You are on page 1of 5

1949ஆம் ஆண்டு ஒரு குளிர்கால அதிகாலை நேரம்… சரியாகச்

சொல்வதானால் 15-10-1949.

ஹரியானாவின் அம்பாலா மத்திய சிறைச்சாலை நிர்வாகம் துரிதமாகவும்


நிதானமாகவும் செயல் பட்டுக்கொண்டிருந்தது. காந்தி கொலை வழக்கில் மரண
தண்டனை வழங்கப்பட்ட இருவருக்கும் அன்று தூக்கு... சுமார் ஒரு வருடம்
நடைபெற்ற விசாரணைக்கு பிறகு நாதுராம் விநாயக்ராவ் கோட்ஸேவுக்கும்
கூட்டாளியான நாராயண் ஆப்தேவுக்கும் தூக்கு தண்டனை வழங்கி
தீர்ப்பளித்திருந்தது பஞ்சாப் உயர்நீதிமன்றம். ஏற்பாடுகள் துவங்கிய சிறிது
நேரத்தில் அறையிலிருந்து வெளியேற்றப்படுகிறார் கோட்ஸே. உடன் ஆப்தே.
விசாரணையின் போது தென்பட்ட உறுதி, கம்பீரம் தொலைந்துபோய் சற்றே
பதட்டத்துடன் காணப்பட்டார் கோட்ஸே. ஆப்தே நிதானமாக இருந்தார்.

தூக்கு மேடையேறியதும், சற்றே உடைந்த குரலில் கோட்ஸே


'ஒருங்கிணைந்த பாரதம்' எனவும், ஆப்தே 'வாழ்க!' என்கிறார் உறுதி தொனிக்கும்
குரலில். தூக்கிலிடப்பட்ட ஆப்தே உடனடி மரணத்தை தழுவ, கோட்ஸே உடல்
சற்று நேரம் துடித்து அடங்கியது. கயிற்றிலிருந்து பிரிக்கப்பட்ட உடல்கள் அடுத்த
ஒருமணி நேரத்திற்குள் சிறை வளாகத்திற்குள்ளேயே எரியூட்டப்பட்டன.

டெல்லி மேலிடத்திலிருந்து வந்திருந்த அறிவுறுத்தலின்படி, ஒரு


அதிகாரிகள் குழு, அஸ்தியை பெற்றுக்கொண்டு, ஆயுதமேந்திய போலீசார்
பாதுகாப்போடு காகர் நதி நோக்கி விரைந்தது. நதிக்கரையை அடைந்து யாரும்
தங்களை பின்தொடரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு அவசர
அவசரமாக அஸ்தியை கரைக்கின்றனர். தண்டனை நிறைவேற்ற விவரங்களும்
இறுதி சடங்கு நிகழ்வுகளும் விரிவாக வெளியிடப்படாமல், சுருக்கமாகவே
வெளிவந்தன.

சுதந்திர இந்தியாவின் 'முதல் மரண தண்டனை நிறைவேற்றம்' என்று


வரலாறு குறித்து கொண்டது!

மும்மூர்த்திகளின் திருமூர்த்தியாய் விளங்கிய இந்திய சுதந்திர


வேள்வியின் இந்திரியத்தை, ஆயிரமாயிரம் மக்கள் ஆராதித்த ஒரு அவதார
புருஷனை அதே மக்கள் கூட்டத்தின் கண்முன் கொடூரமாக கொல்ல கோட்ஸே
துணிந்தது ஏன்? தனிப்பட்ட வன்மமா? அவநம்பிக்கையா? இல்லை வேறு
தனிப்பட்ட காரணமா?

“அதிகார துஸ்பிரயோகம் செய்தார்; நாட்டு மக்களை தவறாக


வழிநடத்தினார். முப்பது கோடி இந்துக்களின் உரிமையை
விட்டுக்கொடுத்துவிட்டு, இஸ்லாமியர்களை ஆதரித்ததன்மூலம் இந்து
மதத்தையும் அதன் கலாச்சாரத்தையும் இழிவுபடுத்திவிட்டார். அவரது
அஹிம்சை, சத்யாகிரகக் கொள்கைகளை இந்து மக்கள் மீ து மட்டுமே திணித்தார்.
மற்ற மதத்தினர் வன்முறையில் இறங்கியபோது அவர் கண்டிக்கவில்லை..
இனிமேலும் அவரை விட்டுவைப்பது இந்து மதத்திற்க்கே ஆபத்து என்பதால்தான்
காந்தியை கொன்றேன்”.
இதுதான் அவர் பஞ்சாப் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதத்தின் சாரம்.

