You are on page 1of 2

விருப்ப ஓய்வு

Alasal Padam
Voluntary Retirement

விருப்ப ஓய்வில் வரலாமா? அல்லது கூடாதா?

அரசுப் பணியில் அல்லது பெரிய தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களை,


அவர்களுடைய 60 வயது நிறைந்தவுடன், நிர்வாகம் ஓய்வு கொடுத்து பணியை விட்டு
அனுப்பிவிடும். அதாவது ரிடயர்மெண்ட்.

சிலர் 55 அல்லது 56 வயதில் வேலைக்கு டாட்டா சொல்லிவிட்டு விருப்ப ஓய்வில்,


வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வந்து விடுவார்கள். அதாவது வாலண்ட்டரி
ரிடயர்மெண்ட்டில் வந்து விடுவார்கள்.

அதற்குக் காரணம் ஓய்வூதியப் பணம் மொத்தமாக 30 ல் இருந்து 50 லட்சரூபாய் வரை


கையில் கிடைக்கும். அத்துடன் வேலைக்கு தினமும் சென்று அங்கே மாங்கு மாங்கென்று
வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்து விடுபடலாம். வட்டில்
ீ நிம்மதியாக
இருக்கலாம்.

அவ்வாறு வர விரும்புகிறவர்கள், தங்கள் ஜாதகத்தை அலசிப் பார்த்து வெளி வருவதற்கு உரிய


சூழ்நிலை சாதகமாக இருந்தால் மட்டுமே வர வேண்டும், இல்லை என்றால் தொடர்ந்து
கடைசிவரை - அதாவது அவர்களாகவே ஓய்வு கொடுத்து அனுப்பும்வரை வேலையில் நீடிக்க
வேண்டியதுதான். அதுதான் நல்லது. நன்மையனது.

இது சம்பந்தமாக இன்று ஒரு ஜாதகத்தை அலசிப் பார்ப்போம்.

கீ ழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்


ஜாதகர் 1946 ம் ஆண்டில் பிறந்தவர். தன்னுடைய 56 வது வயதில் வேலையை உதறிவிட்டு
விருப்ப ஓய்வில் வந்துவிட முடிவு செய்தார்.

ரிஷப லக்கின ஜாதகர். லக்கினாதிபதி சுக்கிரன் 2 ம் வட்டில்


ீ யோககாரகன் சனியுடன்
இருக்கிறார். அத்துடன் வில்லன் மாந்தியும் கூட்டாக அங்கேயே இருகிறார்.

நடப்பு திசை யோககாரகனின் திசை.பத்தாம் அதிபதி சனி வர்கோத்தமம் பெற்றுள்ளான்.


இரண்டாம் வட்டில்
ீ இருக்கிறான். அத்துடன் தசாநாதன் சுக்கிரனுடன் கூட்டாகச்
சேர்ந்துள்ளான்.இந்த அமைப்பு ஜாதகனின் நிதி நிலைமைக்கு சாதகமான அமைப்பு.

சுக்கிரன் இரண்டாம் அதிபதி புதனுடன் பரிவர்த்தனை யோகத்தில்.அத்துடன் இரண்டாம் அதிபதி


புதன், கேதுவுடன் கூட்டாக உள்ளான். இந்த அமைப்பு நிதி நிலைமையைக் கெடுக்கும் அமைப்பு.

இந்த இரண்டில் கெடுதல்தான் முதலில் அரங்கேறும். ஜாதகர் பெரும் பணத்துடன் வேலையே


விட்டு வெளியே வந்தால், அந்தப் பனத்தைப் பாதுகாப்பாக தக்க வைத்துக் கொள்ள முடியாத
சூழ்நிலை உண்டாகும். 

ஆகவே ஜாதகர் வேலையிலேயே தொடர்ந்து இருந்து, அடுத்த தசா புத்தியில்


வெளிவருவதுதான் நன்மையானது.

You might also like