You are on page 1of 17

PROJECT PROPOSAL

திட்ட
முன்மொழிவு
“POULTRY FARMING”

“நாட்டுக் கோழி
பண்ணை வளர்ப்பு”
Project Proposal – Poultry Farming | திட்ட முன்மொழிவு – நாட்டுக் கோழிப் பண்ணை 1
வளர்ப்பு
SELF INTRODUCTION | சுய அறிமுகம்
1. Project Name | திட்டத்தின் பெயர்:

2. Proposed Work | முன்மொழியப்பட்ட பணி:


 குறைந்த மூலதனத்தில் நிறைந்த இலாபம், சுலபமான தொழில்.
 சத்துமிகுந்த சுவையான இறைச்சியும் & முட்டையும் கிடைக்கும்.
 நாட்டுக்கோழிகளை வளர்த்தால் சுயதொழில் வேலைவாய்ப்பு பெருக வாய்ப்பு
அதிகம்.

3. Project Cost | திட்ட செலவு:


4. Source of Fund| நிதி ஆதாரம்:
Area | பரப்பளவு:
Investment | முதலீடு:
Initial Investment | ஆரம்பகட்ட முதலீடு:

5. Period | காலம்: 2020-2021 2021-2022 or

6. Implementing Agency | செயல்படுத்தும் நிறுவனம்:

7. Name & Address of Applicant | விண்ணப்பதாரர் பெயர் & முகவரி:


பெயர்:
முகவரி:
தொலைபேசி:
இமெயில்:
பிறப்பு திகதி dd/mm/yyyy: 

Project Proposal – Poultry Farming | திட்ட முன்மொழிவு – நாட்டுக் கோழிப் பண்ணை 2


வளர்ப்பு
தேசிய/வாகன அடையாள அட்டை இல:
ஆண்/ பெண்/வேறு:

INTRODUCTION | அறிமுகம்

Chicken: கோழி:
கோழி (chicken) என்பது காடுகளிலும், மனிதர்களால் வீடுகளிலும் அதற்கான கோழிப்
பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு அனைத்துண்ணிப் பறவையாகும். இதில்
பெண்ணினம் பேடு எனவும், ஆணினம் சேவல் எனவும் அழைக்கப்படுகின்றது.

நமது நாடு கிராமங்களையும் வேளாண் சார்ந்த தொழில்களையம் கொண்ட இயற்கை


வளமிக்க நாடாகும். கிராமமக்கள் நாட்டுக்கோழி வளர்ப்பின் மூலம் தமது அவசர
தேவையை தானே பூர்த்தி செய்து கொள்கின்றனர். நாட்டுக்கோழிகளை வீட்டிலிருக்கும்
பெண்கள், வயதானவர்கள் அனைவரும் வளர்க்கலாம்.

குறைந்த அளவுக்கு முதலீடு, எளிய வீட்டமைப்பு, குறைந்த இடவசதி, சுவையான இறைச்சி,


முட்டை, அதிக விற்பனை விலை எளிமையான பராமரிப்பு போன்ற காரணங்களால்
நாட்டுக்கோழி வளர்ப்பு பயன் தரும் ஒன்றாக இருக்கின்றது.
Project Proposal – Poultry Farming | திட்ட முன்மொழிவு – நாட்டுக் கோழிப் பண்ணை 3
வளர்ப்பு
ECONOMIC SIGNIFICANCE OPPORTUNITIES &
MARKETING | பொருளாதார முக்கியத்துவம்
சந்தைபடுத்தல், வாய்ப்புகள்

நாட்டுக்கோழி வளர்ப்பு குறைந்த முதலீட்டில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் தற்சார்பு


பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பு செய்கின்றது.

நாட்டுக்கோழி எளிதான வருமானம் கிடைக்க கூடிய தொழிலாகும். உயர் இன


கோழிகளை விட நாட்டுக்கோழி இறைச்சி மக்கள் அதிகம் விரும்புகின்றார்கள்.
நாட்டுக்கோழிகளை சிறந்த தொழில் நுட்பத்துடன் வளர்த்தால் சுயதொழில் வேலைவாய்ப்பு
பெருக்கவும், வீட்டுப்பெண்கள் தினசரி வருமானத்துக்கும் உதவுவதுடன் கிராமங்களின்
பொருளாதார மேம்பாட்டுக்கு முக்கிய பங்களிப்பை செய்கின்றது.

கோழி வளர்ப்பின் தேவைகள் வாய்ப்புகள்:


பொதுவாக இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. உணவு
விடுதிகள், துரித உணவுக் கூடங்களில் நாட்டுக்கோழி இறைச்சி உணவுகளுக்கு மக்கள்
அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள். ஆனால் நாட்டுக் கோழிகள் வீட்டின் கொல்லைப்பக்கம்
எஞ்சியதை உண்டு வளர்வதால் தேவையான சத்துகள் கிடைக்காமல் உற்பத்தி திறன்
குறைந்து காணப்படுவதால் இந்தியாவில் இருந்து கோழிகள் (50%) இலங்கைக்கு
இறக்குமதி செய்யப்படுகின்றது.

