You are on page 1of 27

வானத்தை எட்டுவோம்

ஊக்குவிக்கும் கதைகள்
தொகுப்பும் எழுத்தும் - அமி ஹெக்டே
பெருநிறுவன நடத்தை பயிற்சியாளர்

தமிழில்: குமரேசன் முருகானந்தம்


இந்த புத்தகம் என் மகள்கள் அதிதி மற்றும் ரேயா
இருவருக்கும் அர்ப்பணிப்பு.
முன்னுரை
உத்வேகமளிக்கும் ஒரு பேச்சாளனாக, ஒருவருடைய எண்ணங்களையும் வாழ்க்கையையும்
மாற்றக்கூடிய, சிறுகதைகளில் பொதிந்திருக்கும் சக்தியால் நான் அடிக்கடி
ஆச்சரியமடைகிறேன்.

சக்தியூட்டும் கதைகள் நம்மை வானத்தை எட்டுவதற்கு ஊக்கமளிக்கின்றன. அவை:

பெரும் கனவுகளைக் காணவும்,


புதிய சிந்தனைகளையும் பார்வைகளையும் பேணி வளர்க்கவும்,
சிக்கலான கருத்தாக்கங்களை சுருக்கவும்,
ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்கவும்,
நேர்மறை ஆற்றலை உட்புகுத்தவும்,
வெற்றிகரமான மக்களின் மனநிலையை வெளிப்படுத்தவும்,
நம்பிக்கை இழக்கும் நேரங்களில் நம்மை தைரியப்படுத்திக்கொள்ளவும்,
ந ம் மை ஊ க் கு வி க் கி ன் ற ன .

இப்புத்தகம், வானத்தை எட்ட நமக்கு ஊக்குவிக்கும் மேலும் நமது உள்ளார்ந்த பலங்கள்


மற்றும் திறமைகளை நினைவுபடுத்துகிற, இணையத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட
கதைகளின் தொகுப்பாகும். எந்தக் கதைகளும் நான் எழுதியவை அல்ல. இணையத்திலிருந்து
தேர்ந்தெடுத்து அவற்றை குழந்தைகள் வாசிப்பதற்கு ஏற்றவாறு எளிமை படுத்துவதை
மட்டுமே செய்துள்ளேன்.

குழந்தைகளே, மகிழ்வான வாசிப்பநுபவத்திற்கு உங்களுக்கு என் வாழ்த்துக்கள் மேலும் இந்த


புத்தகத்தின் கதைகள் வானத்திற்கு எட்ட உங்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.

- அமி ஹெக்டே
கதைகள்
நேர்மறையான மனப்பாங்கு
காலனி விற்பனையாளர்கள்

பல ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு விற்பனையாளர்கள் ஒரு காலணி


நிறுவனத்தால் காலணிகளுக்கு சந்தை இருகிறதா என்று கண்றரிய
ஆபிரிக்காஅனுப்பப்பட்டனர்
முதல் விற்பனையாளர் அறிக்கை அனுப்பினார்: "அங்கே நமக்கு சந்தையில்லை
– ஏனெனில் யாரும் காலணிகள் அணிவதில்லை."
இரண்டாவது விற்பனையாளர் அறிக்கை அனுப்பினார்: "அங்கு பெரும் சந்தை
உள்ளது – ஏனெனில் யாரும் காலணிகள் அணியவில்லை."

ஒரே சூழ்நிலையை, நீங்கள் இரண்டு வெவ்வேறு விதங்களில் பார்க்க முடியும் -


எதிர்மறையாக அல்லது சாதகமாக. முதல் விற்பனையாளர் அதை ஒரு
பிரச்சனையாக பார்த்தார்; இரண்டாவது விற்பனையாளர் அதை ஒரு
வாய்ப்பாக பார்த்தார்.

அடு த் த மு றை நா ம் ஒரு சி க் கலை எதி ர் கொ ள் ளு ம் போ து ,


வெ று மனே , "அதை ச் செ ய் ய மு டி யா து ." என் பதற் கு மா றா க
"நா ன் எப் படி அதை செ ய் து மு டி க் கலா ம் ?" என் று நம் மை
நா மே கே ட் டு க் கொ ள் வோ ம் .
இரு சகோதரர்கள்

