You are on page 1of 1

Ambigaiye Eswariye

அம்பிகையே ஈஸ்வரியே எம்மை


ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி
ஓங்காரியே வேப்பிலைக்காரி ஒரு
உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி (அம்பிகையே)

வேலையிலே மனசு வச்சோம் முத்துமாரி – இப்போ


வெற்றிக் கொடி நாட்டுகிறோம் முத்துமாரி
ஆலமரம் போலிருக்கும் எங்கள் கூட்டம் – எம்மை
ஆதரிச்சு வாழ்த்துதடி முத்துமாரி (அம்பிகையே)

ஏழைகளை ஏச்சதில்லை முத்துமாரி - நாங்க


ஏமாத்தி பொழச்சதில்லை முத்துமாரி
வாழ விட்டு வாழுகிறோம் முத்துமாரி - இனி
வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி (அம்பிகையே)

சிவகாமி உமையவளே முத்துமாரி - உன்


செல்வனுக்கும் காலமுண்டு முத்துமாரி
மகராஜன் வாழ்கவென்று வாழ்த்து கூறி - இந்த
மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி
(அம்பிகையே)

You might also like