முட்டையில் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி,


டி, இ) இதில் உண்டு. மேலும், தைதாக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும்
எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில்
உண்டு. காயங்களைக் குணமாக்கவும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தேவைப்படும்
துத்தநாகம் என்னும் தாதும் இதில் உள்ளது. மற்ற அசைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது

Project Proposal – Poultry Farming | திட்ட முன்மொழிவு – நாட்டுக் கோழிப் பண்ணை 4


வளர்ப்பு
முட்டையின் விலையும் குறைவு என்பதனால் பெரும்பாலானோரின் விருப்ப உணவுத்
தேவைகளில் ஒன்றாக நாட்டுக்கோழி முட்டைகளும் இருக்கின்றது.

எமது நாட்டில் அசைவ விருந்துக்களில் முட்டைக்கும் கோழி இறைச்சி உணவுக்கும்


முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். அத்துடன் கேக், பிஸ்கட் முதல் பல்வேறு வகை உணவு
தயாரிப்புகளுக்கும் முட்டை பயன்படுத்தப்படுகின்றன என்பதனால் உள்ளூர் மக்களின்
தேவைகளுக்கே அதிகம் உற்பத்தி தேவைப்படுகின்றன.

ஆரோக்கியமான நாட்டு கோழி இறைச்சிக்கும் முட்டைக்கும் உள் நாட்டுக்குள் தேவை


இருந்து கொண்டே இருக்கின்றது.

AGRICULTURAL MANAGEMENT LIVESTOCK


CARE | வேளாண் மேலாண்மை &
கால்நடைகள் பராமரிப்பு
கோழி வளர்ப்பும், பண்ணையும்:
முட்டைக்கோழி மற்றும் புராய்லர் கோழிகளைப் போன்றில்லாமல் நாட்டுக்கோழிகளின்
வளர்ப்பு முறை மிகவும் எளிமையானது. கூண்டு முறை வளர்ப்பு, புறக்கடை வளர்ப்பு
மற்றும் மேய்ச்சல் முறை வளர்ப்பு என தகுந்தாற் போல் நாட்டுக்கோழி வளர்ப்போர்
வளர்க்கின்றார்கள்.

மேய்ச்சலுடன் கூடிய கொட்டகை முறை (Poultry Farming Method):


நாட்டு கோழிகள் இயல்பாகவே மிகவும் பலமானவை மழை,காற்று,அதிக வெயில்
போன்றவற்றை எளிதாக தாங்கும் குணம் உள்ளவை எனவே திறந்த வெளியில் கம்பி
வேலி அமைத்து வளர்க்கலாம். இதற்கு "டயமன்ட் கிரில்" என்ற மிக சிறிய ஓட்டைகள்
உள்ள வேலிகள் அமைப்பதன் மூலம் கோழி குஞ்சுகள் வெளியே செல்வதை தடுக்க
முடியும். மழை, வெயில் போன்றவற்றில் இருந்து ஒதுங்க சிறிய செலவிலான கூரை
போன்ற கொட்டகை போதுமானது.

ஒரு கோழிக்கு 2 சதுர அடி இட அமைப்பு தேவை. 10 அடி அகலத்திற்கு கூடாமல்


கொட்டகைகளை காற்றோட்டமாகவும் இரண்டு அடி அரைச்சுவர் நாலா பக்கமும்
அமைக்க வேண்டும். தகடுகளை கொண்டும் மறைத்தபடி அமைக்கலாம். கொட்டகையின்
நீளம் 20 அடிகளைக் கொண்டு அமைத்தால் 100 கோழிகளை வளர்க்கலாம். நாட்டுக்
கோழிகளுக்கான கூடமைப்பு காற்றோட்டமாக வசதிக்கேற்ப அமைக்கலாம். பழைய
தகடுகள் அறுப்பு மரங்களை வாங்கி கொட்டகை அமைக்க வேண்டும்.
Project Proposal – Poultry Farming | திட்ட முன்மொழிவு – நாட்டுக் கோழிப் பண்ணை 5
வளர்ப்பு
கோழி கொட்டகையின் உள்பகுதியில் (கீழே உள்ள படத்தில் காட்டி உள்ளதுபோல
அமைப்பை) மரக்குச்சிகளை கொண்டு ஏற்படுத்தினால் குறைந்த இடத்தில நிறைய
கோழிகளை இரவில் தங்க வைக்க முடியும் . கோழி கழிவுகள் கீழ்வரிசையில் இருக்கும்
கோழி மேல் விழாமல் இருக்குமாறு சரிவை சரியான அளவில் அமைக்கவேண்டும் . ஒரு
மின்சார விளக்கு பொருத்தவேண்டும்.

கோழிகள் முட்டையிட, அடைகாக்க பாதுகாப்பான தனியாக ஒரு பகுதியும் வாயிலும்


இருக்க வேண்டும். இங்கு இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் அல்லது உடைந்த மண்
பானைகளை பயன்படுத்தலாம்.

புறக்கடையில் நாட்டுக்கோழி வளர்ப்பு:


கோழி வளர்ப்பதில் கூரை போடுவதே மிகுந்த செலவு பிடிக்கும் செயலாகும். ஆனால்
புறக்கடையில் நாட்டுக்கோழி வளர்ப்பு முறையில் கூரை தேவைப்படாது.
இரவு நேரங்களில் அடைத்து வைப்பதற்கு ஓலைக் கூடைகள், மரப்பெட்டிகள், இரும்பு
வலைகள் அல்லது சிறிய மரக்கிளைகள் தேவைப்படுகின்றன. அல்லது மழை, வெயில்
நேரத்தில் பாதுகாப்பிற்கும், இரவில் தூங்குவதற்கும் கூண்டு அடிக்க வேண்டும்.