இரண்டு சகோதரர்கள் இருந்தனர். தனது குடும்பத்தினரை அடிக்கும் குடிகாரர்


ஒருவர்.
மற்றொருவர் ஒரு மரியாதைக்குரிய மற்றும் வெற்றிகரமான தொழிலதிபர்
மேலும் தனது குடும்பத்தின் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்.
ஒரே பெற்றோரின் ஒரே சூழலில் வளர்க்கப்பட்ட இரண்டு சகோதரர்கள் எப்படி
இங்ஙனம் மிகவும் வித்தியாசமாக இருக்கு முடியும்? அவர்களைக் கேட்டபோது
பின்வரும் பதில்களை அளித்தார்கள். முதலாமவர் அளித்த பதில் "நான் இப்படி
ஆளானதற்கு காரணம் என்னுடைய குழந்தைப்பருவம். நான் ஒரு சிறுவனாக
இருந்தபோது என் அப்பா குடித்துவிட்டு வந்ததையும் அனைத்து தவறான
விஷயங்களைச் செய்வதையும் பார்த்தேன். எனவே நான் இப்படி ஆனேன்."
இரண்டாவது சகோதரர் சொன்னார்: "என் குழந்தைப் பருவத்தின் காரணமாக
நான் இப்படி ஆனேன். நான் சிறுவனாக இருந்தபோது, என் அப்பா
குடித்துவிட்டு வந்ததையும் அனைத்து தவறான விஷயங்களைச் செய்வதையும்
பார்த்தேன். நான் இருக்க விரும்பியது அப்படி இல்லை என்று நான் முடிவு
செய்தேன்."

நம் வா ழ் க் கை யை தீ ர் மா னி ப் பது சூ ழ் நி லை அல் ல, ஆனா ல்


நா ம் அதற் கு எப் படி எதி ர் வி னை யா ற் று கி றோ ம் என் பதே .
நமக் கு என் ன நடக் கி றது என் பது வெ று ம் 10% தா ன் . ஒரு
சூ ழ் நி லை நா ம் எப் படி எதி ர் வி னை யா ற் று கி றோ ம் என் பது
நம் வா ழ் வி ல் 90% த் தை மு டி வு செ ய் கி றது . நமக் கு
நடப் பதி ல் 10% த் தி ன் மீ து கட் டு ப் பா டு இல் லை . எனி னு ம் ,
மற் ற 90% த் தி ன் மீ து கட் டு ப் பா டு உள் ளது . நா ம் எப் படி
எதி ர் வி னை யா ற் ற வே ண் டு ம் என் பதை எப் போ து ம் நா ம்
தே ர் வு செ ய் யலா ம் .

யார் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்?

ஒரு காகம் காட்டில் வசித்து வந்தது, மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அது,


ஒரு நாள் ஓர் அன்னப்பறவையைப் பார்த்தது. “ஆஹா, இந்த அன்னப்பறவை
இவ்வளவு வெண்மையாக இருக்கிறது, ஆனால் நான் எவ்வளவு கருப்பாக
இருக்கிறேன். இந்த அன்னப்பறவையே உலகின் மகிழ்ச்சியானப் பறவையாக
இருக்க வேண்டும்.” என்று நினைத்தது. இதை அந்த அன்னப்பறவையிடம்
சொல்லிற்று.
“உண்மையிலேயே, அந்த கிளிக்கு இரண்டு நிறங்கள் இருக்கிறது. நான்
நினைக்கிறேன் அது தான் உலகின் மகிழ்ச்சியானப் பறவை.” என்று பதில்
அளித்தது அன்னப்பறவை.
அந்த காகம் கிளியை சந்திக்கச் சென்றது. “எனக்கு இரண்டு நிறங்கள் மட்டுமே
இருக்கிறது, ஆனால் மயிலோ பல்வேறு நிறங்களைக்கொண்டது.” என்று கிளி
விவரிக்கத் தொடங்கியது. அந்த காகம் மயிலை மிருகக்காட்சிசாலையில்
சந்திக்கச் சென்றது. அங்கே, அதைப் பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள்
வந்திருந்தார்கள்.
“அன்புள்ள மயிலே, நீ மிகவும் அழகாக இருக்கிறாய். தினமும்
ஆயிரக்கணக்கான மக்கள் உன்னைப் பார்க்க வருகிறார்கள். ஆனால், மக்கள்
என்னைக் கண்டாலே விரட்டுகிறார்கள். எனவே, நீ தான் உலகிலேயே
மகிழ்ச்சியான பறவை என்று நான் நினைக்கிறேன்.” என்றது.
“ஐயோ! நானே உலகில் மிக அழகான மற்றும் மகிழ்ச்சியான பறவை என்று
எப்போதும் நினைத்தேன். ஆனால் என் அழகு காரணமாக, நான் இந்த
பூங்காவில் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கிறேன். நீ மட்டுமே கூண்டில்
அடைக்கப்படாத ஒரே பறவை என்று நான் கண்டறிந்துள்ளேன். நான் ஒரு
காகமாக இருந்திருந்தால், எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியுடன் சுற்றித் திரிய
முடிந்திருக்கும்."

