்புக்கு இழுக்க,

“ஆமா தம்பி... நீ ங்க சொல்றதும் சரி தான்... நடுரோட்டுல


விட்டுட்டு போக முடியாது... லெதர் சீட் தானே... ஈரம் ஆகாது
தம்பி... பக்கத்துல ஒரு டவுன் வரும்... அங்க இதுக்கு வேற
துணி வாங்கிக்கலாம்...” தான் அதைத்தான்
சொல்லவேண்டும் என ப்ரித்வி எதிர்ப்பார்க்கிறான் என்று
தெரிந்தே அவர் பதில் சொல்லவும்,

“அப்பறம் என்ன? உங்க ராமண்ணாவே சொல்லிட்டாங்க


இல்ல, சீக்கிரம் ஏறு...” என்றவன், அவள் விறைப்பாக
நிற்கவும், அவளது தோளைப் பிடித்து, காரின் உள்ளே
மெதுவாகத் தள்ளினான்.

அவனது சிறு சீண்டலும், தீண்டலும், அவளை அதற்கு மேல்


பேச விடாமல் தடுக்க, அவள் அமர்ந்ததும், அவளது
கன்னத்தை மெல்ல தட்டி விட்டு, “நீ இப்படியே பேசாம
இருந்தா எவ்வளவு நல்லா இருக்குத் தெரியுமா? இவ்வளோ
நேரமா என் காதுல ‘கொயிங்’ன்னு ஒரு சத்தம் வந்துட்டே
இருந்துச்சு... ஒரு பத்து நிமிஷம் பேசாம இரு... அது
அடங்கிடும்...” அவளை கிண்டல் செய்துக் கொண்டே,
மறுபக்கம் சென்று ஏற,

“தம்பி... நான் நல்லா தூங்கிட்டேன்... இப்போ நானே


ஓட்டறேன்...” பதட்டமாக ராமண்ணா அவனைத் தடுக்கவும்,
ஏனோ அந்த இடத்தை விட மனமில்லாதவன்,

“இல்ல ராமண்ணா... பக்கத்துக்கு டவுன் வரைக்கும் நானே


ஓட்டறேன்.. கொஞ்ச நேரம் தானே... அதுக்கு அப்பறம் என்
வேலையைத் தொடங்கணும்...” என்று விடாமல் ப்ரித்வி
ட்ரைவர் சீட்டில் ஏறிக் கொள்ள, ராமண்ணாவும் மறுத்துப்
பேசாமல், பின் பக்கம் ஏறிக் கொண்டார்.

“அப்போ நான் இங்கேயே இறங்கிக்கறேன் ராமண்ணா... இவர்


ஓட்டற ஸ்பீடைப் பார்த்தா, நாம ஒட்டு மொத்தமா பரலோகம்
தான் போகணும்...” இப்பொழுது கஜலக்ஷ்மி தொடங்க,

“இப்போ இவ மட்டும் தனியா பரலோகம் போகப் பார்த்தா


ராமண்ணா... நான் நினைக்கிறேன்.... இவ நம்ம எதிரிங்க
ஆளா இருக்கணும்... நான் கொஞ்சம் அசந்த வேளையில,
தடால்ன்னு கடல்ல இறங்கிட்டா... ஒருவேளை நம்ம ரெண்டு
பேரையும் ஜெயில்ல தள்ள ப்ளான் பண்ணிட்டுதான், நம்ம
கார்ல ஏறி இருப்பாளோ?” அவன் பெரிதாக யோசிப்பதைப்
போல பாவனை செய்ய,

“இருக்கலாம் தம்பி... பின்ன, அதுவும் நீ ங்க பக்கத்துல


இருக்கும் போதே இப்படி ஒரு காரியம் செய்திருக்கான்னா....
தம்பி, ஒருவேளை அவனோட ஆளா இருக்குமோ?”
ப்ரித்வியின் வம்புக்கு ராமண்ணாவும் பதில் சொல்ல,

“ஆமா... அப்படியே, நீ ங்க ரெண்டு பேரும் இந்தியாவோட


பிரதமமந்திரியும், ஜனாதிபதியும்.... பாகிஸ்தான்ல இருந்து
உளவு பார்க்க தான் நாங்க வந்திருக்கோம்.... என்ன, என்னைப்
பார்த்தா ரெண்டு பேருக்கும் நக்கல் அடிக்க தோணுதா?” அவள்
சீறவும், ப்ரித்வி சிரித்துக் கொண்டே காரை கிளப்பினான்.
“தம்பி... நீ ங்க சிரிக்கிறது ரொம்ப அழகா இருக்கு.... இனிமே
அப்பப்போ கொஞ்சம் சிரிங்க தம்பி...” சந்தர்ப்பத்தை விடாமல்,
ராமண்ணா சொல்லவும், அவரைத்திரும்பிப்பார்த்தவன்,
பதில் ஏதும் சொல்லாமல், கார் ஓட்டுவதில் கவனத்தைப்
பதித்தான்.

“நீ ங்க ஏன் ராமண்ணா இவர் கிட்ட காரைக் கொடுத்தீங்க?


இவர் ஒட்டின லட்சணத்தால தான் ரெண்டு டயரும் பஞ்சர்...
அதுவும் ஒரே நேரத்துல... அது எப்படி ஆகும்...?” அவனை
வம்பிழுப்பது அவளுக்கு பிடிக்க, அதைத் தொடர்ந்தவள்,

“கார் ஓட்டும் போது டிஸ்டர்ப் பண்ணினா அப்படித் தான்


ஆகும்... சும்மா தொண தொணன்னு பேசாம வா...” ப்ரித்வி
அதட்டவும், உர்ரென்ற முகத்துடன் கஜலக்ஷ்மி அமர்ந்துக்
கொண்டு வர, அவளைக் கண்டும் காணாது, அருகே இருக்கும்
டவுன் வந்ததும், ஒரு துணிக் கடையின் முன்பு ப்ரித்வி காரை
நிறுத்த, எதுவும் பேசாமல் கஜலக்ஷ்மியும் இறங்கிக்
கொண்டாள்.

அமைதியாகவே இருவரும் கடைக்குள் சென்று அவளுக்குத்


தேவையான துணிகளை எடுக்க, “எப்பப் பாரு தாவணியும்,
சுடிதாரும் தானா? ஊர்ல எப்படியும் தாவணி தானே எடுப்ப...
இப்போ போட்டுக்கற மாதிரி புதுசா ஏதாவது எடுத்துக்கலாம்
இல்ல... ஜீன்ஸ்... அதுக்கும் மேல என்னவோ... அதுக்குப் பேர்
என்ன?” அவன் இழுக்கவும்,

“குர்தா...” என்று ஒற்றை வார்த்தையில் பதில் கூறி,


“எனக்கு அதெல்லாம் பழக்கம் இல்ல..” என்றவள், ரெடிமேட்
சுடிதாரையே பார்க்கத் துவங்கினாள்.

“ஓ... அப்போ, கோபப்பட்டு பிரெண்ட்டை விட்டுட்டு ஓடி


வரத்துக்கு மட்டும் பழக்கம் இருக்கோ?” தான்
கூறியயோசனையை அவள் நிராகரித்து விட்ட கோபத்தில்,
அவன் சட்டென்று அவளை கடியவும்,

“உங்க கார்ல வரேங்கறதுக்காக, நீ ங்க சொல்றதை எல்லாம்


செய்யணும்னு எனக்கு ஒண்ணும் அவசியம் இல்ல... எனக்கு
பிடிச்ச ஒண்ணைத் தான் நான் செய்வேன்... அந்த குர்தா
எல்லாம் எதுக்கு போடணும்... உங்களுக்கு வேணும்னா உங்க
பொண்டாட்டிக்கு போட்டு அழகு பாருங்க... எனக்கு
வேண்டாம்...” கோபமாகக் கூறியவள், துணிகளை அலசத்
தொடங்க,

“சொல்லி ஒரு வார்த்தையில கேட்டுட்டா தான் தலை


வெடிச்சிருமே...” என்றபடி, தோளைக் குலுக்கிக்கொண்டவன்,
கைகளை கட்டிக் கொண்டு, வேறெங்கோ பார்வையை
பதித்துக் கொண்டு நின்றான்.

அவன் முகத்தைப் பார்த்தவள், “நீ ங்க சொன்னா, உடனே நான்


அதையே செய்யணுமா?” என்று பொருமிக் கொண்டே, அவன்
கூறியது போலவே ஒன்றைத் தேர்வு செய்யவும், அதைப்
பார்த்தவனின் கோபம் குறைந்து, புன்னகை மலர்ந்தது.

அவள் எடுத்த உடையை கண்டுகொள்ளாமல், “டிரஸ்


எடுத்துக்கிட்டாச்சா? போகலாமா?” என்று கேட்டபடி,
அதற்கான பணத்தை அவன் நீ ட்ட,

“என்கிட்டேயே பணம் இருக்கு... நீ ங்க ஒண்ணும் பணம் கட்ட


வேணாம்..” எங்கோ பார்வையை பதித்துக் கொண்டே அவள்
சொல்லவும்,

“அப்போ எனக்கும் சேர்த்து டிரஸ் எடுத்துக் கொடு...


காலையில நான் உனக்கு எடுத்துக் கொடுத்தேன் இல்ல...”
என்றபடி, அவனும் பில் கவுண்டரில் நின்றான்.

 Share
o
o
o
o
o
 |
 Like
suganyarangasam, gomathyraja, latharaju89 and 36 others like this.

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

    
 17th Apr 2015, 11:49 AM#26

ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya

“உங்களுக்கா? என்கிட்டே ஐயிரம் ரூபாய்தானே இருக்கு...”


அவன் விலை உயர்ந்த துணிகளை தான் எடுப்பான் என்ற
எண்ணத்தில், சர்வ சாதாரணமாக அவள் சொல்லவும்,

“ஓ... பரவல்லயே... படிக்கிற பொண்ணுகிட்ட இவ்வளவு


பைசா இருக்கே... அதுவும் நீ டூர் முடிச்சு திரும்பும் போதும்
இவ்வளவு வச்சிருக்கன்னா... எவ்வளவு எடுத்துட்டு போன?”
நக்கலாக அவன் கேட்க,

“பதினஞ்சாயிரம் எடுத்துட்டு போனேன்.... முல்லைக்கும்


சேர்த்து... அது வந்து..” அவள் தலை குனியவும்,
“டூர் போறதை வட்ல
ீ சொல்லைன்னா... இதுவும் பொய்
சொல்லி வாங்கின பணம்... அப்படித் தான் இல்லையா?”
கூர்மையாக அவளைப் பார்த்துக் கொண்டே அவன் கேட்கவும்,
அவனது குரலில் இருந்த கோபத்தில், மேலும் அவள் தலை
தாழ, அவளை முறைத்துக் கொண்டே, பில்லைக்
கொடுத்துவிட்டு, அவளிடம் டிரஸ் கவரை நீ ட்ட, மறுபேச்சு
பேசாமல் அவளும் அதை வாங்கிக் கொண்டு, அவனைப்
பார்க்க,

“அங்க ட்ரயல் ரூம் இருக்கு...” என்று அவன் கைக் காட்ட,

“இதுவே காஞ்சு போயிருச்சு...” தயக்கத்துடன் அவள்


முணுமுணுக்கவும், அவளை மேல் இருந்து கீ ழ் வரை
ஒருமுறைப் பார்த்தவன்,

“சக்கரை கட்டி, உப்புக் கட்டி ஆகிடக் கூடாது இல்ல... அதுக்குத்


தான் சொல்றது... இங்கயே போய் ட்ரெஸ் மாத்திக்கோ...
நல்ல சேஃபான இடம் தான்... நான் செக் பண்ணிட்டேன்...”
என்றவன், காரை நோக்கிச் சென்றான்.

“இவரு சொன்னபடி வாங்கினேன் இல்ல... நல்லா


இருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னாத் தான் என்ன?
எல்லாம் திமிரு... முசுட்டு முசோலினி...” என்றபடி, அவன்
கைக் காட்டிய திசையில் சென்று உடை மாற்றி வந்தவள்,
காரில் ஏறி அமர்ந்தாள்.

ஏனோ ராமண்ணாவிடம் காரைக் கொடுக்காமல், ப்ரித்வியே,


மீ தி பயணத்திற்கும் ஓட்டத் துவங்கி இருந்தான். அவனது
அமைதியும், மிதமான வேகத்தில் கார் சென்ற விதமும்,
அவருக்கு அவனது சலனத்தை சொல்லாமல் சொல்ல,
மனதிற்குள் சிரித்துக் கொண்டவர், கண்களை மூடிக்
கொண்டு, உறங்குவது போல நடித்தார்.

சிறிது தூரம் சென்றதும், ஒரு ட்ராஃபிக்கில் கார் நிற்க, எங்கோ


வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கஜாவை
ஓரக்கண்ணால் பார்த்தவன், கண்ணாடியைப் பார்த்து,
தலையை கோதிக் கொண்டு, உதடுகள் விரிய,
சத்தமில்லாமல் சிரித்துப் பார்த்தான்.

“அழகா தான் இருக்கேன் போல....” மனதில் அவன்


நினைக்கையிலேயே, அவனை ஓரக்கண்ணால்
பார்த்தவளுக்கு சிரிப்பு பொங்கியது. அதனைக்
கட்டுப்படுத்தியவள், “ப்ரித்வி...” என்று அழைக்க, அதிர்ச்சியா,
ஆச்சரியமா? என்று புரியாத நிலையில், திரும்பிப் பார்த்தான்.

“ஹையோ இந்த பொண்ணு தம்பிய பேர் சொல்லிக்


கூப்பிடுதே... அடிச்சு கிடுச்சு வச்சிடப் போறார்...” ராமண்ணா
பதைபதைக்க, ப்ரித்வியோ, எந்த உணர்வும் இல்லாமல்
அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நைட் ஆகப் போகுது... பசிக்குது... மதியமும் எதுவும்


சாப்பிடல” மெல்ல அவள் வயிற்றைப்பற்றி நினைவு படுத்தி
இழுக்கவும்,

“இதை அங்கேயே சொல்லி இருக்கலாம் இல்ல... எதாவது


ஒரு கடையில சாப்பிட்டு இருக்கலாம்... இல்ல, இன்னும்
கொஞ்ச தூரத்துல நெல்லூர் வரும், அங்க சாப்பிடலாம்...
இப்போ... இரு என்கிட்டே பிரட் பாக்கெட் இருக்கு... கொஞ்சம்
பிரட் சாப்பிட்டு ஜூஸ் குடி...” என்றவன், காரை ஓரம்கட்டி
நிறுத்தி, அவளுடைய பசியை போக்க, ராமண்ணா இன்னமும்
கண்களை மூடிய நிலையிலேயே சாய்ந்திருந்தார்.

மீ ண்டும் பயணம் தொடங்க, பாட்டை ரசித்துக் கொண்டே,


கஜலக்ஷ்மி, அதனுடன் பாடலை முணுமுணுக்க, “உனக்கு
பாட்டு கேட்க ரொம்ப பிடிக்குமா?” தானாகவே முன் வந்து,
ப்ரித்வி கேள்வி கேட்கத் தொடங்க,

“ஓ... ரொம்ப பிடிக்குமே... அதுவும் மெலடி பாட்டுன்னா ரொம்ப


பிடிக்கும்... ஆனா, எங்க ஊர்ல தான் சினிமா பார்க்கவே விட
மாட்டாங்க... நாங்க கெட்டுப் போயிருவேமாம்...” அவள்
சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“அதைப் பார்த்து தான் நீ கெட்டுப் போகணுமா என்ன?”


இடக்காக அவன் கேட்கவும்,

“இது தானே வேணாங்கறது... நான் அப்படி என்ன கெட்டுப்


போனத நீ ங்க பார்த்தீங்க? என்னை மாதிரி ஒரு நல்ல
பொண்ணு இந்த ஊருலயே இருக்க மாட்டாங்க தெரியுமா?”
மீ ண்டும் சண்டை தொடங்கவும், இருவரும் சிறிது நேரம்
அமைதியாக ஒருவர் முகத்தை பார்த்து ஒருவர் முறைத்துக்
கொண்டிருக்க, சிறிது நேரத்தில் அவள் முகத்தில் தெரிந்த
கோபத்தில், ப்ரித்வியின் கண்கள் சிரிப்பில் ஜொலிக்க, அதைக்
கண்டு கொண்டவள்,
“சிரிப்பை அடக்கக் கூடாதுன்னு எங்க ஆயா சொல்லுவாங்க...
அப்பறம் தூக்கத்துல பேய் வந்து பயமுறுத்துமாம்....” அவள்
சொல்லவும்,

“நான் ஒண்ணும் சிரிக்கலையே... நீ தான் கேலி பண்ணிட்டு


இருக்க... கனவுல பேய் வந்தா கூட பரவால்ல... நீ எங்கயாவது
வந்துடப் போற... அப்பறம் உன்னை இறக்கி விட்டுட்டு
சோட்டாணிக் கரைக்கு போயிட்டு தான் நான் ஊருக்குத்
திரும்பணும்...” அவளுக்கு சரியாக அவனும் வம்பு
வளர்க்கவும், சிரிப்பும், சீண்டலுடனும், நெல்லூர் வந்து
சேர்ந்தனர்.

அங்குள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த


அதே நேரம், கஜலக்ஷ்மியின் செல்போன் இசைக்க, அதை
எடுத்து காதுக்கு கொடுத்தவள், அதிர்ச்சியுடன், வாயில்
வைத்த தோசையுடன், ப்ரித்வியைப் பார்த்தாள்.

கவிதைகள் தொடரும்....
 Share
o
o
o
o
o
 |
 Like
Divyadevig, suganyarangasam, kala_sv and 63 others like this.
 

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

    
 17th Apr 2015, 11:53 AM#27

ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya
ஹாய் பிரெண்ட்ஸ் ....

"விழியோரக் கவிதைகளின்" அடுத்த பதிவைக்


கொடுத்துவிட்டேன் .... படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை
தவறாம சொல்லுங்க.... உங்கள் கருத்துக்களைக் காண
ஆவலாக காத்திருக்கிறேன்...

சென்ற பதிவிற்கு கருத்துக்களைத் தெரிவித்த உங்கள்


அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பிரெண்ட்ஸ் ....   

விழியோரக் கவிதைகள் - கமெண்ட்ஸ் 

 Share
o
o
o
o
o
 |
 Like
suganyarangasam, vaideesh, meenakshijanani and 16 others like this.

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

    
 20th Apr 2015, 09:58 PM#28

ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya

கவிதை – 6

எந்த அதட்டலும்
அலட்டிக் கொள்ளாமல் இருந்த
பழக்கம் என்றாலும்
உன் சத்தம் மிகுதியான வார்த்தைகளில்
என் மௌனத்தை
உமிழ்ந்து விட்டு
அமைதியாக இருக்க
சொல்லும் என் நெஞ்சம்!!
வாயில் இருந்த தோசை தொண்டையில் சிக்க, அதை விழுங்கக்
கூட இல்லாமல் வாயில் வைத்த படியே பேந்த பேந்த
விழித்தவளின் நிலையைப் பார்த்த ப்ரித்வி, “பசிக்குதுன்னு
சொன்ன தான்... ஆனா இந்த அளவு பசியோட இருப்பன்னு,
கண்டிப்பா நான் எதிர்ப்பார்க்கல… சரி அது இருந்துட்டு
போகட்டும்… அதுக்காக இப்படி தொண்டையில அடைக்கிற
அளவுக்கா முழுங்குவ... கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடு... நான்
ஒண்ணும் பிடுங்கிக்க மாட்டேன்… எல்லாத்துலயும் அவசரம்...”
அவளைத் திட்டிக் கொண்டே ஒரு கிளாஸ் தண்ண ீரை எடுத்து
நீட்டவும், அதை வேகமாக பருகியவள்,

“சொல்லு முல்லை... என்னடி சொல்ற? மாமா நாளைக்கு


காலையில வராரா? எதுக்கு அவர் வரார்?” பதட்டமாக அவள்
வினவ,

“அதையே தான் நானும் சொல்றேன்... உங்க மாமா நாளைக்கு


காலையில.... அஞ்சு மணிக்கு…. நம்மளை கூட்டிட்டு போக
வரேன்னு சொல்ல இப்போ தான் எனக்கு போன் செய்தாங்க...
உனக்கு போன் செய்தா நீ போனை எடுக்கலையாம்... கூடவே
எங்க மாமனும் வராராம். இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு
உங்க மாமா போன் செய்யும் பாரேன்...” முல்லை சொல்லிக்
கொண்டிருக்கும் போதே, கஜாவின் செல்போனில் பீப் இசைத்தது.

அதை எடுத்துப் பார்த்தவள், “முல்லை... மாமா தான் கூப்பிடுது


முல்ல... நான் என்னடி செய்வேன்... இப்போவே மணி
ஒன்பதுக்கும் மேல ஆகுது... நீங்க எல்லாம் எங்க இருக்கீ ங்க?”
பதட்டமாக அவள் கேட்க,

“நாங்க கிட்டத்தட்ட மதுரை போய்ட்டோம்... நடுவுல


சாப்பாட்டுக்காக நின்னது, அப்புறம், பஸ் மாறி மாறி வந்ததுல,
கொஞ்சம் தாமதமாச்சு... இன்னும் அரை மணி நேரத்துல
ஹாஸ்டலுக்கு போயிருவோம்... நீ இப்போ என்னடி செய்யப்
போற?” பதட்டமாக முல்லை கேட்கவும், கஜா ப்ரித்வியை
முறைத்தாள்.
“நான் என்ன தான் செய்யறது முல்ல... அழகா ஒரு கார் வருதே...
சும்மா ரேஸ் கார் மாதிரி இருக்கே... இன்னிக்கு மதியத்துக்கு மேல
மதுரைக்குப் போயிருவோம்ன்னு நினைச்சேன்... அது சரியான
சோப்பு டப்பா வண்டின்னு யாருக்குத் தெரியும்? இன்னும் நான்
ஆந்திரா எல்லையையே தாண்டலையே முல்ல... இதுல
நாளைக்கு காலைக்குள்ள நான் எங்க இருந்து மதுரைக்கு வரது?”
பெருமூச்சொன்றை வெளியிட்ட கஜா சொல்லிவிட்டு, தயக்கமாக
ப்ரித்வியையும் ஒரு பார்வை பார்க்க,
அவனோ கடிகாரத்தில் தனது ஆராய்ச்சியை நடத்திக்
கொண்டிருந்தான்.

“இந்த வாட்ச்சை வச்சு ஏதாவது புதுவிதமா கார் செய்யலாமான்னு


யோசிக்கிறாரோ? என்னவோ கார் வச்சு சின்னப் பிள்ளையாட்டம்
விளையாடிட்டு இருக்காரு, F1 ரேஸ்க்கு போற மாதிரி பில்ட்
அப்பு...” என்று அவள் மனதினில் நினைத்துக் கொண்டு,

“ஏதாவது பொய் தான் சொல்லணும்... என்ன சொல்லலாம்?


ஏதாவது சொல்லேன்... இருக்கற பதட்டத்துல ஒண்ணுமே தோண
மாட்டேங்குது” அவள் சொல்லவும்,

“ஏண்டி... எனக்கு ஏற்கனவே நாக்கு தள்ளி போகும் போல


இருக்கு...” என்ற முல்லையில் பதிலில்,

“இவர் என்னவோ யோசிக்கிறார்… இரு ஒரு நிமிஷம்” என்றவள்,

“உங்களுக்கு ஏதாவது ஐடியா…” என்று ப்ரித்வியிடமே கேட்க,


“உன் வாய் கொழுப்புக்கு உன்னை கொண்டு போய் உங்க மாமா
முன்னால நானே நிறுத்தறேன்…” என்றபடியே அவளை
முறைக்க,

“ஹிஹி… இங்க சார்க்கு ஒரு ஐடியாவும் தோண மாட்டேங்குது


முல்ல… பிரெயின் ரொம்ப டயர்ட்டா இருக்காம்…” என்றவள்,
அவனது முறைப்பு அதிகமாகவும்,

"ஹரிச்சந்திரனோட பேரன் கிட்ட மாட்டிக்கிட்டேன் முல்ல...


பொய் சொன்னேன்னா நான் நாளைக்கு காலையில மட்டும்
இல்ல.... இன்னும் ஒரு மாசம் ஆனாலும் அங்கே வர முடியாது....
இப்போவே ரொம்ப முறைக்கிறார்..." பதிலுக்கு இவளும்
ப்ரித்வியை முறைத்துக் கொண்டே முல்லைக்கு பதில் சொல்ல,

"என்ன? அவர்கிட்ட பொய் சொன்னா உன்னால இங்க வர


முடியாதா? அப்போ சாட்சிக்காரன் கால்ல விழறதை விட
சண்டைக்காரன் கால்லேயே விழுந்திரு கஜா... வேற வழி
இல்ல.... கொஞ்சம் இதமா பதமா பேசு... உன் வாயை எல்லாம்
காட்டாதே..." அவள் தனியாக வந்து தான் தன்னிடம் பேசுகிறாள்
என்கிற நம்பிக்கையில் முல்லை பேசிக் கொண்டிருக்க, அதற்கும்
சேர்த்து ப்ரித்வியின் முறைப்பு எனும் அம்பு கஜாவைத் தாக்கியது.

Last edited by ramyas; 20th Apr 2015 at 10:01 PM.


 Share
o
o
o
o
o
 |
 Like
suganyarangasam, latharaju89, vaideesh and 36 others like this.

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

    
 20th Apr 2015, 10:05 PM#29

ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya

"இங்க ரொம்ப வெயிலா இருக்கு முல்ல... மாமா கிட்ட நீ யே


எதையாவது சொல்லி சமாளிச்சிக்கோ... நான் எப்படியும்
நாளை காலைக்குள்ள வரப் பார்க்கறேன்...."

"என்னடி உளர்ற... ராத்திரி நேரத்துல எப்படி உனக்கு வெயில்


அடிக்கும்?" அதிமுக்கியமான கேள்வியை முல்லை முன்
வைக்க,

"ரொம்ப முக்கியம் முல்ல இப்போ... போடி போய் என்னோட


டிரஸ் எல்லாத்தையும் சேர்த்து பேக் பண்ணி வை.... ப்ரித்வி
ரொம்ப நல்லவர் முல்ல... எப்படியும் என்னை
காலைலக்குள்ள கொண்டு விடுவார்.... நான் கஷ்டப்பட்டா
ப்ரித்விக்கு பொறுக்காது... கண்டிப்பா வந்திருவேன்..."
அவனைப் பார்த்துக் கொண்டே அவள் சொல்ல, அவள்
நேரிடையாகக் கேட்காமல், இறைஞ்சுவது போலப்
பார்க்கவும், அவளின் செயலில் ப்ரித்வியின் கண்ணோரம்
சுருங்கியது.

"என்னை கொண்டு விடுவங்க


ீ தானே..." முல்லையிடம்
பேசுவதை விட்டுவிட்டு அவள் கேட்கவும்,

"கஜா... அந்த சார் பக்கத்துல தான் இருக்காறா?" முல்லையின்


குரலில் இருந்த பதட்டம் ப்ரித்விக்கு விளங்க,
"சீக்கிரம் சாப்பிடு... இல்ல பேசிட்டு தான் இருக்கப்போறன்னா
அதையே செய்துட்டு இரு... என்ன சீக்கிரம் சாப்பிட்டு
கிளம்பினா... காலையில உன் ஹாஸ்டல்ல இருக்கலாம்..."
சொல்லிவிட்டு, அவன் உணவுக்கான பணத்தை
கொடுத்துவிட்டு வெளியில் செல்ல, போகும் அவனையே கஜா
பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

அவளது அமைதியில் முல்லை பலமுறை கஜாவை


அழைத்திருக்க, "சரி முல்ல... நான் சாப்பிட்டுட்டு
கிளம்பறேன்... ப்ரித்வி சொல்றதைப் பார்த்தா, என்னை
கொண்டு வந்து விட்டுடுவார் போல இருக்கு... பார்ப்போம்
முல்ல... நான் வர வரைக்கும் நீ ஹாஸ்டலை விட்டு வெளிய
வந்திராதே... அப்பறம் என்னை உசுரோட புதைச்சிருவாங்க”
கஜா முல்லையிடம் சொல்லிக் கொண்டே வேகமாக
சாப்பிட்டு விட்டு ப்ரித்வியை பின்தொடர்ந்தாள்.

"என்ன வயிறு நிரம்பிடுச்சா? நாம கிளம்பலாமா?" ப்ரித்வி


கேட்டுக் கொண்டே காரில் ஏற,

"தம்பி... ராத்திரி ஆகிடுச்சு... நான் ஓட்டறேன்... நீ ங்க


ஓய்வெடுங்க,..." என்றபடியே ராமண்ணா முன் வந்தார்.

"என்ன ராமண்ணா... லக்ஷ்மியோட ஊர்ல அவளை கொண்டு


போய் சேர்க்கற நல்லவருக்கு சிலை வைக்கிறேன்னு சொல்லி
இருக்கா.... நீ ங்க என்னடான்னா... எனக்கு கிடைக்க வேண்டிய
சிலையை தட்டிக்கப் பார்க்கறீங்க? அதெல்லாம் நான் விட
மாட்டேன்..." போலியாக பொறாமை போல அவன் காட்டிச்
சொல்லவும், ராமண்ணா இப்பொழுது சத்தமாக சிரிக்கத்
தொடங்கினார்.

"என்ன ராமண்ணா இப்படி சிரிக்கறீங்க?" ப்ரித்வி கேட்டுக்


கொண்டே காரை எடுக்க,

"நேத்து இந்த நேரம் உர்ருன்னு இருந்த மனுசனா இவருங்கற


அளவுக்கு என்னை கலாய்ச்சிட்டு இருக்கீ ங்க.... இதெல்லாம்
நல்லால்ல சொல்லிட்டேன்... நமக்கு அப்பறம் பஸ் பிடிச்சு
கிளம்பின அவங்களே ஊருக்கு போய் சேர்ந்துட்டாங்க... நீ ங்க
என்னடான்னா இன்னும் பாதி வழி கூட போகல... இதுல சிலை
வேற வைக்கணுமாம்..." கஜா அவனைப் பார்த்து நொடித்துக்
கொள்ள,

"குடையோட வைக்கிறேன்னு சொல்லி இருக்க லக்ஷ்மி...


மறந்திறாதே... அப்புறம் உங்க மாமாவைப் பார்த்ததுக்கு
அப்பறம் எங்களுக்கு தேங்க்ஸ்ஸாவது சொல்லணும்னு
தோணுமா இல்ல அதுவும் மறந்திருமா?" அவளை
வம்பிழுத்தவாறே அவன் வண்டியை விரட்டத் தொடங்கி
இருந்தான்.

"மாமா... உன் பொண்ணைக் கொடு..." என்ற பாடல் காரில்


ஒலிக்க,

"உங்க மாமாவை பத்தி கொஞ்சம் சொல்லேன் லக்ஷ்மி...


என்ன வேலை செய்யறார்?" அந்த பாடலை ரசித்துக்
கொண்டே அவன் கேட்கவும், 'ரொம்ப முக்கியம்' என்று
அலுத்துக் கொண்டவளை, விடாபிடியாக அவன் கேட்டு
வாயைத் திறக்க வைத்தான்.
"சொல்லிக்கிறா மாதிரி ஒண்ணும் இல்ல ப்ரித்வி..."
என்றவளை அவன் முறைக்க,

"குடி பழக்கத்தையும் மீ றி அவர் கிட்ட நல்ல குணம் இருக்கும்


இல்லையா? வேலைக்கு எல்லாம் போவார் தானே?" அவள்
மனதில், அவளது மாமன் மேல் வளர்ந்திருக்கும் அந்த
வெறுப்பை போக்க அவன் இவ்வாறு கேட்கவும்,

"அவ கேட்கற மாதிரி இவருக்கு இது ரொம்ப முக்கியமா? அந்த


பொண்ணு தான் அவனை பிடிக்கலைன்னு சொல்லுது இல்ல...
திரும்ப திரும்ப அதையே கேட்டுக்கிட்டு... அந்த பொண்ணை
இவருக்கு பிடிக்காமையா இருக்கு? இவர் சிரிச்சு பேசி ஜோக்
அடிக்கிறாருன்னு ஆபீஸ்ல போய் சொன்னா... அதுவும் ஒரு
பொண்ணு கிட்ட இப்படி பேசறாருன்னு சொன்னா... என்னை
வேற்று கிரக வாசி போல தானே பார்ப்பாங்க... இவரோட
மாற்றத்தை இவரே புரிஞ்சிக்கிட்டாரா இல்லையா?"
ராமண்ணா மனதில் நினைத்துக் கொண்டார்.

"வேலைக்கு எங்கயும் போகல... சொந்தமா நிலம், தோப்பு


எல்லாம் இருக்கு... அதுல வேலை செய்யற
பொண்ணுங்களுக்கு தொல்லை கொடுக்கறது தான் பெரிய
வேலை... அவனோட தனி சிறப்பு... என்னை கல்யாணம் கட்டி
வச்சா.... நீ ங்க சொன்ன ீங்களே... என்னோட அன்பால,
குடும்பம் குட்டின்னு ஆனா திருந்திடுவான்னு... அந்த
நம்பிக்கையில தான் எனக்கு பரிசம் போட்டு இருக்காங்க...
என்ன நம்பிக்கையோ... எங்க அம்மாவோட ஒண்ணு விட்ட
அண்ணனோட மவன்... அந்த ஒரு தகுதியைத் தவிர, எனக்குத்
தெரிஞ்சு வேற எதுவும் இல்ல... நான் என்ன அன்னை
தெரசாவா... இவனை எல்லாம் திருத்த... இதுக்கு, நான் படிக்க
வைன்னு கேட்காமையே இருந்திருக்கலாம்... கொஞ்ச நாள்
மாடு மேய்ச்சதுக்கு அப்பறம் வேற எவனையாவது பார்த்து
இருப்பாங்க..." அவள் புலம்பிக்கொண்டே வர, அதுவும்
ப்ரித்விக்கு சிரிப்பை வரவழைத்தது.

"என்னைப் பார்த்தா உங்களுக்கு சிரிப்பா இருக்கு இல்ல? என்


நிலைமையில நீ ங்க இருந்து பார்த்தாத் தான் தெரியும்?"
அவள் தொண்டையடைக்க சொல்லவும்,

"ஒருத்தரைப் பத்தி இந்தளவு கூடத் தெரியாம...


கல்யாணத்துக்கு அப்பறம் தெரிஞ்சுக்கிட்ட எவ்வளவோ பேர்
இருக்காங்க... ஏன்... நான் கூட குடிகாரன் தான்... எத்தனை
நாள், மூக்கு முட்ட குடிச்சிட்டு விழுந்து கிடக்கும் போது,
ராமண்ணா என்னை வட்ல
ீ கொண்டு போய் விட்டிருக்கார்
தெரியுமா?" தான் எதற்கு தன்னை இந்தப் பேச்சில் இழுத்தோம்
என்றே புரியாமல், அவன் தன்னைப் பற்றிச் சொல்ல,

"அது தான் நீ ங்க எந்த பொண்ணை நம்பியும் வாழ்க்கைய


ஒப்படைக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்களே.. உங்களை
மாதிரி ஆளுங்களுக்கு அது எவ்வளவு நல்லது தெரியுமா? ஒரு
பொண்ணோட வாழ்க்கை வணா
ீ போகாதே... அது மாதிரி
அவன் நினைக்கலையே..." பட்டென்று அவள் சொல்லவும்,
அவள் கூறியதின் வலி தாங்காமல், ப்ரித்வி அமைதியாகிப்
போக,

"லக்ஷ்மிம்மா..." ராமண்ணா கண்டிக்க, அதை


உணராதவளோ, "ம்ப்ச்... காலைக்குள்ள ஊருக்கு
போயிடலாம் இல்ல... நான் முல்லைய வெளிய வர
வேண்டாம்னு சொல்லிட்டேன்... நான் உள்ள போனதுக்கு
அப்பறம் தான் அவ கிளம்புவா... நான் தானே பொய் சொல்லக்
கூடாது... அவ சொல்லலாம் தானே..." என்றவள், அவன் எந்த
பதிலும் பேசாதது கூட உறைக்காமல்,

"அவ அவங்க மாமனைப் பார்க்கப் போக நிறைய பொய்


சொல்லுவா.... எங்க வட்டுக்குப்
ீ போறேன்னு சொல்லிட்டு...
அவ மாமனைப் பார்க்க மாந்தோப்புக்கு போவா... இதுல
என்னையும் கூட காவலுக்கு கூட்டிட்டு போவா... அவ மாமா
எல்லாம் உங்களைப் போல குடிக்கிறவர் இல்ல.." சிரித்துக்
கொண்டே அவள் பேசவும்,

"லக்ஷ்மிம்மா..." ராமண்ணாவின் குரல் உயர்ந்திருக்க, பின்


பக்கக் கண்ணாடி வழியாக அவரைப் பார்த்தவனின்
பார்வையில் அவர் அடங்கிப் போக, மேலும் கஜலக்ஷ்மி சிறிது
நேரம் வளவளத்துக் கொண்டு வந்தாள்.

 Share
o
o
o
o
o
 |
 Like
suganyarangasam, latharaju89, vaideesh and 34 others like this.
 

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

    
 20th Apr 2015, 10:07 PM#30

ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya
அந்த சிறிது நேரம் கடந்த பிறகே, இருவரும் அமைதியாக
இருப்பது உரைக்க, "ரொம்ப பேசி போர் அடிக்கறேனோ? என்
ஆதங்கம்... ஊருக்குள்ள யார்கிட்டயும் சொல்ல முடியாதே...
சொன்னா அது எப்படி தான் சுத்தி கித்தி எங்க அம்மா காதுக்கு
போகுமோ.... போன உடனே... எனக்கு சூடு தான்
போடுவாங்க... அது தான் ஊர் பேர் தெரியாதவங்க உங்க கிட்ட
சொல்றேன்... எங்க ஊருக்கும் உங்களுக்கும் சம்பந்தம்
இல்லையே..." மேலும் அவள் தொடரவும், பாட்டின் சத்ததை
அதிகரித்த ப்ரித்வி,

"கொஞ்ச நேரம் பேசாம வா... காது வலிக்குது எனக்கு...


ஒழுங்கா விடியறதுக்குள்ள ஊருக்கு போய் சேரணும்னா
அமைதியா வா... இல்ல கீ ழ இறங்கிக்கோ..." முன்தினம்
பார்த்த அதே கடினத்தன்மை முகத்திலும், குரலிலும் ஏறி
இருக்க,

"திடீர்ன்னு இவருக்கு என்ன ஆச்சு? நாம என்ன


சொல்லிட்டோம்ன்னு இப்படி எரிஞ்சு எரிஞ்சு விழறார்.." என்று
ஒன்றும் புரியாமல் அமைதியாகிப் போன கஜலக்ஷ்மியைப்
பார்த்த ராமண்ணா, ப்ரித்வியைப் பார்த்தார். மீ ண்டும் அவன்
முகம் கடினமுறுவதைக் கண்டு மனம் நொந்து போனார்.

"தம்பி காலையில இருந்து தான் கொஞ்சம் சிரிச்சு பேசிச்சு...


அதுக்குள்ள இப்படியா ஆகணும்... என்ன பேசறோம்னே
புரியாம பேசிடுச்சே இந்த பொண்ணு..." அவர் நினைத்துக்
கொண்டிருக்கும் போதே, ப்ரித்வி, காரின் வேகத்தை மேலும்
அதிகப்படுத்தினான்.
"உங்களுக்கு என் மேல கோபம்னா சொல்லிடுங்க... நான்
வேற பஸ் பிடிச்சுப் போறேன்... இப்படி வேகமா போய் மேலும்
டயர பஞ்சர் பண்ணப் போறீங்களா? கொஞ்சம் மெல்லமா
ஓட்டுங்க... உங்களுக்கு என்ன, ரேஸ் கார் ஓட்டறதா
நினைப்போ?" அவள் கேட்கவும், அவளை முறைத்தவன்,

"இப்போ நீ வாய மூடலைன்னா அதைத் தான் செய்யப்


போறேன்..." என்று அவன் உறுமவும், கஜா வாயை மூடிக்
கொண்டாள்.

அந்த அமைதி அவளுக்கு உறக்கத்தைக் கொடுக்க, நன்றாக


உறங்கியவள், அவன் மேல் சாய்ந்து விழத் துவங்கினாள். சில
தடவை அவளை நேராக அமர்த்தி வைத்தவன், அவள் மீ ண்டும்
மீ ண்டும் விழவும், அந்த முகத்தில் தெரிந்த கள்ளம் கபடமற்ற
தன்மையும், அவளது முக வடிவையும், ரசித்து, அவளைத் தன்
தோளில் தாங்க எண்ணி, தன் மேல் நன்றாக சாய்த்துக்
கொள்ள, அவளை அப்படியே மேலும் சாய்த்துக் கொண்டு,
முத்தமிடத் துடித்த உதடுகளை கட்டுப்படுத்தப் போராடியவன்,
தன் செயலை நினைத்து, தானே வெட்கிப் போனான்.

கவிதைகள் தொடரும்....

 கவிதை – 7
அவளை நினைத்தே
அலைபாயும் இந்த
சலனத்தை இரசிப்பதா ஒதுக்கவா
தெரியவில்லை
ஆனால் இன்னும் வேண்டும் என கேட்டுக்
கொண்டே இருக்கும் மனது !

கஜாவின் முகத்தினில் உறவாடத் துடித்த உதடுகளைக்


கட்டுப்படுத்திக் கொண்டு, “என்ன ப்ரித்வி... நீயா இது? ஒரு
சின்ன பொண்ணுகிட்ட இப்படி நடக்க நினைச்சு இருக்கியே...
இது உனக்கே நல்லா இருக்கா? உன்னை பத்தி அவ என்ன
நினைச்சுப்பா... ஒரு பெண்ணை பார்த்த உடனே உன் மனசை
இழக்கற அளவுக்கு நீ அவ்வளவு பலகீ னமானவனா?”
மனதினில் தன்னையே திட்டிக் கொண்டவன், மெல்ல
வண்டியை ஓரம் கட்டி நிறுத்தினான்.

“என்னாச்சு தம்பி... ஏதாவது பிரச்சனையா? தூக்கம் வருதா?