நாட்டு கோழி பண்ணை கொட்டகை முறை: (Poultry Farming Method):


வணிக நோக்கத்திற்கு வளர்க்கப்படும் கோழி முறையாக கொட்டகை வளர்ப்பு முறை
இருந்து வருகிறது. இந்த முறையை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

1. கூண்டு முறை: முட்டை கோழிகளுக்கும்


2. கூண்டு இல்லா முறை: இறைச்சி வளர்ப்பதற்கும் பயன்படுத்தப் படுகிறது.

நாட்டு கோழியை தேடி பாம்புகள் வருவது வாடிக்கை. அதனால், வேலியின் கிழே வலை
அடித்து விடுவதன் மூலம் பாம்புகளை நாம் தடுக்க முடியும். 15 அடி அகலம், 30 அடி
நீளம், 6 அடி உயரம் கொண்ட வலையினை அடிக்க வேண்டும். மேல் கூரை
போடத்தேவையில்லை. இந்த வலையை ஒட்டி, ஆடுகள் சாப்பிடக்கூடிய அகத்தி, சூபாபுல்,
முள்முருங்கை, கிளிரிசிடியா, சித்தகத்தி, வாகை, வாதார காய்ச்சி, வெவ்வேல் மரங்களை
நடவு செய்யலாம். அதனோடு வருமானம் தரக்கூடிய கருவேப்பிலை, பப்பாளி, மருதாணி
மரங்களையும் வைக்கலாம். வலைக்குள் 3 கொடாப்புகள் அமைக்க வேண்டும். அவற்றை
அமைக்கும் முறை மற்றும் பயன்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வலையடித்த இடத்தில் ஒரு மூலையில் 3 அடி அகலம், 3 அடி உயரம், 3 அடி நீளம்
கொண்ட கொடாப்பு போல் அந்த கூண்டு இருக்க வேண்டும். பழைய மரப்பலகைகளை
வாங்கி, கழிவு எண்ணெயில் ஊற வைத்து பயன்படுத்தலாம். அல்லது தார் ஷீட்டைக்
கொண்டு அப்படியே குச்சி மேல் போட்டாலும் போதும். அடிக்கடி மாற்ற நேரிடுவதால்
தென்னங்கீற்றைப் பயன்படுத்த வேண்டாம்.
Project Proposal – Poultry Farming | திட்ட முன்மொழிவு – நாட்டுக் கோழிப் பண்ணை 6
வளர்ப்பு
நாட்டுக்கோழி இனங்கள்:
இந்தியாவில் பலவகை நாட்டுக்கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அசில் ரகங்கள்,
பெருவிடை, சிறுவிடை மற்றும் கடக்நாத் போன்ற கருங்கோழியினங்களும்
காணப்படுகின்றன.

இலங்கையில் உள்ள இனங்கள்:


இலங்கையில் உள்ளுர் தூய நாட்டுக் கோழியினங்களே வளர்க்கப்படுகின்றன. விசேடமாக
கழுத்து வெட்டி கோழிகள் இலங்கைக்கே உரித்தான இனமாகையால் பரவலாக எல்லா
பண்ணைகளிலும் வளர்க்க படுகின்றன.

இக் கழுத்தறுத்தான் இனங்களில் சேவல் மற்றும் பேடுகள் சாதாரண நாட்டுக்கோழி


களை விட பருமனில் கூடியவையாக வளர்கின்றன. அத்துடன் அவற்றின் முட்டையும்
சாதாரண முட்டையின் எடையை விட அதிகமாகவே காணப்படுவதுடன் முட்டையிடும்
விகிதமும் ஒப்பீட்டளவில் கூடுதலாகவே காணப்படுகின்றது.

எனவே இலங்கை பண்ணை வளர்ப்பிற்கு கழுத்தறுத்தான் கோழியினம் உகந்ததாகவும்


இலாபகரமானதாகவும் உள்ளன எனலாம்.

கோழி வளர்ப்பும் இனவிருத்தியும்:


ஒரு ஏக்கருக்கு 2000 கோழிகள் வரை வளர்க்க முடியும். ஒரு சேவலுக்கு 4 அல்லது 8
பேடுகள் வரை 100 கோழிகள் வளர்க்கும் போது குறைந்தபட்சம் 20 சேவல்கள் இருக்க
வேண்டும். ஒரு நாள் குஞ்சிலிருந்து வாங்கி வளர்க்கலாம். ஒரு நாள் குஞ்சு பராமரிப்பது
கடினம் எனும் பட்சத்தில் இரண்டு வார குஞ்சுகளை வாங்கி வளர்க்கலாம். இது மிகவும்
சிறந்த தெரிவாக அமையும்.

ஆரோக்கியமான பேடு ஐந்து மாதங்களில் முட்டையிடத் துவங்கிவிடும். முட்டை விருத்தி


தொடர்ச்சியாக இருக்க வேண்டுமெனில் சேவல்கள் வீரியத்துடன் இரூக்க வேண்டும்.
குஞ்சிகளில் வாங்கும் போது இனம் பிரித்தும் வாங்கலாம். எனவே முட்டை
நோக்கத்திற்காக வளர்க்கப்படும் போது சேவல்களின் எண்ணிக்கை விகிதாசாரப்படி
இருத்தல் அவசியம். முட்டை விகிதம் குறைவடையும் பட்சத்தில் சேவல்களை விற்று
விட்டு புதிய சேவல்களை இணைக்க வேண்டும். காரணம் ஒரு பேடு ஒரே சேவலுடன்
இனப்பெருக்கத்தில் குறிப்பிட்ட காலம் வரைதான் ஆர்வம் காட்டும். எனவே கோழிகளின்
இனப்பெருக்கம் தொடர்பான அறிவும் அவசியமாகும்.

