You are on page 1of 48

மகாத்மா காந்தி வாழ்ந்த காலமும், நாம் வாழும் காலமும் ஒன்றல்ல.

எனினும் 21-ஆம்
நூற்றாண்டில் சர்வதேச நாடுகள் சந்திக்க போகும் சவால்களையும், பிரச்னைகளையும் அவர்
முன்கூட்டியே கணித்திருந்தார். சூழலியல், உலக அமைதி உள்ளிட்டவை தொடர்பான
பிரச்னைகளுக்குத் தீர்வுகாண அவர் அப்போதே அறிவுரை வழங்கியுள்ளார். மகாத்மா
காந்தியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுதான், ஐ.நா.வின் நிலையான
வளர்ச்சிக்கான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களில்
சக்திவாய்ந்தவராத் திகழ்ந்தவர் மகாத்மா காந்தி. இந்திய நாட்டின் தந்தையாக பார்க்கப்படும்
அவரின் 150-ஆவது பிறந்த தினத்தை உலக நாடுகள் கொண்டாடுவது, அவருக்கு அளிக்கும்
மிகச்சிறந்த மரியாதையாகும்.

இந்திய மக்களின் வாழ்வில் பல முனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, மாற்றம் நிகழ்வித்தார்


காந்திஜி. ஆகவேதான் அவரை நம் தேசப்பிதா என்று கருதுகிறோம். ஓர் சிறந்த தகப்பனார்
போன்று அவர் நமக்கு வர்த்தமான ரீதியிலும் ஆன்மிக ரீதியிலும் பெருவளம் வாய்ந்த
மரபுரிமைச் செல்வத்தை ஆஸ்தியாக விட்டுச் சென்றுள்ளார். ஆனால், நாமோ படிப்படியாக
அந்தச் சொத்துகளை இழந்து தொய்ந்து தார்மிகம் குன்றி அல்லல்படுகிறோம்.

இன்றைய இந்தியாவும் உலகமும் காந்திஜியின் கனவுகளுக்கு முற்றிலும் மாறாக உழன்று


வருகின்றன. வன்முறை, பயங்கரவாதம், ஊழல் மலிந்த அதிகார அரசியல், மனித மாண்பின்
சீரழிவு ஆகியவை நம்மைச் சூழ்ந்து கோரத்தாண்டவம் ஆடுகின்றன. இதற்குக் காரணம்
வேறு யாருமல்ல, நாமேதான்!

இன்றைய அவலங்களின் கோரப் பிடியினின்றும் விடுபட்டு சீரிய எதிர்காலத்தை


அமைத்துக்கொள்வதற்கு நாமேதான் நமக்கு உதவ வேண்டும்; வெளியார் யாருமல்ல. அதற்கு
நாம் செய்யவேண்டியது என்ன? அண்ணல் காந்தி கற்பித்த மூலக்கோட்பாட்டுக் கூறுகளான
அகிம்சை, அன்பு, தன்னம்பிக்கை, சமூக நல்லிணக்கம், வையகம் தழுவிய உயரிய சிந்தனை,
அதேசமயம் உள்ளூர் மேம்பாட்டுக்கான செயலாற்றல் ஆகியவற்றை நமது அன்றாட வாழ்வில்
கடைப்பிடிக்கத் தொடங்க வேண்டும். மாற்றம் வேண்டுமாயின், நாம் முதலில் மாற வேண்டும்.

கை ராட்டையில் நூற்றல், கதர் அணிதல், எளிய வாழ்வு, 'மாட்டு வண்டிப் பொருளாதாரம்'


என்று ஜவாஹர்லால் நேரு ஒரு சமயம் குத்திக்காட்டிய கிராமிய மேம்பாடு - இவையே
காந்தியம் என்று தவறாக மட்டம் தட்டப்படுபவற்றை ஓரங்கட்டிவிட்டு, உண்மையில் காந்திய
சிந்தனை என்ன என்பதைக் கவனிக்க வேண்டும்.

அவரது சிந்தனையின் சாராம்சம், மெய்ம்மை, அகிம்சை, சுயவிருப்பார்வுடன் ஒன்றுபட்டு


ஒத்துழைப்பது, தரித்திர நாராயணர்களாம் ஏழை மக்களின் மேம்பாடு, ஆன்மிகம் இழைந்த
அப்பழுக்கற்ற அரசியல், வீரார்ந்த தன்னம்பிக்கை ஆகியவையே காந்திஜி புகட்டிய அடிப்படைப்
பாடங்களாகும்.

'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்ற உறுதிப்பாடுதான் மகோத்தமர் காந்தியை


அரசியலில் ஈடுபடச் செய்தது. "சத்திய நாட்டம் கொண்ட எவராலும் எந்த வாழ்க்கைத்
தளத்தினின்றும் தனித்திருக்க இயலாது'' என்று காந்திஜி தமது சுய சரிதையில் கூறியுள்ளார்.

"சத்தியமும் அகிம்சையும் பிணைந்த பாதையே அமைதிக்கான ராஜபாட்டை; அவ்வாறாயினும்


அமைதியைக் காட்டிலும் மெய்ம்மையைக் கடைப்பிடிப்பதே அத்தியாவசியமானது'' என்று
1926 மே மாத வாக்கிலேயே காந்திஜி கருத்துத் தெரிவித்துள்ளார்.

காந்திஜியின் பொது வாழ்க்கை 54 ஆண்டு காலம் (1893 முதல் 1948 வரை) தொடர்ந்தது.
மோட்டார் வாகனம் கண்டுபிடிப்பதற்கு முன்பிருந்து, அணுகுண்டு வீச்சு வரையிலான
காலகட்டம் அது. முதல் உலக மகா யுத்தம் 1919-ல் முடிவுற்றது. ஆயினும் போர் சமாதான
உடன்படிக்கையை அடுத்து, ஃபாஸிஸம், ஜெர்மானிய நாஸிஸம், ருஷ்ய கம்யூனிஸம் போன்ற
வன்முறையும் ரத்த வெள்ளமும் தோய்ந்த தத்துவங்கள் தலையெடுக்கலாயின. 1939
செப்டம்பரில் தொடங்கிய இரண்டாம் உலகப் போரின்போது ரத்த ஆறு திரும்பவும் வெள்ளமாகப்
பெருகி ஆகஸ்ட் 1945-ல் ஹிரோஷிமா, நாகசாகி ஜப்பானிய நகரங்களை அணுகுண்டு
தாக்கியதில் பயங்கர தீப் பிழம்புகளாக உச்சகட்டம் எய்தியது.

வன்முறை வெறி இந்தியாவையும் பீடித்தது. 1946-47 ஆண்டுகளில் நிகழ்ந்த மதக்


கலவரங்களில் ஏராளமான உயிர்ச்சேதமும் சொல்லொணாக் கொடுமைகளும் மலிந்தன.

வையகம் முழுவதும் வியாபித்த அந்த வன்முறை உன்மத்த காலப்பரப்பில் தனியொரு


காந்திஜியின் தார்மிக நல்லறிவு செரிந்த அமுத அன்பு மொழி, வன்முறையில் ஒடுங்கிப்போன
உலக மாந்தரின் கவனத்தைக் கவரத் தொடங்கிற்று.

தீவினைக்கு எதிராக வன்முறை அறவே தவிர்த்த அறநெறிப் போராட்டமாம் சத்தியாக்கிரகம்


எனும் புதிய கருத்தும், நடைமுறைக்கு உகந்த நல்லிணக்கச் செயல்பாட்டு வழிமுறைகளும்
உலக மக்களுக்குப் பண்டைய நற்போதனைகளை நினைவுபடுத்தின. "கோபதாபங்களையும்
காழ்ப்புணர்வையும் முறியடிக்க, அதேபோன்ற ஆத்திரங்களாலும் வெறுப்புணர்வுகளாலும்
வன்முறை வழியாக வெற்றிகொள்ள முடியாது. கண்களைப் பறித்ததற்குப் பதிலடியாக
எதிரியின் கண்களைப் பறிப்பதுதான் ஒரே வழி என்றாகிவிடின், உலகம் பூராவும் அனைவருமே
கண்ணிழந்த கபோதிகளாகிவிடுவார்கள்'' என்று எடுத்துரைத்தார் காந்தி மகான்.
மானிடரின் மனிதாபிமானப் பண்புகளைப் பேணி வளமூட்டுவதற்கு மனிதன் தனது வாழ்வின்
அடிப்படை நியதிகளைப் பின்பற்றி ஒழுகுதல் வேண்டும். மெய்ம்மை, அன்பு இவையே மானிட
தர்மத்தின் அடித்தள நியதிகளாம். ஆனால், அந்தோ, நவீன பெருந்தொழில் சார்ந்த இன்றைய
உலகாயத சமூகத்தில் தனிநபர்களிடையேயும், நாடுகளிடையேயும் போட்டாபோட்டியிடும்
சுயநலமும் இனவெறியும் பொருளாதார தளத்தில் அதிக லாபம் பெறும் மனப்பாங்கும், தன்நல
நாட்டமும் மனித இயல்பு என்ற எண்ணம் பரவிப் படர்ந்துவிட்டது. அதுவே தார்மிக சீரழிவுக்கு
வித்திட்டது. அதன் நேர் விளைவே இரு கோர உலக மகா யுத்தங்கள்.

மனித இயல்பு பற்றிய இத்தகைய இழிந்த நோக்கையும், தார்மிகச் சீரழிவையும் கண்ணுற்ற


காந்திஜி மனம் நொந்து வெகுண்டெழுந்தார். நவநாகரிக, பெருந்தொழில் சார்ந்த சமுதாயம்
ஆண்களையும் பெண்களையும் வெறும் ஜடப்பொருளாகவும் இயந்திரங்களாகவும்
ஆக்கிவிட்டன என்று சாடினார்.

"மெஷினாக மாற்றப்பட்டுவிட்ட மனிதனை, அவனது மூலமுதலான மாண்புக்கு உயர்த்தி


தார்மிகத்தில் இருத்துவதே எனது லட்சியம்; அவனிடம் / அவளிடம் ஒடுங்கியுள்ள தார்மிகப்
பண்புகளைத் தட்டியெழுப்பி ஊக்குவிப்பது அத்தியாவசியம் என்று ஒரு சமயம் தொழிலதிபர்
ஜி.டி. பிர்லாவிடம் சுருங்கக் கூறினார். "மனிதன் இயந்திரத்துக்கு அடிமை ஆகிவிடக் கூடாது,
இயந்திரங்கள் அவனது / அவளது அடிமைகளாக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

புரட்சிகரமான தொழில்நுட்ப விகசிப்புகளோடு வன்முறை, பயங்கரவாதம், ஏழ்மை,


அபாயகரமான அணுசக்திக் கழிவுகள், அரசியல் பித்தலாட்டங்கள் ஆகிய அவலங்களும்
இழைந்துள்ள இந்த 21-ம் நூற்றாண்டில் அதி அவசர கதியில் இலக்கின்றி விழையும் மானிட
வர்க்கத்துக்கு, "சத்தியம், அகிம்சை, சத்தியாக்கிரகம்'' எனும் முப்பெறு அடித்தளங்கள்மீது
எழுப்பப்பட்ட காந்தியத்தின் வாயிலாய் இன்றைய பிரச்னைகள் பலவற்றுக்கு நேர்முகமாகவோ
மறைமுகமாகவோ தீர்வு கண்டறிய முடியும்.

ஆயினும், நினைத்த மாத்திரத்தில் பலன் தருவதற்குக் காந்தியம் புராண கால கற்பக


விருட்சமோ காமதேனுவோ அல்ல!

சென்ற நூற்றாண்டில் காந்திஜி காட்டிய வழிமுறைகள் தற்காலச் சூழ்நிலையில் எவ்வாறு


பயன்தரக்கூடியதாகப் பின்பற்றலாம் என்பதை நாமே தீர ஆராய்ந்து ஓர் இணக்கமான
முடிவுக்கு வரவேண்டும்.

தனியார்களோ, குழுவினரோ, அரசாங்கமோ எவ்வளவு பெரிய செயல்முறை திட்டங்கள்


் கையிலும், மகாத்மா காந்தி தமது உயிர்த்தியாகத்துக்கு ஆறு மாதம் முன்பு
தீடடு
விட்டுச்சென்ற பின்வரும் உரைகல் சோதனை போதனை வாசகத்தை நினைவில் நிறுத்துதல்
மிக நன்று:

"நான் உங்களுக்கெல்லாம் ஓர் மந்திரத் தாயத்து அளிக்கிறேன். முடிவெடுக்கையில் அது


சரியா, தவறா என்கிற ஐயப்பாடு எழும்போதோ, அல்லது உமது அகந்தையோ சுயநலமோ
தலைதூக்கும்போதோ இந்தச் சோதனையைப் பயன்படுத்துங்கள். நீங்கள் பார்த்துள்ள,
ஏழ்மைமிக்க, மிக மிக நலிவுற்ற முகத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் . நீங்கள்
செய்யவிருக்கும் காரியம், எடுக்கவிருக்கும் நடவடிக்கை, தீட்டவிருக்கும் திட்டம், அந்த பரம
ஏழைக்கு எவ்விதத்திலாவது பயன்படுமா? அவன் தன் அன்றாட வாழ்க்கையையும், வருங்கால
வாழ்வையும் வளமாக்கி அவனது கட்டுப்பாட்டில் இருத்திக்கொள்ள வகைசெய்யுமா?

இதையே வேறுவிதமாகச் சொல்லப்போனால், பசிப்பிணியாலும் ஆன்மிக வறட்சியாலும் வாடும்


லட்சக்கணக்கான மக்களுக்கு உண்மையில் சுய - ராஜ்யம் (சுயதேவைப்பூர்த்தி) கிடைக்கச்
செய்யுமா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். அதன்பின் உங்களது ஐயங்களும்
சுயநலமும் கரைந்து மறைந்து போவதைக் காண்பீர்கள்'' (1947 ஆகஸ்ட் மாதம் தேதி
குறிப்பிடாமல் காந்திஜி ஆங்கிலத்தில் தம் கைப்பட எழுதிய குறிப்பு இது. ஆதாரம்:
""கலெக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி'' நூல் 89, பக்கம் 125).

உலகளாவிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து


சிந்தனையாளர்களும் அரசியல் மேதைகளும் விவாதித்து வருகையில் காந்தியம் சார்ந்த
செயல் நோக்கங்களையே பரிந்துரைக்க முற்படுகின்றனர். 'அரசியலில் ஆன்மிகம் இழைய
வேண்டும். அதிகார அரசியல் பலத்தின் மீதான ஆசைக்குப் பதிலாக அன்பின் ஆற்றல் மீது
பற்று பெருக வேண்டும்' என்பதே காந்திஜியின் எதிர்பார்ப்பு. மக்களின் நாகரிக நிலை எந்தக்
குறிக்கோளை நோக்கித் திசை திரும்ப வேண்டும் என்பதை மகாத்மா காந்தி தன் வழியில்
மேலோட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க பெருந்தலைவர் மார்டின் லூதர் கிங் பின்வருமாறு பதித்துள்ளார்: ""காந்திய


சித்தாந்தத்தை மேன்மேலும் ஆழ்ந்து படிக்கையில் அன்பின் ஆற்றல் பற்றிய எனது
ஐயப்பாடுகள் மெல்ல மெல்ல விலகின. "கிறித்தவக் கோட்பாடான பேரன்பை, காந்தியின்
வழிமுறையிலான அகிம்சை வாயிலாய் நடைமுறைப்படுத்துவதே சுதந்திரத்திற்காக மல்லாடும்
ஒடுக்கப்பட்ட மக்கள் கையாளக்கூடிய ஆற்றல்மிக்க ஒரே ஆயுதம்'' என்பதை தெள்ளத்
தெளிய உணர்ந்தேன். ஏசுகிறிஸ்து கருத்தையும் செயல்நோக்கத்தையும் கற்பித்தார். காந்தி
அதற்கான வழிமுறையை வகுத்தளித்தார்'' (-மார்டின் லூதர் கிங் எழுதிய ஸ்ட்ரெங்த் டு லவ்
நூலிலிருந்து; (கால்லின்ஸ் பிரசுரம்).
"மனித வரலாற்றில் வருங்காலத்திய ஓர் புதிய சகாப்தத்தின் பிதாவாக காந்தி திகழக்கூடும் ''
என்கிறார் இ. ஸ்டான்லி ஜோன்ஸ் எனும் அமெரிக்க கிறித்தவப் பிரசாரகர், "மகாத்மா காந்தி -
ஆன் இண்டர்பிரிடேஷன்'' எனும் தமது நூலில்.

சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர் என்றும், தெள்ளிய அறிவாற்றலின் புறவுரு என்றும்


போற்றப்படும் விஞ்ஞானி ஐன்ஸடை ் ன் பின்வருமாறு உறுதிபட எடுத்துரைத்துள்ள கருத்தையும்
மனதிற் கொள்வோமாக: ''உலக நாடுகளின் தேசிய சுய நலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட
அடிப்படையில், உலகில் நிரந்தர அமைதி நிலவச்செய்வது எங்ஙனம் என்கிற நெடுநாள்
பிரச்னையை ஆராயுங்கால், காந்தியின் நெறி வழிமுறையைப் பரந்த அளவில்
் .''
பின்பற்றுவதுதான் ஒரே தீரவு

காந்தி பிறந்து நூற்று ஐம்பதாவது ஆண்டில் இருக்கிறோம். அதாவது காந்தியின் பிறப்பு


ஒன்றரை நூற்றாண்டைக் கடந்திருக்கிறது. அவர் இன்றும் நினைக்கப்படுகிறார். அவரது
இன்றைய பிறந்த நாளை - நூற்று ஐம்பதாவது ஆண்டின் பிறந்த நாளை ஐக்கிய நாடுகள் சபை
சர்வதேச அகிம்சை தினமாக அறிவித்துள்ளது.

காந்தியை நாம் மறக்க முடியாது, அவர் ரூபாய் நோட்டுகளில் சிரிக்கிறார்


என்பதற்காக அல்ல. ஏன் ரூபாய் நோட்டில் காந்தி சிரிக்கிறார்? என்று கேள்விக் கேட்ட ஒரு
சின்ன குழந்தையின் வினாவிலிருந்து அதை ஆரம்பிக்கலாம். ஏன் சிரிக்கிறார்? என்ற
கேள்விக் கேட்ட அந்த குழந்தையே அதற்கானப் பதிலையும் சொன்னது, அழுதால் ரூபாய்
நோட்டு நனைஞ்சிடுமே என்று.

அவர் சிரித்துக் கொண்டே இருந்த ஒரு மனிதர். மிகப் பெரிய போராட்டங்களின்


போதும், தாங்க முடியா மனச்சுமைகளின் போதும் அவர் தன் சிரிப்பை விட்டுக்
கொடுக்கவில்லை. இதை அவரே ஓர் இடத்தில் சுட்டிக் காட்டுகிறார், 'நகைச்சுவை என்ற
உணர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் என்றோ நான் தற்கொலை செய்து கொண்டு
இறந்திருப்பேன்' என்று. அவரது சிந்தனையை நாம் மிக எளிமையாகத் துவங்குவதாக நீங்கள்
நினைக்கலாம். ஆனால் நாம் காந்தியின் தனிநபர் குறித்த சிந்தனை எப்படி இருந்தது
என்பதிலிருந்து துவங்குகிறோம்.

தனிநபர் பிரச்சனை, தனிநபர் சோகம், தனிநபர் சிக்கல் என எல்லாவற்றிற்கும் அவர்


சிரிப்பை, நகைச்சுவையை ஒரு வலிய ஆயுதமாய் முன் வைக்கிறார். தற்கொலைக்கான ஒரு
மாற்றுத் தீர்வைத் தருகிறார். அவருக்குக் கணிக்கப்பட்ட ஜாதகக் குறிப்புப்படி அவர்
இளமையிலே மரணமடைந்திருக்க வேண்டும். ஆனால் அவர் எழுபத்து ஒன்பது ஆண்டுகள்
வரை வாழ்ந்தார். சிரிப்பும், நகைச்சுவையும் அவர் ஆயுளை நீட்டிக் கொண்டே இருந்திருக்க
வேண்டும்.

எங்கள் தேசத்தில் சூரியன் மறைவதே இல்லை என்று சொன்ன பிரிட்டிஷ்


சாம்ராஜ்யத்தின் துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும் அநாயசமாக எதிர்கொண்டு அத்தனை
ஆண்டுகள் வாழ்ந்தார். சுதந்திரம் கிடைத்தால் பாதுகாப்பு கிடைக்கும், உத்திரவாதங்கள்
கிடைக்கும், வளமான வாழ்க்கைக் கிடைக்கும் என்று சொல்லப்பட்ட சுதந்திர
இந்தியாவில்தான் ஓராண்டுக்கு மேல் கூட வாழ முடியாமல் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகிப்
போனார்.

காந்தியைக் கொன்ற துப்பாக்கி மாண்டு போனது. அவர் இன்றும் சிரிப்பில் உயிர்


வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் தன் சிந்தனையில் சிரிப்பையே, நகைச்சுவையையே முதல்
சிந்தனையாக இந்த உலகிற்குச் சொல்வதாக நினைக்கிறேன். அவர் தன் வாழ்வு முழுவதும்
எந்த அளவுக்குக் கொள்ளைப் பிடிப்பு இறுகிய மனிதராக இருந்தாரோ, அதே அளவுக்க
மெல்லிய நகைச்சுவையும், புன் சிரிப்பும் இழையோடிய ஒரு மனிதராக இருந்தார்.

காந்தி இந்தியாவில் பிறந்தவர். இங்கிலாந்தில் உயர்கல்வி கற்றவர்.


தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞர் தொழில் செய்தவர். இந்தியாவிற்குத் திரும்பி பின்
போராட்ட வாழ்வைத் தொடங்கியவர். அவரது சிந்தனைக் களத்தில் இந்தியா, இங்கிலாந்து,
தென்னாப்பிரிக்கா என்ற மூன்று நாடுகளின் நிலவியல் பங்கு இருக்கிறது. அவரது சிந்தனைத்
தளத்தில் நிலவியல் களத்தை ஆராயும் போது தமிழகத்திற்கு மிக முக்கியமான பங்கு
இருக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் அவரது போராட்ட குணத்தை வலுபடுத்தியவர் தமிழ்நாட்டைச்


சார்ந்த தில்லையாடி வள்ளியம்மை. அவரது போராட்டத்துக்கு ஆசிகள் சொன்ன பாரதி தமிழ்
மண்ணில் பிறந்தவர். தமிழ் மண்ணில் பிறந்த தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் திருவடியில்
அவர் தமிழ் பயில பிரியப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் பிறந்த ஜீவாவை நீங்கள்தான் இந்த
நாட்டின் சொத்து என்று அவர் வியந்திருக்கிறார். அவரது வளமையான சிந்தனையில்
எப்போதும் தமிழ் மண் தந்த திருக்குறளுக்கு முக்கிய பங்கு இருந்திருக்கிறது. இப்படியாக
அவரது ஒட்டுமொத்த இந்திய சிந்தனையில் தமிழ் மண்ணின் சிந்தனைகள் அதிகம் என்பதில்
நாம் பெருமைப்பட காரணம் இருக்கிறது.

இந்தியாவின் சுதந்திர வேட்கையை முதலில் துவங்கியது வட இந்தியாவா?


தென்னிந்தியாவா? இது ஒரு கேள்வி.

1857 இல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போர் வட இந்தியாவில்


நடைபெற்றதாகச் சொன்னாலும், தென்னிந்தியாவில் - தமிழகத்தில் வேலூர் புரட்சி
நடைபெற்றது 1806 இல். அவ்வகையில் முதல் இந்திய சுதந்திரப் போர் என்பதே வேலூர்
புரட்சிதான்.

நாம் ஊன்றிக் கவனித்தால்...

முதல் இந்திய சுதந்திரப் போர் என்று 1857 இல் நடைபெறுகிறது. அதைச் சிப்பாய்க்
கலகம் என்று ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். வேலூர் கலகம் 1806 இல்
நடக்கிறது. முதல் இந்திய சுதந்திரப் போர் என்று குறிப்பிடப்படும் சம்பவத்துக்கு முன்பாக 51
ஆண்டுகள் முன்னதாக நடக்கிறது. அதாவது அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னதாக
நடக்கிறது. தமிழகத்தில் நடக்கிறது. அதாவது தென்னிந்தியாவில் நடக்கிறது. சுந்திரப்
போராட்டத்தில் இந்தியாவுக்கு வழிகாட்டி தென்னிந்தியா. அதாவது தமிழகம்.

உலக நாகரிகம் பலவற்றுக்கும் முற்பட்ட நாகரிகம் தமிழர்களுடையது. உலக


மாந்தர்களின் உணர்வுகள் பலவற்றுக்கு முற்பட்டது தமிழர்களின் உணர்வு. தமிழும்,
தமிழர்களும் உலகுக்குக் வழிகாட்டிகள். காந்தியடிகளுக்கும் தமிழகம் வழிகாட்டி. அவரது
உடை தமிழகம் தந்த கொடை. அவரது ஆடை குறித்த சிந்தனை உருபெற்றது
தமிழகத்தில்தான். மதுரை மண்ணில் நிகழ்ந்த மாற்றம் அது. அதன் பின் அவர் இடுப்புக்கு
ஒரு வேட்டியும், தோளுக்கு ஒரு வேட்டியுமாக அணிய ஆரம்பிக்கிறார். கோவணம் கட்டிய ஒரு
தமிழக விவசாயி அவரது ஆடை குறித்த சிந்தனையைக் கலைத்துப் போடுகிறார்.
அடிப்படையான சிந்தனைளுக்கான தோற்றம் தமிழ் மண்ணில் நிகழ்கிறது என்பதற்கு அது
சான்று. காந்தியடிகளின் சிந்தனை மாற்றம் உடை மாற்றமாக நிகழ்கிறது. அதற்குப் பின்
காந்தியடிகள் தன் உடையை மாற்றிக் கொள்ளவில்லை. நமக்குக் கிடைக்கும் புகைப்படங்களில்
எல்லாம் காந்தியடிகள் அந்த உடையைத்தான் அணிந்திருக்கிறார். அதே உடையோடு அவர்
இங்கிலாந்துக்கும் செல்கிறார். தன் ஆடைத் தன்மையை மாற்றிக் கொள்ளவில்லை.
வின்சென்ட் சர்ச்சில் அவர் அடை நிர்வாண பக்கிரி என்ற போதும் அவரது ஆடை அதுதான்.
மகாத்மா என்று பலர் போற்றிய போதும் அவரது ஆடை அவர்தான்.