நான் வண்டியை ஓட்டவா?” அப்பொழுது தான் உறங்கி
எழுபவரைப் போல ராமண்ணா எழுந்துக் கேட்கவும், அவர்
முகத்தை சந்திக்காமல், தன் மேல் சாய்ந்திருந்த கஜாவைப்
பார்த்தபடியே,

“மேல தூங்கி தூங்கி விழுகறா ராமண்ணா... வண்டி ஓட்டவே


முடியல...” என்று அவன் சொல்லவும், அவனது ஒட்டாத
பேச்சை கண்டு பிடித்து, எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு,

“இருங்க தம்பி... சாஞ்சுக்க தலைகாணி இருக்கு... எடுத்துத்


தரேன்... இல்ல அவளை எழுப்பி பின்னால படுக்க
வைக்கலாம்...” என்றவர், ‘லக்ஷ்மி.... லக்ஷ்மி...” என்று
எழுப்பத் துவங்க,

“இப்போ எதுக்கு ராமண்ணா அவளை எழுப்பறீங்க? நல்லா


தூங்கிட்டு இருக்கா...” என்றவனைப் பார்த்தவர்,

“நேத்து எல்லாம் இப்படி அசந்து தூங்கல... இன்னைக்கு


ரொம்ப அசதியா இருக்குமோ? அதுவும் இப்படி உங்க மேல
சாஞ்சது கூட தெரியாம தூங்கறாங்க... எழுப்பறேன் தம்பி...
நல்லா படுத்து தூங்கிட்டே வரட்டும்... நீ ங்க தான் அதுக்கு
வசதி செய்து வச்சிருக்கீ ங்களே...” அவர் நினைவு படுத்தவும்,
அதுவே சரியாகப் பட,

“இருங்க நானே எழுப்பறேன்...” என்றவன், தன் மனது தன்னை


கண்டிப்பதை புறம் தள்ளிவிட்டு, “லக்ஷ்மி... லக்ஷ்மி...” என்று
மெல்ல எழுப்பினான்.

அவளை எழுப்பும் பொழுது, அவனது குரலிலும், அவனது


முகத்திலும் தோன்றிய மென்மையை கணக்கிட்டவர்,
“அதுக்குள்ள இவ மேல இவ்வளவு ஆசையா?” என்றும்
வியந்தார்.

கஜா மெல்ல கண் விழிக்கவும், “லக்ஷ்மி... எழுந்து பின்னால


போய் படு...” மென்மையாகக் கூறியவன், அவள் கனவில்
விழிப்பது போல விழிக்கவும்,

“இப்படியே என் முகத்தை பார்த்துட்டு இருந்தன்னா... இன்னும்


ரெண்டு நாள் ஆகும் ஊருக்கு போய் சேர... சீக்கிரம்...
சீக்கிரம்... நேரம் ஆகுது... இப்போ கிளம்பினா தான்,
நாளைக்கு காலைக்குள்ள ஊருக்கு போய் சேர முடியும்...”
கஷ்டப்பட்டு தனது முகத்தை கடினமாக்கிக் கொண்டு அவன்
அதட்டவும்,

அதை கண்டு கொள்ளாத கஜலக்ஷ்மியோ, அவன் யாரிடமோ


கத்திக் கொண்டிருக்கிறான் என்பது போல, தூக்கத்
கலக்கத்தில், பின் சீட்டில் ஏறிப் படுத்துக் கொண்டாள்.

அவளின் செயல் சிரிப்பை வரவழைத்தாலும், மீ ண்டும்தனது


முகமூடியை போட்டுக் கொண்டு, “ஏறுங்க ராமண்ணா...
மணியாகுது... அவங்க மாமா வேற இவளை காலையில
ஹாஸ்டல்ல வந்து கூட்டிட்டு போக வறாராம்... அதுக்குள்ள
அங்க இருக்கணும் போல...” அவளைப் பார்த்துக் கொண்டே
அவன் சொல்ல, அவன் முகத்தில் ஒரு சில வினாடிகள்,
தெரிந்த வருத்தம், ராமண்ணாவை கவலை கொள்ளச்
செய்தது.

“ஏன் இவர் இப்படி செய்யறார்? மனசை மறைச்சு இப்போ


என்ன செய்யப் போறார்?” என்று மனதினில் நினைத்துக்
கொண்டே நிற்க,

“லக்ஷ்மி... கொஞ்சம் காலை நகர்த்திக்கோ...” என்றபடி,


அவள் வசதியாக உறங்க, தலையணையை அவள் தலைக்குக்
கொடுத்தவன், காரிலேயே ஒருவர் உறங்குவதற்கு வசதியாக,
மடக்கி வைக்கப்பட்டிருந்த சீட்டையே இழுத்து, அகலமாக
மாற்றி அமைக்கும் படி அவன் வடிவமைத்திருந்த குட்டி
பெட்டை, அவளது உறக்கம் கலையாதவாறு தயார் செய்து
விட்டு நிமிர்ந்தவன், ராமண்ணா அவனைப் பாராதது போல்
பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து,

“நான் எனக்காக, கொஞ்சம் காலை மடக்கி, படுக்கற மாதிரி


டிசைன் செய்து வச்சது... இப்போ இவளுக்கு யூஸ் ஆகுது
பாருங்க...” கிண்டல் போல அவன் கூறிக்கொண்டே கதவை
அடைத்து, லாக் செய்துவிட்டு, அவன் டிரைவர் சீட்டில் சென்று
அமரவும்,

“ஹ்ம்ம்... உங்க உழைப்பை அவங்க அனுபவிக்காம...” என்று


இழுத்தவர், “நீ ங்க இங்க வாங்க... நானே கொஞ்ச தூரம்
ஓட்டறேன்...” என்று காரை எடுத்தார்.

“ஏன் தம்பி... இப்படி ரெஸ்ட் கூட எடுக்காம... அவ்வளவு


அவசரமா நீ ங்க அவளை கொண்டு போய் விடணும்னு என்ன
இருக்கு?” ஆழம் பார்ப்பதற்காக அவனிடம் பேச்சு கொடுக்க,
அதற்கு பதில் பேசாமல், தனது லேப்டாப்பை எடுத்துக்
கொண்டவனைப் பார்த்தவர், அமைதியாக கார் ஓட்டத்
துவங்கினார். மீ ண்டும் காரினுள், பாடலை தவிர, அமைதியே
நீ டிக்கத் தொடங்கியது.

அந்த அமைதியில், காரினுள் ஒலித்த பாடலை அவன் ரசிக்கத்


தொடங்குவதைப் கண்டவர், காரினுள் நீ டித்த அமைதியை
கலைக்க முயன்றார். ப்ரித்வி அவ்வப்போது பின்னால்
திரும்பி, அவளைப் பார்த்து விட்டு, தனக்குள் குழம்புவதைக்
கண்டவர், “உங்க மனசுல ஓடறது எனக்கு புரியுது தம்பி...”
அவர் தொடங்கவும்,
அவர் சொல்ல வருவதைப் புரிந்துக் கொண்டவன்,
“வேண்டாம் ராமண்ணா... என்னோட மனசுல ஒண்ணுமே
ஓடல... என்னவோ... நான் இதுவரை இப்படி ஒருத்தியைப்
பார்த்தது இல்லையோ... இல்ல யாரும் என்கிட்டே இவ்வளவு
வம்புக்கு நின்னு சண்டை போட்டது இல்லையோ... எதுவோ
ஒண்ணு தான் என் முகத்துல சிரிப்பை வர வைக்கிற
காரணம்... வேற எதுவுமே இல்ல... நீ ங்களே தப்பான காரணம்
எதையும் கண்டு பிடிச்சிக்காதீங்க...” அவன் விளக்கம்
அளிக்கவும், ராமண்ணாவின் நம்பாத பார்வையை
உணர்ந்தவன்,

Last edited by ramyas; 24th Apr 2015 at  11:09 PM.


 Share
o
o
o
o
o
 |
 Like
suganyarangasam, latharaju89, vaideesh and 28 others like this.

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

    
 24th Apr 2015, 11:12 PM#33

ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya

“ஒரே நாளுல காதல் வந்து... அதுவும் எ..ன்..கிட்டே வந்து


குதிக்க சான்சே இல்ல... அதை முதல்ல புரிஞ்சிக்கோங்க...
இன்னமும் ஒரு பெண்ணை நான் நம்புவேன்னு நீ ங்க எப்படி
நினைக்கறீங்க? வேண்டாம் ராமண்ணா... ஆபீ ஸ்ல மட்டும்
தான் பெண்களுக்கு அனுமதி... என் வாழ்க்கையில இல்ல...”
ஒருமாதிரிக் குரலில் கூறியவனின், முகத்தில் மீ ண்டும்
கடுமை ஏறுவதைக் கண்டு அவர் மனம் சோர்ந்தது.

“ஏன் தம்பி... இன்னமுமா அதையே நினைச்சிட்டு இருக்கீ ங்க?


அந்த பொண்ணு சொன்னது எல்லாம் பொய்ன்னு தான்
நிரூபிச்சாச்சே... அப்பறம் என்ன தம்பி...” அவர் தன்மையாக
எடுத்துச் சொல்ல முயல, முகத்தை ஒருமுறை அழுந்த
துடைத்துக் கொண்டவன்....

“அதனால பட்ட வலி... அவமானம்... ராமண்ணா... அந்த ஒரு


வாரம் எனக்கு எப்படி இருந்ததுன்னு உங்களுக்குத்தான்
தெரியுமே...” என்றவன்,

“விடுங்க... அதைப் பத்தி பேச வேண்டாம்... எனக்கும்


இவளுக்கும் ஒத்து வராது ராமண்ணா... எதுக்கு எடுத்தாலும்
பொய் சொல்ல நினைக்கிற இவ எங்க? தலை போனாலும்
பொய் மட்டும் பேசவே கூடாதுன்னு நினைக்கிற நான் எங்க?
முதல்ல இவளை ஊர்ல கொண்டு போய் விட்டுட்டு, அடுத்ததா
நம்ம தொழிலைப் பார்ப்போம்...” என்றவன், சிறிது
இடைவேளை விட்டு,

“ரெண்டு டிசைன் வரைஞ்சு முடிச்சிருக்கேன்... அதைப் போய்


செய்ய வேண்டியது தான்... இந்த தடவவந்த பயணம், ஊரைச்
சுத்திப் பார்த்து ரிலாக்ஸ் பண்ண மட்டுமேன்ற கணக்குல
எடுத்துக்க வேண்டியது தான்...” அவன் சீரியசாக பேசிக்
கொண்டு வர,

“முன் சீட்ல உட்கார்ந்துக்கிட்டே நான் எங்க அவ எங்கன்னு


கேட்கற உங்க கூட நான் வரேன் பாருங்க என்னைச்
சொல்லணும்...” என்ற குரல் மட்டுமே கேட்க, ப்ரித்வி,
அடித்துப் பிடித்து திரும்பிப் பார்க்க, ராமண்ணாவின்
கையிலோ கார் தடுமாறியது.
“ஹையோ ராமண்ணா என்னை பத்திரமா ஊருக்கு கொண்டு
போய் சேர்க்கணும்... இப்படி காரை ஓட்டினா நான் என்ன
செய்வேன்?” இருவரின் அதிர்ச்சியையும் கண்டும் காணாமல்
அவள் கிண்டல் செய்யவும்,

“நீ எப்போ முழிச்ச... மத்தவங்க பேசறதைக் கேட்கறது


அநாகரீகம்ன்னு உனக்குத் தோணலையா...” தன்னை பற்றிய
கருப்புப் பகுதியை அவள் கேட்டிருக்கிறாள் என்ற கோபத்தில்,
ப்ரித்வி அவளைக் கடிய,

“தூங்கற என்னைப் பத்தி... அதாவது... ‘இவளுக்கும்


எனக்கும்’ன்னு நீ ங்க என்னைப் பார்த்து பேசினதுனால நான்
கேட்டேன்... வேற யாரைப் பத்தி பேசி இருந்தாலும், நான்
மெய்யாலுமா காதை அடைச்சிக்கிட்டு இருந்திருப்பேன்...”
சிரிப்பை அடக்கிக் கொண்டு அவள் சொல்லவும், ப்ரித்வி
அவளை முறைக்க,

“ஒரே கார்க்குள்ள இருந்துக்கிட்டு, நான் பேசினதை நீ ஏன்


கேட்டன்னு கேட்டா... நான் என்ன பதில் சொல்லட்டும்
ப்ரித்வி... தூக்கம் விழிச்ச எனக்கு நீ ங்க பேசறது அதுவா வந்து
காதுல விழுகுது... நானும் எவ்வளவோ அதுகிட்ட சொல்லிப்
பார்த்தேன்... அது உள்ள போய் தான் தீருவேன்னு அடம்
பிடிக்குது.. நான் என்ன காதுல விழற வார்த்தைய வெளிய
இழுத்துப் போடவா முடியும்...” என்று கேட்டவள், காலை கீ ழே
வைக்க முயல, அப்பொழுது தான், தான் இருக்கும் இடத்தின்
மாறுதலைப் புரிந்துக் கொண்டு,
“நான் நம்ம கார்ல தானே இருக்கேன்... இது வேற ஏதாவது
காரா... இப்படி பெட் மாதிரி இருக்கு...” கண்களை உருட்டி
அவள் கேட்கவும்,

அவளது கண்களின் உருட்டலை கண்டு, தன்னை மறந்தவன்,


“நீ சொல்ற அதே டப்பா கார் தான்...” ப்ரித்வியும் கிண்டலடிக்க,

“சோப்பு டப்பா கார்... அதை விட்டுட்டீங்களே...” கன


காரியமாக அதை திருத்தியவள், “நான் எழுந்து உட்காரணும்...
எப்படி இதை சீட்டா மாத்தறது...” அவள் கேட்க,

“அந்த கம்பிய இழுத்து விடு... சீட் மடங்கிடும்...”


வழிமுறையை அவன் சொல்லிக் கொடுக்கவும், அவனை
வியப்புடன் பார்த்துக் கொண்டே, அவன் சொன்னதை செய்து
முடித்து எழுந்து அமர்ந்தாள்.

“உங்களை என்னவோன்னு நினைச்சேன்... பரவால்லயே...”


அவள் புகழத் தொடங்க, ‘தேங்க்ஸ்’ என்ற ஒற்றைச்
சொல்லோடு அவன் பேச்சை முடித்துக் கொள்ளவும், கஜா
அவனை ஏமாற்றத்துடன் பார்த்தாள்.

“நான் தூங்கிட்டேன்னு கோபமா? நல்லா தானே போய்க்கிட்டு


இருந்தது? அதுக்குள்ள என்ன ஆச்சு?” அவள் யோசித்துக்
கொண்டிருக்கும் போதே,

“இப்போ இருக்கற பொண்ணுங்க எல்லாம்,லைஃப்பை ரொம்ப


விளையாட்டா எடுத்துக்கறாங்க... என்னத்தை சொல்றது?”
சம்பந்தமே இல்லாமல் ப்ரித்வி தொடங்கவும்,
“அப்படி என்ன விளையாட்டா இருந்துட்டாங்க? அப்படி நீ ங்க
எத்தனை பொண்ணுங்கள பார்த்தீங்க?” சண்டைக் கோழியாக
சிலுப்பிக் கொண்டு அவள் கிளம்ப,

“இப்போ உன்னையே எடுத்துக்கோயேன்... உனக்கு ஊர்ல


மாப்பிள்ளைய பார்த்து நிச்சம் செய்து வச்சிருக்காங்க... அது
உன் வாழ்க்கைக்கு நல்லதா இருக்கப் போய் தானே
செய்திருக்காங்க... ஆனா, நீ ... முன் பின் தெரியாத என்னை
நம்பற அளவுக்கு கூட, உனக்கு தெரிஞ்ச உன் மாமாவை
நம்பல... இதை என்னன்னு சொல்றது? எந்த தைரியத்துல நீ
காரை வழி மறிச்ச... நானே போதையில இருந்திருந்தா...
என்ன நடந்திருக்கும்? கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா?
அப்போ அது எல்லாம் விளையாட்டுத்தனம் இல்லாம வேற
என்ன?” என்றவன், அவள் முறைப்பதைப் பார்த்து,

“உன் பிரெண்ட் முல்லையும் அப்படி தான்.. பொய் சொல்லிட்டு


கிளம்பறது ஒரு விளையாட்டா போச்சு... இப்போ நான்
உன்னை நேரத்துக்கு கொண்டு போய் விடலைனா அவளோட
கதி... எல்லாத்தையும் முன் கூட்டியே யோசிச்சு, அவ வர
மாட்டேன்னு இழுத்து பிடிச்சிருந்தா... நீ யும் வந்திருக்க
மாட்ட... எனக்கும்...” அவன் கடுப்புடன் சொல்லிவிட்டு, இறுதி
வாக்கியத்தை தனது வாய்க்குள் முழுங்க, கோபத்துடன்
அவன் சொல்வதையே கேட்டுக் கொண்டிருந்தவள்,

 Share
o
o
o
o
o
 |
 Like
suganyarangasam, latharaju89, vaideesh and 25 others like this.

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

    
 24th Apr 2015, 11:17 PM#34

ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya

“கடைசியில என்ன சொல்ல வந்தீங்க? சொல்லுங்க...” என்று


மிரட்டவும்,

“ஹ்ம்ம்... வேண்டாம்... சிலது எல்லாம் சொல்லாம


இருக்கறதே மேல்... பேசாம வா...” அவளை அதட்டிவிட்டு,
கண்களை மூடிக் கொண்டான்.

“இது என்ன இது... நீ ங்களா எதையாவது தொடங்கி


கத்துவங்க...
ீ நான் பதில் சொன்னா, அதுக்கும் நீ ங்களே கத்தி
முடிச்சிட்டு, கண்ணை மூடிக்கறது... இதெல்லாம் நல்லா
இல்ல சொல்லிட்டேன்... இப்போ நாங்க என்ன விளையாட்டுத்
தனமா இருந்துட்டோமாம்... சொல்லுங்க மொதல்ல...” அவள்
கத்திக் கொண்டிருக்க, விரல்களை காதில் அடைத்துக்
கொண்டவன், கண்களைத் திறக்காமல் அமர்ந்திருந்தான்.

சிறிது நேரம் கத்தி முடித்து ஓய்ந்தவள், “எப்பப் பாரு, பொய்


சொன்னேன்... பொய் சொன்னேன்னு சொல்லிக்கிட்டு...
எனக்கென்ன பொறுப்பு இல்லையா?” பொருமிக்கொண்டே
வந்தவள், ‘இஸ்...’ என்று முனகினாள்.

இரண்டு மூன்று முறை அவளது இந்த முனகல்களைக்


கேட்டவன், “என்னாச்சு? ஏன் முனகற? உட்கார்ந்தே வரது
கஷ்டமா இருக்கா? கொஞ்ச நேரம் வேணா நிறுத்தலாமா?”
அவள் புறம் திரும்பி அவன் கேட்கவும்,

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... எனக்கு ரெஸ்ட்ரூம்


போகணும்... கொஞ்சம் எங்கயாவது வண்டியை நிறுத்த
முடியுமா?” தயங்கித் தயங்கி அவள் இழுக்கவும்,

அவளை முறைத்தவன், அவளது தயக்கத்தை உணராமல்,


“அங்க இருந்து வேற கார்ல ஏறிப் போயிடலாம்ன்னு
பார்க்கறியா? எல்லாரும் என்னைப் போல இளிச்சவாயனா
இருக்க மாட்டாங்க...” ஒருமாதிரிக் குரலில் அவன் எச்சரிக்க,
அவளது நிலையை சொல்ல முடியாமல், கண்கள் கலங்கியது.

அவளது கெஞ்சும் பார்வையும், கலங்கியக் கண்களும்,


எதுவோ சரி இல்லை என்பதை உணர்த்த, “ராமண்ணா...
அதோ அந்த பெட்ரோல் பங்க்ல கேட்டுட்டு நிறுத்துங்க...
அப்படியே பெட்ரோல் போட்டுக்கலாம்...” அவன் சொல்லவும்,
அருகிலேயே இருந்த பெட்ரோல் பங்க்கிற்குள் வண்டியை
செலுத்தினார்.

அவள் இறங்குவதற்கு முன்பே காரில் இருந்து இறங்கியவன்,


அவர்கள் காட்டிய திசையில் வேகமாகச் செல்ல, “இவருக்காக
தான் நிறுத்தச் சொன்னாரா ராமண்ணா? இப்படி ஓடறார்...!!”
நக்கலாக அவள் கேட்க,

“அனேகமா நீ ஊருக்கு போய் சேர்றதுக்குள்ள நல்லா வாங்கி


கட்டிக்கிட்டு தான் போகப் போறன்னு நினைக்கிறேன்... நீ
அனாவசியமா வாயக் கொடுத்து மாட்டிக்காம இருக்குப்
பாரு...” அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர்கள்
அருகில் வந்தவன்,

“ஹ்ம்ம்... இப்போ நீ போகலாம்...” என்று சொல்லவும்,


அவனைப் புரியாதப் பார்வை பார்த்துக் கொண்டே அவள்
சென்றாள். மீ ண்டும் அவள் வரும் பொழுது, அவள் கண்களில்
கண்ண ீரையும், அவள் தயங்கித் தயங்கி அவர்கள் அருகில்
வருவதையும் பார்த்து..

“என்னாச்சு லக்ஷ்மி... அங்க ஒண்ணும் பிரச்சினை


இல்லையே... நான் செக் பண்ணிட்டு தானே வந்தேன்...
யாராவது அங்க வம்பு செய்தாங்களா?” பதட்டமாக அவன்
கேட்க, ‘இல்லை’ என்று அவள் தலையசைக்க,

“பின்ன வேற என்ன? ஊருக்கு போகணுமேன்னு அழறியா?”


அதற்கும் அவள் ‘இல்லை’ என்றே தலையசைக்க,

“வேற என்ன தான் ஆச்சு? எதுக்கு இப்படி தயங்கி தயங்கி வர...


என்னன்னு சொல்லு... இங்க நான் வாய் வலிக்க
கேட்டுக்கிட்டு இருக்கேன் இல்ல...” அவன் அதட்டிக்
கேட்கவும், அவளது விசும்பல், பெரும் கேவலாக வெடித்தது.

“ஹையோ... எதுக்கு இப்படி அழுகற... இப்போ என்ன


நடந்துச்சுன்னு சொல்லப் போறியா இல்லையா?” அவன்
பதட்டமாகக் கேட்கவும், ராமண்ணாவும் புரியாமல் அவளைப்
பார்த்துக் கொண்டிருந்தார்.

“வயிறு வலிக்குது ப்ரித்வி...” அவள் மெல்லிய குரலில்


முனகவும், இரண்டு பெண்களின் தந்தையான
ராமண்ணாவிற்கு விஷயம் புரிய, பெண்களிடம் பழக்கமே
இல்லாத ப்ரித்வி, புரியாமல் முழித்தான்.
சில வினாடிகள் யோசித்தவன், “வயிறு வலிக்குதா? அப்போ
ராத்திரி சாப்பிட்டது செரிக்கலையோ என்னவோ? நானும்
உன்கூட தானே தோசை சாப்பிட்டேன்...” என்று
முணுமுணுத்துக் கொண்டே அவளைப் பார்த்து,

“இரு என்கிட்ட வயிறு வலி மாத்திரை இருக்கு... அதை


எடுத்துத் தரேன்...” என்றவன், காரை நோக்கி விரைய, அந்த
வலியிலும் கஜலக்ஷ்மி கோபம் கொண்டு, தலையில் அடித்துக்
கொண்டாள்.

“மரமண்டை... மரமண்டை... கோடு போட்டுக் காட்டினா


ஏதாவது புரியுதா பாரு? மாத்திரை எடுக்க போனா எல்லாம்
சரியா போகுமா?” அவள் திட்டிக் கொண்டிருக்க, அவள்
தலையில் அடித்துக் கொண்டு, அவனை எதுவோ திட்டுவதை
உணர்ந்த ராமண்ணா, அவர்களே பேசித் தீர்த்துக்
கொள்ளட்டும் என்று அவர்களை வேடிக்கைப் பார்க்கத்
தொடங்கினார்.

ஆனாலும் சும்மாக இருக்க மனம் இல்லாமல்,


“தம்பி.... இது வேற விஷயம்...” அவர் இழுக்க,

“ஓ.. அப்போ இருங்க நான் நம்ம டாக்டர்க்கு போன் செய்து


கொடுக்கறேன்... அவ என்ன பண்ணுதுன்னு சொல்லட்டும்...
அதுக்குத் தகுந்த மாத்திரையை நான் வாங்கிக்
கொடுக்கறேன்...” என்று அவசரமாகக் கூறியவன், அவர் பேச
அவகாசம் கொடுக்காமல், செல்லில் இருந்து, ராமண்ணாவின்
மகளுக்கு அழைத்திருந்தான்.

 Share
o
o
o
o
o
 |
 Like
suganyarangasam, latharaju89, vaideesh and 26 others like this.

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

    
 24th Apr 2015, 11:25 PM#35

ramyas
Penman of Penmai
BloggerRuler's of Penmai
 
Real Name
Ramya Swaminath
Gender
Female
Join Date
Apr 2012
Location
Chennai
Posts
13,554
Blog Entries
75
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya

“டாக்டர்... இங்க லக்ஷ்மிக்கு வயிறு வலிக்குதாம்... என்னன்னு


கேளு...” என்று அவசரமாக கஜாவின் கையில் போனை
திணித்தவனை கடுப்புடன் பார்த்தவள், போனை எடுத்துக்
கொண்டு தனியே சென்றாள்.

“தம்பி... அதெல்லாம் பொண்ணுங்க பிரச்சனை...” சிரித்துக்


கொண்டே ராமண்ணா சொல்லவும், அப்பொழுதும் கஜாவின்
நிலையை புரிந்துகொள்ள முடியாமல்,
“அதனால தானே ராமண்ணா நான் டாக்டருக்கு போன் செய்து
கொடுத்தேன்...” என்று அவன் இயல்பாகச் சொல்லவும், அவன்
புரிந்துக் கொண்டானோ என்று எண்ணத்தில்அவனை கூர்ந்து
பார்க்க,

அவனோ, “டாக்டரை மாத்திரையோட பேரை மெசேஜ்


அனுப்பச் சொல்லி சொன்னா போற வழியில
வாங்கிக்கலாம்...” சேர்த்துச் சொல்லவும், ராமண்ணாவும்
தலையில் அடித்துக் கொண்டார்.
ராமண்ணாவின் மகளிடம் பேசிவிட்டு, அவனிடம் போனை
நீ ட்டிய கஜலக்ஷ்மி, அவனைப் பார்த்து வாய்க்குள் எதுவோ
முணுமுணுக்க, அவளை பார்த்துக் கொண்டே செல்போனை
காதுக்குக் கொடுத்தான்.
அதில் கூறப் பட்ட செய்தியைக் கேட்டுக் கொண்டு, போனை
வைத்த பின், அவளை முறைத்து, “காருக்கு போகலாம்
ராமண்ணா... போற வழியில ஏதாவது மெடிக்கல் ஷாப்ல
நிறுத்துங்க...” என்றவன்,

“இன்னும் கொஞ்ச நேரத்துல, ஒரு பெரிய பெட்ரோல் பங்க்


உள்ளேயே மெடிக்கல் ஷாப் இருக்கற மாதிரி, ஒண்ணு வரும்
இல்ல... அங்க நிறுத்துங்க...” அவன் சொல்லிவிட்டு
வண்டியில் ஏற, கஜா தயக்கத்துடன் தலைகுனிந்து, நின்றுக்
கொண்டிருந்தாள்.
“ஹ்ம்ம்... இதெல்லாம் முன் கூட்டியே யோசிச்சு ப்ரிபேர்டா
இருக்கறது இல்லையா? சரி சரி, லேட் ஆகுது லக்ஷ்மி... ஏறு...”
கோபமாகத் தொடங்கி, கரிசனையாக முடிக்கவும், அவனை
நன்றியுடன் பார்த்துக் கொண்டே அவள் காரில் ஏறினாள்.

அவன் கூறிய மருந்துக் கடை வந்தவுடன், அவளை உள்ளே


அனுப்பிவிட்டு, “நீ ங்களாவது சொல்லி இருக்கலாம் இல்ல
ராமண்ணா...” சிறிது நேர அமைதியை அவன் கலைக்க,

“நான் சொன்ன போது நீ ங்க புரிஞ்சிக்கலை தம்பி... நான்


என்ன செய்யறது?” சிரிப்புடன் அவர் கேட்கவும்,

“அதெல்லாம் எனக்கு என்ன தெரியும்?” என்று முணுமுணுத்து


புன்னகைத்தவனைப் பார்த்தவர்,

“அவளுக்கு வலிக்குதுன்ன உடனே எப்படி துடிக்கிறார்...


வெளிய போகும்போது ராத்திரில என் பெண்ணை கூப்பிட்டு
பேசினா‘ படிக்கிற பொண்ணை ராத்திரியில ஏன்
கூப்பிடறீங்க... தூங்கட்டும்’ன்னு என்னைத் திட்டறவர்,
இப்போ இப்படி அர்த்த ராத்திரியில போன் செய்து பேசறீங்க...
கேட்டா என் மனசுல அப்படி ஒண்ணும் இல்லன்னு
சொல்றீங்க...” மனதில் அவனை கடிந்துக் கொண்டு நிற்க,
அதே நேரம் திரும்பி வந்த கஜலக்ஷ்மியைப் பார்த்த ப்ரித்வி,
கண்களை மூடித் திறந்து, ‘நலம் தானே’ என்பது போல
அவளையே பார்க்க, அதே போல அவளும் கண்களை மூடித்
திறந்து, தனது உடல் நலத்தைச் சொல்ல, அவளைப் பார்த்துக்
கொண்டே, காரில் அவன் ஏற, காதல் நிறைந்த ஒரு
பார்வையுடன் கஜாவும், காரில் ஏறினாள்.

கவிதைகள் தொடரும்....

 கவிதை - 8

வார்த்தைகள் தேவை
இல்லை
விழிகள் இரண்டும்
மும்முரமாய் ஒன்றை
ஒன்று பார்த்தே தீர்க்க
இடைப்பட்ட காற்றில்
நெருக்கங்கள் குறைந்து

இறுக்கங்கள்கூடுதே !!

இருவரின் பார்வை பரிமாற்றத்தை பார்த்த ராமண்ணாவிற்கு,

கஜலக்ஷ்மியை நினைத்து மனம் நொந்தது. ப்ரித்விக்கு அவள்

மேல் இருக்கும் அன்பும், அக்கறையும், மெலிதாக முளை

விட்டு இருந்த காதலையும் கணக்கிட முடிந்த அவரால்,

அவனது குணத்தின் படி, அவன் காதலை ஒத்துக்கொள்வான்,


என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது என்பதை நன்கு

உணர்ந்தும் இருந்தார்.

கஜாவின் பார்வையையும் அதில் தெரிந்த ஆர்வத்தையும்

கண்டவர், அவளை நினைத்து கவலைக் கொண்டார். ‘அவங்க


வட்ல
ீ நிச்சயம் செய்திருக்கற கல்யாணத்தை அந்த பொண்ணு
சந்தோஷமா ஏத்துக்காம இருக்கே... இப்போ தம்பியினால

அவ மனசுல சலனம் வேற வந்திருக்கு... என்ன செய்யப்

போறா? பிடிக்காத ஒருத்தரோட திருமணம் நடந்தா


நாளடைவுல பொருந்தி போயிரும்ன்னு சும்மா வேடிக்கைப்

பார்க்கவா? என் பொண்ணுக்கு இந்த மாதிரி நிலைன்னா நான்

என்ன முடிவெடுப்பேன்? நம்ம டாக்டரை விட சின்னப்

பொண்ணா தானே இருக்கா? இவ்வளவு சுட்டிக்கு இப்படி ஒரு


நிலையா’ கஜாவைப் பற்றி பலவாறான எண்ணங்களின்

சுழன்றவரின் கையில், பழக்கத்தின் காரணமாக

தன்னிச்சையாக கார் விரைந்து சென்றுக் கொண்டிருந்தது.

தமிழ்நாட்டின் எல்லையை தொட்டதற்கு அடையாளமாக,

கடைகளின் பெயர்ப் பலகைகள் தமிழில் காணப்பட, அதுவரை

அமைதியே உருவாக வந்தவள், மெல்ல தலை உயர்த்தி

ப்ரித்வியைப் பார்த்தாள். நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் அவன்

இருக்க, அவனது மென்மையான முகத்தை அளவிட்டவள்,


அவனது முகத்திலேயே பார்வையை ஒட்ட வைத்துக்

கொண்டாள்.

‘ஆயிற்று... இன்னும் சில மணி நேரங்களில், இவன் யாரோ

தான் யாரோ என்று பிரிந்து செல்லும் நேரம் வந்தாயிற்று...


பின் இவனைக் காண்பது என்பது தன் வாழ்வில் கனவிலும்

முடியாத காரியம்.... அந்த கிராமத்தில், பழனியின்

மனைவியாக, அவனது அ...ன்...புத் தொ....ல்லை...களைத்


தாங்கிக் கொண்டு, கையில் இரண்டு பிள்ளைகளுடன், அந்த

ஊரைச் சுற்றி சுற்றியே தன் வாழ்வு முடிந்து விடும்...

சுவாரஸ்யமும், வேடிக்கையும், என் வாழ்வில் இத்துடன்

விடைபெற்றுச் சென்றுவிடும்... சொல்வதற்கெல்லாம்

தலையாட்டிக்கொண்டு, ஆட்டுவிப்பார் கைப் பிடியில்

பொம்மை போல ஆட வேண்டும்...’ இவ்வாறு

நினைக்கையிலேயே, கஜலக்ஷ்மியின் உள்ளத்தில் ‘ஓ’ என்ற

பெரும் ஒலி எழுந்து, அவள் தொண்டையடைக்கச் செய்தது.

“இது என்ன விதி?” அவள் நொந்துக் கொண்டிருக்கும் நேரம்,

மெல்ல கண் மலர்த்திய ப்ரித்வி, கஜலக்ஷ்மி, தன்னையே

பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, புருவம் உயர்த்தி

என்னவென்று கேட்டான்.

ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி அவன் கேட்ட விதத்தில், தன்


மனம் அவன் வசம் முழுவதுமாக தொலைந்து விடக் கூடாதே

என்று பயந்தபடி, அவள் சட்டென்று தலையைத் தாழ்த்திக்

கொள்ள, அந்த சில நொடிகளில், அவள் கன்னத்தில் பூத்த


அந்த வெட்கச் சிவப்பு ப்ரித்வியின் பார்வைக்கு ரசனை

விருந்தாக அமைந்தது.

அந்த மெல்லிய தெருவிளக்கின் வெளிச்சத்தில் அவள்

முகத்தின் அழகை ரசித்தவன், அவளது கூர் மூக்கில் குடி


கொண்டிருந்த ஒற்றைக் கல் மூக்குத்தியில் விளையாடத்

துடித்த தன் கைகளை கட்டுப்படுத்திக் கொண்டு, தன்

பார்வையை சாலையில் பதித்தான்.

“இன்னும் எவ்வளவு தூரம் போகணும் ராமண்ணா?” அவன்

கேட்கவும்,

“பைபாஸ்ல போயிட்டு இருக்கேன் தம்பி.. எப்படியும் இன்னும்

ஒரு நாலுல இருந்து அஞ்சு மணி நேரத்துல போயிடலாம்...”

அவர்கள் பிரிவிற்கு அவர் நேரத்தை குறிக்க, ப்ரித்வி,

கஜாவைத் திரும்பிப் பார்த்தான்.

“இன்னும் ஒரு அஞ்சு மணி நேரம் ஆகுமாம்... இப்போ மணி

ஒண்ணரை ஆகுது... எப்படியும் ஒரு ஏழு மணிக்குள்ள நாம

போயிடலாம்... எதுக்கும் முல்லைக்கு கால் பண்ணி பேசிரு...

நீ எப்படியும் வந்துடுவன்னு சொல்லிரு...” ப்ரித்வி சொல்லவும்,

அவன் சொன்னது போலவே முல்லைக்கு அழைத்தவள்,

அவன் கூறியதை அப்படியே, கிளிப்பிள்ளையாக மாறி

சொல்லி முடித்தாள்.

Last edited by ramyas; Yesterday at  10:04 PM.


 Share
o
o
o
o
o
suganyarangasam, latharaju89, vaideesh and 30 others like this.
 

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு

உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

 Yesterday, 10:02 PM#38

ramyas

Penman of Penmai
BloggerRuler's of Penmai

Real Name

Ramya Swaminath

Gender

Female

Join Date

Apr 2012
Location

Chennai

Posts

13,590

Blog Entries

75

Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya

அவள் போனை வைக்கவும், அவளை அதிசயமாக பார்த்த

ப்ரித்வி, “ஏன் ராமண்ணா... நாம பெட்ரோல் பங்க்ல இருந்து

வேற ஆள் யாரையும் கூட்டிட்டு வரலையே...” என்று

தொடங்க,

“ஏன்... என்னை அடையாளம் தெரியலையாக்கும்...” அவள்

நொடிக்க,

“அடையாளம் எல்லாம் நல்லா தான் தெரியுது... ஆனா... ஆளே

மாறிப் போன ஃபீல்... ஃபீல்ன்னா தெரியும் இல்ல.. ஒரு

உணர்வு...” வேண்டும் என்றே அவளை பேச வைப்பதற்கு

சீண்டி விட,

“நாங்களும் பி.எஸ்.சி. மேத்ஸ் தான் படிக்க

வந்திருக்கோம்மாக்கும்... எங்களுக்கும் இங்கிலீஷ் புரியும்...

நீ ங்க தான் பெரிய துரைன்னு நெனப்போ...” என்றவள், அவன்

ஒரு மாதிரி புன்னகைக்க,


“என்ன... நான் சொல்றதுல நம்பிக்கை இல்லையா?” அவள்

கேட்டுக் கொண்டே, தன் கைப் பையை எடுக்க,

“உன் பேர் கஜலக்ஷ்மி... உங்க அப்பா பேரு செல்வராஜூ....

உங்க அம்மா பேரு தனபாக்கியம்... உனக்கு மேல ரெண்டு

அக்கா... ஒரு தம்பி இருக்கான்... ரெண்டு அக்காக்கும்

கல்யாணம் ஆகிருச்சு... உங்க ஊர்ல இருந்து முதல் முதலா

வெளியூருக்கு படிக்க வந்தவ நீ தான்.. உனக்கு

பாதுகாப்புக்குன்னு வந்தவ தான் முல்லை... காலேஜ்ல நீ

செய்யாத அட்டகாசம் கிடையாது.. அதுவும் ஹாஸ்டல்

வார்டன் கிட்ட நீ வாங்காத திட்டும் இல்லையாமே...

அப்படியா?” என்று கேட்டவன், அவள் வாயைப் பிளந்து,

அதிசயமாக அவனைப் பார்க்கவும்,

“உங்க மாமா... பேர் பழனிவேலு... அடிக்கடி, உங்க அப்பா

அம்மா கூட உன்னைப் பார்க்க வந்து, இங்கிலீஷ் பேசறேன்னு

உன்னை கொஞ்சுவாராமே...” அவன் நக்கலாக கேட்க,

அவனது கேலி, கஜலக்ஷ்மியை வருத்தியது.

“ஆமா... அந்த கில்லி படத்தை பார்த்துட்டு வந்து... எப்பப் பாரு


அதுல வர பிரகாஷ்ராஜ் சொல்றா மாதிரி சொல்லிட்டுத்

திரியும்... எனக்கு வர ஆத்திரத்துக்கு, அப்படியே சாணியை

எடுத்து முகத்துல போட்டு அப்பலாம் போல இருக்கும்... என்ன

செய்யறது... கட்டிக்கப் போறவனுக்கு மரியாதை


தரலையேன்னு எங்க ஆத்தா... என் காலுல சூடு போட்ரும்...

இங்கப் பாருங்க... எவ்வளவு சூடுவாங்கி இருக்கேன்னு...”

என்றபடி, தன் கணுக்காலிற்கு மேல் இயல்பாக அவள்

பேன்ட்டை உயர்த்திக் காட்டவும், அதைப் பார்த்த ப்ரித்வியின்

மனம் வலித்தது.

“இப்படியே காரைத் திருப்புங்க ராமண்ணா...” சொல்லத்

துடித்த நாவை கட்டுப் படுத்திக் கொண்டு,

“என்கிட்டே பேசற மாதிரி பேசி இருப்ப... அதுக்குத் தான்

இப்படி...” என்று கேலியாகவே முடிக்க நினைக்க, அவளும்,

மற்றதை மறந்து,

“ஆமா... ஆமா... உங்ககிட்ட பேசற மாதிரி அவன் கிட்ட பேசி

இருந்தேன்... இத்தனை நேரம் வட்ல


ீ பஞ்சாயத்தை கூட்டி,
எங்க அம்மாவோட இரும்பு குழலுக்கு வேலை வச்சிட்டே

இருந்திருப்பான்... நல்லவேளை நான் அவன்கிட்ட அப்படி

பேசல...” அவள் வாய் அதைக் கூறினாலும், அவளது மனதோ,

‘உன்கிட்ட உரிமையா பேசற அளவுக்கு அவன் கிட்ட பேசினது

இல்லையே... இது என்ன பந்தமோ?” என்று ஏங்கவும் செய்தது.

“என்ன அமைதி ஆகிட்ட... நான் சூடு வச்சிருவேன்னு பயமோ?

நான் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்ம்மா... நீ என்னை


நம்பலாம்...” என்றவன்,

இவ்வளவு தூரம் உன்னைக் கொண்டு விடறேன்... உங்க

வட்டுக்கு
ீ கூப்பிட்டு எனக்கு ஒரு கப் காபி... ராமண்ணாக்கு

ஒரு கப் காபி... அது கூட தர மாட்டேன்னு சொல்றயே... இது

நியாயமா?” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க,

“எங்க வட்டுக்கு
ீ நீ ங்க வந்தீங்கன்னா சுடு காபி கிடைக்காது..

சுடு தண்ணி... அதுவும் முகத்துல தான் வந்து விழுகும்...

பரவால்லயா?” அவள் கேட்கவும், “ஐயோ..” என்று பயந்தவன்

போல் அலறிய ப்ரித்வி, அவளைப் பார்த்து சிரித்தான்.

“சரி விடு... நல்லவேளை... என்னை ஹாஸ்டல்ல கொண்டு

விடச் சொல்லி... என் முகத்தை காப்பாத்தின...” மேலும் அவன்

சிரிப்புடன் தொடரவும்,

“ஆமா... எப்படி ப்ரித்வி, ஒரே ராத்திரியில என்னைப் பத்தி

இவ்வளவு விஷயம் கண்டு பிடிச்சீங்க?” அவள் கேட்கவும்,

அவளது கைப்பையை உரிமையோடு எடுத்துத் திறந்தவன்,

“இதோ இதை வச்சுத் தான்...” என்று அவளது ஐ.டி. கார்டை

காட்டினான்.

“இதை வச்சா... இதுல அப்பா பேரும், என் பேர் மட்டும் தானே

இருக்கும்?” அவள் சந்தேகமாகக் கேட்கவும்,


“ஹ்ம்ம்... உன் பேர் மட்டுமே எனக்கு போதாதா என்ன? நீ

இதை காட்டும் பொழுதே, உன் காலேஜ் பேரையும், உன்

பேரையும் பார்த்து வச்சிட்டு, மதுரையில எனக்கு தெரிஞ்ச

டீலர் ஒருத்தர் இருக்கார்... அவர ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி

மூலமா விசாரிக்க சொன்னேன்... ஒரே ராத்திரி தான்...


காலையில உங்க ஹாஸ்டல் வார்டன் கிட்ட உன்னைப் பத்தி

கேட்டு, அத்தனை விவரமும் என் கைக்கு வந்தாச்சு...” அவன்

பெருமையாகச் சொல்லவும்,

‘ஒரு நாள் தான் ஆச்சா?’ கஜலக்ஷ்மியின் மனம் அவனை

சந்தித்து ஒரு நாள் தான் ஆகிறது, என்பதை ஏற்க மறுத்தது.