கோழிகள் சமூக நடத்தை கொண்ட ஒன்றாக கூட்டமாக வாழும் பறவை. அவை


அடைகாத்தலிலும் குஞ்சுகளை வளர்ப்பதிலும் இனத்துக்குரிய அணுகுமுறை கொண்டவை.
கூட்டத்திலுள்ள தனிக் குஞ்சுகள் ஏனையவற்றை ஆதிக்கம் செய்யும். அதனால் அவை
உணவை அடைதலிலும் இடத்தை தெரிவு செய்வதிலும் முன்னுரிமை பெற்றுவிடும்.
பேடுகளை அல்லது சேவலை இடத்திலிருந்து நீக்குதல் தற்காலிகமாக கூட்டத்தில் சமூக

Project Proposal – Poultry Farming | திட்ட முன்மொழிவு – நாட்டுக் கோழிப் பண்ணை 7


வளர்ப்பு
ஒழுங்கில் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். புதிய கோழி ஒன்று கொத்தி ஆதிக்கம் செய்யும்
வரை இது நீடிக்கும்.

குஞ்சுக்கோழியை சேவல், பேடு இனம் கண்டறிவது எப்படி?


1. தலையை பிடித்து தூக்கும் பொழுது கால்கள் கீழ் நோக்கி இருந்தால் பெண்.
2. இரு கால்களும் மேல் நோக்கி உயர்ந்து இருந்தால் அது ஆண் ஆகும்.
3. இருகால்களை பிடித்து தலைகீழாக தொங்க விடும் போது தலை மேல் நோக்கி
தூக்கி இருந்தால் அது ஆண். கீழே தொங்கியது போன்று இருந்தால் அது பெண்
ஆகும்.
4. குஞ்சு பொரித்து மூன்றாம் நாளில் குஞ்சின் சிறகு பகுதியைப் விரித்து பார்க்கும்
பொழுது. தொடராக சம அளவில் சிறிய இறகுகள் வளர்ந்திருந்தால் பெண் ஆகும்.
தொடர் இல்லாமல் ஒன்று விட்டு ஒன்றாக சிறகுகள் முளைத்து இருந்தால் அது
ஆண் ஆகும்.
5. குஞ்சு பொரித்த ஏழாவது நாளில் தலையில் சொன்டிற்க்கு மேல் உள்ள பூ என்று
சொல்லப்படும் அப்பகுதி சற்று வளர்ந்து இருந்தால் அது ஆண் ஆகவும்.
6. வளராமல் சிறியதாக அமர்ந்திருந்தால் அது பெண்ணாகவும் இருக்கும்.
7. இதுபோன்று நம் முன்னோர்கள் சற்று உருண்டை வடிவமாக இருந்தால் அது
பெண் முட்டை எனவும். நீள் வடிவமாக சற்று கூராக இருந்தால் அது ஆண்
முட்டை எனவும் முட்டையிலும் ஆண் பெண் என இருவகை முட்டைகளையும்
இலகுவாக இனம் பிரிக்கின்றார்கள்.

கோழிகளுக்கான தீவனம்:
மேய்ச்சல் முறை கோழி வளர்ப்பு முறையில் கோழிகள் பகல் முழுவதும் தன்னுடைய
இரையை நிலங்களில் தேடிப் பெற்றுக் கொள்கின்றன. சுற்றி திரிவதால்மேய்ச்சலின் போது
இயற்கையாக கிடைக்கும் உள்ள புழு பூச்சிகளையும் உணவாக உட் கொண்டு . இரவு
நேரங்களில் பண்ணையில் அடைந்து கொள்கின்றன.
நாட்டுக்கோழிகளைப் பொறுத்த வரை தீவின தட்டுப்பாடு ஏற்படுவதில்லை. அத்துடன்
அதற்கான செலவும் குறைவு. குறைந்த எண்ணிக்கையில் வீட்டில் வளர்க்கும் போது
சமையலறைக் கழிவுகள், காய்கறி கழிவுகள்,புல் வகைகளை உணவாக கொடுத்து
வளர்க்கலாம்.
பெரியளவில் பண்ணைகளாக வளர்க்கும் போது தீவினத்தின் தேவை அதிகமாகவே
ஏற்படும். மேய்ச்சல் முறையில் கோழிகளை வளர்க்கும் போது இரவுப் பொழுதில் அவர்
தீவினமாக தவிடு போன்ற உணவை கட்டாயம் வைத்தே கோழிகளை கொட்டகையில்
அடைக்க வேண்டும். இல்லாது போனால் கோழிகளின் எடையில் வீழ்ச்சி ஏற்படும்.
கோழிகளுக்கு உணவாக பச்சை கீரை வகைகள், அசோலா, கினியா புல், கோ-4, குதிரை
மசால்,காய்கள் மற்றும் அரிசி போன்றவகைகள் கொடுக்கலாம்.