ஒரு சிறுவன் காந்தியடிகளைப் பார்த்துக் கேட்கிறான். நீங்கள் ஏன் இடுப்பு வேட்டி


மட்டும் அணிகிறீர்கள்? மேலுக்கும் ஆடை அணியலாமே! நான் வாங்கித் தரவா என்று.
அதற்கு காந்தியடிகளின் பதில் கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இருக்கும் அத்தனை கோடி
மக்களுக்கும் மேலுக்கு ஆடையைத் தர உன்னால் முடியுமானால் நீ எனக்கும் தரலாம் என்று
அந்தச் சிறுவனிடம் சொல்கிறார் காந்தியடிகள். ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும்
என்பதற்கான சிந்தனை அது. எல்லாரும் எல்லாமும் பெற்ற பிறகு அதை ஒரு தலைவர்
அனுபவிப்பது சரியாக இருக்கும் அவரது சிந்தனை. இன்றைய சூழ்நிலையோடு ஒப்பிட்டுப்
பார்க்கும் போதும் ஒரு தலைவர்க்கான சிந்தனை அதுதாம். தலைவர் சுருட்டியது போக
எஞ்சியதே பிறர்க்கு என்பது போல இன்றைய சிந்தனை இருக்கிறது, இருக்கலாம். எல்லாரும்
எல்லாம் பெற்ற பிறகு ஏற்பதே காந்திய சிந்தனை. இதுதான் தலைவர் காண வேண்டிய
சமத்துவம், சமதர்மம், பொதுவுடைமை எல்லாம். ஏன் காந்திய சிந்தனையைின் தாக்கம்
இன்றளவும் பேசப்படுகிறது என்றால் அதற்கான காரணம் இதுவாகத்தான் இருக்கும்.

சொத்துகளைச் சேர்த்து வைக்கும் தலைவர்கள் அவர்களின் காலத்துக்குப் பின்பு


மறக்கப்படுகிறார்கள். காந்தியடிகள் 150 ஆண்டுகாலம் - ஒன்றரை நூற்றாண்டுக் காலம்
கடந்த பிறகும் ஏன் நினைக்கப்படுகிறார் என்றால் அவர் எந்தச் சொத்தையும் சேர்த்து
வைக்கவில்லை என்பதால்தான். அவர் தன் பிள்ளைகளுக்கு எந்தச் சொத்தையும் சேர்த்து
வைக்கவில்லை. தன் பிள்ளைகளுக்கு எந்தப் பதவியையும் வாங்கித் தர வில்லை. அப்படிப்
பிள்ளைகளுக்குச் சொத்து தேவை என்றால் அதை அவர்களாகவே ‍தேடிக் கொள்ள வேண்டும்
என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவர்களுக்குப் பதவிகள் தேவையென்றாலும் அதையும்
அவர்களாகத்தான் தேடிக் கொள்ள வேண்டும் என்பதிலும் அவர் மிக மிக உறுதியாக
இருந்தார். தலைவர்கள் பெற்றோர்களாக இருந்தாலும், தலைவர்கள் அல்லாதவர்கள்
பெற்றோர்களாக இருந்தாலும் அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சரியான
சிந்தனையை இதன் வழி அவர் சொல்கிறார்.

ஒரு தலைவர் அல்லது ஒரு தனிமனிதர் என்று எப்படிப் பார்தத


் ாலும் இரண்டிலும்
இருவேறாக பிரிக்க முடியாத முகம் காந்தியடிகளினுடையது. தலைவர்க்கு என்று ஒரு
தனிப்பட்ட முகம், தனிநபர்க்கு என்று ஒரு தனிப்பட்ட முகம் அவரிம் கிடையாது. அவரிடம்
இருந்தது ஒரே முகம். அதுதான் காந்தி என்ற தலைவரின் முகமும், காந்தி என்ற தனி நபரின்
முகம். ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு காந்தியடிகளைப் பார்க்க வேண்டும்.
இந்தியா முழுவதும் அவரது காலடித் தடங்கள் படாத இடங்கள் கிடையாது. தொடர்வண்டி
மூலமாக மூன்றாம் வகுப்பில் அவர் பிரயாணம் செய்து கொண்டே இருக்கிறார். ஓய்வு
ஒழிச்சலற்ற பயணங்கள் அவர் இருந்து கொண்டே இருக்கிறார். இது ஒரு தலைவருக்குத்
தவிர்க்க முடியாதது என்று நீங்கள் சொல்லாம். காணொலிக் காட்சி மூலம் சந்திக்கக் கூடிய
இன்றைய சூழ்நிலையில் காந்தியடிகள் இருந்தாலும் அவர் அதையேத்தான் செய்திருப்பார்.
அவருக்கு மக்களைச் சந்திப்பது அவ்வளவு பிடித்தமானதாக இருந்தது. அவ்வளவு
பயணங்களுக்கு மத்தியிலும் அவர் தன் உடலைச் சரியாக ஓம்பியிருக்கிறார் என்பது அதில்
கவனிக்க வேண்டிய அம்சம். நோய் தனது பணிகளைப் பாதித்து விடக் கூடாது என்பதில்
அவர் உறுதியாக இருந்திருக்கிறார்.

பாரதியார் சொல்வாரே நரைகூடி கிழ பருவம் எய்தி கொடும் கூற்றுக்கு அவர்


மாளவில்லை. வயதோ, நோயோ அவரை எதுவும் செய்ய முடியவில்லை. வயதுக்கும்
நோய்க்கும் அது தெரிந்தே இருந்தது அவரை எதுவும் செய்ய முடியாது என்று. இது ஒரு
துப்பாக்கிக் குண்டுக்குத் தெரியாமல் போனதுதான் ஆச்சரியம். அந்தத் துப்பாக்கிக் குண்டால்
எதுவும் செய்ய முடியவில்லை என்பதைத்தான் இந்த நாளின் மூலம் காலம் நிரூபிக்கிறது.
இன்று காந்தியை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாவுக்கு மட்டும் இல்லாமல்
உலகுக்கே தேவை காந்திய சிந்தனைகள்தான் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

உலக அளவில் அவரது சிந்தனைகள் பெருத்த மாற்றத்தை விளைவித்திருக்கிறது.


அமெரிக்காவின் மார்டின் லூதர் கிங் ஜூனியர் அவரது சிந்தனைகளைத் தன் போராட்ட
களத்தின் ஆயுதமாகக் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார். தென்னாப்பிரிக்காவின் நெல்சன்
மண்டேலா இனவெறிக்கு எதிரான போரில் காந்திய சிந்தனைகளின் துணையோடு வெற்றிக்
கொடி நாட்டியிருக்கிறார். உலகெங்கும் இருக்கும் பல தலைவர்களின் ஆயுதமாக காந்திய
சிந்தனை மாறிக் கொண்டு இருக்கிறது. அமெரிக்காவின் அதிபராக, உலகின்
நாட்டாமைக்காரராக இருந்த பராக் ஒபாமா அவரது சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டிருப்பதைப்
பதிவு செய்திருக்கிறார். தான் ஒரு காந்தியவாதியாக இருக்க விரும்புவதை ஒப்புக்
கொண்டிருக்கிறார். உங்களுக்கு ஓர் உண்மை தெரியுமா? உலகமே அமெரிக்காவைப்
பார்க்கலாம். அமெரிக்கா இந்தியாவைத்தான் பார்க்கிறது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக
அதிக காந்திய சிலைகள் அமெரிக்காவில்தான் இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் அந்த
எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். ஆக இந்தியாவை விட காந்தியடிகளை அதிகம் பார்க்க
அமெரிக்கா விரும்புகிறது. நமக்குக் கூட ஒரு மோசம் இருக்கிறதே. அமெரிக்கா எதைப்
பார்க்கிறதோ அதைத்தாம் நாம் பார்க்க வேண்டும் என்று. அமெரிக்கா இன்று
காந்தியடிகளைப் பார்க்கிறது. நாம் எதைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்ய
வேண்டியிருக்கிறது.

காந்தியடிகளின் வாசிப்பையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. டால்ஸ்டாய்,


ரஸ்கின் என்று அவர் வாசித்துக் கொண்டே இருந்தார். வாழ்நாள் முழுவதும் எழுதிக்
கொண்டே இருந்தார். இரண்டு கண்களால் வாசித்ததைப் போல இரண்டு கைகளாலும் எழுதிக்
கொண்டே இருந்தார். கல்விக் குறித்த சிந்தனைகளில் உடல், உள்ள, ஆன்ம வளர்ச்சியை அவர்
அதிகம் வலியுறுத்துகிறார். உடல் வளர்ச்சி அம்மனிதருக்கானது என்றால், உள்ள வளர்ச்சி
சமூகத்துக்கானதாக, ஆன்ம வளர்ச்சி உண்மைக்கானதாக, இந்த உலககுக்கானதாக அவர்
பார்க்கிறார்.
தனித்தப் பார்வை அல்லாத ஒருமைப்பட்ட பார்வை அவரிடம் இருந்தது.

கிராமம் - நகரம் என்ற வேறுபாடு வரும் போது அவர் அதிகம் கிராமத்தையே முன்
நிறுத்துகிறார். கிராமத் தன்னிறைவு அவரது கனவாக இருக்கிறது. கிராமங்கள் நகரங்களாக
ஆக வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. நகரங்கள் கிராமங்களாக வேண்டும் என்று
எதிர்பார்க்கிறார். ஒரு வேடிக்கைக்குச் சொல்வதென்றால் இன்று நாம் உலகை உலக நகரம்
என்று சொல்லாமல், உலகக் கிராமம் - குளோபல் வில்லேஜ் என்றுதானே சொல்கிறோம்
என்பதைக் குறிப்பிடலாம் என்று கருதுகிறேன்.

ஆண் - பெண் என்ற பாகுபாடு வரும் போது அவர் அதிகம் பெண்களின் பக்கமே
முன்நிற்கிறார். ஆண் - பெண் என்ற பாகுபாட்டையே அவர் ஒருமைப்பட்ட பார்வையாகத்தான்
பார்க்கிறார். காந்தியடிகள் சொல்கிறார் - பெண்ணின் அழகை மட்டும் பகுதியாகப் பார்க்காதே
என்று. பெண்ணை பிரபஞ்சத்துடன் இணைந்த சக்தியாகப் பார் என்று. அவர் தன் துணை
கஸ்தூரி பாயை அப்படித்தான் பார்க்கிறார். அவரது தாயார் புத்திபாலி பாய்க்கு மிகச் சிறந்த
சேவகனாக இருக்கிறார். பெண்களைப் போற்றுகிறார். போராட்டத்தில் பெண்களும்
அவருக்குத் துணையாக நிற்கிறார்கள். தமிழகத்தில் கடலூர் அஞ்சலையம்மாள் அவரை பர்தா
வேடமணிந்து குதிரை வண்டியில் அழைத்துச் செல்கிறார். ஆங்கிலேய அரசு அஞ்சலையம்மாள்
காந்தியடிகளைச் சந்திக்கக் கூடாது என்று தடை விதித்திருந்த நிலையில் அவர் செய்த
காரியம் அது. பெண்களுக்கான வீரத்தை அவர் தந்திருக்கிறார். கடலூர் அஞ்சலையம்மாள்,
தில்லையாடி வள்ளியம்மை என்று தமிழகப் பெண்களும் போராட்டத்திற்குத் தேவையான
வீரத்தைக் காந்தியடிகளுக்குத் தந்திருக்கிறார்கள் என்று நாம் பெருமையோடு சொல்லலாம்.

உலகம் எதிர்ப்பு என்றால் யுத்தத்தை முன் வைக்கிறது. காந்தியடிகள் ஆங்கிலேய


எதிர்ப்புக்காக யுத்தத்தை முன் வைக்கவில்லை. அதை விட வலிமையான - யுத்தத்தை விட
வலிமையான போராட்டத்தை முன் வைக்கிறார். ஒரு புதுமையான யுத்த வியூகத்தை முதல்
புரட்சியாளாராக, ஒரு மிகப்பெரும் கலகக்காரராக முன்நின்று காந்தியடிகள் முன் வைக்கிறார்.
அவர் முன் வைத்த யுத்தம் வியூகம் என்பது யாராலும் வெல்ல முடியாத வியூகம் . சர்ச்சில்
சொல்கிறார், காந்தியடிகள் கத்தியைத் தூக்கியிருந்தார் துப்பாக்கியைத் தூக்கியிருப்பேன் -
அவர் துப்பாக்கியைத் தூக்கியிருந்தால் பீரங்கியைத் தூக்கியிருப்பேன் - அவர் ஒருவேளை
பீரங்கியையும் தூக்கியிருந்தால் அதை விட வலிமையான ஆயுதத்தைத் தூக்கியிருப்னே் -
அவர் தூக்கியது அகிம்சை எனும் ஆயுதம். அந்த ஆயுதத்துக்கு நிகரான ஆயுதம் இதுவரை
கண்டுபிடிக்கப்படவில்லை என்று.

கத்தியில்லாத, ரத்தமில்லாத ஒரு யுத்தம். இரண்டு பக்கமும் வெற்றியைத் தரக்


கூடிய யுத்தம். அந்த யுத்தத்தின் முடிவில் வெற்றிக்கான களிப்பு இந்தியர்களுக்கும்
இருக்கிறது. அந்த யுத்தத்திற்கான நியாயமான வெற்றியைத் தர வேண்டும் என்ற உணர்வு
ஆங்கியேலருக்கும் இருக்கிறது. எதிராளிகள் இரண்டு பேருக்கும் எவ்வித மனக்கசப்புமின்றி
முடிந்த உலகின் முதல் யுத்தம். அதுவரை இரண்டு உலகப்போர்களைப் பார்த்திருந்த, இரண்டு
உலகப் போர்களிலும் எவ்வளவோ உயிர்களைப் பலி கொடுத்திருந்த உலகத்துக்கு இந்த போர்
முறை - யுத்த வியூக முறை அதிசயமாக ஆச்சரியமாகப் படுகிறது. காந்தியடிகள் அன்று
கண்ட இப்போர் முறை இன்று உலகின் முறையாக மாறியிருக்கிறது. உலகுக்கான ஓர் இந்திய
சிந்தனைச் சீதனம் காந்தியடிகள் மூலமாக சென்றிருக்கிறது.

அவரது போராட்ட அணுகுமுறையில் அதாவது யுத்த அணுகுமுறையில் யாரையும்


உதாசீனப்படுத்தாத, எல்லாரையும் இணைத்துக் கொள்ளும் சூட்சமம் இருக்கிறது. அவரது
சிந்தனையின் அடிப்படையும், போராட்டத்தின் வெற்றியும் அதுதான். அந்த வகையில் இந்த
நூற்றாண்டுக்கும், எந்த நூற்றாண்டுக்கும் தேவையான கருப்பொருள்கள் காந்திய
சிந்தனையில் இருக்கின்றன.

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் கொண்டு வந்தவர் என்று நாமக்கல் கவிஞர்


காந்தியடிகளைப் போற்றிப் பரவுகிறார்.

வாழ்விக்க வந்த மகான் என்று பாரதியார் காந்தியடிகளைக் கொண்டாடுகிறார்.


தமிழகம் தன் பங்கைக் காந்தியடிகளின் சிந்தனைகளுக்கு மிகச் சரியாக செய்திருக்கிறது
என்பதற்கு பாரதியும், நாமக்கல் கவிஞரும் தம் கவிதைகளால் நியாயம் செய்திருக்கிறார்கள்.
தமிழகம் செய்ததை உலகமும் செய்ய வேண்டும்.

காந்தியடிகளின் வாழ்வும் சிந்தனையும் தமிழ்ச் சிந்தனையிலிருந்து புறப்பட்டதுதான்.


யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ்ச் சிந்தனை மரபு தோன்றிய மண்ணில் பிறந்த
திருக்குறளின் சிந்தனை மரபின் பிரதிபலிப்புதான் காந்தியடிகள். திருக்குறளின் 1330
குறட்பாக்களில் அருமையான ஒரு குறட்பாவுக்கு அவர் வாழ்க்கையும், சிந்தனையும்
சான்றாகிறது.

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்.

காந்தியடிகளின் பார்வையில் திருக்குறளை அறியாதவர் தமிழரில்லை. தமிழரின் பார்வையில்


காந்தியடிகளை அறியாதவர் மனிதரே இல்லை. ஐன்ஸ்டீன் சொல்கிறார், இப்படி ஒரு மனிதர்
ரத்தமும், சதையுமாக நடமாடினார் என்பதை வருங்கால தலைமுறை நம்ப மறுக்கும் என்று.
அதை அதற்கு முன்பே தமிழர்கள் சொல்லி விட்டார்கள்,

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க்கு அல்லால் அரிது

என்று. காந்தியடிகளுக்கு ஆகச் சிறந்த நன்றியை, அஞ்சலியை அவரது சிந்தனைகளை


விரிவுபடுத்துவன் மூலம் செய்ய இயலும். அதற்கான முன்னெடுப்பில் முக்கியமான பங்கை
இந்த அரங்கத்தில் காந்தியச் சிந்தனைகளை முன்னெடுத்ததன் மூலம் நாம்
செய்திருக்கிறோம் என்று நம்புகிறேன்.

காந்தி தான்கண்டறிந்த புதிய வாழ்வறத்தை நடைமுறைப்படுத்துதலில் உள்ள தடைகளை


அவ்வப்போது கண்டறிந்து அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகளையும் அனுபவரீதியாக
உணர்ந்து செயல்படுகிறார். தன்னுடைய முன்னகர்தலுக்கு உதவக்கூடியவையாக அவர் கருதிய
நிலைகளை அடைவதற்கு புலனடக்கம், குறிப்பாக பாலுறவு தவிர்த்தல், அதற்கேற்ப உடலின்
உறுப்புகளைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைக்க ஏற்புடைய உணவுப்பழக்கம், பிரார்த்தனை,
கடினஉழைப்பு எனப்பல உபாயங்களைத் தன்வயப்படுத்தவும், அவற்றின் பயன்களை
வெளிப்படையாக பொதுவெளியில் வைத்து விளக்கவுமான பண்பட்ட மனவெளியை
தன்னுருவாக்கமாகவும் கூட்டுத்தன்னுருவாக்கத்திற்கானதாகவும் மாற்றினார் . சில
சமயங்களில் சில தோல்விகளையும் கண்டடைந்தார். எல்லாவற்றிற்கும் மேலாகத் தம்
வாழ்வைத் திறந்த புத்தகமாக மாற்றியிருந்தார். “பிரம்மச்சர்யம் எனக்கு எளிதே. என் மனைவி
காம இச்சையைத் தூண்டுவதில்லை. எனக்கு மனஉறுதி இல்லாததுதான் அல்லது என்
காமஇச்சைதான் இதற்குத் தடையாக இருந்தது. காமஇச்சைக்கு நான் அடிமையாக இருக்கும்
வரையில் மனைவியிடம் நான் உண்மையான அன்போடு இருக்கிறேன் என்பதற்கு மதிப்பே
இல்லை” (சத்திய சோதனை : 247)

காந்தி எல்லாவற்றையும் பொதுவெளியின் தேவையை முன்வைத்தே சிந்திக்கிறவராக


இருக்கிறார் என்பதை நூல் பலஇடங்களில் எடுத்துரைக்கிறது. தென்ஆப்பிக்காவில் அவர்
இருந்த காலத்தில் போர்யுத்தம், ‘சூலு கலகம்’ போன்றவற்றில் அரசியல்ரீதியான நியாயங்கள்
எவை என்பதை உணராவிட்டாலும் போர், கலகம் என்பன ஏற்படுத்திய அழிவுகளும் அப்பாவி
மக்களின் உடல்களுக்கு நேர்ந்த கொடுமைகளும் அவருடைய மனித தார்மீகத்தை விழித்தெழ
வைத்தன. மருத்துவச் சேவைகளில் ஈடுபட அமைப்புகளை உருவாக்கினார். பொதுக்
கடமையாற்ற பாலுறவு ஒரு பெரும் தடையாக அவருக்குத் தோன்றியது. பொதுச்சேவைக்கு
குந்தகம் நேராதிருக்க உடற்சேர்க்கை இன்பம் துறத்தலை செயலுத்திகளில் ஒன்றாக
மாற்றுகின்றார். அவர் மேற்கொண்ட அந்த நடைமுறைகளின்போது அவர் தம்முடைய முப்பது
வயதைக் கடந்துகொண்டிருந்தார் என்பது குறிக்கத்தக்கது. கூட்டுவாழ்க்கை முறையாக
தென்ஆப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் சாதி மனநிலை கடந்த இயக்கத்திற்காக
டால்ஸ்டாய் பண்ணை, ஃபீனிக்ஸ் குடியிருப்பு போன்ற முயற்சிகள் பிற்காலத்தில் இந்தியாவில்
மேற்கொண்ட அரசியல் பணிகளுக்கு அனுபவங்களாகின.

‘1906 இல் சூலு இன மக்கள் மீது பிரிட்டிஷ் படையினர் நிகழ்த்திய வன்முறையை


உடனிருந்து பார்க்க நேர்ந்தபிறகு சத்தியாக்கிரகம் பிரம்மச்சர்யம் ஆகிய அடிப்படையான இரு
செயல்முறைக் கோட்பாடுகளைக் கட்டியமைக்கிறார்’ (ப : 68). பலசமயங்களில் தன்
அறியாமையும் போதாமைகளையும் வெளிப்படுத்தி அவற்றைக் கடந்து செல்லும் வழிகள்
எதுவெனத் தனியாகவும் கூட்டாகவும் விவாதித்துள்ளதையும் காணலாம்.

‘நேட்டாலில் சூலு மக்கள் கலகம் செய்கிறார்கள் என்ற செய்தி செய்தித்தாள்களில்


வந்தது. சூலு மக்கள்மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. அவர்கள் இந்தியர்களுக்கு எந்தத்
தீமையும் செய்யவில்லை. அங்கு நடப்பது கலகம்தானா என்பதிலும் எனக்கு சந்தேகம்
இருந்தது. ஆனால் பிரிட்டிஷ் பேரரசு உலகம் முழுமைக்கும் நன்மை புரியவே அமைந்திருக்கிறது
என்று அப்போது நான் நம்பிக்கை கொண்டிருந்தேன். உண்மையான எனது ‘ அரசு பக்தி’
பேரரசுக்குக் கெடுதல் வரவேண்டும் என மனதால் நினைப்பதைக்கூட தடுத்தது’. ( ப:66 )

பிரேமின் மொழியில், “இனியான வாழ்வுரிமை அரசியல்” என்பது இயற்கையை


அதன் முழுமையுடன் வழிபட்டு தன்னைத் தகவமைத்துக் கொள்வதைப் பயில்வதாக
அமைவது. இந்த வாழ்வுரிமை அரசியலின் தொடக்கத்தை காந்தி தனது விடுதலை
அரசியலின் ஒருபகுதியாகவும் ஆன்மீக வாழ்முறையின் அடிப்படையாகவும் வைத்து
விளக்கியபோது அது காலப்பொருத்தமற்ற அறநெறிச்சொல்லாடலாக பெருங்கட்டமைப்பு
அரசியல் தளத்தில் புறக்கணிக்கப்பட்டது” என்று காந்தியத்தை காங்கிரஸ், பாரதீய ஜனதா
இன்ன பிற உடமைப்பெருக்க அணுகுமுறை கொண்ட கட்சிகள் மட்டுமின்றி கம்யூனிஸ்ட்டு
அமைப்புகளும் நிராகரிப்பது சுட்டப்படுகிறது.

ஏன் இந்தப் புறக்கணிப்பு? காங்கிரஸில் முன்னிலை வகித்த தலைவர்களின் உளவியலை


இருவகையாகப் பிரிக்கலாம். ஐரோப்பிய கல்விமுறையை (மெக்காலே பிரபு ஆசைப்பட்டபடி
உடலால் இந்தியராகவும் மூளையால் ஆங்கிலேயராகவும் இயங்கக்கூடியது) அதன்வழி உருவான
வாழ்க்கை மதிப்பீடுகளை ஏற்று அவற்றின் வடிகாலாக உருவான அரசியலை ஏற்றுக்கொண்டது.
மற்றொன்று இந்திய பழம்புராண மரபுகளின் வழி உருவான பகுத்தறிவுக்கொவ்வாத
மதிப்பீடுகளை உயர்த்திப்பிடிக்கிற சமூகப் பொருளியல் சார்ந்த நிகழ்காலச் சிக்கல்களுக்குத்
தீர்வுகாண இயலாத இந்துத்துவ அடிப்படைவாத உளவியல். முதல் வகையிலான
உளவியல்கூறுகளடங்கிய ஆளுமைகளின் விருப்பமே நிகழ்காலத்திய அனைத்து
விபரீதங்களுக்கும் காந்தியின் காலத்திலேயே காந்தியம் இந்திய ஆட்சி, அரசியல் வெளியில்
நிராகரிக்கப்பட்டதற்கும் காரணமாகின்றது.

2.

