You are on page 1of 3

கேள்விகள் (எழுத்து)

1. மெய், உயிர் ஆகிய கூட்டில் ஒலிக்கும் எழுத்துகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிடுக.


(5 புள்ளிகள்)
 உயிர் + மெய் = உயிர்மெய்

 க் (மெய்யெழுத்து) + அ (உயிரெழுத்து) = க
 பதினெட்டு மெய்யெழுத்துகளோடும் பன்னிரண்டு உயிரெழுத்துகளும் கூட இருநூற்றுப்
பதினாறு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன. (18x12 = 216).
 பதினெட்டு மெய்யுடன் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்து உயிர்க்குறில்கள் கூடுவதனால்
(18x5 = 90) தொண்ணூறு உயிர்மெய்க் குறில்களும், பதினெட்டு மெய்யுடன் ஆ, ஈ, ஊ,
ஏ, ஐ, ஒ, ஓ, ஔ என்னும் ஏழு உயிர்நெடில்கள் கூடுவதனால் (18x7 = 126) நூற்று
இருபத்தாறு உயிர்மெய் நெடில்களும் பிறக்கும்.
 மெய்க்கு மாத்திரை அரை உயிர்க்குறிலுக்கும் உயிர்நெடிலுக்கும் மாத்திரைகள் முறையே
ஒன்றும் இரண்டுமாகும். ஆதலால், உயிர்மெய்க் குறிலுக்கு ஒன்றரை மாத்திரை ஆகும்.

2. குற்றியலுகரம் மற்றும் குற்றியலிகரத்தை வேறுபடுத்தி கூறுக. (10 புள்ளிகள்)


குற்றியலுகரம் குற்றியலிகரம்
உகரம் குறைந்து ஒலிக்கும் இகரம் குறைந்து ஒலிக்கும்

குறு மை+இயல்+உகரம் குறு மை+இயல்+இகரம்

தனி நெடிலை அடுத்து இரண்டுக்கு நிலைமொழி ஈற்றில் குற்றியலுகரம்


மேற்பட்டபல எழுத்துக்கள் கொ ண்ட அமைந்து வருமொழி முதலில் யகரம்
சொற்களின் ஈற்றில் வல்லின வந்தால், நிலைமொழியின் இறுதி யில்
மெய்களாகி ய (க்,ச்,ட்,த்,ப்,ற்) நிற்கும் உகரம் இகரமாகத் தி ரியும்
எழுத்துக்களின் மேல் ஏறிவரும் உகரம்

நாடு + யாது = நாடியாது (ட்+இ) கொக்கு (க்+உ)


பத்து + யாது = பத்தி யாது (த்+இ) கொழுந்து (த்+உ)

3. தமக்குரிய மாத்திரையில் நீண்டொழிக்கும் எழுத்துக்களைச் சான்றுகளுடன் நிறுவிடுக. (20


புள்ளிகள்)
 அளபெடை என்பது எழுத்தின் ஒலிக்கு மாத்திரை கூட்டுதல்.
 செய்யுளில் இசையைக் கூட்டுவதற்குப் பயன்படுத்தினால் அது செய்யுளிசை அளபெடை.
இதனை இசைநிறை அளபெடை என்றும் வழங்குவர்.
 வினையெச்ச வாய்பாட்டை இசையாக்கி ஒலித்துக் காட்டுவது சொல்லிசை அளபெடை.

 இந்த இரு காரணங்களும் இல்லாமல் வெறுமனே இனிய இசைக்காக இசை கூட்டி எழுதுதல்
இன்னிசை அளபெடை.
 இவற்றை எழுத்துப் பாங்கு நோக்கி
உயிரளபெடை,
ஒற்றளபெடை
என இரண்டாகப் பகுத்துக் காண்பர்.
 நெடில் எழுத்துகளே அளபெடுக்கும். நெடில் எழுத்து அளபெடுக்கும் போது, அந்த நெடில்
எழுத்திற்கு இனமான குறில் எழுத்து அளபெடுப்பதற்கு அடையாளமாக அதன் அருகில்
எழுதப்படும். செய்யுளில் இவ்வாறு எழுதப்பட்டுள்ள இடங்களில் நீட்டி ஒலிக்க வேண்டும்
என்பது அதன் கருத்தாகும். நெடில் எழுத்து இரண்டு மாத்திரை. அளபெடுக்கும்போது அதற்கு
இனமான குறில் எழுத்தையும் எழுதுவதால், குறிலுக்கு உரிய ஒரு மாத்திரையும் சேர்த்து
உயிரளபெடை மூன்று மாத்திரை நேரம் ஒலிக்கும்.
 இன எழுத்துகள் ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ என்பனவாகும், ஐகாரத்திற்கும்
ஒளகாரத்திற்கும் இணையான குறில் இல்லை என்பதால், முறையே இகரம், உகரம் ஆகியவை
அடையாளமாக எழுதப்படும்.

You might also like