‘இல்ல... ஒரு ஜென்மம் சேர்ந்து வாழ்ந்த உணர்வு’ மறுத்த

மனது, அவளிடம் எடுத்துச் சொல்ல, மீ ண்டும் மெளனமாக

அவனைப் பார்க்கத் தொடங்கினாள்.

“என்ன... நான் அறிவாளின்னு ஒத்துக்க இன்னமும்

தயக்கமா?” அவளது பார்வையை திசை மாற்ற ப்ரித்வி

கேட்கவும்,

 Share
o
o
o
o
o
suganyarangasam, latharaju89, vaideesh and 29 others like this.
 

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு

உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

 Yesterday, 10:07 PM#39

ramyas

Penman of Penmai
BloggerRuler's of Penmai

Real Name

Ramya Swaminath

Gender

Female

Join Date

Apr 2012
Location

Chennai

Posts

13,590

Blog Entries

75

Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya

“நீ ங்க சரியான... ச்சே.. ச்சே... ஐன்ஸ்டீன் காலத்துல பிறக்க

வேண்டிய விஞ்ஞானி...” என்று புகழ்வது போல புகழ்ந்தவள்,

“நல்லவேளை அப்போ பிறக்கல... பிறந்து இருந்தா... அதுவும்

ஒரு கண்டுபிடிப்புன்னு... தியரம்... ப்ராக்டிகல்ன்னு பக்கம்

பக்கமா வச்சு எங்க உசுரை வாங்கி இருப்பாங்க...” அவள்

பதிலுக்கு கிண்டல் செய்ய, ப்ரித்வி அவளை முறைத்தான்.

“எனக்கேவா...” என்பது போல அவள் பார்த்துக்

கொண்டிருக்கவும், “ஒரு அஞ்சு நிமிஷம்... டீ குடிச்சிட்டு

போகலாம் தம்பி...” ராமண்ணா சொல்லவும், ஒரு டீ

கடையோரம் கார் நிறுத்தப்பட்டது.

“உனக்கு டீ வேணுமா... காபி வேணுமா லக்ஷ்மி...” அவள்

விருப்பத்தை அவன் கேட்கவும்,

“எனக்கு டீ போதும் ப்ரித்வி... ஆனா, ரெண்டு கிளாஸ்

வேணும்... பசிக்குது...” அவள் சொல்லவும்,


“பசிக்குதுன்னா வாய் திறந்து சொல்லு லக்ஷ்மி... நான்

கொஞ்சம் பிஸ்கட், பிரட் எல்லாம் வச்சிருக்கேன்...

தந்திருப்பேன் இல்ல...” வருத்தப்பட்டுக் கொண்டவாறே...


காலையில் சுடச்சுட போட்டுக்கொண்டிருந்த

மெதுவடையுடன், அவளுக்கு சூடாக இரண்டு டீயை கொண்டு

வந்து நீ ட்டவும்,

“கொஞ்சம் குடிக்கிற சூடுலையே குடி... வயிறு வலிக்கு இதமா

இருக்கும்...” என்று அவள் கையில் கொடுத்துவிட்டு,

தனக்கான டீயை அவன் உறிஞ்சத் துவங்கினான்.

‘தான் இடைப்புகாமல், இருவரும் தங்களுக்குள்ளாக

அவர்களே பேசிக் கொள்ளட்டும்... பின் விதி விட்ட வழி’,

ராமண்ணா எடுத்துக் கொண்ட உறுதியில், அவர் நிலையாக

நிற்கத் தொடங்கி இருந்தார்.

கஜலக்ஷ்மியும், அவனது இதமான அணுகுமுறையை

ரசித்தபடி, அவனைப் பார்த்துக் கொண்டே டீயை குடித்து

முடித்தாள். மீ ண்டும் அவர்களது பயணம் தொடங்கியது.

ப்ரித்வி, தன்னுடைய லேப்டாப்பை எடுத்துக் கொண்டு, பின்

சீட்டில், கஜாவின் அருகில் அமர்ந்தான்.

சிறிது நேரம் அதில் தனது வேலையை செய்துக் கொண்டு

வந்தவன், கஜாவின் கண்கள் சொருகவும், அவளைத் திரும்பிப்


பார்த்து, அவள் சாமியாடுவதைப் பார்த்து புன்னகைத்தபடி,

அவளது தலைக்கு தலையணையைக் கொடுக்க, அந்த தூக்கக்

கலக்கத்தில், அவனது அருகாமையில், கஜாவிற்கு அவன்

மார்பில் சாய்ந்து உறங்க வேண்டும் போல் இருந்தது.

சிறிது நேரம் அவனது முகத்தையே பார்த்தவள், அவன்

அவளது கண்களை சந்திக்கவும், “தேங்க்ஸ்..” என்று நன்றி

தெரிவிக்க,

“எதுக்கு?” அவன் புரியாமல் கேட்கவும்,

“இல்ல... நீ ங்க எனக்கு எல்லாத்தையும் பார்த்து பார்த்து

செய்யறீங்க இல்ல... அதுக்குத் தான்...” மென்குரலில் சொல்ல,

“லூசு... பேசாம தூங்கு...” என்று அவள் கன்னத்தைத் தட்டிக்

கொடுத்தவன், கன்னத்தோடு உறவாடிய கை, அத்து மீ றத்

துடிப்பதை உணர்ந்து, அவசரமாக அதை விலக்கிக்

கொண்டான்.

சிறிது நேரம் அவள் கண்களை மூடிக் கொண்டிருக்க, ப்ரித்வி,

தனது வேலையைத் தொடர,

எங்கேயோ பார்த்த மயக்கம்


எப்போதோ வாய்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்...


அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்

என்ற பாடல் வரிகள் காரில் தவழ, இது நான் பாட வேண்டிய


பாடலோ என்பது போல ப்ரித்வியின் உள்ளே ஒரு குரல்

எழுந்தது. அந்த குரலின் தாக்கத்தில் கஜலக்ஷ்மியின் முகத்தை

அவன் திரும்பிப் பார்க்க, அதே நேரம், அவளும் அவனைத்

தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னாச்சு?” கரகர குரலில் அவன் கேட்கவும்,

“ஒண்ணும் இல்ல... நீ ங்க என்னை கூப்பிட்ட மாதிரி

இருந்தது.... அது தான் நிஜமா பொய்யான்னு ஆராய்ச்சி

பண்ணிக்கிட்டு இருந்தேன்...” அவளும் மென்மையாகச்

சொல்லவும், புன்னகையுடன் அவளைப் பார்த்தவன்,

“நான் கூப்பிடல... ஒருவேளை பேய் எதுனா இருக்குமோ?”

அவளைச் சீண்டவும்,
“நீ ங்க இருக்கற கார்ல... பேயா... சான்சே இல்ல...” அவளும்

பதிலுக்கு கிண்டலடிக்கவும், ப்ரித்வி அவளைப் பார்த்து

பத்திரம் காட்டி சிரித்தான். இருவருக்குள்ளும் அழகிய நட்பு

முளை விட்டு, உரையாடலில் முடிந்தது.

கல்லூரி கலாட்டாவில் தொடங்கி, அவளது தோழி முல்லை

வரை அவள் சொல்லிக் கொண்டே வர, ப்ரித்வி, அதனை

ரசித்துக் கொண்டு வந்தான். “கேளுகஜா... இனி இவரை

எப்போபார்க்கப்போற? கேட்டுடு...” கஜாவின் மனதில்,


அவனைப் பற்றிய கருப்பு பக்கத்தை பற்றிய எண்ணம் வந்து

ஒட்டிக்கொள்ள, கேட்கலாமா? வேண்டாமா? என்ற

இரண்டுக்கும் நடுவில் அவள் தடுமாறிக் கொண்டிருக்க,

Last edited by ramyas; Yesterday at  10:12 PM.


 Share
o
o
o
o
o
suganyarangasam, latharaju89, vaideesh and 31 others like this.
 

Ramya 
சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு

உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் .... 

Don't Worry............ Be Happy....... 

 Yesterday, 10:12 PM#40

ramyas

Penman of Penmai
BloggerRuler's of Penmai

Real Name

Ramya Swaminath

Gender

Female

Join Date

Apr 2012
Location

Chennai

Posts

13,590

Blog Entries

75

Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா!! -- Vizhiyora Kavithaigal by Ramya

“யாரோ ஒரு பெண்ணை நம்பி அவமானப்பட்டேன்னு

சொன்ன ீங்களே? அது என்ன? என்னாச்சு?” அவளது

துறுதுறுப்பான மனம் அவனிடம் கேள்வி கேட்க, சட்டென்று,

ப்ரித்வியின் புன்னகை நின்றுப் போனது.

ராமண்ணா திரும்பி கஜலக்ஷ்மியை முறைக்க, ப்ரித்வி, சிறிது

நேரம் தனது கோபத்தை கட்டுப்படுத்தப் போராடியவன்,


அவசரமாக ஒரு சிகரெட்டை எடுத்து புகைக்கத்

தொடங்கினான்.

“ஹையோ... எனக்கு இந்த புகையே ஆகாது...” கஜலக்ஷ்மி

சொல்லவும்,

“என் கார்... நான் புகைப்பேன்... இதுல உனக்கு என்ன வந்தது...

உனக்கு பிடிக்காதுன்னா மூக்கை மூடிக்கோ... இல்ல கீ ழ

இறங்கிக்கோ...” கடுகடுப்புடன் வந்த பதிலில், அத்தனை

நேரம் இருந்த ரம்யமான நிலை மாறி, அங்கே கோபமும்,

எரிச்சலுமே போட்டி போட்டுக் கொண்டு வந்தது.


“ஹையோ கஜா... அவரைக் கேட்கலாமா வேண்டாமான்னு

பட்டிமன்றம் நடத்திட்டு இப்படி சொதப்பிட்டியே... அவர் பாரு

எவ்வளவு கோபப்படறார்...” அவள் நினைத்துக்

கொண்டிருக்கும் போதே, ப்ரித்வி அடுத்த சிகரெட்டை எடுத்து

புகைக்கத் தொடங்கினான்.

என்ன ப்ரித்வி இது? அடுத்தடுத்து இப்படி ஸ்மோக்

பண்ணறீங்க? உடம்புக்கு ஆகாது?” கெஞ்சலாக அவள்

சொல்லவும்,

“உன் வேலை என்னவோ அதை மட்டும்பார்த்துட்டுப் போ...”

பல்லைக் கடித்துக் கொண்டு உறுமியவன், “ஒரு அஞ்சு

நிமிஷம் எங்கயாவது நிறுத்துங்க ராமண்ணா..” என்று

முடித்தான்.

அவன் சொன்னது போலவே அவரும் செய்ய, காரில் இருந்து

ப்ரித்வி, இறங்கிக் கொண்டான். வரிசையாக மேலும் இரண்டு

சிகரெட்டுகளை அவன் புகைக்கத் தொடங்கவும்,

“உங்களை யாரு ராமண்ணா இப்போ வண்டியை நிறுத்தச்

சொன்னது? பாருங்க எப்படி பண்ணறாருன்னு... இப்படி

தொடர்ந்து புகை பிடிச்சா உடம்புக்கு ஆகுமா? அப்படி என்ன

தான் நடந்தது? இவரைப் பார்த்தா அப்படி ஒண்ணும்...” அவள்

பேசிக் கொண்டிருக்கும் போதே,


“உன்னை வாய வச்சிட்டு சும்மா வான்னு பல முறை சொல்லி

இருக்கேன் லக்ஷ்மி... உனக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத

வேலை? இப்போ அதை தெரிஞ்சிக்கிட்டு என்ன செய்யப்

போற?” அவர் கேட்கவும், அவர்களை சந்தித்ததில் இருந்து,

முதன்முறையாக ராமண்ணாவின் முகத்திலும், பேச்சிலும்

கடுமையைப் பார்த்தவள், பேய் அடித்தது போல முழித்தாள்.

“நீ இன்னும் சின்னப் பிள்ளை இல்ல... கல்யாணம் ஆகப்

போகுது... மனசுல பட்டதை எல்லாம், எங்கேயும் எல்லா

நேரமும் பேசிட முடியாது... அது நடைமுறை வாழ்க்கைக்கு

ஒத்தும் வராது... புரியுதா? உன்னை என் பொண்ணு மாதிரி

நினைச்சு சொல்றேன்... நினைச்சது எல்லாம் எல்லா நேரமும்

நடக்கவும் நடக்காது...” ப்ரித்வியைப் பற்றி புரிந்த அவர்,

அவளது மனதை ஏமாற்றத்தை தாங்கும் அளவிற்கு,

பக்குவப்படுத்த நினைக்கையில், ப்ரித்வி, காருக்கு திரும்பி

இருந்தான்.

“சாரி...” அவளது மன்னிப்பிற்கும், இம்முறை நக்கலாகக் கூட

ப்ரித்வியிடம் பதில் இல்லாமல் போகவும், கஜாவின் மனம்

சோர்ந்தது. தான் செய்தது மிகப் பெரிய முட்டாள் தனம் என்று

தன்னையே பல முறை திட்டிக் கொண்டவள், ப்ரித்வியை

பாவமாகப் பார்க்க, அவனோ, தன் அருகில் யாரும் இல்லை

என்பதைப் போல நடந்துக் கொண்டான்.


மேலும் எதுவும் பேசாமல், ராமண்ணா காரை எடுக்க,

மதுரையை நோக்கிய அவர்களது பயணம், அமைதியாகவே

கழிந்தது.

கவிதைகள் தொடரும்....

 கவிதை – 9

கண்ணா அறிவாயா
என் காதல் உள்ளத்தை! 
உன் தோளில் நான் சாய்ந்து 
கதை பேசும் காலம் தான் 
இல்லாமல் போனதே… 
மொட்டு விட்ட காதலும்
கானல் நீராகிப் போகுமோ??
“ஹலோ... ப்ரித்வி ஹியர்...” என்று போனில் தொடங்கியவன்,

“ஹ்ம்ம்... நான் இன்னைக்கு ராத்திரி ஊருக்கு


திரும்பிடுவேன்... நாளைக்கு நாம இதைப் பத்தி டிஸ்கஸ்
பண்ணிட்டு.... இதுக்கு பேடன்ட் வாங்க அப்பளை
செய்யலாம்... அதே போல அந்த ஜெர்மன் கார்
கம்பெனிகாரங்க கிட்டயும் பேசி வரச் சொல்லிடலாம்... நம்ம
கம்பெனியோட வளர்ச்சிக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்..”
அவனது கம்பனியின் சீனியர் இன்ஜினியரிடம் அவன்
பேசிக்கொண்டே வர, அந்த சம்பாஷணை, ப்ரித்வி, தன்னை
விட்டுவிட்டு, நொடியும் தாமதிக்காமல், ஊருக்குத்
திரும்புகிறான் என்பதை கஜாவுக்குப் பரைச்சாற்றியது.

“ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம்?” அவனது முகத்தைப்


பார்த்து ஏக்கம் கொண்டவள், மனதினில் நினைக்க,
ப்ரித்வியோ அவளை கண்டுகொள்ளாமல், கோபத்துடன்
அமர்ந்திருந்தான். ஒருநாள் முழுவதும் அவன் காட்டி வந்த
இணக்கமும், கரிசனமும், இதமான தோழமையும் சட்டென்று
ஒரே நிமிடத்தில் கானல் நீ ராகிப் போன மாயத்தை எண்ணி
எண்ணி, அவள் மனம் விம்மத் தொடங்கியது.

இன்னும் ஒருமணி நேரப் பயணம்... அத்துடன் அவன் யாரோ


நான் யாரோ என்று ஆகிப் போகும், வாழ்வின் விந்தை
அவளை புரட்டிப் போடத் துவங்கியது.

அவனை விட்டு பிரியப் போகிறோம் என்ற எண்ணமே,


அவளுக்கு ஏக்கத்தைக் கொடுக்க, தான் ஏன் இவ்வாறு
உணருகிறோம் என்ற எண்ணமே அதைப் புறம் தள்ளிவிட்டு
மேலெழும்பியது. அவளது செல்போன் சிணுங்கி, அவளது
சிந்தனையை கலைத்தது,... அது முல்லையின் எண்ணைக்
காட்டிக் கண் சிமிட்டியது.

“என்ன?” போனை எடுத்தவுடன், கடுப்புடன் அவள் கேட்கவும்,

“என்னாச்சு கஜா? கோபமா இருக்கியா புள்ள...” அவள்


இழுக்கவும்,
“இல்லடி... இன்னும் உயிரோடத் தான் இருக்கேன்... இப்போ
அதுக்கு என்ன?” அவளிடம் கஜா எரிந்து விழவும், முல்லை
சில நிமிடங்கள் அமைதி காத்தாள்.

“இப்போ எதுக்கு போன் செய்து உசுர வாங்கற? இப்போ என்ன


நடந்துச்சு?” ப்ரித்வி மீ து இருந்த கோபம், அவளுடைய
இயலாமை, மொத்தமும் முல்லையிடம் கோபமாக
வெளிப்பட, அவளது கோபத்தைப் புரிந்தும், புரியாதது போல
ப்ரித்வி, சிலை போன்று அமர்ந்திருந்தான்.

அவனது முகத்திலோ, உணர்வுகள் மொத்தமும் வடிந்த


இரும்புத் தோற்றம்... அவளது கோபம் எதனால் என்று புரிந்துக்
கொண்ட ராமண்ணா, ப்ரித்வியை கண்ணாடி வழியாகப்
பார்த்தார். எந்த சலனமும் இல்லாமல், அவளது கோபம்
தன்னை எந்த விதத்திலும் பாதிக்காது என்பது போல
அமர்ந்திருந்தவனைப் பார்த்து, அவருக்கும் கவலைப்
பிறந்தது.

“இவருக்கு அந்தப் பொண்ணுகிட்ட என்ன ஒதுக்கம்? நல்லாத்


தானே பேசிட்டு வந்தார்? அது ஏதோ ஒரு ஆர்வத்துல
கேட்டுட்டா? அதுக்கு இப்படியா கோபப்படணும்...” அவரும்
மனதினில் புலம்பிக்கொண்டிருக்க,

“என்னாச்சு? எதுக்கு கூப்பிட்ட?” கஜா மீ ண்டும் கத்தவும்,

“இல்ல கஜா? அந்த சார் ஏதாவது கோபமா திட்டிட்டாரா?


இவ்வளவு கோபமா பேசற?” ப்ரித்வியைப் பற்றி முல்லை
யூகித்துக் கேட்க,
“ஆமா... குளுகுளுன்னு பேசிட்டாலும்....” என்று நீ ட்டி
முழக்கியவள், “இப்போ எதுக்கு நீ கூப்பிட்டன்னு கேட்டேன்...”
என்று மீ ண்டும் கத்தினாள்.

“ஒண்ணும் இல்ல கஜா... நம்ம ஊர்க்காரங்க எல்லாம்


வேன்ல கிளம்பி ரவைக்கே, இங்க வந்து உட்கார்ந்து
இருக்காங்களாம்... இப்போத் தான் எங்க மாமா சொல்லுச்சு...
எல்லாரும் நம்மள கூட்டிப் போக காத்துக்கிட்டு
இருக்காங்களாம்...” சத்தமில்லாமல், முல்லை அவளது
தலையில் கல்லைப் போட, ‘என்னது?’ கஜா அதிர்ந்தாள்.

“முல்ல.... என்ன சொல்ற நீ ? எங்க உட்கார்ந்து இருக்காங்க?”


கஜா பதட்டத்துடன் கேட்கவும்,

“அது பஸ்ஸ்டாண்ட்ல உட்கார்ந்து இருக்காங்களாம்... நம்ம


போன் செய்து கூப்பிட்ட உடனே வருவாங்களாம்... நீ எந்த
வழியா உள்ள வரப் போற?” அவள் கவலையாகக் கேட்கவும்,
கஜலக்ஷ்மி சில நொடிகள் யோசனையில் ஆழ்ந்தாள்.

“நான் இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க இருப்பேன்


முல்ல... பஸ் ஸ்டாப்ன்னா... அது நம்ம காலேஜ் முன் வாசல்
பக்கம் இல்ல இருக்கும்... நான் ஒண்ணு செய்யறேன்... பின்
கேட் வழியா உள்ளார வந்துடறேன்... நீ நம்ம கனகாவ கரக்ட்
பண்ணி அந்தக் கதவை திறந்து வைக்கச் சொல்லு... என்ன
நான் சொல்றது புரியுதா?” அவள் புரிந்து கொண்டாளா என்ற
சந்தேகத்துடன், கஜா உறுதி செய்துகொள்ள,
“ஹ்ம்ம்... புரியுது... நீ தான் அவளை கரெக்ட் செய்து
வச்சிருக்கியே...” கிளுக்கிச் சிரித்தவள்,

“கஜா... சீக்கிரம் வந்திரு... உன் துணியை எல்லாம் எடுத்து


மூட்டை கட்டி வச்சிட்டேன்... பிறகு நம்ம புக்... அதெல்லாமும்
கட்டி வச்சிட்டேன்... நான் வந்ததுல இருந்து அது தான்
வேலையே...” அவள் சொல்லி முடிக்க, மீ ண்டும் ப்ரித்வியிடம்
மனம் ஒட்டிக்கொள்ள,

“ஹ்ம்ம்... சரி முல்லை... நான் வந்துடறேன்...” உள்ளே போன


குரலில் கூறி, போனை அணைத்து வைக்க, அவளின் எந்த
ஒரு பேச்சும், காதில் விழுந்தது போல காட்டிக் கொள்ளாத
ப்ரித்வி, தனது பணியில் மூழ்கி இருக்க, அவனைப் பார்க்கப்
பார்க்க, அவளது மனம் மேலும் நொந்தது.

“ஒரு வார்த்தையை கேட்டதுக்கு இவ்வளவு


கோபப்படறாங்கன்னா... மனசுல எவ்வளவு வலி இருக்கும்...
நான் உங்க கூடவே இருந்து அந்த வலியை ஆத்தக் கூடாதா?”
அவள் மனம் மெளனமாக ப்ரித்வியிடம் முறையிட, ‘என் மனக்
கதவு மூடிக் கொண்டது’ என்பதை சொல்லாமல் சொல்வது
போல, லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு, கண்களை மூடிக்
கொண்டான்.

ப்ரித்வியின் கற்சிலைத் தோற்றமும், கஜாவின்


பரிதவிப்பையும் கண்டவர், ஒரு பெருமூச்சுடன், இந்த
சூழ்நிலையை இலகுவாக்க, அவளை விரைவில் கல்லூரியில்
விடுவதே நல்லது என்றெண்ணி, காரை விரட்டினார்.
அவளது பரிதவிப்பு, அருகில் இருந்த ப்ரித்விக்கும் நன்றாகவே
புரிந்தது... இத்தனை நேரம் அவன் எவ்வளவு திட்டினாலும்,
பதிலுக்கு பதில் பேசிக் கொண்டு, சளசளத்துக் கொண்டு
வந்தவளின் திடீர் அமைதி, அவனையும் அசைத்துத் தான்
பார்த்தது.... ஆனால், அவள் உரிமையுடன் கேட்ட, தன்னுடைய
அந்த கருப்பு பக்கத்தை தான் அவனால் சொல்ல முடியாமல்,
அதனால் எழுந்த கோபத்தில், அவளையும் திட்டி, தனது
வாழ்வில் தொடங்கிய மெல்லிய இதமான சூழலையும், தன்
கோபத்தீயில் பொசுக்கிவிட்டோம் என்பதை அவன்
நன்றாகவே உணர்ந்தான்.

இதோ இன்னும் சில மணித்துளிகளில், அவளும் தானும் வேறு


வேறென்று ஆகப்போகும் அந்த எண்ணமே அவனை கொஞ்சம்
அசைத்துப் பார்த்தது.

“என்ன இது? ஒரு சின்ன பொண்ணுகிட்ட இப்படி ஒரு


எண்ணம் வரதே தப்பு... இதுல
அவளைவிட்டுப் பிரியறதைப் பத்தியெல்லாம் நான் எதுக்கு
இப்போ நினைக்கறேன்...” காதல் என்ற வார்த்தையை அவன்
முன்னிறுத்தாமல், தோழமையை மட்டுமே மனதில் பதித்துக்
கொள்ள முயன்றுக் கொண்டிருந்தான்.

இருவரின் அமைதியும் ஒரு முடிவுக்கு வரும் நேரமும்


நெருங்கிக் கொண்டிருந்தது.... “ராமண்ணா... எங்க காலேஜ்
உள்ள... போக நான் வழி சொல்றேன்... ஆனா, பின் கேட்
வழியா போங்க... அப்போ தான் யாருக்கும் தெரியாம உள்ள
போக முடியும்...” தன்னுடைய பேச்சினால், அவனை
கோபமாக்கி பதில் பேச வைக்கும் முயற்சியோ, அல்லது
இயல்பாகச் சொன்னாளோ, ப்ரித்வி, அவளைத் திரும்பிப்
பார்த்து முறைக்க, அதுவே கஜாவிற்கு போதுமானதாக
இருந்தது.

கல்லூரிக்கு வழி சொல்லிக் கொண்டே வந்த கஜா, ஓரளவு


தன் மனதில் ஒரு முடிவெடுத்திருந்தால்... அவளது குரலில்
இருந்த தடுமாற்றம் குறைந்து காணப்பட்டது.

“அப்படி போனா மெயின் கேட் வரும் ராமண்ணா... அங்க தான்


எங்க ஊர் ஜனங்க உட்கார்ந்து இருக்காங்க.... அதனால அப்படி
வேண்டாம்... இப்படி போங்க...” கல்லூரி பின் வாயிலுக்கு
செல்லும் வழியை அவள் சொல்ல, அவளது கல்லூரி வந்து
விட்ட தன் அறிகுறியாக, பெரிய மதில் சுவர்களும், அதற்கு
மேல் இருந்த வேலிகளும், பரைச்சாற்றி, ப்ரித்வியைப் பார்த்து
சிரித்தது.

கல்லூரியை நெருங்க நெருங்க, ப்ரித்வியின் முகத்தின்


மாற்றங்களை, ராமண்ணா பார்த்துக்கொண்டு தான் வந்தார்.
அவன் முகத்தில் மின்னி மறைந்த வருத்தங்களும், அவன்
கண்ணை மூடி, தன்னையே நிலைப்படுத்திக் கொள்ளும்
விதமும், அவருக்கே கவலையை அளித்தது. மனதின்
மூலையில் இருந்த ஒரு நம்பிக்கை, அவன் எப்படியும் தன்
மனதை அவளிடம் சொல்லிவிடுவான் என்று தோன்ற
வைத்தது.

அவள் சொன்ன வழியில் சென்று ராமண்ணா வண்டியை


நிறுத்த, காரினுள் கனத்த மௌனம் நிலவியது. நிமிர்ந்துப்
பார்க்க மனமுமின்றி, தன் மனத்தைக் கண்டு தானே அஞ்சிக்
கொண்டு, கண்களை இறுக மூடிக் கொண்டிருந்தான்.

முதலில் யார் அந்த மௌனத்தை கலைப்பது, என்ற பெரிய


பிரச்சனை அந்த காரினுள் தொடங்கி இருக்க, சில நிமிடங்கள்
அங்கே மயான அமைதி மட்டுமே நிலைத்திருந்தது.
ப்ரித்வியின் அமைதியைப் பொறுக்க முடியாத கஜலக்ஷ்மி,

“தேங்க்ஸ் ப்ரித்வி... எனக்காக இவ்வளவு தூரம் வந்து...


எனக்கு தேவையானதை எல்லாம் பார்த்து பார்த்து செய்து
வாங்கிக் கொடுத்ததுக்கு... தேங்க்ஸ்ங்கற ஒரு வார்த்தையில
முடிச்சுட முடியாது... அதுக்கான பணத்தை நீ ங்க
வாங்கிக்கணும்... அப்போ தான் சரியா இருக்கும்... நான் வட்ல

பொய் சொல்லி அந்தப் பணத்தை வாங்கிட்டு
வந்திருக்கலாம்... ஆனா, அதெல்லாம் என்னோட
தேவைக்காக தான் நான் வாங்கினேன்... அதுல, நீ ங்க எனக்கு
வாங்கிக் கொடுத்த ட்ரெஸ்ஸும் அடக்கம்...” என்றவள், தன்
கைப்பையைத் திறந்து, அவளது பர்ஸில் இருந்து சில
நூறுகளையும், இரண்டு ஐநூறு ருபாய் நோட்டுகளையும்
எடுத்து அவனிடம் நீ ட்டி,

“நீ ங்க வாங்கிக் கொடுத்த டிரஸ்சோட விலை என்னன்னு


எனக்குத் தெரியாது... அதை நான் தெரிஞ்சிக்கவும் விரும்பல...
அதே சமயத்துல... உங்க கிட்ட கடனாளியா விடைபெறவும்
விரும்பல... உரிமை இல்லாதவங்க கிட்ட வாங்கிக்கற துணி...
அது.. அது... சரிப்படாது ப்ரித்வி... ப்ள ீஸ்... நீ ங்க இதை
வாங்கிக்கணும்...” என்று நீ ட்டவும், ப்ரித்வி கண்களைத்
திறந்து அவளை முறைக்க,

அவனது கையை எடுத்து, அதில் பணத்தை திணித்தவள்,


அவனது கரத்தை விடாமல் பற்றிக் கொண்டு, “உங்களை
நிறைய கோபப்படுத்தி இருந்தா சாரி... ரொம்ப ரொம்ப சாரி
ப்ரித்வி... உங்களை கோபப்படுத்தணும்னு செய்யல...
தெரியாம... புரியாம... செய்துட்டேன்... என்னை
மன்னிச்சிருங்க... உங்க ஜெர்மன் டீல் சக்செஸ் ஆகி... நீ ங்க
மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்... நான் போறேன்...”
சொல்லிவிட்டு, தனது பொருட்களை சேகரித்தவளை,
செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ப்ரித்வி...

“ராமண்ணா... எங்க அப்பா கூட என்கிட்டே சிரிச்சு பேசினது


இல்ல... நீ ங்க என்னை கிண்டல் பண்ணி... அதே நேரம்
பாசத்தையும் காட்டி... ரொம்ப தேங்க்ஸ் ராமண்ணா... உங்க
வட்ல
ீ எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க... இப்படி ஒரு
பெண்ணை சந்திச்சோம்ன்னு எப்போவாவது நினைவு வரும்
தானே...” ராமண்ணாவிடம் கேள்வி இருந்தாலும், பார்வை
என்னவோ ப்ரித்வியை நோக்கியே இருந்தது.

“என்ன லக்ஷ்மி... இப்படி எல்லாம் பேசிக்கிட்டு... உன்னை


மறக்க முடியுமாம்மா...” கனிவான குரலில், அவரும் பதில்
சொன்னாலும், அவரின் பார்வையும் ப்ரித்வியிடமே செல்ல,
அவனோ எந்த மாற்றமும் இன்றி அமர்ந்திருந்தான்.

“நான் போறேன்...” பொருட்களை எடுத்துக் கொண்டவள்,


இறங்க முற்பட, ராமண்ணா காரைத் திறந்து விடவும்,
கஜலக்ஷ்மியின் மனதில் ஏதோ ஒரு பெருத்த ஏமாற்றம்....
மனதில் இரும்பை வைத்து அழுத்தியது போன்றதொரு
நிலை... அந்த நிலை எதனால்... மெல்ல யோசித்தவளுக்கு,
தன் மனம் அவனிடம் முழுவதுமாக சாய்ந்துவிட்டது என்று
அவளுக்கு நன்றாகவே விளங்கியது.

மெதுவாக அவள் இறங்கி நின்று, அப்பொழுதும் அசையாமல்


அமர்ந்திருந்த ப்ரித்வியைத் திரும்பிப் பார்க்க,

“ப்ரித்வி... அவ போறா ப்ரித்வி... இவ்வளவு பேசறா... ஒரு


வார்த்தை... ‘அதெல்லாம் பரவால்ல லக்ஷ்மி... சந்தோஷமா
போயிட்டுவான்னு’... ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா...”
அவனது மனம் இடித்துக் கூற, கஜாவும் அவனையே பார்த்துக்
கொண்டிருந்தாள்.

“ஒரு வார்த்தை... போயிட்டுவா லக்ஷ்மின்னு சொல்லக்


கூடாதா?” அவனது மனதில் உதித்த வார்த்தையையே, அவள்
வாய் மொழியாக கேட்க, ப்ரித்வி அதிர்ந்து போனான்.

‘தனது மனது அவளிடம் இந்த அளவிற்கா பிரதிபலிக்கிறது?’


என்ற எண்ணம் தோன்றவும், வாயை திறந்து பேச அவன்
முயல, தொண்டைக் குழியில் இருந்து வார்த்தை வராமல்,
சண்டித்தனம் செய்தது.

“இன்னுமா உங்களுக்கு என் மேல கோபம் போகலை...”


கண்ண ீருடன் வருத்தமாக கேட்ட கஜலக்ஷ்மி...

“என் நம்பர் உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன்...


இல்லன்னா நோட் பண்ணிக்கோங்க...” என்று அவன்
அசையாமல் இருந்தாலும், நம்பரைச் சொன்னவள், ஒரு சிறு
தலையசைப்புடன் திரும்பி நடந்தாள்.

வருத்தம் தோய்ந்த முகத்துடனும், தொய்ந்து போன


நடையுடனும், அவள் நகர்ந்து செல்வதைப் பார்த்த
ராமண்ணா, மனதில் வருந்தி “தம்பி...” என்று அழைக்கும்
முன்பே, “லக்ஷ்மி...” என்று ப்ரித்வி அழைத்திருந்தான்.

அவன் அழைத்ததும் பட்டென்று திரும்பியவள், காரில் இருந்து


அவன் இறங்கி நிற்பதைப் பார்த்து, அவன் அருகில் ஓடி வர,
அவளது ஆவல் கலந்த முகத்தையும், விழிகள் நிறைந்த
ஏக்கத்தையும் பார்த்த ப்ரித்வியின் மனம் தவித்து போனது.

“இந்தா... இந்தப் பணத்தை நீ எனக்கு திருப்பித் தருவேன்னு


நினைச்சு, நான் உனக்கு எதுவும் வாங்கித் தரல... அதனால
எனக்கு இது வேண்டாம்...” அவளது கரத்தைப் பற்றி, அவள்
கையில் திணிக்கவும்,

“நான் சொன்னது...” அவள் தொடங்கும் முன்பே,

“உரிமைன்னு நீ எதைச் சொல்ற? ஒரு பிரெண்ட்டா கூட நீ


என்னை நினைக்கலையா லக்ஷ்மி... அந்த உரிமையில நான்
டிரஸ் வாங்கித் தரக் கூடாதா? கிட்டத்தட்ட, முப்பது மணி
நேரத்துக்கும் மேலா நாம ஒரே கார்ல பயணம் செய்து
வந்திருக்கோம்... சிரிச்சு பேசி, நிறைய விஷயத்தை எல்லாம்
பகிர்ந்துக்கிட்டு இருக்கோம்...” அவன் பேசிக் கொண்டே வர,

“நான் தான் கேனையாட்டம் உளறினேன்னு சொல்லுங்க...


நீ ங்க எதுவும் பகிரவும் இல்ல... ஒண்ணும் இல்ல...” கோபமாக
அவள் சிலுப்பிக் கொள்ளவும், ப்ரித்வியின் இதழில் புன்னகை
அரும்பியது.

“நான் என்னைப் பத்தி சொல்லலைன்னா பிரெண்ட் இல்லன்னு


அர்த்தமா லக்ஷ்மி... நானே அதை மறக்கணும்னு
நினைக்கிறேன்.. நீ நினைவுப்படுத்த விரும்பறியா?” அவன்
கேட்கவும், சிறிது நேரம் மௌனம் காத்தவள்,

“ஹ்ம்ம்...” என்ற பெருமூச்சுடன், “பிரெண்ட்ன்னா


எல்லாத்தையும் ஷேர் பண்ணிப்பாங்க... அந்த அளவு உரிமை
இருக்கறவங்க தான் டிரஸ் வாங்கிக் கொடுப்பாங்க... எனக்கு
இந்தப் பணம் திரும்ப வேண்டாம்... நீ ங்களே வச்சிக்கோங்க...”
என்றவள், உரிமையுடன் அவனது சட்டைப் பாக்கெட்டில்,
பணத்தை சொருகிவிட்டு நடக்கத் திரும்ப, ப்ரித்வி, அவள் கரம்
பற்றி அருகே இழுத்தான்.

இழுத்த வேகத்தில், அவள் கையில் இருந்த பொருட்கள், கீ ழே


சிதற, “ஏன் இப்படி எல்லாம் செய்யறீங்க? இன்னும் நான்
உங்களுக்கு என்ன செய்யணும்... என்னை அழ வச்சுட்டுத்
தான் மறுவேலை பார்ப்பீங்க போல?” வெடுக்கென்று அவள்
கேட்கவும், அதைக் கண்டும் காணாமல், சிதறிய
பொருட்களை எடுத்துக் கொடுக்க அவன் கீ ழே அமரவும்,

“சரியான மரக்கட்டை... சொல்றது ஏதாவது காதுல விழுகுதா?


முறைக்கிறதை தவிர இவருக்கு வேற எதுவுமே தெரியாதா?”
மனதினில் பொருமிக்கொண்டே, அவளும் கீ ழே அமர்ந்து
அவற்றை அவன் கையில் இருந்து பிடுங்க, அந்தச்
செய்கையில், மேலும் அவள் வசம் இழந்தவன்,

“சொல்லித் தான் ஆகணுமா?” அவள் அருகே நகர்ந்து


மெல்லிய குரலில் அவன் கேட்கவும்,

அவனிடம் இருந்து நகர்ந்தபடி, “அதெல்லாம் உங்க இஷ்டம்...


சொல்லித் தான் ஆகணும்னு எந்த கட்டாயமும் இல்ல...
உங்களோட பெர்சனல் விஷயங்களை என்கிட்ட சொல்லித்
தான் ஆகணும்னு, உரிமையா சொல்ல நான் யாரு?” அவன்
பணிந்து போகவும், கஜலக்ஷ்மி முறுக்கிக் கொள்ள, ப்ரித்வி,
அவளை வருத்தமாகப் பார்த்தான். அவன் முகத்தில் தெரிந்த
அளவிட முடியாத அந்த வலியில், அதே போல வலியை
தானும் உணர்ந்தவள்,

“வேண்டாம் ப்ரித்வி... விட்ருங்க... உங்க முகமே ஒரு மாதிரி


ஆகுது... உங்களுக்குஅதை நினைக்கிறதே அவ்வளவு
வலியைத் தருதுன்னா, கண்டிப்பா அதை என்கிட்ட சொல்லி
திரும்ப உங்க மனசை வருத்திக்க வேண்டாம்... நான்
தெரியாம கேட்டுட்டேன்...” அவனை நெருங்கி, அவனது கரம்
பற்றி, கஜா அவசரமாகச் சொல்ல, அவளது கரத்தின்
ஸ்பரிசமே, அவனது மனதுக்குத் தேவையான ஆதரவைத் தர ,
அவளது கையைப்பிடித்து, அருகில் இழுத்துக் கொண்டு,
அவன் பட்ட அவமானங்களைச் சொல்லத் தயாரானான்.

கவிதைகள் தொடரும்....

 கவிதை - 10
ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைத் தானடா
தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா
தேங்கி போன ஓர் நதியென இன்று நானடா
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே
தன்னந்தனி காட்டில் இன்று காண வாடா
சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப் போக

காலம் இன்று காதல் நெஞ்சை கீ றிப் போக…..

ப்ரித்வி தன்னைப் பற்றிச் சொல்லத் தயாராக, கஜாவின்

பார்வை, அந்த சுற்றுப்புரத்தை அளவிட்டது. யாரும் இல்லை


என்பதை உறுதி செய்து கொண்டவள், “ஆள் நடமாட்டம்

இருக்காதுன்னு தானே இந்தப் பக்கம் வந்தது... நல்லவேளை

அது மாதிரி யாரும் இல்ல...” என்று நிம்மதியுடன் மூச்சு

விட்டவள், ப்ரித்வி கையில் தன் கையை நன்றாக

பொருத்திக்கொண்டு, அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

“உனக்கு டைம் ஆச்சுன்னா.. நீ போ...” அவன் சொல்லவும்,

“இல்ல.. முல்லை இங்க நிக்கறாளான்னு பார்த்தேன்...” என்று

சமாளித்தவள், “சொல்லுங்க ப்ரித்வி... சொன்னா உங்க

மனசுக்கும் கொஞ்சம் இதமா இருக்கும்...” அவனை

ஊக்கினாள்.

“என்னை பார்த்தா பொறுக்கி மாதிரி இருக்கா?” அவன்

பீடிகைப் போடவும்,

“ச்சே... ச்சே... என்ன கேள்வி இது ப்ரித்வி... அன்னைக்கு நான்

கார்ல ஏறினதுல இருந்தே, நீ ங்க தப்பா ஒரு பார்வை, தப்பா

ஒரு பேச்சு... இந்த மாதிரி ஏதும் உங்க கிட்டேர்ந்து

இல்லையே... ஒருநாள் முழுக்க ஒரு அழகான பொண்ணு

உங்க கூட வந்துட்டு இருக்கும் போதும்... அந்த மாதிரி


நினைப்பே இல்லாம இருக்கறது எவ்வளவு பெரிய விஷயம்

தெரியுமா... உரசிப் பார்க்காம, பார்வையாலேயே

முழுங்காம... நீ ங்க சரியான சாமியார் ப்ரித்வி... அதெல்லாம்...


நீ ங்களே ‘நானே வில்லன் நானே வில்லன்’னு நீ ங்க

சொல்லிட்டு திரிஞ்சா தான் உண்டு.... நீ ங்க என்ன இப்படி

கேட்கறீங்க?” அவள் குறும்புடன் விளையாட்டாய் விளக்கவும்,

ப்ரித்வி லேசாக புன்னகைக்க, அவனது புன்னகையைக்

கண்டவள், நாக்கை கடித்துக் கொண்டாள்.

“என்ன செய்ய... இந்த சாமியார் மனசும், உங்க பெண் குலம்

கொடுத்த பரிசு தான்..” ஒருமாதிரியான குரலில் அவன்

சொல்லவும்,

“ஏன் ப்ரித்வி... என்னாச்சு? யாரையாவது லவ் பண்ணி...”

அவசரமாக அவள் கேட்டாலும், இறுதியாக அந்த

வார்த்தையை முடிக்க முடியாமல் அவள் நிறுத்த, ப்ரித்வியோ

அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தான்.

