You are on page 1of 1

திருமண பொருத்தம்:

மூலநூல்களில் நட்சத்திரபொருத்தம் எனப்படும் தசவித பொருத்தம் பற்றி முதன்மையாக இல்லை. நட்சத்திர பொருத்தம்
என்பது பெயர்பொருத்தம், ஊர்பொருத்தம் போன்ற பிறந்த ஜாதகம் இல்லாதவர்களுக்கான பொருத்தம் மட்டுமே.

ஜாதகத்தை கணிக்க ராசி தசவர்க்கம், சட்பலம், நவாம்சம் போன்றவை தேவை. உத்தர-காலாமிர்தம், சாராவளி,
ஹோராசாரம், பராசர சம்ஹிதை, பூர்வபராசரியம், சர்வார்த்த சிந்தாமணி, வராஹ சம்ஹிதை போன்ற நூல்கள் ஜோதிடம்
கூறுவதற்கு அடிப்படையாக தசவர்க்கம், நவாம்சம், சட்பலம், அஷ்டவர்க்கம், திதி போன்றவை அடிப்படை என்பதை
வலியுறுத்துகிறது.

உண்மையில் திருமண பொருத்தம் என்பதை லக்ன, ராசிக்கு ஏழாமிடமும் சுக்கிரனுமே தீர்மானிக்கிறார்கள்.

லக்னத்திற்கு இரண்டாமிடம் பாவக்கிரகங்களால் பாதிக்கப்பட்டிருந்தால் குடும்பம் அமைய தடை ஏற்படும் என்பதால்


அதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

லக்னத்திற்கு எட்டாமிடம் என்பது மாங்கல்ய ஸ்தானம் மட்டுமல்ல அங்கிருக்கும் பாவக்கிரகங்கள் ஏழாம்பார்வையாக


இரண்டாமிடமாகிய குடும்ப ஸ்தானத்தை பார்வை செய்து காலதாமதம் செய்யும் என்பதால் அதையும் திருமண
பொருத்தம் பார்க்கும்போது கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

லக்னத்திற்கு பன்னிரெண்டாமிடம் ஒரு மனிதனின் தூக்கத்தின் சுகத்தை மட்டும் குறிப்பதல்ல, அதைவிட முக்கியமான
தாம்பத்திய சுகத்தை பற்றியும் குறிப்பதாலேயே இதை அயன, போக, சயன, விரய, மோட்ச ஸ்தானம் என்று அழைப்பர்.

லக்னத்திற்கு ஐந்தாமிடமாகிய புத்திர பாவகம் தாமத புத்திரயோகமா அல்லது உடனடி புத்திர யோகமா என்பதை பற்றி
குறிப்பிடுவதால் திருமண பொருத்தம் பார்க்கும்போது அதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதுவன்றி ஒருவரின் மிக, போக ஆற்றலை குறிப்பிடும் மூன்றாமிடம் வீர்ய ஸ்தானம் என்பதால் ஆண்களின் ஜாதகத்தில்
இதை முக்கியமாக திருமண பொருத்தப் பார்க்கும்போது இதையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதற்கெல்லாம் சிகரமாக திருமண பொருத்தம் பார்க்கும்போது சுகபோக காம, சௌக்கிய வாழ்வை தரும்
சுக்கிரனைதான் பார்க்கவேண்டும்.

இவ்வளவு இருக்குங்க திருமண பொருத்தம் பார்ப்பதில். அதனால்தான் ஜோதிடம் என்பது ஒரு கரைகாண முடியாத கடல்
என்று ஞானிகள் கூறி வைத்துள்ளனர். இந்த கடலில் நீந்த வேண்டாம் கரையிலாவது நிற்கலாம். இதையெல்லாம்
விட்டுவிட்டு மூலநூல்களில் இல்லாத நட்சத்திர பொருத்தம், செவ்வாய் தோசம், பொதுவிதிகள், போன்றவற்றைமட்டும்
வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டுபவர்கள் ஓரளவிற்கு அதை தாண்டி ஆய்வு செய்பவர்களை ஊக்கப்படுத்த
தேவையில்லை.

You might also like