இது தா ன் நமது பி ரச் சனை யு ம் கூ ட. நா ம் மற் றவர் களு டன்


நம் மை ஒப் பி ட் டு கவலை யடை கி றோ ம் . நா ம் மற் றவர் களு டன்
நம் மை ஒப் பி டு வதை நி று த் து வோ ம் , ஏனெ னி ல் அது நமக் கு
கவலை யை மட் டு மே தரு கி றது .

குறைசொல்வதற்கு முன்

உங்கள் உணவின் சுவையைப் பற்றி குறைசொல்வதற்கு முன் ---


சாப்பிட எதுவும் இல்லாதவர்களைக் குறித்து யோசித்துப் பாருங்கள்.
உங்கள் பெற்றோரைப் பற்றி குறைசொல்வதற்கு முன் ---
அனாதைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.
உங்கள் அறை எவ்வளவு சிறியது என்று குறைசொல்வதற்கு முன் ---
தெருக்களில் வசிக்கிறவர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.
சென்று சேர்வதற்கு பேருந்து எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது என்று
குறைசொல்வதற்கு முன் ---
அதே தூரத்தை நடந்தே கடப்பவர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.
நன்றி செலுத்த எப்பொழுதும் ஏதோ ஒன்று
இருக்கத்தான் இருக்கிறது!

ஒரு சமயம், ஒருவர் தனது வாசிப்பறையில் இருந்தபடி பேனாவை எடுத்து ஒரு


காகிதத்தில் எழுதத் தொடங்கினார்:
- கடந்த ஆண்டு, நான் ஓர் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன், எனது
பித்தப்பை நீக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையின் காரணமாக நீண்ட
காலமாக நான் படுக்கையில் கிடந்தேன்.
- நான் 60 வயதைத் தொட்டேன், எனக்கு பிடித்த வேலையை விட்டுவிட
வேண்டியிருந்தது. இந்த நிறுவனத்தில் எனது 30 வருட வாழ்க்கையை
நான் கழித்திருக்கிறேன்.
- என் தந்தை இறந்தார்.
- கார் விபத்து காரணமாக என் மகன் தேர்வில் தோல்வி அடைந்தான்.
அவன் பல நாட்களுக்கு மருத்துவமனையில் படுக்கையில் கிடக்க
வேண்டியதாயிற்று. கார் முற்றிலும் சேதமடைந்தது. ஐயோ! இது ஒரு
மோசமான ஆண்டு!
அவரின் மனைவி அறையில் நுழைந்தபோது, அவரின் கணவன் சோகமாக
இருப்பதைக் கண்டார். காகிதத்தில் எழுதப்பட்டதை அவர் வாசித்தார். அவர்
அமைதியாக அறையை விட்டு வெளியேறி மற்றொரு காகிதத்தோடு வந்து,
அந்த காகிதத்தை அவரது கணவர் எழுதிய காகிதத்தின் பக்கத்தில் வைத்தார்.
அந்த எழுத்தாளர் இந்தக் காகிதத்தை பார்த்தபோது, அவர் அதில்
எழுதப்பட்டிருந்ததைக் கண்டார்:

- நான் பல வருடங்கள் வேதனையோடு கழித்ததற்கு காரணமான என்


பித்தப்பையை இறுதியாக கடந்த ஆண்டு நான் நீக்கிவிட்டேன்.
- நான் நல்ல ஆரோக்கியத்துடன் 60 வயதைத் எட்டி, என் வேலையில்
இருந்து ஓய்வு பெற்றேன். இப்போது நான் என் நேரத்தை எனக்கு
விருப்பமானவற்றில் எதைப்பற்றியேனும் சிறப்பாக எழுதுவதற்குப்
பயன்படுத்தலாம்.
- என் மகன் ஒரு புதிய வாழ்கையைப் பெற்றிருந்தான். என் கார் முற்றிலும்
சேதப்பட்டுவிட்டது ஆனால் என் மகனுக்கு எந்த பெரிய
அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
இந்த ஆண்டு மிகச்சிறந்ததொரு ஆசீர்வாதமாக அமைந்தது, மேலும்,
நன்றாக நிறைவடைந்தது!