காந்திஜியை பற்றி கோட்ஸே இப்படி ஒரு முடிவுக்கு வருவதற்கு காரணம்


என்ன? அதை புரிந்துகொள்ள கோட்ஸே வளர்ந்த விதமும் அவரை சுற்றி நடந்த
நிகழ்வுகளை பற்றிய புரிதலும் அவசியம்...

1910ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் நாள் மராட்டிய பிராமண குடும்பத்தை


சேர்ந்த விநாயக் கோட்ஸேவுக்கும் லட்சுமிக்கும் ஐந்தாவது குழந்தையாக
பிறந்தார் நாதுராம் விநாயக்ராவ் கோட்ஸே. கோட்ஸேவுக்கு முன்னாள் பிறந்த
மூன்று ஆண் குழந்தைகளும் துரதிர்ஷ்டவசமாக இறந்து போக, பெற்றோர்
தங்கள் குடும்பத்திற்கு ஆண் குழந்தைச் சாபம் இருப்பதாக நினைத்து பயந்து,
கோட்ஸேவை காப்பாற்ற நினைத்து, அவரை சிறிதுகாலம் பெண்
குழந்தையாகவே பாவித்து வளர்த்தனர். அவருக்கு மூக்குத்தி அணிவித்தனர்.
ராம் என்று பெயரிட்டாலும், மூக்குத்தி அணிந்ததால் நாதுராம் (மூக்குத்தி
அணிந்த ராம்) என்று செல்லமாக அழைத்தனர். அந்த பெயரே பின்னாளில்
நிலைத்துவிட்டது. ஐந்தாம் வகுப்பு வரை பரமதி பள்ளியில் பயின்றவர்,
மேற்படிப்புக்காக புனே அனுப்பப்பட்டார்.

சொந்த ஊரில் இருந்தவரை வெளியுலக ஞானம் பெரியளவில் இல்லாமல்


இருந்த கோட்ஸேவுக்கு, புனே வாழ்க்கை நிறைய கற்று கொடுத்தது. குறிப்பாக
அன்றைய அரசியல். அன்றைய அரசியலில், நாட்டு நடப்பில் அதீத ஆர்வம்
காட்டினார். விளைவு? படிப்பில் நாட்டம் செல்லவில்லை. பத்தாம் வகுப்பு
தேர்வில் தோல்வியடைந்தார். இதையடுத்து கோட்ஸே, பள்ளி படிப்பை கைவிட
முடிவு செய்தார். பள்ளி படிப்பில் அக்கறை காட்டவில்லையே தவிர புத்தக
வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்.

காந்திஜியை பற்றி கோட்ஸே கொண்டிருந்த எண்ணம் பின்னாளில்


தோன்றியதே தவிர, அவரது ஆரம்பகால மனநிலை வேறு மாதிரியாக இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர தலைவராக காந்திஜி திகழ்ந்து கொண்டிருந்த
காலம் அது. திலகரின் மறைவுக்கு பின், காங்கிரஸ் கட்சியில் தவிர்க்க முடியாத
சக்தியாக அவர் வளர்ந்துவிட்டிருந்தார். ஆங்கிலேய அரசுக்கு எதிரான
காந்திஜியின் அஹிம்சை போர் கோட்ஸேவை மிகவும் கவர்ந்தது.
கோட்ஸேவின் தம்பியும் காந்தி கொலை வழக்கின் மற்றோரு குற்றவாளியுமான
கோபால் கோட்ஸே "பள்ளி காலத்தில் காந்திஜியை எங்கள் மானசீக
குருவாகவும், அவரை எங்கள் முன்மாதிரியாகவும் நினைத்தோம்." என்கிறார்.
ஒரு வகையில் பார்த்தால், கோட்ஸேவின் சுதந்திர வேட்கையை தூண்டியதே
மகாத்மா காந்தி தான்... இது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் கோட்ஸேவை பொறுத்தவரை தேச சுதந்திரம் எந்த அளவு