“இப்போ மாதிரி முன்ன எல்லாம் நான் ரொம்ப சிடு சிடுன்னு

பேச மாட்டேன்... அதுக்குன்னு சிரிச்சும் பேச மாட்டேன்... எங்க


அப்பா அம்மாவின் மறைவோட எனக்கு சிரிப்பும்

மறந்திருச்சுன்னு தான் சொல்லணும்... நான் உண்டு என்

வேலை உண்டுன்னு போய்கிட்டே இருப்பேன்... அப்போ தான்

நான் கம்பெனி தொடங்கி, வளர்ந்துட்டு வர சமயம்...” அவன்

சொல்லத் தொடங்கவும்,
“ஹ்ம்ம்... அப்பறம்...” அவனது மனநிலையை மாற்ற, அவள்

கதை கேட்பது போல பாவனை செய்ய, அவளது தலையில்

வலிக்காமல் கொட்டியவன், அவளை முறைக்க,

“ப்ரித்வி இஸ் பேக் டு ஃபார்ம்...” அவள் சிரித்துக் கொண்டே

கிண்டலடிக்கவும்,

“சரி... அப்போ சொல்ல வேண்டாம்ன்னு சொல்ற... நான்

கிளம்பவா?” அவனும் விளையாட்டாகவே கேட்கவும்,

அவளது முகம் பட்டென்று சுருங்கியது.

“இல்ல சொல்லிட்டே போங்க... இன்னும் கொஞ்ச நேரம்...”


அவனிடம் இருந்து தன்னுடைய கைகளை விலக்காமலே

அவள் கேட்கவும், மனதில் முளை விட்டிருந்த காதல், அவளை

விடாமல் பிடித்து வைக்கத் தூண்டியது.

“கூடிய வரை பொண்ணுங்களை வேலைக்கு சேர்க்காம தான்

இருந்தேன்... ஆனாலும்... கொஞ்சம் வளர வளர, ஆபீ ஸ்ல


அக்கௌன்ட்ஸ் வேலைக்கு எல்லாம் அவங்கள போட்டா
பொறுப்பா இருப்பாங்கன்னு சொல்லி, என்னோட மேனேஜர்,

சேர்த்தார்... அதுல தான் எனக்கு பி.ஏ. வேணும்னு

சொல்லியிருந்த போது, அவளும் வந்தா...” அந்த பெண்ணின்

பெயரைச் சொல்லாமல், ‘அவள்’ என்று சொல்வதற்கே,

ப்ரித்விக்கு வெறுப்பாக இருக்க, அவனது குரலில் இருந்த

வெறுப்பை புரிந்துக் கொண்ட கஜா, கண்ணை மூடித் திறந்து

அவனை அமைதிப் படுத்தினாள்.

“வந்தவ கொஞ்ச நாள் வரைக்கும் எல்லாம் நல்லா தான்

இருந்தா... ஆனா, நாளாக ஆக, ஏதோ ஒரு மாற்றம்

தெரிஞ்சது... அது என்னன்னு அப்போ எனக்கு உணர முடியல...

வேலை வேலைன்னு என்னோட கவனம் மொத்தமும், என்

கம்பெனிய வளர்க்கறதுல மட்டுமே இருந்ததால, அதெல்லாம்

கவனிக்கிற நிலையிலயும் நான் இல்ல...

ஆனா, அவமானப்பட்ட பிறகு தான் எல்லாமே நல்லா

புரிஞ்சது... எல்லார் முன்னாலையும் கூனிக் குறுகி

நின்னேன்... அவ்வளவு கேவலமான பிறவிய நான் பார்த்ததே

இல்ல...” அவன் சொல்லவும், கோபத்தில் அவனது தாடை

இறுக, கோபத்தைக் கட்டுப்படுத்த தன் கை முஷ்டிகளை

இறுக்கினான்.
அவனது கையில் சிக்குண்டு இருந்த கஜாவின் கை வலிக்க,

“ப்ரித்வி... எதுக்கு இவ்வளவு கோபம்...” அவனிடம்

வார்த்தையில் கேட்டாலும், முகத்தில், அவன் இறுக்கியதின்

வலி தெரிய, அவளது கைகளை விட்டவன்,

“ஹ்ம்ம்... அவளும் நானும் ரொம்ப நெருக்கம்ங்கற மாதிரி

ஆபீ ஸ்ல எல்லார்கிட்டயும் செய்திய பரப்பி இருக்கா...

அதைவிட, அவ சொல்றதைத்தான் நான் கேட்பேங்கற மாதிரி…

ஒரு போலியான நம்பிக்கையை, மத்தவங்க மத்தில அவ

உருவாக்கி இருக்கா... ஆபீ ஸ்லயும், நான் வேலையை

மட்டுமே கவனிச்சு... மத்தவங்க கிட்ட அதிகம் பேசாம

இருந்ததுனால, இதெல்லாம் எனக்கு தெரியாம போச்சு... அது

தான் எனக்கு பெரிய பிரச்சனைய உருவாக்கிடுச்சு..” ப்ரித்வி

சொல்லவும், கஜா என்ன என்பது போல பார்க்க,

“நான் ஆபீ ஸ்ல, யாருக்கும் அவங்க முகத்தைப் பார்த்து, குட்

மார்னிங்க்கு பதில் சொல்ல மாட்டேன்... அதனால

அவங்களோட பார்வையும், இந்த மாதிரி ஒரு பேச்சு

உலவுதுங்கற செய்தியும் எனக்கு தெரியாமயே போச்சு...

அதைவிட, இவ வெளிய எங்கயாவது தங்கும் போது

எல்லாம்... என் கூட தங்கறதா சொல்லி இருக்கா....

எல்லார்கிட்டையும்,‘வேலை இருக்கு, சார் என்னை ஓவர்


டைம் பார்க்கச் சொல்லி இருக்கார்’ன்னு சொல்லி... ஆபீ ஸ்ல

எல்லார் மத்திலையும் என் இமேஜை டேமேஜ் பண்ணி,


எல்லாரும் என்னை ஒரு உமனைசரா வேடிக்கைப் பார்த்து

இருக்காங்க...

ச்சே... நாங்க நெருக்கமா இருக்கற மாதிரியான ஒரு

போட்டோவை வேற அவ ஆபீஸ்ல காட்டி... வாய் கூசாம

எப்படி அப்படி எல்லாம் சொல்லத் தோணிச்சோ....” அவன்

சொல்லிக் கொண்டே வர, அவன் குரலில் ஏறிக்கொண்டிருந்த

கோபம், கஜாவிற்கு நன்றாக புரிந்தது.

“எல்லாத்துக்கும் மேல நான் இந்த மாதிரி டிசைன் பண்ண

தனிமையை தேடி போன போது... இவளும் லீவ் போட்டுட்டு

யார் கூடவோ ஊர் சுத்தி இருக்கா.. ஆனா, அத என் கூட தான்

ஊரைச் சுத்தப் போன மாதிரி சீன் கிரியேட் பண்ணி, நான்

ஊருல இருந்து திரும்பின உடனே, வட்ல


ீ போய், ‘நான்

அவளை நம்ப வச்சு ஏமாத்திட்டேன்... அவளை யூஸ்

பண்ணிக்கிட்டு, இப்போ கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு’


சொல்லிட்டேங்கற மாதிரி சொல்லி அவங்க அப்பா நேரா

ஆபீசுக்கு வந்துட்டார்....

அன்னிக்கு ஒரு கிளையன்ட் மீ ட்டிங்... அதுவும், பாம்பேல

இருந்து, ஒரு கார் ரேசிங் கம்பனி, என்னோட ரேஸ் கார் மாடல்

பிடிச்சுப் போய், அதுக்கான அக்ரிமெண்ட் சைன் பண்ண


வந்திருந்தாங்க... அந்த மீ ட்டிங் நடந்துட்டு இருந்த போது,

நாகரீகமே இல்லாம, அவங்க அப்பா, மீ ட்டிங் ரூமுக்குள்ள

வந்து, என் காலரை பிடிச்சு தூக்கினார்...” இப்போதும் அதைச்

சொல்லும் போது, வலியும், அவமானமும் போட்டிப் போட்டு

கொண்டு முகத்தினில் பிரதிபலிக்க, அவன் சொல்லவும்,

அவளை அறியாமலே, தனது கையை எடுத்து, அவனது

கன்னத்தில் ஆறுதலாக வைத்து அழுத்தினாள்.

“எல்லார் முன்னாலையும்... அதுவும் கிளைன்ட்ஸ் இருக்கும்

போது... யாருன்னே தெரியாத ஒருத்தர் இப்படி வந்து நடந்து

கொள்ளவும், எனக்கு ஒண்ணுமே புரியல... என்னன்னு நான்

கேட்டதுக்கு, என்னை கன்னத்துல அறைஞ்சு... சட்டைய

பிடிச்சு வெளிய இழுத்துட்டு போய்... கன்னா பின்னான்னு

சத்தம் போட்டு.... அசிங்கப்படுத்தி... என்ன நடக்குதுன்னே

புரியாம... எனக்கு எப்படி இருந்திருக்கும்.... இதுல நான்

அவளை ஏமாத்தி, அவ கர்ப்பமா இருக்கான்னு வேற

ஒரு கதை... பொம்பளைப் பொறுக்கி.... குடிகாரன்...

இன்னும் என்ன என்னவோ கெட்ட வார்த்தைகள்...

அதுக்கு சாட்சி சொல்றதுக்கு ரெண்டு பேர், எங்க ஆபீஸ்ல

வேலை செய்யறவங்களே முன்னால வந்து நின்னாங்க...

‘சார்.. நீ ங்களும் அவங்களும் ஒருத்தரை ஒருத்தர்

விரும்பறீங்க தானே... நெருங்கி பழகின ீங்க தானேன்னு


கேட்டு.. அவளோட அப்பாவின் ஆத்திரத்துக்கு நல்லா தூபம்

போட, நான் சொல்ல வரதைக் கூட கேட்காம, அவர் பண்ணின

கூத்துல அந்த கான்ட்ராக்ட்டே கை விட்டு போச்சு...

ஒரு பொய்னால, எல்லார் முன்னாலையும் எவ்வளவு

அசிங்கப்பட்டு இருப்பேன்... அதுவும் நான் செய்யாத தப்புக்கு,

ஆபீ ஸ்ல வேலை செய்யறவங்க முன்னால அடிவாங்கி...

அசிங்கப்பட்டு... கேவலமான வார்த்தைகள் எல்லாம் கேட்டு...

எனக்கு எப்படி இருந்திருக்கும்... எல்லாத்துக்கும் மேல, அவ

கூலா வந்து... ‘என்னை கல்யாணம் செய்துக்கோ... அதைத்


தவிர இப்போஉனக்கு வேற வழி இல்ல’ன்னு சொல்லிட்டு

போறா...

எல்லாரும் என்னை ஆபீ ஸ்ல எப்படி பார்த்தாங்க தெரியுமா?

இப்படி கேவலமா... பொண்ணுங்களை ஏமாத்தறவனா நான்?

பல பெண்களை தேடித் போற ஆளா... ஒரு பெண்ணு

மேலயாவது என் விரல் நகம் பட்டிருக்குமா? ச்சே...

இதெல்லாம் சொல்ல வாய் கூசல... ஒரு ஆளோட தன்னையே


சம்பந்தப்படுத்தி சொல்லிக்கறோமேன்னு உடம்பு கூச

வேண்டாம்...

ஆபீ ஸ்ல என்னால தலை நிமிர்த்து நடக்க முடியல...

எவ்வளவு அவமானம்... செய்யாத தப்புக்கு சிலுவை

சுமந்தேன்... அப்போ தான், என்னோட மேனேஜரும்,


ராமண்ணாவும் வந்து, ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி பத்தி

சொல்லி... அவங்களுக்கு தொடர்புடைய ஒரு போலீஸ்காரர்

நம்பரைத் தந்தாங்க... அவங்ககிட்ட இவளோட

நடவடிக்கைகள் எல்லாத்தையும் கண்டுபிடிக்க சொல்லி,

போலீஸ் மூலமா... அவ வாயில இருந்தே உண்மைய வர வச்சு

தான், என்னை நிரூபிச்சேன்...

அதுக்கு எடுத்துக்கிட்ட ஒரு வாரமும்... எப்படி நரகமா

இருந்துச்சு தெரியுமா? வெளிய முகம் காட்ட முடியாம,

வட்டுக்குள்ளேயே
ீ அடைஞ்சு கிடந்தேன்...” அவன் சொல்லிக்

கொண்டே போகவும், அவனது கையை ஆதரவாக

அழுத்தியவள்,

“இப்படி கூட இருப்பாங்களா ப்ரித்வி... அதுல அவளுக்கு என்ன

சந்தோசம் கிடைச்சது? உங்களுக்கு எவ்வளவு கஷ்டமா

இருந்திருக்கும்... நீ ங்க அந்த மாதிரி நபரா இருந்தா கூட

பரவால்ல...” அவனது துன்பத்தை தன்னுடைய துன்பமாக

எடுத்துக் கொண்டு அவள் கேட்க,

“ஹ்ம்ம்... ரொம்ப கஷ்டமா இருந்தது லக்ஷ்மி...

யார்கிட்டையும் எதையும் சொல்ல முடியாம... எல்லாரோட

சந்தேகப் பார்வையையும் எதிர்கொள்றது இருக்கே... அதுவும்,


என்னை ஒரு பெண் பித்தனா மத்தவங்க பார்க்கற கேலிப்

பார்வை... அதைவிட, ஆளாளுக்கு வந்து, திருந்தச் சொல்ற


அட்வைஸ்.... தப்பே செய்யாம அதைத் தாங்கறது ரொம்ப

கஷ்டம்...” என்றவனை,

“அப்பறம் என்னாச்சு ப்ரித்வி... அவங்களை என்ன செய்தீங்க?”

லக்ஷ்மி கேட்க,

“ஒருவாரத்துல, அந்த ஏஜன்சி கண்டுபிடிச்சு சொன்னதைக்

கேட்டு நான் ஆடிப் போயிட்டேன்....” அவன் சொல்வதற்குள்,

“அப்படி என்ன சொன்னாங்க?” அவசரமாக அவள் கேட்கவும்,

“அன்னிக்கு வந்தது அவங்க அப்பாவே இல்லையாம்.. என்

கம்பெனியை இழுத்து மூடறதுக்காகவே வந்தவளாம் அவ...

என்னோட போட்டி கம்பெனியோட ஆளாம் ரெண்டு பேரும்...

என்னோட அந்த பாம்பே ப்ராஜெக்ட்டைக் கெடுக்கவே, ரெண்டு

பேரும் சேர்ந்து இப்படி டிராமா போட்டு, செய்த சதின்னு தெரிய

வந்தபோது எனக்கு எப்படி இருந்திருக்கும்...

அது என்னோட ட்ரீம் ப்ராஜெக்ட்... அதுக்காக நான் ரெண்டு

வருஷமா நிறைய மாடல்ஸ் டிசைன் பண்ணி... அதுல

பெஸ்ட்ன்னு தோணற காரை நானே ஓட்டியும் காட்டி, அந்த

ப்ராஜெக்ட் ஓகே ஆகி, அக்ரிமெண்ட் சைன் பண்ண

வரும்போது... அதைக் கெடுக்க இப்படி ஒரு சதித் திட்டம்

நடந்ததைத்தான், என்னால இப்பவும் ஜீரணிக்க முடியலை...


அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், அவளை ஆபீஸ்லயே வந்து

கைது செய்யவும், ஆபீஸ்ல இருக்கறவங்களுக்கு உண்மை

புரிஞ்சிடுச்சு... எல்லாரும் வந்து என்கிட்ட மன்னிப்பு

கேட்டாங்க... ஆனா, அந்த பாம்பே ஆர்டர் போனது போனது

தான்...

அந்த கம்பனி சீஃப் ரிலேஷன்ஸ் ஆபீசர், மெனக்கெட்டு வந்து

எனக்கு ஃப்ரீ அட்வைஸ் வேற கொடுத்துட்டு போனான்...


அதைவிட எனக்கு வேற என்ன அசிங்கம் இருக்க முடியும்

சொல்லு...” அந்த நாள் நினைவில், அவனது உடல் இரும்பாக

இறுக,

“என்ன சொன்னான்?” அவனது கன்னத்தை வருடிக் கொண்டே

கேட்கவும்,

“பொண்ணுங்க சகவாசம் இருக்கறது எல்லாம்

தப்பில்லையாம்... ஆனா, இப்படி வெளிய தெரியற அளவுக்கு

இருக்கறது தான் ரொம்ப தப்பாம்... சொல்லிட்டு போனான்...

எப்படி இருந்திருக்கும்...” இன்னமும் அதன் ரணம் ஆறாமல்

அவன் பேச, கஜாவோ என்ன சொல்வதென்றே புரியாமல்

நின்றாள்.

அவர்கள் இருவரும் மனம் விட்டு பேசிக் கொள்ளட்டும் என்று

ஒதுங்கி இருந்த ராமண்ணா, அவள் பதில் சொல்லாமல்


நிற்கவும்,

“நிஜமா லக்ஷ்மிம்மா... இதுவரை அவர் எந்த பொண்ணையும்

ஏறெடுத்து பார்த்ததில்ல... இந்த மாதிரி ஒரு அபாண்ட பழி

வந்ததே ரொம்ப கொடுமை... அதுலயே தம்பி ரொம்ப

நொறுங்கி போயிட்டாரு...” அவரும் வருத்தத்துடன்

சொல்லவும், கஜா ப்ரித்வியை கண் இமைக்காமல் பார்த்துக்

கொண்டிருந்தாள்.

“சரி... விடு... இதனால தான், உன்னை பார்த்த உடனே தப்பா

பேசினேன்... வேற ஒண்ணும் இல்ல... அவளை போலீஸ்கிட்ட

ஒப்படைச்சதுல இருந்து... ஆபீ ஸ்ல பொண்ணுங்களையே

வேலைக்கு வைக்கிறது இல்ல... அப்படி ஒரு அலர்ஜி

ஆகிடுச்சு...” அவன் சொல்லவும், மெலிதாக புன்னகைத்தவள்,

“நான் கூட நீ ங்க ஆகற மூட் அப்செட்டையும், கோபத்தையும்

பார்த்து, ‘ஏதாவது பெண்ணை நம்பி காதல் தோல்வி ஆகி

இருக்குமோ?? இல்ல கதைகள்ல வர ஹீரோ மாதிரி,


பொண்ணுங்க கூட கெட்ட பழக்கம் இருக்குமோன்னு எல்லாம்

நான் பயந்துட்டு இருந்தேன்... சப்பா ப்ரித்வி... என் வயித்துல

பாலை வார்த்த சாமி...” மனதினில் அவனிடம் பேசிக்

கொண்டிருக்க,

“என்ன பதிலே சொல்ல மாட்டேங்கிற...” ஒரு மாதிரிக் குரலில்


ப்ரித்வி கேட்கவும்,

“இந்த பாறைக்குள்ளையும் இவ்வளவு அவமானமும்,

ஏமாற்றங்களும் இருக்கும்னு யாருக்குத் தெரியும்? உங்களை

ரொம்ப சீண்டிட்டேனா?” வருத்தமாக அவள் கேட்க, தனது


கன்னத்தில் இருந்த அவளது கையை மேலும் அழுத்திக்

கொண்டவன், அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.

இருவரின் கண்களும் பிணைந்து நிற்க, ப்ரித்வியின்

பார்வையில், தன்னைத் தொலைக்கத் தொடங்கியவள்,

“ப்ரித்வி...” என்று மென்குரலில் அழைக்கவும், அந்தக் குரலில்

இருந்த மயக்கத்தில், மெல்ல கலைந்தவன், தன்னை

நிலைப்படுத்திக் கொண்டு,

“சரி லக்ஷ்மி... உனக்கு நேரமாச்சு... நீ உள்ள போ... முல்லை

ரொம்ப டென்ஷனா இருப்பா... நீ வந்துட்டேங்கற விஷயத்தை

அவளுக்கு போன் செய்து சொல்லிடு...” அடுத்து செய்ய

வேண்டியவைகளை அவன் சொல்லவும், அவளின் பார்வை

ஏக்கமாக மாறியது.

கஜாவின் பார்வை மாற்றத்தை உணர்ந்தவன், “உன் மாமாவை

கல்யாணம் செய்துக்கிட்டு சந்தோஷமா இரு லக்ஷ்மி...

குடியை நிறுத்த, நிறைய மையங்கள் இருக்கு... அன்பாலயே

சொல்லித் திருத்தலாம்.. சரியா?” மூச்சை இழுத்துப் பிடித்துக்


கொண்டு அவன் சொல்லவும், காஜாவிடம் அமைதி குடி

கொண்டது.

“என்னாச்சு லக்ஷ்மி?” எதுவும் புரியாதது போல அவன்

கேட்கவும்,

“உங்களுக்கு நிஜமாவே எதுவும் புரியலையா? இல்ல

புரியாதது போல நடிக்கறீங்களா? நடிச்சு என்ன ஆகப் போகுது?


அதனால இழக்கப்போறது என்னன்னு உங்களுக்கு

புரியலையா?” வருத்தமும், ஏக்கமும் போட்டிப் போட,

பெண்களுக்கே உரித்தான நாணம், அதற்கு மேல் அவளை

உடைத்துப் பேச விடாமல் தடுக்க, அவள் திணறிக் கொண்டு

நிற்கவும்,

“எனக்கு என்ன புரியாம இருக்கு? எல்லாம் புரியுது?

வாழ்க்கையோட நிதர்சனமே வேற.... உனக்கு நிச்சயம் ஆகி...

இதோ கொஞ்ச நாள்ல கல்யாணமும் ஆகப் போகுது...

அதனால பீ ஹாப்பி... விஷ் யூ எ வெரி ஹாப்பி மேரீட் லைஃப்

லக்ஷ்மி... போயிட்டு வா...” கல்லூரி கேட் வாயிலைக் காட்டி,

அவன் சொல்லவும், இதற்கு மேல் அவனிடம் என்ன

பேசுவதென்று புரியாத லக்ஷ்மி, மனதின் வலி கண்களில்

தெறிக்க அவனைப் பார்த்தாள்.

கிராமத்திலேயே பிறந்து வளர்ந்து, சுட்டிப்பெண்ணாக

இருந்தும், அவனிடம் காதலை யாசிக்க அவளது குணம்


அணை போட, “ப்ரித்வி...” அவள் அழைத்த குரலிலேயே,
அவளது ஏக்கம் தயக்கம் அனைத்தும் அவனுக்கு

விளங்கினாலும், தன்னுடைய உறுதியை விடாமல் இருக்கப்

போராடினாலும், அவனது இதயமோ அவளைப் பிரிவதை

எண்ணி உடையத் தொடங்கி இருந்தது.

“லக்ஷ்மி... போயிட்டு வா...” அதற்கு மேல் அவள் இருந்தால்,


தன்னுடைய உறுதியில் இருந்து இறங்கி விடுவோமோ என்று

அஞ்சியபடி, அவன் நகர முற்பட, அவனை விட்டு விலக

முடியாமல், கால்கள் ஆணியடித்தார் போல, செயலற்று

நின்றிருந்தாள், கஜா....

“ஐயோ ஒரு சின்னப் பெண்ணை சலனப்படுத்தரியே ப்ரித்வி..”

அவனது மனம் இடிந்துரைக்க, “வரேன்...” ஒற்றைத்

தலையசைப்புடன் வேகமாக அங்கிருந்து நகர எத்தனித்தான்.

“அவ்வளவு தானா?” பரிதாபமாக அவள் கேட்க,

“நீ ரொம்ப சின்ன பொண்ணு லக்ஷ்மி... எனக்கும் உனக்கும்

ஒத்து வராது... என்னோட வாழ்க்கை முறையே வேற...

உன்னோடது வேற... என்னால உன்னை சந்தோஷமா வச்சுக்க

முடியும்னு எனக்கு தோணல... நீ சந்தோஷமா இருக்கணும்

லக்ஷ்மி... எப்பவும் என் வாழ்க்கையில நெருங்கின உறவுகள்

எதுவுமே நிலைக்காது லக்ஷ்மி.. நான் ஒற்றை ஆளா இருக்கத்


தான் லாயக்கு...” டக்கென்று திரும்பியவன், சொல்லிவிட்டு,

காருக்குள் ஏற, அனைத்தையும் கையாலாகாத தனத்துடன்

ராமண்ணா பார்த்துக் கொண்டிருந்தார்.

கார் கிளம்பும் வரை அவனையே வெறித்துக் கொண்டிருந்த

கஜலக்ஷ்மி, உள்ளே செல்ல மனமில்லாமல், அங்கேயே

நின்றிருந்தாள். அவள் வர நேரமாவதை உணர்ந்த முல்லை,


அந்த கேட் வழியாக அவள் வந்து விட்டாளா என்று எட்டிப்

பார்க்க, எங்கேயோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த

கஜலக்ஷ்மி அவள் கண்ணில் பட்டாள்.

“அடிப்பாவி பயபுள்ள... இதெல்லாம் உனக்கே அநியாயமா

இல்ல... நீ வந்தியா வரலையான்னு தெரியாம, நான் இங்கன

கிடந்து தவிச்சிட்டு இருக்கேன்... இங்க நின்னு சொகுசா

வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கியோ? இதெல்லாம் நல்லா

இல்ல சொல்லிட்டேன்...” அவளைத் திட்டிக் கொண்டே,

பிடித்து இழுக்க, கஜாவோ, அவளைப் பார்க்காமல், கண்களில்

வழிந்த கண்ண ீருடன், ப்ரித்வியையே பரிதாபமாக பார்த்துக்

கொண்டு நின்றாள்.

“உள்ளே போ...” என்பது போல ப்ரித்வி கையசைக்க,

“மாட்டேன்..” என்பது போல, கஜா மறுப்பாக

தலையசைக்கவும்,
“யார பார்த்து இப்படி தலையசைக்கிற... உனக்கு மூளை கீ ளை

கெட்டுப் போச்சா என்ன?” முல்லை கேட்டுக் கொண்டே, அவள்

பார்த்துக் கொண்டிருந்த திசையைப் பார்க்க, கையசைப்புடன்

ப்ரித்வியின் கார் கிளம்பவும், கஜலக்ஷ்மி குலுங்கி அழத்

தொடங்கினாள்.

“என்னடி என்னாச்சு? அவர் ஏதாவது தப்பா பேசிட்டாரா?”

முல்லை பதறிக் கேட்கவும், ‘இல்லை’ என்று மறுப்பாக

தலையசைத்த கஜலக்ஷ்மி, ப்ரித்வியை தன் கரங்களில்

பிடித்து, தன் நெஞ்சோடு வைத்துக் கொள்வது போல

செய்யவும்,

அதனைப் பார்த்த முல்லை... என்னவாக இருக்கும் என்பது

புரிய... “கஜா...” என்று அதிர்ந்தாள்.

கவிதைகள் தொடரும்....

 கவிதை – 11
எனது எல்லாவற்றிலும்
உன்னை இருத்திக் கொண்டதால்
நீ விட்டுப் போகும்
பிரிவின் தடங்களில்
என் ஒட்டு மொத்த
சந்தோசமும் தொலைந்தே போகக்

காண்கிறேன்!!

ப்ரித்வியின் கார் கிளம்பவும், கஜாவின் கண்களில் இறங்கிய

கண்ண ீரைக் கண்ட முல்லை அதிர, “எனக்கு அவர் கூடவே

போகணும் போல இருக்கு முல்ல... அவர் போகும்போது,


என்கிட்ட இருந்து எதையோ பிரிச்சு எடுத்துட்டு போற மாதிரி

இருக்குடி... இங்க ஒரு மாதிரி வலிக்குது முல்ல...” என்று

நெஞ்சைத் தொட்டுக் காட்டி அவள் சொல்ல, முல்லையோ

பேந்த பேந்த விழிக்கத் தொடங்கினாள்.

“ஏன் எனக்கு இப்படி எல்லாம் இருக்கு? நான் அவரை விட்டு

பிரிய முடியாம தவிக்கிறேன் தானே...” ப்ரித்வியின் பிரிவு தந்த

வலி மொத்தத்தையும் கஜா வார்த்தையால் கொட்டத் துவங்க,

“கஜா... கஜா... என்ன சொல்ற? என்னடி இப்படி எல்லாம்

பேசற?” முல்லை அதிர்ந்து கூவினாள்.


“அவருக்கு யாருமே இல்ல முல்ல... மனசுல அவ்வளவு

சோகத்தை வச்சுக்கிட்டு இருக்கார்... யாருகிட்டயும் மனசு

விட்டு, சிரிச்சு கூடப் பேசாதவர், என்கிட்டே பேசினார் முல்ல...

அவரைப் பத்தி எல்லாத்தையும் சொன்னார்... என்னால

அவருக்கு எந்த ஆறுதலையும் தர முடியலையே முல்ல... நான்

என்ன செய்வேன்... இப்போ அவர் கூட அப்படியே போயிடவா?

நான் உன் கூட வந்தாலும்... என் உடம்பு மட்டும் தான் வரும்..

உசுரு அவரையே தான் சுத்தும்...” மேலும் அவளது கூவலைக்

கூட கவனியாமல், கஜா பேசிக் கொண்டே போகவும், முல்லை

அவளைப் பிடித்து இழுத்தாள்.

“என்ன பேசறேன்னு புரிஞ்சுத் தான் பேசறியா? உனக்கு பரிசம்

போட்டு கல்யாணம் நிச்சயம் ஆகிருச்சு... உன்ற மாமன் அங்க

வெளிய வந்து காத்துட்டு இருக்காங்க... உனக்கும் அவருக்கும்

அடுத்த வாரம் கல்யாணமாம்... அதே மேடையில, அஞ்சு


நிமிஷம் பொறுத்து எனக்கும் எங்க மாமாவுக்கும்

கல்யாணமாம்... அதைச் சொன்னா... நீ அப்படியே


போயிருவன்னு தான் நான் அந்த விஷயத்தை சொல்லாம

விட்டேன்... வாய மூடிக்கிட்டு உள்ள வா..” அவளை இழுத்துக்

கொண்டே அவள் சொல்ல, கஜா அதிர்ந்து, அவளை

வெறித்துப் பார்த்தாள்.

“திடீர்ன்னு இவளுக்கு புதுசா ஏதோ காதல் வந்திருச்சாம் இல்ல


காதல்... கால ஒடிச்சு அடுப்புல வச்சா.. வந்த காதல்

சொல்லாம கொள்ளாம புழக்கடைப் பக்கமா ஓடிப் போய்ரும்...


மொதல்ல ஊருக்கு போய் நம்ம மாரியாத்தா கோவில்ல

வேப்பிலை அடிக்கணும்... ஏதோ பேய் வந்து பிடிச்சிருக்கு...


அதுனால தான் என்னோட உசுர காவு வாங்க என்ன எல்லாம்

செய்ய முடியுமோ செய்யற...” புலம்பிக் கொண்டே, முல்லை

கேட்டில் நுழையவும், கஜா அவள் கையில் இருந்து தன்

கையை உருவிக் கொண்டாள்.

“அப்போ, எனக்கு இப்போ உடனே கல்யாணம் செய்யப்

போறாங்கன்ற விஷயம் உனக்கு ஏற்கனவே தெரியும், அப்படித்

தானே...” வெறுத்த குரலில் கஜா கேட்க,

“ஆமா... தெரியும்... நேத்து நானும் நீ யும் பேசிட்டு இருந்த

போது... கூப்பிட்ட உங்க மாமா, அப்பறம் உன்னை கூப்பிடவே

இல்ல தானே... நான் தான்... அது எங்கயாவது

பேசும்போது,கல்யாண விஷயத்தை உளறி வச்சிடப்

போகுதுன்னு.. ‘இப்போ நீ ங்க பேச வேண்டாம்... அவ தூங்கி

போயிட்டா’ன்னு சொல்லிட்டேன்...

அப்பவும் விடாம, ‘எங்க கல்யாண விஷயத்தை கஜா கிட்ட


உடனே சொல்லணும்’னு ஒத்தைக் காலுல அண்ணே

நின்னுச்சு... ‘வேண்டவே வேண்டாம்... கஜா ஊருக்கு வந்ததும்

கல்யாண விஷயத்தை சொல்லி, அவளை ஆச்சரியப்பட


வச்சுக்கலாம்’ன்னு சொல்லிட்டேன்... உன் மாமனும் சரின்னு

சொல்லிருச்சு...” அவள் மேலும் தொடரவும்,

“அப்போ என் மனசை பத்தி உனக்கு எந்த கவலையுமே

இல்லையா முல்ல.. அந்த ஆளைப் பத்தி தெரிஞ்சும்... நீ இந்த


கல்யாணத்தை எனக்கு நடத்தியே தீரணும்னு கங்கணம்

கட்டிக்கிட்டு திரியற.. அதைப் பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை

சொல்லல... ஏன் முல்ல?” ஏமாற்றம், வருத்தம் அனைத்தும்

கலந்த கலவையான குரலில் அவள் பரிதாபமாகக் கேட்க,

“என் உசுர காப்பாத்திக்கத் தான்...” பட்டென்று முல்லை

சொல்லவும், கஜாவிற்கு அழுகையும் ஆத்திரமும் பொங்கி

எழுந்தது.

“பின்ன.. நேத்தேஇதைச்சொல்லி இருந்தா... இந்த


நேரங்கெட்ட நேரத்துல கூட நீ அடிச்சு பிடிச்சு ஓடி

வந்திருப்பியா? இன்னும் ரெண்டு நாளைக்கு பிறகு தானே

வந்திருப்ப... இங்கப் பாரு... எனக்கு என் மாமனோட

கல்யாணம் நடக்கணும்... உனக்கு பேசி வச்சிருக்கற படி, உன்

மாமனோட கல்யாணம் நடந்தே தீரும்... இது தான் நம்ம ஊரு

வழக்கம்... அதை மீ றிப் போனா, மாரியாத்தா குத்தமாகிரும்...

இப்போ அந்த சாரைப் பார்க்கலைன்னா... விதியேன்னு உன்

மாமனைத்தான் கல்யாணம் செய்துட்டு இருந்திருப்ப இல்ல...

இப்போவும் அதையே செய்... அவரை மறந்திரு... உன் உசுரைக்


காப்பாத்திக்க” தீர்மானமாக பேசியபடி, அவளை

ஹாஸ்டலினுள் இழுத்துக் கொண்டு செல்ல, அவள் பேசுவதை

கேட்ட கஜாவோ, அவள் ஏமாற்றியதை நினைத்து,

‘முல்லையா இப்படி!!’ என்று மரத்த நிலையில், இழுத்த

இழுப்பிற்கு நடந்தாள். 

“காதலாம் கத்திரிக்காயாம்... ஊரைப் பத்தி தெரிஞ்சும்,

பேசறா பாரு பேச்சை... எல்லாத்தையும் இந்த ஊரோட தலை

முழுகிட்டு வந்திரு...” முல்லை பொருமிக்கொண்டே வர,

“முல்லை நீ யா இப்படி பேசற?” தனக்கு அவள் துணை


இருப்பாள் என்ற நம்பிக்கை பொய்த்துப் போனதில் கஜா

அதிர்ச்சியுடன் கேட்க,

“ஆமா... நான் தான்... வாய மூடிக்கிட்டு வா...” என்று அவளை

அதட்டி ரூமுக்குள் இழுத்துக் கொண்டு நடந்தவள்,

“என்ன உடுப்பு போட்டுட்டு இருக்க கஜா? நம்ம ஊர்க்காரங்க

யார் கண்ணுலயாவது பட்டிருந்தியானா, உன்னை பிடிச்சு

வேப்பிலை அடிச்சிருப்பாங்க..” என்று சொல்லிக் கொண்டே,

அவளுடைய புடவையை எடுத்து அவளிடம் நீ ட்டி,

“குளிச்சிட்டு வா கஜா.. சீக்கிரம் வந்து தலையில பூவை

வச்சிட்டு கிளம்பு..” முல்லை சொல்லவும், தொப்பென்று

கட்டிலில் அமர்ந்தவள்,
“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்... நீ என்ன பேசிட்டு

இருக்க? எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்... நான் செத்து

போயிருவேன்னு சொல்றேன்... நீ பாட்டுக்கு கல்யாணம்

கருமாதின்னு பேசிட்டே போற... நேத்தே கடல்ல விழப்

போனேன்... அவர் தான் என்னை காப்பாத்தி, அடிச்சு

இழுத்துட்டு வந்தார்...” கோபமாக அவள் சொல்ல,

“என்னது சாக போனியா? அறிவிருக்கா உனக்கு? அங்க


உனக்கு ஏதாவது ஆகி இருந்தா நான் என்ன கதி ஆகி

இருப்பேன்... ஊருல இருக்கற எல்லாருக்கும் என்ன பதில்

சொல்லி இருப்பேன்?” மீ ண்டும் முல்லை தொடங்கவும், கஜா

வெறுப்புடன் அவளைப் பிடித்து இழுத்தாள்.

“உன் கதி... உன் உசுரு... உன்னுது... உன்னுது... உன்னுது

தானா... ச்சே... நீ இந்த அளவுக்கு சுயநல பிசாசா இருப்பன்னு

நான் நினைச்சுக் கூட பார்க்கல முல்ல... உனக்கு உன்

மாமனோட கல்யாணம் ஆகணும்... நான் எப்படி சீரழிஞ்சுப்

போனாலும் உனக்கு ஒண்ணும் இல்ல அப்படித் தானே...

எனக்காக நீ எதுவும் செய்ய வேண்டாம்... உனக்காக நான்

செய்யறேன்...

கூட பழகின பாவத்துக்கு நான் உனக்காக செய்யறேன்.... வா...

நான் குளிச்சிட்டு கிளம்பறேன்... ஊருக்கு போய் அந்த வணா



போனவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டு சாவறேன்..”

கோபமாக கூறிக்கொண்டே, அறையில் இருந்த

குளியலறைக்குள் புகுந்தவள், அதே வேகத்துடன், குளித்து

முடித்து, புடவையை உடுத்தத் துவங்கினாள்.

கண்களில் மட்டும் வற்றாமல் கண்ண ீர் ஊற்ற, அப்பொழுதும்

அசையாமல் இருந்த முல்லையை திரும்பிப் பார்த்தவள், “நீ

பிள்ளை குட்டியோட சந்தோஷமா இரு... நான் அவனோட

மாரடிச்சே செத்துப் போறேன்...” மீ ண்டும் கஜா தொடங்கவும்,

“என்னடி... என்னடி பேசிட்டே போற? என்னைப் பார்த்தா

உனக்கு சுயநலவாதியா தெரியுதோ? ஏண்டி இப்படி செய்யற?

எனக்கு உயிர் வாழணும்னு நிறைய ஆசை இருக்குடி... ஆனா,

நம்ம ஊரைப் பத்தியும், நம்ம ஊர் கட்டுப்பாட்டை பத்தியும்,

நம்ம மக்களைப் பத்தி தெரிஞ்சும் நீ இப்படி பேசறியே? என்னை

நீ புரிஞ்சிக்கிட்டது அவ்வளவு தானா கஜா? நீ

கஷ்டப்படுவேன்னு தானே இவ்வளவும் சொல்றேன்... நம்ம

ஊர்ல ஒரு காதல் கல்யாணமாவது நடந்திருக்கா? கொஞ்சம்

யோசிச்சியா?

சரி... எல்லாம் விடு... அந்த சார்... அவர் பேர் என்ன?” முல்லை

கேட்கவும்,

“ப்ரித்வி” ஒற்றை சொல்லில் அவள் பதில் சொல்ல, அதிலேயே


அவளது கோபம் என்னவென்று புரிந்துக்கொண்ட முல்லை,

தன்னையும் நிதானத்திற்கு கொண்டு வந்தாள்.

“அவரு உன்னை விரும்பறாரா?” அவள் கேட்கவும்,

“வாய் விட்டு சொல்லல... ஆனா, எனக்குத் தெரியும்... என்

மனசு சொல்லிச்சு...” எங்கோ பார்த்துக் கொண்டு கஜா பதில்

சொல்ல,

“ஹ்ம்ம்... உன் மனச கொண்டு போய் முருங்கை மரத்துல

வைக்க... காக்கா கொத்திட்டு போகட்டும்... ஏண்டி அறிவு

இருக்கா உனக்கு? உன் மனசு சொல்லுச்சாம்... அப்படி

இருந்தா... அவர் உன்னை இந்த சூழல்ல கொண்டு வந்து

தள்ளிட்டு போவாரா? சும்மா ஏதோ நட்பா பழகி இருக்கலாம்

இல்ல... அதை எப்படி உடனே காதல்ன்னு சொல்றது? அதுவும்

பார்த்த ஒரே நாளுல காதல் வந்துச்சாம்... அவனவன் பல

வருஷம் பழகியும் ஏமாத்திட்டு போறானுங்க... இவளுக்கு

ஒரே நாளுல காதல் வந்துச்சாம்... கதை கேட்க நல்லாத்தான்

இருக்கு...” நொடித்துக் கொண்டவளைப் பார்த்த கஜா, அவளை

தன் புறம் திருப்பி,

“என்ன முல்லை, கதைன்னு சொல்லிட்ட... எனக்கு அவரைப்

பிடிச்சிருக்கு... அவருக்கும் என்னை ரொம்ப பிடிச்சிருக்கு...

அவரோட நிலையே வேற... உனக்கு சொன்னா புரியாது? உன்


மரமண்டைக்கு அந்த முத்து அண்ணே சொல்றது தான்

புரியும்...” கஜா கோபமாக சொல்ல,

“அது என்னனு சொல்லு... புரியுதா இல்லையான்னு

பார்ப்போம்...” விடாப்பிடியாக அவள் கேட்கவும், அவனை

முதல் நாள் சந்தித்ததில் இருந்து, அவனிடம் பேசியது, அவன்

தன்னிடம் சொல்லியது, அனைத்தையும் ஒன்றுவிடாமல் கஜா

சொல்லவும், முல்லை சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.

“இப்போ நான் சொல்ல வரது புரியுதா? அவரும் என்னை

விரும்பறார்... ஆனா, பொண்ணுங்க மேல உள்ள கசப்பு

அவரோட மனசை சொல்ல விடல...” ப்ரித்வியுடன் காலம்

காலமாக பழகியது போல் அவள் சொல்லவும், அவளைப்

பார்த்த முல்லை,

“’என்னை கூடவே கூட்டிட்டு போங்க, வேலை போட்டு

கொடுங்க போதும்’ன்னு சொல்லியும், அவர் பதில்

பேசலைன்னா, அவர் மனசுல அப்படி எதுவும் இல்ல...” அவள்

சொல்லவும், கோபமாக அவள் அருகில் வந்த கஜா,

“இப்படி... இதோ இப்படி தட்டி, என்னை ஆசையா பார்த்தது..”

அவள் உறங்கும் பொழுது, அவன் தலையணையை கொடுத்து,

தட்டியது போலவே அவள் செய்து காட்ட, மீ ண்டும்

முல்லையிடத்தில் அமைதி வந்தது.


“என்ன பேச்சே வரல...” நக்கலாக அவள் கேட்கவும்,

“அப்போ அவருக்கும் உன்னை பிடிச்சு இருக்கற மாதிரி தான்

இருக்கு...” என்று இழுத்தவள்,

“ஆனா... இப்போ எதுவும் செய்ய முடியாது கஜா... ப்ரித்வி


அண்ணா உனக்காக ஒரு கையையாவது அசைக்கலைன்னா

நம்ம ஒண்ணுமே செய்ய முடியாது... அவருக்கும் உன் மேலே

காதல் இருந்தா, உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்காம

வந்து கூட்டிட்டு போயிருவார்... ஆனா, அப்படி இல்லன்னா...