நன் றி செ லு த் து வதற் கு எப் பொ ழு து ம் ஏதே னு ம்


இரு க் கத் தா ன் இரு க் கி றது என் பதை நா ம் நி னை வி ல்
கொ ள் வோ ம் .
இரண்டு ஓநாய்கள்

ஒரு வயதான விவேகமுள்ள மனிதர் தனது பேரனுக்கு வாழ்க்கையைப் பற்றி


போதிக்கிறார். அவர் சொன்னார், “எனக்குள் ஒரு போராட்டம் நடக்கிறது. அது
ஒரு பயங்கரமான போராட்டம், மேலும் அது இரண்டு ஓநாய்களுக்கு இடையே
நடக்கிறது. ஒரு ஓநாய் தீயது - அது பயம், கோபம், பொறாமை, துக்கம்,
பேராசை மற்றும் பொய்கள். மற்றொன்று நல்லது - அது மகிழ்ச்சி, சமாதானம்,
அன்பு, பகிர்வு, இரக்கம், மற்றும் உண்மை. அதே போராட்டம் உன் உள்ளேயும்
நடைபெறுகிறது." பேரன் ஒரு நிமிடம் யோசித்தான், பின்னர், "எந்த ஓநாய்
வெற்றிபெறும், தாத்தா?" என்று கேட்டான்., "எந்த ஒன்றிற்கு நீ தீனியிடுகிறாயோ
அதுவே." என்று பதிலளித்தார் தாத்தா.
தினந்தோறும் எந்த ஓநாய்க்கு நாம் தீனியிடுகிறோம்? எதிர்மறையான
சிந்தனையுள்ள மக்களை நாம் நம்மைச் சுற்றி வைத்துக்கொண்டிருந்தால் மேலும்
எதிர்மறை விஷயங்களை பேசிக்கொண்டிருந்தால், நாம் தீய ஓநாய்க்குத்
தீனியிடுகிறோம். மறுபுறம், நாம் நேர்மறை மக்களுடன் நேரத்தை
செலவிடுவோமேயானால், நல்ல புத்தகங்களை படித்தும், மக்களுக்கு தங்கள்
பிரச்சினைகளை தீர்ப்பதில் உதவினாலும் நாம் நல்ல ஓநாய் தீய ஓநாயை
வெற்றிகொள்ள உதவுகிறோம்.
நா ம் நல் ல ஓநா ய் க் கு த் தீ னி யி டு வோ ம் . மே லு ம் ,
நே ர் மறை யா னவர் களா கவு ம் , மகி ழ் ச் சி யா னவர் களா கவு ம்
மா று வோ ம் !
தன்னம்பிக்கை
யா ர் இறந் தது என் று பா ரு ங் கள்

ஒரு நாள் மாணவர்கள் அனைவரும் பள்ளியின் கதவில் பெரிய குறிப்பு


ஒன்றைக் கண்டனர். அது: "நேற்று இந்த பள்ளியில் உங்களது வளர்ச்சியை
தடுத்துக் கொண்டிருந்தவர் இறந்துவிட்டார். இறுதி சடங்கில் பங்கேற்க நீங்கள்
அழைக்கப்படுகிறீர்கள்." மாணவர்கள் அவர்களது பள்ளி தோழர்களில்
ஒருவருடைய மரணம் பற்றி கேள்விப்பட்டதில் வருத்தமடைந்தனர். ஆனால்
அதே நேரத்தில், அவர்கள் தங்களது வளர்ச்சியை தடுத்த நபர் யார் என்பதை
அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர்.
மாணவர்கள் ஒரு வரிசையில் நின்று ஒருவர் பின் ஒருவராக சவப்பெட்டியின்
அருகில் சென்றனர். சவப்பெட்டியின் உள்ளே பார்த்த ஒவ்வொரு மாணவரும்
அதிர்ச்சியடைந்தார். சவப்பெட்டியின் உள்ளே ஒரு கண்ணாடி இருந்தது மற்றும்
உள்ளே பார்த்த அனைவருக்கும் தன்னைத்தானே பார்க்க முடிந்தது.
கண்ணாடியின் அருகே ஒரு குறிப்பு இருந்தது. அதில் "உன்னுடைய
வளர்ச்சியிலிருந்து உன்னைத் தடுக்கக்கூடிய ஒருவன் நீயே!" என்று
எழுதியிருந்தது.

நா ம் வளர் வதி லி ரு ந் து நம் மை தடு த் து நி று த் த நம்


ஒரு வரா ல் மட் டு மே மு டி யு ம் என் பதை நி னை வி ல்
கொ ள் வோ ம் .
உன்னை விடுவித்துகொள்

