You are on page 1of 1

பாவகர்த்தரி

எந்தவொரு ஜாதகத்திலும் எந்தவொரு பாவத்திற்கு (ராசிக்கு) இருபுறமும் பாவக்கிரகங்கள் இருக்கக்கூடாது.


அதேப்போன்று எந்த ஒரு பாவாதிபதியும் பாவக்கிரகங்களால் சூழப்பட்டு இருக்கக்கூடாது.
இது அடிப்படையிலும் அடிப்படை விதியாகும்.

பாவிகளால் சூழப்பட்டு "பாவ கர்த்தரி யோகம்" பெற்ற கிரகங்கள் நன்மையளிக்காது.


ஜாதகத்தில் ஒரு கிரகத்தால் ஒரு யோகம் நடைபெற வேண்டுமென்றால் யோகவிதிகளைவிட யோகபங்க விதிகளும்,
விதிவிலக்குகளும் தான் மிகமிகமிக முக்கியமானவை.

எல்லோரும் எனக்கு இக்கிரகயோகம் இருந்தும் பலனளிக்கவில்லை என்று புலம்புவதற்கு முக்கிய காரணமே அந்த யோகம்
பங்கமடைவதற்கான விதிவிலக்குகளை தெரிந்துக்கொள்ளாத்துதான்.

ஒரு யோக ஜாதகத்தில் யோகம் நடைபெறும் அனைத்து சிறப்புகளும் இருக்கும்.

ஒரு ஜோதிட நூலாலோ, வெறும் அனுபவத்தாலோ, ஆராய்ச்சியினாலோ மட்டும் எந்தவொரு ஜோதிடருக்கும் அனைத்து
விதிகளும், யோகபங்கத்தின் அனைத்து விதிகளும் தெரிந்துவிடாது. புதனின் வலிமை, கடவுளின் அருள் போன்ற
அனைத்தும் தேவை. " தெரியும் சூட்சும்ம்தான் தெரியும்".
அது அவரவருக்கு அமைந்த கொடுப்பினையை பொருத்த விசயம்.

உங்களது ஜாதகம் தனித்தன்மை மிக்கது. இந்த அடிப்படையை அனைவரும் உணரவேண்டும். பொதுபலன்கள் ஜோதிடம்
கற்பதற்கான அடிப்படை. அது பலன் பார்ப்பதற்கான அடிப்படையல்ல.

ஐந்து அங்கங்களான நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து விசயங்கள்
தசாநாதனை எவ்வாறு பாதிக்கிறது என்பதை முக்கியமாக கவனித்தே ஆகவேண்டும்.

You might also like