You are on page 1of 2

கபடதாரி, வஞ்சகன்

முதலில் லக்கினம்:
ஒருவன் ஏமாற்றுகாரனாகவும் , வஞ்சகனாகவும், கண்ணியமில்லாமல் நடந்து கொள்வதற்கும் அடிப்படை
லக்னமும் நான்காமிடமும் பாதிக்கப்படுவதே.

லக்ன யோகாதிபதிகளின் வீடுகளில் அமர்ந்த கிரகங்களும் அதன் தன் மைக்கேற்ப யோகபலன்களை


செய்யும்.
லக்னாதிபதிக்கு விரோதிகளின் ராசிகளில் அமர்ந்த கிரகங்கள் அவற்றின் தன் மைக்கேற்ப தீயபலன்களை
வாரிவழங்கும்.
லக்னாதிபதி மற்றும் ராசி இரண்டுக்கும் பகைபெற்ற கிரகங்கள் தீயபலன்களை அதிகமாக வழங்கும்.
லக்னாதிபதி மற்றும் ராசிக்கு நட்பு பெற்ற கிரகங்கள் லக்னாதிபதி மற்றும் ராசிநாதனின் வலிமைக்கேற்ப
நல்ல பலன்களை அதிகமாக தரும்.

லக்னம், ராசி சுபத்தன்மை அடையாத பாவிகளால் பாதிக்கப்பட்டால் நாம் அவர்களிடம் எச்சரிக் கையாக
இருக்கவேண்டும். ஏனென்றால் லக்னமும் ராசியும்தான் முக்கியமாக ஒருவரின் குணாதிசயங்க ளை
குறிப்பிடும் இடம்.

இரண்டாவதாக நான்காமிடம்:
நான்காமிடம் என்பது ஒழுக்கம் , கற்பு, நல்ல குணம் அல்லது குணக்கேடு, கபடம் அல்லது நேர்மை,
ரகசியமாக மனதிற்குள் ஒன்று வைத்துக்கொண்டு வெளியே ஒன்றை பேசுவது அல்லது வெளிப்படையாக
பேசுவது போன்றவற்றை குறிக்கிறது.

நான்காமிடத்தை இருதய ஸ்தானம் என்றும் அழைப்பர். இது இதயம், மாரபுப்பகுதியை குறிப்பதோடு


மனதையும் குறிக்காட்டுகிறது.

மூன்றாவதாக சனி /ராகு/செவ்வாய்:

ஏமாற்றுத்தனம், திருட்டுத்தனம், பொறாமை, வஞ்சகம், இரக்கமின்மை , துரோகம், பொய்பேசுதல் ,


கடினமனம், கல்நெஞ்சம், நம்பவைத்து கழுத்தறுப்பது, வார்த்தை தவறுதல் போன்றவற்றிற்கு ஒட்டு மொத்த
குத்தகைக்கார கிரகம் சுபத்தன்மை இல்லாத பாவத்தன்மை கொண்ட சனி.

சனியையொத்த கிரகம் ராகு.

முரட்டுக்குணம், இரக்கமின்மை , மனிதாநேயமர இல்லாத தன்மையை குறிக்கும் மற்றொரு கிரகம் சுபம்


அடையாத செவ்வாய்.

முதலில் லக்னம், ராசியில் பாவிகள் அமர்ந்து லக்னாதிபதியும் சுபத்தன் மையில்லாத பாவிகளோடு


சேர்ந்தால் குணக்கேடு உண்டாகும்.

மூலநூல்கள் பாவார்த்த ரத்னாகரம் என்ற மூலநூல் சனி சுபத்தன் மை அடையாமல் நான்கில் அமர்ந்து
லக்னத்தை பார்த்தால் அவன் ஒரு கபடதாரி, ஏமாற்றுக்காரன் , கோளன், என்கிறது. மேலும் ஒன்றுக்கு
மேற்பட்ட பாவிகள் லக்னத்திற்கு நான்கில் சேர்ந்திருந்தாலோ ராசிக்கு நான்கில் சேர்ந்திருந்தாலோ அவன்
ஏமாற்றுக்காரன் . நான்கில் குருவின் தொடர்பின்றி சனி செவ்வாய் சேர்க்கை, ராகு செவ்வாய் சேர்க்கை,
ராகு சனி சேர்க்கை இருந்து லக்னம் சுபத்தன்மை அடையாவிட்டாலும் அவன் சமூகத்திற்கு கெடுதல்
செய்ய எண்ணும் வஞ்சகன் . சனியுடன் குரு சேர்ந்தால் ஆன்மிகம் , ஞானம், புனிதம் உண்டாகுவதால்
பாதிப்பு இல்லை.
பொதுவாக சுபரோடு சேராமல் பாவக்கிரக வீட்டில் கேந்திரத்தில் அமர்ந்த சனி மிகுந்த குணக் கேடுகளை
உருவாக்குகிறது.

சனிக்கு பகைவீடுகளான கடகம், சிம்மம், மேசம் (நீசம்,), விருட்சிகம் ஆகியவற்றில் சனி சுபர்
தொடர்பின்றி இருந்து லக்னத்தை பார்த்தால் அச்சாதகன் கபடதாரி.

சனியினால் பாவத்தன்மையடைந்து அடைந்தவர்கள் அழுக்கு உடை, முடிகளை அசிங்கமாக


வளர்த்துக்கொள்ளுதல், நகம வளர்த்தல், குப்பைகள் நிறைந்த இடமாக இருப்பிடத்தை
மாற்றிக்கொள்ளுதல், அடிக்கடி எசரசில் துப்புதல், அசுத்தமாக இருக்குமிடத்தை விரும்புதல் போன்ற
கீழ்த்தரமான கெட்ட புறசூழ்நிலைகளையும் வஞ்சகம், பொய், ஏமாற்றுதல்ல, துரோகம போன்ற
அகசூழ்நிலைகளையும் விரும்பி மேற்கொள்ளுவர்.

குரு, சுக்கிரன, தனித்த புதன், வளர்பிறைசந்திரன் லக்னம் , ராசி, நான்காமிடம், நான்காமதி- பதியோடு
சேர்ந்திருந்தால் நல்லகுணம் , தர்மசிந்தனை, நல்லசெயல், புண்ணியசெயல்களில் நாட்டம் போன்றவை
இயல்பாக ஏற்படும்.

You might also like