‘இருபதாம் நூற்றாண்டின் தொடக்கமானது அறிவியல் தொழில்நுட்பம் சமூகமாற்றம்


போன்றவற்றால் புதியஉலகம் ஒன்றில் மனிதன் உந்தித் தள்ளப்பட்டான். அதுவரை எது அறிவு
என்று கருதப்பட்டதோ அது அப்புதிய உலகில் அறிவல்ல என்றும், வெறும் பொதுப்புத்திதான்
எனவும் கருதப்பட்டது. தொழில்நுட்பங்கள் மனிதனை ஒதுக்கிவிட்டு செயல்படுவதை மனிதன்
அறிகிறான். இந்நிலை ஒரு பெரும் மனிதநஷ்டத்தை உருவாக்குவதால் இது ஒழுக்கவியல்,
கலாச்சாரவியல், உளவியல் சம்மந்தப்பட்ட நெருக்கடி என்று தெரிகிறது. மனிதனின்
அழுகுரலோ பிரலாபங்களோ கேட்கப்படாத தூரத்தில் உலகம் இயங்க ஆரம்பித்துவிடுகிறது’ .
(தமிழவன்,அமைப்பிலும் அதன் பிறகும். பக்:7) அமைப்பியல்வாதம் மேற்கண்டவாறு
கணிக்கிற சூழலில்தான் இநதியச் சூழலில் ஒருபுதிய வாழ்வறம் குறித்த சிந்தனை காந்திக்கு
ஏற்படுகின்றது. அந்த ஆழ்ந்த அக்கறையின் வெளிப்பாடாக ‘இந்திய சுயராஜ்யம்’ என்ற நூல்
(1909) வருகிறது.

ஐரோப்பிய சிந்தனை மரபை உயர்தத ் ிப்பிடிக்கிற போக்கு அறவியலின் தொடக்கப்புலமாகக்


கிரேக்கத்தைக்காண விழைகின்றது. கிரேக்க அறவியலின் காலமாகக் கருதப்படுகிற
காலத்திற்கு (கி.மு.500 – கி.பி.500) சற்றே முன்னும் பின்னுமாக இந்தியச்சூழலில்
சார்வாகம், மீமாம்சம், வைசேஷிகம், பௌத்தம், சமணம் ஆகியவை விதைக்க முயன்ற
அறவியல் சிந்தனைகள் முக்கியமானவை. பின்னர் வந்த அறஇலக்கியங்களின் (சிலப்பதிகாரம்
மணிமேகலை போன்ற) கருத்துப் புலப்படுத்துதல்களையும் சொல்லவேண்டும். இவற்றின்
தொடர்ச்சியாக இருபதாம் நூற்றாண்டின் இந்திய அறவியல் சிந்தனையாகக் காந்தியின் இந்த
(இந்தியசுயராஜ்யம்) நூலைக் கொள்ளலாம். தான் வாழும் காலத்திய தேசிய அரசுகளின்
செயல்பாடுகளால் அன்பும் கருணையும் உலர்நத மனவெளிகளில் சகமனிதர்கள் அருகாமையில்
அவற்றை உணரத்தக்க அமைதியை வளர்க்கும் காரணிகள் எவை என்பதைக் கண்டுணர்ந்து
அதற்கான நடைமுறைகளைத் தம் வாழ்வின் வழியாக வெளிப்படுத்தினார். “இதற்காகப்
பிறழ்வும், குற்றமும், போரும், அழிவுகளும் அற்ற சமூக வெளியை உருவாக்க உதவுகின்ற
தன்னுருவாக்க, கூட்டுத்தன்னுருவாக்க முறையை ஆன்மீக அரசியலின் வழியே கண்டடைய
முயன்றார்” என்று விளங்குவார் பிரேம்(பக்:32). மேலும் ‘இந்தத் தன்னுருவாக்க,
கூட்டுத்தன்னுருவாக்க அரசியலைப் புரிந்து கொள்வது நம் காலத்தில் நிகழ்ந்து
கொண்டிருக்கும் வன்முறைகளையும் கொடூரங்களையும் புரிந்து கொண்டு அவற்றுக்கான
மாற்றுகளைப் புரிந்து கொள்வதுமாகும்’ என்றும் பிரேம் கருதுகிறார்.

ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ‘இந்தியா’ என்கிற நிலவியல்


வரைபடத்துள்ளமைந்த பிரேதசங்களிலும் காங்கிரஸ் கட்சி என்ற அமைப்பு மக்களின்
சிலதேவைகளை ஆங்கிலேய நிர்வாகத்திடம் மனுச்செய்து பெறும்
முயற்சிகளைதொடங்கியிருந்த காலத்தில் காந்தி தென்ஆப்பிரிக்காவிலிருந்து திரும்புகின்றார்.
உலகில் வேறெங்கும் ‘இல்லாச் சிறப்பாக’ மக்கள் ‘சாதி’ என்ற அடையாளத்தால் பிளவுபட்டு
கீழ்,மேல் என்ற கற்பிதங்களினுள் அமிழ்ந்து சமூகக் கொடுமைகளுக்குள்ளாகியிருக்கின்ற
நிகழ் உண்மையானது காந்தி வரும்வரை காங்கிரஸ் அமைப்பிற்குள் புறக்கணிக்கப்பட்டிருந்தது.

‘மனிதன் மரபொழுக்க நிலையைவிட்டு மனச்சான்றுக்கு முதன்மை இடம்


தந்ததால்தான் அறவியல் சிந்தனைகள் தோன்றின’ என்ற சிந்தனைக்கேற்ப சாதி, இனம்,
மதம், மொழி ஆகியவற்றால் வேறுபட்ட தனிமனிதர்களைக் கூட்டு வாழ்க்கைமுறை
ஒன்றுக்குள் கொண்டுவரும் முயற்சியை ஒழுக்கவியல் போதனைகளால் மட்டும்
சாத்தியப்படுத்திவிடமுடியாது அதற்கான ஒரு உளவியல் நடத்தையியல் கட்டமைப்பு தேவை.
இதனை உருவாக்க காந்தி மேற்கொண்ட முயற்சிகளால் அவர் எதிர் கொண்ட சிக்கல்கள் பல,
எடுத்துக்காட்டாக ஒன்று:

“தீண்டாமைக்குட்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த தூதாபாய், அவரது மனைவி தநிபென்,


மகள் இலட்சுமி ஆகிய மூவரும் சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருந்ததால், ஆசிரமம் நடத்தப்
பணஉதவி செய்தவர்கள் உதவியை நிறுத்திக்கொண்டனர். தண்ணீர் எடுக்கவிடாமல்
தடுக்கின்றனர்.” சமூகத்தடை ஏற்படும் நிலை உருவாகிறது. அப்படி ஏற்பட்டால்,
தீணட் ாமைக்காட்பட்டோர் வசிக்கும் சேரிக்கே சென்று வசிக்கலாம் என்கிறார் . கஸ்தூரிபாய்
‘தீணட ் ாமை’ என்பது இந்துமதம் அனுமதிக்கிற விதி என்று நம்புகிறார் . அதனால், எதிர்ப்பு
மனநிலையில் உள்ளார். காந்தி, “கஸ்தூரிபாய் விரும்பினால் தனிக்குடிசையில் வசிக்கலாம்,
இலட்சுமியின் குடும்பத்தை வெளியெற்ற முடியாது” என்கிறார். (பக். 86)

காந்தி, மரபுகளை முற்றாக மறுப்பவரல்லர். முற்றாக ஏற்பவருமல்லர், புதிய


மரபொன்றைத் தோற்றுவிக்க முயன்றவர். இந்த ஏற்பு – மறுப்பு – புத்துருவாக்கம் என்ற
படிநிலை “ முதலில் புறவிதிகளுக்கு வெளிப்படையாகக் கட்டுப்பட்டு நடப்பதால் வரும்
நன்மையும் பின்னர் மனச்சான்று நிலைக்கு உள்ளூரப் பணிந்து நடப்பதால் ஏற்படும் நன்மையும்
முறையே, கருத்தும் முரண்பட்ட கருத்துமாகத் தோன்றித் தம்முள் கலந்து தொகுப்பேற்பட்டு,
புதிய சமுதாய அறவொழுக்கமாக உருவெடுக்கும்.” என்ற ஹெகலியச் சாய்வுள்ளதும் கூட.

“பிரபுத்வ மதவியல் சார்ந்த கருத்துக்களிலிருந்து மேலைத்தத்துவம் தன்னை


விடுவித்துக்கொண்டு மேற்செல்ல வால்டேர், ரூஸோ, எர்டர்லெஸ்ஸிங், ஷில்லர், கதே
போன்றவர்களின் அறிவொளிக்கால சிந்தனைகள் உதவின என்ற பார்வை ஒன்று உண்டு.
ஆயினும், அவை தனிமனித சமூக ஆன்மீக நெருக்கடிகளுக்கும் மூலதனத்திரட்சியின்
விளைவான பெருந்தீமைகள், அச்சுறுத்தல்கள் ஆகியவற்றிலிருந்து எதிர்காலச் சமூகங்களை
நல்வழிப்படுத்தும் ஆற்றல்களைக் கொண்டிருக்கவில்லை. அதனால்தான் இன்று எழுந்துள்ள
சிக்கல்களின் தீர்வுக்கான ஈர்ப்பு விசையாக மாறும் தகுதி காந்தியத்தில் உள்ளதா என
வாசகரை நிதானம் கொள்ள வைக்கிறதாக நூல் தன் மொழியமைப்பால் நெருக்கம்
கொள்கிறது. காந்தியத்தின் தன்மை ஒரு கவிதையாக நூலில்:

‘காந்தியத்திலும்

எளிமை என்பதுதான் சிக்கலானது

கடினமானது

எளிமைகள் சிக்கலடைவதும்

இயல்புகள் அச்சமூட்டுவதும்

மனித அறிவுருவாக்கத்தின்

முரண்கள்’ (பக்: 133)

காந்திக்கு உதவும் என நான் கருதுகிற வேதாகம வசனமான ‘வெளியிலிருந்து வருகின்ற


எதுவும் மனிதனுள்ளே மாசுபடுத்துகிறதில்லை’ என்பது ‘துய்மைப்படுத்துகிறதுமில்லை’ என்கிற
பின்னொட்டையும் உள்ளுறையாகக் கொண்டிருக்கிறது. அது ஒரு கருத்தியல் என்பது
ஒருபுறமிருக்க, வரலாற்று நதியில் இன்றும் நீர்மேல் மிதவையாகத் தன் இருப்பை
உணர்த்துகின்றது, காந்தியத்தின் வழியாகவும்.
3.

‘ ஒரு முழுமையின் உள்ளுறுப்புகள் பல தளங்களில் தம்முன் உறவுகொண்டிருக்கும் பல்வேறு


உறுப்புகளின் தொடர்புகளை அறிதலில்தான் அமைப்புபற்றிய அறிவு அடங்குகிறது’. -லூயி
அல்தூஸர். (தமிழவனின் அமைப்பியலும் அதன்பிறகும்,பக்:10)

“விடுதலை பெற்ற பாதை’ என்ற கற்பிதத்தோடு தீமைகளின் பாதையில் வெகுதுரம்


வந்துவிட்ட பிறகு உண்மை என்கிற வெளிச்சத்தைச் சந்திக்க சற்றே பின்னோக்கிச் செல்ல
நேர்ந்தால் தவறில்லை” என்ற புரிதலொன்று உண்டு. ‘வரலாற்றறைப் பின்னுக்கு நகர்த்துதல்
இயலாது என்ற சொல்லாடலின் இணைவிளைவாக முன்னேற்றம், பின்னடைவு ஆகிய
சொற்களின் உண்மைப்பொருளை வரையறுக்க இயலாது நிற்கிறது நிகழ்காலம்.

நிகழ்கால மதீப்பீடுகளால் சிதைந்துகொண்டிருக்கிற வாழ்க்கையைப் போலவே


மதீப்பீடுகளின் அழுத்தமிகையினால் மொழியும் தன்உள்ளார்ந்த பொருள் பிறழ்வுறுத்தலைச்
சகித்துக்கொண்டு பயன்பாட்டுக்கானதாகச் சுருங்கிக்கொள்கிறது. மொழி
அதிகாரத்திற்கான ஆற்றலுமாகும் என்பதைப் புரிந்து கொள்வதில் சூழலில் நேர்ந்த
பிழையையும் முக்கியப்படுத்திக்கொள்ளவேண்டும். இப்பிறழ்வுறுதலால் நேர்ந்தவை மிகுதி.

கவனிக்க ஒன்றிரண்டு:

‘இந்திய வனங்களில்தான் இந்தியாவின் ஆன்மா உறைந்துள்ளது’ என்ற சூழலியல் சார்ந்த


வாசகம். ‘நவீனத்தொழில் வளர்ச்சிக்கான சுரங்கத்திட்டப்பணிகளில் தக்கஇடங்களைக்
கண்டறிந்து அவற்றை உடனடிப் பயன்பாட்டுக்கு மாற்றுவதும் தாமதமின்றி நடைபெறவேண்டும்’
என்ற திட்டக் கமிஷன் அறிக்கை வாசகத்தோடு எத்தகைய இசைவை அல்லது முரணைக்
கொண்டுள்ளது?

‘இதுவரையிலான பன்னிரெண்டு ஐந்தாண்டுத் திட்டங்களிலும் பொதுச்சுகாதாரம், மருத்துவம்,


மனிதவள ஆற்றல் மேம்பாடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது’ என்ற
ஜனாதிபதியின் உரையில் கேட்கப்பட்டதும்.

“புற்றுநோயாளிகளின் விகிதம் அதிகரித்து வருவது கவலை தரத்தக்க விஷயம். இரத்தப்


புற்றுநோய் கண்ட ஒருவர் தனக்குத் தேவைப்படும் மருந்திற்கான விலையாக மாதம் ஒன்றுக்கு
2500 டாலர் செலவு செய்யவேண்டும் என்கிறது நோவார்ட்ஸ் என்கிற ஸ்விட்ச்சர்லாந்து
நிறுவனம்” போன்ற செய்திகள் வாசிக்கப்படுவதும்.

‘நாற்பது வயதை நெருங்கும் பெண்கள் கட்டாயம் மார்பகப் புற்றுநோய் உள்ளதா எனச்


சோதனை செய்து கொள்ளவேண்டும்’ என்ற மத்திய அரசின் விளம்பரத்தைக் காண
நேர்வதும்.

இதற்குப்பிறகு தேசியம், சுதந்திரம், மக்கள் நலன், வளர்ச்சி, சோஷலிசம், சமத்துவம்


போன்ற சொற்களின் நிகழ் பொருட்பெறுமதிகளை எண்ணிப்பார்க்க ‘காந்தியம், பழமை,
நவீனமறுப்பு’ போன்ற சொல்லாடல்கள் தெளிவுபெறும்.

தன் மக்களின் மீதான கொடுமைகள் பொருளாதரச் சுரண்டலோடு தனிமைப்படுத்துதல்,


ஒதுக்கிவைத்தல், இழிவுபடுத்துதல் போன்ற அம்சங்களை உட்கூறாகக்கொண்ட சாதியச்
சமூகத்தின் 24 கோடி இந்துக்களுக்கு 6 கோடி தாழ்தத ் ப்பட்ட மக்கள் ஏவலர்களாக
ஆக்கப்பட்டிருப்பதை மாற்றி அவர்களுக்கு முழுவிடுதலை பெற்றுத்தருவதற்கு அம்பேத்கருக்கு
காந்தி என்ற அரசியல் குறியீடு தடையாக இருக்கிறது. அம்பேத்கரைப் பொறுத்தவரை காந்தி
எப்பொழுதும் ஒரு வரலாற்றுத் தீமையாகவே தோற்றம் தந்தார்.

தலித்மக்கள் சிறுபான்மையோருக்கான சட்டப்பாதுகாப்பைப் பெறுவதை தனித்தொகுதிகள்


பெற்று தம் நலனை மேம்படுத்திக்கொள்வதைத் தடுக்கும் முறையில் காந்தி எரவாடா
சிறையில் மேற்கொண்ட உண்ணாவிரதம் காந்தியின் பொதுநலம் சார்ந்த அரசியலில் ஒரு
வரலாற்றைப்பிழை. ஆனாலும் தலித் அரசியலை நவீன இந்திய அரசியலில் மிக அடிப்படையான
பகுதியாக ஒரு அரசியல் கருவியாக நிலைப்படுத்துவதில் காந்தி, காந்தியம் ஒரு குறிப்பிட்ட
பங்காற்றியிருக்கிறது. இந்த வகையான உரையாடலில் காந்தியை அம்பேத்கர்
புரிந்துகொள்ளவில்லை என்று சொல்லாமல் அம்பேத்கரை காந்தி புரிந்து கொள்ளவேண்டும்
என்று சொல்வதுதான் காந்தியம். ஏனெனில் காந்தியம் புரிதலை விரிவாக்குவதன் மூலம்
மாற்றங்களுக்குக் களம் அமைக்கும் ஒரு உளவியல் அமைப்பு.” என்ற பிரேமின் எடுத்துரைப்பில்
வரலாற்றுப் பொறுப்புணர்ச்சியும் இரு விடுதலைக் கருத்தியல்களைச் சமன் செய்யும்
நேர்த்தியும் வெளிப்படுகின்றது.

மூலதனப் பெருந்திரட்சியின் பெருந்தொழில் மற்றும் போர்த்தொழில் முன்னெடுப்புகள்


அம்பேத்கரின் அவதானிப்பிற்குள் வந்திருந்தனவா? நகர்ப்புறங்களை நோக்கி தலித் மக்கள்
இடம்பெயர்வதில் அவர் கொண்டிருந்த விருப்பம் சுரண்டல் சாதியக்கொடுமை
ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளோடு தொடர்புள்ளதா?
‘உலகமயமாக்கல்’ என்ற விஷவிருட்சத்தின் நிழலில் வளர்ந்து இந்திய பெருவுடமையாளர்க்கும்
ஆளுவோர்க்கும் பலன்தரும் பன்முக உற்பத்திக்கான உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி
ஆற்றல்கள் ஆகியவற்றில் காந்தியத்தின் செயலூக்கத்தினால் நிகழவிருக்கும் தலைகீழ்
மாற்றங்களை நிலைப்படுத்தும் வலிமை உருவாக்கத்தை இங்குள்ள சட்டங்களும்
நீதியமைப்புகளும் அனுமதிக்குமா?

காந்தியம் வரைகிற உற்பத்திமுறைகள் அதாவது எந்திரங்கள் விலக்கிய கைத்தொழில்கள்,


பாரம்பரிய (முற்றிலும் இரசாயனம் தவிர்த்த) வேளாண்மைக்குப் பின்புலமாக அமையும்
பாரம்பரிய விதைகள் மீட்பு, கால்நடைகள் பெருக்கம், காடுகளை வளர்த்தல், நீராதாரங்கள்
பராமரிப்பில் மக்கள் பங்கெடுப்பு, உணவுமுறைகளில் மாற்றம், தாய்மொழிக்கல்வி
போன்றவற்றின் மீட்டுருவாக்கத்தில் அரசியல் கட்சிகளின் நிலை போன்றவையும்
நிராகரிக்கவியலாக் காரணிகளாக அமைந்துள்ளன. மேலும் மக்களின் மனவெளியில்
தங்கியுள்ள உயர்கல்வி, நவீனத்தொழில்நுட்பப் பயிற்சியின் வழி மிகுபொருளீடட ் ல், புதிய
வாழ்க்கை முறை பற்றிய மயக்கங்களும் கற்பிதங்களும் கூடுதல் சிக்கல்கள்.

அம்பேத்கரின் சமூகவிடுதலைக் கருத்தியலை ஏற்றுச் செயல்படும் இயக்கங்கள்


காந்தியம் குறித்து உருவாக்கியுள்ள புரிதல்கள் எத்தகையவை?

நவீன அறிவியல் தொழில்நுட்பம் பெருந்தொழில் வளர்ச்சி ஆகியவை குறித்த


இடதுசாரி அமைப்புகளின் புரிதல்கள் போன்ற கேள்விகள் நூலின் வரையறை கடந்தவையாக
இருப்பினும் தவிர்க்க இயலவில்லை.

காந்தியக் கல்வி : காந்தியத்தின் ஆதாரம்

காந்தி இன்று இணைய இதழில் வெளிவந்த கட்டுரையின் மீள்பதிவு இது.

காந்தியின் கல்விச்சிந்தனைகள் அவரது பிற கருத்துகள் அளவுக்கு அதிகம் கவனம்


பெறாதவை. பல காந்தியர்களாலேயே முழுமையாகப் புரிந்து கொள்ளப்படாதவை. ’ஆதாரக்
கல்வி’/ ‘அடிப்படைக் கல்வி’ (Basic education) என்றும், பின்னர் நயி தாலீம் (Nai Talim
– புதிய கல்வி) என்றும் காந்தி தனது கல்விச் சிந்தனைகளைத் தொகுத்துக் கொண்டார்.
இன்றைக்குப் பல்வேறு நவீனக் கல்விமுறைகள் பின்பற்றப்படும் நிலையில், காந்தியின் ‘நயி
தாலீம்’ முறையைப் புதிய பார்வையுடன் அணுகிப் பார்த்தால் அது இன்றும் நவீனத்
தன்மையுடன் மிளிர்கிறது; பல வகைகளில் இன்றைய சூழலுக்கும் புரட்சிகரமானதாகத்
தென்படுகிறது. காந்தியின் தாக்கம் நிறைந்த பிற எல்லாத்துறைகளையும் போலவே,
காந்தியின் கல்வி பற்றிய சிந்தனைகளும் கல்வி என்ற தளத்தில் தனித்து இயங்கவில்லை.
அவை சமூகம் முழுவதையும் தொட்டுப் பரவி நின்றன. வரலாற்றுப் பார்வையும், சமூக
அக்கறையும், தனி மனித உயர்வும் இணைந்து அவரது கல்விமுறையை தனித்துவம்
மிக்கதாகச் செய்கின்றன.

இந்தியக் கல்வியின் வரலாற்றுப் பின்னணியும் காந்தியின் கல்வி சார்ந்த சிந்தனைகளைச்


செதுக்கியிருக்க வேண்டும்-

“எனது புள்ளிவிபரங்கள் மறுக்கப்படமுடியாதவை என்கிற நம்பிக்கையோடு சொல்கிறேன் –


ஐம்பது, நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்றைய இந்தியாவில் படிப்பறிவு
குறைந்துள்ளது; பர்மாவிலும் அவ்வாறே; பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியா வந்தபோது,
அங்கிருக்கும் முறைகளை ஏற்றுக்கொள்ளாமல், வேரறுக்கத் தொடங்கியதே இதற்குக்
காரணம். மண்ணைத் தோண்டி, வேரைப் பார்க்கத் தொடங்கினர்; அப்படியே விட்டனர்;
அழகிய மரம் மரித்தது,”

என்று 1931 ல் லண்டனில் சத்தத் ம் ஹவுஸ் என்ற இடத்தில் காந்தி பேசினார். அதன்பிறகு சர்
வில்லியம் ஹர்தோக் என்பவர் – டாக்கா கல்லூரியில் முதல்வராக இருந்தவர் – காந்தியின்
கருத்துடன் முரண்பட்டு வாதாடினார். காந்தி அளித்த ஆதாரங்களைத் தொடர்ந்து
நிராகரித்தார். அவர்களது விவாதம் 8 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தது. இருவரும்
தத்தம் நிலைகளிலிருந்து விலகவேயில்லை. காந்தியின் கல்வி சார்ந்த கருத்துகளுக்கு இருந்த
வரலாற்றுப் பார்வையை இந்த விவாதம் வலுப்படுத்தியது. இந்த விவாதத்தை மையமாக
வைத்துத்தான், தரம்பால்(Dharampal) ‘அழகிய மரம்’ (The Beautiful Tree) என்ற
நூலை எழுதினார்.

வரலாற்றுப் பின்னணி

“இந்தியாவில் நீண்ட காலமாய் நிலைபெற்று வளர்ந்திருந்த பண்பாட்டின் மூலமாக நாம் உணர


வேண்டிய உண்மை இதுதான்: முன்பு இந்தியாவுக்கென்று ஒரு கல்விமுறை இருந்திருக்கிறது;
அதுதான் ‘தேசிய’ என்ற அடைமொழியோடு குறிக்கக்கூடிய ஒரே அம்சம்.”

– காந்தி, யங் இந்தியா, 20-3-1924.

சிந்து சமவெளி காலம் முதலே இந்தியாவில் எழுத்துமுறை என்று ஏதோவொன்று


இருந்திருக்கவேண்டும். அதற்கான ஆதாரங்கள் நிறையக் கிடைத்துள்ளன. ஆனால், அந்த
எழுத்துமுறையைப் படிக்கும் வழியை இன்னமும் அறிந்துகொள்ள முடியவில்லை. பல
நூற்றாண்டுகளாய் வேதங்கள் வாய்மொழியாகக் கற்பிக்கப்பட்டு வந்துள்ளன. புத்த, சமண
கல்வி மரபுகளும், பிற்காலத்தில் இஸ்லாமியக் கல்விமரபும் உருவாயின. தக்சசீலம், நளந்தா
போன்ற இடங்களில் ஆதி பல்கலைக்கழங்கள் அமைந்தன; மதுரை, காஞ்சி போன்ற நகரங்கள்
கல்விக்குப் பெயர்பெற்றன. இலக்கியம், இலக்கணம், கலை, மதம், தத்துவம் என்று
பலதுறைகளிலும், தமிழ், சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் என்று பல மொழிகளிலும் நூல்கள்
படைக்கப்பட்டன.
‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை.’

என்று கூறும்படியான உயர்ந்த நிலை கல்விக்கு வழங்கப்பட்டது.

ஆங்கிலேயர் வருவதற்கு முன்புவரை இந்த நிலை ஓரளவு நீடித்திருக்கிறது. பத்தொன்பதாம்


நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்தியாவின் கல்விநிலை குறித்து ஆராய்ந்த பல பிரிட்டிஷ்
ஆட்சியாளர்கள், இந்தியாவில் ஆரம்பக் கல்வி பரவலாக இருந்ததைப் பற்றி உயர்வாக
எழுதியுள்ளனர்.

