You are on page 1of 1

திருமணபொருத்தம்

1. திருமண விசயத்தில் லக்னத்திற்கு மற்றும் ராசிக்கு ஏழாமிடமும், ஏழாமதிபதியும் தான் ஒரு ஜோதிடர் அதி
முக்கியமளித்து கவனிக்க வேண்டும். இங்கு பாவக்கிரகங்களான சனி, செவ்வாய், ராகு, கேது சுபக்கிரகங்களின்
தொடர்பின்றி மற்ற பாவரோடு சேர்ந்திருந்தால் திருமணவாழ்க்கை பாதிப்படையும்.
2. இரண்டாவதாக சனியும் செவ்வாயும் சேர்நது ் இவ்விடங்களை சுபர் தொடர்பின்றி பார்ப்பது கூடாது.
3. மூன்றாவதாக களத்திரகாரகனான அதி முக்கிய சுக்கிரன் பலவீனம் அடையக்கூடாது.
4. நான்காவதாக குடும்ப ஸ்தானமாகிய இரண்டாமிடம் பாவக்கிரகங்களால் பாதிப்படையக்கூடாது.
5. ஐந்தாவதாக படுக்கையறை சுகமிடம் எனப்படும் அயனபோக சயனசுகாதிபதியான 12 ஆமிடம் பல பாவிகள் அமைந்தோ
அந்த அதிபதி பலமிழந்தோ கெடக்கூடாது.
6. புத்திரஸ்தானமாகிய ஐந்தாமிடம் கெட்டாலும் தாமத திருமண அமைப்பு ஏற்படும்.
7. புணர்பூதோசம் தாமத திருமண அமைப்பைதரும்.
8. அடுத்ததாக ஏழாமிடமோ ஏழாமதிபதியோ பாவிகள் சூழ்ந்து பாதிப்படைந்தால் திருமண தாமதம் உண்டாகும்.

மேலும் மேற்க்கூறிய கிரகங்கள் நவாம்சத்திலும் பலவீனமடையக்கூடாது.

இவைதான் திருமண கொடுப்பிணைக்கான படிநிலை வரிசையாகும்.

You might also like