You are on page 1of 1

நீசம் பகை பெறும் அமைப்பு

லக்ன சுபரோ அசுபரோ எந்த கிரகமானாலும் பகைராசி, நீசராசியில் இருந்து மிகவும் பலவீனமாவது நல்லது
அல்ல.

பலவீனமான கிரகம் தனது காரகத்துவ, ஆதிபத்திய பலன்களை முற்றிலும் இழக்கும்


உதாரணமாக தனுசு லக்னத்திற்கு மகாபாவியான சுக்கிரனாக இருந்தாலும் நீசமானால் அதன் பாவக
பலனான கடன், நோய், எதிரி பாதிப்படையும்.
அதேமாதிரி தனது காரகத்துவ பலன்களான திருமணம், வீடு, வாகனம், சுகசௌக்கியங்கள்,
நவீனவசதிகளும் அமையாது.

ஒரு கிரகம் பகை, நீசம் பெற்று பாவக்கிரகங்கள் தொடர்பு பெறுவது மோசமான பலன்களையே தரும்.
உதாரணமாக தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் நீசமானால் கடன், நோய் குறையும் என்ற நிலையில் சனி, ராகு,
செவ்வாய் தொடர்பில் வாங்கிய கடனை திருப்பி தர இயலாமை, தீராதநோய், தீராத பகை போன்ற
விரும்பதகாக பலன்களே நடைபெறும்.

எனவே எந்த கிரகமானாலும் முற்றிலும் வலுமையிழக்காமல் சுபக்கிரகங்களின் தொடர்பை பெறுவதே நல்லது.


ஏனென்றால் எந்த கெட்ட 6,8,12 லும் சில நல்ல விசயங்களும் உள்ளன. அவை பாதிப்படையாமல் இருக்கும்.
உதானமாக ஆறாமதி மிகவும் பலவீனமடைந்து பாவத்துவம் ஆனால் அவசரத்திற்கோ, வங்கியிலோ
கடன்பெறுவது இயலாது. பெரிய தொழிலதிபர்கள் வங்கிக்கடன் பெற்றே தங்களது தொழில்நிறுவனங்களை
அபிவிருத்தி செய்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது. அதேப்போன்று பணி அமையாது.

You might also like