சென்னை மாகாணத்தின் ஆளுனராக இருந்த ஸர் தாமஸ் மன்றோ, ‘ஒவ்வொரு கிராமத்திலும்


ஒரு பள்ளி இருந்தது,’ என்று எழுதியுள்ளார். அவர் சேகரித்த புள்ளி விபரங்களின்படி, மூன்றில்
ஒரு ஆண்பிள்ளை ஆரம்பக் கல்வி பெற்றுக் கொண்டிருந்துள்ளனர். இந்து, இஸ்லாமிய
சமூகங்கள் இரண்டுக்கும் இப்புள்ளிவிவரம் பொருந்தும். தொடக்கக்கல்வி 5
ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துள்ளது. வீட்டிலேயே படித்தவர்களின் எண்ணிக்கயை
அவர்களால் அளவிடமுடியவில்லை. ஆனால், பெண்கள் மிக அரிதாகவே படித்திருக்கின்றனர்.
சோதிடம், வானவியல், மருத்துவம் தவிர பிறதுறைகளில் உயர்கல்வி பெரும்பாலும்
பிராமணர்களுக்கே கிடைத்திருக்கிறது. தீணட ் ாமையின் காரணமாய் தலித்களுக்குப்
பெரும்பாலும் கல்வி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், பிராமணர்கள் அல்லாத வேறு பிற
சாதியினரும் (வைசியர்களும் சூத்திரர்களும்) பெருமளவில் ஆரம்பக் கல்வி பெற்றதை
மன்றோவின் ஆய்வுகளின் சில பகுதிகளில் காணலாம்.

இதே போல, வங்காளம், பஞ்சாப், பம்பாய் மாகாணங்களைச் சார்ந்த ஆட்சியாளர்களும்


ஆய்வுகள் செய்து ஒத்த முடிவுகளை அடைந்துள்ளனர். வங்காளத்தில் ஒரு லட்சம் பள்ளிகள்
இருந்ததாக வில்லியம் ஆதாம் என்பவர் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்கள் பெரும்பாலும் சூத்திர
சாதிகளைச் சார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். டாக்டர் ஜி. டபில்யூ. லீட்னர் பஞ்சாபில்
1850 களில் 3,30,000 மாணவர்கள் இருந்ததாகவும், 1882 ல் 1,90,000 க்குக்
குறைந்துவிட்டதாவும் எழுதியுள்ளார்.

அன்றைய கல்வியின் தரம் குறித்தும், ஆசிரியர்கள் தரம் குறித்தும் முரணான கருத்துகள்


பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். எனினும் குறைந்தபட்சமாக எழுத்துத்திறன்,
இலக்கணம், நீதி போதனைகள், வணிகத்துக்குத் தேவையான அடிப்படைக் கணிதம்
கற்றுத்தரப்பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.
இந்த ஆய்வுகள் நடந்தபோதே, இந்தியக் கல்விமுறை சரிந்து கொண்டிருந்துள்ளது
என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். 1813 ல் நிறைவேற்றப்பட்ட சார்ட்டர் ஏக்ட்
(Charter Act), இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை கிழக்கிந்தியக் கம்பெனி
ஏற்கவேண்டும் என்று வலியுறுத்தியது; ஒரு லட்சம் ரூபாய் நிதி கல்விக்காக ஒதுக்கப்பட்டது.
அதன்பின்னர் ஆங்கிலேயர்களின் தலையீடு கல்வித்துறையில் அதிகரிக்கவும், இந்தியக்
கல்விமுறை மேலும் சிதைந்துள்ளது.

18 ம் நூற்றாண்டுக்கு முன் மதபோதகர்களின் செயல்பாடுகள் பெருமளவு இந்திய


மொழிகளிலேயே இருந்துள்ளன. தங்கள் மொழியைத் திணிக்க அவர்கள் முயலவில்லை.
மாறாக மக்களின் பேசுமொழி மூலமாக மதபோதனைகள் செய்வதன் சாதகங்களை
அறிந்திருந்தனர். பிற போதகர்களின் பயன்பாட்டுக்காக இந்திய மொழிகளில் அகராதிகள்,
இலக்கண நூல்கள் ஆகியவற்றை எழுதினர். கிழக்கிந்தியக் கம்பெனியும் ஆரம்ப காலங்களில்
இந்திய மொழிக் கல்விக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். கல்கத்தா மதராஸா,
பெனாரஸ் சமஸ்கிருதக் கல்லூரி ஆகியவற்றைத் தொடங்கினர். பின்னர் ராஜாராம்
மோகன்ராய், மெக்காலே ஆகியோரின் தாக்கத்தில் ஆங்கிலத்துக்கான முக்கியத்துவம்,
குறிப்பாக உயர்கல்வியில், பெருகத்தொடங்கியது.

ஆங்கில ஆட்சியாளர்கள் இந்தியப் பள்ளிகளை முனைப்புடன் மூடியதாகத் தெரியவில்லை.


அரசின் ஆதரவு இல்லாமலும், வருவாய் போதாமலும் அவை தாமாகவே அழிந்துள்ளன.
ஆங்கிலேயர்களின் கடுமையான நிலவரிக் கொள்கைகள் கிராமங்களின் தற்சார்பினைச்
சிதைத்ததும், குடும்பங்களை கல்விக்கென நிதி ஒதுக்க இயலாத ஏழ்மைக்குத் தள்ளியதும்
இந்திய சுதேசப் பள்ளிகள் படிப்படியாக அழிவதற்குக் காரணமாயின.

இந்தியக் கல்விநிலை சரிந்த அதே காலகட்டத்தில்தான், நேர்மாறாக, இங்கிலாந்தின்


கல்வித்தரம் உயர்ந்துள்ளது. ஆக்ஸ்போர்ட், கேம்ப்ரிட்ஜ் ஆகிய பல்கலைக்கழகங்கள் 13/14 ம்
நூற்றாண்டுகளில் தொடங்கபட்டிருந்தாலும், மிகக்குறுகிய அளவில், உயர் வகுப்புகளுக்கு
மட்டுமே உரித்தாயிருந்தன. ‘உழவன் மகன் உழவை மேற்கொள்ள வேண்டும்;
கைவினையாளரின் மக்கள் அவர்களது பெற்றோர் தொழிலையே மேற்கொள்ள வேண்டும்;
சீமான்களின் குழந்தைகள் அரசாங்கத்தையும் சாம்ராஜ்யத்தையும் நிர்வகிக்கும் அறிவினைப்
பெறவேண்டும். மற்ற எல்லா நாடுகளைப் போலவும் நமக்கும் உழவர்களின் தேவை உள்ளது:
எல்லா வகையான மக்களும் பள்ளி செல்ல வேண்டியதில்லை,’ என்னும் கொள்கைதான்
இங்கிலாந்திலும் நிலவியது.

1792 ம் ஆண்டில், 40000 மாணவர்கள்தான் பள்ளி சென்றுகொண்டிருந்தனர். அந்த


எண்ணிக்கை, அடுத்த அரை நூற்றாண்டில் பன்மடங்கு பெருகி, 1851 ல் 21,44,337 ஆக
உயர்ந்தது. 1801 ல் 3363 பள்ளிகளே இருந்துள்ளன; 1851 ல் 461114 பள்ளிகள்
உருவாகியிருந்தன. ஆனால் அப்போதும் தொடக்கக்கல்வி சராசரியாக ஓரிரண்டு ஆண்டுகள்
மட்டுமே நீடித்துள்ளது.
இங்கிலாந்து இவ்வளவு பெரும் மாற்றத்தைக் குறுகிய காலத்தில் அடைந்ததற்குப் பல
காரணங்கள் கூறலாம். இந்த மாற்றத்தை நிகழ்த்திய முக்கியமான இருவர், ஆண்ட்ரூ பெல்
மற்றும் ஜோசப் லான்கெஸ்டர். ஆண்ட்ரூ பெல் மதராஸ் முறை (Madras System) என்ற
கல்வி முறையை, இந்தியக் கல்விமுறையைக் கவனித்து உள்வாங்கி, சென்னையில்தான்
உருவாக்கினார். பின்னர் அதே முறையை இங்கிலாந்தில் சோதனை முயற்சியாகச்
செயல்படுத்தினார். அந்த முறையை மேலும் வளர்த்தெடுத்து, ஜோசப் லான்கெஸ்டர் பெரிய
அளவில் தனது ‘ மாணவர் தலைவர் முறை’ (Monitorial method) மூலம் எடுத்துச்
சென்றார். இங்கிலாந்திலிருந்துதான் இந்தியா நவீனக் கல்விமுறையை இறக்குமதி செய்தது
என்கிற பொதுபுரிதலுக்கு முற்றிலும் மாறானது, இங்கிலாந்து தனது கல்வி மலர்ச்சிக்கு
இந்தியாவிற்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறது என்கிற செய்தி.

தரம்பால், தனது ‘ அழகிய மரம்’ நூலில் இச்செய்திகளைத் தொகுத்துத் தருகிறார்.


சுதந்திரத்திற்கு முன்பு எழுதிய ஜே.பி. நாயக், மேஜர் பி.டி.பாசு, ஃப்.இ.கீய் (Rev.FE Keay)
ஆகியோர் தமது நூல்களிலும் இதே தரவுகளைப் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்.
அவர்களுக்கும் முன்பே, பல்வேறு அறிஞர்களால், இக்கருத்துகள் பல ஆண்டுகளாகக்
கூறப்பட்டு வந்தன. அவற்றின் தாக்கம் காந்தியின் மீதும் இருந்தது என்பதையும், அது மேலும்
வலுப்பட்டதையும், சர் வில்லியம் ஹர்தோக் உடனான விவாதத்தின் மூலம் நாம் காணலாம்.

இத்தகையதொரு வரலாற்றுப் பின்புலத்தில்தான் காந்தி அன்றைய கல்விமுறையை முற்றிலும்


நிராகரித்து, புதிய பாதையைத் தேடத் தொடங்கினார்.

காந்தியச் சிந்தனைகளின் வளர்ச்சி

காந்தி ‘அடிப்படைக் கல்வி’ என்ற பதத்தை 1938 லும், நயி தாலீம் என்பதை 1944 லும்தான்
பயன்படுத்தினார். ஆனால், 1890 களிலிருந்தே கல்வியில் அவர் பல்வேறு சோதனைகளைச்
செய்து வந்திருக்கிறார். அவரது முதற்சோதனைகள் அவரது மகன்களின் வாயிலாகத்தான்
நடந்தன. தென்னாப்பிரிக்காவிலிருந்த ஆங்கிலப் பள்ளிகளுக்கு அவரது பிள்ளைகளை அனுப்ப
அவருக்கு மனமில்லை. பயன்களைவிட பாதிப்புகளே அதிகம் என்று கருதினார். அவரது
பிள்ளைகள் நால்வருக்கும் அவரே கல்வி கற்றுத்தர முயன்றார். கடும் வேலைப் பளுவுக்கும்,
போராட்டங்களுக்கும் இடையில் அவர்களுக்கும் அவருக்கும் திருப்தியான கல்வியை அவரால்
தரமுடியவில்லை. பின்னர் அவர் அமைத்த டால்ஸ்டாய் பண்ணையில் இருந்த குழந்தைகள்
எல்லாருக்கும் காந்தியும் அவரது சகாக்களுமே கல்வி அளித்தனர். 20-30 குழந்தைகள்
அங்கிருந்தனர்; தமிழ், குஜராத்தி, தெலுங்கு, ஹிந்தி என்று வெவ்வேறு மொழி பேசினர்;
ஹிந்து, முஸ்லிம், பார்சி, கிருத்துவம் என்று பல மதங்களைச் சார்ந்திருந்தனர். சமையல்,
தோட்டவேலை, பட்டறை வேலை, செருப்பு தைத்தல், கழிவகற்றல் என்று பல வேலைகளிலும்
ஈடுபட்டனர். கூடவே 2-3 மணிநேரம் முறையான வகுப்புகளும் நடந்தன. எழுத்து, கணிதம்,
பொது அறிவு, வரலாறு, புவியியல், அறிவியல் என்று பல பாடங்களும் நடத்தப்பட்டன. காந்தி
தான் சிறையில் கற்றுக்கொண்டதை வைத்து, தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் எழுதப்
பழக்கினார். மதம் சார்ந்த நூல்களும் கற்பிக்கப்பட்டன. ‘எனது நம்பிக்கையும் துணிச்சலும்
உச்சத்திலிருந்த நாட்கள் அவை,’ என்றார் காந்தி. அரசியல் காரணங்களால், அந்தச்
சோதனை முடிவுக்கு வந்தது. ஒரு வருடமே நீடித்த இந்தச் சோதனை காந்தியின்
சிந்தனையைச் செழுமைப்படுத்தியது.

இந்தியா திரும்பியபின், ஒத்துழையாமை இயக்கத்தின்போது, மாணவர்களைப் போராட்டத்தில்


கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். பிரிட்டிஷ் பள்ளிகளையும் கல்லூரிகளையும் அவர்களைத்
துறக்கச் செய்தார். அவரது அழைப்பையேற்றுப் போராட்டத்தில் குதித்த மாணவர்களுக்காக
குஜராத் வித்யாபீடம் உட்பட பல சுதேசிக் கல்வி நிறுவனங்களும் ஆசிரமங்களும்
தொடங்கப்பட்டன. 1938 ல் ‘அடிப்படைக் கல்வி’ பற்றி காந்தி எழுதத்தொடங்கிய பிறகு,
தாலீமி சங்கம் என்று அமைப்பு உருவாக்கப்பட்டு, பல மாகாணங்களில் காந்திய முறையில்
பள்ளிகள் தொடங்கப்பட்டன. இரண்டாம் உலகப்போர் தொடங்கியபின் காங்கிரஸ் அரசுகள்
கலைக்கப்பட்டபின், அந்த முயற்சிகள் தடைபட்டன. வெகுசில இடங்களில் மட்டும் நயி தாலீம்
பள்ளிகள் இயங்கின.

தென்னாப்பிரிக்கச் சோதனைகளின் ஆரம்ப நாட்கள் தொட்டு, நயி தாலீம் என்கிற ஒரு


முழுமையான வடிவத்தை அடையும்வரை, காந்தியின் சிந்தனைகள் தொடர்ந்து வளர்ந்து,
மாறி, செம்மையாகிச் செதுக்கப்பட்டு வந்தன. அவரது கல்விமுறையின் இறுதி வடிவத்தை
அறியும்முன், அவரது சிந்தனைகளின் போக்கினைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

1. மக்களின் பண்பாட்டோடும் வாழ்க்கையோடும் கல்வி இயைந்திருக்க வேண்டும் என்று


காந்தி கருதினார். நம் நீண்ட பண்பாட்டின் தொடர்ச்சியை இழக்கச் செய்ததையே, அன்றைய
கல்வி முறையின் மிகப்பெரும் தீமையாகப் பார்த்தார்.

“ஆங்கிலப் பள்ளிகளுக்குத் தம் குழந்தைகளை அனுப்பிய பெரும்பாலான மக்கள் உழவர்கள்;


கடவுள் மீது ஆழ்நத ் பக்தி கொண்ட ஆண்கள், பெண்கள். இந்த இளைஞர்கள் கல்வி கற்றுத்
திரும்பும்போது விவசாயம் பற்றி எதுவும் அறியாதவர்களாகவும், தம் பெற்றோர்களின் தொழில்
குறித்த வெறுப்பு நிறைந்தவர்களாகவும், கடவுள் நம்பிக்கையைத் தாண்டி வளர்ந்துவிட்டதாகத்
தம்மைக் கருதுபவர்களாகவும் மாறிவிடுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பிட்ட
குறைந்த அளவிலான குமாஸ்தாக்களும், உதவியாளர்களுமே அரசாங்கத்திற்குத்
தேவைப்பட்டார்கள் என்பதாலேயே ஆபத்தான இப்பிளவு விளைவித்த துன்பியல் நிகழ்வு
மட்டுப்படுத்தப்பட்டது என்பது உண்மை நிலையை மறைக்கவிட்டுவிடக்கூடாது,” என்று
எழுதினார் காந்தி. (யங்க் இந்தியா, 20-3-24)
2. ஆங்கிலவழிக் கல்வி குறித்துக் கடுமையான விமர்சனங்கள் கொண்டிருந்தார். ஆங்கிலம்
ஒரு மொழியாகக்கூட அனைவரும் கற்கவேண்டியதில்லை, தேவைப்படுவோர் மட்டும் கற்றால்
போதும் என்று கருதினார். அவரது தீவிரக் கொள்கைகளில் சில முரண்பாடுகள்
கொண்டிருந்த ரவீந்திரநாத் தாகூரிடம்,

“எனது வீட்டைச் சுற்றிலும் சுவரெழுப்பிச் சாளரங்களை அடைத்துவிட நான் விரும்பவில்லை.


எல்லா நிலங்களின் பண்பாடுகளும் என் வீடெங்கும் முடிந்தவரை சுதந்திரமாக உலவுவதையே
விரும்புகிறேன். ஆனால் அவை எவற்றாலும் நான் அடித்துச்செல்லப்பட மறுக்கிறேன்.
மற்றவர்களின் இல்லங்களில் ஓர் ஊடுருவியாக, பிச்சைக்காரனாக, அடிமையாக வாழ
மறுக்கிறேன். பொய்யான பெருமைக்காகவும், கேள்விக்குரிய சமூக ஆதாயங்களுக்காகவும்
எனது சகோதரிகளின் மீது ஆங்கிலம் கற்க வேண்டிய பளுவினைச் சுமத்த மறுக்கிறேன்,”

என்று வாதிட்டார். (யங்க் இந்தியா, 1-6-21)

தாய்மொழிவழிக் கல்விதான் பயன்தரும் என்று நம்பினார். அது கட்டாயமாக்கப்பட வேண்டும்


என்றுகூட வாதிட்டார்.

“அந்நியமொழி பயிற்றுமொழியானது நம் குழந்தைகளைத் தம் சொந்த நாட்டிலேயே


அந்நியர்களாக்கிவிட்டது. நடப்பு முறையின் மிகப் பெரிய துன்பியல் விளைவு இதுதான்.
அந்நியமொழிக் கல்வி நம் பிராந்திய மொழிகளின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்துவிட்டது.
ஒரு சர்வாதிகாரிக்குரிய அதிகாரம் எனக்கிருந்தால், இன்றே நம் சிறார்களை அந்நிய மொழி
மூலமாகப் பயிற்றுவித்தலை நிறுத்திவிடுவேன். எல்லா ஆசிரியர்களையும்,
பேராசிரியர்களையும், பதவிநீக்கம்கூட நிகழலாம் என்னும் அச்சுறுத்தலோடு, இந்த மாற்றத்தை
உடனே அறிமுகப்படுத்தச்செய்வேன். பாடநூல்கள் உருவாக்கப்படுவதற்குக்கூட நான்
காத்திருக்கப் போவதில்லை. இந்த மாற்றத்தை அவர்கள் உடனே பின்பற்றவேண்டும். இது
உடனடித் தீர்வு தேவைப்படும் ஒரு கேடு.” (யங்க் இந்தியா, 1-9-21)

“எண்கணிதம், இயற்கணிதம், வடிவியல், வேதியல், வானவியல் போன்ற பாடங்களில் நான்கு


ஆண்டுகளில் நான் கற்றவற்றை, பயிற்றுமொழி ஆங்கிலமாக அல்லாமல் குஜராத்தியாக
இருந்திருந்தால், நான் ஒரே ஆண்டில் கற்றிருப்பேன். அந்தப் பாடங்களைப் புரிந்துகொள்ளுதல்
இன்னும் எளிமையாகவும் தெளிவாகவும் இருந்திருக்கும். […] இந்த ஆங்கிலப் பயிற்றுமொழி
எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இடையே கடக்கமுடியாத ஒரு தடையை ஏற்படுத்தியது.”
(ஹரிஜன், 9-7-38)

தாய்மொழியைப் பயிற்றுமொழியாக்கக் கோரிய அதே வேளையில், இந்துஸ்தானியை தேசிய


மொழியாகவும் ஏற்றுக்கொள்ள எல்லா மொழியினரையும் அறிவுறுத்தினார்.
“ஒரு சராசரி வங்காளியால், ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் ஒதுக்க முடிந்தால், இரண்டே
மாதங்களில் இந்துஸ்தானியைக் கற்றுக் கொள்ளமுடியும்; திராவிடர்களால் அதே வேகத்தில்
ஆறு மாதங்களில் கற்றுவிட முடியும். எந்த ஒரு வங்காளியாலும் திராவிடராலும் ஆங்கிலம்
கற்பதில் இதே போன்ற நிலையை அடைந்துவிட முடியாது. ஆங்கில அறிவு, ஒப்பட ீ ்டளவில்,
ஆங்கிலம் அறிந்த மிகச்சில இந்தியர்களோடுதான் உரையாடலைச் சாத்தியமாக்குகிறது;
இந்துஸ்தானி அறிந்துகொள்வதன் சாத்தியமோ நம் நாட்டில் மிக அதிகமான குடிமக்களோடு
உரையாடும் வாய்ப்பை ஏற்படுத்தும்.” (யங்க் இந்தியா, 2-2-21)

அவரைப் பொறுத்தவரை ஹிந்துஸ்தானி என்பது சமஸ்கிருதத்தின் தாக்கம் கொண்ட


ஹிந்தியும், பாரசீகத்தின் தாக்கம் நிறைந்த உருதுவும் ஒன்றிய ஒரு மொழி. அவர் ஹிந்தியும்
உருதுவும் இருவேறு எழுத்துமுறைகளைக் கொண்ட ஒத்த மொழிகளெனவே கருதினார்.
நடைமுறையில் வடநாட்டு மக்கள் பேசும் மொழி ஒன்றுதான், இந்து மற்றும் இஸ்லாமிய
அறிஞர்கள் மத்தியில்தான் சமஸ்கிருமயமாதலும், பாரசீகமயமாதலும் நிகழ்ந்துள்ளதாகக்
கருதினார். அவர் ஹிந்தி என்று பொதுவாகக் குறிப்பிடுவதும் இந்த ஹிந்துஸ்தானியையே.

3. சமூக சேவை, கல்வியின் அங்கமாக இருக்கவேண்டும் என்று உறுதிபடக் கூறினார்:

“கல்வியின் இறுதிநோக்கம் சேவையாகத்தான் இருக்கமுடியும். ஒரு மாணவன் படிக்கும்போதே


சேவை செய்யும் வாய்ப்பு கிட்டினால், அதை அவன் ஓர் அரிய வாய்ப்பாகக் கருதவேண்டும்;
கல்வி தடைபட்டதாகப் பார்க்காமல், கல்வி முழுமை பெற்றதாகப் பார்க்கவேண்டும்” (யங்க்
இந்தியா, 13-10-27)

“உண்மையான கல்வி என்பது உங்களிலிருந்து சிறந்தவற்றை வெளிக்கொணர்வதில் உள்ளது.


மனிதம் என்கிற புத்தகத்தைவிடச் சிறந்த புத்தகம் வேறென்ன இருக்க முடியும் ? தினம்தினம்
ஹரிஜனக் குடியிருப்புக்குச் சென்று, ஹரிஜன மக்களை ஒரே குடும்பமாகக் கருதுவதைவிடச்
சிறந்த கல்வி வேறென்ன இருக்க முடியும்? அது ஒரு மகத்தான, புனிதப்படுத்தக்கூடிய
கல்வியாக இருக்கும். என்னுடைய நம்பிக்கை குறுகிய ஒன்றல்ல. மனித சகோதரத்துவத்தை
அடைய வைக்கக்கூடியது.” (ஹரிஜன், 30-3-34)

4. பாட புத்தகங்களுக்குக் கொடுக்கப்படும் அதிகப்படியான முக்கியத்துவத்தையும், அதனால்


ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களையும் காந்தி கவனிக்கத் தவறவில்லை. பாட புத்தகங்கள்
யாருக்கானவையாக அமையவேண்டும் என்பதைக் குறித்து ஒரு புதிய பார்வையை
முன்வைத்தார்:

“இந்தியாவில், பல்வேறு பாட புத்தகங்களைச் சார்ந்திருப்பதால் கிராமக் குழந்தைகள்


பெருவாரியானவர்களுக்கு கற்கும் வழி பறிக்கப்படுகிறது. அதனால், இந்தியாவில், அதிலும்
குறிப்பாக ஆரம்பப் பள்ளிகளில், பாட நூல்கள் ஆசிரியர்களுக்கானவையாகவே இருக்க
வேண்டும்; மாணவர்களுக்கல்ல.” (யங்க் இந்தியா, 16-9-26)

5. சிறந்த கல்வி முறைகள் எல்லா தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதிலும்


காந்தி தெளிவாக இருந்தார். பாரம்பரிய இந்தியக் கல்வி முறையின் மிகப்பெரிய பலவீனம்,
அது எல்லாத் தரப்பு மக்களையும், பெண்களையும் ஒரே சீராகச் சென்றடையவில்லை
என்பதுதான். இந்தக் குறைபாட்டினை விலக்கவேண்டும் என்கிற அவரது முனைப்பு, கல்வி
உலகில் ஒரு புதிய மாற்றத்தைக் கொணர்ந்த மரியா மாண்டிசொரிக்கு, காந்தி எழுதிய ஒரு
கடிதத்தில் வெளிப்படுகிறது.

“குழந்தைகள் மீதுள்ள அன்பினால், நீங்கள் உங்கள் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மூலம்


அவர்களுக்குக் கற்பித்து, அவர்களிடமிருந்து மிகச்சிறந்த ஆற்றல்களை வெளிக்கொணர
முனையும் அதே வேளையில், இத்தகைய பயிற்சியைப் பெறுவது செல்வந்தர்களின்
குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பரம ஏழைகளின் குழந்தைகளுக்கும் சாத்தியமானதாக
இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.” (யங்க் இந்தியா, 19-11-31)

பெண்கல்வி குறித்த அவரது நிலைப்பாடு பண்பட்டுக்கொண்டே வந்தது. பெண்களைப்


போராட்டங்களில் ஈடுபடுத்திய முன்னோடிகளில் ஒருவராக இருந்தபோதிலும், பெண்கல்வி
பற்றிய அவரது ஆரம்பகாலக் கருத்துகள் சில, இன்றைய பெண்ணியப் பார்வைக்கு உகந்ததாக
இருக்க வாய்ப்பில்லை. பெண்களுக்கு இல்லறத்தைச் சிறப்பாகப் பேண உதவும் கல்விதான்
அவசியம் என்று 1918 ல் கருதினார். அப்போதும் மற்ற துறைகள் பெண்களுக்கு
மறுக்கப்படவேண்டும் என்று கூறவில்லை – ஆண்களும் பெண்களும் சமமென்ற போதும், ஒரே
மாதிரியான கல்வி கூடாது; அவரவர் பொறுப்புகளுக்குப் பொருத்தமான கல்வி அளிக்கப்பட
வேண்டும் என்றார். ஆனால், 1939 ல் அவரது பார்வை பிற திசைகளில் பயணித்திருப்பதைக்
காணலாம்.