அவர் அவரோட வேலையைப் பார்க்க போயிருவார்... நீ உன்

விதியைத் தான் ஏத்துக்கணும் சரியா?” முல்லை அவளிடம்

கேட்கவும், கஜா அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

அதற்குள் முல்லையின் செல்போன் சிணுங்க, அதை

எடுத்தவள், “ஹ்ம்ம்... இன்னும் பத்து நிமிஷத்துல நாங்க

அங்க இருக்கோம் மாமா...” என்றபடி போனை வைத்தவள்,

“எல்லாரும் தயாரா இருக்காங்களாம்... உங்க மாமா டீ

கடையில உட்கார்ந்து குடிச்சு பினாத்திட்டு இருக்காராம்...

சீக்கிரம் நம்மள கீ ழ வர சொன்னாங்க...” என்றபடி, பையைத்

தூக்கத் துவங்கினாள்.

“அவர் கண்டிப்பா வருவாரு... என் மனசு சொல்லுது... வந்து


அந்த மாமன அடிச்சு நொறுக்கிட்டு, என்னை கண்டிப்பா

கூப்பிட்டுத்தான் போவாரு... நீ வேணா பாரு...” உறுதியாகக்

கூறியவள், கண்களைத் துடைத்துக் கொண்டு, தனது பையை


ஒவ்வொன்றாக கீ ழே எடுத்துச் சென்று வைக்கத்

துவங்கினாள்.

“ஹ்ம்ம்... உன் நம்பிக்கைய என்னத்தை சொல்ல..

பார்ப்போம்... விதி விட்ட வழி...” முல்லையும் சலித்துக்

கொண்டு, தனது பையை எடுத்துக் கொண்டு செல்ல, அவர்கள்

வந்த வேனில், பொருட்கள் ஏற்றப்பட்டது.

அனைவரிடமும் விடைப்பெற்று வெளியில் வந்த கஜாவைப்

பார்த்த அவளது மாமா பழனிவேலு, அவளது கையைப் பிடித்து

இழுத்தான்....

“என்ன மாமா இது?” கஜா கடுப்புடன், அவனிடம் இருந்து

கைகளை பிடுங்கிக்கொள்ள,

“என் செல்லம்... என் கண்ணு நீ ... எம்புட்டு அழகா இருக்க?

அதுவும் இந்த புடவையில... அசத்தற போ... நாம ஏன்

இன்னிக்கே கல்யாணம் செய்துக்க கூடாது... மாமன் மனசு

உனக்காக கிடந்தது தவிக்குதே...”

அவளிடம் பேசிக்கொண்டே, சிறு தள்ளாட்டத்துடன், அவளை


அணைக்க முயலவும், கஜா வெறுப்புடன் அவனிடம் இருந்து

விலக முயல,

“ஏலேய் பழனி... இது என்ன இது பட்டப்பகலுல... இத்தனை

பேருக்கு மத்தியில... எல்லாம் அடுத்த வாரத்துல இருந்து

தனியா நடத்திக்கோப்பா... அது என்ன வேணாம்ன்னா

சொல்லப் போகுது... அதுவும் உனக்குத் தானே ஏங்கிக் கிடக்கு”

கூட வந்திருந்த வயதானவர், ஹாஸ்யம் போல சொல்லிச்

சிரிக்க, கஜாவோ முள்ளின் மேல் நிற்பவளைப் போல நின்றுக்

கொண்டிருந்தாள்.

அந்த வயதானவர் சொன்னதையும் கேட்காமல், பழனி,

அவளது கன்னத்தை தொட்டுத் தடவ, “இப்போ பேசாம

இருக்கப் போறியா இல்லையா?” என்று கடுப்புடன் கேட்டுக்

கொண்டே, கஜா வேனில் ஏறவும், பழனியும், அவள் அருகில்

ஏறி அமர, வேன் அவர்கள் கிராமத்தை நோக்கி நகர்ந்தது....


கஜா முல்லையிடம் கண்ண ீருடன் பேசுவதைப் பார்த்த

ப்ரித்வியின் மனதில், சொல்ல முடியாத அளவிற்கு பாரம்

ஏறிக் கொண்டது. ‘இவ்வளவு வெறுப்புடன் ஒருவனைத்

திருமணம் செய்து கொண்டு அவளால் வாழ முடியுமா?” முதல்

கேள்வி இப்படியாக மனதினில் தொடங்க,

“என்னது... அவளுக்கு வேற ஒருத்தனோட கல்யாணமா?”

அவனது மனதினில் எழுந்த அதிர்வலையில், ப்ரித்வி துடித்துப்

போனான்.
“அவளே விரும்பாத வாழ்க்கைக்கு, நானே தள்ளி விட்டு

வந்திருக்கிறேனா? எனக்கு சொந்தமானவளை, நானே எப்படி

வேற ஒருத்தனுக்கு விட்டுக் கொடுக்க துணிஞ்சேன்?

அவளைப் பிரிந்து என்னால் வாழ முடியுமா? நானும்

இளைஞன் தானே... கிழவன் இல்லையே... வயதைக் காரணம்

காட்டி காதலைப் புதைக்க... அவளும் என்னை விரும்பும்

பொழுது, நான் ஏன் அவளை யாருக்கோ விட்டுக்

கொடுக்கணும்? சந்தோஷமாக வாழ வேண்டியவளை புதை

குழியில நானே தள்ளறேனே... இது அவளுக்கு நான் செய்யும்

துரோகம் தானே..” ப்ரித்வி புறப்பட்டு நூறு அடி நகர்வதற்குள்,

அவனது மனமே, அவளை விட்டுப் பிரிய மனமில்லாமல்,

ஆயிரம் கேள்விகளைக் கேட்க,

“ராமண்ணா... அங்க இருக்கற டீ கடையில... டீ குடிச்சிட்டு

போகலாம்...” என்று அவளது கல்லூரிக்கு எதிரில் இருந்த ஒரு

டீ கடையைக் காட்ட, ராமண்ணா அவனைத் திரும்பிப்

பார்த்தார்.

அப்பொழுதும் தன்னுடைய மனதை அவருக்கு காட்ட

மறுத்தவன், “என்ன ராமண்ணா... பசிக்குது... நைட்

சாப்பிட்டது...” வழக்கம் இல்லாத வழக்கமாக அவன் பசியை

பற்றி குறிப்பிடவும், அவனது மனநிலை புரிந்த ராமண்ணா,

காரை கடைக்குத் திருப்பினார்.


“இந்த இடத்துல கார் நிக்க வேணாம் ராமண்ணா... தூசா

போயிடும்... ட்ராஃபிக்குக்கு இடைஞ்சலா இருக்கும்...

அதனால அங்க ஓரமா எங்கயாவது நிறுத்திடுங்க...”

என்றவன், ஒரு பேப்பரை வாங்கிக் கொண்டு, இரண்டு டீயை

சொல்லிவிட்டு அமர்ந்தான்.

எந்த பதிலும் பேசாமல் காரை நிறுத்திவிட்டு ராமண்ணா

வரவும், அவருக்கும் ஒரு டீயை வாங்கிக் கொடுத்தவன்,

மெல்ல அதை உரிந்து குடிக்கத் தொடங்கினான்.

“இதுக்கு நேராவே அந்த பொண்ணுகிட்ட பேசி இருக்கலாம்...”

ராமண்ணா முணுமுணுக்க,

“நான் ஒண்ணும் அவளைப் பார்க்க உட்கார்ந்து இருக்கல..”

வராப்பாக
ீ அவன் சொன்னாலும், அவனது பார்வை, நொடிக்கு

ஒருதரம் அந்த பஸ் ஸ்டாப்பில் உள்ளவர்கள் மீ தும்,

கல்லூரியின் நுழைவு வாயிலின் மீ தும் படிந்து மீ ண்டது.

“ஹுக்கும்... கீ ழ விழுந்தாலும் மீ சையில மண்ணு

ஒட்டலைன்னு நல்லா நடிக்கிறார்...” ராமண்ணா மனதினில்

சலித்துக் கொள்ள, ப்ரித்வியின் முகம் சுருங்கியது.

அவன் வந்து அமர்ந்த பத்து நிமிடங்களில், அவனுக்கு எதிராக

ஒருவன் டீயும், மற்றொருவன் சாராயமும் குடித்துக்


கொண்டிருக்க, அந்த சாராயம் குடித்துக் கொண்டிருந்தவன்,

“என் பொண்டாட்டி வந்தான்னு வை... அவ பட்டு கன்னத்தை

தொட்டு நல்லா கொஞ்சணும்டா... அவ கலரும், அழகும்...

நம்மூரு பொண்ணுங்க எவளுக்காவது இருக்கா... எனக்கு

அடிச்சது பரிசு... அவ நம்ம டிவியில பார்க்கற சீதேவி தான்...”

என்று அவன் குடிபோதையில் உளற,

“ஆமா... ஆமா... கிளிய வளர்த்து பூனை கையில கொடுக்கறா

போல... உனக்கு பரிசம் போட்டாங்க பாரு... அவங்களைச்

சொல்லணும்... இனியாவது திருந்தி வாழ நினைக்க கூடாதா?

அவ நல்லா இருப்பாளே? அழகான பொண்ணை நம்மை

நம்பித் தராங்களே... அவ கூட சந்தோஷமா வாழ, நாம என்ன

செய்யலாம்ன்னு யோசிச்சு... இந்த கெட்ட பழக்கத்தை நிறுத்த

முயற்சி செய்யலாம் இல்லையா? அதெல்லாம் யோசிக்க

மாட்டியா? எப்போப் பாரு குடி... பொண்ணுங்க... ஏன் இப்படி

இருக்க பழனி...” அந்த மற்றொருவன் கேட்கவும், அவன் முன்

நின்று தள்ளாடியபடி எழுந்து நின்றவன்,

“அவளுக்காக நான் ஏன் இந்த சொர்கத்தை விடணும்? அவ

தான் நான் வேணும்னா இதெல்லாம் பொறுத்துக்கணும்...”

என்றவன்,

“நம்ம ஊருல எத்தனை பொண்ணுங்கள பார்த்திருக்கேன்...

எத்தனை பொண்ணுங்க கூட பழகி இருக்கேன்... இவளைப்


போல ஒரு தங்கக்கட்டி எனக்கு கிடைக்குமா? கல்யாணம்

ஆகட்டும்... வட்டை
ீ விட்டு அவளை வெளிய

அனுப்பறேனான்னு பாரு... ஊருல உள்ளவன் கண் எல்லாம்

அவ மேல தான்... அப்படியே முழுங்கற மாதிரி இல்ல

பார்க்கறாணுங்க... அதனால இனிமே வடு


ீ தான் அவ உலகம்...

அவ மட்டும் வெளிய வரட்டும்... கால உடைச்சு அடுப்புல

வச்சுப்புடறேன்...” அவன் சொல்லவும், ப்ரித்வியின் மனம்

துணுக்குற்றது....

அப்பொழுது அங்கு டீ குடிக்க வந்த ஒரு நடுத்தர வயது

பெண்மணியும், ஒரு வயதான பெண்மணியும், பேப்பர்


படித்துக் கொண்டிருந்த ப்ரித்வியை ஒரு மாதிரி பார்த்துக்

கொண்டே நின்றிருந்தனர். அவர்களின் பார்வையின்

பொருளை உணராத ப்ரித்வி, மீ ண்டும் பேப்பர் படிக்கும்

பணியைத் தொடர்ந்தான்.

ஆனால் அவர்களோ, ப்ரித்வியை விட்டு பார்வையை

அப்படியும் இப்படியும் அகற்றாமலே நின்றிருந்தனர். ஒருமணி

நேரம் இவ்வாறாக கடக்க, அந்த குடிமகனிடம்

பேசிக்கொண்டிருந்தவன், போனை எடுத்து, “முல்ல... இங்க

இவன் குடிச்சு குடிச்சே ஒருவழி ஆகிருவான் போல... சீக்கிரம்

வந்து சேருங்க...” என்று அவன் சொல்லவும், அது தான்


முல்லைக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்பது ப்ரித்விக்கு

தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.


“ஏலேய் பழனி... இங்கன நின்னு குடிச்சிட்டு இருக்கியே...

போய் உன் பொஞ்சாதிய கூட்டிக்கிட்டு வா... நேரத்தோட

ஊருக்கு போய் சேரலாம்... கல்யாண வேலை எல்லாம்

தலைக்கு மேல கிடக்கு...” அந்த வயதான பெண்மணி

சொல்லவும், ப்ரித்வியின் பார்வை, பழனியிடம் சென்றது.

“ஹையோ... நம்ம மனசுல தோணினா மாதிரி, இவன் தான்

கஜாவுக்கு பார்த்திருக்கற மாப்பிள்ளையா? என்ன கொடுமை

இது?” அவன் மனதினில் நினைக்க, அதே நேரம், மறுபடியும்

முல்லையின் மாமாவிற்கு போன் வரவும், அவசரமாக அவன்

எழுந்து கல்லூரிக்குள் சென்ற சில நிமிடங்களில், கஜாவும்

முல்லையும் வெளியே வந்தனர்.

அழகிய புடவை கட்டி, தளர பின்னலிட்டு வந்தவளை

ப்ரித்வியின் கண்கள் அளவெடுக்க, அதே நேரம் அந்த இரண்டு

பெண்மணிகளும், அவனைத் தான் அளவெடுத்துக்

கொண்டிருந்தனர்.

“தம்பி, லக்ஷ்மி அழுதுட்டே போகுது தம்பி...” ராமண்ணா

சொல்லவும், ‘ம்ம்’ என்று தலையசைத்தவன், பழனி, அவளை

தழுவ முயலவும், அவனை அடித்து நொறுக்கும் வெறியே எழ,

தன் கைகளை மடக்கி, தனது கோபத்தை கட்டுப்படுத்த

முயன்றான்...
கஜா வெறுப்பாக அவனை தள்ளி நிறுத்துவதையும், அவன்

அவளது கன்னத்தை தடவுவதையும் பார்த்தவனுக்கு, அவன்

உடம்பில் யாரோ தீயை வைத்தது போல எரியத் தொடங்கியது.


கஜா வேனில் ஏறிய சில நிமிடங்களில் வேனும் அங்கிருந்து

கிளம்பியது.

வேன் கண்ணை விட்டு மறைந்ததும், ப்ரித்வியின் மனதில்

“லக்ஷ்மி” என்று ஏழுந்த கூக்குரலில், மனதை மறைத்திருந்த

மெல்லிய திரையும் தயக்கமும் விலகி, எங்கேயும் கஜாவே

புன்னகைக்க, கண்களை மூடித் திறந்தவன், “எனக்கு லக்ஷ்மி

வேணும்... அவளை யாருக்கும் விட்டுத் தர மாட்டேன்” என்று

வலியுடன் முனகினான்.

கவிதைகள் தொடரும்...
 கவிதை – 12
ஒவ்வொரு நொடியும்
நீ எனக்கு மட்டுமே
என
உனது முக்கியத்துவத்ததை உணர்த்திய
இந்த வெறுமை நாட்கள்
இதோடு போதும்
என்று தோன்றுகிறது ..!

“எனக்கு லக்ஷ்மி வேணும்... நான் அவளை யாருக்கும் விட்டுத்


தர மாட்டேன்” என்ற ப்ரிதிவ்யின் முணுமுணுப்பு,

ராமண்ணாவின் காதில் தெள்ளத் தெளிவாக விழுந்தது.

அதைக் கேட்டவரின் மனதிலும் நிம்மதி பிறந்தது.

“தம்பி என்ன சொன்ன ீங்க?” என்று ஒன்றும் புரியாதவர் போல

அவர் மீ ண்டும் கேட்க,

“வாங்க ராமண்ணா... நாம போய் லக்ஷ்மியை கூட்டிக்கிட்டு

வந்துடலாம்... எனக்கு அவளை விட்டுவிட்டு வந்த இந்த ஒரு

மணி நேரமே இருக்க முடியல...” என்று அவன் சொல்லவும்,

அவனை ஒரு மாதிரிப் பார்த்தவர்,

“இருங்க தம்பி... அது, அந்த பொண்ணு நம்ம கூட ஒருநாள்

முழுக்க வந்துச்சு இல்ல... அதோட தாக்கமா இருக்கும்...

கொஞ்ச நேரம் போனா சரியா போயிரும்... இன்னும் ரெண்டு

வடை சாப்பிடறீங்களா?” ராமண்ணா மேலும் இரண்டு

வடையை எடுத்துக் கொண்டு, பொறுமையாக கேட்கவும்,

“என்ன ராமண்ணா? நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்?

நீ ங்க என்ன செய்துட்டு இருக்கீ ங்க?” கடுப்புடன் அவன் கேட்க,

“வடையை கடிச்சிட்டு இருக்கேன் தம்பி... அந்த பொண்ணு

ஏக்கமா பார்க்கும் போது எல்லாம் கல்லு மாதிரி நின்னுட்டு,

இப்போ இந்த புலம்பு புலம்பறீங்களே... அதை நினைச்சா


சிரிப்பு வருது...” அவர் சொல்லவும், ப்ரித்வி அவரை மேலும்

முறைக்க,

“இப்படித்தான தம்பி அந்த பொண்ணையும் முறைச்சீங்க...

அந்த பொண்ணும், இது தான் தன்னோட விதின்னு நினைச்சு

அந்த குடிகார மாமா கூட ஊருக்கு கிளம்பிருச்சு... நாம வேணா


இன்னும் ஒரு வாரம் இங்கயே பக்கத்துல எங்கயாவது தங்கி

இருந்துட்டு, அடுத்த வாரம் அந்த பொண்ணோட


கல்யாணத்துக்கு போயிட்டு ஆசிர்வாதம் செய்துட்டு

வரலாமா? என்ன செய்யலாம்ன்னு நீ ங்க தான்

சொல்லணும்...” நிதானமாகவே அவனை கிண்டல் செய்தவர்,


அவன் முறைப்பதையும் பொருட்படுத்தாது மெதுவாக

மெதுவடையை ரசித்து ருசித்து உண்டார்.

“எல்லாம் என் நேரம் ராமண்ணா... நீ ங்க கோவா பக்கம்

போகலாம்னு சொன்ன ீங்க... நான் தான் இந்த பக்கம்

போகலாம்னு சொன்னேன்... இப்போ இப்படி ஒரு

பொண்ணுகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கறேன்... எனக்கே என்ன

செய்யறதுன்னு தெரியல... ஒரு பக்கம்,‘அவ சின்ன

பொண்ணு... அவ வாழ்க்கைய வணடிக்காதே’ன்னு


ீ மனசு

சொல்லுது... ஆனா... இன்னொரு பக்கம் ‘அவளை

விட்டுடாதே’ன்னு சொல்லுது... நான் என்ன செய்யட்டும்?”

குழம்பத்துடன் அவன் கேட்கவும்,


“உங்களுக்கு என்ன தம்பி குறைச்சல்? ஏன் நீ ங்க அவ

வாழ்க்கைய வணடிக்க
ீ போறீங்க? உங்களை மாதிரி ஒருத்தர்

கிடைக்க லக்ஷ்மி கொடுத்து வச்சிருக்கணும்... எதுக்கு சின்ன

பிள்ளைன்னு எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கீ ங்க?

அவளுக்கும் கல்யாண வயசு வந்திருச்சு இல்ல... தேவை


இல்லாதாது எல்லாம் யோசிச்சு குழப்பிக்கிட்டு இருக்கீ ங்க

போலயே...” ராமண்ணா கேட்கவும், ப்ரித்வி ‘ஆம்’ என்று

தலையசைக்கவும்,

“சரியா போச்சு போங்க தம்பி... அது பாவம்... உங்களை

நினைச்சு மனசுல எவ்வளவு கஷ்டப்பட்டுகிட்டு போச்சோ?”

அவர் வருந்திச் சொல்லவும்,

“ஒரே நாளுல காதல் எல்லாம் வருமா ராமண்ணா? அதுவும்

ரெண்டு பேருக்குமே இப்படி வலிக்குமா என்ன? அதெல்லாம்

நினைச்சா இன்னும் குழப்பமா இருக்கு..” மேலும் அவனது

குழப்பதைச் சொல்லவும்,

“ஒருத்தரைப் பார்த்து, பிடிக்க, ஒரு நாள் என்ன, ஒரு மணி

நேரம் போதும் தம்பி... இதுல நீ ங்க ஒருநாள் முழுதும் சேர்ந்து

இருந்திருக்கீ ங்க... அதுவும் உங்களோட கோப முகத்தைப்

பார்த்தே அந்த பொண்ணுக்கு பிடிச்சிருக்குன்னா... தம்பி... இது

தான் விதி... அதுக்கு ஒரு நிமிஷம் போதாதா?” அவனுக்கு

புரியும்படி அவர் விளக்க, ப்ரித்வி அவரைப் பார்த்துச்


சிரித்தான்.

“எதுக்கு தம்பி சிரிக்கறீங்க?” புரியாமல் அவர் கேட்கவும்,

“இல்ல, காதலை பத்தி இவ்வளவு சொல்றீங்களேன்னு

நினைச்சேன்... இதே உங்க பொண்ணுங்க, என்னைப் போல

வயசானவனை விரும்பி இருந்தா, என்ன செய்திருப்பீ ங்க?”

விளையாட்டாகவே அவன் வினவவும்,

“ஏன் தம்பி... உங்களுக்கு என்ன வயசாகிடுச்சு? பாதி பேர்

இப்போ தானே கல்யாணத்தைப் பத்தியே யோசிக்காறாங்க...

நீ ங்க ஏன் தம்பி...” என்றவர்,

“நானே காதலிச்சு கல்யாணம் செய்துட்டு ஓடி வந்தவன் தான்

தம்பி... மொதல்ல தமிழ்நாட்டுல கொஞ்ச நாளு இருந்தோம்...

மிருதுளா பிறந்த பிறகு, பெங்களூருக்கு குடி வந்துட்டோம்...

அப்பறம் தான் உறவுங்க எல்லாம் ஏத்துக்கிட்டு, நெல்லூருக்கு

போக வர இருக்கோம்... அதுவும் பெரியவ டாக்டருக்கு

படிக்கிறான்னு, ஊர்ல எவ்வளவு பேர் பெருமையா பேசறாங்க

தெரியுமா? எல்லாம் உங்களால தம்பி...” முதலில்

சந்தோஷமாகத் தொடங்கியவர், பின்பு கனிவாக முடிக்க,

அதனை புன்னகையால் ஏற்றுக்கொண்டவன்,

“அப்போ, ஒரு பெண்ணை நம்பி என் வாழ்க்கைய


கொடுக்கலாம்ன்னு சொல்றீங்க...” அவன் கிண்டலாக

கேட்கவும்,

“ஆமாங்க தம்பி... வட்ல


ீ நமக்காக காத்திருக்க, ஒரு

பொண்ணு இருக்காங்கறதே பெரிய சுகம் தம்பி... வேலை

முடிஞ்சு களைச்சுப் போய் நம்ம வட்டுக்குப்


ீ போனா...
நம்மளைப் பார்த்த உடனே அவங்க முகத்துல வருமே ஒரு

பிரகாசம், ஒரு சந்தோசம்... அதுக்காகவே நாம களைச்சுப்

போகலாம்... அது ஒரு சுகம்... அதே போல... ‘ஏமண்டி பாவா..’

அப்படின்னு கூப்பிடும் போது..” அவர் ரசித்து சொல்லிக்

கொண்டிருக்கவும்,

“இவ என்னை ‘ஏண்டா மாமா’ன்னு இல்ல கூப்பிடுவா!!” அவர்

சொல்லிக் கொண்டு வந்ததில், ப்ரித்வி, தன்னையும்

கஜாவையும் இணைத்துப் பார்த்து, சிரிப்புடன் அவரிடம்

கூறவும்,

“ஆஹா தம்பி... உங்களுக்கு இந்த நினைப்பெல்லாம் வேற

இருக்கா? லக்ஷ்மி... அப்படி எல்லாம் சொல்லாது... ‘ஏண்டா

ப்ரித்வி’ன்னு ரொம்ப மரியாதையா தான் கூப்பிடும்...” அவரும்

சிரித்துக் கொண்டே, பதிலுக்கு பதில் பேசவும், இருவருமே

இணைந்து நகைத்தனர்.

“சப்பா... நேத்து காலையில இருந்து மனசுல அடைச்சுக்கிட்டு


இருந்தது, இப்போ தான் லேசான மாதிரி இருக்கு... நேத்து

அந்த பீ ச்ல கூட, எனக்கு நெஞ்சு வலி தான் வந்திருச்சோன்னு

நினைச்சு பயந்துட்டேன்...” அவன் சொல்லவும், அதைக் கேட்டு

சிரித்த ராமண்ணா,

“சரிங்க தம்பி... இப்போ தானே அவங்க ஊருக்கு கிளம்பி

போயிருக்காங்க... நீ ங்க ஒரு ஹோட்டல்ல ரூம் போட்டு ஒரு

மணி நேரம் தூங்கி ரெஸ்ட் எடுங்க... நேத்துல இருந்து நீ ங்க

சரியா தூங்கவே இல்ல... நான் காரை சுத்தம் செய்து

வைக்கறேன்... சாப்பிட்டு, மதியத்துக்கு மேல கிளம்பிப் போய்,

அவங்க வட்ல
ீ பெண் கேட்போம்... என்ன நான் சொல்றது

சரிதானே தம்பி..” ராமண்ணா அனுமதி வேண்டி நிற்க, அவரது

கண்களில் இருந்த உறக்கமும், முகத்தினில் தெரிந்த

சோர்வும், அவனை ‘சரி’ என்று தலையசைக்க வைத்தது.

இத்தனை நேரம் இருந்த கனத்த மனநிலையில் உணராத

உறக்கமும் சோர்வும், இப்பொழுது மனம் லேசான பொழுது

ப்ரித்விக்கும் நன்றாக உணர முடிந்தது.

“சரிங்க ராமண்ணா... ஒரு ஒரு மணிநேரம் நல்லா தூங்கி

எழுந்து, சாப்பிட்டு பிரெஷ்ஷா கிளம்பிப் போய் பொண்ணு

கேட்போம்... அப்படி அவங்க தரலைன்னா அவளை தூக்கிட்டு

வந்துடலாம்... நாளைக்கு காலையில எங்களுக்கு

கல்யாணம்...” ப்ரித்வி சந்தோஷமாகச் சொல்ல, அதே


சந்தோஷ மனநிலையில், ராமண்ணாவும், அருகே இருந்த

ஒரு லாட்ஜிற்கு வண்டியை ஓட்டினார்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்!!

வேன் கிளம்பிய சிறிது நேரத்தில், மதுவின் போதை அதிகமாக,

பழனி, கஜாவின் மீ து நன்றாக சாய்ந்து விழ, “ச்சே... கொஞ்சம்

கூட உனக்கு வெட்கமாவே இல்லையா? இப்படியா சாஞ்சு

விழுவ... அருவருப்பா இருக்கு... தள்ளி உட்காரு...” கஜா

அவனிடம் சிடு சிடுக்கவும்,


“ஏன்? அந்த பட்டணத்துக்காரன் கை, மேல பட்டப்ப மட்டும்

அப்படியே இனிச்சுதாக்கும்...” என்ற குரலில், கஜாவும்

முல்லையும் அதிர்ந்து, அந்த குரலுக்கு சொந்தக்காரப்

பெண்மணியை திரும்பிப் பார்த்தனர்.

மாலை மணி நான்கு...

காலையில் சுமார் பத்து மணியளவில் அறையை எடுத்து

தங்கிய ப்ரித்வி, காலையில் குடித்த டீ, மற்றும் உண்ட

வடையின் காரணமாக, வயிறு நிரம்பி இருக்க, நன்றாக

குளித்து உடை மாற்றிக் கொண்டு, கட்டிலில் விழுந்த அடுத்த

ஐந்தாவது நிமிடம் உறங்கியும் போனான்.

அவனது அசதியைக் கண்ட ராமண்ணா, “இப்படி அடிச்சு

போட்டாப்போல தூங்கறீங்க? இதுல, களைப்பையும் மீ றி,


அப்படியே நேரா அவங்க ஊருக்கு போகணும்னு

நினைக்கறீங்க? உங்களை என்ன சொல்றது?” என்று

கேட்டபடி, தானும் குளித்து, ஒரு தலையணையை எடுத்து

கீ ழே போட்டுக்கொண்டு நன்றாக உறங்கியும் போனார்....

இருவருமே நன்றாக உறங்கி இருக்க, முதலில் ராமண்ணா

தான் கண் விழித்துப்பார்த்தார். கண்கள் மசமசப்பாக தெரிய,

மணியைப் பார்க்க எண்ணி தனது கடிகாரத்தைப் பார்த்தவர்,

“பண்ணிரண்டு இருபது தான் ஆகுதா? தம்பி, மதியம் ரெண்டு


மணிக்கு சாப்பிட்டு கிளம்பலாம்ன்னு இல்ல சொன்னாரு...”

என்று தனக்குள் பேசிக் கொண்ட படி, ப்ரித்வியை ஒருமுறை

பார்த்துவிட்டு, அவன் அதே நிலையில் படுத்திருப்பதைக்

கண்டு, மீ ண்டும் கண்களை மூடிக் கொள்ள, அவரை நல்ல

உறக்கம் தனக்குள் இழுத்துக் கொண்டது.

நான்கு மணியை பண்ணிரெண்டு இருபதாக எண்ணிக்

கொண்டவர் , மீ ண்டும் விழிக்கும் பொழுது மணி எட்டை

கடந்துக் கொண்டிருந்தது.... “என்ன இது? ரொம்ப நேரம்

தூங்கினா மாதிரி இருக்கு... ஆனா இப்போ தான் பண்ணிரண்டு

நாற்பது ஆகுது...” என்று தனக்குள் புலம்பிக்கொண்டவர்,

மீ ண்டும் உறங்கத் துவங்க, அவரது செல்போன் விடாமல்

அடித்து ஓய்ந்தது.

ப்ரித்வியின் உறக்கம் கலையக் கூடாது என்ற பதட்டத்துடன்,

அவசரமாக செல்லை எடுத்தவர், அதில் ஒளிர்ந்த நேரத்தைப்

பார்த்து மேலும் பதட்டம் கொண்டார். “ஐயோ... மணி

எட்டாகுது... இருட்டி போச்சே... தம்பி இப்போ என்ன

சொல்லுவாரோ? இப்படி அசந்து தூங்கிட்டேனே...”

பதட்டத்துடன், தன்னை அழைத்த மகளிடம் அவசரமாக

பேசிவிட்டு, கையை பிசைந்துக் கொண்டு நின்றார்.

எப்படியும் எழுப்பித் தானே ஆக வேண்டும் என்று மனதினில்

நினைத்தவர், “தம்பி... தம்பி...” என்று எழுப்ப,


“என்ன ராமண்ணா... நல்லா தூங்கி எழுந்துட்டீங்களா? நான்

நடுவுல ரெண்டு முறை எழுந்து பார்த்தேன்... நீ ங்க அசந்து

தூங்கிட்டு இருந்தீங்க... சரின்னு எழுப்பாம விட்டுட்டேன்...

ரொம்ப தூரம் ஓட்டினதுல அசதி ஆகிருச்சோ?” அவன்

கண்களை கசக்கிக் கொண்டே கேட்கவும், அவனது அன்பில்

உள்ளம் நெகிழ்ந்து போனவர்,

“ஆமா தம்பி... அசதியில மணிய தப்பா பார்த்துட்டேன்...

அதனால தான்... மணி எட்டாகுது... இனிமே எப்படி அவங்க

கிராமத்துக்கு...” தயக்கமாக அவர் இழுக்க,

“அதனால என்ன ராமண்ணா... நாளைக்கு காலையில,

மீ னாட்க்ஷியம்மனை தரிசனம் பண்ணிட்டு, அப்பறம் அவங்க

ஊருக்கு கிளம்பலாம்... இப்போ போய் முகத்தை கழுவிட்டு

வாங்க... நாம போய் சும்மா கடை வதிய


ீ சுத்திப் பார்த்துட்டு,

அப்படியே சாப்பிட்டுட்டு வரலாம்...” அவன் இயல்பாக


பேசுவதிலேயே அவனது மனதின் இதத்தை

அறிந்துகொண்டவர், மேலும் எந்த பேச்சையும் வளர்த்தாமல்,

“சரிங்க தம்பி... இதோ ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்...”

என்று பரபரப்பாக கிளம்பி வந்தார்.

அவர் தயாரான பிறகு, ப்ரித்வியும் தயாராகி, கடை வதியை


சுற்றி வந்தனர். “ஏன் ராமண்ணா... நாளைக்கு,என்கிட்டே


இருக்கற பழைய டிரஸ்சையே நான் போட்டுக்கவா? இல்ல

புதுசு வாங்கவா?” அவன் கேட்கவும், தனக்குள் சிரித்துக்

கொண்டவர்,

“புதுசு வேணும்னா வாங்குங்க தம்பி... இப்போ அதுல என்ன

இருக்கு?” என்று கேட்டபடி, அருகில் இருந்த ஒரு

துணிக்கடைக்குள் அவனுடன் நுழைந்தார்.

“ஏன் ராமண்ணா... நான் இந்த மாதிரி ஷர்ட் தான்

வாங்கணுமா? இல்ல சின்ன பசங்க போடற மாதிரி டி-ஷர்ட்,

ஜீன்ஸ், அப்பறம் கேஷுவல் ஷர்ட் அதுபோல வாங்கவா?

இல்ல, நாம கிராமத்துக்கு போறோம்... பட்டு வேட்டி

சட்டையில போகலாமா?” மேலும் சிறு பையன் போல அவன்

கேள்விகளை எழுப்ப,

“உங்களுக்கு என்ன வயசாகுது தம்பி?” அவர் கேட்கவும்,

“எனக்கு முப்பத்தி இரண்டு ஆச்சே... அதனால தான்...” அவன்

இழுக்கவும்,

“முப்பத்தி ரெண்டு வயசையெல்லாம் வயசான லிஸ்ட்ல

சேர்த்தறீங்களே... அதை வேற நீ ங்க அடிக்கடி சொல்லிக்கிட்டு

இருக்கீ ங்க... அப்போ நான் எல்லாம்... இப்பவும் நான்

குடும்பத்தோட வெளிய போறதுன்னா, டி-ஷர்ட் ஜீன்ஸ் தான்


போடுவேன்... நீ ங்க என்ன தம்பி நீ ங்க...” அவர் சொல்லவும்,

நம்பிக்கைப் பெற்றவனாக, புதியதாக இரண்டு

ஜீன்ஸ்களையும், நான்கு டி-ஷர்ட்களையும் எடுத்துக் கொண்டு,


ட்ரையல் ரூமில் உள்ள கண்ணாடியில் தன்னையே

பார்த்துக்கொள்ள,

“நல்லா தான் இருக்கேன்... ஏன் இவ்ளோ நாளா எனக்கு இப்படி

வாங்கத் தோணலை?” என்ற யோசனையுடன் வெளியில் வர,

ராமண்ணா அசந்தே போனார்.

“தம்பி... இப்போ தான் உங்க வயசுக்கு ஏத்தா மாதிரி

இருக்கீ ங்க... இல்லன்னா, எப்போப் பாரு அந்த கோடு போட்ட

சட்டையும், பேன்ட்டும் போட்டுக்கிட்டு இருப்பீங்க... இது

உங்களுக்குரொம்ப நல்லா இருக்கு...” என்று சொல்லவும்,

மனதினில் மேலும் உற்சாகம் பெருக, துள்ளிக் குதிக்காத

குறையாக உற்சாகமடைந்தவன்,

“சரிங்க ராமண்ணா... அப்போ எதுக்கும் பட்டு வேஷ்டி

சட்டையும் எடுத்துக்கறேன்... அவங்க, ‘இதென்ன இப்படியா

வந்து பொண்ணு கேட்ப’ன்னு சொல்லிட்டா... என்ன

செய்யறது? எதுக்கும் கையில இருக்கட்டும்...” என்றவன்,

அதையும் வாங்கிக் கொண்டு வெளியில் வந்தான்.

அடுத்து பழக்கடைக்குச் சென்று, ஒரு கூடை நிறைய ஆப்பிள்


பழங்களையும், ஒரு கூடை நிறைய மாம்பழமும் வாங்கிக்

கொண்டு, “வெறும் கையோட போகக் கூடாது இல்ல...” என்று

அதற்கு ஒரு காரணமும் சொல்லிக் கொண்டான்.

அவனது பரபரப்பும், ஆர்வமும், ராமண்ணாவிற்கு சிரிப்பை

வரவழைத்தாலும், இதுவரை இருந்த, அவனது

உணர்வுகளற்ற தோற்றம் போய், இயல்பாக, தனது வாழ்வைப்


பற்றி நினைக்கும் முதலாளி புதிதாகக் கிடைத்ததில் மகிழ்ச்சி

கொண்டு, அவனுடன் கடைகளுக்குச் சென்றார்.

அடுத்த நாள் அவர்கள் வட்டிற்கு


ீ எடுத்துச் செல்ல வேண்டிய

அனைத்தையும் சேகரித்து, காரில் அடுக்கிய பின்னர்,

இருவரும் உணவை முடித்துக் கொண்டு, அறைக்குத்

திரும்பினர்.

காலையில் இருந்து மறந்துவிட்டிருந்த சிகரட்டை பற்ற

வைத்துக் கொண்டு, பால்கனியில் நின்றவன், முதல்

முறையாக நிலவை ரசிக்கத் தொடங்கினான். நிலவையும்,

கஜாவையும் ஒத்திட்டுப் பார்த்தவன், “நீ என் லக்ஷ்மிய விட

பொலிவு கம்மி தான்.. அவளோட படபட பேச்சே, அவளோட

முகத்துக்கு அழகுக்கு அழகு சேர்க்கும்... அவ பொய்

சொல்லும்போது அவளோட முகத்தைப் பார்க்கணுமே...”


என்று அவளை சந்தித்த நிமிடம் முதல் அனைத்தையும்

நினைத்துப் பார்த்தவன்,
“இவளைப் பார்த்து ஒரு நாள் தான் ஆகுதுன்னு யாராவது

சொன்னா... நம்ப முடியுமா? ரொம்ப நாள் பேசிப் பழகினா

மாதிரி இல்ல இருக்கு...” என்று மேலும் தனக்குள்ளே பேசிக்

கொண்டவன்,

“என் வாழ்க்கையில இனி சந்தோசம் மட்டுமே நிறைந்து

இருக்கும்... அவளோட விழிகள் சொல்ற கவிதைகளை

சந்தோஷமா படிச்சுக்கிட்டு, மனப்பெட்டகத்துல சேர்த்து

வைப்பேன்...

நான் அநாதை இல்ல... எனக்கு என் லக்ஷ்மி இருக்கா... நான்

கூப்பிட்ட உடனே என்கூட வரப் போறா... அவளோட

சந்தோஷமாக வாழ்ந்து, நிறைய பிள்ளைக் குட்டி பெத்து,

அதுங்களை அவ கூட சண்டை போட வைக்கணும்...”

அவனுடைய கனவுகள் நீ ண்டுக் கொண்டே போக.....

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்!!!

கவிதைகள் தொடரும்....

 கவிதை – 13
உன் பொல்லாத நினைவுகளுக்குள்
என்னை பூட்டி எடுத்துக் கொண்டு
எங்கோ காணமல் போய் விட்டாய்
எதைத் தொலைத்தேன்
எனத் தெரியாமல்
உன்னை மட்டுமே
தேடிக் கொண்டிருக்கிறேன்!!
காலையில் எழுந்தவுடன், நேராக பால்கனிக்குச் சென்றவன்,
அந்த இளம்காலைப் பொழுதை நிதானமாக ரசிக்கத்

தொடங்கினான். இதற்கு முன் இருந்த அதே வானம் தான்..

இன்று ஏனோ அழகாகக் காட்சியளித்தது... இந்த நாள்,

தனக்கான நாள் என்பது மனதினில் புதுத் தெம்பை அளிக்க,

தனது செக்கரெட்டரியை அழைத்து, அன்றைய அலுவலக

நிலவரத்தைப் பற்றி விசாரித்தவன், மெயில்களை

பார்த்துவிட்டு, குளிக்கச் சென்றான். அவனது முகத்தில் அப்படி

ஒரு பொலிவும், சந்தோஷமும் போட்டிப் போடுவதைப் பார்த்த

ராமண்ணாவின் மனதிலும் நிம்மதி பிறந்தது.

குளித்து முடித்து, மீ னாட்க்ஷி அம்மன் கோவிலுக்கு

சென்றவர்கள், காலை உணவை முடித்துக் கொண்டு,

கஜாவின் ஊருக்குச் செல்ல தயாரானார்கள்...

ப்ரித்வியின் பரிதவிப்பும், அவனது படபடப்பும் புதிதாக இருக்க,

“ஏன் ராமண்ணா... வயசு வித்தியாசத்தை பெருசா சொல்லி,

மறுப்பு சொல்லிற மாட்டாங்க இல்ல...” அவன் மீ ண்டும்

தொடங்கவும்,

“அவங்க பொண்ணு கொடுக்கலைன்னா தூக்கிட்டு

வந்துடலாம்ன்னு நீ ங்க தானே சொன்ன ீங்க... அதையே


செய்துடலாம்...” என்று சாதாரணமாகச் சொன்னவர்,

“உங்களைப் பார்த்தா ராஜா மாதிரி இருக்கு தம்பி...

அதெல்லாம் மறுப்பு சொல்ல மாட்டாங்க... உங்களுக்கு என்ன

குறை?” சிறுபிள்ளைத் தனமாக அவனுக்குத் தோன்றிய

சந்தேகங்கள் அனைத்தையும், அவன் கேட்டுக் கொண்டே வர,


அவனது அத்தனை சந்தேகங்களுக்கும் பொறுமையாக

ராமண்ணா பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.

இறுதியாக, “எனக்கு பிரஷர் அதிகம் ஆகி இருக்குமோ

ராமண்ணா... நெஞ்செல்லாம் படபடன்னு இருக்கே....

அப்படியே வெடிச்சிரும் போல இருக்கே?” என்ற அவனது

கேள்விக்கு, பக்கக் கண்ணாடி வழியாக பார்த்தவர், தனது

செல்போனை எடுத்து, தனது மகளுக்கு அழைத்தார்.