முக்கியமாக பட்டதோ அதே அளவு இந்து மதத்தின் கலாச்சாரம், பண்பாடு
காப்பாற்றப்பட வேண்டிய ஒன்றாக பட்டது. கோட்ஸே தான் ஒரு இந்து என்பதில்
பெருமை கொண்டார். காந்திஜியின் சுதந்திர போராட்ட முனைப்பின்பால்
கோட்ஸே மதிப்பு கொண்டிருந்தாலும், சுதந்திரத்தை அடைய முன்னெடுக்க
வேண்டியது அஹிம்சை என்பதை அவர் மனம் ஏற்க மறுத்தது.
பத்தொன்பதாவது வயதில் ரத்னகிரியில் குடியேறிய கோட்ஸேவை,
'இந்துக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை நோக்கிய புதிய தேசம்' என்ற
சாவர்க்கரின் கொள்கை ஈர்த்தது. இயல்பாகவே இந்து மதத்தின்பால் பற்று
கொண்டிருந்த கோட்ஸே, 1932ஆம் ஆண்டு RSSல் இணைந்தார். சிறிது
காலத்திலேயே ஹிந்து மஹாசபையிலும் உறுப்பினரானார்.

இந்துத்துவ கொள்கை மத சுதந்திரத்திற்கு இடம் கொடுத்தாலும், பிற


மதங்களுக்கு முழு உரிமை தராது என்பதை விரைவிலேயே புரிந்து கொண்டார்
கோட்ஸே. 'சாவர்க்கரின் 'இந்துத்துவ' கொள்கையால் தான் இந்துக்களையும்
அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்க முடியும் என்று கருதினார் கோட்ஸே.
இந்து மதத்தின் மேல் பற்று கொண்டிருந்தாலும், சாதி மத பேதங்களை
வெறுத்தார். தங்களுக்குள் உள்ள பாகுபாடுகளை களைந்து 'இந்து' என்று
ஒன்றிணைவதால் மட்டுமே 'இந்து தேசம்' சாத்தியம் என்று போதித்தார்.
அனைத்து சாதியினரையும் ஒன்றிணைத்தது வட்டு ீ விழாக்களில், பொது
நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள செய்தார். அவர்களோடு ஒன்றாக
உணவருந்துவது, பேசுவது என்று இந்துக்களுக்குள் ஒற்றுமையை வளர்த்தார்.

இந்துத்துவ அமைப்புகளுடன் இனைந்து செயலாற்ற தொடங்கிய சில


காலத்திற்குள்ளாகவே, அவற்றின் தீவிரவாத சிந்தனைகளில் ஈடுபாடு
கொண்டார் கோட்ஸே. ஒரு கட்டத்தில், தீவிரவாதம் மட்டுமே இந்தியாவிற்கு
விரைவாக சுதந்திரம் பெற்று தர முடியும் என்ற முடிவுக்கு வந்துவிட்டிருந்தார்.
பின்னாளில் வழக்கு விசாரணையின் போது, "காந்திஜி முன்வைத்த அஹிம்சை,
சத்யாகிரஹ கொள்கைகளில் புதுமையையோ, உண்மைத் தன்மையையே காண
முடியவில்லை. ராமன் ராவணனை கொன்றதையோ, கிருஷ்ணன் கம்சனை
அழித்ததையோ வன்முறை என்றோ தீவிரவாதம் என்றோ கருத முடியாது."
என்கிறார். அந்த அளவுக்கு சாவர்க்கரின் தீவிரவாத சிந்தனை அவரை
ஆட்கொண்டிருந்தது. காந்திஜியின் மேல் கோட்ஸே வைத்திருந்த மதிப்பில்
முதல் கீ றல் விழுந்தது இங்கு தான்!

