You are on page 1of 3

மச்சக்காரன் யார்?

பொருமையுள்ளவர்கள் படிக்கவும் நீண்ட பதிவு....


சனி கிரகம் மச்சத்திற்கு காரகன்
செவ்வாய் சிறாய்ப்பு காயங்களுக்கு காரகன்....
கேது தழும்புகள் மருவுக்கு காரகன்...
ராகு வெட்டு காயம் பிளவுகள் வெடிப்புகளுக்கு காரகன்...
இதன் அடிப்படையில் இந்த பதிவை பார்க்கலாம்....
பொதுவாக ஜாதக கட்டத்தில் லக்னம் முதல் 12 பாங்களுக்கு உடலை பிரித்து
கொடுத்துள்ளார்கள்... உதாரணம் லக்னம் தலை... நான்காம் இடம் மார்பு... 6 ம் இடம் இடுப்பு...
12 ம் இடம் பாதம் என்பது போல்... இது அனைவரும் அறிந்தது தான்....
இப்போது சனி உங்கள் ஜாதகத்தில் எங்கு உள்ளார் என பாருங்கள்... அது உங்கள்
லக்னத்திற்கு எந்த பாவமாக வருகிறதோ அந்த பாவத்தில் உடல் ரீதியாக மச்சம் மற்றும்
கரும்புள்ளிகள் தோன்றும்... (இதை உயிர் பொருளாக பிரித்தால் இன்னும் துல்லியமாக
கூறலாம்) மற்றும் அதன் பார்வை படுகின்ற 3/7/10 பாவங்கள் உங்கள் லக்னரீதியாக எந்த
பாவமாக வருகிறதோ அங்கு மச்சங்கள் தோன்றும் (இது இரண்டாம் தரம்)....
மூன்றாவது தரமாக நிச்சயம் இருக்கும் செக் பன்னுங்க அதாவது சனியின் நட்சத்திரம்
இருக்கும் கடகம் விரிச்சகம் மீனம் உங்கள் லக்னத்திற்கு எந்த பாவமாக வருகிறதோ அந்த
இடத்தில் மச்சம் நிச்சயம் உண்டு...
மற்றும் சனியின் பார்வையில் 3 ம் பார்வை நிச்சயம் அடையாளக்குறீயீடாக மாற்றும்...
அதாவது சனியின் மூன்றாம் பார்வை படும் இடம் உங்கள் லக்னத்திற்கு எந்த பாவமாக
வருகிறதோ அந்த இடத்தில் நிச்சயம் மச்சம் ஏற்படும்...
உதாரணம் சனி கன்னியில் இருந்தால் இடுப்பில் மச்சம் உண்டு மற்றும் அதன் பார்வை படும்
இடத்தில் மச்சம் ஏற்படும்..
இதில் மூன்று ஏழு பத்தாம் பார்வைகள் ஏற்படக்கூடிய விரிச்சக பாகத்திலும் மீனம்
எனப்படும் பாதத்திலும் மிதுனம் எனும் தோல்பட்டை மார்பின் மேற்பகுதியிலும் மச்சம்
ஏற்படும்....
அதேபோல் நட்சத்திரங்கள் இருக்கும் கடகம் விரிச்சக மீனத்திலும் லக்னரீதியாக எந்த
பாவமாக வருகிறதே் அங்கு மச்சம் ஏற்படும்....
அதே போல் எந்த கிரகத்தை பார்க்கிறதோ அந்த கிரகத்தின் உடல் உருப்பில் மச்சம்
ஏற்படுத்தும்...
உதாரணம் சுக்ரன் எனில் கண்ணத்திலும் புதன் எனில் நெற்றி நாக்கு மற்றும் தோல்பட்டை
கை மற்றும் கால் பாதத்திலும் குரு எனில் மூக்கிலும் தொடையிலும் சனி எனில் கால்
பகுதியிலும் இப்படியாக உருவாக்கும்...
இதில் கிரகங்கள் தன் ஆதிபத்திய வீட்டில் இரண்டில் எதை தொடர்பு கொள்கிறதோ அந்த
உடல் பகுதியில் மச்சம் உண்டாகும்... உதாரணம் புதனை சனி பார்ததால் புதன்
காலபுருசனின் மூன்றாம் பாவமான தோல்ட்டை கை தொண்டை மற்றும மார்பின்
மேற்பகுதியையும்... 6 ம் இடமான இடுப்பு பகுதியிலும் மச்சம் ஏற்படலாம்....
குறிப்பாக இதில் புதன் மூன்றாம் வீட்டை ஹோல்ட் செய்தால் மூன்றாம் இடத்தை குறிக்கும்
பகுதியிலும் அதே 6 ம் இடத்தை ஹோல்ட் செய்தால் இடுப்பிலும் மச்சம் உண்டாகும்.... இதை
போலவே மற்ற கிரகங்களுக்கு எடுக்கவும்....
சனி இருக்கும் வீட்டின் அதிபதி அல்லது சனி பார்க்கும் வீட்டின் அதிபதி உச்சம் அல்லது
ஆடசி ஆனால் மச்சம் உச்சலெவலில் பேர் சொல்லறமாதிரி இருக்கும்....