“அம்மா டாக்டர்... இங்க சார்க்கு நெஞ்செல்லாம் வெடிக்கும்

போல இருக்காம்... கொஞ்சம் என்னன்னு கேளு...” என்றபடி,

போனை அவனிடம் கொடுக்க,

“என்ன ராமண்ணா... படிக்கிற பொண்ணுகிட்ட போய் நான்

இதை எப்படி சொல்லுவேன்...” என்று கேட்டபடியே போனை

வாங்கியவன்,

“ஒண்ணும் இல்ல டாக்டர்... ராமண்ணா என்னை கிண்டல்


பண்ணறார்... என்னவோ ஒரு மாதிரி படபடப்பா இருக்கு... அது

தான் பிரஷர் அதிகமாகிருக்குமோன்னு கேட்டேன்... உடனே

போனை போட்டு கொடுத்துட்டார்...” அவன் சிறிது

சங்கோஜத்துடன் சொல்லவும், அவனது குரலில் எப்பொழுதும்

இருக்கும் இறுக்கம் குறைந்து இருந்ததிலிருந்து,

ராமண்ணாவின் மகளுக்கு விஷயம் புரிந்துவிட்டதோ..... ஆக

அவள் கூறிய கிண்டலான பதிலில்,

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல டாக்டர்... எனக்கு அவளை

ரொம்ப பிடிச்சிருக்கு...” என்றவன்,

“அவளுக்கும் என்னை பிடிக்கும் இல்ல... அது தான் ஒரு மாதிரி

நெர்வஸா இருக்கு... பிரஷர் ஏறி நெஞ்சு வெடிச்சிரும் போல

இருக்கு...” என்று கூறவும், அவள் கூறிய பதிலில்,

புன்னகையுடன் போனை வைத்து,

“டாக்டர் என்னை கிண்டல் செய்யறா ராமண்ணா... என்னைப்

பார்த்தாலே ஓடி ஒளியற பொண்ணு... என்னையே இப்போ

கலாய்க்கிறா... ஆல் தி பெஸ்ட்டாம்... அண்ணியோட

வரணுமாம்...” அழகிய புன்னகையுடன் அவன் சொல்லவும்,

சிரித்துக்கொண்ட ராமண்ணா, அவனது மாற்றங்களை

குறித்துக் கொண்டே, வண்டியை கஜாவின் கிராமம் நோக்கி

செலுத்தினார்.
கஜலக்ஷ்மி, முல்லை இருவரின் கிராமமும்,
இராமநாதபுரத்தில் இருந்து ஒன்றரையில் இருந்து இரண்டு
மணி நேரப் பயணமாக உள்ளே சென்றால் இருக்கும் ஒரு

கிராமம்....

அன்று கஜா கோபத்துடன் காட்டிய கல்லூரி அடையாள

அட்டையின் வாயிலாக, அவளது பெயரையும், கல்லூரியின்

பெயரையும் வைத்து, மதுரையில் தனக்குத் தெரிந்த ஒரு

டீலரின் மூலமாக, ஒரு டிடெக்டிவ் ஏஜென்சியிடம் கூறி,

அவளைப் பற்றி விசாரிக்கச் சொல்ல, ஒரே இரவில் அந்த

ஏஜென்சியும் விசாரித்துச் சொன்னதில், அவளைப் பற்றிய

விவரங்களான, அவளது ஊர், மாமாவின் பெயர், அவள்

அடிக்கடி புலம்பும், அவனது குடிப்பழக்கம் என

அனைத்தையும், மேலும் அவள் தங்கி இருந்த ஹாஸ்டல்

வார்டனிடம் விசாரித்து, அவளது முகவரியையும் ஏஜென்சி

வாயிலாக ப்ரித்வி பெற்றிருந்தான்.

அந்த முகவரியை ராமண்ணாவிடம் கொடுத்தவன், அடுத்து

என்ன என்று யோசித்து, திருமணத்திற்கு பின் கஜாவுடன்

நேரம் செலவழிப்பதற்கு ஏதுவாக, இப்பொழுதே சில

முக்கியமான வேலைகளை முடிக்க எண்ணி, லேப்டாப்பில்

தனது வேலையை செய்துக் கொண்டு வந்தான். கார் மாடலை

வரைந்து, அதை அதற்கான சாப்ட்வேரில் இயக்கும் பொழுது,

அது சுற்றியும், குதித்தும் வருவதைப் பார்த்தவன், கஜா கேட்ட,


‘என்ன விளையாடிக்கிட்டே வரீங்க?’ என்ற கேள்வி அவனை

புன்னகைக்க வைத்தது.

‘ஒரே நாளுல என்னை இப்படி அடியோட மாத்திட்டியே

லக்ஷ்மி..” என்று நினைத்தவன், அதற்கு மேல் வேலையைத்

தொடர முடியாமல், லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு,

அவளுடன் கழித்த அந்த ஒருநாளை, மீ ண்டும் தனது

மனதினில் ஓட்டிப்பார்த்தான்.

அவளது நினைவுகளுடனே, ஊரும் வந்து சேர்ந்தது... “தம்பி

இராமநாதபுரம் வந்திருச்சு தம்பி... இங்க இருந்து அந்த

ஊருக்கு எப்படி போறதுன்னு, அந்த டீக்கடையில டீ குடிச்சிட்டு

கேட்டுட்டு வரலாம் தம்பி..” அவர் சொல்லவும்,

“அதுக்குள்ள ஊர் வந்திருச்சா? ரொம்ப பக்கம் தான் போல...”

அவன் பதில் சொல்லவும், அவனை ஏற இறங்கப் பார்த்தவர்,

“ஒரே நாளுல இவ்வளவு முத்திப் போகும்ன்னு நான்

எதிர்ப்பார்க்கலை தம்பி... அஞ்சு மணி நேரமா நாம பயணம்

செஞ்சு வந்திருக்கோம்... அதைப் போய் ரொம்ப பக்கம்ன்னு

சொல்றீங்க?” என்று கேட்டவர், டீயை சொல்லிவிட்டு, அந்த

ஊரைப் பற்றி விசாரிக்க, பலர், அப்படி ஒரு ஊர் இருப்பதே

தெரியாது என்ற பதிலையே தந்தனர்.


“என்ன ராமண்ணா இது? யாருக்குமே தெரியாதுன்னு

சொல்றாங்க?” ப்ரித்வி சந்தேகமாகக் கேட்கவும்,

“இருங்க தம்பி... அங்க இருக்கறவங்க கொஞ்சம் கிராமத்து

ஆள் மாதிரி இருக்காங்க... அவங்க கிட்ட கேட்டுப்

பார்ப்போம்...” என்று சொல்லி, அவரிடம் கேட்க, அவர் அந்த

ஊருக்கு போகும் வழியை, அவர் கைக் கட்டுவதில் இருந்தே,

தூரத்தில் இருந்தாலும் ப்ரித்விக்கு தெரிந்தது.

“ஒருத்தருக்காவது தெரிஞ்சிருக்கே ராமண்ணா... வாங்க

போகலாம்...” ப்ரித்வி அவசரப்படுத்தவும்,

“இல்ல தம்பி... இவரும் அதுக்கு கொஞ்சம் முன்னாடி இருக்கற

ஊர் வரை தான் வழி சொல்லி இருக்கார். அங்க இருந்தும்

கொஞ்சம் உள்ள போகணும் போல... அங்க போய்

கேட்டுக்கோங்கன்னு சொல்லிட்டார்...” அவர் சொல்லவும்,

ப்ரித்வி தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

“என்னாச்சு தம்பி...” அவர் கேட்கவும்,

“இல்ல... இப்படி பல பேருக்கு அந்த ஊருக்கே வழி தெரியாத

ஒரு கிராமத்துல இருந்து ஒருத்தி வந்து.... என்னை முழுசா

மாத்தி, இப்படி அலையை விடறாளே ராமண்ணா...” அவன்

சிரிப்புடன் சொல்லவும்,
“இன்னிக்கு லக்ஷ்மியைத் தேடி கண்டுபிடிக்காம விடறதா

இல்ல...” என்றவர், அந்த வழியில் பயணமானார். மேலும் ஒரு

மணி நேரத்திற்கு பிறகு, அவர்கள் கூறிய இடம் வர,

அங்கேயும் விசாரித்துக் கொண்டு, கஜாவின் ஊரை நோக்கிச்

சென்றனர்.

மாட்டுவண்டி மட்டுமே செல்லக் கூடிய, அந்த கிராமத்து

சாலையில், ப்ரித்வியின் கார் செல்ல, வழியில் போவோர்

வருவோர் எல்லாம் காரை வேடிக்கைப் பார்த்தனர்.

‘எங்க அப்பா கார் போச்சுன்னா எங்க ஊரே வேடிக்கைப்

பார்க்கும் தெரியுமா?’ என்ற அவளது கூற்று நினைவிற்கு வர,

‘எல்லா காரையும் தான் உங்க ஊர்க்காரங்க வேடிக்கைப்

பார்க்கறாங்க...’ என்று அவன் மனதினில் செல்லமாக

நொடித்துக் கொண்டான்.

சிறிது தூரம் சென்ற பிறகு, வண்டி பல குழிகளில் ஏறி இறங்க,

“ராமண்ணா... சஸ்பென்ஷன் போயிரும் போல இருக்கே...”

அவன் கிண்டலாகக் கேட்க,

“இல்ல தம்பி...” என்று சிரித்தவர், “ஒரே பள்ளமா இருக்கு...

போறாததுக்கு நேத்து மழை வேற பெய்திருக்கும் போல...

எங்க குழி இருக்குன்னே தெரியல... ஒரே சேறு...” ராமண்ணா

பதில் சொல்லிக் கொண்டே, வண்டியை ஆமை நகரும்


வேகத்தில் உருட்டிக்கொண்டு சென்றவர், ஊர் எல்லையில்

இருந்த ஒரு கோவிலின் முன்பு வண்டியை நிறுத்தினார்.

வண்டியைப் பூட்டிவிட்டு, அவர்கள் மெல்ல ஊருக்குள் நடக்க,


புதியதாக இரண்டு மனிதர்கள் ஊருக்குள் வந்திருப்பதைக் கூட

பொருட்படுத்தாமல், அப்படி ஒருவர் வருவதே தெரியாதது

போன்று, அவர்களை கடந்து சென்றவர்கள் நடந்துக்

கொண்டனர்.

ஊருக்குள் நுழைந்ததில் இருந்தே, அந்த ஊரின்

வித்தியாசமான தோற்றமும், வேறு எதுவோ ஒன்றும் அவன்

மனதை நெருடிக் கொண்டே இருந்தது. அதுவும், அவர்கள்


இருவரையும் சிறிதும் கண்டுகொள்ளாமல் செல்லும்

மக்களை, என்ன சொல்வது என்ற யோசனையுடன் அவன்

நடக்க, அவன் மனதினில் நினைத்ததையே ராமண்ணா வாய்

மொழியாக கேட்டார்.

“என்ன தம்பி... பொதுவா கிராமத்துல புதுசா ஒருத்தர்

வந்தாலே, யாரு, என்ன, எதுக்காக வந்திருக்காங்க, யாரைப்

பார்க்கணும்னு எல்லாம் விசாரிப்பாங்க... இங்க எல்லாருமே

நம்மளை திரும்பிக் கூட பார்க்காம போறாங்க... என்ன

அதிசயமா இருக்கு தம்பி...” அவர் கேட்கவும்,

“எனக்கும் அது தான் குழப்பமா இருக்கு... நாம வருவோம்ன்னு


ஒருவேளை அவங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சு
இருக்குமோ?” அவன் இழுக்க,

“எப்படி தம்பி... நீ ங்க பேசினதை தான் யாருமே

பார்க்கலையே... அதுவும், நாம திரும்ப நம்ம ஊருக்கு போறதா

தானே லக்ஷ்மிகிட்ட கூட சொன்ன ீங்க.... ஏன்... உங்களுக்கே,

நீ ங்க இப்போ இங்க வருவங்கன்னு


ீ தெரியாது.. இவங்களுக்கு

எப்படித் தெரியும்...?” அவர் கேட்கவும், அதே யோசனையுடன்,

மெல்ல ஊரைச் சுற்றி வந்தனர்.

அப்பொழுது ஊர் நடுவில் இருந்த ஒரு அம்மன் கோவிலில்,


யாரோ ஒரு பெண்ணுக்கு வேப்பிலை அடித்துக்

கொண்டிருந்தனர்... அந்தப் பெண்ணை கூர்ந்து பார்த்த ப்ரித்வி,

அது முல்லை என்பதை கண்டுகொண்டு,

“ராமண்ணா... இவ தான் லக்ஷ்மியோட பிரெண்ட் முல்லை...”

என்று அவன் கூறவும்,

“ஆமாம் இந்தப் பொண்ணு தான் லக்ஷ்மியை உள்ள வந்து

இழுத்துட்டு போச்சு... வாங்க தம்பி... அந்த பொண்ணுகிட்டயே

கேட்போம்...” என்று யோசித்தவர்கள்,

“என்னாச்சு முல்லைக்கு? நேத்து நல்லா தானே இருந்தா?”

ப்ரித்வி கேள்விகளை அடுக்க, உதட்டைப் பிதுக்கிய

ராமண்ணா, மெல்ல கோவிலின் அருகே நகர்ந்தார்.


“லக்ஷ்மியோட அப்பா பேர் என்ன தம்பி? யாருகிட்டயாவது

விசாரிக்கலாம்...” ராமண்ணா கேட்கவும், “செல்வராஜூ...”

என்று அவரிடம் பதில் சொன்னவன், கோவிலில் இருந்து

வெளிவந்த ஒருவரை பிடித்து நிறுத்தினான்.

“அய்யா... செல்வராஜ் வடு


ீ எங்க இருக்கு?” அவன் கேட்கவும்,

அவனிடம் இருந்து, தனது கையை விடுவித்துக் கொண்டவர்,

அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு, ஒருமுறை அவனை

சுற்றியும் வந்து, எந்த பதிலும் சொல்லாமல் நடக்க, ப்ரித்வி

கடுப்புடன் ராமண்ணாவை முறைத்தான்.

“நான் பாட்டுக்கு இருந்தேன்... மனசுக்குள்ள வந்து சிம்மாசனம்

போட்டு உக்காந்து அவ ஒரு பக்கம் என்னை படுத்தறா... நீ ங்க

என் மனசுல என்ன இருக்கு.... என்ன இருக்குன்னு கேட்டுக்

கேட்டே படுத்தி.... இப்போ எல்லாருமா சேர்ந்து என்னையும்

இங்க இழுத்துட்டு வந்து.... இந்த பெருசெல்லாம் என்னை

தாஜ்மகால சுத்திப்பார்க்கற மாதிரி, சுத்திப் பார்க்கறாங்க...”


என்னவோ ராமண்ணா அவன் கையைக் கட்டி

இழுத்துக்கொண்டு வந்தது போல அவன் பேச,

“இருங்க... நான் கேட்கறேன்...” என்றவர், ஒருவரைப்

பிடித்துக் கேட்க,

“எந்த செல்வராசு...” என்று அவர் இழுத்த இழுவையில்,


“சரியா போச்சு... நாம எப்படி அவ வட்டை

கண்டுப்பிடிக்கிறது?” என்று ப்ரித்வி மானசீகமாக தலையில்

கை வைத்துக் கொண்டான்.

“அது தான்... அந்த கஜலக்ஷ்மின்னு அவரோட பொண்ணு

பட்டணத்துல படிச்சதே...” அவர் கஜாவை பேச்சில் இழுத்துக்

கேட்கவும்,

“கஜலக்ஷ்மியா... அப்படின்னு இந்த ஊருல யாருமே

இல்லையே...” என்று சிறிது நேரம் யோசித்தவர்,

“வேணா நீ ங்க பெரிய தனக்காரர் வட்ல


ீ போய் கேளுங்க...

ஏன்னா அவர் பேரு செல்வமுத்து அய்யா... ஆனா, நீ ங்க

சொல்ற மாதிரி, எங்க ஊர்ல எந்த பொண்ணுங்களையும்

பட்டணத்துக்கு அனுப்பி படிக்க வைக்கலைங்களே... இங்க

அதெல்லாம் வழக்கம் கிடையாதுங்க...” என்று கூறிவிட்டு,

அவரும் இவர்களது பதிலுக்காக காத்திருக்க,

“அப்போ அந்தப் பொண்ணு... அது பேர் முல்லை தானே...”


சிறிது நேரம் அவர் சொல்லியதைக் கேட்டு குழம்பி இருந்த

ப்ரித்வி, ஒருவழியாக யோசித்து முல்லையைக் கைக் காட்ட,

“ஹாஹஹா....” பெரிதாக சிரித்த அந்த ஊர்க்காரர்...


“அவ பேர் கொடிங்க... அதுக்கு பேய் பிடிச்சிருக்குங்க...
இப்போ அம்மாவாசை முடிஞ்சதுல இருந்தே அந்தப்

பொண்ணுக்கு வெட்டி வெட்டி இழுக்குதுங்க... எங்க உசுரு


போயிடுமோன்னு பயந்து தான் இப்போ வேப்பிலை

அடிக்கிறாங்க... எத்தனை நாளா பேய்பிடிச்சு இருக்குன்னு

தெரியல... ஆனா, பிடிச்சு ரொம்ப நாள் ஆச்சுது போல..

படிப்பே ஏறாத கூமுட்டைங்க அது... அது போய் பட்டணத்துல

படிக்குதாம்... பெரிய சோக்குக்காரரா தான் இருப்பீ ங்க

போல...” ப்ரித்வியின் தோளில் தட்டி, அவன் கேட்காத

கேள்விக்கும் சேர்த்து பதில் சொன்னது தெரியாமல், அவர்

மேலும் சிரிக்க, இப்பொழுது ப்ரித்விக்கு தான் பைத்தியம்

பிடிக்கும் போல் இருந்தது.

“ஒருவேளை நாம நேத்து காலையில பார்த்தது இந்தப் பெண்

இல்லையோ?” அவன் குழம்பி நிற்கையிலேயே,

“தம்பி... இந்தப் பெண்ணை நானும் பார்த்தேன்... இந்தப்

பொண்ணு தான் நம்ம லக்ஷ்மிம்மா கூட பார்த்த பொண்ணு..

ஆனா...” ராமண்ணா ப்ரித்வியின் காதில் சொன்னாலும்,

அவரும் அந்த ஊர்க்காரர் சொல்வதைக் கேட்டு குழம்ப,

இருவரும் அப்படியே நின்றனர்.

“பொழுது சாஞ்சு, ஊருக்குள்ள எந்த வெளியூர்க்காரங்களும்

தங்கக் கூடாதுங்க... வேணும்னா... பெரிய தனக்காரர் கிட்ட


பேசிட்டு கிளம்புங்க...” அந்த ஊர்க்காரர், அவர்களை அதற்கு

மேல் நிற்க விடாமல் அனுப்புவதில் முனைய,

“எதுக்கும் அவர்கிட்ட பேசிப் பார்ப்போமா?” ராமண்ணா

குழப்பத்துடன் கேட்க,

“ஹ்ம்ம்... போகலாம்... போய் அவரையும் கேட்போம்...

ஒருவேளை இவருக்கு தெரியாம இருக்குமோ?” ப்ரித்வி

சொல்லவும்,

“எனக்குத் தெரியாம இந்த ஊர்ல ஒருத்தரா?” என்று

மார்த்தட்டியவர்,

“போய் பார்த்துட்டு பொழுது சாயறதுக்குள்ள கிளம்புங்க...

இல்லன்னா, ராத்திரில உலாத்துற மோகினி உங்களை

அடிச்சிற போகுது...” என்று கூறி விட்டு, அவர்களை விட்டு

நகராமல் அங்கேயே நின்றிருந்தார்.

அந்த ஊர்க்காரர் கொஞ்சம் அசந்திருந்த வேளையில், ப்ரித்வி

முல்லையை நோக்கி நகர, வேப்பிலை அடியை வாங்கிக்

கொண்டு, அப்பொழுது தான் சிறிது ஆஸ்வாசம் ஆகி இருந்த

முல்லை... ப்ரித்வியைப் பார்த்ததும், “ஹான்...” என்று

மயங்கிச் சரிய, அவளை அவளது மாமா, முத்து தாங்கிப்

பிடிக்க,
“எங்கடா போனா அவ? அவளை கொலை செய்யறேன் பாரு...”

என்றபடி, முத்துவின் அருகில், தள்ளாடிக் கொண்டிருந்த

பழனியைப் பார்த்த ப்ரித்வி, “கஜலக்ஷ்மி எங்க இருக்கா?”

என்று நேராக அவனிடமே கேட்க,

“கஜலக்ஷ்மியா? யார் அவ? குட்டி நல்ல அழகா இருக்குமா?”

அந்த தள்ளாட்டத்திலும், கண்களை ஒரு மாதிரி

சொருகிக்கொண்டு, அவன் கேட்ட விதமே ப்ரித்விக்கு

அருவருப்பைக் கொடுக்க,

“ராமண்ணா... நாம நேரா அந்த பெரிய தனக்காரர் வட்டுலே


போய்க் கேட்டுட வேண்டியது தான்... இவங்க எல்லாம்

வேலைக்கு ஆக மாட்டாங்க...” என்ற முடிவுடன், அவரது

வட்டை
ீ விசாரித்துக் கொண்டு இருவரும் சென்றனர்.

அவன் வந்திருக்கும் விஷயத்தை அறிந்த அந்த தனக்காரர்,

“என்னங்க தம்பி... நான் தான் இந்த ஊர் பெரிய தனக்காரர்

செல்வமுத்துராசு...” அவர் பேரைச் சொன்ன விதமே,

ப்ரித்விக்கு ஒரு நிம்மதியை அளிக்க,

“சார்... உங்க பொண்ணு கஜலக்ஷ்மி...” ப்ரித்வி தொடங்கவும்,

“கஜலக்ஷ்மியா... எனக்கு அப்படி யாரும் பொண்ணு

இல்லைங்களே... எனக்கு மூணே பிள்ளைங்க தான்... ரெண்டு


பொண்ண கட்டிக் கொடுத்துட்டேன்... இதோ என் மகன்...

சிங்கம் மாதிரி இருக்கான் பாருங்க... இவன் பேரு

கோடீஸ்வரன்... இதுல நீ ங்க ஏதோ புது பேரா சொல்றீங்களே...

நல்லவேளை தம்பி... நீ ங்க இதைக் கேட்கும்போது இங்கே என்

சம்சாரம் இல்ல... இருந்திருந்தா... எனக்கு தெரியாம சின்ன

வடு
ீ வச்சிருக்கீ ங்களோன்னு சண்டை பிடிச்சிருப்பாக...” அவர்

சொல்லிவிட்டு அந்த வடே


ீ அதிரும் வண்ணம் சிரிக்கவும்,

அவருடன் சேர்ந்து, அவரைச் சுற்றி இருந்த அனைவரும்

சிரிக்க, ராமண்ணாவிற்கும் ப்ரித்விக்கும், தலையை சுற்றுவது

போல் இருந்தது.

கவிதைகள் தொடரும்...

கவிதை – 14
உடன் இருக்கையில்
இரகசியமாய்
என் எல்லாவற்றையும்

திருடிக்கொண்டு போய் விட்டாய்,


உன்னையும்
உன் நெருக்கத்தையும் தேடி
ஏக்கங்கள் நிரம்பிய

என் பயணம்!!
பெரிய தனக்காரர் சொல்வதைக் கேட்ட ப்ரித்விக்கு மயக்கமே

வரும் போல் இருந்தது... ‘அது எப்படி அவளைப் பற்றி

விசாரித்தது அனைத்தும் பொய்யாய் போகும்... பொய் இல்லை


என்பதற்கு சாட்சியாக, முல்லை கண் முன் நிற்கிறாளே...”

அவன் மனதினில் நினைக்க,

“ஹையோ அவளையும் தான் வேற பேர் சொல்லி, அவ

முல்லை இல்லன்னு சொல்றாங்களே... அதுவும் இல்லாம,

இந்த ஊர்ல இருந்து யாருமே படிக்க போகலையா? அப்போ

லக்ஷ்மி... அவ யாரு? எப்படி அவளைப் பற்றின தகவல்

மொத்தமும் பொய்யாய் போகும்?” அவன் யோசித்துக்

கொண்டிருக்க, அவனது மூளையில், கஜா அடிக்கடி சொல்லும்

ஊர்க்கட்டுப்பாடு நினைவிற்கு வந்தது.

“அவ தானே முதன்முதலா ஊர்ல இருந்து படிக்க வந்தவ...

அவளுக்குத் துணையா வந்தவ தானே முல்லை... அப்போ


லக்ஷ்மி பெரிய செல்வாக்கு உள்ள வட்டோட
ீ பெண்ணா தான்

இருக்க முடியும்...” நிதானமாக அவன் மனதை

ஒருமுகப்படுத்தி யோசிக்கவும், அவனுக்கு லக்ஷ்மி

கோபத்தில் கூறிய சில சம்பவங்கள் நினைவிற்கு வந்தது.

அவன் யோசிப்பதைப் பார்த்து சிரிப்பை நிறுத்திய செல்வராசு...

“சரிங்க தம்பி... கேட்க வந்ததை கேட்டுட்டீங்க இல்ல... நீ ங்க

தேடி வந்தவங்க இந்த ஊருல இல்ல... பொழுது சாயப்

போகுது... அதுக்குள்ள ஊரை விட்டு கிளம்புங்க... எங்க ஊர்ல


மோகினி பேய் ராத்திரியில அலையறதா சொல்லிக்கிட்டு

இருக்காங்க... அது எங்கயாவது உங்களை அடிச்சிறப்


போகுது... அப்பறம் கிளம்பறீங்களா?” அவனை

விரட்டுவதிலேயே அவர் குறியாக இருக்க,

“என்னது? அப்படி ஒருத்தி இல்லையா? இந்த ஊர்லையே

உங்க வட்ல
ீ மட்டும் தானே கார் இருக்கு?” ப்ரித்வி கேட்கவும்,

இதழில் இருந்த புன்னகை உறைய, அமைதியாகிப் போனார்.

“என்ன அமைதியா இருக்கீ ங்க... சொல்லுங்க... உங்க

வட்டுக்குள்ள
ீ வரும்போது, நான் ஒரு பெரிய ஃபியட் காரைப்

பார்த்தேன்... அது உங்களது தானே...” அவரின் அதிர்ச்சியை

கண்டு மனம் குதூகலிக்க அவன் கேட்கவும்,

“அதுவா... அது பக்கத்து ஊர் செல்லத்துரைக்கு பணத்தைக்

கடன் கொடுத்திருந்தேன்... அவனால திருப்ப முடியல...

அதனால அவனோட ப்ளசரு காரை தூக்கிட்டு வந்துட்டேன்...

அவன் கடனைத் திருப்பிட்டு காரை எடுத்துக்குவான்....”

குரலில் பிசிறு தட்ட அவர் சொல்லவும், ப்ரித்விக்கு கஜாவின்

ஊர் இது தான் என்பதும், அவளது வடு


ீ இது தான் என்பதும்

தெள்ளத் தெளிவாயிற்று....

“அப்பறம் ஏன் இந்த ஊருல யாருமே அப்படி ஒரு பொண்ணு

இருக்கறதா காட்டிக்கவே மாட்டேங்கறாங்க... எங்க

காதலைப் பத்தி, அவளுக்கே இன்னும் தெரியாத போது... ஏன்

இப்படி?” அவன் யோசிக்கவும்,


“ஏன் ப்ரித்வி... ஒரு கிராமத்துல வந்து... ஒரு பொண்ணு பேரை

சொல்லி விசாரிச்சா... உடனே அவங்க சொல்லிட்டு தான்

மறுவேலை பார்ப்பாங்க பாரு...” அவனது மனது அவனை

கடிய, “சரி... சரி..” என்று அதனை அதட்டி விட்டு,

“ஓ சரிங்க சார்... நான் ஒரு கார் கம்பனி வச்சிருக்கேன்...


ஒருநாள் அவங்க காலேஜ்ல வேலை செய்யற ஒரு

வாத்தியாருக்கு கார் மாடல்ஸ் காட்ட போயிருந்தேன்...

அப்போ கஜலக்ஷ்மிங்கற பொண்ணு... எங்க ஊர்ல எங்க வட்ல


தான் பெரிய கார் இருக்கு... என் கல்யாணத்துக்கு பரிசா...

எங்க அப்பா... என் மாமாவுக்கு ஒரு கார் வாங்கித் தரணும்னு

ஆசைப்படறார்... நீ ங்க வந்தீங்கன்னா அவர்கிட்ட பேசலாம்...

அப்படின்னு சொன்னாங்க...

அவங்க சொன்ன ஊர் பேரும்.... அவங்க அப்பா பேரும் இது

போல தான் இருந்தது... அதனால தான் வந்தேன்... அப்போ

அந்த பொண்ணு வேற ஊரா இருக்குமோ?” என்று தனக்குத்

தானே பேசிக்கொண்டவன்,

“சரிங்க எதுக்கும் அந்த பொண்ணு அவங்க அப்பா போன் நம்பர்

கொடுத்திருக்கு... கேட்டு பார்க்கறேன்...” என்று இருக்கையில்

இருந்து எழுந்த படி,

“நன்றிங்க சார்... எனக்கு கொஞ்சம் குடிக்க தண்ணி தர


முடியுமா?” என்று கேட்க, தாடையை தடவிக்கொண்டே

செல்வராசு அவனைப் பார்த்தார்.

“அந்தப் பொண்ணு உங்களை எப்போ வர சொல்லுச்சு” அவர்

சந்தேகமாகக் கேட்கவும்,

“இல்ல... அந்த பொண்ணு என்கிட்ட சொல்லி ஒரு மாசம்

ஆச்சு... எனக்கு இப்போ தான் நேரம் கிடைச்சது அது தான்

வந்தேன்... சரிங்க... கொஞ்சம் குடிக்க தண்ணி

கொடுத்தீங்கன்னா... நாங்க கிளம்புவோம்... தாகமா

இருக்கு...” அவன் மீ ண்டும் கேட்கவும்,

‘ஒரு சொம்பு தண்ணி கொண்டாம்மா...’ என்று அவர் குரல்

கொடுக்கவும், இரண்டு பெண்கள் அவர்களிடம் தண்ண ீரை

நீ ட்டினர். அவர்களின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்த ப்ரித்வி,

கண்கள் அழுது வங்கி


ீ இருப்பதும், கன்னங்கள்

சிவந்திருப்பதும் பட, யோசனையுடனே, அங்கிருந்து

கிளம்பினான்.

அந்த வட்டை
ீ விட்டு வெளியில் வரும் வரையும் அவனது

அமைதி தொடர, அத்தனை நேரம் அமைதியாக இருந்த

ராமண்ணா, “தம்பி...” என்று தொடங்கவும்,

“நாம போய் நம்ம வேலைய பார்ப்போம் ராமண்ணா... இங்க

கார் வாங்கற மாதிரி யாரும் இல்ல போல... நாம தப்பா ஊர்


மாறி வந்துட்டோமோ? எதுக்கும் நாம விசாரிச்சுக்கலாம்

ராமண்ணா... நல்ல ஆர்டர் ஒண்ணு போச்சு...” மிகவும்


வருத்தமாக அவன் சொல்லிக்கொண்டே காரை நோக்கி

நடக்க,

“என்ன தம்பி சொல்றீங்க?” புரியாமல் ராமண்ணா கேட்க,

அவரை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன்,

“இங்க ஏதோ மர்மமா இருக்கு ராமண்ணா... லக்ஷ்மிக்கு ஏதோ

ஆபத்துங்கற மாதிரி மனசு அடிச்சுக்குது... அவளே

பைத்தியக்காரத் தனமா ஏதாவது செய்துட்டு இருப்பாளோ...

இல்ல இவங்க ஏதாவது செய்திருப்பாங்களோ? என்னன்னு

நாம கண்டுபிடிக்கணும் ராமண்ணா... எனக்கு பயமா

இருக்கு..” அவன் ஊரை விட்டுப் போவதை உறுதி


செய்துகொள்ள அவனைப் பின் தொடர்ந்தவர்களை

கண்களால் காட்டியவன், அவரிடம் தெலுங்கில் சொல்லவும்,

ராமண்ணாவும் அவனுக்கு தகுந்தாற்போல்,

“சரிங்க தம்பி... நாம வேற இடத்துல பார்த்துக்குவோம்... இங்க

என்னவோ.. மோகினிங்கறாங்க... பிசாசுங்கறாங்க... எனக்கு

பயமா இருக்கு தம்பி... சீக்கிரம் போய்டலாம்...” என்றவர்,

காரை நோக்கி விரைந்தார்.

காரில் ஏறிய ப்ரித்வியைப் பார்த்து, ஆப்பிள் பழங்களும்,


மாம்பழங்களும் கைக் கொட்டிச் சிரிக்க,

“போற வழியில எதுனா ஸ்கூல் மாதிரியோ, இல்ல அநாதை

ஆசிரமம் மாதிரியோ இருந்தா, அங்க இதெல்லாம்

கொடுத்துட்டு போகலாம்...” என்று எங்கோ எண்ணத்தைப்

பதித்துக் கொண்டே அவன் சொல்லவும், அவனது மனதை

புரிந்த ராமண்ணா, அமைதியாக வண்டியை எடுத்தார்.

“தம்பி...” சிறிது தூரம் கார் நகர்ந்ததும், ராமண்ணா

அழைக்கவும், ப்ரித்வியிடம் பதில் இல்லாமல் போக,

“தம்பி... நாம வேணா திரும்ப போய் சண்டை போட்டு கேட்டுப்

பார்ப்போம் தம்பி...” அவனது கவனத்தை தன் பக்கம் திருப்ப

அவனது தோளைத் தட்ட,

“என்ன சொன்ன ீங்க ராமண்ணா?” அவன் பதில் கேள்வி

கேட்கவும், மீ ண்டும் அவர் சொன்னதையே சொல்ல, ப்ரித்வி

மறுப்பாக தலையசைத்தான்.

“இல்ல ராமண்ணா... அவளுக்கு ஏதாவது ஆகி

இருக்குமோன்னு நினைக்கவே பயமா இருக்கு... அந்த மாதிரி

ஒண்ணும் ஆகி இருக்காது இல்ல... நேத்து அவ கடல்ல

விழுந்த போதே, எனக்கு குலையே நடுங்கிருச்சு... இப்போ...

அங்க அப்படி ஒண்ணும் நடந்துஇருக்கற மாதிரி இல்ல...


ஆனா, அப்படி மட்டும் ஏதாவது ஆகிஇருந்துச்சு.. அவங்க

அப்பாவ கொன்னு புதைச்சிருவேன்...” ப்ரித்வி ஆத்திரமாக

கத்த, ராமண்ணா, அவனை பரிதாபமாக பார்த்தார்.

“இல்ல ராமண்ணா ஒண்ணும் ஆகி இருக்காது... நாம

இராமநாதபுரத்துலயே ஒரு ரூம் எடுத்து தங்கிக்குவோம்...

அங்கேயே இருந்து, அடுத்து என்ன செய்யறதுன்னு

யோசிப்போம் ராமண்ணா...” என்றவன், அது போலவே

செய்தான்...

அறைக்குச் சென்றவன், நேராக குளியல் அறைக்குள் புகுந்து

கொண்டான்... எத்தனை நேரம் தண்ண ீரின் அடியில் நின்றான்

என்பது, கடவுளுக்கே வெளிச்சம்... அவனது மனமோ,

கஜாவிற்கு ஒன்றும் ஆகி இருக்கக் கூடாதே என்பதிலும்,


அவளை எப்படி அங்கிருந்து வெளியில் கொண்டு வருவது

என்பதிலுமே சுற்றிக் கொண்டிருந்தது.

“அந்த ஊரில் இருந்த ஒருவர் கூட, அப்படி ஒரு பெண் இருப்பது

போலவோ, தங்களுக்குத் தெரிந்தது போலவோ கூடக்

காட்டிக்கொள்ளாத அளவிற்கு, அங்கு என்னதான்

நடந்திருக்கும்? அவளது மாமனை... ச்சே... ச்சே... ‘அவளோட

மாமா நான் தான்...’” என்று திருத்திக் கொண்டு,

“அந்த பழனியை கல்யாணம் செய்ய முடியாது என்று சண்டை


பிடித்திருப்பாளா? அதற்காக, இப்படி அடியோட ஒரு நபர்

இருக்கறதையே கூட மறைப்பாங்களா என்ன?” அவன்

யோசித்துக் கொண்டே வெளியில் வந்தமர்ந்தான்.

ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவன், அதையே

வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன்

அமர்ந்திருக்கும் நிலையிலிருந்தே, அவன் தீவிர

யோசனையில் இருப்பது புரிய, அவனை சிந்திக்க விட்டு,

ராமண்ணா, அமைதியாக அமர்ந்தார்.

அதே நேரம் கஜாவின் வட்டில்.....


பாறாங்கற்களினாலான பெரிய மதில் சுவர்கள் சுற்றியுள்ள

வட்டில்,
ீ ஆங்காங்கே, கிராமத்திற்கே உரிய முறையில்

செல்வச் செழிப்புடன் காணப்பட்ட வட்டின்,


ீ பாதாள
அறையில்... கஜா சுருண்டுக் கிடந்தாள்.

முன்தினம் வேனில் ஏறிய கஜாவின் மீ து பழனி சாயவும்,

அவள் அருவருப்புடன் கூறிய வார்த்தையைக் கேட்ட,

பழனியின் அத்தையும், அவரது மகளும், “பட்டணத்துக்காரன்

கையப் பிடிச்சா அருவருப்பா இருக்காதோ?” என்று கேட்கவும்,

கஜா அதிர்ந்துத் திரும்பினாள்.

அவளது அதிர்ச்சியை சில நொடிகளிலேயே மறைத்துக்

கொண்டவள், “யார் அது பட்டணத்துக்காரன்? எவன் என்

கையப் புடிச்சான்?” ஏட்டிக்குப் போட்டியாக கஜா கேட்கவும்,

“அது தான் இவக பார்த்துட்டு வந்து உன்னப் பத்தி கேவலமா

பேசினாகளே... ஏண்டி... உனக்கு அறிவு கிறிவு கெட்டுப்

போச்சா? பெருமைக்காக புள்ளய படிக்க அனுப்ப


வேணாம்ன்னு உங்க அப்பாருகிட்ட படிச்சு படிச்சு

சொன்னேனே... அவுக எங்க கேட்டாக?

‘நம்ம பரம்பரையிலேயே இவ ஒருத்தி தான் படிச்சவளா

இருக்கணும்ன்னு சொல்லிபுட்டு, உன்னை படிக்க

அனுப்பிச்சாகளே.... முதல் முதலா என் பொண்ணு தான் படிக்க

போறான்னு மார்தட்டிட்டு திரிஞ்ஜாகளே... அவுகளுக்கு நீ

நல்ல பேர வாங்கிக் கொடுத்துட்ட....” அவளது அன்னை

ஒப்பாரி வைக்கத் துவங்கவும், கஜாவிற்கு எதுவோ


சரியில்லாமல் போய்க்கொண்டிருப்பது போல் தோன்றியது.

அவளது அன்னையை அவள் வெறித்துக் கொண்டிருக்க, “யாரு

புள்ள அது? அவன் எதுக்கு உன் கன்னத்தைத் தொட்டான்...

இந்த கன்னத்தையா தொட்டான்?” அந்தக் குடி போதையிலும்,

பழனி ஒரு பீடியைப் பற்ற வைத்து, அவள் கன்னத்தில் வைத்து

அழுத்த, கஜா வலியால் அலறினாள்.

“யாருடி அவன்? அவன் எதுக்கு உன்னைப் பார்க்க புழக்கடைப்

பக்கமா வந்தான்? அவனோட எத்தனை நாளா பழக்கம்? எப்படி

பழக்கம்?” அவளது அன்னை, அவளைப் பிடித்து உலுக்க,

மௌனத்தையே ஆயுதமாக தன் கையில் எடுத்தவள்,

தலையை குனிந்தபடியே, கண்ண ீர் உகுத்துக்

கொண்டிருந்தாள்.

“சொல்லேண்டி... தொண்டை வத்த கேட்டுக்கிட்டே இருக்கேன்

இல்ல....” அவளது முடியைப் பிடித்து, அவர் உலுக்கவும்,

“உங்க கேள்விக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல

முடியாது.... என்னை விட்ருங்க... நான் இங்க இருந்து விழுந்து

செத்து போறேன்...” அவள் ஆவேசமாகக் கத்தவும், பழனி,

அவளைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டான்.

“உனக்கு என்னை விட அவனைப் பிடிச்சிருக்கோ?


பட்டணத்துக்காரன பார்த்த உடனே அப்படியே மயங்கிட்டியோ?

உனக்கு எவ்வளவு திமிரு இருக்கணும்... என்ன, அழகா பிறந்து

இருக்கோம்ன்னு உனக்குத் திமிரா... அந்த அழகையே


இல்லாம செய்ய எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்னு

நினைக்கிற? இந்த அழகை வச்சுத் தானே நீ இந்த பசப்பு

பசப்பற?” அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளை

எரிதணலில் தள்ளத் துவங்கியது.

“ஆ...ம்...மான்னா இப்போ என்ன செய்வ? அவர் ஒண்ணும் என்

அழகைப் பார்த்து பல்லை இளிக்கல... உன்னை மாதிரி...

அதை முதல்ல தெரிஞ்சிக்கோ...” அவனை காயப்படுத்தி

விடும் நோக்கோடு அவள் கத்த, பழனி கோபத்தில், அவள்

கன்னத்தைப் பற்றினான்.

ஏற்கனவே அவன் வைத்த சூட்டின் வலியும், இப்பொழுது

அவன் அழுத்தியத்தின் வலியும் சேர்ந்து, கஜாவின் கண்களில்

கண்ண ீரை ஊற்றெடுக்க வைக்க, “விடு... என்னை விடுன்னு

சொல்றேன் இல்ல...” என்று அவன் கையைத் தட்டி விட...

“என்னடி ரொம்ப துள்ளுற... இரு இன்னும் ரெண்டே நாளுல

உன் கழுத்துல தாலிய கட்டிட்டு, அப்பறம் உனக்கு

வைக்கிறேன் திருவிழாவ...” என்றவன், அவளைத் தன்னுடன்

இறுக்கிக் கொள்ள முயல, கஜா பட்டென்று எழுந்து படிகளில்

அமரப் போக, அவள் எங்கு அமரப் போகிறாள் என்பதை


உணர்ந்த முல்லையின் மாமன் முத்து, தான் வேகமாக அங்கு

அமர்ந்துக் கொண்டு, முல்லையின் அருகே இடம் விட,

அவனை புரியாமல் பார்த்த கஜா, முல்லையின் அருகே இடம்

இருப்பதைப் பார்த்து, அங்கே அமர்ந்து, அவளது மடியில்

சாய்ந்து அழத் தொடங்கினாள்.

 “நான் எங்கடி அவர் கூட போனேன்? எங்க அவர் என்

கன்னத்தைத் தொட்டார்?” அவள் கேட்டுக் கொண்டே அழ,

முல்லையின் உடல் நடுங்கத் தொடங்கியது.

“அடிப்பாவி... பொய் பொய்யா சொல்றாளே...” முல்லை

மனதினில் நினைக்க,

கஜா அவ்வாறு கேட்கவும், அவளது அன்னை அவளது

முதுகில், தன் பலம் கொண்ட மட்டும் அடிக்கத் தொடங்க,

பழனியும் அவருடன் சேர்ந்துக் கொண்டான்.

இருவரும் அவளை மாட்டை அடிப்பது போல அடிப்பதைப்

பார்த்த முத்து... “எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க...

என்ன நடந்துச்சு ஏது நடந்துச்சுன்னு தெரியாம, ஆளாளுக்கு

போட்டு அவளை அடிச்சிக்கிட்டு.... ஏய் பழனி... கொஞ்சம் வாய

மூடிக்கிட்டு போய் உட்காரு... நம்ம அய்யா என்ன

சொல்றாருன்னு பார்ப்போம்...” முல்லையின் மாமாமுத்து

அவனை விரட்ட, அனைவரும் அமைதியாக அமர்ந்தனர்.


