You are on page 1of 2

ஆசானின் தவிப்பு!

இரவு முழுவதும் அவர்களின் அலறல் ஜனனியை வாட்டியது.” செ நான் ஏன் அப்படிச்


செஞ்சேன்னு தெரியல.. தப்புப் பண்ணிட்டேன்…என மீண்டும் மீணடு
் ம் இதையே அவளது தேழியிடம்
கூறி புலம்பினான்.

மறுநாள், மூவருக்கும் மிட்டாய் வாங்கிகொடுத்து மன்னிப்பு கேட்டால் ஜனனி; ஆனால், மூவரும்


பிடிவாதத்தோடு அதனை மறுத்துவிட்டனர். நிகழ்ந்ததை மீன்டும் என்ணி பார்க்கின்றது அவளது
மனது…

கிரிங்ங்ங்ங்… பாடம் துவங்குவதர்கான முதல் மணியோசை அது. மானவர்கள் அனைவரும்


வகுப்பை நோக்கி விரைந்து கொன்டிருந்தனர். ஆசிரியரும் தங்களது கற்றல் கற்பித்தல்
நடவடிக்கைக்காகத் தயார் செய்து கொன்டிருந்தனர். பள்ளியே பரப்பரப்பாக இருந்தது.
அப்போது,”டீச்சர், இன்று நடன பயிற்சி உண்டா” எனும் குரல் கேட்டு திரும்பி பார்த்தாள் ஜனனி.
ஏக்கத்துடன் கயல்விழி நின்றிருந்தாள். கயல்விழி மிகவும் பொறுப்பான மாணவி …. ஆசிரியர்களை
மதிக்கும் குணம்…சிறு வயதானாலும் சூழலையும் அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்டவள்…

“மா…இன்று டீச்சருக்கு வேலை கொஞ்சம் நிறைய இருக்கு…...நாளைக்குப் பாத்துக்கலாம்”


என்றான். என்ன செய்வது மூன்றௌ மாத பயிற்சி ஆசிரியராகச் சென்றிருந்தாலும் பல வேலைகள்
அடுத்தடுத்து வரிசை பிடித்து நின்றிருந்தன… இதற்கிடையில் இந்த நடன பயிற்சி வேறு எனும் வெறுப்பு
இருப்பினும் பிள்ளைகளிடம் அதனை வெளிக்காட்டாது அமைதியாய் பேசி அவனை அனுப்பினாள்
ஜனனி.

மலர்ந்த முகத்தோடு வந்த கயல்விழி வாடி சென்றாள்…யார் வருத்தப்பட்டாலும் பரவாயில்லை…


எனக்கு என் வேலை தான் முக்கியம் என இருக்க முடியாமல் உடனே கயல்விழியை அழைத்து ஓய்வு
நேரத்திற்குப்பின் பயிற்சி செய்யலாம் என்றால் ஜனனி… உடனே ஓடி வந்து ஆசிரியரைக் கட்டி
அணைத்துக் கொண்டான் கயல்விழி. அந்த அணைப்பில் அனைத்து வெறுப்பும் சோர்வும் பறந்து
விட்டன.

ஓய்வு முடிந்ததைக் குறிக்க மீண்டும் மணி அலறியது…இரண்டாம் மாடியில் ஒதுக்குப்புறமாகத்


தனித்திருந்த மண்டபத்தில் நடன பயிற்சி நடத்தப்படும்…ஜனனிக்கு முன்பே கற்றுக் கொடுத்தவற்றை
மாணவர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்தனர்…ஜனனியின் தோழி மேலும் சில நடன அசைவுகளைக்
கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்…

