You are on page 1of 1

சாராவளி கூறும் ராஜயோகம்

1. லக்னாதிபதி பலவானாகி லக்னாதிபதியோடுடைய நண்பர்களும், சுபகிரகங்களும் பார்வைசெய்ய லக்னத்தில்


ஆட்சியாக இருந்தால் தனது எதிரிகளை அதஞ்செய்யும் ஆற்றலுடைய அரசனாக இருப்பான்.
2. பரிபூரண ஒளிபொருந்திய சந்திரனை குருபார்க்க நவாம்சத்தில் மேசத்திலிருக்க மற்றொரு வலுவுடைய கிரகத்தை
மற்றொரு சுபர் பார்த்தால் அரசனாவான்.
3. லக்னத்தில் ஒரு சுபகிரகமிருந்து ,அந்த லக்னாதிபதி சுபநண்பர்களுடைய பார்வையை மட்டும் பெற்று கேந்திரங்களில்
இருந்தால் நிச்சயம் அரசனாவான்.
4. பரிபூரண ஒளிபொருந்திய சந்திரன் வர்க்கோத்தமாம்சத்தில் இருக்க, ரச்மி பலத்தோடும் உச்சபலத்தோடும்
கூடியிருக்கும் ஏதேனுமொரு சுபக்கிரகம் இருக்க, கேந்திரத்தில் சனி , செவ்வாய் போன்ற பலம்பெற்ற
பாவக்கிரகங்கள் இல்லாமலிருக்கும்போது பிறந்தவன் வறியகுலத்தில் பிறந்திருந்தாலும் நிச்சயமாய் அரசனாவான்.
5. எல்லாகிரகங்களும் ராசியிலும் நவாம்சத்திலும் ஆட்சி அல்லது நட்பாக இருந்தால் ஜாதகன் சக்கரவர்த்தியாக
அரசர்களை அடக்கியாள்வான்.
6. எல்லாகிரகங்களும் ராசியிலும் அம்சத்திலும் சுபக்கிரகங்களோடுடைய ராசிகளில் இருந்து லக்னத்தை எந்த
பாவக்கிரகங்களும் பார்க்காமல் ஒன்றுக்கு மேற்பட்ட சுபக்கிரகங்கள் மட்டும் பார்த்தால் நிச்சயம் அரசனாவான்.
7. சந்திரன் பரிபூரண ஒளியுடைய பௌர்ணமி சந்திரனாகி நவாம்சத்தில் சூரியனுடைய சிம்மராசியில் இருக்க
சுபக்கிரகங்கள் மட்டும் கேந்திரத்தில் இருந்து லக்னத்தை பாவக்கிரகங்கள் பார்க்காவிட்டால் நிச்சயம் அரசனாவான்.
8. திரேக்காணம், சப்தாம்சம் முதலிய சட்வர்க்கங்களிலும் பகை ,நீசமில்லாமல் ஆட்சி,உச்சம்,நட்பாக ஏதாவது
மூன்றுகிரகங்கள இருந்து சந்திரன் ஒளிபொருந்திய பௌர்ணமி சந்திரனாக இருந்தால் ஏழை குடும்பத்தில்
பிறந்திருந்தாலும் நிச்சயம் அரசனாவான்.

மன்னர் கல்யாணவர்மர் சாராவளி என்ற புகழ்பெற்ற நூலில் 186 அரசனாகும் யோகங்களை சொல்லியிருக்க அதிலிருந்து
எட்டு யோகங்களை மட்டும் இங்கே கூறியுள்ளேன். இன்று இந்த ராஜயோகங்கள் இருந்தால் அச்சாதகன் பிரதமர்,
முதலமைச்சர், அமைச்சர், IAS, IPS அதிகாரிகள் என்று அவர்களுடைய லக்ன, லக்னாதிபதியின் வலிமைக்கேற்பவும், மற்ற
கிரகங்களின் யோகவ லிமைக்கேற்பவும் உருவாகின்றார்கள் அல்லது பிறக்கிறார்கள்.

You might also like