1937 ஆம் ஆண்டில், கோட்ஸே ஹைதராபாத் மாநிலத்தில் ஒரு ஆர்ப்பாட்ட


ஊர்வலத்தை முன்னெடுத்துச் சென்று, கைது செய்யப்பட்டார். ஒரு வருடம்
சிறையில் இருந்துவிட்டு வெளிவந்தவர், ஹிந்து தேசத்தை நோக்கிய
பார்வையில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார். தனது நண்பர் நாராயண்
ஆப்தேவுடன் இணைந்து 'அக்ரனி' பத்திரிக்கையை துவங்கினார். ஆரம்பத்தில்
வெளியீட்டு சிக்கலை சந்தித்த நாளிதழ், பின்னாளில் இந்துத்துவ சித்தாந்தத்தை
பரப்பும் முக்கிய கருவியாக அமைந்தது.

1940களில் இந்தியாவில் ஆங்காங்கே நிகழ்ந்த இந்து-முஸ்லீம்


கலவரங்கள் கோட்ஸேவை பெரிதும் பாதித்தன. முஸ்லீம் லீக்கின்
செயல்பாடுகள் தனி நாடு என்ற கோட்பாட்டை நோக்கி நகர்வதையும்
உன்னிப்பாக கவனித்து வந்தார். முகமதலி ஜின்னாவின் உறுதிக்கு முன்னால்
காந்திஜியின் அஹிம்சை தோற்றுவிட்டதாகவே எண்ணினார். இது மகாத்மாவின்
மீ தான அவர் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. முஸ்லிம்கள் சுதந்திரத்தை
அனுமதிப்பதும், இந்துக்களின் உரிமையை பறிப்பதும் ஒன்றே என்று
முழங்கினார். காந்திஜி தன் கொள்கைகளை இந்து மக்கள் மீ து மட்டுமே
திணிப்பதாகவும், அவர்களை ஏமாளிகளாக்குவதாகவும் குற்றம் சாட்டினார்.
முஸ்லிம்களை விரோதிகளாக பார்க்க தொடங்கினார்.

1946இல் வெடித்த நாக்காளி கலவரத்தில் ஹிந்துக்கள் கொத்து கொத்தாக


கொல்ல பட்டனர். அவர்களின் சொத்துக்கள் குறிவைத்து சூறையாடப்பட்டன.
கலவர நிகழ்வுகள் கோட்ஸேவை அதிர்ச்சிக்குளாக்கியது. ஹிந்துக்களின்
உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை உருவாகிவிட்டதாக எண்ணி மனம்
நொந்தார். கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர அரசு முயற்சி
எடுத்துக்கொண்டிருக்கும்போதே, காந்தி நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு,
மக்களிடையே பேசி ஆங்காங்கே அமைதியை நிலை நாட்டினார். ஆயினும்
கோட்ஸேவை பொறுத்தவரை நாக்காளி கலவரத்தை பொறுத்தவரை காந்தி
தனது உறுதியான கண்டனத்தை பதிவு செய்யவில்லை; இந்து மக்களுக்காக
நிற்கவில்லை என்று கருதினார்.

சுதந்திரத்திற்கு பிறகும் இந்து முஸ்லீம் மோதல் போக்கு குறையவில்லை.


பாகிஸ்தான் பிரிவினையை கோட்ஸேவால் ஜீரணிக்க இயலவில்லை. காந்தி
நினைத்திருந்தால் பிரிவினையை தவிர்த்திருக்கலாம் என்பது அவர் எண்ணமாக
இருந்தது. பரந்த பாரத நாட்டில், இந்துத்துவ அரசின் கீ ழ் ஒற்றுமையாக வாழும்
வாய்ப்பை காந்தி வேண்டுமென்றே நழுவவிட்டதாக எண்ணி ஆத்திரமடைந்தார்.
இதற்க்கு மேலும் காந்திஜியை விட்டு வைப்பது இந்துக்களின் எதிர்காலத்திற்கு
ஆபத்து என்ற முடிவுக்கு வந்தார். இந்திய அரசு பாகிஸ்தானுக்கு ஒதுக்கியிருந்த
ஐம்பத்தைந்து கோடி ருபாய் நிதியை உடனே வழங்கக்கோரி காந்திஜி ஆரம்பித்த
உண்ணாவிரத போராட்டம், கோட்ஸேவை ஒரு முடிவுக்கு வர வைத்தது.

