You are on page 1of 1

ஜாதக ஆய்வு

ஒரு யோக ஜாதகத்தில் அதிகமான நன்மைகளை செய்யும் கிரகதசாவானது கீழ்க்கண்ட பொதுவிதிகளில் சிலவற்றையாவது
அல்லது மூன்று நான்கு விதிகளையாவது கொண்டிருப்பதை காணமுடிகிறது. ஒரு ராசிக்கட்டத்தில் ஒவ்வொரு பாகையும்
முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதும் , கிரக சேர்க்கையின் பாகையளவு முக்கியத்துவம் வாய்நத
் து என்பதையும்
கூறிக்கொள்கிறேன்.

1. லக்னத்திற்கும் ராசிக்கும் சுபர்களாக வந்து அவை லக்னத்திற்கும் ராசிக்கும் நல்ல அமைப்பில் இருக்க வேண்டும்.
நவாம்சத்திலும் நல்ல ராசிகளில் சுபமாக இருக்க வேண்டும்.
2. தசாநாதனின் ராசி, நட்சத்திர நாதன் வலுபெற வேண்டும்.
3. லக்னத்திற்கு யோகர்களான 1, 5, 9 வலுபெற்று தசாநாதனோடு தொடர்புபெற வேண்டும்.
4. தசாநாதன் யோகி, அனுயோகியாக இருந்தாலோ அல்லது யோகி அணியோகியின் நட்சத்திரம் ,ராசிகளில் இருந்தாலும்
அதன் படிநிலைக்கேற்ப யோகமே செய்யும்.
4. தோசமுற்ற கிரகங்கள் தோசபங்கம் பெற்றிருந்தால் தசாவில் யோகம்.
5. இந்து லக்னத்தில் ராகுவை தவிர லக்னசுபர்கள் அஸ்தங்கம், பகை, நீசம் , அவயோகி,திதிசூன்யம் போன்ற யோகபங்கம்
இன்றி நின்று தசா நடத்த வேண்டும்.
6. புஷ்கர நவாம்சத்தில் உள்ள கிரகங்கள் லக்ன யோகர்களாக இருந்து அவயோகி, திதிசூன்யம் போன்ற யோகபங்க
அமைப்புகள் இன்றி தசா நடத்நவேண்டும்.
7. கிரகங்கள் ஆரோகண கதியில் இருக்க வேண்டும்.
8. லக்ன ,ராசிக்கு சுபர்கள் சட்பலத்தில் அதற்கு கொடுக்கப்பட்ட குறைந்தபட்ச ரூப அளவை தாண்டி வலுபெற்று ஆரோகண
கதியில் இருக்க வேண்டும்.
9. சோடசவர்க்க (16 வர்க்கங்கள்) சக்கரத்தில் பல சக்கரங்களில் சுப வீடுகளில் வலுபெற்ற கிரகங்களே முழுமையான
யோகபாக்கியங்களை தரும்.
10. ஆட்சி, உச்சம் பெற்ற கிரகத்திற்கு பத்திலுள்ள கிரகதசா அதிகமான அந்நியோன்ய காரகத்துவத்தை பெற்று சகலவித
நன்மைகளையும் தனது தசாவில் தரும்.
11. இயற்கை சுபர்களின் பார்வை ,சேர்க்கை பெற்ற கிரகங்கள் லக்ன,ராசிக்கு அசுபரானாலும் பெரிய கெடுதல்களை தராது.
12. அவயோகி கிரக தசா உறுதியாக யோகம் தராது. அப்படி யோகம் தந்து பெரிய நிலைகளில் இருந்தாலும் வாழ்க்கை
போராட்டமாக, நிம்மதியின்றி இருக்கும்.
13. லக்ன விரோதிகள் தரும் யோகங்கள் பெரிய சுகங்களையும், திருப்தியையும், மகிழ்ச்சியையும் முழுமையாக தராது.
மேற்கூறிய நல்லவிதிகளில் மூன்றுநான்கு விதிகள் கொண்ட தசாநாதனே நல்ல யோகங்களை தருவார்.

You might also like