ஒருவர் சில யானைகளைக் கடந்து சென்றார். அப்போது அந்த பெரியவர்,


இவ்வளவு பெரிய உயிரினங்கள் தங்கள் முன்னங்கால்கள் சிறிய கயிறுகளால்
மட்டுமே கட்டி நிறுத்தப்பட்டுள்ளது என்பதை கவனித்தார். அந்த யானைகள்
கட்டிலிருந்து எளிதாக விடுபட முடியும். ஆனால், அவை சிறு முயற்சிக் கூட
செய்யவில்லை.
அவர் அருகில் ஒரு யானைபாகனைக் கண்டார். அவை ஏன் விட்டுவிட்டு
விடுதலைப்பெற முயற்சிக்கவில்லை என்று கேட்டார். பயிற்சியாளர்
பதிலளித்தார், "அவை மிகவும் சிறு பிராயமாக இருக்கும் போது அதே
அளவுள்ள கயிற்றைக்கொண்டு அவற்றை கட்டிப் போடுவோம். அந்த வயதில்,
அது போதும் அவை ஓடிவிடாமல் பிடித்து வைக்க. அவை வளர வளர,
அவற்றை அறுத்துவிட முடியாது என்ற நினைப்பிலேயே இருந்து விடுகின்றன.
அவை, இன்னும் கயிறே தங்களை கட்டிவைத்திருப்பதாக நம்புகின்றன. எனவே
அவை விடுதலைப்பெற முயற்சி செய்வதில்லை."
அவர் வியப்படைந்தார். இந்த விலங்குகள் சிறிய கயிறுகளிலிருந்து எளிதில்
விடுதலைப்பெற வலிமை பெற்றிருக்கின்றன. ஆனால், அவை தங்களால்
முடியாது என்று நம்பி சிக்கிக்கிடக்கின்றன. இந்த நம்பிக்கை யானையை
விடுபடுவதிலிருந்து முயற்சிப்பதிலிருந்தும் கூட தடுத்துவிடுகிறது.

யா னை போ ல் , நம் மை த் தடு த் து ப் பி டி த் து நி று த் து ம் எந் த


நம் பி க் கை யு ம் உள் ளதா ? அத் தகை ய எதி ர் மறை
நம் பி க் கை யி லி ரு ந் து வி டு படு வோ ம் !
ஜாடியில் செள் பூச்சிகள்

ஒரு பரிசோதனையில், ஒரு விஞ்ஞானி ஒரு கண்ணாடி குடுவையில் பல செள்


பூச்சிகளை இட்டார். அவை உடனே வெளியே குதித்தன. உடனே அவர்
அவற்றை குடுவையில் மீண்டும் போட்டு வைத்து, ஜாடி மேல் ஒரு கண்ணாடி
மூடியைக்கொண்டு மூடி வைத்தார். அவை மீண்டும் குதித்தபோது, கண்ணாடி
மூடி மீது முட்டிக்கொண்டு மீண்டும் ஜாடியினுள் விழுந்தன. சிறிது நேரம்
கழித்து, அந்தப் பூச்சிகள், கண்ணாடி மூடியில் முட்டிக்கொள்வதைத் தவிர்க்க,
கண்ணாடி மூடியிலிருந்து சற்று குறைந்த உயரம் வரை குதிக்கத்தொடங்கின.
சிறிது நேரம் கழித்து, விஞ்ஞானி அந்த கண்ணாடி மூடியை அகற்றிவிட்டார்.
ஆனால் அந்தப் பூச்சிகள் தொடர்ந்து கண்ணாடி மூடி இருந்த உயரத்தின் சற்று
கீழ் வரையே குதித்துகொண்டிருந்தன. அவை மூடி உயரம் தாண்டி குதிகாமல்
இருக்கக் கற்றுக் கொண்டு விட்டன.
இப்போது, ஜாடியின் மீது மூடி இருக்கிறதோ இல்லையோ, அந்த செள் பூச்சிகள்
இனி ஜாடியிலேயே இருக்கத்தான் போகின்றன. இந்த பூசிகளின் குஞ்சுகளின்
நடத்தையும் இதைப்போன்றே இருக்கும். அதனால் அவைகளும் அந்த
உயரத்தைத் தாண்டிக் குதிக்கப்போவதில்லை.

அந் த செ ள் பூ சி களை ப் போ ல் , நா ம் எதை சா தி த் து


அடை வது என் பதி ன் வரம் பு களை அமை த் து க் கொ ள் கி றோ ம் .
நா ம் நம் மா ல் கு தி க் க மு டி ந் த உயரத் தி ற் கு க் கு தி ப் பதி ல் லை .
உயர் ந் த வி ஷயங் களை சா தி த் தவர் களை ப் பற் றி சி ந் தி த் து ப்
பா ரு ங் கள் ! நா ம் மா ல் எவ் வளவு மு டி யு மோ அவ் வளவு
உயரத் தை எட் டி ப் பி டி த் து வெ ற் றி யடை யலா ம் !