கடைசியில் அந்த சம்பவம் நடந்தே விட்டது! ஜனவரி 30, 1948. மாலை


5.17... படேலுடன் பேசி கொண்டிருந்ததால், மாலை நேர பிரார்த்தனைக்கு
நேரமாகிவிட்டதை உணர்ந்த காந்தியடிகள் அவசரமாக கிளம்பினார்.

பிரார்த்தனை கூடத்திற்கு செல்லும் வழியில், பணிவுடன் கைகளை


காட்டியபடி காந்திக்கு முன்வந்து நின்றார் கோட்ஸே... அருகில் இருந்த
காந்தியின் மருமகள் மிருதுளா "பாபுஜி, ஏற்கெனவே தாமதமாக வந்துள்ளார்.
வழியை விடுங்கள்" என்று கோபமாக கூற, கண்ணிமைக்கும் நேரத்தில்
மிருதுளாவை கீ ழே தள்ளிவிட்டார் கோட்ஸே. அவள் நிதானித்து எழுவதற்கு
கோட்ஸே மறைப்பிலிருந்து எடுத்த துப்பாக்கி மும்முறை தோட்டாக்களை கக்கி
விட்டது. மும்மூர்த்திகளின் திருமூர்த்தியான காந்திஜி சுருண்டு விழுந்தார்.
கூட்டம் அதிர்ச்சியில் உறைந்தது..

. காவல் அதிகாரி ரெய்னர் கோட்ஸேவை பாய்ந்து பிடித்தார். மற்ற


கூட்டாளிகளும் மடக்கப்பட்டார்கள்…

நான்கு மாதங்கள் கழித்து மே மாதம் தொடங்கிய வழக்கு விசாரணை,


ஒன்றரை வருடத்திற்கு மேலாக நடைபெற்றது. கூட்டாளிகள் ஒன்பது பேரில்
எட்டு பேர் கொலைக்குற்றம் சாட்டப்பட்டனர். சாவர்க்கர் குற்றவாளியாக
சேர்க்கப்பட்டு, பின்னர் வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால், விடுதலை
செய்யப்பட்டார். 1949ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் நாள், நாராயண் அப்தேவுக்கும்,
கோட்ஸேவுக்கும் மரண தண்டனை விதிக்க பட்டது. கோபால் கோட்ஸே
உள்ளிட்ட அறுவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கோட்ஸேவை தவிர
மற்ற அனைவரும் தண்டனை குறைப்புக்கு கருணை கோரினார்கள். ஆனால்
கோட்ஸே தண்டனையை பெருமையாக ஏற்று கொண்டார். காந்தி
குடும்பத்தினரே கோட்ஸேவுக்கு தண்டனை குறைப்புக்கு சிபாரிசு செய்தும்,
அப்போதைய பிரதமர் நேரு ஏற்க மறுத்து விட்டார். விசாரணை விபரங்கள்,
வாக்கு மூலங்கள் பரம ரகசியமாக வைக்க பட்டன. அரசு தரப்பிலிருந்து
ஊடங்களுக்கு கூட செய்தி தரப்படவில்லை. நீதிமன்ற வாயில்களில் காத்திருந்த
செய்தியாளர்கள் காவலர்களால் விரட்டியடிக்கப்பட்டனர்.

நவம்பர் 15, 1949 அன்று ஹரியானாவின் அம்பாலா மத்திய சிறையில்


கோட்ஸேவும், ஆப்தேவும் தூக்கிலிடப்பட்டனர்....

நாதுராம் கோட்ஸே ஒரு தன்னலமற்ற சுதந்திர போராளி தான். ஆயினும்


அவர் முன்னெடுத்த 'இந்துத்துவம்' ஏற்றுக்கொள்ள முடியாதது. இது
ஒருபுறமிருந்தாலும், தேச வழிகாட்டியை படுகொலை செய்தது இந்திய
வரலாற்றின் பக்கங்களில் அழிக்க முடியாத கரும்புள்ளியாகிவிட்டது என்பது
மறுக்க முடியாத உண்மை!

You might also like