100 க்கு மேற்பட்ட கோழிகளை வளர்க்கும் போது இயற்கை முறையில் தீவின


ஏற்பாடுகளை கண்டிப்பாக செய்தல் வேண்டும். காரணம் தீவினச் செலவை எந்தளவுக்கு

Project Proposal – Poultry Farming | திட்ட முன்மொழிவு – நாட்டுக் கோழிப் பண்ணை 8


வளர்ப்பு
கட்டுப்படுத்த முடியுமோ அந்தளவிற்கு இழப்புண்டு. எனவே இயற்கைத் தீவனங்களை
தயாரித்து வழங்குவது இன்றியமையாததாகும்.

இயற்கைத் தீவனங்கள்:
1. கறையான் உற்பத்தி
2. புழு உற்பத்தி
3. சோளன் மற்றும் பயறு செய்கை
4. புல்லினங்களை வளர்த்தல்
5. ஆடு மாடு போன்றவற்றின் இரத்தம்.

தரம் குறைந்த தவிடுகளை கோழிகளுக்கு வழங்குவதால் எடை அதிகரிப்பதில்


முன்னேற்றமிருக்காது. பெரியளவு காணியிருப்பின் பண்ணை ஆரம்பிக்குமுன் தீவனம்
ஏற்பாட்டுக்காக சோளம் மற்றும் பயறு போன்ற தானியங்களை பயிரிட்டால் நிறைவாக
தீவனம் கிடைக்கும்.பின்னர் தவிட்டுடன் காய்ந்த சோளன் மற்று பயறை பொடியாக்கி
கலந்து உணவாக வழங்குவதால் கோழிகளுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
வெறும் தவிட்டை வழங்குவதாலும் மேய்ச்சலில் விடுவதாலும் கோழிகளை வளர்க்கலாம்
என நினைக்க வேண்டாம்.

நிலத்தில் நிறைவாக புல்லினங்கள் இருப்பின் கோழிகளை தாராளமாக வளர்க்க முடியும்.


அதுமட்டுமல்லாமல் பூச்சி வண்டினங்களை கோழிகள் சாப்பிட்டுவிடும். புழு மற்றும்
கறையான் உற்பத்தியால் கோழிகளுக்கு தேவையான விட்டமின்கள் கிடைக்கின்றன.
இதனால் கோழிகளின் எடை அதிகரிக்கின்றது. இறைச்சிக்கடைகளில் ஆடு மற்றும்
மாட்டின் இரத்தங்கள் கணிசமாகவே கிடைக்கும். அவற்றை கோழியின் உணவுடன் கலந்து
வழங்கலாம். பணத்தை கொட்டி தீவனத்தை வாங்கி அள்ளி அள்ளி வழங்கினால் முதலுக்கு
கூடிய நட்டம்தான் வரும். ஒரு கோழிக்கான கிரயம் அதிகமாகிவிடும்.

தீவனங்களுக்கான ஏற்பாடுகளை தயார் செய்து ஆறுமாத காலத்திற்கான தீவனம்


இரூப்பில் இரூக்கும் போது முறையாக திட்டமிட்டு பெரியளவில் நாட்டுக் கோழிப்
பண்ணைகளை துவங்குவது நல்லது. அவதானத்துடன் சிந்தித்து செயற்பட்டால் இலாபம்
தரும் தொழிலாக அமைக்கலாம்.

நோய்த் தடுப்பு மற்றும் மேலாண்மை:


தினமும் அனைத்து கோழிகளையும் நன்றாக கவனிக்க வேண்டும். ஏதாவது ஒரு கோழிக்கு
நோய் வந்தாலும் அது வேகமாக அனைத்து கோழிகளுக்கும் பரவி விடும். எனவே ஒரு
கோழிக்கு நோய் வந்தாலும் உடனடியாக கண்டு பிடித்து மருந்து கொடுத்து விடுவது
அவசியம். தடுப்பூசி போடுவது, முறையான மேலாண்மை, உயிர்ப்பாதுகாப்பு முறைகள்
மூலம் நோய் வருவதைத் தடுக்கலாம்.

Project Proposal – Poultry Farming | திட்ட முன்மொழிவு – நாட்டுக் கோழிப் பண்ணை 9


வளர்ப்பு
கோழிகளுக்கு பல வகை நோய்கள் காலத்திற்கு காலம் ஏற்படுகின்றன. இவற்றுக்கான
தடுப்பூசிகளும் மருந்துகளும் இருக்கின்றன. இரூப்பினும் நோய் வராமல் முன்கூட்டியே
கோழிகளை பாதுகாப்பதால் பெரும் நட்டத்திலிருந்து தப்பலாம். கோழிக்கு வழங்கும்
தவிட்டு உணவன் முருங்கையிலை மஞ்சள் மிளகு போன்றவற்றை அரைத்த கலவையை
சேர்த்து வாரம் ஒரு முறை வழங்கினால் கோழிகளுக்கு நோய்கள் எதுவும் அண்டாது.