கேட்க மருத்த தவளை

சில தவளைகள் மிக உயரமான ஒரு கோபுரம் ஏறும் போட்டியை ஏற்பாடு


செய்தன. அந்த போட்டியை காண்பதற்கு நிறைய தவளைகள் ஒன்று கூடின.
போட்டி துவங்கியது. கூட்டம் எவரும் கோபுரத்தின் உச்சியை அடைவார்கள்
என்று நம்பவில்லை. அவர்கள், "ஓ, இது மிகவும் கடினம்!" "அவர்கள் உச்சியை
அடைய மாட்டார்கள்." "கோபுரம் மிகவும் உயரமானது." என்று
கூச்சலிட்டார்கள். தவளைகள் ஒன்றன் பின் ஒன்றாக விழத்தொடங்கின.
கூட்டம் தொடர்ந்து கூச்சலிட்டது, "இது மிகவும் கடினம்! யாராலும் முடியாது!"
மேலும் அதிக தவளைகள் சோர்வாகி விட்டன. ஆனால் ஒரு தவளை
ஏறிக்கொண்டிருந்தது, ஒரு பெரும் முயற்சிக்குப் பின்னர் உச்சியை அடைந்தது!
அதனால் மட்டும் அதை செய்ய முடிந்தது எப்படி என்று தெரிந்து கொள்ள
அனைவரும் விரும்பினார். அந்த வெற்றி பெற்ற தவளை செவிடு!
நமக் கு சா த் தி யமா னதை ப் பற் றி நா ம் மற் றவர் களி ன்
கரு த் து க் கு செ வி மடு க் கு ம் வரை மற் றவர் கள் நமக் கு
கொ டு க் கு ம் வரம் பு களு க் கு அப் பா ல் ஒரு போ து ம் எட் ட
மு டி யா து . ஒன் றை செ ய் ய மு டி யா து என் று நமக் கு சொ ல் லி க்
கொ ண் டு இரு ப் பவர் களு க் கு நா ம் செ வி டர் களா கவே
இரு ப் போ ம் .
உலகம் கூடாது எனச் சொன்னாலும் தொடரவும்

சுரேந்திரா சிறுவனாக பள்ளியில் படிக்கும்போது, த ன் ன ம் பி க் கை எனும்


ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டான்.
ஒரு நாள், அவனுடைய ஆசிரியர் அவனை வகுப்பிற்கு முன் செய்யுள் ஒன்றை
ஒப்புவிக்க அழைத்தார். அவன் ஆரம்பித்த உடனே, ஆசிரியர் "இல்லை!" என்று
குறுக்கிட்டார். அவன் மீண்டும் தொடங்கியபோது மறுபடியும் ஆசிரியர்
"இல்லை!" கத்தினார். வெட்கப்பட்ட அவன், உட்கார்ந்துவிட்டான்.
அடுத்த பையன் ஒப்புவிக்க எழுந்து, தொடங்கிய உடனே ஆசிரியை
"இல்லை!" என்று கூச்சலிட்டார். ஆயினும் இந்த மாணவன், அதை நிறைவு
செய்யும் வரைத் தொடர்ந்தான். அவன் உட்கார்ந்தபோது, "மிகவும் நன்று!" என்று
ஆசிரியர் பாராட்டு தெரிவித்தார். சுரேந்திரா எரிச்சல் அடைந்தான்." நானும்,
அவன் ஒப்புவித்ததைப் போலவே தான் ஓதினேன்," என்று அவன்
ஆசிரியரிடம் புகார் கூறினான்.
ஆசிரியர் பதிலளித்தார், "நீ பாடத்தை அறிந்து வைத்திருப்பது மட்டும்
போதாது, நீ உறுதிகொண்டவனாகவும் இருக்க வேண்டும். நீ என்னை நிறுத்த
அனுமதித்த போது, நீ உறுதிகொண்டவனாக இல்லை என்று அர்த்தம்.