“பெண்களின் எழுத்தறிவின்மையைப் பொருத்தவரை, அதன் காரணம், ஆண்களிடம்


இருப்பது போல், சோம்பலோ செயலின்மையோ அல்ல. இன்னும் வலிய காரணம்,
காலங்காலமாய் நம் பாரம்பரியம் அவர்களைக் கீழானவர்களாய் முத்திரை குத்தியதுதான்.
ஆண் அவளைத் தனது உற்ற துணையாகவும், மேலான பாதியாகவும் கருதாமல், வீட்டு
வேலைப்பளுவைச் சுமத்தியும், தன் இச்சையைத் தீர்க்கும் கருவியாக்கியும் விட்டான். இதன்
விளைவு நம் சமூகத்தில் இருக்கும் அரை-முடக்க நிலை. பெண் நம் இனத்தின் தாய் என்று
சரியாக அழைக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சரிசெய்ய
அவளுக்கும் நமக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.” (ஹரிஜன், 18-2-39)

6. காந்தியின் கல்விச் சிந்தனைகளில் அதிக அழுத்தம் பெற்ற அம்சம் தொழிற் பயிற்சி.


தென்னாப்பிரிக்காவில், ஜான் ரஸ்கினின் கடையனுக்குக் கடைத்தேற்றம் நூலைப் படித்து
மறுஆக்கம் செய்தது முதலே உடலுழைப்பின் அவசியத்தை வற்புறுத்துபவராக காந்தி
இருந்திருக்கிறார். உடலுழைப்பு சார்ந்த தொழிற் பயிற்சி, கல்வியின் பகுதியாக
இருக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

“மழலைப் பருவம் முதலே உடலுழைப்பின் மதிப்பினைக் குழந்தைகளுக்கு உணர்த்தவேண்டும்;


நம் குழந்தைகளுக்கு உடலுழைப்பை வெறுக்கக் கற்பித்துவிடக்கூடாது. ஒரு விவசாயியின்
மகன், பள்ளி சென்று முடித்தபின், அவன் இப்போது ஆகிவிடுவதுபோல், நிலத்தில் வேலை
செய்யத் தகுதியற்றவனாகிவிடுதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.” (யங்க் இந்தியா, 1-9-
21)

தொழிற்பயிற்சி என்று சிந்திக்கத்தொடங்கியபின், அவரது விருப்பத்துக்குரிய தொழிலான


நூல் நூற்றல் கவனப்படுத்தப்படாமல் இருக்க முடியுமா?

“எதிர்காலத்தின் எந்த ஒரு பாடத்திட்டத்திலும், நூற்றல் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்.


எப்படி நம்மால் சுவாசிக்காமலும் உண்ணாமலும் இருக்கமுடியாதோ, அவ்வாறே, வீட்டில்
எல்லாரும் நூற்பதை மீட்டுயிர்க்காமல், பொருளாதாரச் சுதந்திரம் அடைவதும், இந்தப்
பழம்பெரும் பூமியிலிருந்து வறுமையை விரட்டுவதும் சாத்தியமாகாது.” (யங்க் இந்தியா, 19-
1-21)

7. கல்வி அறிவுக்கும் உடலுக்கும் மட்டுமானதன்று, இதயத்துக்குமானது என்று நம்பினார்.


தகைமையை, குணநலனை வளர்க்கும் கல்வியையே கல்வியாக ஏற்றுக்கொள்கிறார்.

“நாம் கற்றவை அனைத்தும், வேதங்களை ஓதுதலும், சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன்,


இன்ன பிறவற்றின் அறிவும் நமக்கு எதையும் ஈட்டித்தாரா – இதயத்தில் முழுமையான
தூய்மையை வளர்த்துக்கொள்ள உதவாவிடில். எல்லா அறிதலின் முடிவும் தகைமையைக்
கட்டமைப்பதாகவே இருக்கவேண்டும்.” (யங்க் இந்தியா, 8-9-27)

8. பள்ளிகள் அரசாங்கத்தின் உதவியை மட்டுமே நம்பி இயங்குவதை காந்தியின் சுதந்திர


வேட்கை கொண்ட மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. அதிலும் குறிப்பாய், அரசாங்கத்தின்
வருவாய் மக்கள் குடிப்பதிலிருந்தே வருவது அவரது அறச்சிந்தனைக்கு எதிராக இருந்தது.

“குடியிலிருந்து வரும் வருவாய் மூலமாகக் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவது,


் தலைகுனிவைத் தரும் செயல்பாடு.” (யங்க் இந்தியா, 8-6-21)
இந்நாட்டிற்குப் ஆழ்நத
இந்தச் சிக்கலுக்குத் தீர்வாகத்தான் பள்ளிகளுக்கான தற்சார்பு முறை பற்றி முற்றிலும்
புதியதோர் பாதையில் அவரது சிந்தனை பயணிக்கத் தொடங்கியது.

“ஒவ்வொரு பள்ளியிலும் ராட்டையில் நூற்பது அறிமுகப்படுத்தப்பட்டால், கல்விக்கான நிதி


திரட்டுவது குறித்த நம் சிந்தனைகளில் ஒரு புரட்சிகரமான மாற்றம் ஏற்படும். பள்ளியை 6
மணி நேரம் நடத்தி, மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கமுடியும். […] வகுப்பறைக்
கல்விக்கு ஆறுமணி நேரத்தில் இரண்டு மணி நேரம் ஒதுக்கலாம். ஒவ்வொரு பள்ளியும்
தற்சார்பு அடைந்ததாக அதிக முனைப்பின்றி எளிதில் மாற்றப்படுவதைக் காணலாம்;
அனுபவமிக்க ஆசிரியர்களை நம் நாட்டின் பள்ளிகளில் அமர்த்தலாம்.” (யங்க் இந்தியா, 30-
3-21)

9. கடைசியாக மனம், உடல், ஆன்மா மூன்றையும் இணைக்கும் ஒருங்கிணைந்த கல்வி


முறையை அடைய விழைந்தார்.

“மனம் மற்றும் உடலின் வளர்ச்சி, ஒத்த ஆன்ம விழிப்போடு கூடி நிகழ்ந்தால் அன்றி, ஒரு
குறைபட்ட, ஒருபுறம் சார்புடைய செயல்பாடாகவே அமைந்துவிடும்.” (ஹரிஜன், 8-5-37)

10. உயர் கல்வி குறித்த காந்தியின் நிலைப்பாடும் மற்றவர்களிடமிருந்து பெரிதும் மாறுபட்டது.


ஒத்துழையாமை இயக்கத்தின்போது அரசாங்கக்கல்லூரிகளைப் புறக்கணித்து வெளியேறும்
மாணவர்கள் சேர்வதற்கு ஒரு மாற்றாகத் தேசியக் கல்லூரிகளைக் கருதினார். மத
நல்லிணக்கத்திற்கும், தேசியக் கொள்கைகளைப் பரப்புவதற்கும் ஏற்ற நிறுவனங்களாய்
அவற்றைப் பார்த்தார்.

பின்னாளில் அவர் உயர்கல்வியைப் பற்றி அரசாங்கம் அதிகம் கவலை கொள்ளத்


தேவையில்லை என்கிற முடிவுக்கு வந்தார். துறைசார்ந்த கல்லூரிகள் அமைய வேண்டும்;
அந்தந்தத் துறைகளில் இயங்கிய தனியார் நிறுவனங்களே, அந்தக் கல்லூரிகளை நடத்த
ஆகும் செலவினை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார். மருத்துவக் கல்லூரிகள்
மருத்துவமனைகளோடு இணைக்கப்படவேண்டும், புரவலர்களின் நிதியுதவி அக்கல்லூரிகளை
நடத்தப் போதுமானது என்று நினைத்தார். கல்லூரிகளுக்கும் தற்சார்பை வலியுறுத்தினார்.
உதாரணமாக:

“வேளாண்மைக் கல்லூரிகள் அப்பெயருக்குத் தகுதியானவையாக இருக்கவேண்டுமெனில்,


தற்சார்பினை அடையவேண்டும். வேளாண்மைப் பட்டதாரிகள் சிலரோடு எனக்கு
வருத்தமூட்டும் அனுபவங்கள் ஏற்ப்பட்டுள்ளன. அவர்களது அறிவு மேலோட்டமானது. நேரடி
அனுபவமற்றவர்களாக உள்ளனர். ஆனால், அவர்களது பயிற்சியை தற்சார்புடைய
பண்ணைகளில் அமைத்துக்கொண்டு நாட்டின் தேவைகளைப் பூர்த்திசெய்ய
முன்வருவார்களேயானால், பட்டப்படிப்பு முடித்தபிறகு, அவர்களைப் பணியில்
அமர்த்துபவர்களின் செலவில் பட்டறிவு பெறவேண்டிய அவசியம் நேராது.” (ஹரிஜன், 31-7-
37)

ஆதாரக் கல்வி

வலுவான தனிச்சரடுகளாக இருந்த காந்தியின் பல்வேறு சிந்தனைப் போக்குகளும், 1937 ல்


மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, ஒன்றிணைந்து ஒரு முழுமையான வடிவம்
பெறத் தொடங்கின. அப்போது ’ ஆதாரக்கல்வி’ என்றும், பின்னர் ‘நயி தாலீம’் என்றும்
பெயரிட்டு அழைக்கப்பட்ட காந்தியக் கல்விமுறை மிகப்பெரும் சாத்தியங்கள்
நிறைந்தவொன்றாக, ‘மௌனமான புரட்சிக்கு வழிகோலும் ஈட்டிமுனையாக’ உருவெடுத்தது.
காந்திய வழியில் இயங்கும் ஒரு சமூகத்தைக் கட்டமைக்கவல்ல ஆற்றல்மிக்கதாக
அமைந்தது. உழைப்புக்கும் அமைதிக்கும் அன்புக்கும் அறத்துக்கும் அறிவுக்கும் சமமான
அழுத்தம் கொடுத்தியங்கும் ஒரு புதிய உலகுக்கு இளம் உள்ளங்களை வழிநடத்திச்
செல்லக்கூடிய வாய்ப்பினைக் கொண்டதாக இருந்தது. வெறும் கல்விமுறையாக மட்டுமின்றி
குழந்தைகளுக்கும் சமூகத்துக்கமான ஒரு வாழ்க்கை முறையாகத் தோன்றியது.

1937 அக்டோபரில் வர்தாவில் நடைபெற்ற தேசியக் கல்வி மாநாட்டில் அறிமுக உரை ஆற்றிய
காந்தி, அவரது எண்ணப்போக்கையும், புதிய கல்விமுறைக்கான தேவையையும்
முன்வைத்தார். அதே ஆண்டில் அதற்கு முன்பும் பின்பும் அவர் எழுதிய கட்டுரைகள்,
கடிதங்கள் மற்றும் அவரது உரையாடல்கள் வாயிலாக ஒரு புதியக் கல்விக் கொள்கை
தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. ஜம்னாலால் பஜாஜ், அரியநாயகம், ஆஷாதேவி
அரியநாயகம், வினோபா பாவே, ஆச்சார்ய கிருப்பளானி, காகா காலேல்கர் என்று பலரும்
காந்தியின் புதிய பார்வையை ஆதரித்தனர்; மேலும் மெருகேற்றினர். ஜாக்கீர் ஹூசைன்
தலைமையிலான ஒரு குழு, மாநாட்டின் முடிவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. மேலும்
விரிவான அறிக்கைகள், பாடத்திட்டங்கள் அடுத்த சில மாதங்களில் வரையப்பட்டன.
காங்கிரஸ் கட்சி இதையே தேசியக் கல்விக் கொள்கையாக ஏற்றுக்கொண்டது.

வர்தா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆதாரக் கல்விக்கு எளிதான அறிமுகம்


தருகின்றன:

இலவசமான, கட்டாயக்கல்வி தேசம் முழுவதும் ஏழாண்டுகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

பயிற்றுமொழி தாய்மொழியாகவே இருக்கவேண்டும்.

இந்த கல்விக்காலம் முழுவதும் கல்விமுறை உடலுழைப்பு சார்ந்த ஓர் உபயோகமான தொழிலை


மையமாக்கியே அமையவேண்டும். குழந்தையின் வாழ்க்கைச்சூழலுக்கு ஏற்பத்
தேர்நதெ
் டுக்கப்பட்ட கைத்தொழில் மூலமாகவே, முடிந்தவரை மற்ற திறன்களுக்கான
பயிற்சிகளும் ஒருங்கிணைப்படவேண்டும்.
இந்தக் கல்விமுறை மூலமாகப் படிப்படியாக ஆசிரியர்களின் ஊதியம் தற்சார்பான முறையில்
வழங்கப்படும்.

காந்தியக் கல்விமுறை உடனடியாகப் பல இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால்,


பல்வேறு காரணங்களால் (முக்கியமாகக் காங்கிரஸ் அரசுகள் கலைக்கப்பட்டதால்), முதிர்ச்சி
அடையும் முன்பே கைவிடப்பட்டது. சுதந்திர இந்தியா காந்தியக் கல்விமுறைக்கு முற்றிலும்
எதிர்த்திசையில் பயணித்தது. இன்று வெகுசில இடங்களைத் தவிர (அங்கும் முழுமையாக
அல்ல) காந்திய முறை எங்கும் நடைமுறையில் இல்லை. ஆனால், அடிப்படையில் இன்றைக்கும்
என்றைக்குமான ஒரு முறையாகதான் நயி தாலீம் தென்படுகிறது.

இனி, காந்திய ஆதாரக் கல்விக்கொள்கையின் சில முக்கியக் கூறுகளைச் சற்றே விரிவாகக்


காணலாம்:

1. எழுத்தறிவு என்பது தன்னளவில் கல்வியின் முடிவாகிவிட முடியாது. கல்வியின் ஓர்


அங்கமாக மட்டுமே இருக்கவேண்டும்.

“எழுத்தறிவுக்கு நான் எதிரானவன் என்று குற்றம் சாட்டுகிறார்கள் . இல்லவே இல்லை! மாறாக,


அது எப்படிப் புகட்டப்பட வேண்டும் என்ற வழியைத்தான் கண்பிக்க விரும்புகிறேன்.”

“நம் குழந்தைகளை நம் பண்பாடு மற்றும் நம் நாட்டின் அசலான மேதைமை ஆகியவற்றின்
உண்மையான பிரதிநிதிகளாய் ஆக்கவேண்டும்.” (வர்தா உரை, 22-10-37)

2. தொழில் சார்ந்த கல்வி தரவேண்டும். தொழிற்கல்வி என்று தனியாக இல்லாமல்,


கைத்தொழில் மூலமாகப் பிற பாடங்கள் அறிவியற்பூர்வமாக கற்பிக்கப்பட வேண்டும்.

“இதுவரை நான் சொல்லிவந்ததெல்லாம் அறிவுப் பயிற்சியோடு சேர்த்து, தொழிற்பயிற்சியும்


அளிக்க வேண்டும் என்ற அளவில்தான் என்பதை நான் ஒப்புக்கொண்டாக வேண்டும்.
ஆனால், இப்போது நான் சொல்வது – உடலுழைப்பு சார்ந்த தொழில்தான் அறிவாற்றலைத்
தூண்டிவிடும் முக்கிய வழிமுறையாக வேண்டும்.”

“ஏதாவது கைத்தொழில் மூலமாகத்தான் கல்வி முழுவதுமே வழங்கப்படவேண்டும்”


அவ்வாறு செய்யும்போது, “தொழிற்கல்வி என்பது பல்வேறு அறிவுத்தளங்களிலும்
குழந்தைகளின் மனங்களை விரிவடையச் செய்யக்கூடிய கருவியாகிறது.”

காந்தியின் சிந்தனைப் போக்கில் நிகழ்ந்த மிகமுக்கியமான மாற்றம் இதுதான். இன்று


வரையில் பலரும், வகுப்பறையில் கல்வியும் வெளியில் ஏதேனும் தொழிற்கல்வியும் அளித்தால்,
அதுவே காந்தியக் கல்வி என்று நம்பி வருகிறார்கள். இது காந்தியின் ஆரம்பகாலச்
சிந்தனையேயன்றி, அவரது ஆதாரக் கல்விக் கொள்கைக்கு சற்றே முரணானது. நூல்
நூற்றல், தோட்டவேலை, சுகாதாரப்பணிகள் மூலமாக மொழியறிவும், கணிதமும், அறிவியலும்,
புவியியலும், வரலாறும் கற்பிக்க முடியும் என்பது மிகப்பெரும் மாற்றங்களை
விளைவிக்கக்கூடிய ஒரு புத்தம்புதிய கல்விச்சிந்தனை.

செயல்கல்வியை மாண்டிஸோரி போன்ற பல கல்வியாளர்களும் வலியுறுத்திவந்தனர் .


உடலுக்கும், புலன்களுக்கும், உள்ளத்துக்கும் உள்ள தொடர்பு ஆழமானது என்பது அவர்களால்
நிறுவப்பட்டது. ஆனால், கல்விக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட செயற்கையான
கருவிகளின் மூலமாகச் செயல்கல்வி அளிப்பதைவிட, காந்தி கூறுவது போல், ஓர் இயல்பான
கைத்தொழில் மூலமாக அளிக்கப்படும் கல்வி பன்மடங்கு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும்.
மாணவர்களுக்குத் தங்கள் உற்பத்தியில் பெரும் தன்னிறைவு கிட்டும். உடலுழைப்பின்போது
கிளறப்படும் ஆர்வத்தினைப் பயன்படுத்தி அறிவியற்பூர்வமாகக் கற்பிக்கப்படும் செய்திகள்
மனதில் விரைவாகவும் ஆழமாகவும் பதியும்.

3. முழுமையான கல்வி கிராமங்களிலேயே வழங்கப்படவேண்டும். பள்ளிக்கல்விக்காக


கிராமங்களிலிருந்து நகரங்களுக்குச் செல்வது பயனற்றது. கிராம மக்களின் தொழிலிருந்தும்
வாழ்க்கை முறையிலிருந்தும் அவர்களை அந்நியப்படுத்திவிடும்.

ஆதாரக் கல்வி பற்றிப் பேசும்போது வினோபா, “சேவாகிராமில் கற்பிப்பதுபோலவே பௌனாரில்


(சில மைல் தொலைவில்தான் இருந்தாலும்) கற்பிக்கமுடியாது. ஏனெனில், பௌனாரில் நதி
இருக்கிறது; சேவாகிராமில் இல்லை,” என்றார்.

4. தாய்மொழி வழியாகவே கற்பிக்க வேண்டும் என்பதை காந்தி தொடர்ந்து வலியுறுத்தினார்.


ஆச்சார்ய கிருபளானி ஒருபடி மேலே சென்று நுட்பமான ஒன்றைப் பதிவுசெய்தார். ஆதாரக்
கல்வியில், “உண்மையான பயிற்றுமொழி வேலைதான்; மொழியே அல்ல; பேசுமொழி என்பது
தகவல் பரிமாற உதவும் ஊடகமேயன்றி பயற்றுமொழியல்ல,” என்றார்.

5. ஆதாரக் கல்வியின் புரட்சிகரமான இன்னொரு சிந்தனை பள்ளிகள் தற்சார்பினையடைவது.


காங்கிரஸ் மாகாணங்களில் ஆட்சி வந்தபிறகும், இலவசக் கல்வி வழங்க வேண்டுமாயின்,
குடியின் வாயிலாக வரும் வருமானத்தில்தான் பள்ளிகள் நடத்தப்பட வேண்டும் என்ற நிலை,
காந்தியை மிகவும் ஆற்றாமை கொள்ளச்செய்தது. தொழில் சார்ந்த கல்வி வழங்கும்போது,
அந்தத் தொழிலில் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலமாகவே தற்சார்பு அடைந்துவிட முடியும்
சாத்தியத்தை உணர்ந்து வலியுறுத்தினார்.

“முழுமையாக நோக்கினால், இத்தகைய கல்வி தற்சார்பு உடையதாக இருக்க முடியும், இருக்க


வேண்டும். தற்சார்புதான் அதன் நடைமுறைச் சாத்தியத்துக்கு உரைகல்.”

அப்படியொரு தற்சார்பு நிலையை அடையச்செய்வதில்தான் அரசாங்கத்தின் பங்கிருப்பதைக்


கண்டார். பள்ளிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கான சந்தையை உருவாக்கித்தரும்
பொறுப்பு அரசாங்கத்துக்கு இருப்பதாக நம்பினார்.

6. பள்ளி என்பது தனித்தீவாக இயங்காமல், மாணவர்களும் ஆசிரியர்களும் கிராம வாழ்வோடு


இயைந்து சேவை செய்யவேண்டும். அப்போது மாணவர் கல்வி என்பது சமூகம்
முழுமைக்குமான கல்வியாக அமைந்துவிடும். காந்தியைப் பொருத்தவரை சமூகத்தின்
ஆரோக்கியத்தை மருத்துவமனைகளை நிறுவுவதன் மூலம் மட்டும் அடைந்துவிடமுடியாது;
அதேபோல, சமூகத்தின் கல்வி – சுயராஜ்ய உணர்வை ஊட்டி வளர்த்துப்பேணக்கூடிய கல்வி –
வெறும் பள்ளிகளை நிறுவுவதன் மூலம் மட்டும் அடைந்துவிடமுடியாது.

“நமது செயல்பாடு 7 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நயி தாலீம் முறையில் கல்வி


அளிப்பதோடு சுருங்கிவிடுவதில்லை; அது பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கை முழுவதையும்
தீணடு் வதாக இருக்கவேண்டும். [….] கிராமத்தினர்க்கு நாம் ஆசிரியர்களாக வேண்டும்;
உண்மையில் அதன் பொருள், கிராமத்தார்க்கு நாம் சேவகர்களாக வேண்டும் என்பதே.
அதற்கான பரிசு அகத்திலிருந்து வரவேண்டும்; புறத்தேயிருந்தல்ல. உண்மையை நோக்கிய
நமது தேடலில் நமக்கு மனிதத்துணை கிடைக்கிறதா இல்லையா என்பது ஒரு பொருட்டேயல்ல.
நயி தாலீம் புறவயமான பொருளாதார உதவியைச் சார்ந்திருப்பதுமல்ல. விமர்சகர்கள் என்ன
சொன்னாலும், அது அதன் வழியில் தொடரும். உண்மையான கல்வி தற்சார்புடையதாக
இருந்தாகவேண்டும். இதில் வெட்கப்பட எதுவும் இல்லை. நாம் சொல்வதைச் செய்துகாட்டி,
மனதின் உண்மையான வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் ஒரே முறை இதுவென
நிரூபித்தோமேயானால், இது ஒரு புதுமையான சிந்தனையாக ஏற்கப்படும். இன்று நயி தாலீமை
நிந்தனை செய்பவர்கள் எல்லாரும் முடிவில் அதனைப் போற்றுபவர்களாக மாறுவார்கள்; நயி
தாலீம் பரவலான ஏற்பினைக் கண்டடையும்.” (சேவாகிராமில் காந்தியின் உரை, 11-1-45)

நயி தாலீம் – இதுவரையும் இனியும்

காந்தியின் காலத்தில் சில நயி தாலீம் பள்ளிகள் தொடங்கப்பட்டுச் சிறப்பாக இயங்கின.


சேவாகிராமில் அவரது குடிலுக்கு அருகில் அரியநாயகம், ஆஷாதேவி அரியநாயகம்
தம்பதியினர் நடத்திய பள்ளி இருந்தது. ஆரம்பத்தில் தக்ளியின் மூலமாக நூல் நூற்றல்,
பருத்தி விளைவித்தல், கொட்டைநீக்குதல், நூலுக்கு சாயம் பூசுதல், ஆடைகளை
வடிவமைத்தல் போன்ற வேலைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மாணவர்களின் முன்னேற்றம்
கவனமாக கண்காணிக்கப்பட்டது. முடிவுகள் மிகுந்த நம்பிக்கையைத் தந்தன. வேறு பல
இடங்கிளிலும் இதே போன்ற முயற்சிகள் நடந்தன. ஆனால், முன்பு கூறியதுபோல், இம்முயற்சி
பரவலாவது பல்வேறு காரணங்களால் தடைபட்டது; காந்தியின் கவனமும் சிறைவாசம்,
பிரிவினை, மதக்கலவரங்கள் என்று வேறுவிஷயங்களால் சிதறவேண்டிய சூழல் உருவானது.
கைத்தொழிலும், பயிற்றுவிக்கும் திறனும், அவற்றை ஒருங்கிணைக்கும் ஆற்றலும் கொண்ட
ஆசிரியர்கள் அமைவதும் அரிதாகவேயிருந்தது.

சுதந்திர இந்தியா காந்தியின் தற்சார்பினை அடிப்படையாகக் கொண்ட கிராம மையக்


கொள்கைகளில் அதிக நாட்டம் செலுத்தவில்லை. அதே போல, அவரது கல்விக்
கொள்கைகளும் கைவிடப்பட்டன. ஆங்கில ஆட்சியில் நீடித்த அதே முறைகள்
பின்பற்றப்பட்டன. அரசாங்க குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காக வளர்ந்து வந்த ஒரு
எந்திரத்தனமான கல்விமுறையின் மூலமாக அடிமைநாட்டு குமாஸ்தா மனநிலை கொண்ட
மனிதர்களையும் சமூகத்தையுமே உருவாக்க முடிந்தது. வெகுசில இடங்களில் மட்டும் மாற்றுக்
கல்விக்கான முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அவை எவையும் மைய நீரோட்டத்தின் மீது
பெரிய அளவில் தாக்கம் செலுத்தவில்லை.