கோழிக் காய்ச்சல், சளி போன்ற பெரும் நோய்களிலிருந்து பாதுகாக்கலாம். நாட்டுக்


கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் இருப்பதால் இந்தக் கோழிகளை
குறைந்த அளவே நோய்கள் தாக்குகின்றன. கோழிகளின் வசிப்பிடம், கூடு மேலும் தீவனம்
மற்றும் நீர் வைய்க்கக் கூடிய பாத்திரங்கள் சுத்தமின்மையினாலும், வேற்றுக் கோழிகளுடன்
கலப்பதனாலும் இவ்வாறான நோய்கள் பரவுவதற்கு காரணமாக அமைகின்றன. பண்ணை
உபகரணங்களையும், பண்ணைக் கொட்டகை மற்றும் பண்ணையினைச் சுற்றியுள்ள
பகுதிகளில் பொட்டாசியம் பர்மாங்கனேட் (1;1000) அல்லது சோடியம் ஹைட்ராக்சைடு
(2%) அல்லது லைசால் (1;5000) போன்றவற்றைப் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்து
நோய் வராமல் தடுக்கலாம்.

இவற்றில் வெள்ளைக் கழிச்சல், அம்மை நோய், ரத்தக் கழிச்சல், ஒட்டுண்ணி நோய்கள்,


பற்றாக்குறை நோய்கள் முக்கியமானவை.

அ. வெள்ளைக் கழிச்சல்:
நாட்டுக் கோழிகளைத் தாக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளைக் கழிச்சல் நோய்,
கோடை மற்றும் குளிர் காலப் பருவ மாற்றத்தின் போது தாக்கக்கூடியதாகும்.
நோய் பாதிக்கப்பட்ட கோழிகளின் எச்சம், சளி, காற்று மூலமாகவும், பண்ணையாள்கள்,
தீவனம் மற்றும் தண்ணீர் மூலமாகவும் பரவுக்கூடியது. இதைக் கொக்கு நோய் என்றும்
கூறுவார்கள்.

பண்ணையில் ஒரு கோழியை நோய்க் கிருமி தாக்கினால் ஏறத்தாழ எல்லாக் கோழிகளும்


இறக்கக் கூடும். எனவே, வெள்ளைக் கழிச்சல் நோய்க்கு தடுப்பூசி போடுவது அவசியம்.
இந்நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளை முதலில் தனியாக பிரித்து எடுத்து விட
வேண்டும், இல்லையெனில் கூண்டில் இருக்கும் அனைத்துக் கோழிகளுக்கும் பரவி விடும்.

வெள்ளை கழிச்சல் நோயின் அறிகுறிகள்: நோய் தாக்கப்பட்ட கோழிகள் தீவனம்,


தண்ணீர் எடுக்காது. வெள்ளை மற்றும் பச்சையாகக் கழியும். எச்சமிடும் போது ஒரு
காலை மட்டும் தூக்கிக் கொள்ளும். ஓர் இறகு மட்டும் செயலிழந்து தொங்கும். தலையை
முறுக்கிக் கொண்டு விரைவில் இறந்து விடும்.
இயற்கை மருத்துவம்:
வெள்ளை கழிசல் நோய்களுக்கு நிவாரணியாக இதனை பின்பற்றலாம். நம் முன்னோர்கள்
பயன் படுத்திய அருமருந்து, இன்றும் கிராமங்களில் இம்முறை வழக்கத்தில் இருந்து
வருகிறது.

Project Proposal – Poultry Farming | திட்ட முன்மொழிவு – நாட்டுக் கோழிப் பண்ணை 10


வளர்ப்பு
தேவையான பொருட்கள்:
பப்பாளி இலை
வேப்ப இலை
மஞ்சள் தூள்
விளக் எண்ணெய்

பப்பாளி இலை, வேப்ப இலை மற்றும் சிறு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்து
விளக்கெண்ணெயில் குழைத்து வாரத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்.
அல்லது

ஒரு கோழிக்கு கொடுக்கும் மருந்துக்கான அளவுகள்: கீழாநெல்லி செடி ஒரு முழுச்


செடி (வேர் தண்டு இலை). இது கிடைக்காத பட்சத்தில் நாட்டு மருந்து கடைகளில் இதன்
பொடி கிடைக்கும் 50 கிராம், சின்ன வெங்காயம் 4 அல்லது 5, பூண்டு 2 அல்லது 3, சீரகம்
20 அல்லது 25 கிராம், மிளகு 2, கட்டி மஞ்சள் 1 துண்டு தூளாக இருந்தால் 5 அல்லது 10
கிராம்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து அதை நல்லெண்ணெய்


அல்லது நெய் அல்லது வேப்பெண்ணெய் 3 செட்டு விட்டு சிறு சிறு உருண்டைகளாக
உருட்டி பெரிய கோழிகளுக்கு 4 சிறிய குஞ்சுகளுக்கு 2 அதன் வாயில் 3 அல்லது 5
நாட்கள் காலையும் மாலையும் போட்டு விடவும். இது மாதம் இருமுறை கொடுத்தால்
மீண்டும் எந்த கோழிகளும் வராமல் தடுக்கலாம்.

மழை காலம் மற்றும் வெயில் காலம் என அனைத்து காலங்களிலும் அனைத்து வகையான


நோய்களுக்கும் ஒரே நாட்டு மருந்து தயாரிக்க தேவையான 7 பொருட்கள்

துளசி இலை
தூது வலை இலை
கற்பூரவள்ளி இலை
முல் முருங்கை இலை
பப்பாளி இலை
கொய்யா இலை
வேப்ப இலை

செய்முறை: மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து இலைகளையும் ஒரே அளவாக


எடுத்துக்கொண்டு அதனை நன்கு அரைத்து சிறு உருண்டைகளாக்கி 4 மாத கோழிகளுக்கு
(0. 75 g) என்ற அளவில் கொடுக்க வேண்டும்.