அப்போது நாதன், சிவா, அமுதன் ஆகிய மூவரும் நீர் அருந்த வேண்டும் என்று
கேட்டனர்..இவர்கள் மூவரும் அப்பள்ளியிலேயே அதிகக் குரும்புமிக்க மாணவர்கள்…ஆசிரியர் எதைக்
கூறினாலும் உடனே எதிர்த்துப் பேசிவிடுவார்..பாட நேரத்தில் இவர்கள் வகுப்பில் இருப்பதைக் காட்டினும்
தலைமையாசிரியர் அறையில் இருப்பதுதான் அதிகம்…இருப்பினும், மூவரும் ஜனனியிடம்
மரியாதையாகவும் பாசமாகவும் நடந்து கொளவர்…

ஆடி களைத்திருந்த அவர்களைத் தடுக்க முடியாது சம்மதம் தெரிவித்தாள் ஜனனி…


திடீரென்று, ஆசிரியர் கோபாலின் குரல் கேடு வெளியே ஓடினாள்…”டீச்சர் இந்தக் கம்பி மேல ஏறி
விளையாடுறாங்க…இதெல்லாம் பார்க்க மாட்டீங்களா…இங்கிருந்து கீழே விழுந்தால் என்ன ஆகுறது
எனும் அவனது அவரது…” வார்த்தைகள் அவனைப் படபடக்கச் செய்தன….

காலையிலிருந்து உண்ணாத கோபம்….அதிகமான வேளைபளு…இதற்கிடையில் இவர்கள்


இப்படிச் செய்கிறார்கள் எனும் கோபத்தில் தலைமையாசிரியரிடம் கூறப் போவதாக மிரட்டினான்…
மூவரும் பயந்து அழுததால் மன்னித்து அவர்களை வகுப்புக்கு அனுப்பினாள் ஜனனி…
ஆசிரியர் வகுப்புக்கு வருவதை அறியாத அவர்கள் மூவரும் “டேய்…சூப்பரா நடிச்சு அவங்களே
ஏமாத்திட்டியே” எனச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்…ஜனனி இதைக் கேட்டதும் கோபத்தின்
உச்சிக்குச் சென்று சற்றும் சிந்திக்காது பக்கத்து வகுப்பில் இருந்த தலைமையாசிரியரிடம் இதனைக்
கூறினான்…தலைமையாசிரியர் பிரம்பால் மூவரையும் அடி பின்னி விட்டார்… ஆங்கரமாய் இருக்கும்
தெய்வம் குழந்தையின் குரலைக் கேட்டுத் தனிவதைப்போல் அவர்களின் கண்ணீர் அவனைத் தனிய
செய்தது…

“டீச்சர்” எனும் குரல் கேட்டு எண்ண அலைகளிலிருந்து மீண்டாள்…”டீச்சர் எங்கள்


மன்னிச்சுடுங்க…தெரியாம செஞ்சுட்டோம்…” என்று அழுதனர் அமுதனும் நாதனும். இந்தச்
சிக்கலுக்குப் பின்னர் ஒருவாரமாக வகுப்பில் அவளிடம் பேசாதவர்கள் இன்று பேசியது அவளுக்கு
மகிழ்ச்சியை அளித்தது. இருந்தும், சிவா பேசவில்லை எனும் சோகம் அவனை வாட்டியது…”சிவா
எங்க…?” ஏன் அவன் வரல…? இன்னும் என் மேல கோபமா…?” என்றாள்.

அந்த வகுப்பிலேயே அவளுக்கு மிகவும் பிடித்தது சிவாதான்…அவனே ஒருவாரமாகத் தன்னைப்


பார்க்கக்கூட விரும்பாது முகத்தைத் திருப்பியதும் பேசாதிருந்ததும் ஜனனியை வருந்த செய்தது….

“இல்ல டீச்சர்…அவனுக்கு உங்க மேல கோபமெல்லாம் இல்ல…எங்க கிட்ட கூட டீச்சர் ரொம்ப
நல்லவங்கன்னு சொன்னானே…” என்ற பதில் அவளை வருத்ததில் இருந்து விடுவித்துக் குழப்பத்தில்
ஆழ்த்தியது….

You might also like