பின்குறிப்பு: ஆபாசம் அல்ல புரிந்து கொள்ள பதிவு செய்கிறேன்... பெண்களுக்கு நான்காம்
இடத்தில் அல்லது நான்காம் அதிபதியை சனி பார்வையால் தொடர்பு கொண்டு நான்காம்
அதிபதி ஆட்சி உச்சம் ஆனால் மச்சம் அடையாளகுறியீடாக மார்பு பகுதிமாறும்... (இதற்கு
மேல் விளக்கம் குடுத்தால் ஆபாசமாக தோன்றும்...)... ஒரு பாடலை உதரணமாக
சொல்கிறேன் புரிந்து கொள்ளுங்கள்... (பாடல் பிராசாந்த் நடித்த ஸ்டார் படத்தில் வரும்
மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டுனியே என்ற பாடலுக்கு ஏற்றவாறு
அமையும்).
சனி அல்லது கேது தொடர்பு சூரியன் சந்திரனுக்கு இருந்து சூரியன் சந்திரன் 2/12 அல்லது
சுக்ரனை தொடர்பு கொண்டால் கண்ணில் மச்சம் அல்லது பூ விலும்...
சரி மச்சத்தால் மாங்கா மச்சம் மீன் மச்சம் பெரிய சைஸ் மச்சம் இது எப்படி ஏற்படுகிறது....
பொதுவாக ராகு கேது தொடரபு சனிக்கு வந்தால் பார்வை அல்லது சாரம்... மச்சம்
விகாரமாக வடிவங்கள் மாறி மச்சம் உருவாகும்... உருவங்கள் சனி நின்ற நட்சத்திரத்தின்
வடிவங்களை ஒத்திருக்கும்... வடடம் சதுரம் முக்கோணம் போன்று.... (அடிப்படை வடிவங்கள்
புத்தகத்தில் உள்ளது படியுங்கள்)...
இதுவரை படித்தவிசயத்தை வைத்து செக் செய்து பாருங்கள்... சரியாக வருகிறதா என....
இதைபோன்றே #கேது வுக்கும் பார்க்னும் கேது இருக்கும் இடத்தில் மரு அல்லது தழும்புகள்
உண்டாகும்...
சனி கேது தொடர்பு மருவாகவும்... தனித்த கேது தழும்புகளாகவும்... புதன் கேது அலர்ஜியால்
ஏற்படும் தழும்புகள் அல்லது தேமலாகவும் செவ்வாய் கேது காயங்களால் ஏற்படும்
தழும்புகளாகவும் அல்லது விபத்தால் அல்லது ஆப்ரேசனால் ஏற்படும் தழும்புகளாகவும்
இருக்கும்...
கேது இருக்கும் காலபுருச ராசியின் உடல் பாகத்திலும் கேது நட்சத்திரம் இருக்கும் தலை
வயிறு தொடை பகுதியிலும் தலும்புகள் உண்டாகும்....
உதாரணம் கேது கும்பத்தில் இருந்தால் முழுங்காலிலும் மீனத்திவ் இருந்தால் பாதத்திலும்
இப்டியாக பார்க்கனும்....
உங்களுக்கு இங்க ஒரு டவுட் வரும் அப்ப எல்லாருக்கும் தலை வயிறு தொடையில் தழும்பு
வருமா என்று... இதை பின் குறிப்பில் பின்னாடி பதிவு செய்கிறேன் படித்து விடுங்கள்...
இதை போன்றே #ராகுவுக்கு பார்க்கனும்.. ராகு இருக்கும் இடத்தில் பிளவு உண்டாகும்...
செவ்வாய்ராகு கத்தியால் அல்லது ஆயுதத்தால் உண்டாகும் வெட்டு காயங்கள் போன்று ...
ராகு சனி நோயால் வெட்டி எரியப்டும் பிளவுகள்... இப்படியாக பார்க்கனும்....
இதை போன்றே #செவ்வாய்க்கு
செவ்வாய் இருக்கும் இடம் அல்லது பார்க்கும் இடத்தில் சிறாய்ப்பு காயங்கள் நிச்சயம்
ஏற்படும் அல்லது தீக்காயங்கள் ஏற்படும்... குறிப்பாக 8 ம் பார்வை எந்த பாவத்தில்
விழுகிறதோ அந்த பாவத்தில் காயங்கள் ஏற்படும்....
#பின்குறிப்பு:
நீங்கள் ஒற்றை படைராசியை லக்னமாக கொண்டவர் எனில் காலபுருச தத்துவத்தின்
அடிப்படையில் அப்படியே உடல் பாகத்தை எடுக்கவும்....
இரட்டை படை ராசியை லக்னமாக கொண்டவர் எனில் லக்னத்தை தலையாக பாவித்து
உடல் பகுதிகளை பொருத்தி பாருங்கள் ஏன் மார்பில் வரவேண்டிய மச்சம் வயிற்றில்
இருக்கிறது என்றும் பாதத்தில் வரவேண்டிய தழும்பு தலையில் இருக்குது என்பதையும்
அறியலாம்....
கடைசியாக ஒரு விசயம்:

You might also like