You are on page 1of 1

புதன் வலிமை பெறுவதற்கான விதிகள்:

இவ்விதிகள் ஞானிகள் அருளிய மூலநூல்களில் படித்து பல ஜாதகங்களில் ஆராய்ந்த அனுபவத்தின்


அடிப்படையில் பொதுபலனாக குறிப்பிட்டுள்ளேன்.
சாராவளி, பராசர சம்ஹிதா, உத்தரகாலாமிர்தம், ஹோராசாரம், பலதீபிகை, பூர்வபராசர்யம், சர்வார்த்த சிந்தாமணி
போன்ற நூல்களில் கூறப்பட்டவை. அதன் வலிமை படிநிலைகளில் குறிப்பிட்டுள்ளேன்.
1. புதன் கேந்திரங்களில் ஆட்சி அல்லது உச்சம் பெறுவது.
2. லக்னத்தில் திக்பலம் பெறுவது.
3. உச்சமாகாமல் கேந்திரங்களில் வக்கிரமாவது.
4. 1,4,8 ல் புதன் சூரியன் சேருவது. அதில் ஒருவர் ஆட்சியோ உச்சமோ பெற்றால் ராஜயோகம் தரும்.
5. சந்திர கேந்திரத்தில் புதன் இருப்பது.
6. கேந்திர கோணங்களில் புதன் மற்றும் சூரியன் சேர்ந்திருப்பது.
7. புதனின் நண்பர்களான சுக்கிரன் சனி பார்வையானது தொழில்துறைக்கு நிபுணத்துவம் தரும்.
8. புதனும் சூரியனும் நெருக்கமாக சேர்ந்திருந்தால் நிபுணயோகம். இவர்கள் கணினி, பங்குசந்தை, தொழிலதிபர்,
ஜோதிடர் என புகழ்பெறுவார்.
9. புதன் உபய லக்னத்திற்கு கேந்திரங்களில் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் பத்ரயோகம் என்ற பஞ்சமகா
புருஷயோகத்தில் ஒன்று ஏற்படுகிறது. இது புதனின் காரகத்துவத்தில் மாபெரும் புகழை தரும்.
10. 14,8, ல் புதன் சூரியன் இருந்து இருவரில் ஒருவர் ஆட்சி உச்சம் பெற்றால் மிகப்பெரிய பதவியை படிப்படியாக
அடையும் ராஜயோகம் உண்டாகும். மிகப்பெரிய தொழிலதிபராக இருப்பார்கள்.
உதாரணம் என்டி ராமராவ் அவர்களுக்கு புதன் சூரியன் எட்டில் ,புதன் வர்க்கோத்தம்ம். புஷ்கராம்சம்.
இரண்டாவது உதாரணம் அமிதாப் பச்சன் அவர்களது ஜாதகத்தில் எட்டில் புதன் உச்சம்+ சூரியன் சேர்ககை ் .
மூன்றாவது உதாரணத்தில் 100 கணக்கான ஜோதிட ஆய்வுநூல்களை எழுதிய அரசு பொறியாளர் மற்றும்
ஜோதிடர் சுப்பிரமணியன் ஐயா குருநாதர் அவர்களின் ஜாதகத்தில் நான்கில் மிதுனத்தில் புதன் ஆட்சி பெற்று பத்ர
யோகம். உபய லக்னத்திற்கு மட்டுமே பத்ரயோகம் பெறும் அமைப்பு உண்டாகிறது.
11. புதன்கிழமை , புதஹோரையில் பிறப்பவர்களுக்கும், புதன் வர்க்கோத்தம பலம் பெற்றவர்களுக்கும் புதன்
யோகமளிக்கிறது.
12. சூரியனைவிட்டு பத்து பாகை விலகியிருக்கும் புதன் மாபெரும் சுபர். சுபர்களோடு சேர்ந்த, தனித்த புதன் சுபர்.
புதன் அதிபலம் பெற்றவர்கள் புகழ்பெற்ற ஜோதிடர்கள், புகழ்பெற்ற எழுத்தாளர்கள், காவியம் புணைபவர்கள்,
நகைச்சுவை நடிகர்கள், புகழ்பெற்ற பேச்சாளர்கள், பங்குசந்தை வணிகர்கள , மாபெரும் தொழிலதிபர்கள்,
வணிகர்கள், வியாபாரிகள், சாப்டவே ் ர் என்சினியர்கள் எனப்படும் கணிப்பொறியாளர்கள், கணக்கு
ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் போன்றோர்களாக புகழ்பெறுகிறார்கள்..
மிதுன லக்னத்தில் பிறந்த கணிதமேதை ராமானுஜம் ஜாதகம் கணித ஆய்வாளருக்கு உதாரணம்.மிதுன
லக்னத்தில் பிறந்த சுந்தர்பிச்சை ஜாதகத்தில் புதன் வலிமை பெற்றிருப்பதை காணலாம்.
புதன் 12 மற்றும் 2 லும் பலம்பெறும்.
காளிதாசரின் உத்தரகாலாமிர்தம் புதனின் காரகத்துவத்தை விரிவாக விளக்கும் நூல்.
மன்னர் கல்யாணவர்மரின் சாராவளி புதனின் காலபலம், வக்ர பலத்தை விளக்கும் நூல்.
விஞ்ஞானிகளுக்கு பெரும்பாலும் புதன் எட்டில் வலு பெற்றிருப்பான்.விமானிகளின் ஜாதகத்தில் புதன் பலம்
பெற்றிருப்பான். பல IAS ஆபிசர்களின் ஜாதகங்களிலும் IFS அதிகாரிகள் எனப்படும் வெளிநாட்டு தூதுவர்களின்
ஜாதகங்களில் புதன் பலம் கட்டாயம் காணப்படும். இன்னும் இப்பதிவு விரியும்.

You might also like