ஆ. அம்மை நோய்:
கோழிகளின் இறகு அற்ற பகுதிகள், உறுப்புகளைப் பாதிக்கும் நச்சுயிரி நோயே அம்மை
நோயாகும். முதலில் பரு உண்டாகி, பிறகு அதில் சீல் கட்டி நீர் கோர்த்த
கொப்பளங்களாகி உடைந்து விடும்.

Project Proposal – Poultry Farming | திட்ட முன்மொழிவு – நாட்டுக் கோழிப் பண்ணை 11


வளர்ப்பு
இந்தச் சமயத்தில் உடல் வெப்பம் அதிகரிக்கும், சோர்ந்து அசைவற்ற நிலையில் இருக்கும்.
உடல் எடையும், முட்டை உற்பத்தியும் குறையும். பண்ணைகளில் 20-30 சதம் வரை இறப்பு
ஏற்படக்கூடும்.

கோடைக் காலங்களிலேயே ஏற்படக்கூடிய இந்த நோய், அம்மையின் காய்ந்த உதிர்ந்த


பொடுகுகள், கொசுக்களின் வழியாகப் பரவுகிறது. இந்த நோய் பரவாமல் இருக்கத்
தடுப்பூசி போடுவது அவசியம்.

இ. இரத்தக் கழிச்சல்:
மூன்று வார வயதுக்கு மேலான குஞ்சுகள், கோழிகளை ஈரமான இடத்தில் அடைத்து
வைக்கும்போது ரத்தக் கழிச்சல் அதிகளவில் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட கோழிகளின்
குடல் வீங்கி ரத்தக் கசிவு ஏற்படுவதால் எச்சத்தில் ரத்தக் கசிவு காணப்படும். இதைத்
தடுக்க கொட்டகையைச் சுத்தமாகவும், ஈரமின்றியும் பாதுகாக்க வேண்டும்.

ஈ. ஒட்டுண்ணி நோய்கள்:
ஒட்டுண்ணி நோய்கள் அக ஒட்டுண்ணி, புற ஒட்டுண்ணி என இரு வகைப்படும். திறந்த
வெளியில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளை அதிகளவில் அக ஒட்டுண்ணிகள்
தாக்குகின்றன.

உருண்டை, நாடாப் புழுக்கள் கோழிகளைத் தாக்கி உணவு செரிமானக் கோளாறு,


கழிச்சலை உண்டாக்குவதோடு இறப்புகளையும் ஏற்படுத்தும்.

இதனால், ஆழ்கூள முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு மாதம் ஒரு முறையும்,


கூண்டு முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு 3 மாதத்துக்கு ஒரு முறையும்
குடல்புழு நீக்கம் செய்வது அவசியம்.

உ. பற்றாக்குறை நோய்கள்:
தோல் முட்டையிடுதல், கால்வாதம் மற்றும் கோழிகள் ஒன்றையொன்று கொத்துதல்
ஆகியவை பற்றாக்குறை நோய்களாகும்.

வெயில் காலங்களிலும், கூண்டு முறை கோழி வளர்ப்பிலும் அதிகமாகக் காணப்படும்


தோல் முட்டையிடுதல் நோயைத் தவிர்க்கத் தீவனத்தில் கால்சியம், வைட்டமின் டி,
பாஸ்பரஸ் சத்துகள் மற்றும் கிளிஞ்சல் தூளை அதிகப்படியாகக் கலந்து கொடுக்க
வேண்டும்.

கூண்டு முறையில் கோழிகளை வளர்க்கும் போது கோழிகளின் கால்கள் வலுவிழந்து நிற்க


முடியாமலும், உண்ண முடியாமலும் இறப்பதே கால் வாதமாகும். இந்த நோய் தாக்கிய
கோழிகளைக் கூண்டிலிருந்து வெளியே எடுத்து ஆழ் கூளத்தில் சில நாள்கள் விட
வேண்டும்.

Project Proposal – Poultry Farming | திட்ட முன்மொழிவு – நாட்டுக் கோழிப் பண்ணை 12


வளர்ப்பு
குடிநீரிலும், தீவனத்திலும் கால்சியம் அதிகமுள்ள சத்து மருந்துகளை சில நாள்கள்
கொடுக்க வேண்டும்.

வைட்டமின் பி12 உயிர்ச்சத்து மருந்தை ஊசி மூலம் செலுத்துவதன் மூலமும் இந்த


நோயைத் தவிர்க்கலாம்.
தீவனத்தில் நார்ச்சத்து, புரதம், அமினோ அமிலங்களும், காற்றோட்ட வசதி, இடவசதி,
தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், புற
ஒட்டுண்ணிகள் இருந்தாலும் கோழிகள் ஒன்றையொன்று கொத்திக் கொள்ளக்கூடும்.

இதற்கான காரணத்தைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வதன் மூலம் இந்தப் பாதிப்பை தடுக்க


முடியும்.

நோய்க்கான காரணங்கள், நோய் அறிகுறிகள், நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல்


விரிவான விபரங்களுக்கு www.agritech.tnau.ac.in முட்டைக் கோழிகளுக்கான
பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி.