காந்திக்குப்பின் வந்த காந்தியர்களின் மிகப்பெரிய தோல்வி, ஆதாரக் கல்வியை ஒரு


வலுவான மாற்றுத்தரப்பாக வளர்த்தெடுக்காததுதான். நயி தாலீம் முறையைப்
பின்பற்றுவதாகக் கூறும் பல நிறுவனங்களிலும், ஒருவகை தொழிற்பயிற்சி
அளிக்கப்படுகிறதேயன்றி, தொழிலையும் வகுப்பறையையும் ஒருங்கிணைக்கும் காந்தியமுறை
பின்பற்றப்படுவதில்லை. காந்திய முறை என்ற அடையாளத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டு,
குலக்கல்விமுறை என்று பிறரால் முத்திரை குத்தப்பட்டுக் கைவிடப்பட்ட, ராஜாஜியின்
கல்வித்திட்டத்திலும் இதே குறைபாட்டினைக் காணலாம். காந்திய முறையை ஓரளவு
முழுமையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் கடைபிடிக்கும் நிறுவனங்கள் என்று வெகுசில
விதிவிலக்குகளே உள்ளன. அரசாங்கக் கொள்கைகள் சாதகமாக இல்லாத நிலையில், இந்தப்
பள்ளிகள் எவற்றுக்குமே தற்சார்பு அடைவதற்கான சாத்தியக்கூறுகள் குறுகிப்போய்விட்டன.

ஆனால் இன்றைக்கும், நயி தாலீம் முறை அளவிற்குப் பெரும் சமூகமாற்றத்தை


விளைவிக்கக்கூடிய மாற்று முறைகள் இந்தியாவில் உருவெடுக்கவில்லை. அப்படி நடக்கும் பல
சோதனைகளும் நகரத்து மேல்மட்டக் குழந்தைகளுக்கானவையாகவே அமைந்துள்ளன.
பல்வேறு தரப்பட்ட கல்வி நிறுவனங்கள் சமூக ஏற்றதாழ்வுகளை அகலப்படுத்திக்
கொண்டிருக்கும் சூழல் உருவாகியுள்ளது கண்கூடு. உடலுழைப்பு சார்ந்த தொழில்கள் மீதும்
செயல்கள் மீதும் ஏற்பட்டிருக்கும் சமூக ஒவ்வாமை எதிர்காலத்தில் கடுமையான
எதிர்விளைவுகளை உருவாக்கும். வளரும் வயதில் குழந்தைகள் மனனம் செய்யும்
எந்திரங்களாகிக் கொண்டிருக்கின்றனர். அசல் சிந்தனைக்கான வெளி அவர்களிடமிருந்து
அகற்றுப்பட்டுவிட்டது. பொருளாதார வெற்றியே பிரதானமாகிவிட்டதில், சமூக அக்கறையும்
சேவை மனநிலையும் சுயநலத்திற்கு வழிவிட்டுவிட்டன. இயந்திர மயமாக்கலும், நகர
மயமாக்கலும் எற்படுத்தியிருக்கும் சூழியல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன்,
இயற்கையிலிருந்து முற்றிலும் விலகிநிற்கும் இன்றைய பள்ளிக்குழந்தைகளுக்கு இல்லை.

இந்நிலையில், முன்னெப்போதையும் விட, நயி தாலீம் முறை கடைபிடிக்கப்பட வேண்டிய தேவை


அதிகரித்திருக்கிறது. காந்தியச் சிந்தனையின் அடிப்படைகள் இன்றைய தேவைகளுக்கும்
சூழலுக்கும் பொருத்தமாகவே உள்ளன. அவர் சிபாரிசு செய்த கைத்தொழில்கள் மாற்றம்
பெறலாம். கணிப்பொறிகளும், இணையமும், தகவல் தொழில்நுட்பமும் ஏற்படுத்தியிருக்கும்
புதிய சாத்தியக்கூறுகளும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். இவற்றின் மூலமாக இதுவரை
சாத்தியமற்றுத் தெரிந்த தற்சார்பும்கூட சாத்தியப்படலாம். கடந்த நூற்றாண்டில் உலகெங்கும்
தோன்றிய பல்வேறு கல்வி முறைகளின் சாதகமான அம்சங்களை உள்வாங்கிக்கொள்ளவும்
வேண்டும். அடர்ந்த மக்கள்தொகை கொண்ட பெருநகரங்களுக்குப் பொருத்தமாக, தன்
சாராம்சத்தை இழந்துவிடாமற் சமரசங்கள் சிலவற்றையும் தற்காலிகமாகச்
செய்யவேண்டியிருக்கலாம்.

கடந்த இரு நூற்றாண்டுகளாய் உலகினை வழிநடத்தியுள்ள அரசியல் சித்தாந்தங்களுக்கு


மாற்றாக, அவை விளைவித்திருக்கும் பொருளாதார, சமூக, சூழியல், மதச் சிக்கல்களுக்குத்
தீர்வாக இன்று பல துறைகளிலும் காந்தியப் பார்வை முன்வைக்கப்படுகிறது. காந்தி கண்ட
சுயராஜ்ஜியமும், கிராம சுயாட்சியும் அமைய, காந்தியின் சிந்தனையில் மலர்ந்த பள்ளிகளே
அடித்தளமாக முடியும். அவரது சிந்தனைப் புள்ளிகள் அனைத்தையும் இணைத்து
முழுமையாக்கக்கூடிய ஆற்றல் அவரது கல்விக் கொள்கைக்கு உண்டு.

பிற சமூக காரணங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும் கூட, காந்தியக் கல்வி


முறையைப் பின்பற்றுவதற்கு மிகச் சக்திவாய்ந்த ஒரு காரணமுண்டு. ஒவ்வொரு
தனிமனிதனுக்கும் மிகத் தரமான, ஆழமான, முழுமையான கல்வியை எளிய முறையில்
வழங்க இதுவே சிறந்த வழி.

காந்“தீய”ச் சிந்தனைகள்.

இன்று அக்டோபர் 2 ஆம் நாள். வழக்கம் போல் இன்றைய தினமணி நாளிதழில்


காந்தியின் பெருமை பேசும் ஒரு கட்டுரை வந்தது. ஒருவரின் சாவின் போது அவரது
குறைகளைக் கூறாமல் அவரிடம் பாராட்டத்தக்கவை எவையாவது இருந்தால் அவற்றை
மட்டும்தான் கூற வேண்டுமென்று காலஞ்சென்ற நண்பர் பொறியாளர் அய்யூர் இ.அப்பாசு
மந்திரி அவர்கள் கூறினார். அத்துடன் ஓர் எடுத்துக்காட்டையும் எடுத்துரைத்தார். பெரும்
போக்கிரி ஒருவன் இறந்த போது வந்த ஒருவர் “இவன் சிறுவனாக இருக்கும் போது எவ்வளவு
சிறப்பாகக் கோலியாடுவான் தெரியுமா?” என்று புகழ்ந்தாராம். அது போல் காந்தியின் மிகப்
பெரும் பங்களிப்பு என்று நான் பாராட்ட விரும்புவது அவரது மதுவிலக்குக் கோட்பாடாகும்.
அதை விட்டால் மேலேயுள்ள எடுத்துக்காட்டு வழியில் கூறுவதாயின் அவரது எல்லையற்ற
நடிப்புத் திறன். அவருக்கு முன்னும் பின்னும் இதில் அவரை விஞ்சிய எவரும் என்
கவனத்துக்கு வரவில்லை.

காந்தியைப் பொறுத்தவரை நண்பர் அய்யூர் இ.அப்பாசு மந்திரி அவர்களின்


அறிவுரையை முழுமையாகப் புறக்கணிக்க முடியாமையால் மேலே அவரது இரு சிறப்புகளை
எடுத்து வைத்துவிட்டேன். ஆனால் எடுத்துக்காட்டில் வரும் போக்கிரி போல் மோகன்தாசு
கரம்சந்து காந்தி யாரோ ஒருவரல்ல, உலகின் மாபெரும் வரலாற்றுப் பெருமகனாகப் பேசப்பட்டுப்
போற்றப்படுபவர். இந்திய மக்களைப் பொறுத்தவரை, அவர் பெற்றுத் தந்ததாகக் கூறப்படும்
“விடுதலை”யால் இன்று அவர்கள் படும் தீரா இடும்பைகளுக்குக் காரணமானவர். குறிப்பாக,
தமிழகத்தைப் பொறுத்தவரை வ.உ.சிதம்பரனார் மேற்கொண்ட பொருளியல் விடுதலைப்
போராட்டத்தின் குறியீடான கப்பல் குழுமத்தால் ஆங்கில் ஆட்சியினருடன் இணைந்து கிலி
பிடித்து இந்திய விடுதலை இயக்கத்தினுள் கால்வைத்தவர். அதன் மூலம் அன்று
ஐரோப்பியருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த குடியேற்ற நாட்டு மக்களுக்கு ஒரு போலி
“விடுதலை”யை வழங்கி அந் நாடுகளில் காலத்துக்குக் காலம் உருவாகிக் கொண்டிருக்கும்
கோடாரிக் காம்புகளை ஆட்சியாளர்களாக்கித் தம் கொள்ளைகளை நாளுக்குநாள்
வளர்த்துக்கொள்ள வல்லரசு நாடுகளுக்கு வழிகாட்டி அவர் வாழ்ந்த காலத்திலேயே மாபெரும்
“மகாத்துமா”வாக அவர்களால் அறிவிக்கப்பபட்டவர். அதனால் அவரது உண்மையான
முகத்தின் சில கூறுகளை தமிழக மக்கள் முன் எடுத்துவைப்பது எனது கடமை என்று
கருதுகிறேன்.

காந்தி பிறப்பால் அம்மணர்(சமணர்). படிக்கும் காலத்தில் இறைமறுப்பாளர், பின்னர்


“இந்து” இலக்கியங்களைப் பயின்று “ இந்து”வானவர் என்று வில் டூராண்டு (Will Durant)
என்ற, அமெரிக்கரான வரலாற்று அறிஞர் Story of Civilization(நாகரிகத்தின் கதை) என்ற
14 மடலங்களைக் கொண்ட தொகுதியின் முதல் மடலமான Our Oriental
Heritage(கிழக்கிலிருந்து நாம், அதாவது மேலையர் பெற்ற சொத்துகள்) என்பதில்
கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் பாரிட்டர் பட்டம் பெற்று இந்தியா வந்த காந்தி தென் ஆப்பிரிக்காவில்


தொழில் நடத்திய ஓர் இந்திய முகம்மதியக் குழுமத்தின் வழக்குரைஞராக அங்கு சென்றார் .
அங்கு தொடர்வண்டியில் போகும் போது நிறமுடையவர்(coloured), அதாவது
வெள்ளாயரல்லாதவர் என்பதால் அவர்களுக்கு மறுக்கப்பட்ட பெட்டியில் சென்றார் என்பதற்காக
வழியில் இறக்கிவிடப்பட்டு அதற்கு எதிராகக் குரலெழுப்பி ஆங்கில ஆட்சியாளரின்
கவனத்தை ஈர்த்தார் என்பது நமக்குத் தெரியும்.

பின்னர் ஒரு கட்டத்தில் இந்தியர் தென்னமெரிக்காவில் குடியுரிமை பெற


வேண்டுமாயின் கைவிரல்களின் வரை(ரேகை) பதிய வேண்டும் என்ற சட்டத்தை அங்கிருந்த
வெள்ளையராட்சி கொண்டுவந்தது, இன்றைய ஆதார் அட்டையைப் போல் என்பது
குறிப்பிடத்தக்கது. அதை எதிர்ப்பதற்காக அங்கு வாழ்ந்த இந்தியர்களை ஒருங்கிணைத்து
எவரும் இந்தத் திட்டத்துக்கு உடன்படக்கூடாது என்று உறுதிமொழி(சத்தியம்) ஏற்க வைத்தார்.
இதை அடுத்து ஆங்கிலர் அரசு அவரை உரையாடலுக்கு அழைத்தது. அதனைத் தொடர்ந்து
‘விரும்புவோர் விரல் நாட்டி குடியுரிமை பெற்றுக்கொள்ளலாம் என்று குட்டிக்கரணம் அடித்தார்.
நாமறிய “சத்தியத்”துக்கு அவர் வைத்த முதல் “சோதனை” இதுதான். இதனை ஒரு
முகம்மதியர் கடுமையாக எதிர்த்தார். காந்தியுடன் இருந்த ரசுட்டம்சீ என்ற இந்தியப் பார்சி
காந்திக்குத் துணையாக நின்றார். நிகழ்ச்சி கைகலப்பில் முடிந்தது. அன்றிலிருந்து அங்கேயே
காந்தி, பார்சி, ஆங்கில ஆட்சியாளர்கள் ஒரு புறமும் முகம்மதியர்கள் எதிர்ப்புறமும் அணி
திரண்டு செயற்பட்டு வந்தனர். இந்தப் பின்னணியில்தான் காந்தியை முதலில் ஒரு முறை
இந்தியா அழைத்து வந்து பேரவை(காங்கிரசு)க் கட்சியை நோட்டமிட வைத்து திரும்ப
அழைத்துச் சென்றது ஆங்கில அரசு. பின்னர் 1915 ஆம் ஆண்டில் பெட்டி படுக்கைகளுடன்
இந்தியா வந்திறங்கினார் காந்தி. அவருக்கு Kaiser – I – Hind என்ற விருதையும்
வழங்கியது ஆங்கில அரசு. இந்தியாவின் பேரரசர் என்று இங்கிலாந்து அரசருக்கு 1900
முதல் 1947 வரை இருந்த பட்டமாகும் இது.

இவர் ஆங்கில அரசுக்கு அறிவுரை கூறி பேரவைக் கட்சியிலிருந்த


முனைப்பியர்களை(தீவிரர்களை) களத்திலிருந்து அகற்றினார். திலகர் பர்மாவுக்கு, இன்றைய
மியான்மருக்கு நாடுகடத்தப்பட்டார், அரவிந்தர் புதுச்சேரியில் அடைக்கலம் பெற்றார், பாரதியும்
அங்குதான் சென்றார். வ.வே.சு.ஐயர் குருகுலம் அமைத்துப் பதுங்கிக்கொண்டார். இந்
நிலையில் ஆங்கில அரசு இவரை அடிக்கடி உரையாடலுக்கு அழைத்து அவரது பெயரை
மக்களிடையில் பரப்பியது. இவ்வாறு அவர் 1921 இல் பேரவைக் கட்சியின் தலைவரானார்.

இவ் வேளையில் இன்னொரு வரலாற்றுச் செய்தியினுள் சென்று திரும்ப


வேண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் கீழை நாடுகளை வேட்டையாடிக்கொண்டிருந்த போது
காலந்தாழ்ந்து களத்தில் இறங்கிய அமெரிக்கா 1937 இல் சப்பானியத் துறைமுகம் ஒன்றில்
குண்டுவீசி சப்பானியர்களை உரையாடலுக்கு இழுத்து தங்களுக்கு மேலாளுமை தரும் ஓர்
உடன்படிக்கையை உருவாக்கிக் கொண்டனர். இதே போன்ற உத்தியை இந்தியாவைப் பொறுத்து
கடைப்பிடிக்க முடியவில்லை, ஏனென்றால் இந்தியா இங்கிலாந்தின் முழுக் கட்டுப்பாட்டில்
இருந்தது. எனவே வேறொரு உத்தியைக் கையாண்டது. இறையியல் கழகம்(பிரம்மஞான சபை
– Theosophical Society) என்ற ஓர் அமைப்பை என்ரி டீல் ஆல்காட் என்பவரும் பிளாவட்கி
என்ற அம்மையாரும் 1875 இல் அமெரிக்காவில் உருவாக்கினர். இந்து சமயத்தின் மறைகளும்
கோட்பாடுகளும் உலகிலேயே உயர்ந்தவை என்றும் அவற்றை ஆங்கில ஆட்சியாளர்கள்
குலைக்கிறார்கள் என்றும் அவர்கள் கூறினர். இக் கோட்பாட்டுடன் மும்பை வந்திறங்கிய
அவர்களை அங்கிருந்தோர் எவரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எனவே சென்னைக்கு
வந்தனர். இந்து சமய சீர்திருத்த இயக்கங்களால் கதி கலங்கிப் போயிருந்த தமிழகப்
் னர்.
பார்ப்பனர்களும் சாதி வெறியர்களும் அதில் மொய்தத

ஆங்கிலர் ஆட்சியில் இந்தியாவில் பணியாற்றிய ஆலன் அகடோவியன் இயூம்


என்பவர் இக் கழகத்தில் இணைந்தார். இங்கு ஆங்கில ஆட்சிக்கு எதிரான பரப்பல்
நடைபெறுவதைக் கண்டு பிளாவட்கி அம்மையார் ஓர் எத்தர் என்று குற்றம் சாட்டி வெளியேறி
ஆங்கில ஆட்சி அதிகாரிகளின் நலனுக்கென்ற பெயரில் 1885 இல் இந்தியத் தேசிய
பேரவை(காங்கிரசு) கட்சியைத் தொடங்கினார். அதோடு மட்டுமல்ல இறையியல் கழகத்தைக்
கைப்பற்ற இங்கிலாந்திலிருந்து அன்னி பெசன்று என்ற ஒரு பெண்மணியைக்
கொண்டுவந்தனர். இவரும் காந்தியைப் போல் பிறப்பில் கிறித்துவர், இளம் அகவையில்
இறைமறுப்பாளர், பின்னர் “இந்து” சமய இலக்கியங்களைக் கற்று “ இந்து” சமய
முனைப்பாளர் ஆனவர். அவர் பிளாவட்கி அம்மையாருக்குப் பின் இறையியல் கழகத்தின்
தலைவரும் ஆனார்.

இவர் பேரவைக் கட்சியில் இணைந்து இந்தியாவுக்குத் தன்னாட்சி வேண்டுமென்று


கிளர்ச்சிகள் செய்து சிறைக்கும் சென்று வந்தார். ஆக, இந்திய விடுதலைப் போர் ஆங்கிலர்
உருவாக்கிய ஓர் இந்தியர், ஓர் ஆங்கிலப் பெண்மணி ஆகியோரின் ஆடுகளமானது.

இந்தக் காலகட்டத்தில் 1928 இல் பிரிட்டீசு அரசு நிறுவிய சைமன் ஆணையத்தை


எதிர்த்து நடந்த ஆர்பப் ாட்டத்தில் கலந்துகொண்ட லாலா லசபதி ராயை சேம்சு ஏ. காட்டு எனும்
காவல்துறை அதிகாரி தாக்கியதால் அவர் நெஞ்சாங்குலை நோய் மிகுந்து இறந்தார்.
தாக்குதல் நிகழ்தத ் ிய காட்டு என்பவனைக் கொல்ல பகத் சிங் தலைமையில் வந்த
இளைஞர்கள் அடையாளம் தவறியதால் சாண்டர்சு என்பவனைக் கொன்றனர். இந்த வழக்கில்
பகத்சிங் உட்பட மூவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை
நிறைவேற்றினால் மக்கள் கிளர்ந்தெழுவார்களோ என்று ஆங்கில அரசு தயங்கிக்
கொண்டிருந்தது. இந் நிலையில், 1931 இல் பேரவைக் கட்சியின் மாநாடு சூரத்து நகரில் கூட
இருந்தது. அப்போது வைசிராய் எனப்படும் துணையரையருக்கு காந்தி ஒரு மடல் எழுதினார் .
பகத்சிங்கைத் தூக்கிலிடுவதாயிருந்தால் சூரத்து மாநாட்டுக்கு முன்னரே தூக்கிலிடும்படியும்
மாநாட்டின் போது அவர் உயிரோடிருந்தால் அங்கு மாபெரும் கலவரம் வெடிக்கும் என்றும் அதில்
குறிப்பிட்டிருந்தார். அதன்படி ஆங்கில அரசு தூக்குத் தண்டனையை நிறைவேற்றியது. சூரத்து
மாநாட்டில் மா நடிகர் காந்தி தன் கையாலேயே ஒரு கண்டனத் தீர்மானம் எழுதி தன்
வாயாலேயே படித்து நீலிக் கண்ணீர் வடித்தார். பகத்சிங் பற்றிய இந்தச் செய்திகளை
வீரபாண்டியன் என்பவர் தான் எழுதியுள்ள மாவீரன் பகத்சிங் எனும் நூலில் சான்றுகளுடன்
தந்துள்ளார்.

ஏதோ காந்தி தமிழகத்துக்கு வந்த போது இங்குள்ள மக்கள் வெற்றுடம்புடன்


நடமாடுவதைக் கண்டு கசந்து அவர்கள் முழு உடலையும் மூடுவது வரை தானும்
வெற்றுடம்புடன் இருக்கப்போவதாக ஒரு சூளுரைத்ததாகப் பெருமைப்படுவர். ஆனால் தமிழக
சராசரி மக்கள் வெற்றுடம்புடன் திரிவது ஏழ்மையாலல்ல, பண்ணையார்கள் பட்டு
நேரியலால்(அங்கவத்திரத்தால்) போர்த்திக்கொண்டு குடை நிழலில் நடை போட, எதிரில் வரும்
ஏழைத் தமிழன் தோளில் அல்லது தலையில் அணிந்திருக்கும் துண்டை எடுத்து கட்கத்தில்
இடுக்கி அல்லது இடுப்பில் சுற்றிக்கொள்வது அவருக்குத் தெரியாது போலும். தமிழனுக்குச்
சட்டையும் கால்சட்டையும் தெரியாது என்பது போன்ற ஒரு கருத்தோட்டம் நிலவுகிறது. படை
வீரர்களும் செய்தி கொண்டுசெல்லும் தூதுவர்களும் கஞ்சுகம் எனும் மேல் சட்டை
அணிந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது. நம்மூர் கருப்பசாமி, சுடலைமாடன் சாமி சிலைகள்
சல்லடம் எனும் கால் சட்டை அணிந்துள்ளன என்பதைப் போகிற போக்கில் கூறிக்கொள்கிறேன்.

தன் எளிமையை மக்களுக்கு நடித்துக்காட்ட தான் மூன்றாம் வகுப்பு தொடர்வண்டிப்


பெட்டியில்தான் செல்வேன் என்று மாகா எத்தர் அறிவிக்க, இவர் செல்லும் வண்டிகளிலெல்லாம்
மூன்றாம் வகுப்புப் பெட்டியில் அவருக்காக முதல் வகுப்புப் பெட்டியிலுள்ள வசதிகளையெல்லாம்
செய்து கொடுக்க ஆங்கிலர் அரசு பட்ட பாடுகளைச் சுட்டிக்காட்டி அவர் கட்சியைச் சேர்ந்த
கவியரசி சரோசினி நாயுடு கடுமையாக நஃகலடித்துள்ளார்(நஃகல் = சிரித்தல், கிண்டல்).

இனி இவரது “ கிராம இராச்சியத்”தைப் பார்ப்போம். எல்லோரும் வருங்கால


இந்தியாவில் மேற்கின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாமல் உள்ளூர் மரபுத் தொழிலையை
செய்ய வேண்டுமென்பது “ பெருமகனா”ரின் “கொள்ளை” ஆசை. அதற்காகவே அவர் ஒரு
கைராட்டையை வடிவமைத்தார். நாட்டுப்பற்றுள்ள அனைவரும் கைராட்டையில் நூல் நூற்று
கைத்தறியில் நெய்து கதராடை எனும் கதிராடையைத்தான் உடுத்த வேண்டும் என்று
அறிவுறுத்தினார். இதற்கான வேள்வி(யாகம்) எங்கே நடந்தது என்று கேட்கிறீர்களா? மார்வாரி
பனியாவும் மாபெரும் நூற்பாலைகளின் உரிமையாளருமான பிர்லாவின், பிர்லா மந்திர் எனும்
வளமனையில், மந்திர் என்றால் கோயில் என்றொரு பொருளிருக்கிறது. காந்தி
அமர்ந்ததால்தான் அதற்கு அந்த அடைமொழியா அல்லது அதற்கு அப் பெயர் ஏற்கனவே
இருந்ததா என்று தெரியவில்லை. ஒரு வேளை பிர்லா, தான் இனி ஆலையை மூடிவிட்டு அதை
ராட்டை சுற்றும் கூடமாக மாற்றப் போவதாக வாக்குறுதி ஏதாவது கொடுத்திருந்தாரா? அப்படி
எதுவுமே இல்லை. அப்படி இருக்க இந்த பச்சைப் பசப்பை, ஏமாற்றை, எத்துவாளித்தனத்தை,
அதாவது பனியா, பார்சிகள் ஆலைகளை அமைத்து கொள்ளை அடிக்க வேண்டும், பிற
அனைத்து ஏழை இந்தியனும் கைராட்டை சுற்றியும் வரட்டி தட்டியும் என்றும் சேற்றில் உழல
வேண்டும். இதுதானே காந்தியின் கிராம ராச்சியமும் இராம ராச்சியமும்? ஏன் எவரும்
இன்றுவரை இதைக் கேள்விக்கு உட்படுத்தவில்லை? ஆனால் பிர்லா வளமனையில் காந்தியின்
“நூற்பு வேள்வி” பற்றுப் போற்றாத நாவில்லை. அந்த ஆளை நம்பி வாழ்க்கையைப்
பாழாக்கிக்கொண்ட தமிழகத்தின் மாபெரும் பேதை குமரப்பாவைப் பெற்றெடுத்ததற்காக
தமிழகம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

1947 இல் சென்னை மாகாணத்தில் பிரகாசம் என்பவர் தலைமையில் பேரவைக்


கட்சி ஆட்சியமைத்தது. அப்போது பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி மாகாணத்திலுள்ள
நூற்பாலைகள் அனைத்திலும் கதிர்களின் எண்ணிக்கையைக் கூட்ட தடை விதிக்கப்பட்டது.
மாறாக மக்களுக்குக் கைராட்டைகள் வழங்க பெருந்தொகை ஒதுக்கப்பட்டது. கதிர்கள்
என்பவை நூல் நூற்க நூற்பாலைகளில் பயன்படுத்தும் நூற்பு உறுப்பு. அவற்றின்
எண்ணிக்கைதான் ஒரு நூற்பாலையின் நூற்புத்திறனின் குறியீடாகும்.