வலியாலும், இனி தன்னுடைய கதி என்னவாகும் என்ற

கலக்கத்தினாலும், கஜா, முல்லையின் மடியில் நடுங்கிக்

கொண்டிருக்க, “இவள அப்படியே வெளிய தள்ளி விடுங்க

தம்பி... அப்போ தான் என் மனசு ஆறும்... கால் கை ஒடைஞ்சு

போனாலும் பரவால்ல... ஆனா, அவ முழுசா வடு


ீ போய் சேரக்

கூடாது...” அவளின் தாய் விடாமல் கத்திக்கொண்டிருக்க,

“அமைதியா இருங்கன்னு சொன்னேன் இல்ல... அவ அப்படி

யாரையும் விரும்பல... எனக்குத் தெரியும்... போன தடவ நான்

முல்லயைப் பார்க்கப் போன போது கூட, பழனி குடிய

விட்டுச்சான்னு தான் கேட்டா... அதுக்குள்ள எப்படி அவளுக்கு

காதல் வரும்... வேற ஏதாவது விஷயமா இருக்கலாம் இல்ல...

அந்த ஆள் அவளை தொல்லை கூட செய்திருக்கலாம்...”

அவன் சொல்லிக் கொண்டே போக,

“எப்படி? இப்படியா கண்ணு மிரட்டுவாங்க...” என்று அவனது

கையை எடுத்து, தன் கன்னத்தில் வைத்துக் கொண்ட அந்த

நடுத்தர வயது பெண்மணி கேட்கவும்,

“அடிப்பாவி கிழவி... நீ எல்லாத்தையும் பார்த்துட்டு தான் இந்த

குதி குதிக்கிறையா? நானும் அவர் கூட பேசறதுக்கு முன்ன

சுத்தி கித்தி பார்த்தேனே... இது எங்க இருந்துச்சு...!?”

அழுகையினூடே கஜா யோசிக்கவும், முத்து கஜாவைத்


திரும்பிப் பார்க்க, அவளோ முல்லையையின் கையைக்

கிள்ளினாள்.

“என்னடி?” வலியில் முகத்தை சுருக்கிக்கொண்டு, முல்லை

ரகசியமாகக் கேட்க,

“உங்க மாமா என்னை ரொமான்ஸ் லுக்கு விடறார் முல்ல...

இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்... நீ கொஞ்சம்

திரும்பினா... அவர் பார்வை உன் மேல விழும்... கொஞ்சம்

உன் மாமனைப் பாரேன்...” அந்த அழுகையினூடேயும் அவளது

வாய் சும்மா இராமல், முல்லையிடம் வம்பு பேசவும்,

“நானே நடுங்கிட்டு இருக்கேன்... நீ வேற ஏண்டி என்னை

வம்புல மாட்டி விடற... இன்னும் இந்த பிசாசுங்க பார்வை என்

மேல படல... பட்டுச்சு... நான் செத்தேன்... எங்க மாமா வேற

கொஞ்சம் புத்திசாலி... மோப்பம் பிடிச்சு கேள்வி

கேட்டுச்சுன்னு வை... பதில் சொல்லத் தெரியாம நான் உசுர

விட்ருவேன்...” அவள் அதே முணுமுணுப்புடன் சொல்லவும்,

கஜா அவளை மீ ண்டும் கிள்ளினாள்.

“நான் என்ன தாண்டி செய்யணும்?” முல்லை கடுப்பாகக்

கேட்க,

“ஹ்ம்ம்... ஆப்பம் சுடுன்னு சொல்றேன்... எவடி இவ... எனக்கு


ப்ரித்வியை தான் பிடிச்சிருக்குன்னு எப்படி இதுங்க கிட்ட

சொல்றதுன்னு நானே யோசிச்சுட்டு இருந்தேன்... இது நல்ல

சந்தர்ப்பம்... இப்போதைக்கு அடி வாங்கிக்கிட்டோம்ன்னு

வை...” கஜா சொல்லிக் கொண்டே வர,

“என்ன அடி வாங்கிக்கிட்டோமா... நீ லவ் பண்றதுக்கு நான்

ஏண்டி அடி வாங்கணும்...” முல்லை அவசரமாகக் கேட்க,

“உன் பிரெண்ட்டுக்காக உயிரை விடறேன்னு சொன்ன...

இப்போ அடி கூட வாங்க மாட்டேன்னு சொல்ற... இதெல்லாம்

நல்லா இல்ல... சொன்ன வாக்க மாத்தக் கூடாது...” கஜா

முல்லையை சீண்டவும்,

“இத்தனை அடி வாங்கியும் உனக்கு கொழுப்பு அடங்கல பாரு...

பேசாம வாடி...” முத்துவை ஓரக்கண்ணால் பார்த்துக்

கொண்டே, முல்லை அவளை அதட்டவும்,

“ஏண்டி தெனவெடுத்த கழுத.... அவனோட எத்தனை நாள்

பழக்கம்டி... அங்க அவ கிட்ட என்ன பேசிட்டு இருக்க?”

அவளது அன்னை மீ ண்டும் ஆக்ரோஷமாக வரவும், அந்த


வேனில் இருந்தவர்கள் அனைவரும் கஜாவை திட்டிக்

கொண்டும், சமயம் கிடைக்கும் போது அடிக்கவும் தொடங்க,

முல்லையின் மடியில் கவிழ்ந்தவள், நிமிராமல் இருக்கவும்,


“கழுத எழுந்து உட்காரு... பாதி அடி என் மேல விழுது...”

முல்லை குனிந்து அவளைத் தூக்குவது போல, அவளிடம்

சொல்ல,

“நான் அப்படியே மயங்கிட்டேன்னு சொல்லிரு முல்ல...

உடம்பெல்லாம் வலிக்குது... ஏற்கனவே வயிறு வலி வேற

நோவுது... இதுல இது வேற... அந்தக் கிழவி.. நான் அவர் கூட

பேசும் போதா பார்க்கணும்....” என்று சலித்துக் கொண்டு,

“ஏண்டி முல்லை... அந்த ப்ரித்வி மரமண்டைக்கு ஒரு அழகான

பொண்ணு கண்ணு முன்னால அழுதுட்டு நிக்குதே... அவள


தோள்ள சாச்சிட்டு தலை கோதி ஆறுதல் சொல்லணும்ன்னு

தோணவே இல்ல பாரேன்.... இவரை கட்டிக்கிட்டு நான்

என்னத்தை செய்யப் போறேன்...” அந்த அழுகையிலும்,

ப்ரித்வியை பற்றி பேசி, அவள் அங்கலாய்க்க,

“அடியேய் நிறுத்துடி... அப்படி மட்டும் அவர் செய்திருந்தார்...

இந்நேரம் உன்னை அங்கேயே வெட்டி புதைச்சு இருப்பாங்க...

உனக்கு லொள்ளு இருக்குப் பாரு... பேசாம வாடி... அப்படியே

உங்க அம்மா உன்னை தூக்கி வசிற


ீ போறாங்க...” முல்லை

பயம் கொள்ளவும்,

“அதெல்லாம் உங்க மாமா இருக்காரு இல்ல... அப்படி எல்லாம்

செய்யவிட மாட்டாரு... அதைப் பத்தி எல்லாம் நீ கவலைப் பட


வேண்டாம்... நீ செய்ய வேண்டியது என்னன்னா... இப்போ நீ

என்னை தூக்கி பார்த்துட்டு நான் மயங்கிட்டேன்னு சொல்லு...


வட்டுல
ீ வேற போய் இன்னும் அய்யாவோட அடியையும்

வாங்கணுமில்ல... அதனால உடம்புல கொஞ்சம் வலுவ

கூட்டிக்கறேன்” என்றவளை, முல்லை ஆயாசமாகக் பார்க்க,

“செய் முல்ல...” என்று கஜா அவளது இடுப்பில் குத்தவும்,

முல்லை அலற,

“என்னாச்சு?” என்றபடி, முத்து அவள் அருகில் வரவும்,

“கஜா மயங்கிட்டா...” இதை சொல்லி முடிக்கும் முன்பே,

முல்லையும் மயங்கிச் சரிந்தாள்.

கவிதைகள் தொடரும்....

கவிதை – 15
நம் ஒன்றாக கழித்த
தருணங்களை
எனக்குள்
திரும்ப திரும்ப ஓட செய்யும்
இந்த பிரிவு
சொல்லும் சேதி,
நீ இல்லாமல்
நான் இல்லை ….
இருவரும் மயங்கினாலும், வேனில் இருந்தவர்கள் அவர்கள்
முகத்தில் தண்ண ீரைத் தெளித்து மயக்கத்தை தெளிவித்து

கஜாவை திட்டத் துவங்க, “இதுக்குப் பேர் தான் தெளிய வச்சு

தெளிய வச்சு அடிக்கிறதா முல்ல...” கஜா முல்லையின் காதில்

முணுமுணுக்கவும், அப்பொழுது தான் உண்மையாகவே

மயக்கத்தில் இருந்து தெளிந்த முல்லை, அவளைப் பார்த்து

முறைத்தாள்.

“ஏண்டி உன் வாய் சும்மாவே இருக்காதா? நான் நிஜமாவே

மயங்கிட்டேன்...” முல்லை சொல்வதைக் கேட்ட முத்துவிற்கு

சிரிப்பு தான் வந்தது. அவளது பயந்த சுபாவம் அவனுக்கு தெரிந்தது

தானே...

“மயக்கத்துல என்ன நிஜ மயக்கம்? பொய் மயக்கம்?” அவளுக்கு

தண்ணர்ீ கொடுத்துக் கொண்டிருந்தவன், முல்லையிடம்

மெல்லிய குரலில் கேட்கவும், “மாமா...” என்று முல்லை அதிர,

கஜாவை அழுத்தமான பார்வை பார்த்தவன், மீ ண்டும்

முல்லையிடம் திரும்பி,

“ரெண்டு பேரும் அமைதியா வந்தீங்கன்னா உடம்பு பிழைக்கும்...

ரவுசு பண்ணிட்டு வந்தீங்க... அப்பறம், காப்பாத்த நான் வர

மாட்டேன்...” முல்லையிடம் சொல்வது போல் இருந்தாலும்,


அந்த செய்தி என்னவோ தனக்குத் தான் என்பது கஜாவிற்கு

நன்றாகவே புரிந்தது.

“யாரும் இங்க ரவுசு பண்ணல... உங்களை விடவா யாரும்ரவுசு

செய்துட முடியும்...” முத்துவிடம் அவள் மல்லுக்கு நிற்கத்

தொடங்கும் போதே, பழனி அவள் அருகில் வந்திருந்தான்.

“ஏண்டி... எனக்கென்னடி குறைச்சல்? நானும் வயல் தென்னந்

தோப்புன்னு நிறைய சொத்து வச்சிருக்கேன்... அப்படியும் உனக்கு

என்னைய பிடிக்காம, அந்த பட்டணத்துகாரன தான்

பிடிச்சிருக்கோ? நாளைக்கே நான் பட்டணத்துக்கு போய், அவனை

போலவே சொக்கா வாங்கல ... நான் பழனி இல்ல..” கையில்

இருந்த பாட்டிலின் மேல் அடித்து சத்தியம் செய்தவனைப் பார்த்து,

கஜா பழிப்பு காட்ட, அவளது வாயிலேயே பழனி ஒரு குத்து விட,

உதடு கிழிந்து ரத்தம் கசிந்தது.

“ப்ரித்வி... இப்படி ஒரு வாழ்க்கை வாழத் தான் என்னை வாழ்த்தி

அனுப்பின ீங்களா? இதுக்கு, நான் அன்னைக்கே கடல்ல விழுந்து

செத்துப் போயிருப்பேன்...” அவளது மனம் அவனிடம் முறையிட,

பழனி மீ ண்டும் ஒரு பீடியைப் பற்ற வைத்தான்.

அவன் என்ன செய்யப் போகிறான் என்று உணர்ந்த முத்து,

“பழனி... நீ செய்யறது எதுவுமே சரி இல்ல சொல்லிட்டேன்..

இப்போ எதுக்கு வேன்ல பீடிய பத்த வைக்கிற? அதைக் கீ ழ போடு...


என் தங்கச்சிய என் கண்ணு முன்னாலயே இப்படி செய்யறதை

பார்த்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்.... அய்யா எதுவும்

சொல்ற வரை உன் கை அவ மேல பட்டுச்சு, நான் சும்மா இருக்க

மாட்டேன்,பார்த்துக்கோ...” முத்து சீறவும், பழனி சிறிது அடங்கிப்

போனான்.

“என்ன முத்து நீ இப்படி சொல்லிப்புட்ட... நட்டநடு ரோட்டுல,

பரிசம் போட்டவனை மறந்து, எவனையோ கட்டிப் புடிச்சிட்டு

நிக்கறா அவ? இன்னும் வேற என்ன எல்லாம் செய்து

வச்சிருக்கறாளோ? இந்தக் கழுதை செய்த காரியத்துக்கு...

இவளை இங்க இருந்தே தூக்கி விசிறி இருக்க வேணாமா? இவ

சுத்தமா தான் இருக்காளோ? இல்ல...” மேலே என்ன சொல்லி

இருப்பாரோ... “ஆத்தா...” கஜா அலறினாள்.

“செய்யறதை எல்லாம் செய்துப்புட்டு உனக்குஎன்னடி வாய்

வேண்டிக் கிடக்கு?” அவரது கை மீ ண்டும் அவள் மீ து பதிய,

“என்னைச் சொல்றீங்களே... இதோ இவன் எத்தனை

பொண்ணுங்க கூட சுத்தி இருக்கான்... எத்தனை

பொண்ணுங்க கூட பழகி இருக்கான்... உனக்குத் தெரியாது?”

அத்தனை அடியையும் பெற்றுக் கொண்டு, அவள் கேட்கவும்,

“கஜா... வாய மூடு...” முத்து அதட்ட,

“என்ன அண்ணே... இவனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு


நியாயமா?” அவள் கேட்கவும், முத்துவின் உக்கிரப்

பார்வையில், அழுகையுடன் அவள் மீ ண்டும் முல்லையின்

மடியில் படுத்துக் கொள்ள, கஜாவை அவளது தாய் அடிக்காத

வண்ணம், தடுப்புச் சுவர் போல நின்றுக் கொண்டவன்,

“போய் உட்காருங்க... எல்லாம் வட்டுக்குப்


ீ போய்

பேசிக்கலாம்... நம்ம பதினஞ்சு பேருக்கு தெரிஞ்சது... இப்போ

ஊருக்கே தெரியணுமாக்கும்...” முத்து சத்தம் போடவும்,

அனைவரும் அவரவர் இடத்தில் சென்று அமர்ந்தாலும்,


அனைவரின் வசவு மொழிகள் மட்டும் தொடர்ந்து கொண்டே

தான் வந்தது.

அவர்கள் அவளது கற்பைக் குறித்தே சந்தேகப்பட்டு பேசவும்,


ஓடும் வேனில் இருந்து குதித்து விடலாமா என்பது வரை

யோசித்து , கஜா துடித்துப் போனாள்.

“இதுக்கு தாண்டி நான் தலைதலையா அடிச்சிக்கிட்டது...

நல்லா நின்னு பேச நேரம் பார்த்தியே புள்ள நீ ? அந்த மனுஷன்,

எனக்கு என்னன்னு, உன்னை சிக்கல்ல மாட்டி விட்டுட்டுப்

போயிருச்சு பாரு... இத்தனைக்கு அப்பறம், அந்த குடிகார

பழனியையே நீ கட்டிக்கிட்டாலும், உன்னை அவன் சும்மா

விடுவானா புள்ள... தினம் தினம் உன்னை பேசியே

சித்தரவதை செய்திருவானே.. உன் கோபத்துனால இப்படி ஒரு

சிக்கல நீ யே இழுத்து விட்டுட்டு இருக்கியே கஜா...” முல்லை


ஆற்றாமையாக அவளிடம் புலம்ப,

“இல்ல முல்ல... அவருக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு...


நான் அவர் மேல வச்சுருக்கற நேசத்துக்கு குறையாம அவரும்

என் மேல நேசம் வச்சிருக்கார் முல்ல... ஆனா, நீ சின்னவ....


எனக்கும் உனக்கும் ஒத்து வராதுன்னு என்னத்தையோ
மனசுல வச்சிக்கிட்டு சொல்லிட்டு போகுது அந்த

மரமண்டை...” விசும்பலுடன் கஜா சொல்லவும்,

“என்னடி... ஒரே நாளுல இப்படி எல்லாம் நடக்குமா? நீ

சொல்றதைக் கேட்டாலே எனக்கு வயிறு கலங்குது கஜா...”

முல்லை பதறவும், மீ ண்டும் முத்துவின் அழுத்தமான

பார்வையில். அவள் அமைதியாகிப் போனாள்.

“இல்ல முல்ல... நான் அவர் கூட சேரணும்னு விதி இருக்கு...

இல்லன்னா எப்பவும், கோபத்துல அங்கேயே கத்துவேனே

தவிர, இப்படி எல்லாம் கிளம்பி வந்தது இல்ல தானே... இந்த

தடவை பாரு... நான் அங்க இருந்து கிளம்பி வந்து... அவரோட

கார்ல ஏறி, அவரும் என்னை இவ்வளவு தூரம் கொண்டு

விடணும்ன்னு என்ன இருக்கு? அங்கேயே பக்கத்துல என்னை

ட்ரைன்ல ஏத்தி விட்டு இருக்கலாம் இல்ல... எல்லாம் என்

விதி... இவ்வளவு செய்த விதி... அவரோட மனசையும்

மாத்துமா?” ஏக்கமாக அவள் கேட்கவும், என்ன பதில்

சொல்வதென்று தெரியாமல், முல்லை அமைதியாகவே


வந்தாள்.

ஒருவழியாக ஊர் வந்து சேர, கஜாவின் வட்டின்


ீ உள்ளே வேன்

சென்று நிற்பதற்கு முன்பே, தனலட்சுமியும், பழனியும் வேனில்

இருந்து குதித்து வட்டினுள்


ீ ஓடினர். அதுவும் தனலட்சுமி

போட்ட கூச்சலில், ஊரே அங்கு குழுமிவிட, அவர்களைப்

பார்த்த முல்லைக்கு நடுக்கம் பிறந்தது.

பயத்தினில் அவளது உடல் வெடவெடக்கவும், அவளுக்கு பேய்


பிடித்திருக்கிறது என்று ஊர் மக்களினால் ஒரு புதுக்கதை

புனையப்பட்டு அவளை தப்பிக்க வைக்க, கஜாவோ,

செல்வராசுவின் பெல்ட்டிற்கு பலியாகிக் கொண்டிருந்தாள்.

“உன் மேல நம்பிக்கை வைச்சதுக்கு நல்ல மருவாதிய தேடிக்

கொடுத்துட்ட... உன்னை உசுரோட புதைக்கிறேன் பாரு...”

என்று கர்ஜித்தவர், அவள் சுருண்டு விழுவதையும்

பொருட்படுத்தாமல்,

“இவளை கொண்டு போய், அந்த பாதாள அறையில போட்டு

பூட்டுங்க... சோறு தண்ணி எதுவும் கொடுக்கக் கூடாது...

அப்படியே செத்தாலும், அங்கேயே புதைச்சிருங்க...”

கோபமாக அவர் கூறவும், முத்து செய்வதறியாமல்

திகைத்தான்.
அவரது சொல்லுக்கு மறுப்புச் சொல்ல முடியாமல், முதல்

வேலையாக முல்லையை கவனிக்கச் சென்றான். அவளது

ஏற்பட்டிருந்தபயத்தில், வைத்தியர் கொடுத்த எந்த மருந்தும்

வேலைக்கு ஆகாமல் போக, கோவிலுக்கு அழைத்துச் சென்று

அவளுக்கு வேப்பிலை அடித்தனர்.

கஜாவை பாதாள அறையில் அடைத்த பின்னரும் கூட,

செல்வராசுவுக்கு ஆத்திரம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

“இவளை மயக்கின அந்த ஆள், இவளைத்தேடிட்டு

வந்தான்னா... இவ இருக்கற தடயமே தெரியக் கூடாது...

அதையும் மீ றி அவன் எதுனா பிரச்சனை பண்ணினான்னா,

நம்ம மாரியாத்தாளுக்கு அவனை காவு கொடுத்திருங்க...”

அவரது உறுமலில், அந்த ஊரே அவருக்கு கட்டுப்பட்டது.

ப்ரித்வி ஊரை விட்டு வெளியில் செல்லும் வரை,

செல்வராசுவின் ஆட்கள், அவன் ஏதாவது பிரச்சனை

செய்தால், அவனை அங்கேயே வெட்டிக் கூறு போட்டு

விடுவதற்காகவே அவனைப் பின் தொடர்ந்து சென்றனர். எந்த

பிரச்சனையும் செய்யாமல் அவன் திரும்பிச் செல்லவும்,


சந்தோஷத்துடன் அவர்கள் செல்வராசுவிடம் திரும்பி

வந்தனர்.

“அய்யா... அவனுங்க நம்ம படையைப் பார்த்து

பயந்துட்டானுங்க... இனிமே திரும்ப வர மாட்டானுங்கய்யா...”


அவர்கள் சத்தமாக கெக்கலி கொட்டிச் சிரிக்கவும், கஜாவிற்கு

அவர்கள் சொல்வது காதில் விழுந்தது.

“யார் வந்திருப்பா? யார் இவங்களைப் பார்த்து பயந்தாங்க?”

அவளது மனம், அத்தனை வலிகளையும் மீ றி சிந்திக்க, மூளை


கூறிய பதிலை புரிந்துகொண்ட கஜாவிற்கு சந்தோஷம்

ஊற்றேடுப்பதாய்....

தனது காதை கூர்மையாக்கிக் கொண்டு, மெல்ல ஊர்ந்து

சென்று, பாதாள அறையின் உள் புறம் இருந்து மேலே

வருவதற்கு வைத்திருந்த படிக்கட்டில் அவள் அமர,

“என்னவோ கார் விக்க வந்தேன்... அது இதுன்னு

சொன்னான்... இவளைப் பத்தி அதுக்கும் மேல ஒரு வார்த்தை

கேட்கலையே... நிஜமாவே கார் விக்க வந்தவன் தானோ?”

செல்வராசு சத்தமாக கேட்டுக் கொண்டே யோசிக்கவும், ‘கார்


விற்க’ என்ற சொல்லே கஜாவிற்கு வந்தது யார் என்பதை

சந்தேகமில்லாமல் புரிய வைக்க, துள்ளிக் குதிக்க அவளது

கால்கள் பரபரத்தது.

செல்வராசுவின் பட்டை பெல்ட்டின் அடியினாலும், அவளது

அன்னை போட்ட சூட்டினாலும், கால்களை நகர்த்த முடியாமல்

வலி கொன்றாலும், தட்டுத்தடுமாறி எழுந்து நின்றவள்,

அவ்வளவு வலியையும் பொறுத்துக் கொண்டு, மனம் துள்ள,


அந்த அறையை குதித்துக் கொண்டே வலம் வந்தாள்.

“என் ப்ரித்வி... என் ப்ரித்வி... என் ப்ரித்வி என்னைத் தேடி

வந்துட்டாரு.... என் ப்ரித்வி வந்துட்டாரு... இனி என்னை

கூட்டிட்டு போகாம விட மாட்டாரு...” கண்களில் கண்ண ீர்

வழிய, அவள் அறையைச் சுற்றிச்சுற்றி வர, நெஞ்சம்

வெடிக்கும் அளவு நேசம், அவளை விம்மச் செய்தது.

ரத்தம் கட்டிக்கொண்ட கால்களின் வலி அவளது

சந்தோஷத்திற்கு அணைப் போடுவது போல இருக்க, மெல்ல

அங்கிருந்த கட்டிலில் சென்று விழுந்தவள்,

“ப்ரித்வி... ப்ரித்வி... வந்துட்டீங்களா? என்னை கூட்டிட்டுப்

போக வந்துட்டிங்களா? நான் இங்க இருக்கேன் ப்ரித்வி...”

அவனிடம் மனதினில் பேசியவள்,

“ஹே முல்ல... பார்த்தியா, நான் சொன்னேன் இல்ல,

பார்த்தியா? என் ப்ரித்வி வந்தாச்சு.. இப்போ என்ன சொல்ற?”

தன்பெருமை பொங்கும் பேச்சைக்கேட்க,

அவ்விடத்தில்முல்லை இல்லாததை எண்ணி வருந்தியவள்,

ப்ரித்வி அவளைத் தேடி வந்த சந்தோசம் தாளாமல், கட்டிலில்

விழுந்து அழுதாள்.

கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு, அவள் அசையாமல் இருக்க,


“கழுத... செய்யறதை எல்லாம் செய்துட்டு அழுகுது பாரு...”

என்று திட்டியபடி, அவளது அன்னையும், கூடவே பழனியும்

படிகளில் இறங்கிக் கொண்டிருந்தனர்.

“நான் என்ன தப்பு செய்தேன்... அந்த பெரியாத்தா சொல்றது

எல்லாம் பொய்... ஹாஸ்டல் உள்ள இருந்தவ, அதே

சமயத்துல எப்படி வெளியவும் இருப்பேனாம்... வேணா

முல்லையையே கேளுங்க...” முகத்தைத் திருப்பாமல் அவள்

கத்தவும்,

“அது தான் நீ அவன் கூட பேசிட்டு இருந்தத, அவுக மவ

போட்டோ பிடிச்சிட்டு வந்து என்கிட்டே காட்டினாகளே... அது

போல தானே நானும்உன்னைத்தொட்டேன்... அதுக்கு மட்டும்

உனக்கு உடம்பு கூசுதாக்கும்...” வக்கிரமாக பழனி கேட்கவும்,

காதை பொத்திக் கொண்டவள், மீ ண்டும் அழத்

தொடங்கினாள்.

“காதுல இருந்து கைய எடுத்துட்டு இந்த சோத்தை தின்னு...


கல்யாணம் முடியறதுக்கு முன்ன செத்து கித்து வைக்கப்

போற... அதுக்காகவே உங்க அப்பாகிட்ட பேசி, சாப்பிட எடுத்து

வந்து இருக்கேன்... அப்பறம் இவன் கிட்ட வாங்க வேண்டியது

எல்லாத்தையும் வாங்க முடியாம போயிரும்..” தனத்தின்

சொந்தக்காரனான பழனிக்கு,எங்கே அவளை திருமணம்

செய்து கொடுக்க முடியாமல் போய் விடுமோ, என்ற


எண்ணத்துடன் அவர் பேசவும்,

அவசரமாக எழுந்த கஜா, அவரது கையில் இருந்த தட்டை

பிடுங்கி, சாப்பாட்டிலிருந்துஒரு வாய் எடுத்துவைக்க,

“சே...இதுல உப்பு சப்பு எதுவுமே இல்ல...” என்றபடி அவள்

துப்பப் போக,

“உப்பு சப்பு இருக்கற சாப்பாடா தின்னப் போய் தானே...

தினவெடுத்து அலைஞ்ச... இதையே சாப்பிடு..” பழனியின்

வக்கிர நாக்கு மேலும் நீ ளத் தொடங்கவும்,

“எங்க ஹாஸ்டல் சாப்பாட்டை விட இது ஒண்ணும் மோசம்

இல்ல... நல்லா தான் இருக்கு...” என்றவள், அதை ரசித்து

ருசித்து உண்ணத் தொடங்க, அதுவே தனத்திற்கு மேலும்

கோபத்தைக் கொடுத்தது.

“படிச்ச திமிருடி... உன்னை எல்லாம், உங்க அக்காளுங்க

மாதிரி, வயசுக்கு வந்த உடனே கட்டிக் கொடுத்திருந்தா...

இப்படி பேச மாட்ட... தின்னு... நாளைக்கு தலைக்கு குளிக்க

வெளிய கூட்டிட்டு போவேன்... எதுனா ஏமாத்த நினைச்ச...

அங்கேயே உன்னை என்ன செய்வேன்னு தெரியாது...” அவள்


சாப்பிடும் வரை இது போன்ற பல வசவுகள் விழுந்த வண்ணம்

இருக்க, எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல், கஜா

சாப்பிட்டு முடித்தாள்.
“இந்தா இதுலே கைக் கழுவு... கொல்லைக்கு போகணும்னா...

கதவைத் தட்டு... வந்து கூட்டிட்டு போறேன்...”

செல்வராசுவிற்கு மேல், தனம் உறுமிவிட்டு செல்ல,

“எனக்கு இப்போ போகணும்...” அவள் சொல்லவும்,

“எழுந்திரு...” என்றவர், அவளை கைப்பிடியாகவே அழைத்துச்

சென்றார். எந்த சண்டித்தனமும் செய்யாமல் திரும்பி

வந்தவள், மீ ண்டும் அதே அறைக்குள் சென்று அடையவும்,

செல்வராசு அவளை சந்தேகமாகப் பார்க்க, அவளோ எதையும்

கண்டுகொள்ளாமல் நடந்துக் கொண்டாள்.

ப்ரித்வி அவளைத் தேடி வந்திருக்கிறான் என்ற செய்தியே

அவளுக்கு மனதினில் புதுத் தெம்பை கொடுத்தது, இவர்களை

எதிர்கொள்ளும் தைரியத்தைக் கொடுத்து, ப்ரித்வி தன்னை

மீ ட்கும் நிமிடத்திற்காக காத்திருக்கத் தொடங்கி இருந்தாள்...

அவளது மனதில், தன் மனதிற்குகந்த ப்ரித்வியை, ராஜா

ப்ரித்விராஜனைப் போலவும், தன்னை ராணி

சம்யுக்தாவாகவும் நினைத்துக் கொண்டு, குதிரை மீ து வந்து,


அவன் தன்னை சிறை மீ ட்டு செல்வது போல எழுந்த

கற்பனையில், சுகமாக கண்களை மூடி உறங்கியும் போனாள்.

கவிதைகள் தொடரும்....
கவிதை – 16
ஜன்னலில் வழி வந்து விழந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே
தீப்பொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உறசிட
கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகை பாட ஒரு மொழி இல்லை
அளந்து பார்க்க பல விழி இல்லையே…
நடுநிசியையும் தாண்டி தனது ஹோட்டல் அறையின்

பால்கனியில், ப்ரித்வி உலவிக் கொண்டிருந்தான்... கஜாவை

எப்படி கண்டுபிடிப்பது, என்ன செய்வது.... ஏது செய்வது என்று

இன்னமும் அவனது யோசனை நீண்டுக் கொண்டே சென்றது.

மீ ண்டும் தன் மனதில், அன்று கிராமத்தில் நடந்ததை அவன்

யோசிக்கத் தொடங்க, யோசனையில் இருந்த அவனது முகம்,

நன்றாக மலரத் துவங்கியது.


“என்னாச்சு தம்பி... ஏதாவது யோசனை கிடைச்சதா?” அவனது

முகம் மலர்வதைப் பார்த்த ராமண்ணா, அவசரமாகக் கேட்க,

“ஏன் ராமண்ணா... நான் அந்த ஆளு கிட்ட அவ முல்லையான்னு

தானே கேட்டேன்? கஜா கூட படிச்ச பொண்ணுன்னோ... இல்ல

இவ பட்டணத்துல படிச்ச பொண்ணுன்னோ கேட்டேனா என்ன?”


அவன் தனது மனதில் ஒட்டிக் கொண்டிருந்த சிறு துளி

சந்தேகத்தையும் விரட்டியடிக்கக் கேட்கவும்,

சில நிமிட யோசனைக்குப் பிறகு... “இல்ல தம்பி... லக்ஷ்மிய பத்தி

கேட்ட பிறகு... நீங்க இவ முல்லையான்னு தான் கேட்டீங்க....

அவள பத்தி வேற எதுவும் நீங்க குறிப்பிட்டு கேட்கல...” ஐயம்

திரிபுர அவர் சொல்லவும்,

“அதே தான் ராமண்ணா... அவ முல்லையே தான்... வேணா அவ

பேர் முல்லைக்கொடியா கூட இருக்கலாம்... அது நமக்கு

முக்கியம் இல்ல... நான் முல்லையான்னு கேட்டதுக்கு, எதுக்கு

அந்த ஆள், அவ படிக்காதவ, அப்படி இப்படின்னு ஏகப்பட்ட

விவரங்களைச் சொல்லணும்?

எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லைங்கற மாதிரி தானே அந்த ஆள்

சொல்லி இருக்கார்.... ஆக.... என் லக்ஷ்மியோட பிரெண்ட் தான்

இந்த முல்லை... நம்ம கண்ணு நம்மளை ஏமாத்தலை


ராமண்ணா... அவனுங்க தான் ஏமாத்தறாங்க... ஏன்?” மீ ண்டும்

அவன் தாடையைத் தடவிக்கொண்டு யோசிக்கவும்,

“ஏன் ராமண்ணா... மதுரைல நாம அந்தக் கடையில டீ

குடிக்கும்போது, ரெண்டு லேடீஸ் என்னை ஒரு மாதிரி

குறுகுறுன்னு பார்த்தாங்க இல்ல... ஒருவேளை... நானும்


லக்ஷ்மியும் பேசிட்டு இருந்ததை அவங்க பார்த்து

இருப்பாங்களோ? நாங்க சும்மா தானே பேசிட்டு இருந்தோம்...”

கோபத்திலும், உணர்ச்சி வேகத்திலும், அவளது கையை தன்

கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டதையும், அவளது

கைகளை தனது கைகளில் கோர்த்துக் கொண்டதையும் மறந்து,

ப்ரித்வி கேட்க, அவனை கூர்ந்து பார்த்த ராமண்ணா,

“தம்பி... நீங்க உங்க கதையை சொல்லிக்கிட்டே, அந்த பொண்ணு

கையப் பிடிச்சீங்க... அப்பறம்...” அவர் சொல்லத் தயங்கவும்,

“அப்பறம்... என்ன செய்தேன் ராமண்ணா... கட்டி கிட்டி

பிடிச்சுட்டேனோ...” அவன் பதட்டத்துடன் இழுக்கவும், ராமண்ணா

மறுப்பாக தலையசைத்து, அவனைப் பார்த்து கிண்டலாகச்

சிரித்தார்.

“என்ன ராமண்ணா... இந்த நேரத்துல விளையாடிக்கிட்டு

இருக்கீ ங்க?” அவன் கேட்கவும்,


“இல்ல தம்பி.. மன்னிச்சிருங்க... அந்த நேரத்துலயும் நீங்க

கொஞ்சம் தான் உணர்ச்சி வசப்பட்டீங்க.... லக்ஷ்மியோட கைய

தான் பிடிச்சு உங்க கன்னத்துல வச்சுக்கிட்டீங்க... வேற எதுவுமே

செய்யல... நீங்க அவ்வளவு ஸ்டெடியா இருந்தீங்கன்னு சொல்ல

வந்தேன்.. சிரிப்பு வந்திருச்சு...” சிரித்துக் கொண்டே அவர் தனது

கிண்டலுக்கான காரணத்தை விளக்கவும், ப்ரித்வியின்

இதழ்களிலும் புன்னகை விரிந்தது.

“சரிங்க ராமண்ணா.... லக்ஷ்மி சொல்ற மாதிரி, நான் சாமியார்

தான்... விடுங்க.. இப்போ நாம விஷயத்துக்கு வருவோம்...”

என்றவன், அவர் சம்மதமாக தலையசைத்து,

“நானும் பார்த்துக்கிட்டே தானே தம்பி இருந்தேன்... அந்தப்

பக்கம் ஆள் நடமாட்டமே இல்ல... அதனால உங்க ரெண்டு

பேரையும், அந்த சமயத்துல யாரும் பார்த்திருக்க வாய்ப்பு

ரொம்ப குறைவு... ஆனா என்னவோ இடிக்குது தம்பி...

ஒருவேளை அந்த ரெண்டு லேடீசும், நீ ங்க பார்க்க பளிச்சுன்னு

சினிமா நடிகர் போல இருக்கீ ங்கன்னு, உத்து உத்து

பார்த்திருப்பாங்களோ?” அவர் ஒரு சந்தேகத்தை கிளப்ப,

ப்ரித்வி அவரை முறைத்தான்...

“உண்மைய சொன்னா நம்பணும் தம்பி... ஆராயக் கூடாது...”

விடாமல் அவர் வம்பு பேசவும்,

“நீ ங்க வேற ஏன் ராமண்ணா இந்த நேரத்துல காமெடி


செய்துட்டு இருக்கீ ங்க... அந்த ஆள் உளறினதுல இருந்தே...

இவ தான் முல்லைன்னு நமக்கு நல்லாவே புரியுது... ஆனா,

என் லக்ஷ்மிக்கு என்ன ஆச்சு? அந்த பழனி வேற, “அவ எங்க

போனா?’ன்னு கேட்டு உளறினான்... நான் லக்ஷ்மியைப் பத்தி

கேட்கவும், அவன் கேவலமா பேசிட்டு போறானே... இவனை

நம்பி எப்படி அவங்க வட்ல


ீ பொண்ணு கொடுக்கறாங்க...”

என்று புலம்பியவன்,

“எனக்கு என்னவோ, யாரோ எங்களை பார்த்து


இருப்பாங்களோன்னு உள் மனசு சொல்லிக்கிட்டே இருக்கு

ராமண்ணா... அதுவும் அந்த ரெண்டு லேடீஸ் பார்த்த பார்வை

சரியே கிடையாது... என்னவோ உறுத்துது..

அதுவும் தவிர, அந்த ஆள் உளறினதுல இருந்து ஒரு விஷயம்

நல்லா புரியுது. யோசிச்சு பாருங்க... நான் லக்ஷ்மியைத் தேடி

வருவேன்னு அவங்க நல்லாவே கணிச்சு வச்சிருக்காங்க...

அதனால தான், அது ஒரு பின்தங்கிய கிராமமா இருந்தும் கூட,

புதுசா வந்த நம்மளை யாருமே கண்டுக்கல..” ப்ரித்வி

ராமண்ணாவிடம் சொல்லவும்,

“யோசிக்க வேண்டிய விஷயம் தம்பி...” ராமண்ணாவும்

ஒத்துப் பேசினார்.

“அப்பறம், நாம விசாரிச்ச போது, அவளுக்கு ரெண்டு


அக்காவும், ஒரு தம்பியும்ன்னு சொன்னாங்க... ஆனா, அந்த

ஊர் பெரியதனக்காரர்... அது தான் என் மாமனார்... லக்ஷ்மிய

மட்டும் தவிர்த்துட்டு, மீ தியுள்ள தன்னோட பசங்களை பத்தி

எல்லாம் சொல்லி இருக்கார்... அப்படிச் சொன்னவர், நான்

காரை பத்தி சொல்லவும், எப்போ சொன்னாங்கற விவரத்தை

எதுக்கு கேட்கணும்? ஒருவேளை நாங்க பேசிட்டு இருந்ததைப்

பார்த்தவங்க, இவர்கிட்ட தப்பா சொல்லி, அந்த சந்தேகத்தை

தீர்த்துக்க அவர் கேட்டாரோ?

இத்தனைக்கும் மேல, நாம காருக்கு வர வரை, நம்மளை பின்

தொடர்ந்து வந்தவங்க... நாம ஊரை விட்டு


கிளம்பிட்டோமான்னு உறுதி செய்துக்கற மாதிரி எதுக்கு

பார்க்கணும்? அப்போ, என்னை இவங்களுக்கு அடையாளம்

தெரியுது.... எனக்கும் லக்ஷ்மிக்கும் சம்பந்தம் இருக்கறது,

இவங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு.... அப்போ

கண்டிப்பா, நாங்க கார்கிட்ட பேசினதை யாரோ பார்த்து

இருக்காங்க ராமண்ணா... அது தான் நடந்திருக்கு..” ப்ரித்வி,

தான் யோசித்த அனைத்தையும் சொல்லச் சொல்ல,

ராமண்ணா, தலையை பிடித்துக் கொண்டார்.

“லக்ஷ்மியை, யாரவது சொந்தக்காரங்க வட்டுக்கு


ீ அனுப்பி

இருப்பாங்களோ ராமண்ணா? இல்ல அவளை ஏதாவது

செய்திருப்பாங்களா?” ப்ரித்வி பயத்துடன் கேட்கவும்,

ராமண்ணாவிற்கும் பயம் பிடித்துக் கொண்டது.


அந்த நேரம், ராமண்ணாவின் மகள் போனில் அழைக்கவும்,

“ஹ்ம்ம் சொல்லும்மா...” சுரத்தே இல்லாமல் அவர் போனில்

கேட்க,

“என்னங்க அப்பா... இன்னைக்கு அண்ணாவுக்கு பொண்ணு

கேட்டு போனது என்னாச்சு?” ஆவலே வடிவாக அவள்

கேட்கவும், போனை காதில் கூட வைத்துப் பேசப் பிடிக்காமல்,

ஸ்பீக்கரில் இயக்கிய ராமண்ணா, அவளது கேள்விக்கான

பதிலாக, ‘என்ன சொல்வது’ என்பதை போல ப்ரித்வியைப்

பார்க்க,

“இல்ல டாக்டர்... அங்க அப்படி ஒரு பொண்ணே

இல்லையாம்... ஊர்க்காரங்க கற்பூரம் அடிச்சு சத்தியம்

செய்யாத குறையா சொல்றாங்க... அது தான் அவ எங்க

இருப்பான்னு யோசிச்சிட்டு இருக்கோம்...” ப்ரித்வியின்

பதிலைக் கேட்டவள்,

“என்ன அன்னைய்யா.... ஒருநாள் முழுசுக்கும் கூடவே

வந்திருக்கீ ங்க... அந்த பெண்ணை பத்தின ஒரு விவரமும்

சரியா தெரியலையே... என்னத்தை லவ் பண்றீங்களோ

போங்க...” அவள் விளையாட்டாகச் கலாய்த்தாள்.

“நாங்க எல்லாம் சரியா தான் செய்திருக்கோம் டாக்டர்...


ஆனா, அந்த ஊர் மொத்தமுமே பொய் சொல்றாங்க... நான்

என்ன செய்யறது? அதான், அவளை எப்படி

கண்டுப்பிடிக்கறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்... ஒண்ணும்

புடிபடவே மாட்டேங்குது...” அவன் வருந்த,

“நாங்க அவங்க வட்டுக்கே


ீ போய் பார்த்துட்டு வந்துட்டோம்...

அவங்க அப்பாவும்... அப்படி ஒரு பொண்ணே இல்லன்னு

சாதிக்கிறார்...” ராமண்ணா இடையில் சொல்லவும்,

“என்னது?” என்று அவரது மகளும் அதிர்ந்தாள்.

“ம்ம்... ஆமா டாக்டர்...” என்றவன், அன்று ஊரில் நடந்த

அனைத்தையும் சொல்ல,

“நீ ங்க எப்போ திரும்ப ஊருக்குள்ள வருவங்கன்னு


ீ அவங்க

பயப்படறாங்களோ... அப்போவே தெரியல... அண்ணி அங்க

தான்... அந்த ஊர்ல தான் இருக்காங்கன்னு... மறுபடியும் நீ ங்க

ஏதாவது மாறுவேஷத்துல போய் தேடுங்க அன்னைய்யா...

அந்த ஊருல ஒருத்தர் கூடவா உங்களுக்கு உதவ மாட்டாங்க...

இதை இப்படியே விடாதீங்க... உங்களுக்கு இந்த எண்ணம்

வந்ததே பெருசு...