Project Proposal – Poultry Farming | திட்ட முன்மொழிவு – நாட்டுக் கோழிப் பண்ணை 13


வளர்ப்பு
FINANCIAL MANAGEMENT |
நிதி மேலாண்மை

விற்பனை:
குஞ்சுகள் வளர்ந்த 3 மற்றும் 4 மாதங்களில் இருந்து விற்க ஆரம்பிக்கலாம். இயற்கையாக
வளர்க்கப்படும் கோழிகள் என்பதால் அந்த பகுதில் உள்ள பொதுமக்களே நல்ல
ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள். மற்றும் வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு
விற்காமல் நகர் புறங்களில் உள்ள அசைவ உணவு விடுதிகளுக்கு கோழிகளை விற்பனை
செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.

அட்டவணை 1. நிதி / முதலீடு

பொருள் விபரம் விலைகள்


(இலங்கை ரூபாயில்)
150-200 கோழிகளுக்கு கொட்டகை அமைக்க ரூ. 30,000-50,000

அடை வைப்பதற்கு ஏற்ற கோழி முட்டைகளின் விலை:


 போர்க்கோழி முட்டை ரூ. 80.00
 வான்கோழி முட்டை ரூ. 80.00
ரூ. 50.00
 பென்ரம்கோழி முட்டை

 ஒரு நாள் குஞ்சின் விலை சுமார் ரூ. 65-80


 இரண்டு வார குஞ்சின் விலை
ரூ. 140-150

கோழிகளின் விற்பனை விலை விபரம்: ரூ. 25


 ஒரு முட்டையின் விலை ரூ. 1500-2500
 8 மாத நாட்டுச் சேவல் ரூ. 700-900
 8 மாத முட்டைப்பேடு ரூ. 650-700

Project Proposal – Poultry Farming | திட்ட முன்மொழிவு – நாட்டுக் கோழிப் பண்ணை 14


வளர்ப்பு
 5 மாத கன்னிப்பேடு

AGRICULTURAL - GOALS & EXPECTATIONS |


நிதி வேளாண்துறையில் இலக்குகள் &
எதிர்பார்ப்புகள்
வேளாண் துறையில் இலக்குகளும் எதிர்பார்ப்புகளும்:

1. உங்களுக்கு தேவையான பொருட்களின் பட்டியல்:

1.

2.

3.

4.

5.

2. தற்போதைய திட்டமிடலுக்கு தேவையான நிலங்களின் அளவு:

உங்கள் திட்டத்துக்கான நிலம் எங்கே இருக்க வேண்டும்?

3. மின்சாரத்தின் தேவை:

4. சூரிய ஒளியில் மின்சாரம்:

5. நீர்ப்பாசனம்:

Project Proposal – Poultry Farming | திட்ட முன்மொழிவு – நாட்டுக் கோழிப் பண்ணை 15


வளர்ப்பு
6. உபகரணங்கள்:

இலக்கு:
ஒருவர் தன் வாழ்வாதார தேவைக்கு தானும் தன் குடும்பமும், சமூகமும் தற்சார்பு
பொருளாதார வாழ்க்கையில் நிறைவு பெறுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும்
அபிவிருத்தி அடைகின்றது. வாழ்வாதார தேவைகளுக்கான இறக்குமதி குறைகின்றது.
அதன் மூலம் அந்நிய செலாவணி சேமிக்கப்படுகின்றது.

இலங்கை போன்ற நிலம், நீர் வளம் கொண்ட நாட்டில் வாழும் நாங்கள் எங்கள்
வளங்களை பயன் படுத்தி முன்னேற முடியும்.

PLANS – TRUST & UNDERSTANDING |


திட்டங்களும் – நம்பிக்கையும், புரிந்துணர்வும்
திட்டங்களும் - நம்பிக்கையும் புரிந்துணர்வும்:

1. உங்கள் திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் என்ன?

2. நீங்கள் என்ன செய்ய முன்மொழிகிறீர்கள்?

3. அதை தேர்ந்து எடுக்க காரணம் என்ன? அதன் தேவை அல்லது அவசியம் என்ன?
அதன் முக்கியத்துவம் என்ன?

4. உங்களை குறித்த நம்பிக்கை என்ன?

5. நீங்கள் செய்யும் (திட்டமிடும்) அனைத்து பணிகளையும் விவரிக்க வேண்டும்.

6. நீங்கள் விவசாயத் தொழிலில் இருக்கிறீர்களா?

Project Proposal – Poultry Farming | திட்ட முன்மொழிவு – நாட்டுக் கோழிப் பண்ணை 16


வளர்ப்பு
1. அல்லது அதில் இறங்க திட்டமிட்டுள்ளீர்களா?

2. நீங்கள் எங்கே வசிக்கின்றீர்கள்?

3. எத்தனை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறீர்கள்?

4. நீங்கள் எப்போது விவசாயத்தைத் தொடங்கினீர்கள்?

5. நீங்கள் தற்போது எவ்வாறு செயல்படுகிறீர்கள்?

7. குறுகிய கால (நடப்பு ஆண்டு):

ஆரம்ப வருமானத்துக்கு என்ன திட்டம் வைத்து உள்ளீர்கள்?

8. நடுத்தர கால (அடுத்த 1 - 2 ஆண்டுகள்):

9. நீண்டகால திட்டங்கள் என்ன?

Project Proposal – Poultry Farming | திட்ட முன்மொழிவு – நாட்டுக் கோழிப் பண்ணை 17


வளர்ப்பு

You might also like