You are on page 1of 1

சனி:

சனி ஊனம், மாற்றுதிறனாளிகள், ஏழைகள், ஆதரவற்றோர்கள், விதவைகள், திருமணமாகாத முதிர்கன்னிகள்,


வயதானவர்கள், முடியாதவர்கள் போன்றவற்றிற்கு காரகத்துவம் வகிப்பவர். சனிக்கான மிகசிறந்த பரிகாரமாக ஏழை
எளியோர்களுக்கும் முடியாதவர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்யவேண்டுமென மறைமுகமாகவும்
நேரடியாகவும் மூல ஜோதிடநூல்கள் வலியுறுத்துகின்றன.சமூகசேவர்கள் பெரும்பாலும் சனியின் தர்மகர்மாதிபதி
ஆதிபத்தியத்தை பெற்றவர்களே.

சனியின் சுப ஆதிக்கம் பெற்றவர்கள் தன்னால் முடிந்தவரை சமூக முன்னேற்றத்திற்கு பாடு-படுபவர்களாக இருப்பார்கள். சனி
பாவகிரக சேர்க்கைபெற்று பல வழிகளில் பாதிக்கப்-பட்டவர்களே பெரும்பாலும் சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பவர்களாகவும்,
பாவமூட்டையை சும்ப்பவர்களாகவும் இருப்பர்.

உழைத்து பிழைப்பவர்கள் சனியின் ஆதிக்கம் பெற்றவர்களே! சனி உழைப்புக்கு அதிபதி. அதனால் அடுத்தவர் உழைப்பை
சுரண்டி பிழைப்பவர்களும் சனியின் பாவத்துவ வலு பெற்றவர்களே!

தன்னை உணரும் சிறந்த ஆன்மீகவாதியாவதற்கு சனியானவர் குரு மற்றும் கேதுவுடன் தொடர்பு பெற்றிருக்க வேண்டும். சனி
குருவுடன் சேர்நத ் வர் ஒரு ஞானியாவார் ராமானுஜர் அருளிய பாவார்த்தன ரத்னாகரம் என்ற ஜோதிடநூல் இதைதான்
குறிப்பிடுகிறது. சர்வார்தத் சிந்தாமணி என்ற ஜோதிட மூலநூல் ஒருவர் சுப கர்மங்களை செய்து அடுத்த பிறவியில் நல்ல
பிறப்பை எடுக்க பிறந்தவரா அல்லது பாவத்தை செய்ய பிறந்தவரா என முடிவு செய்பவரே இந்த சனி என்கிறது. சனி இயல்பில்
தீமை, கெட்டகுணம், அடுத்தவரை கெடுத்தல், பாவம் செய்தல் போன்ற தீய காரகத்துவத்தை பெற்ற பாவர். ஆனால் அவரே
சுபக்கிரகங்களுடன் தொடர்புபெற்றால் சுபராகிறார். அதனாலும் அலிகிரகம் எனலாம். இயல்பாலும் நபும்சகத்தை தருபவர். சனி
குருவுடன் நெருங்கி சேரும்போது உயர்ஞானத்தையும், ஆன்மீகத்தையும் தருபவர் ஆகிறார். பொதுவில் நல்ல கர்மங்களோ
அல்லது கெட்ட கர்மங்களோ சனியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. தூக்கம், மோட்சம் போன்றவற்றை குறிக்கும் 12 ஆம்
பாவகத்திற்கும் சனியே காரகம் வகிக்கிறார். உழைப்பு, சோம்பல் என்னும் எதிரெதிர் காரகத்துவத்தையும் சனியே
கொண்டுள்ளார். எனவே சனி சுபமாக உள்ளாரா, பாவியாக உள்ளாரா என்பதை கணிப்பதிலேயே அவர் நன்மை செய்வாரா
தீமை செய்வாரா என்பது அடங்கியிருக்கிறது.

You might also like