இப்போ அதையும் இப்படியே விட்டா... நீ ங்க கடைசி வரை,

‘நான் பாச்சிலர்தான்’னு சொல்லிட்டு இருப்பீங்க... உங்களை

‘நான்-பாச்சிலரா’ பார்க்க எனக்கு ஆசையா இருக்கு...”


படபடவென அவள் கிண்டல் செய்யவும், ப்ரித்வி அமைதியாக

இருக்கவும்,

“மிருதுளா கொஞ்சம் சும்மா இரு...” ராமண்ணா கண்டிக்க,

அவரது அதட்டலில், “ஏன் ராமண்ணா? அவளை அதட்டறீங்க?


எப்பவும் என்னைப் பார்த்தா ‘வாங்க அன்னைய்யா’ன்னு

சொல்லிட்டு உள்ள போய் ஒளியற பொண்ணு... இன்னைக்கு


என்கிட்டே நிஜமாவே அண்ணன்கற உரிமையில சண்டை
போடறதை நினைச்சு நான் சந்தோஷப்பட்டுக்கிட்டு

இருக்கேன்...

என் லக்ஷ்மி வந்த நேரம் பாருங்க... எனக்கு தங்கை உறவு

உரிமையோட வருது... அதுவும் தாட் பூட் தஞ்சாவூர்

தோரணையோட...” அவன் கேலி செய்ய,

“ஹே ஹேய்... இதோ பாருடா... எனக்கு எப்பவுமே நீ ங்க

அன்னைய்யா தான்... இவ்வளோ நாளா, உங்க உர் உர்

முகத்தைப் பார்த்தா கொஞ்சம்... ஹும் ஹும்... நிறையவே

பயமா இருக்கும்... எங்கே ஏதாவது பேசி வாங்கிக்

கட்டிக்குவேனோன்னு பயமா இருக்கும்... அதனால தான்

பேசாம ஓடி ஒளிஞ்சேன்... இப்போ தான் எங்க அன்னைய்யா...

வசமா லவ்ல சிக்கிக்கிட்டு, ரொம்ப சாஃப்ட்டா பேசறாரே...

எனக்கு எப்படி பயம் இருக்கும்... அதனால உள்ளுக்குள்ள


இருந்த உரிமையை வெளிய எடுத்துவிடறோமாக்கும்...

அதெல்லாம் உங்க லக்ஷ்மி வந்த நேரம் ஒண்ணும் இல்ல..”

அவள் போலியாக கோபம் காட்ட, ப்ரித்வி சத்தமாக சிரிக்கத்

தொடங்கினான்.

ஆனாலும், அவனது முருங்கை மரம் ஏறும் கோப குணத்தை

அறிந்த ராமண்ணா, “மிருதுளா வாய அடக்கிப் பேசு...” என்று

மீ ண்டும் அதட்ட,

“ராமண்ணா... இன்னொரு தடவ அவளை அதட்டின ீங்கன்னா

பாருங்க...” என்று அவரை எச்சரித்தவன்,

“சொல்லு டாக்டர்... நான் என்ன வேஷம் போட்டுக்கிட்டு

போகலாம்... சாமியார் வேஷம்....” அவன் யோசனையாக

இழுக்கவும்,

“அது உங்களுக்கு ஏத்த வேஷம் தான்... இருந்தாலும் அப்பறம்


நீ ங்க அண்ணிய பார்த்த உடனே லவ் மோடுக்கு ஸ்விட்ச்

ஆகிட்டீங்கன்னு வைங்க... உங்களையும் போலி சாமியார்

லிஸ்ட்ல சேர்த்துடுவாங்க... அதனால அது வேண்டாம்...

அண்ணி பாவம்” என்றவள், சிறிது நேரம் யோசித்துவிட்டு,

“எல்லாமே நானே சொல்லிட்டேன்னா.. உங்க லவ்ல திரில்

இருக்காது அன்னைய்யா... நீ ங்களே யோசிச்சு செய்ங்க...


அப்போ தான் அண்ணிக்கு நீ ங்க பெரிய ஹீரோவா
தெரிவங்க...”
ீ என்று கேலி செய்தவள்,

“அப்புறம் ஒண்ணு வேணும்...” என்று தயங்க,

“என்ன டாக்டர்... ஏதாவது பீ ஸ் கட்ட சொல்லிட்டாங்களா...

தயங்காம கேளு..” அவன் ஊக்கவும்,

“இல்ல அன்னைய்யா... உங்க கோப மோட் போய் இப்போ


வந்திருக்கற லவ் மோட்ல உள்ள உங்க போட்டோ ஒண்ணு

வேணும்... கொஞ்சம் வாட்ஸ் ஆப்ல அனுப்பி விட்டீங்கன்னா...

அம்மாகிட்ட காட்டி காட்டி சிரிப்பேன் இல்ல... உங்க


ரெண்டாவது தங்கை விதுலாவும் உங்க லவ் மோட் எப்படி

இருக்குன்னு பார்க்க ஆவலா இருக்கா...” அவள்

கிண்டலடிக்கவும்,

“உதை விழும்கழுதை... நீ ங்ககிண்டல் செய்து சிரிக்க, என்

போட்டோதான் வேணுமா... அனுப்ப முடியாது போ...” என்று

பிகு செய்தவன்,

“சரி சரி... நான் இப்போ திங்கிங் மோடுக்கு போகப் போறேன்...

அப்பறம் பேசலாம்...” என்று போனை அணைத்தவன்,


புன்னகையுடன் கூடிய தன்னுடைய புகைப்படத்தை செல்ஃபி
எடுத்து அவளுக்கு அனுப்பிவிட்டு மீ ண்டும் யோசனையில்

ஆழ்ந்தான்.
“ஹ்ம்ம் வேற என்ன வேஷம் இருக்கு போடுறதுக்கு??” அவன்

மீ ண்டும் தாடையைத் தடவ, இரண்டு நாள் மழிக்கப்படாத தாடி

அவன் கைகளில் தட்டுப்பட்டது.

“இப்போ என் முகம் அவங்களுக்கு தாடியோட தானே

தெரியும்... நாளைக்கு ஷேவ் செய்துட்டு போனா என்னை

அடையாளம் தெரியுமா?” ராமண்ணாவிடம் கேட்கவும்,

அவரும் யோசனையாகப் பார்க்க,

“ஆனா... அப்படி ஒண்ணும் உங்க முகமே மாறிப்போய்

தெரியற அளவுக்கு தாடி இல்லையே தம்பி... சரி அப்படியே

ஷேவ் செய்துட்டு போனாலும்... என்னன்னு சொல்லிக்கிட்டு

போவங்க?
ீ இன்னும் கொஞ்சம், வேற எதுனா யோசிங்க தம்பி”

அவர் கேட்கவும், அப்பொழுது அந்த ஊரின் காய்ந்த பூமி

அவனது மூளைக்கு எட்ட,

“ஹ்ம்ம்... ஒரு பத்திரிக்கை ரிப்போர்ட்டர் போல நான் அந்த

ஊருக்குள்ள நுழையறேன்... அந்த நிலத்தை எல்லாம்

போட்டோ எடுத்து... சும்மா அந்த ஊர் மக்கள்கிட்ட

விசாரிக்கறேன்... எப்படியும் யார் வட்லயாவது


ீ லக்ஷ்மியை

பத்தி பேசாம போயிருவாங்களா என்ன?” யோசனை கிடைத்த

திருப்தியுடன் அவன் கேட்கவும்,

“நல்ல யோசனை தம்பி... அதுக்கு ஏத்தா போல பக்கத்துல


இருக்கற கடையில போய் ட்ரெஸ்ஸும் வாங்கிக்கலாம்”

அவருக்கும் சரியாகப் பட, ராமண்ணாவும் அவனுக்கு

இசைவான பதிலைத் தந்தார்.

“நீ ங்க இங்கயே இருங்க ராமண்ணா... ஒருவேளை எனக்கு

உதவி தேவை பட்டுச்சுன்னா... நீ ங்க வெளிய இருந்தாத்தான்

நல்லது... சட்டுன்னுஉதவிக்கு வரலாம் இல்ல...”

“ஹ்ம்ம்.. நானும் கூட வரேனே..” என்று கேட்க நினைத்தாலும்,

அவனது முடிவும் சரயெனத் தோன்றியதால், அருகில் இருந்த


கடைக்குச் சென்று தனக்கு ஜிப்பாவை வாங்கிக்கொண்டு வந்த

ப்ரித்வி படுக்கையில் விழ, ராமண்ணாவும், தன்னுடைய

படுக்கையில் விழுந்தார்.

சிறிது நேரம் முழித்திருந்த ராமண்ணா உறங்கிப் போக,

ப்ரித்விக்குத் தான், லக்ஷ்மியை காணும் வரை தூக்கம்

நெருங்க மாட்டேன் என்று ஆட்டம் காட்டியது.

“லக்ஷ்மி... நீ எங்க இருக்க? அப்போ நான் உன்னை அழ விட்டு

தவிக்க விட்டதுனால, இப்போ நீ என்னை தவிக்க வச்சு

ஆட்டம் காட்டறியா?” அவனது மனம் திரும்பத் திரும்ப

அதையே கேட்க, பொட்டு உறக்கம் கூட இல்லாமல், ப்ரித்வி

விழித்துக் கிடந்தான்.
 காலை சூரிய உதயத்தின் போதே, ப்ரித்வி கண்ணாடியின்

முன்பு நின்றிருந்தான்.... ஷேவ் செய்து குளித்து முடித்தவன்,


தன்னுடைய பையில் ஒரு மூலையில் இருந்த தன்னுடைய
அலுவலக அடையாள அட்டையை எடுத்து கழுத்தில் மாட்டிக்

கொண்டு, அவனது புகைப்படம் வெளியில் தெரியாதது போல,

சொருகிக் கொண்டான்.

தனது கேமராவை எடுத்துக் கொண்டவன், கூலிங் க்ளாசை

மாட்டிக்கொண்டு, ராமண்ணாவைப் பார்க்க, அவரோ

கலவரத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்னாச்சு ராமண்ணா? எதுக்கு இப்போ பேயடிச்சா மாதிரி

இப்படி உட்கார்ந்து இருக்கீ ங்க?” விளையாட்டாகவே அவன்

கேட்க,

“தம்பி... நேத்து அஞ்சு பேர் நம்மளை பின்தொடர்ந்து வந்தாங்க

தம்பி... அவங்களால ஏதாவது ஆபத்து வந்தா... தம்பி... நம்ம

ஜோசப்பை நான் வர சொல்லறேன்... அவன் வந்த உடனே

நீ ங்க போங்க தம்பி... தேவைன்னா, அவனுங்களை அடிச்சு

போட்டுட்டு, லக்ஷ்மிய தூக்கிட்டு வந்திடலாம்...” அவர்

யோசனை சொல்லவும், மறுப்பாக தலையசைத்துக்

கொண்டே அவர் அருகில் அமர்ந்தான்.

“பயப்படாதீங்க ராமண்ணா... எனக்கு ஒண்ணும் ஆகாது...


ஜோசப் அடியாளுங்களோட வந்து, எனக்கு உதவி செய்து...
அதுக்கு அப்பறம் நான் லக்ஷ்மியை அந்த நரகத்துல இருந்து

மீ ட்டா... அது எங்க காதலுக்கு அழகு இல்ல தானே.. நானே

போய் மீ ட்கறேன்... என் மேல நம்பிக்கை இல்லையா” அவன்

இப்படி கேட்கவும், என்ன பதில் சொல்வது என்று புரியாத

ராமண்ணாவும், அவனுக்கு இசைவாகவே தலையசைத்து

வைத்தார்.

“சரி ராமண்ணா... நான் போயிட்டு கூடிய சீக்கிரம் உங்களுக்கு

கால் பண்ணறேன்..” என்றவன் கிளம்ப எத்தனிக்க,

“அந்த பக்கத்து ஊர் எல்லை வரை நான் கொண்டு விடறேன்

தம்பி... அதுக்கு பிறகு நீ ங்க நடந்து போங்க... ஜாக்கிரதை....”

என்று ஆயிரம் முறை சொல்லி, அந்த ஊரின் எல்லை வரை

ராமண்ணா கொண்டு விட்டு,

“எதுக்கும் நானும் உங்க கூட வரவா?” மனம் கேளாமல்

ராமண்ணா கேட்கவும்,

“மறுபடியும் நாம ரெண்டு பேரும் போனா சந்தேகம் வரும்...


நான் மட்டும் போயிட்டு அங்க உள்ள நிலைமைய பார்த்து

உங்களுக்கு கால் பண்றேன்” என்றவன், ஊரை நோக்கி

நடக்கத் தொடங்கினான்.
புகைப்படம் எடுப்பதில் முன்பே பிரியம் உள்ள ப்ரித்வி,

அங்கிருந்த காய்ந்த சருகைக் கூட விடாமல், தனது

கேமராவில் சுருட்டிக் கொண்டே, கஜாவின் ஊருக்குள்

நுழைந்திருந்தான்.

ஊரே அமைதியாக காணப்பட்டது. அங்கொருவரும்,

இங்கொருவருமாக நின்று பேசிக் கொண்டும், தங்களது

வேலையை பார்த்துக் கொண்டும் இருக்க, ப்ரித்வி, அவர்களை

நெருங்கினான்.

ஒரு பத்திரிக்கையாளரைப் போல அவன் இருப்பதைப்

பார்த்தவர்கள், “வணக்கம்ங்க... எந்த பேப்பருக்கு படம் எடுக்க

வந்திருக்கீ ங்க?” ஊரில் இருந்த ஒருவர் அவனைப் பார்த்துக்

கேட்கவும்,

“நான் கர்நாடகா மாநிலத்துல உள்ள ஒரு பத்திரிக்கை

ஆபீ ஸ்ல இருந்து வரேன்.... காவேரி தண்ணி...” அவன்

தொடங்கவும்,

“ஏன்யா... இங்க போட்டோ பிடிச்சிட்டு போய் எங்க ஊர்


விவசாயிங்க கஷ்டத்தைப் பார்த்து கைக் கொட்டி

சிரிக்கலாம்ன்னு பார்க்கறீகளோ? இப்போ நாங்க உன்னை

இங்கேபிடிச்சு வச்சிக்கிட்டு, எங்க கஷ்டத்தையெல்லாம்

ஒழுங்கா உங்க ஊர் பத்திரிகையில எழுதச் சொன்னா...


அப்போவாவது பயந்துக்கிட்டு எல்லா உண்மை நிலையையும்

எழுதுவாங்க இல்ல...” ஒருவர் கோபமாக சீறவும்,

“அடப்பாவிங்களா? என்னை பிடிச்சு வச்சா ஒரு

பத்திரிக்கையிலயும் நியூஸ் வராது... என் அடியாளுங்க தான்

வருவாங்க... அப்பறம் இங்க என்ன நடக்கும்னே தெரியாது...

என் லக்ஷ்மிய நானே மீ ட்டு, என் அரண்மனைக்கு கூட்டிட்டு

போகணும்” அவன் மனதிற்குள் சொல்லிக் கொண்டே,

“இல்லைங்க... நான் உங்க கஷ்டத்தையும்... உங்க ஊர்களின்

நிலைமைகளையும் போட்டோ பிடிச்சு போட்டு... கார சாரமா

ஒரு கட்டுரை எழுதலாம்ன்னு இருக்கேன்... அதோட முடிவு

சுபமா தான் இருக்கும்... இருக்க வைப்பேன்...” உறுதியாக

அவன் இரு பொருள் படப் பேசவும்,

“நிஜமா தானா? இப்படி எத்தனை ஊர்களுக்கு போயிட்டு

வந்திருக்கீ க?” ஒருவர் கேட்கவும்,

“இங்கப் பாருங்க...” என்று எப்பொழுதோ தனது கமெராவில்

எடுத்த வயல்களையும், காய்ந்த நிலத்தையும் காட்டி

விளக்கவும், அங்கிருந்தவர்கள் அவன் கூற்றை நம்பி

தலையசைத்துக் கேட்டுக் கொண்டிருந்தனர்....

அதே நேரம்... ப்ரித்வியின் தோளில் ஒரு கை விழ, ப்ரித்வி


திரும்பிப் பார்க்கவும், “என்ன ப்ரித்வி... இங்கயே உன்

ஆட்டத்தை காட்ட வந்துட்டியா?” என்ற அந்த குரலில்

சொந்தக்காரன்,

“இப்போ மட்டும் நீ என் கூட வரலைன்னு வச்சுக்கோ... இந்த


ஊருல உள்ளவங்க கிட்ட நீ யாருன்னு காட்டிக்

கொடுத்திருவேன்... அப்பறம் நீ உயிரோடவே திரும்ப

முடியாது...” என்று மேலும் மிரட்டவும், ப்ரித்வி அதிர்ந்து

போனான்.

கவிதைகள் தொடரும்............

கவிதை – 17
இத்தனை தருணங்கள்
காணமல் 
போனதென்று
நினைத்திருந்த சந்தோசம்
மொத்த உருவம் எடுத்து 
நீயாக நிற்க காண்கிறேன் 
இனி உன்னை பிரிக்கும் 
சிறு பிரிவை தீண்ட கூடாதென 
எனக்குள்ளே ஒரு ஏக்கமும் 

இனிதே மலர்கிறது!! 

அதிகாலை, சுகமான உறக்கத்தில் இருந்த கஜா எழுந்து

அமர்ந்து, தலையணையை எடுத்து மடியில் வைத்துக்

கொண்டு, ப்ரித்வியைப் பற்றிய நினைவுகளில் மூழ்கினாள்.

தான் இருக்கும் நிலையை, அவனுக்கு தெரிவிக்கவே முடியாத

அளவிற்கு, மாட்டிக் கொண்டிருப்பதை நினைத்து மனம்

கனத்துப் போனது... அவனுடைய தொலைபேசி எண், அவனது

முகவரி, இப்படி எதுவுமே கேட்டுக்கொள்ளாமல் வந்த

தன்னையே கடிந்துக் கொண்டவளுக்கு ஒரே ஆறுதல், ப்ரித்வி

தன்னைத் தேடி வந்தது மட்டுமேயாக இருந்தது.

வெளியில் என்ன நடக்கிறது என்பதை எப்படி தெரிந்துக்

கொள்வது?? அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,

அந்த அறையின் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டவள்,

மீ ண்டும் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.

“கொஞ்சமாவது உடம்புல சுறுசுறுப்பு இருக்குதா பாரு... இதை


பழனிக்கு கட்டிக் கொடுத்த பிறகு என்னத்தை செய்யப்

போகுதோ?” என்று அங்கலாய்த்தபடி, அவளது முதுகில்

தட்டினார், பார்வதி
“என்னம்மா? என்ன வேணும் உனக்கு? எதுக்கு இப்படி

எழுப்பற?” வள்ளென்று அவள் எரிந்து விழ,

“ஹ்ம்ம்... உனக்கு சூடு இழுக்கலாம்ன்னு தான் கூப்பிடறேன்...

வந்து பல்ல விளக்கிட்டு, குளிச்சிட்டு வந்து இங்க கிட...

நாளைக்கு காலையில பழனி கூட உனக்கு கல்யாணம்...

விரசா முடிச்சிறலாம்ன்னு உங்க அய்யா சொல்லிட்டாக...

எழுந்து வா...” என்றபடி, அவளை இழுத்துக் கொண்டு,

பின்கட்டுக்குச் செல்ல, செல்வராஜு அடித்த அடி மொத்தத்தின்

வலியும், கஜாவிற்கு இப்பொழுது தான் அதிகமாக தெரிந்தது.

“மெல்ல இழுத்துட்டு போ... எனக்கு வலிக்குது...” என்றபடி,

அவளும் உடன் நடக்க, அப்பொழுது அங்கு வந்த முத்து, அவள்

முகத்தைப் பார்த்தான்.

முகம் வாடி இருந்தாலும், அதையும் மீ றி, முகத்தில் இருந்த

உறுதி அவனுக்கு நன்றாகவே புரிந்தது. அவளை அழைத்துச்

சென்ற அவளது அன்னை, மீ ண்டும் ஜெயில் கைதியைப் போல

அழைத்துக் கொண்டு வரவும்,

“நீ ங்க போய் எனக்கு காப்பித் தண்ணி எடுத்துட்டு வாங்க

சித்தி... நான் இவகிட்ட பேசி... புத்திமதி சொல்றேன்...” என்று

முத்து சொல்லவும்,
“நல்லா சொல்லு முத்து... புத்தி கெட்டுப் போய் ரொம்பத் தான்

அலையறா ... இவள வெளிய கூட்டிட்டு வரதுக்குள்ள அந்த

கொஞ்ச நேரத்துக்குள்ளேயே,அறைல எனக்கு மூச்சு முட்டுது..

இவ என்னடான்னா , அங்க சுவமா தூங்கிட்டு கிடக்கா... இவ

மனுஷ ஜென்மம் தானா... இல்ல மிருகமா?” தனபாக்கியம்

பொரிய,

“நீ ங்க மிருகம்ன்னு நினைச்சுத் தானே போட்டு இந்த அடி

அடிச்சு சூடு வச்சீங்க...” விடாமல் கஜா வாய்ப் பேசவும், முத்து

அவளைப் பார்த்து முறைத்தான்.

“நீ ங்க போய் காபி தண்ணி எடுத்துட்டு வாங்க சித்தி... நான்

பேசறேன்..” ஒருவழியாக அவரை அனுப்பி வைத்தவன்,

“என்ன கஜா.. இவ்வளவு அடி வாங்கியும், கொஞ்சம் கூட

திமிரு குறையாம பேசற?” அவனது முதல் கேள்வியிலேயே

கடுப்படைந்தவள்,

“ஆமா... திமிரா பேசாம என்ன செய்யறது? அடி வாங்கி வலி

உடம்பெல்லாம் வலிக்குது முத்தண்ணா... ஆனா, மனசு வலி

அதை விட அதிகமா இருக்கு... எனக்கு வெளிய என்ன

நடக்குதுன்னு தெரியணும்... நாளைக்கு அந்த பழனிய

கல்யாணம் செய்துக்கணும்னு அம்மா சொல்றாங்க...


அவனைப் பத்தி தெரிஞ்ச நீ ங்களே எப்படி சும்மா இருக்கீ ங்க?

ஏற்கனவே அவன் சரி கிடையாது.. முரடன்... இப்போதைய என்

நிலைமையை பத்தி தெரிஞ்ச பிறகு, அவன் என்னை என்ன

பாடுபடுத்துவான்... சொல்லுங்க... அவன் ஒரு நாளாவது

என்னை நிம்மதியா சோறு திங்க விடுவானா?” என்று கஜா

கேட்க, முத்துவினால் வெறும் அமைதியையே பதிலாக

கொடுக்க முடிந்தது.

“உங்களுக்கே புரியுது இல்ல... சரி அதை விடுங்க... என்

ப்ரித்வி என்னைத் தேடி வந்தாங்க தானே அண்ணா...

சொல்லுங்களேன்... எனக்கு அவரைப் பார்க்கணும்... நான்

இங்க தான் இருக்கேன்னு அவருக்கு சொல்லணும்...” அவள்

பேசிக்கொண்டே போக,
“அவன், நேத்து வந்தவன், பயந்துபோய் ஊரை விட்டு

போயிட்டான்... இனி திரும்ப வர மாட்டான்... அவனோட

பேச்சும் அப்படித் தான் இருந்தது..” முத்து சொல்லவும்,

அவனைப் பார்த்து கஜா புன்னகைக்க, அந்த முகத்தில்

புன்னகை மிளிர்ந்திருந்தாலும், அதில் தெரிந்த அயர்ச்சியை

முத்து அளவிட்டுக் கொண்டான்.

“இல்ல.. அவர் கண்டிப்பா வருவாரு முத்து அண்ணா...


என்னை அப்படி எல்லாம் விட்டுட்டு போயிருவாருன்னு

நினைக்கறீங்களா? கண்டிப்பா இல்ல... வருவார்... அவருக்கு

என்னை ரொம்ப பிடிக்கும் அண்ணா...” என்றவள், அவன்

அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டிருக்கவும்,

“எனக்கும் அந்த அறைல மூச்சு முட்டுது தான் அண்ணே...

ஆனா... என் ப்ரித்விய கைப் பிடிக்க எனக்கு வேற வழி

தெரியலையே... அப்படி, அந்த பழனிய தான்

கட்டிக்கணும்ங்கற நிலை வந்தா.. அந்த ரூமை நானே உள்ளார

அடைச்சிக்கிட்டு, அப்படியே உசுர விட்ருவேன்... என்னால

அவனை கல்யாணம் செய்துக்கவே முடியாது... விதியேன்னு

எல்லாம் அவன் கூட வாழ முடியாது..

எங்க அய்யா வேணா, அம்மா பேச்சை கேட்டுக்கிட்டு

கொஞ்சம் கூட யோசிக்காம, அவன் கூட என் கல்யாணத்தை


நிச்சயம் செய்திருக்கலாம்... அப்போ படிக்கணும்ங்கற அந்த

ஆசையில, நானும் பேசாம இருந்துட்டேன்... ஆனா, இப்போ

எனக்கு அவனோட குணத்துல ஒண்ணு கூட பிடிக்கலையே...

அவன் எத்தனை பொண்ணுங்க கூட நெருக்கமா

இருந்திருக்கான்... அதனால அவனுக்கு வேற சீக்கு கீ க்கு

ஏதாவது இருந்தா? அவனால நானும் அசிங்கப்பட்டு, நானும்

தானே செத்துப் போவேன்... அப்படி சீரழிஞ்சாலும் பரவால்ல,


நான் அவனைத் தான் கல்யாணம் செய்துக்கணும்னு

நினைக்கறீங்களா அண்ணே... நான் எனக்கு பிடிச்ச ஒரு நல்ல

வாழ்க்கைய வாழக் கூடாதா?” பரிதாபமாக அவள் தனது

நியாயத்தைக் கேட்க,

“உனக்கும் அவனுக்கும் எத்தனை நாள் பழக்கம்?”

இறுக்கமான குரலிலேயே முத்து கேட்கவும், பதில் சொல்ல

தயங்கி, கஜா சிறிது நேரம் அமைதி காத்தாள்.

“சொல்லு... எத்தனை நாள் பழக்கம்?” அவன் வற்புறுத்தவும்,

“அது... மூணு நாளாத் தான் தெரியும்.. ஒரு நாள் முழுசும் அவர்

கூட வண்டியில வந்தேன்... அதுல எனக்கு அவரைப் பிடிச்சுப்

போச்சு..” என்றவள்,

“உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன அண்ணே...” என்றவள்,


முல்லையை தவிர்த்து, தான் மட்டும் டூர் சென்றதாக அவள்

சொல்லவும்,

“முல்லையும் உன் கூட டூருக்கு வந்தான்னு எனக்குத்

தெரியும்... அவ உளறிட்டா...” என்று இடை சொருகினான்.

நிம்மதி பெருமூச்சு விட்டவள், “அவருக்குப் பிடிக்காத

பொய்யைச் சொல்றோமேன்னு மனசு ரொம்ப உறுத்திச்சு...

இப்போ நிம்மதியா இருக்கு..” என்றவள், அனைத்தையும்

சொல்லி முடித்தாள்.

“ஒரேநாள்ல அவர்கிட்ட என்ன கண்ட ஏது கண்டன்னு கேள்வி

எல்லாம் கேட்டா எனக்கு பதில் தெரியாது... ஆனா, ஒண்ணு

மட்டும் என் மனசு உறுதியா சொல்லுச்சு... அவர் தான் எனக்கு

எல்லாம்னு... அவரைத் தவிர என்னால வேற யாரையும் என்

வாழ்க்கையில அனுமதிக்க முடியாது...” என்று உறுதியாகச்

சொன்னவள், அவளை அடைத்து வைத்திருந்த அறைக்கு

திரும்பிச்செல்ல, அப்பொழுது அங்கு வந்த முல்லையைப்

பார்த்தவள்,

“நான் சொன்னேன் இல்ல.... ப்ரித்வி என்னைத் தேடி

வருவாருன்னு... வந்துட்டார் பார்த்தியா? இப்போ என்ன

சொல்லப் போற?” என்று பெருமையாக கேட்க, முல்லை

பயத்துடன் முத்துவைப் பார்த்தாள்.


“வாய மூடிக்கிட்டு போடி...” முல்லை அவளை மிரட்ட,

“அதெல்லாம் முடியாது முல்ல... என் ப்ரித்வி வந்தாச்சு...”

என்று சந்தோஷமாக ஒருமுறை சுற்றியவள்,

பூ வைத்தாய்ப் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மணப் பூ வைத்துப் பூ வைத்துப்

பூவைக்குள் தீ வைத்தாய் ஓஓ!

தேனே நீ நீ மழையில் ஆட
நான் நான் நான் நனைந்தே வாட
என் நாளத்தில் உன் ரத்தம்
நாடிக்குள் உன் சத்தம்
உயிரே ஓஒ

தோளில் ஒரு சில நாழி


தனியென ஆனால் தரையினில் மீ னாய்… ம்ம்ம்ம்ம்

முன்பே வா என் அன்பே வா!

ஊனே வா உயிரே வா!

முன்பே வா என் அன்பே வா!

பூப்பூவாய்ப் பூப்போம் வா!


என்று பாடிக் கொண்டே, கனவு லோகத்தில் செல்பவளைப்

போல சென்று அந்த அறையின் கதவை அடைத்துக் கொள்ள,

முத்து வேகமாக சென்று அந்த கதவைத் தட்டினான்.

“கஜா... கதவைத் திற... கிறுக்குத்தனம் எதுவும் செய்யாத...”

முத்துவின் கத்தலுக்கு,

“ச்சே... ச்சே... நான் எதுவும் செய்துக்க மாட்டேன் அண்ணே...

என் ப்ரித்வி வர வரை, அந்த பழனி என்னை தொட்டுத் தடவாம

இருக்கத் தான் கதவைப் பூட்டினேன்... என் பாதுகாப்புக்காக...

என் உயிர் வெல்லக்கட்டி அண்ணே... அது ப்ரித்விக்காக

மட்டும் தான் கரையும்...” என்றவள், மீ ண்டும் பாடத் தொடங்க,

முல்லை தலையிலேயே அடித்துக் கொள்ள, முத்துவின்

பார்வை அவள் புறம் திரும்பியது.

“ஐயோ மாமா... எனக்கு ஒண்ணும் தெரியாது.... நான் அந்த

ப்ரித்வி அண்ணனை பார்த்தது கூட கிடையாது... இதுக்கும்

எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல...” என்று அவள் நடுங்கவும்,

“ச்சே...” என்று அவன் கோபமாக வெளியில் செல்லும் நேரம்,

தனபாக்கியம் காபியுடன் வர, முல்லை அவரை மிரட்சியுடன்

பார்த்தாள்.

“முத்து போயிட்டானா? அந்தக் கழுதைய அந்த அறையில

அடைச்சிட்டானா?” என்று கேட்டபடி, அந்த பாதாள அறையின்

கதவைப் பார்த்தவர், அது மூடி இருக்கவும்,


“அப்போ சரி.. இந்த காபித் தண்ணிய நானே குடிசிக்கறேன்...”

என்று அந்த ஹாலில் இருந்த நாற்காலியில், டிவியைப்

போட்டுக் கொண்டு அமர்ந்தவர், டிவியைப் பார்க்கத் தொடங்க,

முல்லை அங்கிருந்து, நழுவி இருந்தாள்....

-------------------------------------------------------

தன்னை மிரட்டிய அந்த குரலுக்கு சொந்தக்காரனை திரும்பிப்

பார்த்த ப்ரித்வி, தன் எதிரில் முத்து இருப்பதைப் பார்த்து

மேலும் அதிர்ந்தான்.

“என் பேர் இவனுக்கு எப்படித் தெரியும்?” அவன்

யோசிக்கையிலேயே..

“என்ன... உன் பேர் எனக்கு எப்படித் தெரியும்ன்னு

யோசிக்கறியா? உன்னை எனக்குத் தெரியாதா?” என்று

கேட்டுக் கொண்டே, மற்றவர்களைப் பார்த்து புன்னகைத்த

முத்து,

“வாங்க சார்... எங்க ஊர் நிலவரத்தை படம் பிடிச்சு

காட்டறேன்... அப்பறம் நீ ங்க உங்க பத்திரிக்கையில

எல்லாத்துலையும் எழுதுங்க...”

என்று நக்கலாகவே பேசியவன், அவன் கையைப் பிடித்து

இழுக்காத குறையாக, அவனது கையை அழுந்தப்பிடிக்க,


அப்போதைக்கு எந்த வம்பும் செய்ய வேண்டாம் என்ற

முடிவுடன் ப்ரித்வி அவனுடன் நடந்தான்.

“என் பேர் உனக்கு எப்படித் தெரியும்?” ப்ரித்வியின் கேள்விக்கு,

“ஹ்ம்ம்... நீ இப்போ கஜாவைத் தேடித் தான்

வந்திருக்கணும்ன்னு எனக்குத் தெரியும்.... என்ன தைரியம்


இருந்தா எங்க ஊர் பொண்ணைத் தேடி எங்க ஊருக்கே நீ

வருவ... அதுவும் வேற ஒருத்தனுக்கு நிச்சயம் ஆகி இருக்கற

பொண்ண...” முத்து உறுமவும், அந்த இடத்தில் ஆள்


நடமாட்டம் இல்லாததை உறுதி செய்துக் கொண்டு ப்ரித்வி

நின்றான்.

“என்ன? நின்னுட்ட... அப்படியே தப்பி ஒடறதுன்னா ஓடிப்

போயிரு...” அவன் எச்சரிக்க,

“என் லக்ஷ்மி இல்லாம நான் இந்த ஊரை விட்டுப் ஒரு அடி கூட

எடுத்து வைக்க மாட்டேன்... என்ன செய்வியோ

செய்துக்கோ...” ப்ரித்வி உறுதியாக நிற்பதைப் பார்த்த முத்து

அவனையே ஒரு மாதிரிப் பார்த்துக் கொண்டு நின்றான்.

“என்ன ஒரு மாதிரிப் பார்க்கற? என்னைப் பார்த்தா ரொம்ப

சாது போல இருக்கோ? ஆனா, நான் சாது கிடையாது...

என்னோட இன்னொரு பக்கமே வேற... நான் எதையும்

அவ்வளோ சட்டுன்னு விரும்பிட மாட்டேன்... அபப்டி


விரும்பிட்டா... அதை அடையாம விடவே மாட்டேன்... அதே

போல தான் என் லக்ஷ்மியையும் விட மாட்டேன்...

அவ என் உயிரு... இந்த இடத்துல... அதுவும் அந்த தண்ணி

லாரி கூட மாரடிக்க வேண்டியவளே இல்ல... என்ன பேச்சு

பேசறான்... இவன் மட்டும் பல பொண்ணுங்களைப்

பார்ப்பான்...அவங்களோட கன்னாபின்னான்னு

பழகுவான்...கண்டபடி ஊரைச் சுத்துவான்... ஆனா என் லக்ஷ்மி

காலை ஒடிச்சு வடுக்குள்ள


ீ பூட்டுவானா... அவன் அன்னைக்கு

அப்படி சொன்ன போதே கதைய முடிச்சு இருப்பேன்...


லக்ஷ்மியோட காலேஜ் கேட்ல வச்சு எந்தப் பிரச்சனையும்

வேண்டாம்ன்னு தான் அமைதியா இருந்துட்டேன்...” ப்ரித்வி

சொல்லவும், முத்து நக்கலாக சிரித்தான்.

ப்ரித்வி புரியாமல் பார்க்க, “இல்ல... அங்க சும்மா பேப்பர்

படிக்கற மாதிரி வேடிக்கை பார்த்தவன் தானே நீ ... இப்போ

என்னவோ எங்க ஊர்லையே வந்து நின்னுக்கிட்டு... அவளை

தூக்குவேன்னு சொல்ற? அவ அண்ணனான என் கிட்டயே

இந்த ரவுசு விடற... உனக்கு என்ன நெஞ்சழுத்தம் இருக்கும்?”

முத்துவின் கேள்விக்கு நிதானமாக புன்னகைத்த ப்ரித்வி,

“அப்போ நீ ங்க எனக்கு மச்சானா? அப்போ உங்களுக்கு

முறைப்பு கொஞ்சம் அதிகமா தான் இருக்கும்...” என்று

கொட்டு வைத்தவன்,
“உங்க ஊர்லயே தைரியமா வந்து நின்னு, அவ அண்ணனான

உன்கிட்ட இவ்வளவு தைரியமா பேசிக்கிட்டு இருக்கேனே...


அப்போவே தெரியலையா என்னோட நெஞ்சழுத்தம் எவ்வளவு

இருக்கும்ன்னு...” என்று இரும்பாக மாறிக் கேட்டவன்,

அதே கடினத்துடன், “என் லக்ஷ்மிய எங்க வச்சிருக்கீ ங்க?

ஒழுங்கா சொன்னா ஊர் பிழைக்கும்.. இல்ல என்ன

செய்வேன்னே தெரியாது?” ப்ரித்வி மிரட்டவும்,

“நீ தான் பெரிய ஹீரோவாச்சே... போய் நீ யே கண்டுப்பிடி...

ஆமா... என்னவோ பெரிய இவனாட்டம் பேசற.. நீ என்ன

தாதாவா?” இளக்காரமாக முத்து கேட்கவும், ப்ரித்வி சத்தமாக

சிரித்தான்.

“என்ன? உன் ஊர் எவ்வளவு பிழைக்கும்ன்னு அளவு

எடுக்கறியோ? நான் பெங்களூர்ல ஒரு கார் ரீமாடல் செய்யற

கம்பெனி வச்சிருக்கேன்... அது என்னோட ரெண்டாவது


பிஸினெஸ்... முதல் பிசினஸ் என்ன தெரியுமா? வட்டிக்கு

கொடுத்து வாங்கற கம்பெனி வச்சிருக்கேன்... அதுல


பணத்தை திருப்பித் தராதவங்களுக்கு என்னோட

ட்ரீட்மெண்ட்டே வேற...” ப்ரித்வி அதே இளக்காரமாகச்

சொல்லவும், முத்துவின் முகம் மாறியது.

“என்ன பயந்துட்டியோ?” இப்பொழுது நக்கலாக ப்ரித்வி கேட்க,

“மத்தவங்க பாவத்தை கொட்டிக்கற...” பொருள் விளங்காத

பாவம் முகத்தில் தாண்டவமாட, முத்து கேட்கவும்,

“என்னை பொறுத்தவரை,மத்தவங்க என்கிட்ட நியாயமா

நடந்தா... நானும் அதேபோல நடந்துட்டு போவேன்... எனக்கு

பொய் சொன்னா பிடிக்காது... யாராவது பொய் மட்டும்

சொன்னா... நான் என்ன செய்வேன்னே தெரியாது... அது

எப்படின்னு உன் தங்கையை போய் கேளு...” ப்ரித்வி

சொல்லவும், முத்துவின் முகம் சுருங்க...

“அவ உன்கிட்ட வந்து என்ன பொய் சொன்னா? உன்கிட்ட கடன்

வாங்க வந்தாளா? நீ இந்த தொழில் செய்யறது அவளுக்குத்

தெரியுமா?” கேள்விகளை அடுக்கவும்,

“உன்கிட்ட விளக்கம் சொல்லணும்னு எனக்கு எந்த

அவசியமும் இல்ல...” என்றவன், “இப்போ எதுக்கு என்னை


இழுத்துட்டு வந்த? என்ன மிரட்டிப் பார்க்கலாம்ன்னு வந்து

மிரண்டு போயிட்டியோ? உங்க ஊர்ல எத்தனை பேரை வேணா

கூட்டிட்டு வந்து மிரட்டு... என் லக்ஷ்மியை மீ ட்க எனக்குத்

தெரியும்...” நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்ற ப்ரித்வியைப்

பார்த்த முத்து சில நிமிடங்கள் ஸ்தம்பித்து நின்றாலும்,

ப்ரித்வி கண் இமைத்த நேரத்தில், அவனைத் தள்ளி, அவனது

கையை பின் பக்கமாக முறுக்கிப் பிடித்தான்.

“ஏய் என்ன செய்யற? என்ன செய்யற?” ப்ரித்வி அவனிடம்

இருந்து விடுபட முயல,

“ஹ்ம்ம்... பெரிய தாதாவாட்டம் பேசின இல்ல... இப்போ எங்க

ஊருக்கு முன்னால கொண்டு போய் உன்னை நிறுத்தறேன்...

அவங்க என்ன செய்யறாங்கன்னு பாரு...” என்றபடி, அவனை

அங்கிருந்த கோவிலுக்கருகில் இழுத்துச் செல்ல, ப்ரித்வி

வேறுவழியின்றி அவனுடன் நடந்தான்.

கஜாவின் வட்டில்....

“ஆத்தா... அய்யா எங்க? முத்து அண்ணே கூட்டிட்டு வர

சொன்னாக...”, பண்ணையில் வேலை செய்யும் சிறுவன்

ஒருவன் ஓடி வர,

“என்னடா விஷயம்... எதுக்கு இப்படி மூச்சிறைக்க ஓடி வர...”


கேட்டுக் கொண்டே அங்கு வந்த செல்வராசுவிடம்,

“அந்த பட்டணத்துக்காரன முத்து அண்ணா பிடிச்சு

வச்சிட்டாங்க... உங்களை கூட்டிட்டு வரச் சொன்னாங்க...

ஊரே அங்க தான் கூடி இருக்கு...” அவன் அவசரமாகச்

சொல்லவும்,

“அவன் திரும்ப ஊருக்குள்ள வந்துட்டானா? இனி அவனுக்கு


கொடுக்கற அடியில இனி இந்த ஊர்ல யாருமே காதலைப் பத்தி

நினைக்கக் கூடாது...” என்று கறுவியபடி, வேகமாக அந்த

இடத்திற்குச் கிளம்பிச் சென்றார். அந்த செய்தியைக் கேட்ட

தனபாக்கியம், வேடிக்கைப் பார்ப்பதற்க்காக, அவரது

பின்னோடு ஓடிச் சென்றார்.

ஊரே மாரியம்மன் கோவிலின் முன்பு குழுமி இருக்க,

ப்ரித்வியின் கையை முறுக்கிப் பிடித்தபடி, முத்து நின்றிருக்க,

அங்கு புயலென வந்த செல்வராசு...

“அந்த வரன்
ீ கையில இருக்கற சவுக்க எடுத்துட்டு வாங்க...

இவன் தோலை உரிச்சுப் போடறேன்...” என்று உறுமினார்.

கவிதைகள் தொடரும்...
Read more: http://www.penmai.com/forums/serial-stories/90857-vizhiyora-kavithaigal-ramya-
9.html#ixzz3ayWQ45QU
Read more: http://www.penmai.com/forums/serial-stories/90857-vizhiyora-kavithaigal-ramya-
8.html#ixzz3ayW6KNgN
Read more: http://www.penmai.com/forums/serial-stories/90857-vizhiyora-kavithaigal-ramya-
7.html#ixzz3ayVUnJ2I
Read more: http://www.penmai.com/forums/serial-stories/90857-vizhiyora-kavithaigal-ramya-
6.html#ixzz3ZqkwGWwq

You might also like