உலகி ல் 'இல் லை ' என் று சொ ன் னா லு ம் , 'ஆம் !' என் று


சொ ல் வது ம் அதை நி ரூ பி ப் பது ம் நமது கடமை .
ஆயிரம் வழிகளில் உலகம் 'இல்லை!' என்று கூறும்.
'இல்லை! நீங்கள் அதை செய்ய முடியாது. '
'இல்லை! நீங்கள் சொல்வது தவறு.'
'இல்லை! நீங்கள் திறனற்றவர்
'இல்லை! நீ மிகவும் இளமையாக இருக்கிறாய். '
'இல்லை! நீ மிகவும் பலவீனமாக இருக்கிறாய். '
'இல்லை! அது ஒருபோதும் வேலை செய்யாது. '
'இல்லை! உங்களுக்கு கல்வி இல்லை. '
'இல்லை! உனக்கு பின்னணி இல்லை. '
'இல்லை! உனக்கு பணம் இல்லை. '
'இல்லை! அதை செய்ய முடியாது. '
மற்றும் நம் செவியில் விழும் ஒவ்வொரு 'இல்லை!'யானது நாம் நினைத்தக்
காரியத்தை முழுமையாக கைவிடும் வரையில் நமது நம்பிக்கை சிறிதுசிறிதாகக்
குறைக்கக்கூடும்.
இன்று இந்த உலகம் நம்மிடம் 'இல்லை!' என்று சொல்லும்போது நாம்
உறுதியுடன் 'ஆம்!' என்று சொல்லவும், நிரூபித்துகாட்டவும் வேண்டும்.

மு ழு உலகமு ம் , "இல் லை , உங் களா ல் மு டி யா து " என் று


சொ ல் லட் டு ம் , நா ம் நம் மீ து நம் பி க் கை யு டன் "ஆமா ம்
என் னா ல் மு டி யு ம் !" என் று சொ ல் வோ மே யா னா ல் , வெ ற் றி
நி ச் சயம் நமதே !
லட்சாதிபதியின் காசோலை

ஒரு தொழிலதிபர் கடனில் மூழ்கிக்கிடந்தார் மேலும் அதிலிருந்து விடுபட எந்த


வழியையும் அவருக்குத் தெரியவில்லை. அவருக்கு கடன் கொடுத்தவர்கள்,
பணத்தைத் திரும்ப செலுத்தக் கோரினர். அவர் தனது நிறுவனத்தை
மூடுவதிலிருந்துத் தடுக்க முடியுமா என்று யோசித்தவாறு பூங்காவில்
உட்கார்ந்திருந்தார். அப்போது, திடீரென ஒரு முதியவர் அவரிடம் வந்து, "ஏதோ
ஒன்று உங்களை தொந்தரவு செய்வதாகத் தோன்றுகிறது!" என்றார். கேட்டபின்,
"நான் உங்களுக்கு உதவ முடியும்" என்று முதியவர் கூறினார். முதியவர் ஒரு
காசோலையை எழுதி, அந்த தொழிலதிபர் கையில் கொடுத்து, "இதை எடுத்துக்
கொள்ளுங்கள், இன்றிலிருந்து சரியாக ஒரு வருடம் கழித்து என்னை இதே
இடத்தில் சந்திக்கவும்.” என்றார். நீங்கள் அந்த நேரத்தில் எனக்குத் திருப்பிச்
செலுத்தலாம்,"என்றார். பின்னர் சென்றுவிட்டார்.
உலக பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட், கையெழுத்திட்ட ஒரு
மில்லியன் டாலருக்கான காசோலையை அந்த தொழிலதிபர் தனது கைகளில்
கண்டார். "உடனடியாக என் பிரச்சினைகளை என்னால் தீர்க்க முடியும் "என்று
அவர் நினைத்தார்.
ஆனால், வங்கிக் கணக்கில் காசோலையை வரவு வைப்பதற்கு பதிலாக,
ஏதேனும் ஓர் அவசர காலத்தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் என
நினைத்து அந்த காசோலையை பத்திரப்படுத்தி வைக்க முடிவு செய்தார்.
மாற்றப்பட்ட சிந்தனையுடன் அவர் முழு உற்சாகத்துடன் கடினமாக உழைத்து,
பல பெரிய ஆர்டர்களைப் பெற்றார். சில மாதங்களுக்குள், அவர் கடனிலிருந்து
வெளியேறி, பெரிய அளவில் பணம் சம்பாதித்தார்.
ஒரு வருடம் கழித்து அவர் காசோலையை எடுத்துக்கொண்டு பூங்காவிற்குத்
திரும்பினார். விரைவில், அந்த முதியவர் தோன்றினார். ஆனால் தொழிலதிபர்
அவரிடம் அந்த காசோலையை கொடுக்கவிருந்த தருணத்தில், ஒரு நர்ஸ் ஓடி
வந்து முதியவரை பிடித்துக்கொண்டார். "அவர் உங்களை தொந்தரவு ஒன்றும்
செய்யவில்லை என நான் நம்புகிறேன். அவர் எப்போதும் மனநல
காப்பகத்திலிருந்து தப்பித்து வந்து மக்களிடம் தான் வாரன் பஃபெட் என்று
சொல்லிக்கொள்கிறார்,” என்று கூறிய அந்த நர்ஸ் அவரை இழுத்துச் சென்றார்.
ஆச்சரியமடைந்து அங்கு அதிர்ச்சியடைந்தவாறு நின்றிருந்தார் அந்த
தொழிலதிபர்! இந்த ஒரு வருட காலமாக, தன்னிடம் ஒரு மில்லியன் டாலர்கள்
இருப்பதாக நினைத்தவாறு அவர் பணியாற்றினார்.