அதே வேளையில் பம்பாய்(இன்றைய மராட்டியம், குசராத் முதலிய மாநிலங்கள்


சேர்ந்தது) மாகாணத்தில் சவளி(மடித்தால் தாளைப் போல் தடம் விழாமல் சவள்வதால் சவளி
எனப்பட்டது)த் துறையை மேம்படுத்துவதற்காக அயல்நாடுகளிலிருந்து புதிய
தொழில்நுட்பங்களைப் புகுத்துவதற்காக 100 கோடி உரூவாக்கள் ஒதுக்கப்பட்டன. இன்றைய
மதிப்பில் இலக்கம் கோடிக்கு ஈடாகுமா? அது மட்டுமல்ல சவளித் தொழிலைப் பொறுத்த வரை
இந்தியாவை நான்கு மண்டலங்களாகப் பிரித்து சென்னை மாகாணத்தை பம்பாய்
மாகாணத்தின் கீழ் கொண்டுவந்தனர். சென்னை மாகாணம் விளங்குமா சொல்லுங்கள்.
இந்தச் செய்திகளை அண்ணாத்துரை அந்தக் கால கட்டத்தில் எழுதிய பணத்தோட்டம் என்ற
நூலில் விரிவாகக் காணலாம்.

இந்தியாவில் சென்னை மாகாணம் பனியா – பார்சி மூலதனத்தால்


முழுகடிக்கப்படுகிறது, உள்ளூர் மக்களின் முனைவுகள் முளையிலேயே கிள்ளப்படுகின்றன
என்ற அரசியலைக் கையிலெடுத்து ஆட்சிக்கு வந்த நயன்மைக் கட்சி எனப்படும்
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்தில் , பெரும்பாலும்
பார்ப்பனரல்லாத தமிழக மக்களின் உடைமைகளான சவளி ஆலைகளும் பிறவும்
உருவாக்கப்பட்டன என்பதும் இன்று திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான் அவற்றில் பல
பனியாக்களால் இந்திய, தமிழக அரசுகளின் முழுமையான ஒத்துழைப்புடன் பிடுங்கி
அழிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் கி.பி.2 ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு கொந்தளிப்பான நிலை


உருவானது. குமரிக்கண்டத்திலிருந்து கி.மு.1700 வாக்கில் நிகழ்ந்ததும் கழகங்களின்
வரலாற்றில் இரண்டாம் கடற்கொளாகக் கூறப்படுவதுமான நிகழ்வின் பின் தமிழகத்தினுள்
நுழைந்த வந்தேறிகளான சேர, சோழ, பாண்டியர்கள் கடைக் கழக(சங்க) முடிவில்
ஒன்றிணைந்து மூலக்குடித் தலைவர்களான குறுநில மன்னர்களைக் களத்திலிருந்து
அகற்றினர். அதன் விளைகாக தமிழகத்தின் வட எல்லைப் பாதுகாப்பு வலுவிழந்தது. குறுநில
மன்னர்களின் இடத்தை வாணிகர்கள், குறிப்பாக கடல் வாணிகர்கள் குமுகத் தரத்தில்
கைப்பற்றினர் என்பதற்கு சிலப்பதிகாரம் தரும் வருண பூதங்களின் விளக்கம் சான்றாகிறது.
இந்தக் காலகட்டத்தில் மகதத்தில் ஆட்சியை மகனிடம் ஒப்படைத்துவிட்டு தெற்கு நோக்கி
நடந்த சந்திரகுப்த மோரியனுடன் வந்த 3500 அம்மண ஒற்றர்களுடன் கலிங்கத்துக்
காரவேலனும் விடுத்த அம்மண ஒற்றர்களும் தலைவர்களாகிய குறுநில மன்னர்களைப்
பறிகொடுத்து மனம் கொதித்துப் போயிருந்த குறிஞ்சி, முல்லை நில மக்களிடையில் மலைக்
குகைகளில் பதுங்கியிருந்து மூவேந்தர்களுக்கு எதிராக அவர்களை ஒன்றிணைக்கும்
பணியில் ஈடுபட்டார்கள். அதே வேளையில் செல்வப்பெருக்கில் அரசர்களுக்குப் போட்டியாக
வாணிகர்கள் வளர்ந்துவந்தார்கள். அவர்களிடையில் புத்தமும் அம்மணமும் ஊடுருவியது.
அரசர்களுக்கும் வாணிகர்களுக்கும் நடைபெற்ற மோதல்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை
ஆகியவற்றில் விரிவாகவே காணப்படுகிறது. எனவே களப்பிரர் காலத்துக்குப் பின் மீண்டும்
ஆட்சிக்கு வந்தவர்கள், குறிப்பாக பேரரசுச் சோழர்கள் தமிழக வாணிகர்கள் மீது
ஒடுக்குமுறைகளை ஏவினர். கடல் வாணிகர்கள் மீது மிகுந்த ஒடுக்குமுறைகள் ஏவப்பட்டன.
இது இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. அம்மணர்களான பனியா(வணிகன்,
வாணிகன், வாணியன் என்ற தமிழ்ச் சொற்களின் திரிபு)க்களை இந்த ஒடுக்குமுறைகள்
தாக்கவில்லை. அதாவது மக்களிடம் செல்வம் திரண்டால் அது தம் கட்டற்ற அதிகாரத்துக்கு
அறைகூவலாகும் என்பதை ஆட்சியாளர்கள் கண்டுகொண்டார்கள். அதனால்தான்
இராசராசன் தொடங்கி சோழப் பேரரசர்கள் அனைவரும் செல்வம் சேர்வதால் மக்கள்
மட்டுமல்ல தங்கள் பேரரசு உருவாவதற்குத் துணை நின்ற சிற்றரசர்கள் கூட செல்வாக்கு பெற
முடியாத படி எண்ணற்ற கோயில்களைக் கட்டி அவற்றுக்கு அளவற்ற சொத்துகளை வழங்கி
அரசின் உள்ளூர் நடவடிக்கைகளை அவற்றின் கீழ் கொண்டுவந்தனர். ஆகமக் கோயில்களான
அவற்றில் ஆறுகால பூசையும் இறைவனுக்கு 16 வகை பணிவிடைகளும்(சோடச உபசாரம்)
என்று மக்களுக்கு இன்றியமையாத் தேவைப் பண்டங்களை பல்வேறு வகை
முழுக்குகளில்(அபிசேகங்களில்) அழித்தனர். இதற்காக அரக்கப்பரக்க பார்ப்பனப்
பூசகர்களையும் தேவரடியார்களையும் வெளியிலிருந்து இறக்கினர். இன்றும் தஞ்சைப் பெரிய
கோயிலில் நந்தி எனப்படும் காளைச் சிலை மீது பல பத்து தன்கள் பழவகைகளைக் கோர்த்து
அழிப்பதைப் பெருமையாய்த் தொலைக்காட்சிகளில் காட்டுவதைப் பார்க்கிறோம். அனுமன்
சிலை மீது இலக்கக் கணக்கில் கோர்த்துத் தொங்கவிடப்படும் வடைகள் அவற்றை அகற்றும்
போது ஊசிக் கெட்டு யாரும் பயன்படுத்த முடியாது போகுமே, அதை யாரும்
கண்டுகொள்வதே இல்லை. இந்த அழிப்பு வேலையை ஒருங்கிணைக்கும் பூசாரி வேலைக்கு
எங்கள் சாதியினருக்கும் பங்கு வேண்டும் என்று பலமுனைப் போராட்டங்கள் நடத்தி
அடிப்படைச் சிக்கலைத் திசைதிருப்புவோரே களத்திலுள்ளனர்.

பகுத்தறிவாளர்கள் என்று தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக்கொண்ட பெரியார்


தலைமையிலான கூட்டம் இதைக் கண்டுகொள்ளவே இல்லை, மாறாக வயிற்றுப்பாட்டுக்கு
அர்ச்சனைத் தட்டில் விழும் சில்லரைக் காசுக்காகப் பல்லிளிக்கும் பார்ப்பனப் பூசாரியைக்
காட்டித் திசைதிருப்பல் அரசியலைத் திறம்படச் செய்தார் பெரியார். மங்கையர்க்கரசி என்ற
திரைப்பட்டத்தில் கலைவாணர் நா.சு.கிட்ணன்தான் பால்பழமும் அபிசேகம் பண்ணுவதைப் பார்
பாலில்லை என்று சிசு பதறுவதைப் பார் என்று உடுமலை நாராயண கவி இயற்றிய பாடலைப் பாடி
நிலைமையைச் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பின்னணியில் உடலுழைப்போரை இழிவாகக் கருதும் தமிழகப் பண்பாட்டுச்


சூழலில்(அடியவர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரையில புறத்தென்மனார் புலவர்
என்ற தொல்காப்பிய வரிகளுக்கு உடலுழைப்பாளர்களான அடிமைகளுக்கும் தொழில்
வல்லாருக்கும் களவு, கற்பு எனும் அகத் துறைகள் பொருந்தா, அதாவது அவர்களது
பெண்களை மேல் வகுப்பார் தங்கள் விருப்பம் போல் கையாளலாம் என்பது பொருள்)
பூசகர்களையும் அரசர்களையும் இவ்விரு வகுப்பாரையும் சார்ந்திருப்போரையும்
வலங்கையினரென்றும் வாணிகம், வேளைண்மை, நெசவு உட்பட அனைத்துத்
தொழில்களையும் செய்வோரை இடங்கையினரென்றும் வகைப்படுத்தி இடங்கையினருக்கு
குடை பிடித்தல், செருப்பணிதல், கத்தி வைத்திருத்தல் போன்ற பொதுவான குடிமை
உரிமைகளைப் பறித்தனர். 72 உரிமைகள் என்பர். இதன் விளைவாக வாணிகர்கள் நாட்டை
விட்டு அகன்றனர். தமிழகத்துக்கு வடக்கில் நானாதேசிகள் என்றும் திசையையாயிரத்து
நூற்றுவர் என்றும் குழுக்கள் அமைத்து வாணிகம் செய்தனர். அப்போதும் நம் அரசப்
பயல்களுக்கு அச்சம் விலகவில்லை. வடக்கே படையெடுக்கும் சாக்கில் அந்த அமைப்புகளைத்
தகர்த்தனர்.
கழக(சங்க) இலக்கியத் தொகுப்பில் தமிழர்களின் கடல்தொழில் பற்றிய பாடல்களே
இல்லை. பிரிதல் பற்றிய 1000 க்கும் மேற்பட்ட பாடல்களில் கடல் மேல் பிரிவு பற்றி ஒரேயொரு
பாடல்தான் இருக்கிறது என்பது மேனாள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர்
காலஞ்சென்ற பண்டிதர் வ.சுப.மாணிக்கனாரின் பண்டிதர் பட்ட ஆய்வேடான தமிழர் காதல்
தரும் செய்தி. பண்டைத் தமிழகத்தின் கடல் வாணிகம் பற்றிய சில தடயங்களையாவது
தருவது சிலப்பதிகாரமும் மணிமேகலையும்தாம். அந்த அளவுக்குத் தமிழகக் கடல்
வாணிகர்கள் ஓடுக்கப்பட்டு கருவறுக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்து அரசப் பயல்களின் போர் வெற்றிகளைக் காட்டி அவற்றைத் தமிழர்களின்


பெருமை என்று பெருமிதம் கொள்வது நம் தமிழன்பர்களின் இயல்பு. எடுத்துக்காட்டுக்கு
இராசேந்திர சோழன் தமிழகத்தின் தென் கோடியிலிருந்து வங்காள விரிகுடாவைத் தொட்டு
இரு புறங்களிலும் இருக்கும் நாடுகள் தொடங்கி கடாரம், சாவா போன்ற கிழக்காசிய நாடுகள்
வரை படையெடுத்து வெற்றிக்கொடி நாட்டினான் என்று படம் போட்டுக்காட்டிப் பெருமைப் படும்
காட்சிகளை முகநூலிலும் இணையத்திலும் அடிக்கடி பார்க்கிறோம். ஆனால் வரலாற்று
ஆய்வாளர் அனைவரும் கடாரத்தின் மீது இராசேந்திரன் எதற்காகப் படையெடுத்தான் என்று
புரியவில்லை என்று ஒரே குரலில் மனம்விட்டுக் கூறுகின்றனர். சிலப்பதிகாரத்தில் மணிமேகலா
தெய்வம் கோவலனின் முன்னோன் ஒருவன் கப்பல் கவிழ்ந்து கடலில் தத்தளித்த போது
மணிமேகலா தெய்வம் காப்பாற்றிய செய்தி வருகிறது. புத்தரின் 500 க்கும் மேற்பட்ட
“பிறவி”களின் கதைகளைக் கூறும் புத்த சாதகத் கதைகளில் ஒன்றில் காவிரிப்பூம்
பட்டினத்தில் வாணிகனாகப் பிறந்த புத்தர் கடலில் கப்பல் கவிழ்த்துவிட ஊக்கமிழக்காமல் ஒரு
கட்டையைப் பிடித்துக்கொண்டு நெடுநாள் கிடக்க மணிமேகலா தெய்வம் அவரைக் காப்பாற்றி
தாய்லாந்தின் கடற்கரையில் விட அங்கு அரசன் இல்லாத நிலையில் மக்கள் பட்டத்து யானை
கையில் மாலையைக் கொடுத்து ஊரைச் சுற்றி வர அது வாணிகன் கழுத்தில் மாலையைப்
போட அவன் அந் நாட்டின் அரசனானான் என்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் தாய்லாந்தில்
நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதி நாளில் அரங்கம் முழுவதையும் நாடக
மேடையாக்கி இந் நிகழ்ச்சியை நிகழ்த்திக்காட்டினர். அத்துடன் அவ் வட்டாரத்தில் தமிழக
வாணிகர்கள் கட்டிய எண்ணற்ற மாபெரும் கோயில்களைப் பற்றிய செய்திகள்
நாளுக்கொன்றாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் இந்த
வாணிகர்கள் தமிழகத்துடன் கமுக்கமாக வாணிகம் செய்து தங்கள் செல்வாக்கைத்
தமிழகத்தினுள் மீட்கலாம் என்ற அச்சத்தில்தான் நட்பு நாடுகளாகிய சீர்(சிறீ) விசயம், சீனம்
போன்ற நாடுகளின் உடன்பாட்டுடன் படையெடுத்து அவர்களை அழித்திருக்கலாம் என்னும்
விளக்கம்தான் நமக்குக் கிடைக்கிறது. கண் முன் கண்ட காட்சியாக தமிழகத்து கருணாநிதி,
செயலலிதா, நெடுமாறன் தொடங்கி காட்டிக்கொடுக்கும் ஒரு பெரும் படையின் மறைமுக
ஒத்துழைப்புடன் அமெரிக்கா அமைதியான இசைவு தர இராசபச்சேவைக் கைக்குள்
போட்டுக்கொண்டு ஈழத் தமிழர்களை இந்திய ஆட்சியாளர்கள் கொத்துக்குண்டுகளால்
அழித்ததை இதற்கு இணையாகக் கூறலாம். இன்றும் சிங்கள அரசுக்கு இந்திய
ஆட்சியாளர்கள் இடைவிடாத பயிற்சிகளும் பண உதவிகளும் வழங்கி வருவதைக்
காண்கிறோமே! இதை வரலாற்றுக் காலத்தில் சிங்களர்களுக்கு தமிழகத்து பாண்டிய அரசப்
பயல்கள் தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.
தங்கள் நாட்டு வாணிகக் குழுக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் வாணிகத்தில்
இறங்கிக் கொஞ்சம் கொஞ்சமாக நிலங்களைக் கைப்பற்ற, அவற்றை ஒரு கட்டத்தில் அரசு
தன் அதிகாரத்தின் கீழ் எடுத்துத்தான் சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகளின்
ஐரோப்பியரின் உலக மேலாளுமை தொடங்கி இன்றும் தொடர்கிறது என்ற உண்மையோடு
இணைத்துப் பார்த்தோமானால், இராசேந்திர சோழன் என்ற சோதாப்பயல் எவ்வளவு
கோழையாக, தாழ்வுணர்சச ் ி மிக்க முட்டாளாக இருந்து ஒட்டுமொத்த தமிழ், தமிழக
மக்களுக்கு எவ்வளவு பெரும் கேடு விளைத்திருக்கிறான் என்பது புரியும்.

இத்தகைய ஒரு பண்பாட்டுப் பின்னணியில் முதன்மை சமய ஓட்டத்துக்கு மாறான


அம்மண சமயத்தாரின் வாணிக நடைமுறைகள் தடையின்றி நடைபெற்றன. இவர்கள்
உள்நாட்டுக் கடலோடிகளுக்கு எதிரானவர்கள், அயல் கடல் வாணிகர்களின் நிலையான
தரகர்கள். வெளியிலிருந்து இறங்குபவற்றை உள்நாட்டில் விற்றும் இங்கு கிடைப்பவற்றை அயல்
வாணிகர்களுக்கு விற்றும் செல்வம் திரட்டியவர்கள். தமக்குள் ஓயாச் சண்டைகளில்
ஈடுபட்டிருந்த எண்ணற்ற சிற்றரசர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தும் செல்வாக்கு
பெற்றவர்கள். இவர்களுக்கு முதன்முதல் அறைகூவல் இங்கு நுழைந்த
அரேபியர்களிடமிருந்தும் தொடர்ந்த பல நாட்டு முகம்மதியர்களிடமிருந்தும் வந்தது. அவர்கள்
கடல்வழி மட்டுமல்ல, நிலவழி வாணிகத்திலும் வல்லவர்கள். இருந்தாலும் இந்தப் போட்டியை
எதிர்கொண்டு அவர்கள நிலைத்திருந்தார்கள். இரு குழுவினரும் வழக்கம் போல்
அரசர்களுக்கும் சிற்றரசர்களுக்கும் போர்ச் செலவுகளுக்குக் கடன் கொடுத்தே வந்தனர்.

ஐரோப்பியர் உலகைச் சுற்றிக் கடலோடத் தொடங்கியதே முகம்மதியர்களை


எதிர்த்துத்தான். ஒரு கட்டத்தில் ஐரோப்பாவில் பல பகுதிகள் துருக்கியிலிருந்த ஓட்டோமான்
முகம்மதிய அரசின் ஆளுகையின் கீழ் வந்து முகம்மதிய சமயக் கருத்துகள் ஐரோப்பியக்
கல்வி நிலையங்களில் கற்பிக்கப்பட்டன என்று இராகுல சங்கிருத்தியாயன் ஒரு நூலில்
குறிப்பிட்டிருக்கிறார். அடுத்து சிலுவைப் போர்கள் தோல்வியடைந்ததால் கிறித்துவத் தலைமை
மீது உருவான கசப்புணர்வு மார்ட்டின் லூதரின் சமயப் புரட்சிக்கு வெற்றி தேடித் தந்தது.
நண்ணில(மத்தியதரை)க் கடலைக் கடந்து அரேபியாவில் இறங்கி நிலம் வழியாக செங்கடலை
அடைந்து இந்தியா வர வேண்டியிருந்த நிலையில் தடையாக இருந்த முகம்மதிய எதிர்ப்பைத்
தவிர்ப்பதற்காக அங்கு உருவான அறிவியல் புரட்சியால் உலகம் உருண்டை என்ற புதிய அறிவு
இவர்களுக்கு, அன்றும் மாறா வளத்தை வாரி வழங்குவதாக நம்பிய கிழக்கில் இருக்கும்
இந்தியாவுக்கு வருவதறகு மேற்கு நோக்கிப் புறப்பட்ட கொலம்பன் அமெரிக்காவில் வந்து
இறங்கினான். அடுத்து வாக்கோடகோமா அட்லான்றிக் பெருங்கடலைக் கடந்து
ஆப்பிரிக்காவைச் சுற்றி இந்தியா செல்லலாம் என்ற நம்பிக்கையில் புறப்பட்டு அதன் தென்
முனையைத் தாண்டி இந்து மாக்கடல் எனும் குமரி மாக்கடலைக் கண்டதும் ஆப்பிரிக்காவின்
அம் முனைக்கு நன்னம்பிக்கை முனை எனப் பெயரிட்டுக் கேரளக் கரையில் வந்து
இறங்கினான். பின்னர் படிப்படியாக முகம்மதியர்களை முறியடித்துத்தான் அவர்கள்
இந்தியாவில் நிலைத்தார்கள். எனவே முகம்மதியர்கள் வாணிகத்துறையில்
ஐரோப்பியர்களுக்குப் போட்டியாளர்கள். இந்த வகையில் பனியாக்களும் அவர்களது
கூட்டாளிகளான பார்சிகளும் ஆங்கிலரும் முகம்மதியர்களுக்கு எதிரான கூட்டாளிகளாயினர்.
இந்தக் கண்ணோட்டத்தில்தான் காந்தி, அன்னி பெசன்று ஆகியோரின் இந்து சமயத்
தாவலைப் பார்க்க வேண்டும்.

பனியாக்கள் எனும் அம்மண சமய வாணிகர்களில் இரு பிரிவுகள் உண்டு .


இராசத்தானிலுள்ள மார்வார் என்ற இடத்தின் அடிப்படையில் அழைக்கப்படும் மார்வாரிகள் ஒரு
பிரிவு. இவர்கள் மத்தியப் பிரதேசத்திலும் இருக்கிறார்கள். இன்னொரு பிரிவு குசராத்தைச்
சேர்ந்த குசராத்தி பனியாக்கள். காந்தி குசராத்தி பனியா. இன்று உலகில் இந்தியாவுக்கு
வெளியே தொழில் வாணிகம் மட்டுமின்றி அரசியல், ஆள்வினை(நிர்வாக)க் களங்களிலும்
கொடிகட்டிப் பறப்பவர்கள் குசராத்திகள். இந்தியவுக்குள் மார்வாரிப் பனியாக்களும்
பார்சிகளும். இந்திரா காந்தியின் கணவர் பிரோசு காந்தி ஒரு பார்சி. ஆக, பா.ச.க.வின்
தலைமை அமைச்சராக ஒரு குசராத்தியும் பேரவைக் கட்சியின் தலைமையாக ஒரு பார்சி –
இத்தாலியக் குடும்பமும் இருக்கின்றனர்.

இந்திய முகம்மதியர்கள் விடுதலைப் போராட்டக் காலத்தில் அவர்களாக


பாக்கித்தான் பிரிவினையைக் கேட்கவில்லை. காந்தியின் “இராமநாம” பசனையும் “இந்து”
நடிப்பும்தான் முதல் வித்தாக விழுந்தது. அப்போதும் சின்னா பிரிந்து போக வேண்டும் என்று
கேட்கவில்லை. அவர் ஒரு சமயவாணரும் அல்ல, ஐரோப்பியர் அணியும் உடைகளையே
அணிந்தார். இந்தியா விடுதலை பெற்றால் முகம்மதியர்களின் பொருளியல் நடவடிக்கைகள்
பனியா – பார்சி கூட்டணியால் நசுக்கப்படும் என்ற அச்சத்தில்தான் அவர்
முகம்மதியர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்தார். இங்கிலாந்து
அரசு இந்தியாவுக்கு விடுதலை வழங்க முன்வந்த போது இவர் முன்வைத்தது, முழுத்
தன்னாட்சி உடைய மாநிலங்களின் ஒரு கூட்டாட்சியான ஒருமித்த இந்தியா அல்லது
முகம்மதியர்களுக்கு பாக்கித்தான் என்பதாகும். இது குறித்து சின்னாவுடன் பட்டேல், நேரு,
அபுல்கலாம் ஆசாத்து போன்றவர்கள் உரையாடல்கள் நடத்திக்கொண்டிருந்த போது
இங்கிலாந்து அரசு இந்தியாவிலிருந்து பாக்கித்தானைப் பிரித்து இரண்டுக்கும் விடுதலை
வழங்குவதாக அறிவித்ததாக தினமணி கட்டுரை ஒன்றில் ரங்கராசன் என்பவர்
எழுதியுள்ளார்(காந்தி பிறந்த அக்டோபர் 2 அல்லது மறைந்த சனவரி 30 நாளிட்ட ஒரு
இதழில்). இந்தியா குறித்த எந்த முகாமையான முடிவையும் காந்தியைக் கலக்காமல்
எடுக்காத இங்கிலாந்து இந்த அறிவிப்பையும் காந்தியின் அறிவுரையின் பேரிலேயே
வெளியிட்டிருக்கும் என்பது உறுதி.

பாக்கித்தானை இந்தியாவிலிருந்து பிரித்தாயிற்று. இப்போது மக்கள்


இடம்பெயர்ந்தாக வேண்டும். ஒரு பகுதியிலிருந்து அந்தப் பகுதிக்கு உரியவரல்லாத
மதத்தினரை வெளியேற்ற இரு பக்கங்களிலும் உள்ள மத வெறியர்களும் பொறுக்கிகளும்
கொலை, கொள்ளை, தீ வைப்பு, பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டனர். எதிரி என
அறிவிக்கப்பட்ட அயல் நாட்டுப் படைகளை எதிர்த்து ஆயுதம் தாங்கிய ஒரு விடுதலைப் போரை
நிகழ்த்தி இருந்தால் சிந்தும் குருதி அந்நாட்டு மக்களிடையில் உணர்ச்சி ஒன்றிய ஓர்
ஒற்றுமையை வளர்க்கும் நீராகப் பயன்பட்டிருக்கும், நூற்றாண்டுகளாக மத அடிப்படையில்
ஒருவரையொருவர் தொலைவில் நிறுத்திப் பார்த்த வேற்றுமை உணர்வு மங்க வழி
திறந்திருக்கும். ஆனால் காந்தி முன்மொழிந்த குருதி சிந்தா, ஆயுதம் தாங்காத “அற”வழிப்
போராட்டத்தில் அரசுப் படைகளாலும் காந்தியின் சூழ்ச்சியில் உருவாகிய சமய மோதலிலுல்
சிந்திய குருதி இந் நாட்டு மக்களைக் காலத்துக்கும் மோதலில் ஈடுபட்டிருக்கும் ஒரு மக்கள்
கூட்டமாக மாற்றிவிட்டது. அதைத்தான் காந்தியும் எதிர்பார்த்தது. அப்படியானால்தானே பனியா
– பார்சிகளுடன் சேர்ந்து ஆளும் கும்பல் செய்யும் அழிம்புகள், கொள்ளைகளிலிருந்து
மக்களின் கவனத்தைத் திருப்ப முடியும்?

