You are on page 1of 1

மாரணம் மூலிகை

மாரணம் என்றால் என்ன


அழிப்பது, கொல்வது . மனிதர்கள் , தனக்குள்ளும் , வெளியிலும் இருக்கும் தீய சக்திகளை அழிப்பதற்காகவே
ஏற்ப்பட்டது. அஷ்டகர்மாக்களை ஒருவர் தனக்காகவும் , பிறருக்காகவும் செய்வதால் இவைகள் கர்மா அதாவது
தொழில் எனப்படுகிறது. இறைவனார்
மாரணத்திற்கு உபயோகிக்கும் எட்டுவிதமான மூலிகைகள்.
1. நச்சுப்புல்,
2. நீர்விஷம்,
3. சித்திரமூலம்,
4. அம்மான் பச்சரிசி,
5. கார்த்திகை கிழங்கு,
6. மருதோன்றி,
7. காஞ்செறிவேர் ,
8. நாவி ஆகும்.
இதில் பலவகையான மாரணங்கள் உண்டு
மனிதர்களை மாரணம் செய்ய – நச்சுப்புல், நீர்விஷமும்,
வியாதிகளை மாரணம் செய்ய - சித்திரமூலம், காஞ்செறிவேரும்,
கண்ணாடிகளை உடைக்க – அம்மான் பச்சரிசியும்,
மிருகங்களை மாரணம் செய்ய – மருதோன்றி, கார்த்திகை கிழங்கும் .
இந்த குறிப்பிட்ட மூலிகைகளுக்கும் , அதன் தொடர்பான கர்மாக்களுக்கும் மிகுந்த இசைவு உள்ளதை அரும்பாடுபட்டு
கடுமையான விரத அனுஷ்டானங்களை , பயிற்சியை செய்து மகரிஷிகளும் , சித்தர்பெருமக்களும் ,ஞானிகளும்
கண்டறிந்து உலகிற்கு மனிதர்களின் நன்மையை கருதி அருள் செய்திருக்கின்றார்கள் .

இவைகளை அவர்களின் நோக்கத்தினை ஒட்டியே அதாவது சக மனிதரை இம்சிக்காமல் எல்லோரையும்


தன்னைப்போலவே எண்ணி எல்லோருக்கும் நன்மைகளை செய்யும் பொருட்டு பயன்படுத்தினால் இப்பிறவி மட்டுமல்ல
எப்பிறவியிலும் விசேசமாக வாழலாம் .

பிற உயிர்களுக்கு ஏதேனும் ஒரு வழியில் சங்கடம் ஏற்படுத்தினாலும் மனிதரது இப்பிறவி மட்டுமல்ல எப்பிறவியிலும்
பிறந்து எல்லோராலும் இகழ்ந்து பேசப்படும் பிறப்பாகி அல்லல்பட நேரிடும் என்பதை மறக்க வேண்டாம்

You might also like