நமது வா ழ் க் கை யை ச் சு ழலச் செ ய் வது பணம் அல் ல. நமது


தன் நம் பி க் கை யே நா ம் எதை வே ண் டு மா னா லு ம்
சா தி க் கவல் ல சக் தி யை நமக் கு க் கொ டு க் கி றது .
ஒருபோதும் கைவிட்டுவிடாதே
கை வி வி ட் டு டா தே
நீ போடும் திட்டங்கள் தவறாகிப்போகும் போதும்,
அவை சில நேரங்களில் போகத்தான் போகும்,
நீ போராடி செல்லும் பாதை கடினமானதாக இருக்கும்போதும்,
நிதி குறைந்து, கடன்கள் உயர்ந்திருக்கும்போதும்,
நீ புன்னகைக்க நினைத்தாலும், பெருமூச்சுவிட நேரும்போதும்,
நீ கவலைகள் மற்றும் பிரச்சினைகளால் மனச்சோர்வடைந்தபோதும்,
தேவைபட்டால் நீ சற்றே ஓய்வெடுத்துக்கொள், ஆனால் கைவிட்டுவிடாதே.
வாழ்க்கை அதன் திருப்பங்களுடனான ஓர் விசித்திரம்,
நம் ஒவ்வொருவருக்கும் சில நேரங்களில் கற்றுக்கொண்டிருக்கும்போதும்,
தோல்விகள் மீண்டும்மீண்டும் வருவதுமுண்டு.
தொடர்ந்திருந்தால் (ஒரு கடினமான அல்லது விரும்பத்தகாத சூழ்நிலையிலலும்), வெற்றி
பெறலாம்.
மந்தகதியாகத் தெரிந்தபோதிலும் கைவிவிட்டுடாதே
அடுத்த முயற்சியில் வெற்றி கிட்டலாம்.
தோல்வியின் மறுபக்கம் வெற்றி.
சந்தேகங்க மேகங்களின் வெள்ளி நிறச்சாயல்,
நீ வெற்றிக்கு எவ்வளவு அருகிலிருக்கிறாய் என்பதை மறைக்கும்
எட்டும் தொலைவே அது இருந்தாலும் எட்டாக்கனியென நீ நினைக்கும்போது;
இடிபோலிறங்கினாலும் (தோல்விகள்), உனது போராட்டம் தொடரட்டும்.
நிலைமை படுமோசமானதாகத் தோன்றும்போது, கண்டிப்பாக கைவிட்டுவிடாதே.
கைவிட்டுவிடாத தவளை

ஒரு நாள், இரண்டு தவளைகள் தற்செயலாக கிரீம் வாளி ஒன்றில் விழுந்து


வெளியே முடியவில்லை. அவர்கள் மூழ்குவதிலிருந்து தப்பிக்க நீந்திக்கொண்டே
இருந்தன, ஆனால் அவை சோர்வடையத் துவங்கின.
"இது பயனற்றது, நாம் விட்டுவிட வேண்டும்." என்று ஒரு தவளை
கூறியவாறிருந்தது, ஆனால் மற்ற தவளை நீந்துவதைத் தொடர்ந்தது.
இறுதியாக, முதல் தவளை கைவிட்டு மூழ்கிவிட்டது. மற்ற தவளை தனது
நண்பனின் இழப்பில், சோகமாக இருந்தது, ஆனால் அது கைவிடவில்லை. அது
நீந்தியவாறு இருந்தது. இறுதியாக கிரீம் வெண்ணெயாக மாறியது மேலும்
தவளை சுலபமாக வாளியிலிருந்து வெளியே குதித்துவிட்டது.

நீ ங் கள் கஷ் டத் தி ல் இரு க் கு ம் போ து , ஒரு போ து ம்


கை வி டா தீ ர் கள் . நீ ந் தி க் கொ ண் டே இரு ங் கள் , கி ரீ ம்
வெ ண் ணெ யா க மா றி வி டு ம் , மற் று ம் வி ஷயங் கள்
வி ஷயங் கள் நல் லதா க மா று ம் ! வி ட் டு க் கொ டு ப் பதை ப் போ ல
உணரு ம் போ து , வெ ற் றி கோ ட் டி லி ரு ந் து எட் டி வி டக் கூ டி ய
சி று தூ ரத் தி ல் நா ம் இரு ப் போ ம் . ஒரு போ து ம்
கை வி ட் டு வி டா தீ ர் கள் .

You might also like