You are on page 1of 1

கர்மா, விதி, கொடுப்பினை, பிராப்தம்

கர்மா, விதி, கொடுப்பினை, பிராப்தம் எல்லாம் ஏற்கனவே உங்களுக்கு எப்படி ,எவ்வாறு நடக்கும் என்ற " மாற்றவே முடியாத" பெரும்
விதியால் தீர்மானம் செய்யப்பட்ட ஒன்று.
விதியை மதியால் வெல்லலாம்.
எப்போது தெரியுமா?
விதியை மதியால் வெல்லலாம் என்ற விதி இருந்தால்.
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்பதை கடவுள் மறுப்பும், ஜோதிடத்தை ஏற்றுக்கொள்ளாத தன்மையும் உடைய ஒரு சமனரான
பெரும் ஞானியான இளங்கோவடிகள் கூறியபோதும் " கர்மவினை கொள்கையை" நாம் புரிந்துகொள்ள வில்லை.
ஊழ் என்ற அதிகாரத்தில் 
" ஊழின் பெருவளி யாவுள மற்றொன்று 
சூழின் தான் முந்துரும்"
என்று தெயவப்புலவராக பொய்யாமொழி புலவர் எடுத்தியம்பியும் நம் சிற்றறிவுக்கு எட்டவில்லை.
விதியை நிர்மானித்தவன் இறைவன்.
அவன்ன்றி ஒரு அணுவும் அசையாதென்பதை உணராமல் ஊழில் இல்லாத ஒன்றை பெறுவதற்காக ராசிக்கல்லும், பரிகாரமும் என்று
மேலும் மேலும் துன்பத்தை வளர்த்துக்கொண்டோமே தவிர ஒருபோதும் நவகிரகங்களால் துன்பங்கள் ஏற்பட்டபோது இறைவனை
மனப்பூர்வமாக நம் மனம் சரண் அடைந்த்தில்லையே!
இதை நான் என்னவென்று கூறுவது?
இதுவும் மாறாத ஊழ்தான்!
ஒருவருக்கு நன்மைதீமை எல்லாம் ஜோதிடர்களாலே அமையவேண்டுமென்று நமக்கு விதியிருந்திருந்தால் என்ன என்பது
செய்வது?
நாம் செய்த நல்வினையின்படியே ஒவ்வொரு செயலும் அமையவேண்டும் என்ற விதியிருப்பதால் நல்ல ஜோதிடர் கண்ணில் படுவது
நல்வினையால்தானே!
அதேப்போன்று தீயவரால் நம்வாழ்வு மாற்றப்படுமானால் அது தீவினைதானே!
குரு புத்திரகாரகர் என்பதால் சனியுடன் சேர்நது
் தீயராசியில் வலுவிழந்தால் ஆண்வாரிசு உருவாவதில் ( பொதுபலன்)
தடையிருக்கும் என்று ஞானிகள் கூறியுள்ள நிலையில் 
அதற்கு பிரம்மஹத்தி தோசம் என்று பெயரைசூட்டி அதற்கு வேள்விகள் உள்ளிட்ட பண செலவு பிடிக்கும் பரிகாரத்தையும்
கண்டுபிடித்தவர் யாரோ அவருக்கும் ஊழ்தானே முன்நிற்கிறது. அச்சமூட்டும் பெயரிடைய அந்த தோசத்தால்தான் நம் வாழ்வு
இவ்வாறு வலுவிழந்த்து , இல்லாவிட்டால் தான் ஒரு உலகையாளும் சக்கரவர்த்தியாக இந்நேரம் உருமாறியிருப்போம். ஆகவே
பரிகாரங்களை மேற்கொண்டு இழந்த இந்திரலோக பதவியை பெற்றுவிடலாமென்று நம் ஆழ்மனதில் ஊசலாடும் விருப்பத்தை
தருவதும் நம் முன்வினை பயனான வினைப்பலன்தானே!
இந்த மனிதவாழ்வில் ஒரு நல்ல கணியன் உணர்ந்துக்கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.
" நம்முடன் வந்தது, வருவது, வரவிருப்பது அனைத்தும் நல்வினை தீவினை என்ற இரண்டுமட்டும்தான்".

நவகிரகங்கள் அனைவரும் சிவாலயத்தில் மஹாதேவரை ஒரு ஓரத்தில் நின்று வணங்கிநிற்பதுபோல் ஆலயமுறை


அமைக்கப்பட்டிருந்தும் மூலவரைவிட்டு ஏவலாளை முதலில் தொழும்போதே இன்னும் நமக்கு ஞானமளிக்குமளவிற்கு கேது இந்த
பிறவியிலும் சுபத்துவம் பெறவில்லையென்று என்றாவது நாம் உணர்ந்திருக்கோமா?

மஞ்சளாடையை தென்முக தெட்சிணாமூர்த்திக்கு சூட்டி இவர்தான் மாபெரும் சுபரான குருவென்று போதிக்கும் போலிகளையும்,
அஞ்ஞானிகளையும் உருவாக்கியதும் கலியும், கயமைவினையும்தானென்று உணர்ந்தாலே நமக்கு கொஞ்சம் நல்வினை உள்ளதென்று
உணர்வோமாக.

இனியாவது இப்பிறவியிலாவது நல்வினையையும், மாசற்ற இறைபக்தியையும் பெறுவதே தலைசிறந்த பரிகாரமென்பதை


உணர்வோமாக.

You might also like