காந்தி ஆயுதம் தாங்குவதை ஒட்டுமொத்தமாக எதிர்க்கவில்லை, குடி மக்கள்


ஆயுதம் தாங்குவதைத்தான் எதிர்தத ் ார். ஆட்சியாளர் ஆயுதம் தாங்கி மக்கள் மீது எந்த
விதமான தாக்குதலையும் நிகழ்த்துவதற்கு உரிமையுண்டு அதை வாய்மூடி
ஏற்றுக்கொள்வதுதான் மக்கள் எதிர்ப்புக்காட்டும் வழிமுறை என்றார். ஆகா, எவ்வளவு
“உயர்வான” சிந்தனை! மனுவும் சாணக்கியனும் இந்த ஆளின் காலில் விழுந்து தொழ
வேண்டாமா? ஆளுபவனான “சத்திரியனு”க்கு ஆயுதம் தாங்கும் உரிமை இருப்பது போல்
வாணிகனான பனியாவுக்கு மட்டுமே வாணிகம் செய்யும் உரிமை உள்ளது, அப்படித்தானே?
அதைத்தான் தமிழக நாட்டுக்கோட்டைச் செட்டியான ஆர்.கே.சண்முகம் செட்டியாரிடம் “நீயும்
பனியா, நானும் பனீயா” என்று காந்தி சொந்தம் கொண்டாடியதாக புதிய பார்வை இதழில்
வெளிவந்த துணுக்கொன்று கூறியது. அதை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார் என்பதற்கு
பணத்தோட்டம் நூலில் அண்ணாத்துரை தந்துள்ள செய்திகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
அதே தடத்தில் தமிழகத்துப் பொருளியல் தலைதூக்காமல் செய்த ப.சிதம்பரம் நடந்து
காட்டினார்.

சேலம் நகரவையால் 1937 இல் பூங்காவொன்றில் நிறுவப்பட்டிருந்த காந்தியின்


சிலையை அப்போது சென்னை மாகாண ஆளுநராக இருந்த ஆங்கிலர் திறந்துவைத்த
செய்தியை மேலே குறிப்பிட்ட ரங்கராசன் என்பவர் தினமணி கட்டுரை ஒன்றில் பெருமையாகக்
குறிப்பிடுகிறார். ஆங்கிலருக்கு எதிராகக் கப்பலோட்டியதற்காக சிதம்பரனாரை வரலாற்றில்
எங்கும் இல்லாதவாறு செக்கைச் சிறைச்சாலையில் நிறுவி இழுக்க வைத்தனர்.
தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டோலாவை 25 ஆண்டுகள் கொடுஞ்சிறையில்
அடைத்தனர், அங்கு உருசிய ஆதரவு போராளிகளின் கை ஓங்குவது கண்டே அவரை
வெளியில் விட்டு தற்காத்துக்கொண்டனர், ஆனால் தங்கள் ஆட்சிக்கு எதிராக விடுதலை
கேட்டுப் போராடும் ஓர் இயக்கத் தலைவருக்கு அந் நாட்டை அடிமை கொண்ட ஓர் அரசு சிலை
எடுத்துச் சிறப்புச் செய்வது வியப்பாயில்லையா? அப்படியானால் அந்த ஆட்சியாளர்களுக்கும்
அந்த “விடுதலை”ப் போராளிக்கும் இடையில் உள்ள உறவு எத்தகையது என்ற கேள்வி
எழவில்லையா?

“ விடுதலை” கொடுப்பதாக இங்கிலாந்து அரசு அறிவித்த போது, தனியாகப் பிரிந்து


செல்ல விரும்பும் சமத்தானங்கள் தீர்மானம் நிறைவேற்றினால் அவர்களுடைய வேண்டுகை
ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதை நம்பி திருவிதாங்கூரின்
சி.பி.இராமசாமியாரும் ஐதராபாத்து நிசாமும் தீர்மானங்கள் நிறைவேற்றினர். “விடுதலை”
கிடைத்ததும் “இரும்பு” மனிதர் என்று புகழப்படும் குசராத்தி வல்லபாய் பட்டேல் படைகளைக்
காட்டிப் பணிய வைத்தான். தமிழரான இராமசாமியார், “அகண்ட” கேரளம் என்ற
அமைப்புக்குள் சிக்கினால் திருவிதாங்கூரில் பெரும்பான்மையாராக இருந்த தமிழ் பேசும்
மக்கள் மிகச் சிறுபான்மையராகிவிடுவார் என்பதற்காக அதைச் செய்தார். ஆனால் அதைப்
புரிந்துகொள்ளாத, தங்களைத் தமிழ்ப் பற்றாளர்களென்றும் தமிழர்களுக்காகப் பாடுபடுவோர்
என்றும் காட்டிக்கொள்ளும் சில அறிவிலிகள் அவர் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்கள்
என்று வசைபாடுவதில் இன்றும் இன்பம் காண்கின்றனர். பின்னர் கேரளத்திலிருந்து பிரிந்து
தாய்த் தமிழகத்தோடு இணைவதற்காக அந்தத் தமிழ் மக்கள் பட்ட கொடுமைகளும் சிந்திய
குருதியும் இழந்த உயிர்களும் வரலாற்றில் கறைகளாக உள்ளதைக் கண்ணாரக் கண்டும்
இராமசாமியாரின் முயற்சியின் பெருமையை இவர்கள் புரிந்துகொள்ளாதது நம்
மழுமண்டைத்தனத்தைத்தான் காட்டுகிறது. தமிழன் என்று நம்மில் பலர் பெருமைப்படும்
காமராசரும் அம் மக்களைக் களத்திலிறக்கி தலைவர் அடைமொழி பெற்ற நேசமணியும் செய்த
இரண்டகத்தால் அந்த மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இன்றும் மலையாளிகளிடையில்
கிடந்து உழல்கின்றனர். நமக்குரிய நெய்யாற்று நீரையும் பெரியாற்று அணையையும்
பறிகொடுத்து நிற்கிறோம். அன்றைய ஐதராபாத்தோ இன்றைய தெலிங்கானாவாக
மலர்ந்துள்ளது.

விடுதலை பெற்ற இந்தியாவில் மொழி அடிப்படையில் மாநிலங்களை அமைப்போம்


என்ற உறுதி மொழியுடன்தான் சென்னை மாகாணப் பேரவைக் கட்சிக் கிளைக்கு தமிழ்நாடு
பேரவைக் குழு(தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி), தெலுங்கு பேசும் மக்கள் வாழ்ந்த பகுதிக்
கிளைக்கு ஆந்திரப் பிரதேச பேரவைக் குழு என்பன போன்ற பெயர்கள் “விடுதலை”க்கு
முன்பே வைக்கப்பட்டன. ஆனால் ஆந்திர மாநிலம் மாநிலம் மைவதற்காக பொட்டி சீராமுலு
என்ற ஒருவர் உண்ணாநோன்பிருந்து உயிரிழக்க மாபெரும் கலகம் வெடித்து குருதியாறு ஒடி
பல்வேறு இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. தமிழர்களைப் பற்றித்தான் ஏற்கனவே
சொல்லியாயிற்று.

காந்தி தன் திட்டங்களை நிறைவேற்ற தேர்நதெ ் டுத்த ஆள் தன் மொழி பேசும்
குசராத்தியான பட்டேலை. ஆனால் அந்த ஆள் முரடன், எந்தப் பாசாங்கும் இன்றி களத்தில்
இறங்கினால் விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து எழுச்சி நிலையில் இருக்கும் பல்வேறு
மக்களும் கலகம் செய்து இந்தியா என்ற ஒரு பெரும் கொள்ளைக் களம் எனும் கனவு
கலைந்துபோகும் என்பதனால் ஒரு முகமூடியாக நேருவை தலைமையமைச்சராகவும்
செயற்பாட்டுக்கு பட்டேலையும் காந்தி அமர்த்தினார். பட்டேலின் கொடுமைகளுக்கு பட்டேலியம்
என்ற பெயரை காந்தியத்துக்கு எதிரான ஒன்றாகக் கொடுத்தனர் “காந்தியத்”தை நம்பி
ஏமாந்த தமிழகத்து திரு.வி.க. போன்ற ஏமாளிகள். “காந்தியம் செத்துவிட்டது,
பட்டேலியம்தான் வாழ்கிறது” என்பது அவரது புகழ்பெற்ற கூற்று. காந்தியம்தான் பட்டேலியம்
என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன்.

தன் இலக்கை அடைந்தாயிற்று, இனி உயிருடன் இருந்தால், ஆட்சியில் எளிமை,


மரத்தடியில் பாராளுமன்றத்தை நடத்துவேன் எனத் தான் வாக்களித்த பொய்ம்மைகளை
நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திலிருந்து தப்பவும் ஏசுவை விட தான் ஒரு மாபெரும் அற
வீரன் என்று காட்டி தன் கூட்டத்தாருக்குப் பெருமை சேர்க்கவும் மேற்கொண்ட உயிர் ஈகம்தான்,
தானே கோட்சேயை அமர்த்தி நிறைவேற்றிய கொலை என்று கருதுகிறேன். 30 - 01 - 2016
அன்று தினமணியில் வெளிவந்துள்ள, அ.பிச்சை என்பார் எழுதியுள்ள கட்டுரையைப் படித்துப்
பாருங்கள். அந்த ஆளை பனியாக்கள் போற்றலாம், பார்சிகள் வணங்கலாம், வல்லரசியம்
தலைமேல் வைத்துக் கூத்தாடலாம். பிற எந்த இந்தியக் குடிமகனும் பாராட்டுவது மடத்தனம்.

இதோடு காந்தியை விட்டுவிட்டு மோடியைத் தடம் பிடிப்போம். முன்பு இறையியல் கழகத்தைக்


கொண்டு இந்தியாவினுள் தலையிட மேற்கொண்ட முயற்சியை அன்னி பெசன்றையும் பின்னர்
காந்தியையும் கொண்டு ஆங்கிலர் முறியடித்துவிட “இந்து”ப் பண்பான சாதி வெறியின்
பதுங்கு குழியான தமிழகத்தில் ஒடுக்கும் சாதிகளின் ஒரு சிறந்த பாதுகாவலனாக இருந்த
மன்னன் சேதுபதியைத் தேர்நதெ ் டுத்தது அமெரிக்கா. அங்கு நடைபெற “இருந்த உலக
மதங்களின் பாராளுமன்றம்” என்ற அரங்கத்தில் பேச அழைத்தது. அவரோ விவேகானந்தரை
விடுத்துவைத்தார். அங்கே உரையாற்றி பெருமையோடு திரும்பிவந்த விவேகானந்தரை
இந்தியாவின் சாதி வெறியர்கள் பற்றிப் பிடித்துக்கொண்டனர். உழைப்பு பற்றியும் மக்களின்
சமத்துவம் பற்றியும் அவர் கொண்டிருந்த கருத்துகளைப் புதைத்துவிட்டு சனாதனத்துக்கும்
சாதிய ஒடுக்குமுறைக்கும் அவரை அடையாளமாகக் காட்டிவருகின்றனர். இந்த
அடிப்படையில்தான் இந்து மகாசபை, இரா.சே.ச.(இராட்டிரீய சுயம் சேவக் சங்கம் –
ஆர்.எசு.எசு.) ஆகிய இயக்கங்களைக் கட்டி எழுப்பினர். சன சங்கம் என்ற அரசியல்
கட்சியையும் உருவாக்கினர். இதை எவரும் சீண்டவில்லை. 1974 இல் இந்திரா காந்தி
பிறப்பித்த நெருக்கடி நிலையின் போது உருவான கூட்டணியில் இக் கட்சியின் வளர்ச்சி
தொடங்கியது. பின்னர் வி.பி.சிங்கின் ஆட்சியின் போது வளர்ச்சி பெற்று பதுங்கிப் பதுங்கி
இன்று வளர்ந்து நிற்கிறது. தமிழகத்து இரு திராவிடக் கட்சிகளின் பதவி வேட்டையிலும்
இதன் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு.

காந்தியின் குசராத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய மோடி அங்கு ஒரு மதக் கலவரத்தை


உருவாக்கி முகம்மதியர்கள் மீது கொடும் அடக்குமுறையை ஏவி உலகப் புகழ் பெற்றார்.
அதனால் அமெரிக்கா அவர் அங்கு வரத் தடைவிதித்து நடித்தது. இதனால் இந்தியாவில்
அமெரிக்காவின் சுரண்டல் நடவடிக்கைகளால் அதன் மீது இங்குள்ள மக்களுக்கு
உருவாகியிருந்த வெறுப்பு மோடியின் தலைமையமைச்சர் போட்டியில் மிகப் பெருமளவு
பயன்பட்டது. தேர்தல் முடிந்ததும் நடிப்பைக் கைவிட்டு இருவரும் கைகோர்த்துள்ளனர்.
இப்போது இந்தியா அமெரிக்காவின் 52 ஆம் மாநிலமாக, ஆனால் தனித் தேசியக் கொடியுடன்
விளங்குகிறது.

பா.ச.க.வின் வளர்ச்சியில் இடங்கைப் பொதுமைக் கட்சி எனப்படும் மார்க்சியப் பொதுமைக்


கட்சிக்கு முதன்மையான பங்குண்டு. போபோர்சு பீரங்கி ஊழலை வெளிப்படுத்தியதால்
வெளியேற்றப்பட்ட வி.பி.சிங் மக்கள் விடுதலை முன்னணி என்ற இயக்கத்தைத் தொடங்கி
மக்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு ஓர் அரசியல் இயக்கம் அமைக்க முயன்றார்.
அவரைத் திசைதிருப்பி கூட்டணி அமைக்கவைத்து அதனுள் பாரதிய சனதாவாக பெயர்
மாற்றம் பெற்றிருந்த சன சங்கத்துக்கு வளர்ச்சி வாய்ப்பளித்துக் கொடுத்தவர்கள்
இவர்கள்தாம். இவர்கள் இப்படி எத்தனையோ கட்சிகளை அணைத்துக் கெடுத்துள்ளார்கள்.
இவர்களின் அணைப்பிலிருந்து தப்பியவர் ம.கோ.இரா. ஒருவர்தான்.

1953 இல் உருசிய தாலின் இறந்த பின் உருசியாவுக்கும் சீனத்துக்கும் உருவான பகைமையில்
இந்திய பொதுமைக் கட்சி இரண்டாக உடைந்து சீனத்துச் சார்பாக உருவானதுதான் இந்தக்
கட்சி. தமிழகத்தைப் பொறுத்தவரை பார்ப்பனர்களுக்கும் சிவனிய வெள்ளாளர்களுக்குமான
தலைமைப் போட்டியில் பாரப்பனர்களின் தலைமையில் இடங்கை, அதாவது மார்க்சியப்
பொதுமைக் கட்சி உருவானது என்பது உண்மையான சாதிய அரசியல். இரு பிரிவுகளுக்கும்
இடையில் கொலைப் பகை இருந்தாலும் பனியா – பார்சிகள்தாம் இந்தியாவின் தேசிய
முதலாளிகள் என்பதில் எப்போதும் இப்போதும் உறுதியாக ஒற்றுமையாக இருக்காறார்கள்.
இதில் பார்ப்பனர்கள் மீதும் கூட இவர்களுக்கு பரிவு கிடையாது. 1980 களின் தொடக்கத்தில்
நான் மதுரையில் இருந்த போது டி.வி.சு. நிறுவனத்தைத் தகர்க்க இடங்கையினர்
ஆயத்தமாகின்றனர் என்ற செய்தியை நண்பர் ஒருவர் கூறினார். இப்படி ஊருக்கே
தெரிந்திருக்க அந்த நிறுவனத்தாருக்குத் தெரியாமல் இருக்குமா? அவர்கள் தங்கள் ஓசூர்
தொழிற்சாலைகளுக்குப் பாதுகாப்பாக நெல்லை மாவட்டத்தில் நாடார்களின் தொழில் –
வாணிக நிறுவனங்களைக் காப்பதில் அடியாளாகச் செயற்பட்ட கராத்தே செல்வின் என்பவரை
அமர்த்தினர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்குக் கணிசமாகப் பணம் கொடுத்து
வழியனுப்பி வைத்தனர். இவ்வாறு இவர்களின் சூழ்சச ் ியிருந்து தப்பினர். இவ்வளவு
ஆட்கட்டும் வலுவும் தொடர்புகளும் இல்லாத எத்தனை தமிழகத் தொழில் – வாணிக
நிறுவனங்களை இக் கயவாளிகள் அழித்தார்களோ நமக்குத் தெரியாது.

கடந்த முறைக்கு முன்பு சிதம்பரம் பண அமைச்சராக இருந்த போது தமிழகத்தைச் சேர்ந்த


36 பண நிறுவனங்களை வலுவற்றவை என்று ஏம(ரிசர்வு) வங்கியைக் கொண்டு
தாளிகை(செய்தி இதழ்)களில் விளம்பரம் கொடுத்துக் களத்திலிருந்து துடைத்தெறிந்தார்கள்.
இதே உத்தியை பார்ப்பர்களால் நடத்தப்படும் சிறீராம் சீட்டுப் பண்டு நிறுவனத்தின் மீது
கையாண்ட போது அவர்கள் உடனே ஊடகங்களை அழைத்து தங்கள் நிறுவனம் வலுவாகவே
இருக்கிறது என்று வலியுறுத்தித் தப்பித்துக்கொண்டனர். இவ்வாறு பனியா – பார்சிகளுக்காக
தமிழக மக்களின் பொருளியல் நிறுவனங்கள் மீதும் முனைவுகள் மீதும் அரசும் பொதுமைக்
கட்சியினரும் நிகழ்தத ் ி வரும் கொடுமைகளைப் பட்டியலிட்டால் அது எல்லையின்றி நீண்டு
போகும். பிற மாநில மக்களும் இந்தக் கொடுமைகளுக்கு ஆட்பட்டே வருகின்றனர் என்பதையும்
நாம் நினைவில் கொள்ள வேண்டும். இருந்தாலும் வ.உ.சி. பிறந்த மாநிலம் என்பதாலும்
தென்னாப்பிரிக்காவில் எத்தன் காந்திக்கு வலிமை சேர்த்த அப்பாவிகளின் வீறு மிகுதியை
காந்தி கண்ணாரக் கண்டதாலும் சுபாசு சந்திர போசுக்கு ஆணும் பெண்ணுமாகத் துணை
நின்று நிகழ்தத
் ிய வீர வரலாற்றுடன் மாவீரன் பிரபாகரன் தலைமையில் உலகை நடுங்கவைத்த
மறத்தாலும் தமிழக மக்களுக்கு என்று தனிக் கவனம் வைத்துள்ளனர் நயன்மை(நீதி)த் துறை
உள்ளிட்ட முழு ஆட்சிப் பொறியும். இந்தப் பின்னணியில் இந்திய மக்களை பனியா – பார்சி –
வல்லரசியப் பிடியிலிருந்து மீட்கும் மிகப்பெரும் போராட்டத்தில் தமிழகம் தலைமை தாங்க
வேண்டிய பொறுப்பை வரலாறு தமிழக மக்களின் தலைகள் மீது சுமத்தியுள்ளது.
சென்ற நூற்றாண்டில் இத்தாலியின் முசோலினி பாசியர்கள்(fascists) என்ற ஒரு
படையை உருவாக்கி தலைநகரை நோக்கி அணிவகுக்க அதைக் கண்டு ஆட்சியாளர்கள்
அஞ்சி ஓட ஆட்சியைப் பிடித்தான். அந்த முன்னுருவை வைத்துத்தான் நமது சாதி
வெறியர்களும் இரா.செ.ச.வை உருவாக்கினார்கள். அது ஆங்காங்கு சில்லரை நச்சு
வேலைகளில் ஈடுபட்டு வந்தாலும் அவர்கள் நினைத்த அளவுக்கு பயன்தரவில்லை. இந்திய
மக்கள் இவர்களது அந்த அளவுக்கு இறங்கிவரவில்லை. இன்னும் வர மாட்டார்கள் என்று
உறுதியாக நம்பலாம்.

முசோலினீயைப் பார்த்து தமிழகத்திலும் ஒரு தலைவர் ஒரு படையை உருவாக்கிய இழிவான


வரலாற்றை இப்போது பார்ப்போம். முசோலியின் கட்சியின் பிரிட்டன் கிளையின் கொடி சிவப்புப்
பின்னணியில் ஒரு வெள்ளை வளையத்துள் ஒரு நீல வட்டமும் அதில் ஒரு மின்னல் கீற்றும்
கொண்டது. சப்பானின் கொடி வெள்ளைப் பின்னணியின் நடுவில் சிவப்பு வட்டத்தைக்
கொண்டது. திராவிடர் கழகத்தின் கொடி கருப்புப் பின்னணியில் சிவப்பு வட்டத்தைக்
கொண்டது. பாசியக் கட்சியின் தொண்டர்கள் கருப்பு Related image உடைகளை
அணிந்திருந்தனர். அதே அடிப்படையில் பெரியாரும் ஒரு கருஞ்சட்டைப் படையை
உருவாக்கினார். குடும்பப் பொறுப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்துவிட்டு வாழ்நாள்
முழுவதும் சிறையில் கழிக்கவோ உயிரை ஈகம் செய்யவோ அணியமாக உள்ளோர் வரலாம்
என்று அவர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு 3500 பேர் முன்வந்தாதாகத் தெரிகிறது.
கருஞ்சட்டைப் படையினர் என அழைக்கப்பட்ட அவர்கள் கழக மாநாடு தொடங்கும் முன்
நடைபெறும் பேரணியில் கட்சிக் கொடியைத் தூக்கிக்கொண்டு முன்னணிப்படையாக வருவர்.
நான்றிந்த வரை ஒரு முறை பெரியார் விடுத்த ஆணைப்படி சீரங்கத்தில்
குளித்துக்கொண்டிருந்த பார்ப்பனர்களின் பூணூல்களை அறுத்தது தவிர வேறெதையும்
செய்ததில்லை செய்ய அவர் விட்டதில்லை. இது பற்றி மூத்த கருஞ்சட்டைப் படை வீரர்கள்
ஓரிருவரைக் கேட்ட போது அவர் எதற்காகத் தங்களை வைத்திருந்தார் என்று தெரியவில்லை
என்றனர்.

இவரால் தாக்கிப் பேசப்படுவோர், எழுதப்படுவோரை மிரட்டிப் பணம் கறக்கவே இவர்களை


வைத்திருந்தார் என்று எனக்குத் தோன்றுகிறது. எடுத்துக் காட்டாக “விடுதலை” அடைந்த
பின் கிழக்காசிய நாடுகளிலிருந்து துரத்தப்பட்டு வந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்களுக்கு
சென்னையில் தொழில் – வாணிக நிறுவனங்களை நிறுவ இங்கு பெரும் வாணிக
நிறுவனங்களை வைத்திருந்த ஆந்திரத்தைச் சேர்ந்த செட்டியார்கள் இடையூறாக
இருக்கிறார்கள் என்றே இசைச் சபைகளில் தெலுங்குப் பாடல்கள் மேலாளுமையைச்
சுட்டிக்காட்டி தமிழிசைச் சங்கத்தைத் தொடங்கினார் செட்டிநாட்டரசர் அண்ணாமலைச்
செட்டியார். அதன் தொடக்க நிகழ்ச்சியில் பெரியாரும் கலந்துகொண்டார். ஆனால் தமிழிசை
வளர்ச்சிக்காக அவர் எதுவும் செய்யவில்லை. ஒன்றிரண்டு கல்வி நிறுவனங்களையும்
பின்னால் நேருவால் பிடுங்கப்பட்ட இந்திய உயிர்க் காப்பீட்டு நிறுவனத்தையும் இந்திரா
காந்தியால் பிடுங்கப்பட்ட இரு வங்கிகளையும் தவிர புது தொழில் முனைவுகளில் அவர்கள்
எவரும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. தமிழ்த் தேசியம் பற்றிப் பேசிய பெரியார் தன்
கருஞ்சட்டைப் படையைக் காட்டி ஆந்திரத் தெலுங்கு வாணிகர்களிடம் பணம் கறந்திருக்க
வாய்ப்புள்ளது. அது போல் கோயில்களை இடிப்போம் என்று தொண்டர்களை முழங்க வைத்து
1938 இந்திப் போராட்டத்தின் போது சிவனிய மடங்களிடம் வெளிப்படையாகவே பணம்
கேட்டிருக்கிறார் என்பது ஆ.இரா.வெங்கடாசலபதி என்பார் எழுதியுள்ள திராவிட இயக்கமும்
வெள்ளாளரும் என்ற நூல் மூலம் தெரிய வருகிறது. மொத்தத்தில் தமிழக மக்கள்
பெருமளவில் நம்பிய காந்தியும் பெரியாரும் அவர்களுக்குப் பெரும் இரண்டகங்களை
இழைத்துள்ளனர். இனியேனும் உணர்சச ் ி சார்ந்த வெற்று முழக்கங்களுக்கும் வீர
வச்சனங்களுக்கும் மயங்காமலும் வாக்கு வேட்டைக்கரர்களை நம்பாமலும் பொருளியல்
தற்சார்பு ஒன்றே தமிழக மக்களுக்கு மட்டுமல்ல இந்திய மக்களுக்கும் விடிவுக்கு ஒரே வழி
என்ற புரிதலோடு வீடுவாசல்களை விற்றும் கடன் பட்டும் கவைக்குதவாத “பெரும்”
படிப்புகளைப் படித்துவிட்டு மனம் வெம்பும் இளைஞர்கள் இன்றைய சூழலுக்கு இது ஒன்றே
தீர்வு என்ற தெளிவுடன் பொருளியல் உரிமைப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு தமிழக
இளைஞர்களையும் மூத்தோரையும் அழைக்கிறோம்.

You might also like