You are on page 1of 2

செவ்வாய் தோஷம் பரிகாரம்

பராசக்தி சிவனை நோக்கி கடும் தவம் செய்யும்போது, தவ உக்கிரத்தின் வெளிப்பாடாக மண்ணில் விழுந்த
அன்னையின் வியர்வைத் துளியில் இருந்து செவ்வாய் தோன்றினார். பராசக்தி தேவியால் வளர்க்கப்பட்டு தக்க
வயதில் பரத்வாஜ முனிவரிடம் கல்வி கற்க அனுப்பப்பட்டார். 64 கலைகளையும் கற்றுத் தேர்ந்து, அவந்தி
தேசத்திற்கு மன்னனாகி சக்தி தேவியை செவ்வாய் திருமணம் கொண்டார்.

தனது தவ வலிமையால் விநாயகப்பெருமானின் அருள் பெற்று, வானத்தில் செஞ்சுடர் ஒளியுடன் கூடிய


செவ்வாய் கிரகமாகி நவக்கிரகமாக பரிபாலனம் செய்து வருகிறார். செவ்வாய் கிரகம் சிவந்த நிறம் கொண்டது.
எனவே ரத்த அணுத் தொடர்பில் வம்ச விருத்திக்கு காரண கர்த்தாவாக விளங்குகிறார்.

இதனால் தான் திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தோஷம் அனைவரையும் பயமுறுத்துவதாக


அமைகின்றது. ஜாதகத்தில் 7 அல்லது 8-ல் செவ்வாய் இருக்க கடுமையான செவ்வாய் தோஷம் உண்டாகிறது.
கல்யாணத்திற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கிய தோஷமாக இது கருதப்படுகிறது. ஆனால் இந்த
செவ்வாய் தோஷம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம்.

ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவருக்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு
திரு மணம் செய்யக் கூடாது என சோதிடம் கூறு கிறது. லக்கனம், சந்திரன், சுக்கி ரன், முதலி யவை களுக்கு 2,
4, 7, 8, 12 ஆகிய இடங் களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருத வேண்டும்.

அப்படி மீ றித் திருமணம் செய்தால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவ்வாய் திசை நடைபெற்றால்
அக்காலத்தில் துணைவர் துணைவியை இழக்க வேண்டிய நிலை வரும் என சோதிடம் கணிக்கிறது. 2, 4, 7, 8, 12
ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக் கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது.

இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளன. மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய வடுகளில்
ீ செவ்வாய்
இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமில்லை என்ற நிலை ஏற்படும். காரணம் என்னவென்றால்
சம்பந்தப்பட்ட வடுகளில்
ீ செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் குன்றும். குரு, சூரியன்,
சனி, சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை.

சூரியன், சந்திரன், குரு, சனி, ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை என சோதிடம் கூறுகிறது. சிம்மம்
அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை. 2-வது இடம் மிதுனம், அல்லது கன்னி
ஆகியவற்றில் செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை. 4-ம் இடம் மேஷம், விருச்சிகம் ஆகியவற்றில்
செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை.

7-ம் இடம் கடகம், மகரம் செவ்வாய் ஆகியவற்றில் இருந்தாலும் தோஷமில்லை. 8-ம் இடம் தனுசு, மீ னம்
ஆகியவற்றில் செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை. பெண்களின் ஜாதகத்தில் 7-ம், 8-ம் இடங்கள்
கெட்டிருந்தாலும் லக்கினாதிபதி, 7-ம் இடத்திற்கு அதிபதி 6, 8 போன்ற மறைவிடத்தில் இருந்தாலும், 12-ம்
இடத்தில் ராகு, 6-ம் இடத்தில் கேது அமையப்பெற்ற பெண்களும், 7-ம் இடத்தில் நீச கிரகம் இருந்து சுபரால்
பார்க்கப்பட்டாலும் பாதிப்பு ஏற்படும்.

பலன் தரும் பரிகாரங்கள்…….. துவரை தானம்:- உடைக்காத முழுத்து வரையை சிகப்புத் துணியில்
கட்டிக்கொள்ள வேண்டும். வெற்றிலை பாக்கு, மஞ்சள், பழம் இவைகளுடன் சிவந்த கண்களையுடைய
ஏழைகளுக்கு `தானம் கொடுக்கவேண்டும்.

வாழைப்பூத் தானம்: முழு வாழைப்பூ, அதே மரத்தில் காய்ந்த பழம், அதே மரத்தில் கிழக்கு நோக்கிய நுனி
இலை இவைகளை எடுத்துக்கொண்டு இந்த நுனி இலையில் இவைகளை வைத்து தானம் வாங்குபவனை நடு
வட்டில்
ீ அமர செய்து வெற்றிலை பாக்கு, மஞ்சள் துணி இவைகளுடன் தானம் செய்ய வேண்டும். இந்த
இரண்டு தானங்களும் திருமண தடங்கலை தீர்த்து வைக்கும் தானங்களாகும்.

பரிகார காலம்: செவ்வாய்க்கிரகம் அவரவருடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த


இடத்துக்குரிய கிரகங்களின் நாட்களில் பரிகார பூஜை செய்வது சிறப்பு. பொதுவாக செவ்வாய் கிழமையிலும்
செய்யலாம். ஜென்ம நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம்.

You might also like