You are on page 1of 1

விளையாடும் 

முறை[தொகு]

பம்பரம்

பம்பரக்கட்டை மற்றும் கயிறைப் பயன்படுத்தி விளையாட்டைத் துவங்க வேண்டும். இதனை


ஒருவராகவோ அல்லது பலருடன் சேர்ந்தோ விளையாடலாம்.
பம்பரத்தைக் கொண்டு பல வித விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. முதலில் தரையில் ஒரு
வட்டமிட்டுக் கொள்ள வேண்டும், பின்பு 1, 2, 3 சொல்லி எல்லோரும் பம்பரத்தை ஒரே நேரத்தில் சுழற்ற
வேண்டும். பின்பு சாட்டையை பயன்படுத்தி பம்பரக்கட்டையை மேல் எடுக்க வேண்டும். அவ்வாறு
எடுக்க முடியாதவர்களின் பம்பரங்களை வட்டத்தின் உள்ளே  வைக்க வேண்டும். வெளியே
உள்ளவர்கள் வட்டத்திலிருக்கும் பம்பரத்தை, தங்கள் பம்பரத்தைப் பயன்படுத்தி வெளியே எடுக்க
வேண்டும். அவ்வாறு பம்பரத்தை வட்டத்தினுள் விடும்போது, பம்பரம் இல்லாதவர் அந்தப் பம்பரத்தை
பிடித்துவிட்டால் அந்தப் பம்பரமும் வட்டத்தினுள் வந்துவிடும். சுழற்றுபவரின் பம்பரம் சுழலவில்லை
எனில், அந்தப் பம்பரமும் வட்டத்தினுள் வைக்கப்படும்.  வட்டத்தில் உள்ள அனைத்துப் பம்பரங்களும்
வெளியே வந்து விட்டால் மீண்டும் ஆட்டத்தைத் துவங்க வேண்டும்.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE
%B0%E0%AE%AE%E0%AF%8D#%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF
%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE
%B1%E0%AF%88

You might also like